General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 16

Tnpsc General Tamil Previous Question Paper 16

Tnpsc General Tamil Previous Question Paper 16: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச் சொல் என்பதைக் கண்டறிக:

(அ) பெயர்ச்சொல்

(ஆ) வினைச்சொல்

(இ) உரிச்சொல்

(ஈ) இடைச்சொல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடைச்சொல்

பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே வந்து பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும்.

உம், கொல், மன், மற்று, என, என்று முதலியவை இடைச்சொற்களாகும்.

எ.கா: உம்-வயிற்றிற்கும் ஈயப்படும்.

கொல்-இவன் தந்தை என்நோற்றான் கொல்.

மன்-கூரியதோர் வாள்மன்.

மற்று-மற்றென்னை யாள்க.

என-மழை பொழிந்ததென மக்கள் மகிழ்ந்தனர்.

என்று-வெள்ளென்று விளர்த்தது.

2. “கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்” – எவ்வகையான எச்சம்?

(அ) வினையெச்சம்

(ஆ) தெரிநிலை வினையெச்சம்

(இ) குறிப்பு வினையெச்சம்

(ஈ) முற்றெச்சம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குறிப்பு வினையெச்சம்

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் உணர்த்தி வினைச்சொல்லைத் தழுவி வருவது குறிப்பு வினையெச்சம் ஆகும்.

எ.கா: மெல்லச் சென்றான்.

வந்து போனான்.

நோயின்றி வாழ்ந்தான்.

3. “பண்ணொடு தமிழொப்பாய்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்.

(அ) திருவாசகம்

(ஆ) தேவாரம்

(இ) திருக்குறள்

(ஈ) பட்டினப்பாலை.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேவாரம்

4. 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

(அ) அ

(ஆ) ச

(இ) உ

(ஈ) ரு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ச

அ – எட்டு,

ச-நான்கு,

உ-இரண்டு,

ரு-ஐந்து

5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? – என வினவும் வினா

(அ) அறிவினா

(ஆ) ஐயவினா

(இ) கொடை வினா

(ஈ) ஏவல் வினா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கொடை வினா

6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக:

(அ) குயில் கூவும்

(ஆ) மயில் அகவும்

(இ) கோழி கூவும்

(ஈ) கிளி பேசும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கோழி கூவும்

கோழி கொக்கரிக்கும்

7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக:

மணம் வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

(அ) மலர்க்குள் புதுமை மண்ணில் மணம் வைத்தாய்

(ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

(இ) மணம் வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை

(ஈ) மலர்க்குள் புதுமை மணம் வைத்தாய் மண்ணில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம் வைத்தாய்

8. திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

(அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

(ஆ) அறநூற்று எண்பத்தைந்து

(இ) நானூற்று ஐம்பத்தெட்டு

(ஈ) அறுநூற்றுப் பத்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அறுநூற்று ஐம்பத்தெட்டு

9. சொல்லிசை அளபெடை தேர்க:

(அ) உண்பதூஉம்

(ஆ) பெறா அவிடின

(இ) தழீஇ

(ஈ) அண்ணன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தழீஇ

சொல்லிசை அளபெடை:

தழீஇ – “தழீ” என்னும் தொழிற்பெயர்ச்சொல் ‘தழீஇ’ (தழுவி) என வினையெச்சம் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று. இவ்வளபெடை “இ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

10. பிரித்தெழுதுக:

வெவ்விரும்பாணி

(அ) வெம்+இரும்பு+ஆணி

(ஆ) வெம்+இருப்பு+ஆணி

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

(ஈ) வெம்மை+இருப்பு+ஆணி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வெம்மை+இரும்பு+ஆணி

வெம்மை+இரும்பு

வெம்மை என்பதன் ஈறு(மை)விகுதி கெட்டு முன் ஒற்றாகிய மகரவொற்று வகர ஒற்றாகத் திரிந்து வெவ்+இரும்பு என்றானது. இது “முன்னின்ற மெய்திரிதல்” விதியாகும்.

“தனிக்குறில் முன் ஒற்றுயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “வெவ்வ்+இரும்பு” என்றானது. “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பு” என்றானது.

“மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்

தம்மின வன்றொட ராகா மன்னே”

– நன்னூல் – 184.

என்ற விதிப்படி “வெவ்விரும்பு+ஆணி” என்றானது.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் உயிரெழுத்து வந்ததால் வெவ்விரும்ப்+ஆணி என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வெவ்விரும்பாணி” என்றானது.

11. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) பையுள்-இன்பம்

(ஆ) பனவன்-அந்தணன்

(இ) விபுதர்-புலவர்

(ஈ) அல்கு-இரவு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பையுள்-இன்பம்

பையுள்-வருத்தம்(அ) துன்பம்

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

12. பிரித்தெழுதுக:

நன்கணியர்.

