Tnpsc
Tnpsc Tamil Current Affairs 3rd and 4th September 2016
September 6, 2016
0 1,679 Less than a minute
Tnpsc Tamil Current Affairs 3rd and 4th September 2016
Tamil Current Affairs 3rd and 4th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 3rd and 4th September 2016 is given below as quiz format.
Tnpsc Tamil Current Affairs 3rd and 4th September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 3rd and 4th September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. 2016-ஆம் ஆண்டிற்கான G-20 மாநாடு எந்த நாட்டில் துவங்கியது ?
A | சீனா |
B | மெக்ஸிக்கோ |
C | ஆஸ்திரேலியா |
D | பிரேசில் |
Question 1 Explanation:
விடை : A.சீனா ---
2016-ம் ஆண்டு G-20 மாநாடு, சீன நகரமான Hangzhou-வில் செப்டம்பர் 4ம் தேதி தொடங்கியது. இம்மாநாட்டில் உலக பொருளாதார ஆட்சியை சீர்திருத்துவதற்கான முயற்சிகளை குறித்து விவாதிக்க உள்ளது. 2016-ம் ஆண்டின் குறிக்கோளானது,"Toward an Innovative, Invigorated, Interconnected and Inclusive World Economy". இது சீனா நடத்தும் முதல் G-20 மாநாடு மற்றும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது மாநாடு ஆகும். ஜி 20-யானது, உலக பொருளாதாரம் மற்றும் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கின் 85% யை பிரதிபலிக்கிறது.
Question 2 |
2. 2016-17ஆண்டிற்கான, இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) புதிய தேசியத் தலைவர் யார் ?
A | கிருத்திகா குஜுர் |
B | ஆர் என் டாண்டன் |
C | கே கே அகர்வால் |
D | ரவி வான்கடேகர் |
Question 2 Explanation:
விடை : C.கே கே அகர்வால் ---
டாக்டர் கே கே அகர்வால் 2016-17 ஆண்டுக்கான இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளராக உள்ளார். இது தவிர, மகாராஷ்டிராவை சார்ந்த டாக்டர் ரவி வான்கடேகர் 2017-18 ஆண்டுக்கான தேசியத் தலைவராகவும், டாக்டர் R N டாண்டன் கவுரவ செயலாளராகவும் நியமிக்கப்படவுள்ளனர். இப்புதிய அணி, அமிர்தசரஷில் டிசம்பர் 28ம் தேதி பதவியேற்க உள்ளது. IMA, நவீன மருத்துவவியல் மருத்துவர்களின் பிரதிநிதியாக செயல்படும் ஒரே தேசிய தன்னார்வ அமைப்பு ஆகும். பெரிய அளவிலான மருத்துவர்களின் ஆர்வத்தின் பேரில் இது நிறுவப்பட்டது.
Question 3 |
3.பின்வரும் யார், மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின்(MCC) மதிப்புறு ஆயுட்கால உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் ?
A | வீரேந்தர் சேவாக் |
B | ஜாகீர் கான் |
C | அஞ்சும் சோப்ரா |
D | மேலே உள்ள அனைத்தும் |
Question 3 Explanation:
விடை : D.மேலே உள்ள அனைத்தும்---
ஜாகீர் கான், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர், மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின்(MCC) மதிப்புறு ஆயுட்கால உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். சேவாக் மற்றும் அஞ்சும் சோப்ராவிற்கு பின்னர் 2016 இல் இந்த உயர்ந்த அந்தஸ்தை பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.
Question 4 |
4. ஹரியானா மாநிலத்தின் முதல் WiFi ஹாட்ஸ்பாட் கிராமம் எது ?
A | சமல்ஹ |
B | ஹன்ஸி |
C | கும்தல கார்ஹு |
D | ராம்ராய் |
Question 4 Explanation:
விடை : C.கும்தல கார்ஹு---
அரியானா மாநிலத்தில், குருஷேத்ரா மாவட்டத்தில் Pehowa அருகே உள்ள கிராமமான, கும்தல கார்ஹு-வில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தொலைத்தொடர்பு நிறுவனத்தின், தொகுப்புப் திட்டத்தின் கீழ் ஹரியானாவில் முதல் WiFi ஹாட்ஸ்பாட் நிறுவப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் இணைய சேவைகளை வழங்க சண்டிகரில் இருந்து முதல்வர் மனோகர் லால் இதனை தொடங்கி வைத்தார். இந்த WiFi ஹாட்ஸ்பாட் வசதி பிஎஸ்என்எல்லின் state-of-the-art நெட்வொர்க் மூலம் 10 mbps அலைவரிசையை பயன்படுத்துகிறது.
