Tnpsc Current Affairs in Tamil – 5th February 2024
1. 2023-2024-க்கான தேசிய நல்லாட்சி 20ஆவது இணையவழிக் கருத்தரங்குத் தொடரின் கருப்பொருள் என்ன?
அ. Advancing Agricultural Practices for Sustainable Growth
ஆ. Enhancing Educational Opportunities through Digital Initiatives
இ. Promoting Excellence in Sports and Wellness through Khelo India Scheme
ஈ. Strenghthening Healthcare Infrastructure for Public Welfare
- 2023-24-க்கான தேசிய நல்லாட்சி 20ஆவது இணையவழிக் கருத்தரங்குத் தொடரானது 2024 ஜனரி.31 அன்று “கேலோ இந்தியா திட்டத்தின்மூலம் விளையாட்டு & நலத்தில் சிறப்பை ஊக்குவித்தல்” என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. இதில் இராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மற்றும் மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டங்கள் மேற்கொண்ட முன்முயற்சிகள் குறித்து விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன.
2. “Economics of the Food System Transformation” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு செலவாணி நிதியம்
ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு
இ. உணவுமுறை பொருளாதார ஆணையம் (FSEC)
ஈ. உலக வங்கி
- “உணவுமுறை மாற்றத்தின் பொருளாதாரம்” என்ற அறிக்கையானது உணவுமுறை பொருளாதார ஆணையத்தின் (FSEC) உலகளாவிய கொள்கைகுறித்த ஓர் அறிக்கையாகும். உலகளாவிய உணவுமுறையை மாற்றுவதன்மூலம் ஆண்டுக்கு $5-10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பொருளாதார நன்மைகளை உருவாக்கமுடியும் என்று அவ்வறிக்கை மதிப்பிடுகிறது. இம்மாற்றங்களை அடைவதற்கான கொள்கைகளுக்கும் செயல்படுத்தலுக்கான செலவுகளுக்கும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2–0.4% மட்டுமே பிடிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. உலகளாவிய உணவுமுறைகளை மாற்றுவது உலகளாவிய காலநிலை, இயற்கை மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்குத் தீர்வுகாண உதவும் என்றும் அது கூறுகிறது.
3. ‘ஆபரேஷன் கருப்புத்தங்கம் (Black Gold)’ என்பதுடன் தொடர்புடையது எது?
அ. கச்சா எண்ணெய் கடத்தல்
ஆ. தங்கம் கடத்தல்
இ. கருப்புப்பணம் கடத்தல்
ஈ. போதைப்பொருள் கடத்தல்
- “ஆபரேஷன் கருப்புத்தங்கம்” என்பது தில்லியில் 16.67 கிகி தங்கம் மற்றும் 39.73 கிகி வெள்ளி அடங்கிய உலோகக் கலவை கைப்பற்றப்பட்டதை குறிக்கின்றது. சுமார் `10 கோடி மதிப்பிலான இந்த உலோகக்கலவையை தில்லி FPOஇல் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைப்பற்றியது. முதற்கட்ட விசாரணையின்படி, இந்தத் தங்கக் கடத்தலில் திட்டமிட்ட ஒரு குழு ஈடுபட்டுள்ளது. தங்கத்தின் நிறம் பொன்னிறத்தில் இருந்து வெண்ணிறமாக மாற வெள்ளிகொண்டு மேற்பூச்சு செய்யப்பட்டுள்ளது. இந்த வெண்கலவையானது மின்சார மீட்டர்போன்ற வடிவத்தில் ஆக்கப்பட்டு, பின்னர் சந்தேகத்திற்கு இடமாகிவிடாமல் இருப்பதற்காக அதன்மேல் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.
4. அண்மையில், இந்திய அரசால், ‘பன்னாட்டு விமான நிலையமாக’ அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது ?
