Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

6th Science Lesson 17 Questions in Tamil

17] அன்றாட வாழ்வில் தாவரங்கள்

1) மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை படிக்கும் அறிவியல் பிரிவு ________ எனப்படும்?

A) பொருளாதார தாவரவியல்

B) தாவரவியல்

C) பூஞ்சையியல்

D) செயற்கை உரங்கள்

விளக்கம்: மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை படிக்கும் அறிவியலின் ஒரு பிரிவு பொருளாதார தாவரவியல் என அழைக்கப்படுகிறது, இது அறிவியலின் தாவரங்களை பற்றிய படிப்பின் ஒரு பிரிவு ஆகும்.

2) உணவுத் தாவரங்களை நாம் எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: உணவுத்தாவரங்களை நாம் 3 வகையாக பிரிக்கலாம் அவையானவ காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்றன ஆகும், மேலும் காபி, தேனீர், சர்க்கரை மற்றும் எண்ணைய் வகைகள் போன்றவற்றிற்காகவும் தாவரங்கலிலிருந்து பெறுகிறோம்.

3) புல் வகை தாவரத்திலிருந்து விளைவிக்கப்படும் உணவுப்பொருள்கள் எது?

A) கரும்பு

B) பருப்பு

C) நெல்

D) உருளைக்கிழங்கு

விளக்கம்: புல் வகை தாவரத்திலிருந்து நாம் நெல், கோதுமை, கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானிய வகை பயிர்களை நாம் உற்பத்தி செய்கிறோம்.

4) உலக உணவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

A) அக்டோபர் 16

B) நவம்பர் 16

C) செப்டம்பர் 15

D) ஆகஸ்ட் 15

விளக்கம்: உலக உணவு தினமாக நாம் அக்டோபர் 16 ம் நாளை கடைபிடிக்கிறோம், இது அனைவருக்கும் உணவுத்தேவையையும் மற்றும் சத்துணவு தேவையையும் வலியுறுத்தி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

5) இந்திய நறுமணப்பொருள் அல்லாதது எது?

A) ஜாதிக்காய்

B) ஏலக்காய்

C) மிளகு

D) சின்கோனா

விளக்கம்: மேற்க்கண்டவற்றில் சின்கோனா மட்டும் நறுமண பொருளாக பயன்படுத்துவது இல்லை இது மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது, இந்திய நறுமணப்பொருளாக பயன்படுத்துவதாவது ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, சீரகம், கொத்தமல்லி விதைகள், மஞ்சள், கிராம்பு, இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை.

6) தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடு அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: தாவரங்கள் பொருளாதாரம் மிகவும் அடிப்படையான இன்றியமையாத ஒன்றாகும் இதனை நாம் 6 வகையாக பிரிக்கலாம், அவையாவன

  1. உணவுத்தாவரங்கள்,
  2. நருமண பொருள் தரும் தாவரங்கள்,
  3. மருத்துவ தாவரங்கள்,
  4. நார் தரும் தாவரங்கள்,
  5. மரக்கட்டை தரும் தாவரங்கள்,
  6. அலங்கார தாவரங்கள்.

7) 1. வேர் – நெல்லி

2. இலை – கருணைக்கிழங்கு

3. தண்டு – கேரட்

4. கனி – கருவேப்பிலை

A) 3 4 2 1

B) 3 4 1 2

C) 4 3 2 1

D) 1 4 2 3

விளக்கம்: வேர் – கேரட்

இலை – கருவேப்பிலை

தண்டு – கருணைக்கிழங்கு

கனி – நெல்லி

8) பருப்பு வகைகள் எக்குடும்பத்தை சார்ந்த தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது?

A) மா குடும்பம்

B) அவரை குடும்பம்

C) புல் வகை தாவர குடும்பம்

D) தண்டு வகை தாவர குடும்பம்

விளக்கம்: பருப்பு வகைகள் அவரை குடும்ப தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது, இதில் தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகளே பருப்பாக பயன்படுத்துகிறோம், பருப்புகள் கனி உறையினுள் வளர்கிறது. உதாரணம்: கொண்டைகடலை

9) 1. நெல்லி – மார்பு சளி

2. துளசி – குடல் புண்ணை சரிபடுத்த

3. சோற்றுக்கற்றாலை – நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த

4. வேம்பு – காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்க

5. மஞ்சள் – கிருமிநாசினியாக

A) 3 1 2 5 4

B) 2 5 4 1 3

C) 1 5 3 2 4

D) 3 4 2 5 1

விளக்கம்: நெல்லி – நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த

துளசி – மார்பு சளி

சோற்றுக்கற்றாலை – குடல் புண்ணை சரிபடுத்த

வேம்பு – கிருமிநாசினியாக

மஞ்சள் – காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்க

10) நார் தரும் தாவரங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: நார் தரும் தாவரங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவையாவன நெசவு நார்கள், கயிறு நார்கள் மற்றும் நிரப்பும் நார்கள்

11) தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை எது?

A) வாத்து

B) கிளி

C) ஓசனிச்சிட்டு

D) புறா

விளக்கம்: தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பறவைகள் பெறிதும் உதவுகின்றன அதில் குறிப்பாக ஓசனிச்சிட்டுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

12) _______ இலையின் சாறு இருமலையும் மார்பு சளியையும் குறைத்து குணமாக்குகிறது?

