பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Online Test 11th History Lesson 1 Tamil

பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Online Test 11th History Lesson 1 Tamil

Congratulations - you have completed பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Online Test 11th History Lesson 1 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - பழங்கற்காலம் முதலாக இந்தியாவில் பல குழுக்களை சேர்ந்த மக்கள் பலமுறை குடிபெயர்ந்து பல்வகைப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்கள் பண்பாடுகளை தகவமைத்துக் கொண்டனர்.
 • கூற்று 2 - சிந்துவெளியில் குடியேறிய மக்கள் சமகாலத்தில் பெரும் பக்குவமடைந்து ஒரு முதிர்ச்சி அடைந்த வாழ்க்கை நிலையை அடைந்தனர்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 1 Explanation: 
(குறிப்பு - தொல்லியல் ஆய்வு இடங்கள், நிலவியல் அடுக்குகள், விலங்குகளின் எலும்புகளும் படிமங்களும் கற்கருவிகள், எலும்பு கருவிகள் ஆகியவை இவற்றின் சான்றுகளாகும்.)
Question 2
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - ஹரப்பா மக்கள் ஒரு எழுத்து முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
 2. கூற்று 2 - இந்திய வரலாற்றில் கற்கால வாழ்க்கை முதல் சிந்து நாகரிகம் வரையான நெடுங் காலத்தை புரிந்து கொள்ள தொல்லியல் சான்றுகளை பெரிதும் உதவுகின்றன. எழுத்து வடிவ சான்றுகள் இக்காலத்துக்கு இல்லை.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 2 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா மக்கள் ஒரு எழுத்து முறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பொருளைக் இன்றளவும் அறிய முடியவில்லை)
Question 3
கற்கால மக்கள் மேற்கொண்ட வேளாண்மை சார்ந்த அறிவை புரிந்து கொள்ள உதவுவது எது?
 1. எரிக்கப்பட்ட விதைகள்.
 2. மகரந்தங்கள்
 3. கல்லாகிப் போன தாவரங்கள்(பைட்டோலித்)
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
(குறிப்பு - கற்கால மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள விலங்கு, தாவரங்கள் வடிவிலான சான்றுகள் இன்றியமையாதவை ஆகும்.)
Question 4
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - வரலாற்று காலத்துக்கு முன்பு நடைபெற்ற மனித உடற் பயிற்சிகள் குறித்து அறிந்து கொள்ள அவருடைய மரபணுக்களும் முக்கியமான சான்றுகளாக விளங்குகின்றன.
 2. கூற்று 2 - மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ ஆய்வுகள் கற்கால மனிதர்களின் இடப்பெயர்ச்சி குறித்த தகவல்களை வழங்குகின்றன.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 4 Explanation: 
(குறிப்பு - வரலாற்றுக்கு முந்தைய கால எலும்பிலிருந்து டிஎன்ஏவை பிரித்து மனிதக் கூட்டம் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது குறித்து புரிந்து கொள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.)
Question 5
இந்தியாவில் செழித்து வளர்ந்த மொழிக் குடும்பங்களுள் சரியானவை எது?
 1. இந்தோ-ஆரியம்
 2. திராவிடம்
 3. ஆஸ்ட்ரோ - ஆசியாட்டிக்
 4. திபெத்தோ - பர்மன்
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 5 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட அழைப்பு மொழிக் குடும்பங்களும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. இந்திய வரலாற்றில் நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகளின் பல்வேறு கட்டங்களில் இம்மொழிகள் தோன்றி வளர்ந்தன)
Question 6
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - எழுத்து முறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப்படுகிறது.
 • கூற்று 2 - வரலாற்றுக்கு முந்தைய காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.
 • கூற்று 3 - கற்காலம் என அழைக்கும் போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகியவை அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதையும் ஒரே பகுதியாக குறிப்பதே பொருந்தும்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 6 Explanation: 
(குறிப்பு - மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என வரலாற்று ஆய்வுகள் அறிவிக்கின்றன.)
Question 7
ஆப்பிரிக்காவை விட்டு முதன்முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் எது?
A
ஹோமோசெபியன்ஸ்
B
ஹோமோ எரக்டஸ்
C
ஹோமோபைலியன்ஸ்
D
இது எதுவும் அல்ல
Question 7 Explanation: 
(குறிப்பு - மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன்முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமோ எரக்டஸ் ஆகும்.)
Question 8
பொதுவாக எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
A
கற்காலம் மற்றும் வெண்கலக்காலம்.
B
கற்காலம், வெண்கல காலம், இரும்புக்காலம்.
C
கற்காலம், இரும்புக்காலம்
D
கற்காலம், இரும்புக்காலம், வெண்கலக்காலம், பொற்காலம்
Question 8 Explanation: 
(குறிப்பு - வரலாற்று ஆய்வுகளின் படி, வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்தியாவில் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தார்கள் என தெரிகிறது.)
Question 9
ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற பண்டங்கள் எந்த காலத்தைச் சார்ந்தவை?
A
கற்காலம்
B
இரும்புக்காலம்
C
வெண்கலக்காலம்
D
இது எதுவும் அல்ல
Question 9 Explanation: 
(குறிப்பு - ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் இரும்புக் காலத்தைச் சார்ந்தவை ஆகும். இரும்புக் காலத்தைச் சார்ந்த அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதி சிந்து, அச்சூலியன் அல்லது ஹரப்பா ஆகியவை ஆகும்.)
Question 10
மனிதர்கள் எந்த காலத்தின்போது விலங்குகளையும் தாவரங்களையும் வளர்க்கக் கற்றுக் கொண்டார்கள்?
A
பழங்கற்காலம்
B
இடைக்கற்காலம்
C
புதியகற்காலம்
D
நவீனகற்காலம்
Question 10 Explanation: 
(குறிப்பு - வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. பழங்கற்காலம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. அது கீழ் பழங்கற்காலம், இடை பழங்கற்காலம், மேல் பழங்கற்காலம் என்பதாகும்.)
Question 11
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - கற்காலத்தின் தொடக்கத்தில் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் இந்திய துணை கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ளன.
 • கூற்று 2 - கீழ் பழங்கால கற்கால கட்டத்தின் போது, மனித மூதாதையர்களான ஹோமோ எரக்டஸ் இந்தியாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 11 Explanation: 
(குறிப்பு - பாறை வடிவியல் ஆய்வுகள்(stratigraphy), காலவரிசை, கற்கருவிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழ்பழங்கற்காலம், இடை பழங்கற்காலம், மேல் பழங்கற்காலம் என பண்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன)
Question 12
பழங்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் முதன்முதலில் 1863 எங்கு கண்டெடுக்கப்பட்டன?
