Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

6th Science Lesson 16 Questions in Tamil

16] நமது சுற்றுச்சூழல்

1) மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும் அவற்றை சுற்றியுள்ள சூழலை நாம் எவ்வாறு குறிப்பிடலாம்?

A) சுற்றுச்சூழல்

B) உயிருள்ள காரணிகள்

C) உயிரற்ற காரணிகள்

D) செயற்கை காரணிகள்

விளக்கம்: மனிதர்கள் விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றை சுற்றியுள்ள சூழலையும் நாம் சுற்றுச்சூழல் என குறிப்பிடலாம், சுற்றுச்சூழலில் உயிருள்ள காரணியும் உயிரற்ற காரணியும் அடங்கும்.

2) மனிதர்களின் தலையீடுகளின்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் எவ்வாறு அழைக்கிறோம்?

A) இயற்கை சூழ்நிலை மண்டலம்

B) செயற்கை சூழ்நிலை மண்டலம்

C) உயிரற்ற காரணிகள்

D) செயற்கை காரணிகள்

விளக்கம்: மனிதனின் எவ்வித தலையீடுகளும் இன்றி இயற்கையாக உருவான சூழ்நிலை மண்டலம் இயற்கை சூழ்நிலை மண்டலம் என அழைக்கிறோம், இயற்கை சூழ்நிலை மண்டலத்திற்கு உதாரணமாக கடல், பாலைவனம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

3) சூழ்நிலை மண்டலங்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சூழ்நிலை மண்டலம் 2 வகைப்படும் அவையான இயற்கை சூழ்நிலை மண்டலம் மற்றும் செயற்கை சூழ்நிலை மண்டலம்

4) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணுதலுக்கான வரிசைமுறைகளை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?

A) உணவுசங்கிலி

B) உணவுவலை

C) சூழ்நிலை உயிரிகள்

D) சிதைப்பவைகள்

விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் உண்ணுதல் மற்றும் உண்ணுதலுக்கான வரிசை முறைகளின் அடிப்படையில் அவற்றை நாம் உணவுச்சங்கிலி என அழைக்கலாம். ஓர் உயிரினம் எவ்வாறு பிற உயிரினங்களை உண்பதன் மூலம் உணவையும், சத்துக்களையும் பெறுகிறது என்பதனை உணவுச்சங்கிலி விளக்குகிறது.

5) 1. தாவரங்கள் – சிங்கம்

2. தாவர உண்ணிகள் – பாக்டீரியா

3. ஊன் உண்ணிகள் – நெல்

4. அனைத்துண்ணிகள் – தவளை

5. சிதைப்பவைகள் – மனிதன்

A) 5 2 3 1 4

B) 2 1 4 3 5

C) 4 5 2 1 3

D) 3 4 1 5 2

விளக்கம்: தாவரங்கள் – நெல்

தாவர உண்ணிகள் – தவளை

ஊன் உண்ணிகள் – சிங்கம்

அனைத்துண்ணிகள் – மனிதன்

சிதைப்பவைகள் – பாக்டீரியா

6) சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்ற காரணியாக விளங்குவது எது?

A) பாக்டீரியா

B) தாவரங்கள்

C) விலங்குகள்

D) நீர்

விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் உயிரற்றகாரணியாக விளங்குவது நீர் ஆகும், மேலும் சூரியன், நீர், மண், தாதுப்பொருட்கள் மற்றும் காற்று போன்றவை உயிரற்ற காரணியாக செயல்படுகிறது.

7) 1. மனிதனின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகும்.

2. மிகச்சிறிய பரப்பில் மனிதனால் கட்டமைக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும்.

3. பாலைவனம் ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலமாகும்.

4. செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் இயற்கையாக சூழ்நிலை மண்டலத்தை காட்டிலும் மிக எளிமையானவையாகும்.

A) 1 4 சரி

B) 2 3 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: மனிதனின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் சூழ்நிலை மண்டலம் இயற்கை சூழ்நிலை மண்டலம் ஆகும்.

மிகச்சிறிய பரப்பில் மனிதனால் கட்டமைக்கப்படும் சூழ்நிலை மண்டலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலமாகும்.

பாலைவனம் ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலமாகும்.

செயற்கை சூழ்நிலை மண்டலங்கள் இயற்கையாக சூழ்நிலை மண்டலத்தை காட்டிலும் மிக எளிமையானவையாகும்.

8) தனக்கான உணவினை தானே உற்பத்தி செய்யும் உயிரினங்களை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?

