Book Back QuestionsTnpsc

உடல் நலமும், சுகாதாரமும் Book Back Questions 6th Science Lesson 6

6th Science Lesson 6

6] உடல் நலமும், சுகாதாரமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.

நெல்லிக்கனிகளில், ஆரஞ்சுப் பழங்களைவிட 20 மடங்கு, அதிக வைட்டமின் C காணப்படுகிறது.

உண்மைக்கோப்பு: சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் களிம்புகள் (Sun Screen Lotion) தோலின் வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே, வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.

முளைகட்டிய பாசிப்பயிரில் குறைந்த கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்தும், வைட்டமின் B யும் உள்ளன. இதில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவை உள்ளன.

முருங்கைக்கீரையில் வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம், இரும்புத் சத்து மற்றும் புரதம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் (Antioxidants) உள்ளது.

உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி இந்தியாவில்தான் உள்ளது. முருங்கைக் கீரையை சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் இந்தியா, சீனாவிற்கு அடுத்ததாக, அதிக எண்ணிக்கையில் உடல் பருமன் உடையவர்களைக் கொண்ட நாடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நோய் என்பது, குறிப்பிட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட உடல் செயலியல் நிகழ்வு ஆகும். கோளாறு என்பது உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை ஆகும்.

ஒரு வைரஸ் டி.என்.ஏ.வுக்குப் பதிலாக ஆர்.என்.ஏ.வைப் பெற்றிருந்தால் அதற்கு ரெட்ரோ வைரஸ் என்று பெயர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ___________ தேவைப்படுகிறது.

(அ) கார்போஹைட்ரேட்

(ஆ) கொழுப்பு

(இ) புரதம்

(ஈ) நீர்

2. ஸ்கர்வி _____________ குறைபாட்டினால் உண்டாகிறது.

(அ) வைட்டமின் A

(ஆ) வைட்டமின் B

(இ) வைட்டமின் C

(ஈ) வைட்டமின் D

3. கால்சியம் ______________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

(அ) கார்போஹைட்ரேட்

(ஆ) கொழுப்பு

(இ) புரதம்

(ஈ) தாது உப்புகள்

4. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ____________

(அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

(ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது

(இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

(ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

5. பாக்டீரியா, ஒரு சிறிய ______________ நுண்ணுயிரி.

(அ) புரோகேரியோட்டிக்

(ஆ) யூகேரியோட்டிக்

(இ) புரோட்டோசோவா

(ஈ) செல்களற்ற

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஊட்டச்சத்துக் குறைபாடு _________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.

2. அயோடின் சத்துக்குறைபாடு பெரியவர்களில் _____________ நோயை ஏற்படுத்துகிறது.

3. வைட்டமின் D குறைபாடு _______________ நோயை ஏற்படுத்துகிறது.

4. டைபாய்டு நோய், _____________ மற்றும் நீர் மாசுபடுவதால் பரவுகிறது.

5. குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) ____________ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

2. நம் உடலில் கொழுப்பு, ஆற்றலாக சேமித்து வைக்கப்படுகிறது.

3. அனைத்து பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன.

4. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.

5. ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்.

IV. பின்வரும் ஒப்புமைகளைப் பூர்த்தி செய்க:

1. அரிசி : கார்போஹைட்ரேட் :: பருப்பு வகைகள் : __________

2. வைட்டமின் D : ரிக்கெட்ஸ் :: வைட்டமின் C : _____________

3. அயோடின் : முன் கழுத்துக் கழலை நோய் :: இரும்பு : _____________

4. காலரா : பாக்டீரியா :: சின்னம்மை : _______________

V. பொருத்துக:

1. வைட்டமின் A – அ. ரிக்கெட்ஸ்

2. வைட்டமின் B – ஆ. மாலைக் கண் நோய்

3. வைட்டமின் C – இ. மலட்டுத்தன்மை

4. வைட்டமின் D – ஈ. பெரி பெரி

5. வைட்டமின் E – உ. ஸ்கர்வி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. புரதம், 2. வைட்டமின் C, 3. தாது உப்புகள், 4. அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன, 5. புரோகேரியோட்டிக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. குறைபாட்டு, 2. காய்டர்- முன் கழுத்து கழலை நோய், 3. ரிக்கெட்ஸ், 4. வைரஸ், 5. வைரஸ்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. ஆறு, 2. ஆற்றலை கொடுக்க, 3. சில, 4. சரி, 5. உடலுக்கு உள்ளே

IV. பின்வரும் ஒப்புமைகளைப் பூர்த்தி செய்க:

1. புரதம், 2. ஸ்கர்வி, 3. ரத்தசோகை, 4. வைரஸ்

V. பொருத்துக:

1. ஆ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button