Tnpsc Tamil Current Affairs 1st September 2016
Tamil Current Affairs 1st September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 1st September 2016 is given below as quiz format.
Tnpsc Tamil Current Affairs 1st September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 1st September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. பொது நிதி மேலாண்மை அமைப்பை (PFMS - Public Fund Management System) செயல்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலம் எது ?
A | உத்தரப் பிரதேசம் |
B | ஜார்க்கண்ட் |
C | ராஜஸ்தான் |
D | ஜம்மு காஷ்மீர் |
Question 1 Explanation:
விடை : B.ஜார்க்கண்ட்
பொது நிதி மேலாண்மை அமைப்பை(PFMS - Public Fund Management System) அமல்படுத்தியுள்ள முதல் இந்திய மாநிலமாக ஜார்க்கண்ட் திகழ்கிறது.
Question 2 |
2. India-CHEM 2016 எனும் சர்வதேச மாநாடு பின்வரும் எந்த நகரங்களில் தொடங்கியது ?
A | புது தில்லி |
B | ஜெய்ப்பூர் |
C | மும்பை |
D | சென்னை |
Question 2 Explanation:
விடை : C.மும்பை
India-CHEM 2016 நிகழ்வின் 9-ஆம் பதிப்பை ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் துவங்கி வைத்தார். இம்மாநாட்டை கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை , இந்திய அரசாங்கம், FICCI ஆகிய மூன்றும் கூட்டாக சேர்ந்து நடத்தின. இந்தியாவில் இரசாயன தொழிலில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை முன்னிலைப்படுத்துவதும் , 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நினைவூட்டுவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 3 நாள் நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டில் , சுமார் 23 நாடுகளில், அதாவது. சீனா, ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், முதலியன கலந்துகொள்கின்றன.அத்துடன் பங்குதாரர்களான ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிசா போன்றவை கண்காட்சியில் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்களாக பங்கேற்கிறது.
Question 3 |
3. எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A | மேஹன்ட் குமார் |
B | திஷா நேவால் |
C | அசோக் சாவ்லா |
D | லலித் ஜெயின் |
Question 3 Explanation:
விடை: C.அசோக் சாவ்லா
அசோக் சாவ்லா, முன்னாள் மத்திய நிதி செயலாளர், எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிப்ரவரி 2016 முதல் TERI-ன் தலைவராக பணியாற்றி வருகிறார்.
Question 4 |
4. இந்தியாவில் பாலியல் சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாட்டு குறித்து பரிந்து பேச, ஐ.நா. சபையால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட பெண்மணி யார் ?
A | மாதுரி தீட்சித் |
B | தீபிகா படுகோனே |
C | ஐஸ்வர்யா தனுஷ் |
D | பிரியங்கா சோப்ரா |
Question 4 Explanation:
விடை : C.ஐஸ்வர்யா தனுஷ்
ஐஸ்வர்யா தனுஷ், புகழ்பெற்ற ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர். இந்தியாவில் பாலியல் சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாட்டு குறித்து பரிந்து பேச ஐ.நா.சபைக்கான இந்தியப்பெண் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா.வின் பெண்களுக்கான முக்கிய செய்திகளையும், பாலியல் சமத்துவம் , மகளிர் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனங்களுக்கு இடையே நிலவும் பாலின பாகுபாட்டை கலையவும், உலகில் அனைவரும் சமம் என்ற - பிளானட் 50-50 என்கிற நிலையை அடையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Question 5 |
5. இந்தியாவின் எந்த மாநிலத்தில் Solung திருவிழா தொடங்கியது ?
A | மணிப்பூர் |
B | திரிபுரா |
C | அருணாசலப் பிரதேசம் |
D | நாகாலாந்து |
Question 5 Explanation:
விடை : C.அருணாசலப் பிரதேசம்
5 நாட்கள் நடைபெறும் Solung திருவிழா அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தொடங்கியது. இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் அருணாச்சல பிரதேச ஆதிபழங்குடி மக்களால் கொண்டாடப்படும் ஒரு வேளாண் சார்ந்த திருவிழா. இத்திருவிழா ஆதி மக்களின் சமூக-மத அம்சங்களை பிரதிபலிக்கிறது. மக்கள் பல்வேறு சடங்குகளை செய்வதும், கடவுளுக்கு படையல்கள் வழங்குவதும், பம்பர் அறுவடை வேண்டி பிரார்த்தனை செய்வதும் இவர்களின் வழக்கமாக உள்ளது. புனித விலங்காக கருதப்படும் மிதுன் எனும் ஒரு காட்டெருமை இத்திருவிழாவில் பலியிடப்படும் இது ஆதிகள் மத்தியில் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. விழாவில் மக்கள் இறைச்சி மற்றும் Apong (அரிசி பீர்) போன்றவற்றை பரிசுகளாக அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு அளிக்கின்றனர் . இதனால் குடும்ப மற்றும் சமூக உறவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த விழாவின் மற்றொரு அம்சம் விலங்குகளை பாதுகாப்பது. ஏனெனில் விலங்குகள் அவர்களின் குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையின் முக்கிய பாகமாக கருதப்படுகிறது.
