Tnpsc Current Affairs in Tamil – 8th February 2024
1. ‘வயோமித்ரா’ ரோபோவுடன் தொடர்புடைய விண்வெளிப்பயணம் எது?
அ. ஆதித்யா L1
ஆ. ககன்யான்
இ. சந்திரயான் 3
ஈ. சந்திரயான் 2
- விண்வெளிக்கு மனிதனை கொண்டுசென்று மீண்டும் புவிக்குத் திரும்ப அழைத்துவரும் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணமான, ‘ககன்யான்’ திட்டத்தின் முன்னோட்டதிற்காக உருவாக்கப்பட்டதுதான், ‘வயோமித்ரா’ என்ற பெண் ரோபோ. நடப்பு 2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த ‘வயோமித்ரா’, விண்வெளியில் மனித செயல்பாடுகளை உருவகப்படுத்தும்.
2. அண்மையில், உயிர்கள்வாழ சாத்தியமிக்க, ‘சூப்பர் எர்த்’ஐ அடையாளம் கண்டுள்ள விண்வெளி நிறுவனம் எது?
அ. NASA
ஆ. ISRO
இ. ROSCOSMOS
ஈ. JAXA
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, 137 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, ‘சூப்பர்-எர்த்’ என்ற புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த, ‘சூப்பர்-எர்த்’ கோள் ஒரு சிறிய, சிவப்பு நிற விண்மீனைச் சுற்றி வருகிறது. ‘TOI-715 b’ என அழைக்கப்படுகிறது இந்தக்கோள், பூமியைவிட ஒன்றரை மடங்கு அகலமாக உள்ளது. NASAஇன் கூற்றுப்படி, அதன் மேற்பரப்பில் திரவநீர் இருக்கக்கூடும். இதன் ஓர் ஆண்டு என்பது புவி நாளில் வெறும் 19 நாளே ஆகும்.
3. மின்னணு கழிவுமேலாண்மைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
அ. C-MET, ஹைதராபாத்
ஆ. C-MET, மும்பை
இ. C-MET, திருச்சூர்
ஈ. C-MET, லக்னோ
- மின்னணு தொழில்நுட்பத்திற்கான பொருள்களுக்கான மையம் (C-MET) என்பது இந்தியாவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழியங்கும் ஒரு தன்னாட்சி அறிவியல் சமூகமாகும். இது புனே, ஹைதராபாத் மற்றும் திருச்சூரில் மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை இயக்குகிறது. C-MET, ஹைதராபாத் என்பது மேம்பட்ட மின்னணு மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை உருவாக்குதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காணப்படும் 3.2 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்-கழிவு மறுசுழற்சி தொழினுட்பங்களை உருவாக்குவதில் அது கவனம் செலுத்துகிறது.
4. டஸ்டட் அப்பல்லோ என்பது பின்வரும் எந்த இனத்தைச் சேர்ந்ததாகும்?
அ. வண்ணத்துப்பூச்சி
ஆ. தவளை
இ. மீன்
ஈ. சிலந்தி
- அரிய டஸ்டட் அப்பல்லோ பட்டாம்பூச்சியானது (Parnassius stenosemus) அண்மையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதன்முறையாகக் காணப்பட்டு நிழற்படம் எடுக்கப்பட்டது. இதன்மூலம் இவ்வகை வண்ணத்துப்பூச்சிகள் லடாக்கில் இருந்து மேற்கு நேபாளம் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. லடாக் பேண்டட் அப்பல்லோ வண்ணத்துப்பூச்சிகளை ஒத்திருக்கும் இது, தனது மேல் முன் இறக்கையில் முழுமையான வட்டவடிவ கற்றையைகொண்டு வேறுபடுகிறது. பாதுகாக்கப்பட்ட ரீகல் அப்பல்லோ வண்ணத்துப்பூச்சிகளும் (Parnassius charltonius) அப்போது காணப்பட்டது. இது அப்பகுதியில் அப்பல்லோ வண்ணத்துப்பூச்சிகளின் செழுமையான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
5. ‘Thrips Parvispinus’ என்பது பின்வரும் எந்த இனத்தைச் சேர்ந்ததாகும்?