A
பல்லாவரம்
B
சிவகங்கை
C
ராமநாதபுரம்
D
மதுரை
Question 12 Explanation: 
(குறிப்பு - பழங்கற்காலத்தை சேர்ந்த கருவிகள் முதன் முதலில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் ராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவரால் 1863இல் கண்டெடுக்கப்பட்டன)
Question 13
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்த ஆய்வுத்துறை பெரும்பாலும் கற்கருவிகளையே சார்ந்துள்ளது.
 • கூற்று 2 - கற்கால மனிதனின் வாழிடங்கள் கல்லாலான கருவிகள் கிடைப்பதை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 13 Explanation: 
(குறிப்பு - மனித மூதாதையர் கருவிகள் செய்ய பெரிய கற் பாலங்களையும் கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றை மற்றொரு உறுதி வாய்ந்த கல்லால் செய்தி கருவிகளை உருவாக்கினர்)
Question 14
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A
கைக்கோடரி வகை கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் என்று அழைக்கப்படுகிறது.
B
கூழாங்கல் டீசருக்கு உருவாக்கப்படும் கருவிகளைக் கொண்ட மரபு சோகனியன் மரபு என்று அழைக்கப்படுகிறது.
C
அச்சூலியன் ஆப்கானிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் அருகே தோன்றியது.
D
சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதை சார்ந்த வேலைகளுக்கான கருவிகளையும் மட்டுமே கொண்டது.
Question 15
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறானது?
A
கைக்கோடரி வகை கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் என்று அழைக்கப்படுகிறது.
B
கூழாங்கல் டீசருக்கு உருவாக்கப்படும் கருவிகளைக் கொண்ட மரபு சோகனியன் மரபு என்று அழைக்கப்படுகிறது.
C
அச்சூலியன் ஆப்கானிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் அருகே தோன்றியது.
D
சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதை சார்ந்த வேலைகளுக்கான கருவிகளையும் மட்டுமே கொண்டது.
Question 15 Explanation: 
(குறிப்பு - இன்றைய பாகிஸ்தானிலுள்ள சோகன் ஆற்றின் வடிநீர் பகுதியில் நிலவிய மரபு என்பதால், சோகன் மரபு என அழைக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இதே பகுதியில் அச்சூலியன் மரபு சார்ந்த கருவிகளும் கிடைத்தன.)
Question 16
கோடரி, வெட்டு கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை எந்த காலத்தைச் சேர்ந்தவையாகும்?
A
தொடக்ககால அச்சூலியன்
B
இடைக்கால அச்சூலியன்
C
பிற்கால அச்சூலியன்
D
இவை எதுவும் அல்ல
Question 16 Explanation: 
(குறிப்பு - பழங்கால கற்கருவிகளின் ஆக்கம், அதற்கான உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலபண்பாடு தொடக்ககால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன் மற்றும் பிற்கால அச்சூலியன் என்ன வகைப்படுத்தப்படுகிறது.
Question 17
அச்சூலிய மரப்பிற்கான அடையாளங்கள் கீழ்காணும் எந்த இடத்தில் காணப்படவில்லை?
 1. மேற்கு தொடர்ச்சி மலை
 2. கடற்கரைப் பகுதிகள்.
 3. வடகிழக்கு இந்தியா
A
I, II இல் மட்டும்
B
I, III இல் மட்டும்
C
II, III இல் மட்டும்
D
இதில் எதுவுமே இல்லை
Question 17 Explanation: 
(குறிப்பு - மேற்கு தொடர்ச்சி மலை, கடற்கரைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகிய இடங்களில் அச்சூலிய மரபுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை. பெருமலை இதற்கு காரணமாக இருக்கலாம்.)
Question 18
அச்சூலிய மரபினர் வாழ்ந்த இடங்களாக அறியப்படுவதில் சரியானது எது?
 1. மத்திய இந்தியா
 2. தென் கிழக்கு இந்தியா
 3. மேற்கு இந்தியா
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 18 Explanation: 
(குறிப்பு - மத்திய இந்தியாவிலும், இந்தியாவின் தென் கிழக்குப் பகுதிகளிலும் அச்சூலிய மரபினர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் அதிக அளவில் மழை பெறுவதால், பசுமை மாறா மேலும் அதிக வளத்துடனும் உள்ளன)
Question 19
அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
 1. பல்லாவரம் - தமிழ்நாடு
 2. குடியம் - தமிழ்நாடு
 3. அதிரம்பாக்கம் - தமிழ்நாடு
 4. ஹன்ஸ்கி சமவெளி - கர்நாடகா
 5. பிம்பேட்கா - மத்திய பிரதேசம்
A
I, II, III, IV மட்டும் சரி
B
I, II, III, V மட்டும் சரி
C
I, III, IV, V மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 19 Explanation: 
(குறிப்பு - சென்னைக்கு அருகில் உள்ள அதிரம்பாக்கம், பல்லாவரம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியில் உள்ள இசம்பூர், மத்திய பிரதேசத்தில் உள்ள பிம்பேட்கா ஆகியவை அச்சூலிய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடங்களாகும்)
Question 20
இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் மண்டையோட்டின் மேல்பகுதி புதைபடிவம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
மத்திய பிரதேசம்
D
குஜராத்
Question 20 Explanation: 
(குறிப்பு - இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோசங்கபாத் அருகேயுள்ள ஹத்நோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அது ஒரு மண்டை ஒட்டின் மேல் பகுதி ஆகும்.)
Question 21
ஹோமினின்(Hominin) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எங்கு அதிகளவில் காணப்படுகின்றன?
A
ஆசியா
B
ஆப்பிரிக்கா
C
அமெரிக்கா
D
இது எதுவும் அல்ல
Question 21 Explanation: 
(குறிப்பு - கற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தை கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.)
Question 22
நர்மதை சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் புதைபடிவங்கள் எது?
 1. எலிபஸ் நமடிக்கஸ்
 2. ஸ்டெகோடோன்கணேசா
 3. போஸ் நமடிக்கஸ்
 4. எக்கஸ் நமடிக்கஸ்
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
I, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 22 Explanation: 
(குறிப்பு - கற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பழமை சூழலை நாம் புரிந்துகொள்ள விலங்குகளின் புதைபடிவங்கள் பயன்படுகின்றன. நர்மதை சமவெளியில் மிகப்பெரிய தந்தங்களை உடைய வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட யானை எலிபஸ் நமடிக்கஸ் போன்ற பல விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 23
எக்கஸ் என்ற பேரினம் எதை கொண்டது அல்ல?