A) உற்பத்தியாளர்கள்

B) நுகர்வோர்கள்

C) ஊன் உண்ணிகள்

D) சிதைப்பவைகள்

விளக்கம்: தனக்கான உணவினை தானே தயாரித்துக்கொள்ளும் உயிரினங்களை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம், உற்பத்தியாளர்களை நாம் தற்சார்பு ஊட்ட உயிரிகள் எனவும் அழைக்கலாம்.

9) உயிரினங்கள் தனக்கான உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் நாம் அவற்றை எத்தனையாக பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: உயிரினங்கள் தனக்கான உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் அவற்றை நாம் 2 வகையாக பிரிக்கலாம், அவையாவன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள்

10) தனக்கான உணவை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களினை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களை எவ்வாறு அழைக்கலாம்?

A) உற்பத்தியாளர்கள்

B) ஊண் உண்ணிகள்

C) நுகர்வோர்கள்

D) சிதைப்பவைகள்

விளக்கம்: தனக்கான உணவினை தானே தயாரிக்க முடியாத உயிரினங்கள் பிற உயிரினங்களினை உணவாக உட்கொண்டு வாழும் உயிரினங்களை நுகர்வோர்கள் என அழைக்கலாம், நுகர்வோர்களின் பிரிவே தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகள் மற்றும் சிதைப்பவைகள்

11) கீழ்க்கண்டவற்றுள் எதன் தொடர்பினை உணவுச்சங்கலி விளக்குகிறது?

A) உற்பத்தியாளர்கள்

B) நுகர்வோர்கள்

C) சிதைப்பவைகள்

D) அனைத்தும்

விளக்கம்: உணவுச்சங்கிலியானது மேற்க்கண்ட அனைத்துமான உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்பவைகள் என அனைத்திற்கும் இடையேயான தொடர்பினை விளக்குகிறது.

12) 1. முதல் நிலை நுகர்வோர் – வெட்டுக்கிளி

2. இரண்டாம் நிலை நுகர்வோர் – குருவி

3. மூன்றாம் நிலை நுகர்வோர் – பருந்து

4. நான்காம் நிலை நுகர்வோர் – பாம்பு

A) 2 1 2 4

B) 1 2 4 3

C) 2 4 3 1

D) 4 2 3 1

விளக்கம்: முதல் நிலை நுகர்வோர் – வெட்டுக்கிளி

இரண்டாம் நிலை நுகர்வோர் – குருவி

மூன்றாம் நிலை நுகர்வோர் – பாம்பு

நான்காம் நிலை நுகர்வோர் – பருந்து

13) கழிவுகளை அதிகம் உருவாக்கும் சமுதாயத்திலிருந்து மீண்டெல உருவாக்கப்பட்ட கோட்பாடு?

A) குறைத்தல்

B) மறுசுழற்ச்சி செய்தல்

C) மீண்டும் பயன்படுத்துதல்

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: கழிவுகளை அதிகம் உருவாக்கும் சமுதாயத்திலிருந்து கழிவுகளை குறைக்க பயன்படுத்தப்படும் முக்கிய கோட்பாடாக இவை பின்பற்றப்படுகின்றன, இதனை நாம் 3R கோட்பாடு என குறிப்பிடலாம்.

14) இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் சராசரி கழிவுகள் நாளொன்றுக்கு எவ்வளவு?

A) 1 கிகி

B) 0.75 கிகி

C) 0.45 கிகி

D) 0.5 கிகி

விளக்கம்: இந்தியாவில் உருவாகும் கழிவுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 0.45 கிகி ஆகும். இது தனி நபர்க்கு குறைவான மதிப்பாகும் ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட நமது நாட்டிற்கு இது மிகவும் ஆபத்தாகும்.

15) மாசுபாட்டின் வகைகள் யாவை?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: மாசுபாடானது 4 வகைப்படும் அவையாவன நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு

16) உணவுச்சங்கிலியானது எதன் ஆற்றலிலிருந்து தொடங்குகிறது?

A) சூரிய ஒளி

B) தாவரங்கள்

C) விலங்குகள்

D) சிதைப்பவைகள்

விளக்கம்: உணவுச்சங்கிலியின் தொடக்க மூலம் சூரிய ஒளியாகும், சூரியஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவாக மாற்றுகிறது தாவரங்கள், எனவே சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் மட்டம் கடத்தப்படுகிறது.