Question 6 |
6. சமையல் எரிவாயு குறித்த இந்தியாவின் முதல் சர்வதேச மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A | கொச்சி |
B | சென்னை |
C | புவனேஸ்வர் |
D | புது தில்லி |
Question 6 Explanation:
விடை : C.புவனேஸ்வர்
சமையல் எரிவாயு குறித்த இந்தியாவின் முதல் சர்வதேச மாநாடு ஒடிஷாவில் உள்ள புவனேஸ்வரில் தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இக்கூட்டம் LPG-ன் தேவை மற்றும் பாரம்பரிய சமையல் எரிபொருட்களின் பயன்கள் குறித்து விளக்கவுள்ளது. சமையல் எரிவாயு இல்லாதபோது எழும் பிரச்சினைகள், பாரம்பரிய உயிர் வெகுஜன சமையல் எரிபொருட்களின் பயன்பாடு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டின் தாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. இதில் பிரேசில், கானா, நைஜீரியா, நேபால் மற்றும் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
Question 7 |
7. காபோனின்(Gabon) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி யார் ?
A | டேனியல் ஒனா ஆண்டோ |
B | ரோஸ் பிரென்ஞ் ரோகோம்பே |
C | ஜீன் பிங் |
D | அலி போங்கோ ஆண்டிம்பா |
Question 7 Explanation:
விடை: D.அலி போங்கோ ஆண்டிம்பா
2016 Gabonese ஜனாதிபதி தேர்தலில் அலி போங்கோ ஆண்டிம்பா வெற்றி பெற்று, காபோன் புதிய அதிபராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெரும்பான்மை வாக்குகளை கணக்கிற்கொள்ளாமல், இவர் பன்முக வாக்கெடுப்பின் முதல் சுற்றிலேயே தேர்தெடுக்கப்பட்டதுடன், இவருக்கு 7-ஆண்டுகளுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.
Question 8 |
8. இந்தியாவிலுள்ள எந்த உலக பாரம்பரிய(World Heritage Site) இடத்தில், சமீபத்தில் சுற்றுலா குறித்த பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது ?
A | அஜந்தா குகைகள் |
B | ஹூமாயூன் கல்லறை |
C | கஜுராஹோ |
D | நாளந்தா மகாவிகாரா |
Question 8 Explanation:
விடை : C.கஜுராஹோ
சுற்றுலா தொடர்பான 2016 பிரிக்ஸ் மாநாட்டை செப்டம்பர் 1 ம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்தில் உலக பாரம்பரிய இடமான கஜுராஹோவில் சுற்றுலா மற்றும் கலாச்சார மத்திய இணை அமைச்சர் டாக்டர்.மகேஷ் சர்மா துவங்கி வைத்தார். இந்த 2- நாள் மாநாடு, உள்-பிராந்திய அரசுகள் சுற்றுலா தொடர்பான தங்கள் கருத்துக்களை பகிர்வது, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது
Question 9 |
9. பீகாரில் கங்கை நதியில் படிந்துள்ள வண்டல் குறித்து ஆராய மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு ?
A | எஸ் கே சாகு குழு |
B | ராஜ்நிஷ் ரஞ்சன் குழு |
C | ஏ கே சின்ஹா குழு |
D | நிதிஷ் குமார் குழு |
Question 9 Explanation:
விடை : C.ஏ கே சின்ஹா குழு
பீகாரில் கங்கை நதியில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருக்கும் வண்டல் படிமங்களை ஆராய மத்திய அரசு
ஏ கே சின்ஹா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
Question 10 |
10. சமீபத்தில் மறைந்த, காஷ்மீரி லால் ஜாகீர், எம்மொழியில் புகழ் பெற்ற கவிஞர் ?
A | உருது |
B | மராத்தி |
C | தெலுங்கு |
D | தமிழ் |
Question 10 Explanation:
விடை : A.உருது
காஷ்மீரி லால் ஜாகீர் (97), நன்கு அறியப்பட்ட கவிஞர், நாவலாசிரியர் மற்றும் உருது இலக்கிய சிறுகதை எழுத்தாளர், சமீபத்தில் சண்டிகரில் காலமானார். அவரது குறிப்பிடத்தக்க பணிகளாவன : Tin cihre ek saval, a ghazal anthology, Ab Mujhey Sone Do முதலியன .
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 2, 2016
0 1,976 Less than a minute