A
குதிரை
B
கழுதை
C
வரிக்குதிரை
D
ஆடு
Question 23 Explanation: 
(குறிப்பு - எக்கஸ் என்பது குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகிய விலங்குகளை உள்ளடக்கிய பேரினம் ஆகும்)
Question 24
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - கோடரிகள், பிளக்கும் கருவிகள், துண்டாகும் கருவிகள், சுரண்டும் கருவிகள் போன்றவை இடை பழங்கற்லத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
 • கூற்று 2 - இடை பழங்கற்கால நாகரீகம் செதுக்கும் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது எனலாம்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 24 Explanation: 
(குறிப்பு - மரக்கட்டை, விலங்கு தோல் ஆகியவற்றை கையாளுவதற்கு சுரண்டும் கருவிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.)
Question 25
இந்தியாவில் இடை பழங்கற்கால கட்டத்தை எந்த இடத்தில் கண்டறிந்தனர்?
A
ஷிமோகா
B
நெவாசா
C
பெல்காம்
D
குடியம்
Question 25 Explanation: 
(குறிப்பு - ஹெச்.டி.சங்கலியா என்ற தொல்லியலாளர் பிராவாரா ஆற்றங்கரையில் இடை பழங்கற்கால கட்டத்தை கண்டறிந்தார். இதன் பின்னர் இடை பழங்கற்காலம் நிலவிய பல இடங்கள் அடையாளம் காணப்பட்டன)
Question 26
உத்தரபிரதேசத்தில் உள்ள பாகோர் என்னும் இடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு மேல் பழங்கற்கால இடம் _______________ எனக் கண்டறியப்பட்டுள்ளது.
A
வழிபாட்டுத்தலம்
B
வசிப்பிடம்
C
சந்தை கூடும் இடம்
D
கல்விசாலை
Question 26 Explanation: 
(குறிப்பு - மேல் பழங்கற்காலத்தை சார்ந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்திருக்கலாம் எனக் கருத தகுந்த ஒரு சிறு கட்டுமானம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாகோர் என்னுமிடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் வழிபாட்டு தலங்களுக்கு தேடலில் கிடைத்த மிகப் பழமையான சான்று இது என அறியப்படுகிறது.)
Question 27
இடை பழங்கற்கால நாகரிகம் பரவியிருந்த இடங்களாக அறியப்படும் இடங்களில் கீழ்கண்டவற்றுள் தவறானது எது?
A
நர்மதை சமவெளிகள்
B
கோதாவரி சமவெளிகள்
C
கிருஷ்ணா நதி சமவெளிகள்
D
காவிரி நதி சமவெளிகள்
Question 27 Explanation: 
(குறிப்பு - இதை பழங்கற்கால நாகரிகம் பரவியிருந்த இடங்கள் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் சமவெளிகளில் காணப்படுகின்றன)
Question 28
ஹோமோஎரக்டஸ் இனத்தை சார்ந்த மனிதர் பற்றிய கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - ஹோமோ எரக்டஸ் இனத்தை சேர்ந்த மனிதர்கள் தற்கால மனிதர்களான ஹோமோசேபியன்சை போல மேம்பட்ட மொழியை கொண்டிருக்கவில்லை.
 • கூற்று 2 - ஹோமோ எரக்டஸ் இனத்தவர்கள் சில ஒலிகள் அல்லது சொற்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கலாம்.
 • கூற்று 3 - கருவிகளை செய்வதற்கு சரியான கல்லை தேர்வு செய்வதற்கான அறிவு அவர்களுக்கு இருந்தது.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 28 Explanation: 
(குறிப்பு - பாறைகளை செதுக்கவும் அவற்றை கருவிகளாக வடிவமைக்கவும் சுத்தியல் போன்ற கற்களை பயன்படுத்தவும் ஹோமோ எரக்டஸ் இனத்தவர் அறிந்திருந்தனர்)
Question 29
மேல் பழங்கற்கால பண்பாடு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - இக்காலகட்டத்தை சேர்ந்த கற்கருவிகள் கத்தி, வாள் போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
 • கூற்று 2 - மேல் பலன் கற்காலத்தில் சிறு கற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன
 • கூற்று 3 - இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப் பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 29 Explanation: 
(குறிப்பு - எலும்பிலான கருவிகளும் விலங்குகளின் எஞ்சிய பகுதிகளும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கர்னூல் குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 30
இந்தியாவில் மேல் பழங்கற்காலம் நிலவிய இடங்களாக அறியப்படுவதில் தவறானது எது?
A
கர்நாடகாவில் உள்ள மெரல்பாவி
B
தெலுங்கானாவில் உள்ள கர்னூல் குகைகள்
C
மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கு.
D
தமிழ்நாட்டின் கீழடி
Question 30 Explanation: 
(குறிப்பு - கர்நாடகாவில் உள்ள மெரல்பாவி, தெலுங்கானாவில் உள்ள கர்னூல் குகைகள், கோதாவரிகாணி, மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1, 3, மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே ஆகியவை இந்தியாவில் மேல் பழங்கற்காலம் நிலவிய இடங்களாக அறியப்படுகிறது.)
Question 31
பீம்பெட்காவை சார்ந்த பச்சை நிற ஓவியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவையாக கணிக்கப்படுகிறது?
A
மேல் பழங்கற்காலம்
B
இடை பழங்கற்காலம்
C
கடை பழங்கற்காலம்
D
இவை எதுவுமல்ல
Question 31 Explanation: 
குறிப்பு - கல்லில் வெட்டுக்கருவிகள் செய்யும் தொழிற்கூடங்கள் மேல் பழங்கற்கால காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றன. மேல் பழங்கற்கால மனிதர்கள் கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளாக பல ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன.)
Question 32
இந்தியாவில் நுண் கற்கால சான்றுகள் கிடைத்த இடங்களாக அறியப்படும் இடங்கள் எது?
 1. மும்பையின் கடற்கரைப் பகுதிகள்
 2. தூத்துக்குடி மாவட்டத்தின் தேரிக்குன்றுகள்
 3. விசாகப்பட்டினம்
 4. ஆந்திரபிரதேசத்தில் உள்ள ஜீவலாபுரம்.
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
I, III, IV மட்டும் சரி
Question 32 Explanation: 
(குறிப்பு - மும்பையின் கடற்கரை பகுதிகள், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தேரிக்குன்றுகள் (செம்மணற்குன்றுகள்), விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நுண்க்கற்கால சான்றுகள் கிடைக்கின்றன)
Question 33
இடைக்கற்கால மனிதர்கள் பற்றிய கூற்றுகளில் எது சரியானது?
 • கூற்று 1 - இவர்கள் ஈட்டி, வில், அம்பு, கண்ணிகள் ஆகியவற்றை வேட்டையாட பயன்படுத்தியுள்ளனர்.
 • கூற்று 2 - இவர்கள் நெருப்பை பயன்படுத்தினர்.