A) கற்றாழை

B) துளசி

C) வேம்பு

D) நெல்லி

விளக்கம்: துளசி இலையின் சாறானது இருமலையும் மார்பு சளியையும் குணமாக்கப்பயன்படுகிறது, இது சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

13) உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தை வகிக்கிறது.

14) நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள் எவை?

A) நீலப்பசும் பாசி

B) சூடோமோனஸ் பாக்டீரியா

C) சால்மோனெல்லா

D) A&B

விளக்கம்: மண்ணில் நைட்ரஜன் சத்தை நிலை நிறுத்தி மண்ணின் தரத்தை உயர்த்தி விவசாயத்தில் பெறும் பங்கு வகிக்கின்றன.

15) இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுவது எது?

A) ஜாதிக்காய்

B) வேம்பு

C) இஞ்சி

D) மூங்கில்

விளக்கம்: தாவரங்களில் இயற்கையான கொசு விரட்டியாக பயன்படுவது வேம்பு ஆகும்.

16) இந்தியாவின் தேசிய மரம் எது?

A) வேம்பு

B) பலா மரம்

C) ஆலமரம்

D) மாமரம்

விளக்கம்: இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரத்தினை இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது, இது ஒற்றுமையை குறிக்கிறது.

17) நார் தரும் தாவரங்களில் கிடைக்கப்பெறும் தாவரங்களின் பாகங்களின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நார் தரும் தாவரங்களில் கிடைக்கபெறும் தாவரங்களில் பாகங்களின் அடிப்படையில் 4 வகையாக பிரிக்கலாம், அவையாவன விதைகளின் மேற்ப்புறத் தூவி நார்கள், தண்டு அல்லது தண்டிலை நார்கள், இலை நார்கள் மற்றும் உரிமட்டை நார்கள்

18) முடக்குவாத நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் தாவரம்?

A) சிறுகீரை

B) பசலை கீரை

C) பாலக்கீரை

D) கொத்தமல்லி

விளக்கம்: முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய ஒரு வித நோயாகும் இதற்கு பாலக்கீரையிலிருந்து நானோ பார்மேசன் முறையின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

19) தாவரங்களின் பிற பயன்பாடுகளாக எத்தனை வகைபாடுகளை வகைப்படுத்தப்பட்டுள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தாவரங்களின் பிற பயன்பாடுகளாக 5 வகைபாடுகளை வகைப்படுத்தியுள்ளனர், அவையானவ மண் வளத்தை பாதுகாத்தல், மண் அரிப்பை தடுத்தல், உயிரி-எரிபொருள், ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள் மற்றும் வேப்பஎண்ணை பூசப்பட்ட யூரியா.

20) பின்வருவனவற்றில் எது வேர் அல்ல?

A) உருளைக்கிழங்கு

B) கேரட்

C) ஃடர்னிப்

D) முள்ளங்கி

விளக்கம்: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருள்களும் உணவினை வேரில் தயாரிக்கின்றன, ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் தண்டில் உணவினை சேமிக்கிறது எனவே உருளைக்கிழங்கு வேர் அல்ல.

21) பின்வருவனவற்றுள் எது வைட்டமின் சி குறைபாட்டை போக்குகிறது?

A) நெல்லி

B) துளசி

C) மஞ்சள்

D) சோற்றுக்கற்றாழை

விளக்கம்: நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுகிறது மேலும் இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

22) 1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென் கட்டை என அழைக்கப்படுகிறது.

2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கிறது.

3. அலங்கார தாவரமாக காலிபிளவர் பயன்படுகிறது.

4. கோடைகாலத்திற்கு பருத்தி உடைகள் ஏற்றதன்று.

5. கரும்பு தாவரம் உயிரி எரிபொருளாக பயன்படுகிறது.

A) 1 4 5 சரி

B) 2 5 சரி

C) 1 3 5 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரம் என அழைக்கப்படுகிறது.

பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கிறது.

அலங்கார தாவரமாக காலிபிளவர் பயன்படுத்தப்படுவதில்லை.

கோடைகாலத்திற்கு பருத்தி உடைகள் ஏற்றத்தக்கது.

கரும்பு தாவரம் உயிரி எரிபொருளாக பயன்படுகிறது.

23) 1. நார் தரும் தாவரங்கள் – கிருமி நாசினி

2. வன் கட்டை – நறுமணப்பொருள்

3. வேம்பு – சணல்

4. ஏலக்காய் – தானியம்

5. கம்பு – தேக்கு

A) 1 3 4 2 5

B) 2 5 4 1 3

C) 3 5 1 2 4

D) 4 2 5 1 3

விளக்கம்: நார் தரும் தாவரங்கள் – சணல்

வன் கட்டை – தேக்கு

வேம்பு – கிருமி நாசினி

ஏலக்காய் – நறுமணப்பொருள்

கம்பு – தானியம்

24) இந்தியாவில் சணல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலம் எது?

A) அசாம்

B) மேற்குவங்கம்

C) ஆந்திரா

D) மும்பை

விளக்கம்: இந்தியாவில் சணல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது, இது இந்தியாவின் சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!