Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

6th Science Lesson 11 Questions in Tamil

11] செல்

1) கீழ்க்கண்டவற்றில் எது யூகேரியோட்டிக் செல் ஆகும்?

A) தாவர செல்

B) விலங்கு செல்

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: யூகேரியோட்டிக் செல் என்பது உட்கரு உடைய செல் ஆகும். தாவர செல் மற்றும் விலங்கு செல் இரண்டிலும் உட்கரு உள்ளது.

2) கூற்றுகளை ஆராய்க.

1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.

2. விலங்குசெல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.

2. விலங்குசெல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை.

3) செல்லை தாங்குபவர் மற்றும் பாதுகாப்பவர் யார்?

A) செல் சவ்வு

B) உட்கரு

C) செல்சுவர்

D) நியூக்ளியஸ் உறை

விளக்கம்: செல்சுவர்:

1. செல்லைப் பாதுகாக்கிறது

2. செல்லிற்கு உறுதியை தருகிறது

3. வலிமையைத் தருகிறது.

எனவே செல்லை தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுகிறது.

4) மைக்ரோகிராபியா என்ற நூலினை எழுதியவர் யார்?

A) இராபர்ட் ஹக்

B) இராபர்ட் பர்கின்ஜி

C) இராபர்ட் பாயில்

D) வில்லியம் ஹார்வி

விளக்கம்: இராபர்ட் ஹக் என்பது 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். அதில் முதன்முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.

5) கூற்றுகளை ஆராய்க.

1. தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் சிறியது.

2. விலங்கு செல்களில் சென்ட்ரியோல்கள் உண்டு

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியது.

2. விலங்கு செல்களில் சென்ட்ரியோல்கள் உண்டு

6) செல்லின் நகரும் பகுதி என்று அழைக்கப்படுவது எது?

A) பசுங்கணிகம்

B) மைட்டோகாண்ட்ரியா

C) சைட்டோபிளாசம்

D) எண்டோபிளாச வலைப்பின்னல்

விளக்கம்: நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லின் உள்ள நகரும் பொருள் சைட்டோபிளாசம் ஆகும்.

7) கூற்றுகளை ஆராய்க.

1. செல்களை முப்பரிமாண அமைப்புடையவை.

2. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது – மைட்டோகாண்ரியா

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. செல்களை முப்பரிமாண அமைப்புடையவை.

2. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது – உட்கரு.

8) செல்லின் கதவு என்று அiழைக்கப்படுவது எது?

A) செல்சுவர்

B) செல்சவ்வு

C) நியூக்ளியஸ் உறை

D) சைட்டோபிளாசம்

விளக்கம்: 1. செல்லிற்குப் பாதுகாப்புத் தருகிறது

2. செல்லின் போக்குவரத்திற்க்கு உதவுகிறது.

எனவே செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது செல் சவ்வு ஆகும்.

9) விலங்கு செல் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

A) இவை பெரிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன.

B) சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை

C) பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை

D) செல்சுவர் காணப்படுவதில்லை

விளக்கம்: விலங்கு செல்லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு

10) கூற்று: செல்லின் உணவுத் தொழிற்சாலை – பசுங்கணிகம்

காரணம்: பச்சையம் என்ற நிறமி பெற்று, ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: பசுங்கணிகம்:

1. இதில் பச்சையம் என்ற நிறமி உள்ளது.

2. இது சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுகிறது.

உணவு தயாரிப்பதால் இதனை நாம் செல்லின் உணவுத் தொழிற்சாலை என்கிறோம்.

11) செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது எது?

A) மைட்டோ காண்ட்ரியா

B) ரைபோசோம்

C) உட்கரு

D) நுண்குமிழ்கள்

விளக்கம்: செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது நுண்குமிழ்கள். இதன் பணிகள்:

1. உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கிறது.

12) செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது எது?

A) மைட்டோகாண்ட்ரியா

B) உட்கரு

C) சைட்டோபிளாசம்

D) ரைபோசோம்

விளக்கம்: உட்கரு:

1. செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.

2. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.

எனவே, செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு.

13) சாதாரண நுண்ணோக்கியை மேம்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியர் யார்?

A) இராபர்ட் ஹக்

B) இராபர்ட் பர்கின்ஜி

C) இராபர்ட் பாயில்

D) வில்லியம் ஹார்வி

விளக்கம்: இராபர்ட் ஹக் என்பவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.

14) கீழ்க்கண்டவற்றில் எது புரோகேரியோட்டிக் செல் ஆகும்?

A) பாக்டீரியா

B) சயனோ பாக்டீரியா

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தெளிவான உட்கரு அற்ற செல் புரோகேரியோட்டிக் செல் ஆகும். எ.கா. பாக்டீரியா மற்றும் சயனோ பாக்டீரியா.