 • கூற்று 3 - வெள்ளாடு, செம்மறிஆடு, நாய், பன்றி ஆகியவற்றின் எறும்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள கானிவால், லோத்கேஸ்வர் போன்ற என்னுமிடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 33 Explanation: 
(குறிப்பு - பிம்பேட்கா என்னுமிடத்திலுள்ள ஓவியம் ஆண்களும் பெண்களும் இணைந்து இது போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை காட்சிப்படுத்துகிறது)
Question 34
இடை கற்கால மனிதர்கள் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
 • கூற்று 1 -  இடைப் கற்கால மனிதர்களின் முக்கிய பண்பாக இடம்பெயர்தல் இருந்தது.
 • கூற்று 2 -  இவர்கள் தற்காலிகமான குடிசைகளை உருவாக்கியதுடன் குகைகளிலும் பாறைகுடைவுகளிலும் தங்கினார்கள்.
 • கூற்று 3 -  பெரும்பாலான குகைகளிலும் பாறை மறைவிடங்களிலும் ஓவியங்கள் காணப்பட்டது.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 34 Explanation: 
(குறிப்பு - பாறை ஓவியங்களில் வட்ட வடிவ குடிசை வரையப்பட்டுள்ளது. தற்காலிகமான குடிசைகள் விரைவில் அழியக்கூடிய கூறுகளால் கட்டப்பட்டன)
Question 35
இடை கற்கால மனிதர்களின் சுவர்கள் பிரம்பால் செய்யப்பட்டு அவற்றின் மீது மண் பூசிய வீடுகள் கீழ்காணும் எந்த இடங்களில் கண்டறியப்பட்டன?
 1. சோப்பணி மண்டோ - உத்தரப் பிரதேசம்
 2. தம்தமா - உத்திரப் பிரதேசம்
 3. பாகோர் - ராஜஸ்தான்
 4. பாட்னா - பீஹார்
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
I, III, IV மட்டும் சரி
Question 35 Explanation: 
(குறிப்பு - தாங்குதூணுக்கான குழியுடன் கூடிய வட்டவடிவ குடிசைகள், நாணல் பதிக்கப்பட்ட தடங்களுடன் கூடிய சுட்ட மண் திண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 36
இடைகற்கால மக்களின் இறந்தவரை புதைக்கும் அடையாளமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக புதைக்கப்பட்டு இருந்ததற்கான அடையாளம் எங்கு கிடைத்தது?
A
மகாதகா
B
தம்தமா
C
சாராய் நகர் ராய்
D
சோம்பூர்
Question 36 Explanation: 
(குறிப்பு - இடைக் கற்கால மக்கள் இறந்தோரை புதைத்தனர். இது அவர்களின் நம்பிக்கையும் சக மனிதர்கள் குறித்த சிந்தனையையும் நமக்கு உணர்த்துகிறது. இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் சேர்த்து புதைக்கும் முறை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது)
Question 37
தென்னிந்தியாவின் ஜாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலை எழுதியவர் யார்?
A
எட்வார்ட் லூயிஸ்
B
எட்கர் தர்ஸ்டன்
C
எல்வின் கினோ
D
இவர்கள் யாரும் அல்ல
Question 37 Explanation: 
(குறிப்பு - பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டிலும் மக்கள் பல குழுக்களாக வாழ்ந்ததை எட்கர் தர்ஸ்டன் என்ற தொல்லியல் ஆய்வாளர் எழுதிய தென்னிந்தியாவின் ஜாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாகரிக முதிர்ச்சி அற்றவர்களாக கருதுவது தவறு. மாறாக வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் என்னும் வாழ்க்கை முறையை தேர்வு செய்ததாக கருத வேண்டும்)
Question 38
இடைக் கற்கால பண்பாட்டின் சிறப்பியல்புகளாக காணப்படுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
 1. இறந்தவர்களை புதைத்தல்.
 2. விரிவான புவியியல் பகுதிகளில் இவர்கள் பரவி இருந்தனர்.
 3. இடைகற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
A
I, II மட்டும் சரி
B
I, III மட்டும் சரி
C
II, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 38 Explanation: 
(குறிப்பு - இடைக்கற்கால மக்களின் நுண்கற்கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின. இக்கால கட்டத்தில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளில் பண்பாட்டுத் தொடர்ச்சியை காணமுடிகிறது)
Question 39
புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாக அறியப்பட்டுள்ள இடங்கள் எது?
 1. மெஹர்கர்
 2. ரானா குண்டாய்
 3. சாராய் காலா
 4. ஜாலில்புர்
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 39 Explanation: 
(குறிப்பு - மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும் பழக்கப்படுத்தியதற்கான சான்றுகளை கொண்டிருப்பதில் வடமேற்கு இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு மிகப் பழமையானதாகும்.மேற்கண்ட இடங்களில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் தற்போது பாகிஸ்தானில் உள்ளன)
Question 40
புதிய கற்கால பண்பாட்டை சார்ந்த மனிதர்கள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. இவர்கள் ஓரளவு இடம் விட்டு இடம் குடிபெயரக்கூடிய நாடோடி கால்நடை மேய்க்கும் குழுவினர் ஆவர்.
 2. இவர்கள் ஈரமண்ணால் வீடு கட்டினார்கள்.
 3. இவர்கள் இறந்தவர்களை புதைக்கும் மரபுகளை கொண்டிருக்கவில்லை.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 40 Explanation: 
(குறிப்பு - பார்லி, எம்மர் கோதுமை, எய்கான் கோதுமை, இலந்தை, பேரிச்சை ஆகியவற்றை பயிரிட்டார்கள். ஆடு மாடுகளை பழக்கபடுத்தினார்கள்)
Question 41
தீக்கோழி முட்டை ஓடுகளால் செய்யப்பட்ட முட்டை ஓடு மணிகள் கீழ்காணும் எந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன?
 1. பிம்பேட்கா
 2. பாட்னே
 3. ஜீவலாபுரம்
 4. மதுரா
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
I, III, IV மட்டும் சரி
Question 41 Explanation: 
(குறிப்பு - ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஜீவலாபுரம், மகாராஷ்டிராவில் உள்ள பாட்னே, இலங்கையிலுள்ள பாடடொம்பா -லெனா, ஃபாஹியான் குகைகள், பிம்பேட்கா, ஆகிய இடங்களில் தீக்கோழி முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன)
Question 42
புதிய கற்கால மக்கள் பயன்படுத்தியவைகளில் தவறானது எது?
A
நீலவண்ணக்கல்
B
இரத்தினக்கல்
C
வைரக்கல்
D
சுண்ணாம்புக்கல்
Question 42 Explanation: 
(குறிப்பு - புதிய கற்கால மக்கள் சுண்ணாம்புக்கல், நீலவண்ணக்கல், இரத்தினக்கல், வைடூரியம், மணற்கல் ஆகியவற்றில் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தார்கள்)
Question 43
உயிருள்ள ஒரு மனிதனின் பல்லில் துளை இட்டதற்கான மிகப் பழமையான சான்று எங்கு கிடைத்துள்ளது?