அ. ஆக்கிரமிக்கும் பூச்சியினங்கள்
ஆ. வண்ணத்துப்பூச்சி
இ. சிலந்தி
ஈ. மீன்
- ‘Thrips Parvispinus’ என்ற ஆக்கிரமிக்கும் பூச்சி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு பூர்வீக மிளகாய்ச் செடிப்பேன் வழியாக இடம்பெயர்ந்திருக்கலாம் என மத்திய விவசாய அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார். முருங்கை, துவரை, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை இந்தப் பலதீனி உண்ணிப் பூச்சிகள் பாதிக்கிறது. முதன் முதலாக இந்தியாவில் கடந்த 2015இல் கண்டு அறிவிக்கப்பட்ட இந்த, ‘Thrips Parvispinus’ உலக அளவில் பரவி, பொருளாதார இழப்புகளையும் தீநுண்மத் தொற்றுகளையும் ஏற்படுத்தியது. மாறிவரும் வேளாண் நடைமுறைகள் மற்றும் காலநிலைச் சூழல்களுக்கு மத்தியில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
6. ‘இந்தியாவின் முதல் தேசிய டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
அ. ஹைதராபாத்
ஆ. பெங்களூரு
இ. சென்னை
ஈ. ஜெய்ப்பூர்
- ஹைதராபாத்தில் அமைந்துள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் இந்தியாவின் முதல் தேசிய டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை மத்திய கலாசார அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாட்டினார். இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகமானது, பாரத் பகிரப்பட்ட கல்வெட்டுக் கலைக் களஞ்சியத்தின் முன்னெடுப்புடன் இணைந்து, பல்வேறு காலங்கள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் பழைமையான கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. பின்வருவனவற்றில் எது, ‘அபியாஸ்’ குறித்த சிறந்த விளக்கமாக உள்ளது?
அ. கிரகங்களைக் கண்டறிவதற்கான ஒரு போக்குவரத்து முறை
ஆ. வான் இலக்குகளை அதிவேகமாக தாக்கக்கூடியது
இ. ஒரு செயற்கைக்கோள்
ஈ. அடுத்த தலைமுறை மறைந்திருந்து தாக்கும் விமானம்
- ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து வானில் உள்ள இலக்குகளை அழிக்கவல்ல அதிவேக, ‘அபியாஸ்’ ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது. பூஸ்டரை பாதுகாப்பாக விடுவித்தல், ஏவுகணையைச் செலுத்துதல், திட்டமிட்ட ஏவுகணை வேகத்தை அடைதல்போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஏவுகணை ADE நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானோட்டி உதவியுடன் தானியங்கி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8. ‘மேரா காவ்ன் மேரி தரோஹர்’ திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. நிதி அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. கலாசார அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- மத்திய கலாசார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, ‘மேரா காவ்ன் மேரி தரோஹர்’ திட்டம், 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியாவின் ஆறரை (6.5) இலட்சம் கிராமங்களை கலாசார ரீதியாக வரைபடமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஜூலை.27 அன்று, தேசிய கலாசார வரைபடமாக்கலின் கீழ் தொடங்கப்பட்ட இது, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் முதல் வரலாற்று மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் வரை ஏழு வகைகளில் தகவல்களைத் தொகுக்கிறது.
9. 2024 – தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 87 கிகிராம் கிரேகோ-ரோமன் பட்டத்தை வென்றவர் யார்?
அ. யோகேஷ்வர் தத்
ஆ. சுனில் குமார்
இ. ரவி தஹியா
ஈ. சௌரவ் குர்ஜார்
- 2024 பிப்ரவரி.4 அன்று இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 87 கிகிராம் கிரேகோ-ரோமன் பட்டத்தை சுனில் குமார் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்த சுனில் குமார், 9-1 என்ற கணக்கில் மனோஜ் குமாரை வீழ்த்தி இப்பட்டத்தை வென்றார்.
10. சமீபத்தில், 2024 – கிராமி விருதுகளில், ‘சிறந்த இசைத்தொகுப்பிற்கான’ விருதை வென்ற இசைத்தொகுப்பு எது?