15) பாக்டீரிய செல்லின் அளவு_________முதல்_________ மைக்ரோமீட்டர் வரை மாறுபடுகின்றன.

A) 0.1-0.5

B) 0.5-1.0

C) 0.2-0.7

D) 0.4-1.0

விளக்கம்: பாக்டீரியாக்கள் மிகச்சிறியவை. ஒரே செல்லால் ஆனவை. இவை 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன.

16) மனித உடலின் மிக நீளமான செல்?

A) நரம்பு செல்

B) மூளை செல்

C) இதய செல்

D) நுரையீரல் செல்

விளக்கம்: மனித உடலின் நரம்பு செல்லானது மிக நீளமான செல்லாகக் கருதப்படுகிறது.

17) நெருப்புக் கோழியின் முட்டையானது எத்தனை மி.மீ விட்டம் கொண்டது?

A) 120

B) 150

C) 170

D) 240

விளக்கம்: ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மி.மீ விட்டம் கொண்டதாக உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்க இயலும்.

18) தாவர செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படவில்லை?

A) செல்சவ்வு

B) நுண்குமிழ்கள்

C) சென்டிரியோல்கள்

D) செல்சுவர்

விளக்கம்: தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவர செல்களில் நுண்குமிழ்கள் உள்ளன. ஆனால் சென்டிரியோல்கள் காணப்படுவதில்லை.

19) உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது எது?

A) செல்சவ்வு

B) செல்சுவர்

C) நியூக்ளியஸ் உறை

D) உட்கரு சாறு

விளக்கம்: உட்கரு உறை அல்லது நியூக்ளியஸ் உறை:

1. நியூக்ளியஸைச் சுற்றிப் பாதுகாக்கிறது.

2. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.

எனவே, நியூக்ளியஸ் உறை அல்லது உட்கரு உறை, உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.

20) ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைப்பது எது?

A) திசு

B) செல்

C) மூளை

D) நரம்பு

விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும். செல்கள் ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.

21) கீழ்கண்டவற்றில் எது ஒரு செல் உயிரி அல்ல?

A) பாக்டீரியா

B) அமீபா

C) கிளாமிடோமோனஸ்

D) ஸ்பைரோகைரா

விளக்கம்: உயிரினங்கள் ஒரு செல் உயிரினமாகவோ அல்லது பல செல் உயிரினமாகவோ இருக்கலாம்.

ஒரு செல் உயிரினங்கள் – பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ், ஈஸ்ட்

பல செல் உயிரனங்கள் – ஸ்பைரோகைரா, மாமரம், மனிதன்.

22) புரோகேரியாடிக் செல்லின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) நியூக்ளியஸ்

B) நியூக்ளியாய்டு

C) நியூக்ளிக்

D) நியூக்ளி

விளக்கம்: பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என்று அழைக்கப்படுகிறது.

23) யூகேரியாட்டிக் செல்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.

B) செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை

C) தெளிவான உட்கரு கொண்டவை

D) நியூக்ளியோலஸ் காணப்படும்

விளக்கம்: பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.

செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது.

தெளிவான உட்கரு கொண்டவை

நியூக்ளியோலஸ் காணப்படும்.

24) உயிரினங்களின் அடிப்பபடை அமைப்பு மற்றும் செயல் அலகு என்று குறிப்பிடப்படுவது எது?

A) செல்

B) நுண்ணுறுப்புகள்

C) உட்கரு

D) திசு

விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.

தெளிவான உட்கரு உடையது – யூகேரியோட்டிக் செல்.

தெளிவற்ற உட்கரு உடையது – புரொகேரியோடிக் செல்.

25) சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

1. செல்லின் பாதுகாவலர் – நியூக்ளியஸ்

2. செல்லின் கதவு – செல்சவ்வு

3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்

4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்டிரியா

A) 1

B) 2, 3

C) 1, 2, 3

D) அனைத்தும்

விளக்கம்: 1. செல்லின் பாதுகாவலர் – செல்சுவர்

2. செல்லின் கதவு – செல்சவ்வு

3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்

4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்டிரியா

26) கூற்று: உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது – நியூக்ளியஸ் உறை.

காரணம்: நியூக்ளியஸ் உறை, உட்கருவினுள் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: உட்கரு நியூக்ளியஸ் என்று அழைக்கப்படுகிறது. நியூக்ளியஸ் உறை உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புவதால் உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.

27) செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?

A) சென்டி மீட்டர்

B) மில்லி மீட்டர்

C) மைக்ரோ மீட்டர்

D) மீட்டர்

விளக்கம்: செல் மிகவும் சிறியது. இதனை மைக்ரோ மீட்டர் என்ற அலகால் குறிக்கலாம்.