A
குடியம்
B
பல்லாவரம்
C
மெஹர்கர்
D
குச்சா
Question 43 Explanation: 
(குறிப்பு - புதிய கற்கால களிமண் வீடு, உயிருள்ள ஒரு மனிதரின் பல்லில் துளையிட்டதற்கான மிகப் பழமையான சான்று மெஹர்கரில் கிடைத்துள்ளது.பொ.ஆ.மு.5000-7000 உட்பட்ட காலத்துக்கு உரிய மண்டையோடுகள் இதற்கான சான்றுகளாக உள்ளன)
Question 44
புதிய கற்கால காலகட்டத்தில் வைடூரியம் அதிகமாகக் கிடைக்கக்கூடிய இடமாக இருந்த இடம் எது?
A
பதக்ஷான்
B
ரானா குண்டாய்
C
சாராய் காலா
D
மெஹர்கர்
Question 44 Explanation: 
(குறிப்பு - சிந்து நாகரிகத்தின் முதிர்ந்த கட்டத்தின் தோற்றத்திற்கு பிறகு, மெஹெர்கர் கைவிடப்பட்ட நகரமானது. சுடுமண் உருவங்களும் பளபளப்பான ஒப்பனை மட்பாண்டங்களில் மணிகள் ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன)
Question 45
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சமகாலதவையாகும்.
 2. கூற்று 2 - புதிய கற்காலப் பண்பாடு காலகட்டத்தை சேர்ந்த முக்கியமான ஆய்வு இடமான பர்சாஹோம் பெருங்கற்காலத்துக்கும் தொடக்க வரலாற்றுக் காலத்திற்கும் சான்றாக உள்ளது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 45 Explanation: 
(குறிப்பு - பர்சாஹோம் என்னும் இடத்தில் மக்கள் குளிரில் இருந்து காத்துக்கொள்ள ஏறத்தாழ 4 அடி ஆழம் கொண்ட குழி வீடுகளில் வசித்தார்கள். முட்டை வடிவம் கொண்ட இவ் வீடுகள் அடிப்பகுதியில் அகலமாகவும் மேல் பகுதியில் குறுகியதாகவும் இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.)
Question 46
புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தவை எது?
 1. செம்மறிஆடு
 2. வெள்ளாடு
 3. குதிரை
A
I, II மட்டும்
B
I, III மட்டும்
C
II, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 46 Explanation: 
குறிப்பு - புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாக செம்மறி ஆடும் வெள்ளாடும் இருந்தன. இவர்கள் தாவரங்களை பயிரிட்டார்கள். பர்சாஹோமை சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டார்கள்)
Question 47
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - புதிய கற்காலப் பண்பாடு காலத்தில் செராமிக் அல்லது செராமிக் அல்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
 2. கூற்று 2 - இக்காலகட்டத்தில் மக்கள் சேற்று மண்ணால் ஆன வீடு கட்டினார்கள்.
 3. கூற்று 3 - செம்பால் ஆன அம்புகளை செய்தார்கள். கருப்புநிற பாண்டங்களையும் அகேட், கார்னிலியன் கல் மணிகளையும் வண்ணம் பூசப்பட்ட பானைகளையும் பயன்படுத்தினார்கள்.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 47 Explanation: 
(குறிப்பு - மெஹர்கரில் ஒரு புதைகுழியில் காட்டு நாயின் எலும்பும் மான் கொம்பு காணப்பட்டன. சூரியன், நாய் ஆகியவை இடம்பெறும் ஒரு வேட்டை காட்சி செதுக்கப்பட்டுள்ள ஒரு கல்லும் இங்கு கிடைத்துள்ளது)
Question 48
புதிய கற்காலப் பண்பாடு கிழக்கு இந்தியாவில் எந்த இடங்களில் பரவி இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது?
 1. பீகார்
 2. மேற்கு வங்காளம்
 3. அருணாச்சல பிரதேசம்
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 48 Explanation: 
(குறிப்பு - பீகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளின் பல இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிர்பன்புர், சிரந் போன்றவை அத்தகைய இடங்களாகும்.)
Question 49
தென்னிந்தியாவில் புதிய கற்கால பண்பாடு  இருந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?
 1. ஆந்திர பிரதேசம்
 2. கர்நாடகா
 3. தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதி
 4. கேரளா
A
I, II, IV மட்டும் சரி
B
I, II, III மட்டும் சரி
C
I, III, IV மட்டும் சரி
D
II, III, IV மட்டும் சரி
Question 49 Explanation: 
(குறிப்பு - ஒரு சாம்பல் மேட்டில் சுற்றிலும் குடியிருப்புகள் சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு இந்த இடங்களில் காணப்படுகிறது. புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன)
Question 50
புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ள இடங்களாக அறியப்பட்டுள்ள இடங்கள் எது?
 1. பையம்பள்ளி
 2. நாகார்ஜுனகொண்டா
 3. பிரம்மகிரி
 4. துங்கபத்திரை
A
I, II, III மட்டும் சரி
B
I, III, IV மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
இவை அனைத்தும்
Question 50 Explanation: 
(குறிப்பு - கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், தெக்கலக்கோடா, ஆந்திரப் பிரதேசத்தில் நாகார்ஜுன கொண்டா, ராமாபுரம், வீராபுரம் தமிழ்நாட்டில் பையம்பள்ளி ஆகிய இடங்களிலும் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.)
Question 51
இடம்பெயர் வேளாண்மை செய்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?
A
அசாம்
B
பீஹார்
C
அருணாச்சல பிரதேசம்
D
மேற்கு வங்காளம்
Question 51 Explanation: 
(குறிப்பு - தாஜலி ஹேடிங், சருத்தரு ஆகியவை அசாமில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும். இடம்பெயர் வேளாண்மை செய்ததற்கான சான்றுகள் அசாமில் கிடைத்துள்ளன.)
Question 52
ஹரப்பாவிற்கு முதன்முதலில் வருகை தந்தவர் யார்?
A
சார்லஸ் மேசன்
B
வில்லியம் ஹென்றி
C
ஜார்ஜ் ஹென்றி
D
வில்லியம் கோபர்நிக்கஸ்
Question 52 Explanation: 
(குறிப்பு - ஹரப்பாவிற்கு 1826ல் முதல் முதலில் வருகை தந்தவர் சார்லஸ் மேசன் என்னும் இங்கிலாந்து நாட்டவர் ஆவார்)
Question 53
1831ஆம் ஆண்டு ஹரப்பா நகரத்திற்கு வருகை தந்தவர் யார்?