(அ) நன்கு+அணியர்

(ஆ) நன்+அணியர்

(இ) நான்கு+அணியர்

(ஈ) நன்கு+கணியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நன்கு+அணியர்

நன்கு+அணியர்.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி.

“நன்க்+உ+அணியர்”. உ கெட்டு நன்க்+அணியர் என்றானது.

“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி நன்கணியர் என்று புணர்ந்தது.

13. பொருத்துக:

அ. வைதருப்பம் – 1. மதுரகவி

ஆ. கௌடம் – 2. ஆசுகவி

இ. பாஞ்சாலம் – 3. வித்தாரகவி

ஈ. மாகதம் – 4. சித்திரகவி

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 4 3 1 2

இ. 2 1 4 3

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

இ. 2 1 4 3

நான்கு செய்யுள் நெறிகள்:

வைதருப்பம்-ஆசுகவி.

கௌடம்-மதுரகவி.

பாஞ்சாலம்-சித்திரக்கவி.

மாகதம்-வித்தாரகவி.

ஆசுகவி-“பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர்.

மதுரகவி-செவிக்கினிய ஓசை நலம் சிறக்கப்பாடுபவர்.

சித்திரக்கவி-சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்.

வித்தாரகவி-தொடர்நிலைச் செய்யுள்களும் தூயக் காப்பியங்களும் இயற்றுபவர்.

14. “விளம்பி” என்பது ———– பெயர்.

(அ) இயற்பெயர்

(ஆ) புனைப்பெயர்

(இ) ஊர்ப்பெயர்

(ஈ) இறைவனின் பெயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஊர்ப்பெயர்

நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார். “விளம்பி” என்பது ஊர்ப்பெயராகும். “நாகனார்” என்பது ஆசிரியரின் பெயராகும்.

15. “அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடியனா என்னை ஆளது கொண்” – பாடியவர் யார்?

(அ) அப்பர்

(ஆ) சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுந்தரர்

சுந்தரர் தேவாரம்

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்

சொற்ப தப்பொருள் இருள றுத்திடும்

துய்ய சோதியை வெண்ணெய் நல்லூரில்

அற்பு தப்பழ ஆவணங் காட்டி

அடிய னாஎன்னை ஆளது கொண்ட

நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்னினைக் கேனே

– சுந்தரர்.

பொருள்: “இறைவன், வேண்டுவோர் வேண்டியவற்றை வழங்கும் கற்பகத் தருவினைப் போன்றவன். பெரிய பொன்மலையைப் போன்றவன். தன் தவத்தினைக் கலைத்த காமனைக் கோபம் கொண்டு எரித்தவன். நெற்றிக்கண் உடையவன். அக இருளை நீக்கி தூய ஒளியாய் நிற்பவன். திருவெண்ணெய் நல்லூரில் எழுதப்பட்ட பனைஓலை ஒன்றினைக் காட்டி என்னை (சுந்தரரை) அடிமை கொண்டவன். நன்னிலையில் இருப்பவன். இத்தகைய அமுதம் போன்றவனை மறந்து வேறு எதனை நினைக்க முடியும்?”

16. சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு

(அ) எட்டுத்தொகை

(ஆ) பத்துப்பாட்டு

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

(ஈ) பதினெண் மேல்கணக்கு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

சங்க நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்களாகும். அவை எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியனவாகும். சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். அவையாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, திருக்குறள், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்திலை, கார்நாற்பது, களவழிநாற்பது.

17. பொருந்தாத இணையைக் கண்டறிக:

அ. சிறுபஞ்சமூலம்-காரியாசன்

(ஆ) ஞானரதம்-பாரதியார்

ஆ. எழுத்து-சி.சு.செல்லப்பா

(ஈ) குயில்பாட்டு-கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) குயில்பாட்டு-கண்ணதாசன்

குயில்பாட்டு-பாரதியார்

18. “பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

(அ) திருவாசகம்

(ஆ) திருக்குறள்

(இ) தேவாரம்

(ஈ) திருத்தொண்டர் புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தேவாரம்

19. ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

(அ) உலா

(ஆ) தூது

(இ) பரணி

(ஈ) பள்ளு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புழ்ந்து பாடும் இலக்கியம் பரணி. பரணி இலக்கியம் தோல்வியுற்றவர் பெயரால் பாடப்படும்.

எ.கா: கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு தோல்வியடைந்த நாடாகும்.

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மான வனுக்கு வகுப்பது பரணி”

– இலக்கண விளக்கப்பாட்டியல்.

20. கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெறுபவர்

(அ) ஜான்பன்யன்

(ஆ) எச்.எ.கிருட்டிணனார்

(இ) ஹென்றி

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) எச்.எ.கிருட்டிணனார்

கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பட்டவர் ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணனார். இவர் இரட்சணிய யாத்ரீகம், இரட்சணிய சமயநிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!