அ. சூரத் விமான நிலையம்
ஆ. சிம்லா விமான நிலையம்
இ. கோரக்பூர் விமான நிலையம்
ஈ. ஜோர்ஹட் விமான நிலையம்
- இந்திய அரசின் அண்மைய அறிவிப்பின்படி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் விமான நிலையம், ‘சர்வதேச விமான நிலையம்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. வைரம் மற்றும் ஜவுளித்தொழில்களுக்கான உலகளாவிய பயணத்தை எளிதாக்குதல் & இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்ட இந்நடவடிக்கை, பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதற்கான வாயிலைத் திறந்துள்ளது.
5. அண்மையில், எந்தக் கொடுப்பனவு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாடுகளை விதித்தது?
அ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி
ஆ. Paytm கொடுப்பனவு வங்கி
இ. ஜியோ கொடுப்பனவு வங்கி
ஈ. இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி
- வரும் பிப்.29ஆம் தேதியுடன் PayTM கொடுப்பனவு வங்கி சேவைசார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆணை பிறப்பித்துள்ளது. PayTM கொடுப்பனவு வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டுவந்த காரணத்தினால் இந்தத் தடை ஆணையை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்கு முறைச்சட்டம், 1949 பிரிவு 35அ-இன்கீழ் இந்த நடவடிக்கையை PayTM கொடுப்பனவு வங்கி எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக PayTM கொடுப்பனவு வங்கி சேவைமூலம் எந்த வாடிக்கையாளரும், எந்தக் கணக்கிலும் பணத்தை வைப்புவைக்கவோ, கடன் பெறவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
6. சென்னையில் நடந்த 2023 – கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. குஜராத்
ஈ. உத்தர பிரதேசம்
- 2023 – கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 158 பதக்கங்களுடன் மகாராஷ்டிர மாநிலம் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய தமிழ்நாடு 98 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மூன்றாமிடத்தை ஹரியானா பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தின் பதக்க எண்ணிக்கையில் 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும். தமிழ்நாட்டின் பதக்க எண்ணிக்கையில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும்.
7. ‘eROSITA’ என்றால் என்ன?
அ. டிரோன்
ஆ. X–கதிர் தொலைநோக்கி
இ. செயற்கை நுண்ணறிவுக் கருவி
ஈ. நீர்மூழ்கிக்கப்பல்
- ருஷிய-ஜெர்மானிய SRG கூர்நோக்ககத்தில், eROSITA X-கதிர் தொலைநோக்கி நடத்திய முதல் அனைத்து வான் ஆய்வின் தரவை ஜெர்மனின் eROSITA கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. eROSITA என்பது extended ROentgen Survey with an Imaging Telescope Array என்பதன் சுருக்கமாகும். இது ரஷ்ய விண்கலமான Spektrum-Roentgen-Gammaஇல் உள்ள முதன்மை கருவியாகும். கடந்த 2019 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது, ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை முழு வானக்கோளத்தையும் வரைபடமாக்குகிறது.
8. ’Sphaerotheca varshaabhu’ என்பது சார்ந்த இனம் எது?
அ. தவளை
ஆ. மீன்
இ. சிலந்தி
ஈ. பாம்பு
- பெங்களூருவின் நகர்ப்புறங்களில் செழித்து வளரும், ‘Sphaerotheca varshaabhu’ என்ற புதிய தவளை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மழையை விரும்பும் இந்த இருவாழ்வி மழையின் தொடக்கத்தின்போது பொந்துகளிலிருந்து வெளிப்படுகிறது. நகர்ப்புறத்தில் வாசிக்கத்தக்க தனித்துவமான குணாதிசயங்களையும் உடல் பண்புகளையும் இது கொண்டுள்ளது.
9. ‘தீர்வுகாணும் மையம் – One Stop Centre’ என்ற திட்டத்தை உருவாக்கிய அமைச்சகம் எது?
அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஆ. நிதி அமைச்சகம்
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் தீர்வுகாணும் மையங்களை நிறுவவுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அறிவித்தார். இந்த முயற்சியானது, வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு விரிவான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவம், சட்டம், உளவியல் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு இது உடனடி அணுகலை வழங்குகிறது. மத்திய அரசின் ஆதரவுபெற்ற இந்த மையங்களுக்கு நிர்பயா நிதியின்கீழ் நிதியுதவிகள் வழங்கப்படும்.
10. தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. மகாராஷ்டிரா
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலையில் 80,114.80 ஹெக்டேர் பரப்பளவை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை மலை மகாதேஸ்வரா குன்றுகள் புலிகள் சரணாலயம் மற்றும் காவேரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கிறது; இது புலிகளின் ஒரு முக்கிய வழித்தடமாக அமைகிறது. பல்லுயிர் வளம் நிறைந்த இந்தப்பகுதி, பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகிறது. நீலகிரி யானைகள் காப்பகத்தின் ஒருபகுதியான இதனை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அடையாளம் கண்டது.
11. C-CARES இணையதளத்துடன் தொடர்புடைய துறை எது?
அ. பெட்ரோலிய துறை
ஆ புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
இ. நிலக்கரி துறை
ஈ. வேளாண் துறை
- மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஜன.31 அன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட C-CARES என்ற இணைய தளத்தை தொடக்கிவைத்தார். இது நிலக்கரி சுரங்கங்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (CMPFO) டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதன் பதிவுகள் மற்றும் பணி செயல் முறைகளை டிஜிட்டல் மயமாக்கும் நீண்டகால பிரச்சினையை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது விரைவான செயலாக்கம், செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, சிறந்த பதிவேடுகள் மேலாண்மை மற்றும் கண்காணிப்புக்கு வழிவகுக்கும். இது சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.
12. ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்திய அமைச்சகம் எது?
அ. ரெயில்வே அமைச்சகம்
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
இ. உள்துறை அமைச்சகம்
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
- 2023-24இல், ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0’ திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு `25,449 கோடியாகும். இது 2022-23இல் ஒதுக்கப்பட்ட நிதியைவிட 6% அதிகமாகும். 2024ஆம் ஆண்டில், இதற்கான பட்ஜெட் மதிப்பீடு `20,554 கோடியாகும்; இது 2023ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டைவிட 1.4% அதிகமாகும். ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0’ ஆகியவை போஷன் இயக்கம் 2.0இன் ஒருபகுதியாகும். கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சார்ந்ததாகும்.
13. 2024-25 இடைக்கால பட்ஜெட்டில், ‘ஆத்மநிர்பார் எண்ணெய் வித்துக்கள் அபியானுக்காக’ கருத்தில்கொள்ளப் -படுகின்ற பயிர்கள் எவை?
அ. கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன் & சூரியகாந்தி
ஆ. பனை, தேங்காய், கனோலா & ஆமணக்கு
இ. வேர்க்கடலை, பருத்தி & ஆளி
ஈ. காட்டுக்கடுகு & பனை
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் மற்றும் கிராமப்புறத் தேவைகளை எடுத்துரைத்தார். எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைய, அதிக மகசூல் தரும் இரகங்களுக்கான ஆராய்ச்சி, நவீன வேளாண் நுட்பங்கள், சந்தை இணைப்புகள், கொள்முதல், மதிப்புக்கூட்டல், கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றுக்கான பயிர்க்காப்பீடுபோன்ற உத்திகளை கோடிட்டுக் காட்டுவதனை இந்தப் பட்ஜெட் வலியுறுத்துகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு.
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவித்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை மத்திய அஞ்சல் மண்டலம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 453.7 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துவிரிந்த ஈரநிலமாகும். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சரணாலயமாக இது செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு 1999இல் கரைவெட்டி பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
2. போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா.
போட்டித்தேர்வுகளில் முறைகேடுகள் / ஆள்மாறாட்டங்களைத் தடுக்கும்விதமாக கடுமையான தண்டனைகளுடன் புதிய சட்டமசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறை, `1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.