A
சார்லஸ் மேசன்
B
அலெக்ஸாண்டர் கான்னிங்
C
அலெக்ஸ்சாண்டர் பர்னஸ்
D
சர் ஜான் மார்ஷல்
Question 53 Explanation: 
(குறிப்பு - 1831 ஆம் ஆண்டு அம்ரி என்னும் ஹரப்பா பண்பாடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்சாண்டர் பர்னஸ் என்பவர் வருகை தந்தார்.)
Question 54
புதிய கற்கால பண்பாட்டிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையேயான பண்பாட்டு ஒற்றுமைகளை உணர்த்துவது எது?
 1. ஆஸ்ட்ரோ ஆசிய மொழிகள் பேசப்படுதல்.
 2. சேனைக்கிழங்கும், சேப்பக்கிழங்கும் பயிரிடல்.
 3. இறந்தவர்களுக்கு கல்லாலும் மரத்தாலும் செய்யப்பட்ட நினைவு சின்னங்களை கட்டுதல்.
A
I, II மட்டும்
B
II, III மட்டும்
C
I, III மட்டும்
D
இவை அனைத்தும்
Question 54 Explanation: 
(குறிப்பு - தோளில் வைத்துக் கொள்ளத்தக்க மழுங்கல் முனைக்கோடாரிகளும், முனை நீட்டி சாய்வாக்கப்பட்ட மழுங்கல் முனை கோடரிகளும் அசாம் மேகாலயா நாகாலாந்து அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.)
Question 55
ஹரப்பா பகுதியில் இருந்து ஒரு முத்திரையை கண்டெடுத்த இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர் யார்?
A
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
B
அலெக்சாண்டர் பர்ன்ஸ்
C
சர் ஜான் மார்ஷல்
D
சார்லஸ் மேசன்
Question 55 Explanation: 
(குறிப்பு - இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் ஆவார். 1853, 1856, 1875 இல் இவர் ஹரப்பா நகரை பார்வையிட்டார். ஹரப்பா நகரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்த முயற்சிகள் மேற்கொண்டார்)
Question 56
இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக முதன்முதலாக பொறுப்பேற்றவர் யார்?
A
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
B
அலெக்சாண்டர் பர்ன்ஸ்
C
சர் ஜான் மார்ஷல்
D
சார்லஸ் மேசன்
Question 56 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நகரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். இவர் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்ற நிகழ்வு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என அழைக்கப்படுகிறது)
Question 57
1940களில் ஹரப்பா நகரில் ஆய்வுகள் நடத்தியவர் யார்?
A
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
B
அலெக்சாண்டர் பர்ன்ஸ்
C
ஆர்.இ.எம்.வீலர்
D
சார்லஸ் மேசன்
Question 57 Explanation: 
(குறிப்பு - பிற்காலத்தில் 1940களில் ஆர்.இ.எம்.வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு ஹரப்பா நாகரிக பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன)
Question 58
ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புடைய இடங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?
 1. காலிபங்கன்
 2. லோத்தல்
 3. ராக்கிகார்ஹி
 4. டோலாவீரா
A
I, III, IV மட்டும் சரி
B
I, II, III மட்டும் சரி
C
II, III, IV மட்டும் சரி
D
இவை அனைத்தும் சரி
Question 58 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புடைய இடங்களாவன லோத்தல், காலிபங்கன், ராக்கிகார்ஹி, டோலாவீரா, போன்றவை ஆகும்.1950களுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பயணங்களும் அகழாய்வுகளும் அரப்பா நாகரீகத்தையும் அதன் இயல்பையும் புரிந்து கொள்ள உதவின.)
Question 59
சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சேர்த்து மொத்தம் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன?
A
1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்
B
2.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்
C
3.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்
D
4.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்
Question 59 Explanation: 
(குறிப்பு - சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதன் மையப்பகுதிகள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளன)
Question 60
சிந்து நாகரிகத்தின் எல்லையை பொருத்துக.
 1. கிழக்கு        - a) தைமாபாத்
 2. மேற்கு         - b) ஆலம்கிர்புர்
 3. வடக்கு        - c) சட்காஜென் டோர் குடியிருப்பு
 4. தெற்கு        - d) ஷார்ட்டுகை
A
I-b, II-c, III-d, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-b, II-c, III-a, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 60 Explanation: 
(குறிப்பு - சட்காஜென் பகுதி பாகிஸ்தான் ஈரான் எல்லையிலும், ஷார்ட்டுகை பகுதி ஆப்கானிஸ்தானிலும், ஆலம்கிர்புர் பகுதி உத்தரப் பிரதேசத்திலும், தைமாபாத் பகுதி மகாராஷ்டிரம் பகுதியிலும் அமைந்துள்ளன.)
Question 61
திட்டமிட்ட நகரங்களின் அமைவிடங்களை பொருத்துக.
 1. ஹரப்பா                            - a) சிந்து, பாகிஸ்தான்
 2. மொஹஞ்சதாரோ      - b) ராஜஸ்தான், இந்தியா
 3. டோலாவீரா                     - c) பஞ்சாப், பாகிஸ்தான்
 4. காலிபங்கன்                  - d) குஜராத், இந்தியா
A
I-c, II-a, III-d, IV-b
B
I-d, II-a, III-b, IV-c
C
I-b, II-c, III-a, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 61 Explanation: 
(குறிப்பு - மேற்கண்ட இடங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நகரங்கள் ஆகும். இவை அனைத்தும் ஹரப்பா காலத்து முக்கிய நகரங்களாகும்)
Question 62
திட்டமிட்ட நகரங்களின் அமைவிடங்களை பொருத்துக.
 1. லோத்தல்                              - a) குஜராத், இந்தியா
 2. பனாவலி                               - b) ஹரியானா, இந்தியா
 3. ராக்கிகார்ஹி                     - c) ராஜஸ்தான், இந்தியா
 4. மொஹஞ்சதாரோ            - d) சிந்து, பாகிஸ்தான்
A
I-a, II-c, III-b, IV-d
B
I-d, II-a, III-b, IV-c
C
I-b, II-c, III-a, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 62 Explanation: 
(குறிப்பு - அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள் ஆகும்.)
Question 63
கீழ்க்கண்டவற்றுள் ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாக அமைந்தது எது?
A
லோத்தல்
B
மொகஞ்சதாரோ
C
காலிபங்கன்
D
டோலாவிரா
Question 63 Explanation: 
(குறிப்பு - மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாக இருந்தது.மொகஞ்சதாரோ கோட்டை பகுதியாகவும் தாழ்வான நகரமாகவும் இரு வேறுபட்ட பகுதிகளை கொண்டிருந்தது.)
Question 64
கீழ்க்காணும் இடங்களில் எங்கு சேமிப்பு கிடங்கு அடையாளம் காணப்பட்டது?