அ. This Moment
ஆ. Endless Summer Vacation
இ. The Record
ஈ. World Music Radio
- இந்திய இசைக்குழுவான, ‘சக்தி’யின், ‘திஸ் மொமென்ட்’, ‘சிறந்த இசைத்தொகுப்பிற்கான’ 2024ஆம் ஆண்டுக்கான கிராமி விருதை வென்றுள்ளது. இந்த இசைத்தொகுப்பானது 2024இல் வெளியிடப்பட்டது. இதில் ஜான் மெக்லாலின், ஜாகீர் உசேன், ஷங்கர் மகாதேவன், வி செல்வகணேஷ் மற்றும் கணேஷ் இராஜகோபாலன் ஆகியோரின் எட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசைத்துறையில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகின்றன.
11. புதிய இராணுவத் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. உபேந்திர திவேதி
ஆ பக்கவல்லி சோமசேகர் ராஜூ
இ. சண்டி பிரசாத் மொகந்தி
ஈ. மனோஜ் பாண்டே
Lt. Gen M V சுசீந்திர குமாரைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் புதிய துணைத்தலைவராக Lt. Gen உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். உபேந்திர திவேதி, இதற்கு முன்பு காலாட்படையின் தலைமை இயக்குநர் மற்றும் துணைத்தலைவர்போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். Lt. Gen சுசீந்திர குமார் தற்போது உதம்பூரில் வடக்கு இராணுவத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. 2024-25 நிதியாண்டிற்கு ஜம்மு & காஷ்மீருக்கென அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் அளவு எவ்வளவு?
அ. $12 பில்லியன்
ஆ. $14 பில்லியன்
இ. $11 பில்லியன்
ஈ. $16 பில்லியன்
- ஜம்மு & காஷ்மீருக்கு $14 பில்லியன் டாலர் மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை இந்தியா வெளியிட்டுள்ளது. இது அப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் உதவும். அறிவிக்கப்பட்டுள்ள `1.18 இலட்சம் கோடி ($14.16 பில்லியன்) பட்ஜெட், ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் உள்ளது.
13. முதலாவது BIMSTEC நீர் விளையாட்டுக்கள் சாம்பியன்ஷிப் நடைபெறும் இடம் எது?
அ. லக்னோ
ஆ. சென்னை
இ. புது தில்லி
ஈ. காந்தி நகர்
- மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், BIMSTEC நாடுகள் பங்கேற்கும் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டியை புது தில்லியில் தொடக்கி வைத்தார். BIMSTEC நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு முதன்முறையாக நடைபெறுகிறது. ஏழு BIMSTEC நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலம், வங்காள விரிகுடா பகுதியில் பயணம் & போக்குவரத்து மேம்படுவதோடு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
- நீச்சல், நீர் போலோ மற்றும் டைவிங் பிரிவுகளில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. மூன்று விளையாட்டுப்போட்டிகளில் 39 பதக்கங்களும், மொத்தம் 9 கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன. BIMSTEC எனப்படும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த BIMSTEC அமைப்பு இந்நாடுகளுக்கிடையே ஒரு தனித்துவ இணைப்பை உருவாக்குகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ICC தரவரிசையில் வரலாறு படைத்த பும்ரா!
ICC டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பெற்று வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்தச் சிறப்பைப் பெற்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். மேலும் இதன் மூலம் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
2. தமிழ்நாட்டில் குடற்புழு நீக்க முகாம்.
தமிழ்நாட்டில் 19 வயது வரையுள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் 20-30 வயது வரையுள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க பொது சுகாதாரத் துறை முடிவுசெய்துள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்விரு மாதங்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட சிறார், முப்பது வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
3. ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்.
2026ஆம் ஆண்டில் கண்காணிப்பாளர்கள் உதவியுடன் இயக்கப்படும் ஓட்டுநரில்லா மெட்ரோ ரெயில்களின் முதல் சேவையைத் தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
4. செய்கை புதுமை:
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் புத்தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்-அப்) தேவையான பொருள்கள் மற்றும் சேவைகளை சலுகை விலையில் வழங்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கும், ‘செய்கை புதுமை’ என்னும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஸ்மார்ட் அட்டைமூலம் நிதி மற்றும் சட்ட ஆலோசனைகள், மென்பொருள் & தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேலாண் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் விளம்பரம்போன்ற துறைகள்சார் பொருட்கள் & சேவைகளை புத்தொழில் நிறுவனங்கள் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
5. விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு மாறிவருகிறது. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளைமூலம் 100 விளையாட்டு வீரர்களுக்கு `18 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.