28) புரேகேரியோட்டிக் செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை

B) செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை

C) தெளிவற்ற உட்கரு கொண்டதல்ல

D) நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லை

விளக்கம்: ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை

செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை

தெளிவற்ற உட்கரு கொண்டவை.

நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லை.

29) கூற்றுகளை ஆராய்க.

1. செல் இரண்டு வகைப்படும் – 1. தாவர செல் 2. விலங்கு செல்

2. ராபர்ட் ஹக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. செல் இரண்டு வகைப்படும் – 1. யூகேரியோட்டிக் செல் 2. புரோகேரியோட்டிக் செல்

2. ராபர்ட் ஹக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

30) செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது?

A) உட்கரு

B) ரைபோசோம்

C) மைட்டோகாண்ட்ரியா

D) லைபோசோம்

விளக்கம்: செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது மைட்டோகாண்ட்ரியா ஆகும். எனவே இதனை செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கிறோம்.

31) கூற்று: உட்கரு வாயில் என்று அழைக்கப்படுவது – உட்கரு உறை

காரணம்: இது நியூக்ளியஸை நன்கு பாதுகாக்கிறது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை) உட்கரு வாயில் என்று அழைக்கபடுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.

32) யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது எது?

A) செல்சுவர்

B) நியூக்ளியஸ்

C) நுண்குமிழ்கள்

D) பசுங்கணிகம்

விளக்கம்: யூகேரியேட்டின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது நியூக்ளியஸ் ஆகும். இது செல்லின் மூளையாகச் செயல்படுகிறது. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.

33) கூற்றுகளை ஆராய்க.

1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா

2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்

3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்

4. செல்லை 1664 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா

2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்

3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்

4. செல்லை 1665 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.

34) கூற்றுகளை ஆராய்க.

1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடுவதில்லை.

2. புவியில் முதலில் உருவான உயிரினமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.03 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். உயிரினங்கள் ஒரு செல் கொண்டு ஒரு செல் உயிரினமாக இருக்கலாம் அல்லது பல செல் உயிரினமாக இருக்கலாம்.

2. புவியில் முதலில் உருவான உயிரனமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.

35) தாவர செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) வெளிப்புறத்தில் செல்சவ்வும் அதனைச் சுற்றி செல்சுவரும் காணப்படும்

B) விலங்கு செல்லை விட அளவில் பெரியது

C) பசுங்கணிகங்களை கொண்டுள்ளன.

D) விலங்கு செல்லை விட கடினத்தன்மை மிக்கது.

விளக்கம்: தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியனவையாகவும், கடினத்தன்மை மிக்கதாகவும் உள்ளன. தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவரசெல்கள் பசுங்கணிகங்களை கொண்டுள்ளன. அவற்றில் காணப்படும் பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு அதன் உணவினை தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.

36) மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை?

A) 3.7×1010

B) 3.7×1012

C) 3.7×1013

D) 3.7×1013

விளக்கம்: தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7×1013அல்லது 37, 000, 000, 000, 000 ஆகும்.

37) விலங்கு செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படுவதில்லை?

A) நுண்குமிழ்கள்

B) சென்ட்ரியோல்கள்

C) பசுங்கணிகங்கள்

D) செல்சவ்வு

விளக்கம்: விலங்கு செல்;லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு.

38) செல் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?

A) கிரேக்கம்

B) பிரெஞ்சு

C) அரபு

D) இலத்தீன்

விளக்கம்: இலத்தீன் மொழியில் செல்லுலா என்பதற்கு சிறிய அறை என்று பொருள் ஆகும். 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்ட இராபர்ட் ஹக் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.

39) கூற்று: மனிதனின் செல்களில் நிறத்தை வழங்கும் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன.

காரணம்: இதுவே மனித தோலுக்கு நிறத்தை வழங்குகிறது

A) கூற்று, காரணம் இரண்டும் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை விளக்கம்: விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. பசுங்கணிகங்கள் என்பது தாவர செல்களில் மட்டுமே காணப்படும்.

40) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) செல்லை பாதுகாப்பது – செல்சுவர்

B) செல்லுக்கு சக்தி அளிப்பது – மைட்டோகாண்டிரியா

C) செல்லின் மூளை – உட்கரு

D) செல்லின் நகரும் பெர்ருள் – புரோட்டோபிளாசம்

விளக்கம்: செல்லை பாதுகாப்பது – செல்சுவர்

செல்லுக்கு சக்தி அளிப்பது – மைட்டோகாண்டிரியா

செல்லின் மூளை – உட்கரு

செல்லின் நகரும் பொருள் – சைட்டோபிளாசம்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!