A
லோத்தல்
B
மொகஞ்சதாரோ
C
காலிபங்கன்
D
டோலாவிரா
Question 64 Explanation: 
(குறிப்பு - மொகஞ்சதாரோ நகரத்தில் நகரத்தின் கோட்டை பகுதி முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடத்தை கான அமைப்புகளுடன் காணப்படுகிறது. இதை பொதுமக்களும், மக்களில் குறிப்பிட்ட சிலரோ பயன்படுத்தி இருக்கலாம்)
Question 65
மொகஞ்சதாரோ நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருங்குளம் கீழ்க்காணும் எந்த அமைப்புகளை கொண்டிருந்தது?
 1. பெரிய முற்றம்.
 2. குளத்தின் நான்கு பக்கங்களிலும் நடைபாதை
 3. கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் படிக்கட்டுகள்
 4. நடை பாதையின் அருகே பல அறைகள்
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
I, III, IV மட்டும் சரி
D
I, II, IV மட்டும் சரி
Question 65 Explanation: 
(குறிப்பு - முகஞ்சதாரோ நகரத்தில் காணப்பட்ட பெருங்குளம், பெரிய முற்றத்துடன் கூடிய பெரிய குளமாகும். குளத்தின் வடக்குப் பக்கத்திலும், தெற்கு பக்கத்திலும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. நடை பாதையின் அருகே பல அறைகளும் அமைந்துள்ளது)
Question 66
ஹரப்பா நகரத்து மக்கள் பயிரிட்டு தானியங்களான கீழ்கண்டவற்றுள் எது?
 1. கோதுமை, பார்லி
 2. அவரை வகைகள்
 3. கொண்டைக்கடலை, எள்
 4. வெவ்வேறு திணை வகைகள்
A
I, II, III மட்டும் சரி
B
II, III, IV மட்டும் சரி
C
I, III, IV மட்டும் சரி
D
I, II, III, IV நான்கும் சரி
Question 66 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நகர மக்கள், மேற்கண்ட அனைத்து தானியங்களையும் பயிரிட்டார்கள். வேளாண்மை மூலம் கிடைத்த வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது.)
Question 67
இரட்டை பயிரிடல் முறையை பின்பற்றியவர்கள் யார்?
A
ஹரப்பா மக்கள்
B
மொகஞ்சதாரோ மக்கள்
C
லோத்தல் மக்கள்
D
சிந்து மக்கள்
Question 67 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா மக்கள் உலகுக்கு கலப்பையை பயன்படுத்தினார்கள். நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம்.)
Question 68
உழுத நிலத்துக்கான அடையாளங்கள் எங்கு காணப்பட்டது?
A
ஹரப்பா
B
காலிபங்கன்
C
லோத்தல்
D
பனாவலி
Question 68 Explanation: 
(குறிப்பு - உழுத நிலங்களை காலிபங்கனில் காணமுடிகிறது. அவர்கள் பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்)
Question 69
ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
சிபு
B
செபு
C
பசு
D
சிசு
Question 69 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா பண்பாட்டில் மாடுகள் பெரிய உடலமைப்பை கொண்டவையாக இருந்தன. அவை செபு எனப்பட்டன. ஹரப்பா நகர முத்திரைகளில் மாடுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன)
Question 70
ஹரப்பா மக்கள் அறிந்திராத விலங்கு எது?
A
குதிரை
B
பன்றி
C
யானை
D
எருமை
Question 70 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நகரத்தில் மேலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது. செம்மறிஆடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள். எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது. எனினும் குதிரையை அவர்கள் அறிந்திருக்கவில்லை)
Question 71
ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?
A
வெண்கலம்
B
இரும்பு
C
தங்கம்
D
செம்பு
Question 71 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா இனமக்கள் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும், சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களை செய்தார்கள். இந்த அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டன.)
Question 72
ஹரப்பா நகரத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன?
A
மெசபடோமியா
B
கிரீஸ்
C
பாலஸ்தீனம்
D
சீனா
Question 72 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நகரத்தில் அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன. இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கிருந்து கலைப்பொருள்கள் ஏற்றுமதியான செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகிறது)
Question 73
ஹரப்பா நகரத்தின் பொருளும், அதன் உற்பத்தி மையங்களையும் பொருத்துக
 1. சங்கு                           - a) ஷார்ட்டுகை
 2. வைடூரியம்              - b) லோத்தல்
 3. கார்னிலியன்          - c) நாகேஸ்வர்
 4. செம்பு                         - d) ராஜஸ்தான்
A
I-c, II-a, III-b, IV-d
B
I-d, II-a, III-b, IV-c
C
I-b, II-c, III-a, IV-d
D
I-a, II-d, III-b, IV-c
Question 73 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நாகரிக பகுதிகள் சில குறிப்பிட்ட கைவினைப் பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக உள்ளன. அத்தகைய பொருள்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன)
Question 74
ஹரப்பா நகர மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் என்ன வண்ணத்தில் இருந்தன?
 1. அடர் கருப்பு
 2. அடர் சிவப்பு
 3. அடர் பச்சை
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 74 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா மக்கள் அன்றாட தேவைகளுக்கு பலவகைப்பட்ட மண்பாண்டங்களை பயன்படுத்தினர். அவை நன்கு சுடபட்டவையாக இருந்தன. மேலும் அவை அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணங்களில் இருந்தன)
Question 75
கீழ்க்கண்ட வகைகளில் எது ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்தவையாகும்?
 1. குறுகிய கைப்பிடி உள்ள கோப்பைகள்.
 2. நுனி சிறுத்து, தாங்கும் பகுதி அகன்றும் உள்ள கோப்பைகள்.
 3. இலைகள், மீன் செதில்கள், கோணல்மாணலாக கோடுகள் உள்ள பாத்திரங்கள்.
A
I, II மட்டும் சரி
B
II, III மட்டும் சரி
C
I, III மட்டும் சரி
D
எல்லாமே சரி
Question 75 Explanation: 
(குறிப்பு - பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரிகத்தை சார்ந்த மண்பாண்டங்கள் நன்கு சுடபட்டதாகவும், நுண்ணிய வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன.)
Question 76
ஹரப்பா மக்கள் கத்தி செய்ய பயன்படுத்திய கல் எது?
A
குவார்ட்ஸ்
B
சுண்ணாம்புக்கல்
C
கிரானைட் கல்
D
ரோரிசெர்ட் கல்
Question 76 Explanation: 
(குறிப்பு - கூர்முனை கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் பிடிப்பதற்கான தூண்டில், சவரகத்திகள், தராசு தட்டுகள், கண்ணாடிகள் போன்றவை ஹரப்பா மக்களால் பயன்படுத்தப்பட்டன.)
Question 77
நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?