Question 5 |
5. எந்த மாநில அரசு பெண்கள் வளர்ச்சிக்கு பிஜு கன்யா ரத்னா யோஜனா என்ற திட்டத்தை துவங்கியுள்ளது ?
A | தமிழ்நாடு |
B | மேற்கு வங்கம் |
C | ஆந்திரப் பிரதேசம் |
D | ஒடிசா |
Question 5 Explanation:
விடை : D.ஒடிசா---
ஒடிசா மாநில அரசு, பெண்கள் வளர்ச்சிக்காக புவனேஸ்வரில் உள்ள 3 மாவட்டங்களில் பிஜு கன்யா ரத்னா யோஜனா திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், 3 மாவட்டங்களில் பிறப்பு பாலின விகிதம் (SRB) மற்றும் குழந்தை பாலின விகிதத்தை (CSR ) மேம்படுத்துவது ஆகும். முதற்கட்டமாக கஞ்சம், தேங்கானல், மற்றும் அங்குள் ஆகிய மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் தொடக்கப்பள்ளிகளில் பெண்கள் சேர்க்கையை உறுதி செய்யும், பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்யும் பெண்களை கண்காணித்து, அவர்களுக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்கும்.
Question 6 |
6. கேரள அரசு, மதுபான எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக யாரை தூதுவராக நியமித்துள்ளது ?
A | பி.வி.சிந்து |
B | சச்சின் டெண்டுல்கர் |
C | சாக்ஷி மாலிக் |
D | லலிதா பாபர் |
Question 6 Explanation:
விடை: B.சச்சின் டெண்டுல்கர்---
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, கேரள அரசு சமீபத்தில் மதுபான எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கான தூதுவராக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது. மாநில அரசாங்கம் இவற்றுக்கு அடிமையாவோரின் நலனுக்காக நிறைய de-addiction மையங்களை திறக்க முடிவு செய்துள்ளது.
Question 7 |
7. சமீபத்தில் மறைந்த நளினி தார் பட்டாச்சாரியா, இந்தியாவின் எந்த மாநிலத்தின் பிரபலமான கவிஞர் ?
A | அசாம் |
B | மேற்கு வங்கம் |
C | ஒடிசா |
D | மகாராஷ்டிரா |
Question 7 Explanation:
விடை : A.அசாம்---
நளினி தார் பட்டாச்சார்யா (95), பிரபல அஸ்ஸாமி கவிஞர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். சமீபத்தில் அஸ்ஸாமின் கவுகாத்தியில் காலமானார். இவரது அறியப்பட்ட கவிதைகளில் Ei Kunwolite, Cherashalir Malita, Bidai Phular Din, Ahata Sapon, முதலியன அடங்கும்.
Question 8 |
8. 2016 Indian Ocean Conference (IOC) எந்த நாட்டில் நடைபெற்றது ?
A | இந்தோனேஷியா |
B | மலேஷியா |
C | சிங்கப்பூர் |
D | இந்தியா |
Question 8 Explanation:
விடை : C.சிங்கப்பூர்---
2016 இந்து சமுத்திர மாநாடு (IOC ) சிங்கப்பூரின் சங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு பாதுகாப்பு, பொருளாதாரம் , பண்பாடு , சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளது. இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாட்டில் கலந்து வருகிறார்.
Question 9 |
9. "Leaping Poetry: An Idea with Poems and Translations" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A | லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் |
B | ராபர்ட் ப்ளை |
C | பிகு பரேக் |
D | அமலேண்டு மிஸ்ரா |
Question 9 Explanation:
விடை : B.ராபர்ட் ப்ளை---
"Leaping Poetry: An Idea with Poems and Translations" புத்தகம் ராபர்ட் ப்ளையால் எழுதப்பட்டது. எந்த ஒரு கலை வேலைப்பாட்டிலும், தெளிவற்ற மற்றும் தெளிவான சிந்தனைகளுக்கு பாலமாக விளங்கும் கலையின் முக்கியத்துவத்தை ராபர்ட் ப்ளை உறுதிப்படுத்துகிறார்.
Question 10 |
10. Phulwari வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A | குஜராத் |
B | ராஜஸ்தான் |
C | உத்தரப் பிரதேசம் |
D | ஒடிசா |
Question 10 Explanation:
விடை : B.ராஜஸ்தான்---
ராஜஸ்தானில் சபர்மதி நதியின் கரையில் Phulwari வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதில் 11 காட்டுத் தொகுதிகள் மற்றும் இரண்டு பகுதிகளில் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் அடங்கும். இது Crocodile Crocodylus palustris, Monitor Lizard Varanus bengalensis and Indian Rock Python Python molurus போன்ற இனங்களின் தாயகமாக திகழ்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 6, 2016
0 1,679 Less than a minute