17) உணவுச்சங்கிலியின் எந்த உணவூட்டத்தின் மட்டத்தினை நீர் சூழ்நிலை மண்டலத்திலும் காடுகளிலும் காணப்படும் உச்சபட்ச விலங்காகும்?

A) முதலை, நரி

B) திமிங்கலம், மான்

C) முதலை, புலி

D) ஆக்டோபஸ், கழுகு

விளக்கம்: உணவுச்சங்கிலியின் கடைசி நிலையான மட்டத்தில் நீர் சூழ்நிலையில் முதலையும், காடுகளில் புலிகளையும் உண்பவையாக எந்த ஒரு விலங்கும் காணப்படுவதில்லை.

18) நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய முறையில் சிதைக்கமுடியாதவை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?

A) உயிரி கழிவுகள்

B) மட்கும் குப்பைகள்

C) மக்காத குப்பைகள்

D) சிதைப்பவைகள்

விளக்கம்: நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கை காரணிகளால் எளிய முறையில் சிதைக்க முடியாத கழிவுகளை நாம் மக்காத குப்பை என அழைக்கிறோம், மக்காத குப்பைக்கு உதாரணம் தொழிற்சாலை கழிவுகள்.

19) இந்தியா ஒவ்வொரு நாளும் எவ்வளவு கழிவுகளை உருவாக்குகிறது?

A) 450 மில்லியன் கிலோ

B) 500 மில்லியன் கிலோ

C) 532 மில்லியன் கிலோ

D) 537 மில்லியன் கிலோ

விளக்கம்: இந்தியாவானது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும், எனவே இதில் நாளொன்றுக்கு 532 மில்லியன் கிலோ கழிவுகள் உற்பத்தி செய்கிறது அதிகம் கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாகும்.

20) தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் காற்றில் உள்ள மேகங்களுடன் கலந்து — மழையை தருகின்றது?

A) தூய மழை

B) அமில மழை

C) கார மழை

D) நச்சு மழை

விளக்கம்: தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் சில நச்சு வாயுக்களால் காற்றில் உள்ள மேகங்களில் கலந்து அமில மழையை தருகிறது, இந்த அமில மழையால் தாவரங்கள் விலங்குகள் மற்றும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

21) நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது என கண்டுபிடித்து எழுதுக?

A) குளம்

B) ஏரி

C) நதி

D) இவை அனைத்தும்

விளக்கம்: மேற்க்கண்ட அனைத்தும் நன்னீர் சூழ்நிலை மண்டலங்கள் ஆகும், இவை இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவாக்கக்கூடிய சூழ்நிலை மண்டலங்களாகவும் உள்ளது.

22) உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவு எது?

A) கண்ணாடி

B) நெகிழி

C) சமையலறை கழிவுகள்

D) அலுமினியம்

விளக்கம்: மேற்க்கண்டவற்றில் சமையலறை கழிவுகள் மட்டுமே உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளாகும் மற்றவை உயிறின சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளாகும்.

23) கலைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை ஏற்படுத்தும்?

A) நில மாசுபாடு

B) காற்று மாசுபாடு

C) நீர் மாசுபாடு

D) A&C

விளக்கம்: கலைக்கொல்லிகள் பயன்படுத்துவதால் நிலம் மற்றும் நீர் மாசுபடுகின்றன, இவற்றின் பயன்பாடுகனை தேவைக்கேற்ப்ப குறைப்பதால் அதிக விளைச்சலும் குறைந்த மாசுபாடும் ஏற்படுகிறது.

24) சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, காற்று மற்றும் ஒளி போன்றவை _________ காரணிகளாக காணப்படுகிறது?

A) இயற்கை காரணிகள்

B) செயற்கை காரணிகள்

C) உற்பத்தி காரணிகள்

D) ஆற்றல் மாற்ற காரணிகள்

விளக்கம்: சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, காற்று மற்றும் ஒளி போன்றவை இயற்கை காரணிகளாக காணப்படுகிறது, இயற்கை காரணிகளில் கடல், மலை போன்றவையும் அடங்கும்.

25) 1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஒரு எடுத்துக்காட்டாகும்.

2. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

3. மனித கழிவுகளும் விலங்கு கழிவுகளும் உயிரின சிதைவிற்கு உள்ளாகாத கழிவிற்கு எடுத்துக்காட்டாகும்.

4. அளவுக்கு அதிகமான களைக் கொல்லிகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுகிறது.

5. திடக்கழிவு மேலாண்மையின் படி கழிவுகளை இரண்டு வகை பிரிவாக பிரிக்க வேண்டும்.

A) 1 2 5 சரி

B) 2 3 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசுபிக் பெருங்கடல் ஒரு எடுத்துக்காட்டாகும்.

பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

மனித கழிவுகளும் விலங்கு கழிவுகளும் உயிரின சிதைவிற்கு உள்ளாகும் கழிவிற்கு எடுத்துக்காட்டாகும்.

அளவுக்கு அதிகமான களைக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நில மாசு ஏற்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மையின் படி கழிவுகளை இரண்டு வகை பிரிவாக பிரிக்க வேண்டும்.

26) காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் கீழ்க்கண்டவற்றில் எவை சரியானவை?

A) தொல்லுயிர் படிம எரிபொருள்களை எரிப்பதால்

B) நெகிழி பொருள்களை எரிப்பதால்

C) பெயின்ட் தொழிற்சாலையில் இருந்து வரும் நீராவி

D) மேற்க்கண்ட அனைத்தும்

விளக்கம்: காற்று மாசுபாட்டிற்கு மேற்கண்ட அனைத்து விதமாக கழிவுகளும் அடங்கும், இவை காற்றின் தரத்தினை குறைத்து காற்றின் தூய்மையை கெடுக்கிறது.

27) இரைச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் எவை எவை?

A) இரத்த அழுத்தம்

B) மன அழுத்தம்

C) கேட்கும் திறன் பாதிப்பு

D) அனைத்தும்

விளக்கம்: இரைச்சலால் மனிதனில் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் கேட்கும் திறன் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, மேலும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, கடலுக்கடியில் உள்ள திமிங்கலமானது கப்பலின் இரைச்சல் காரணமாக தங்கள் பாதையில் திசை மாற்றம் அடைகிறது.

28) உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?

A) தாவரங்கள்

B) விலங்குகள்

C) பறவைகள்

D) பாம்புகள்

விளக்கம்: தாவரங்களே உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகிறது, இவை ஆற்றலை சேமித்து வைத்து மற்ற உயிர்களுக்கு ஆற்றல் மாற்றத்தை கடத்துகிறது.

29) காற்றிலும், நீரிலும் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்களை நாம் இப்படியும் அழைக்கலாம்?

A) மறுசுழற்சி

B) மீண்டும் பயன்படுத்துதல்

C) மாசுபாடு

D) மாசுபாட்டை குறைத்தல்

விளக்கம்: காற்றிலும் நீரிலும் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மாசுபாடு என அழைக்கிறோம். மாசுபாடு ஆனது 4 வகைப்படும் அவையான நில மாசுபாடு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாடு.

30) தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்?

A) உற்பத்தியாளர்

B) முதல் நிலை நுகர்வோர்

C) இரண்டாம் நிலை நுகர்வோர்

D) சிதைப்பவை

விளக்கம்: தாவரங்களை உண்பவை முதல் நிலை நுகர்வோர்கள் ஆகும், இதில் தாவரங்களை உண்ணும் பூச்சிகள் இந்த நிலையில் அடங்கும்.

31) _________ என்ற நிகழ்வின் போது கழிவிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம்?

A) பயன்பாட்டை குறைத்தல்

B) மறுசுழற்சி செய்தல்

C) மீண்டும் பயன்படுத்துதல்

D) உற்பத்தி செய்தல்

விளக்கம்: மறுசுழற்சி செய்தல் என்ற நிகழ்வின் போது கழிவிலிருந்து புதிய பொருட்களை உருவாக்கலாம், பயன்பாட்டை குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்றவை மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான கோட்பாடுகளாக கருதப்படுகிறது.

32) 1. உயிரின கூறுகள் – நில வாழ் சூழ்நிலை மண்டலம்

2. சாக்கடை கழிவுகள் – நில மாசுபாடு

3. செயற்கை உரங்கள் – காற்று மாசுபாடு

4. பாலைவனம் – நீர் மாசுபாடு

5. புகை – விலங்குகள்

A) 4 3 2 5 1

B) 5 4 2 1 3

C) 3 5 2 1 4

D) 1 5 2 3 4

விளக்கம்: உயிரின கூறுகள் – விலங்குகள்

சாக்கடை கழிவுகள் – நீர் மாசுபாடு

செயற்கை உரங்கள் – நில மாசுபாடு

பாலைவனம் – நில வாழ் சூழ்நிலை மண்டலம்

புகை – காற்று மாசுபாடு

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!