A
ஹரப்பா
B
மொகஞ்சதாரோ
C
லோத்தல்
D
காலிபங்கன்
Question 77 Explanation: 
(குறிப்பு - ஒரு சுடு மண் பொம்மையில் மதகுரு போல் தோற்றமளிக்கும் துணியால் ஆன, பூ வேலைப்பாடுகள் கொண்ட மேலாடையை அணிந்துள்ள பொம்மை ஹரப்பா நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது. நடனமாடும் பெண் சிலை மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.)
Question 78
ஹரப்பாவை சார்ந்த முத்திரைகள் கீழ்க்கண்ட இடங்களில் எங்க கிடைத்துள்ளன?
 1. ஈரான்
 2. ஈராக்
 3. ஓமன்
 4. பஹ்ரைன்
A
I, II இல் மட்டும்
B
II, III, IV இல் மட்டும்
C
I, II, III இல் மட்டும்
D
இவை அனைத்திலும்
Question 78 Explanation: 
(குறிப்பு - சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன், பஹ்ரைன், ஈரான், ஈராக் ஆகிய இடங்களில் ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது)
Question 79
மெலுகா என்னும் சொல் எந்த இடத்தை குறிக்கிறது?
A
சிந்து
B
ஹரப்பா
C
மொஹஞ்சதாரோ
D
காலிபங்கன்
Question 79 Explanation: 
(குறிப்பு - மெசபடோமியாவிற்கும் ஹரப்பாவிற்கும் இடையேயான வணிக தொடர்புகளை கியூனிபார்ம் கல்வெட்டு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. அவற்றில் காணப்படும் மெலுகா என்பது சிந்து பகுதியை குறிக்கிறது.)
Question 80
மெசபடோமியா புராணத்தில் ' உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக.அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஹஜா பறவை என்பது எதை குறிக்கும்?
A
புறா
B
வான்கோழி
C
மயில்
D
நாரை
Question 80 Explanation: 
(குறிப்பு - ஹஜா பறவை மயிலை குறிக்கும் என சில தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.)
Question 81
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - ஹரப்பாவில் சரியான எடை கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
 2. கூற்று 2 - ஹரப்பா நாகரிக பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 3. கூற்று 3 - edaiyin விகிதம் மூன்று மடங்காக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 81 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா நாகரிக பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் இரும முறையை பின்பற்றுவதாக அமைந்துள்ளன. இரும முறை என்பது 1, 2, 4, 8, 16, 32.........போன்றவையாகும்.)
Question 82
ஹரப்பா மக்களின் அளவீட்டில் ஒரு இன்ச் என்பது தற்போதைய அளவீட்டில் ____________ஆக இருந்துள்ளது.
A
1.50 செ.மீ
B
1.25 செ.மீ
C
1.75 செ.மீ
D
2.00 செ.மீ
Question 82 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா காலத்து அளவீடுகளில் மிகச்சிறிய அளவீடு 13.63கிராமாக உள்ளது. ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இன்ச் = 1.75செமீ ஆககொள்ளும் விதத்தில் அளவுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்)
Question 83
ரோரிசெர்ட் கல் எந்த இடங்களில் அதிகமாக காணப்படுகிறது?
A
ரோரி, இந்தியா
B
லோத்தல், இந்தியா
C
இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
D
ரோரி, பாகிஸ்தான்
Question 83 Explanation: 
(குறிப்பு - ரோரிசெர்ட் என்னும் படிக்கல் பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது. ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.)
Question 84
ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் எவற்றால் ஆனவை அல்ல?
A
ஸ்டீட்டைட்
B
செம்பு
C
இரும்பு
D
தந்தம்
Question 84 Explanation: 
(குறிப்பு - ஸ்டீட்டைட், சுடுமண், தந்தம், செம்பு போன்றவற்றால் ஆன முத்திரைகள் ஹரப்பா நாகரிக பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா எழுத்து முறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை)
Question 85
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத்தொடர் __________ கொண்டுள்ளது.
A
26 குறியீடுகளை
B
28 குறியீடுகளை
C
30 குறியீடுகளை
D
32 குறியீடுகளை
Question 85 Explanation: 
(குறிப்பு - ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துத்தொடர்கள் ஹரப்பா நகர பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.)
Question 86
சிந்து மக்கள் எந்த மரத்தை வழிபாட்டுக்குரியதாக வைத்திருந்ததாக அறியப்பட்டுள்ளது?
A
அரசமரம்
B
ஆலமரம்
C
வேப்பமரம்
D
புளியமரம்
Question 86 Explanation: 
(குறிப்பு - சிந்து மக்கள் இயற்கையை வழிபட்டனர். அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.)
Question 87
இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கத்தின் பகுதிகளாக அறியப்படும் இடங்கள் எது?
 1. அரிக்கமேடு
 2. கீழடி
 3. உறையூர்
 4. கொற்கை
A
I, II, IV மட்டும் சரி
B
I, II, III மட்டும் சரி
C
I, III, IV மட்டும் சரி
D
II, III, IV மட்டும் சரி
Question 87 Explanation: 
(குறிப்பு - பழம் தமிழகத்தை சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உரையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கத்தின் பகுதிகள் ஆகும். இந்த ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன)
Question 88
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - சிந்து சமவெளி நாகரீக காலத்தில் காணப்படும் மண்பாண்டங்கள், முத்திரைகள், எடைக் கற்கள் ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
 2. கூற்று 2 - ஹரப்பாவும், மொகஞ்சதரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கிறது.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
இரண்டு கூற்றுகளும் சரி
D
இரண்டு கூற்றுகளும் தவறு
Question 88 Explanation: 
(குறிப்பு - பண்பாட்டு பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது)
Question 89
சிந்து சமவெளி நாகரிகம் எப்போது வீழ்ச்சியடைந்தது?
A
பொ.ஆ.மு 1600இல்
B
பொ.ஆ.மு 1700இல்
C
பொ.ஆ.மு 1800இல்
D
பொ.ஆ.மு 1900இல்
Question 89 Explanation: 
(குறிப்பு - ஏறத்தாழ பொ.ஆ.மு 1900இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, நீர்நிலைகளின் மறைவு, தொடர் வறட்சி ஆகியவை சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்களாக வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகின்றன.)
Question 90
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
 1. கூற்று 1 - காலிபங்கனில் வேள்விப் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 2. கூற்று 2 - ஹரப்பா மக்கள் இறந்தோரை புதைத்தனர்.
 3. கூற்று 3 - புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன
A
கூற்று 1, 2 மட்டும் சரி
B
கூற்று 2, 3 மட்டும் சரி
C
கூற்று 1, 3 மட்டும் சரி
D
எல்லா கூற்றுகளும் சரி
Question 90 Explanation: 
(குறிப்பு - ஹரப்பா மக்களின் புதைகுழியில் மண்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிர கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கிறது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 90 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *