Book Back QuestionsTnpsc

அரசாங்கங்களின் வகைகள் Book Back Questions 9th Social Science Lesson 23

9th Social Science Lesson 23

23] அரசாங்கங்களின் வகைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மிகவும் பழமையான அரசாங்கம்: ஐக்கிய பேரரசு காணப்பட்ட முடியாட்சி அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும். முடியாட்சியில் அரசரோ அல்லது மகாராணியே அரசாங்கத்தின் தலைவராவார். ஆங்கில முடியாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி ஆகும். அதாவது அரசின் தலைமையாகவே இருந்தாலும் சட்டமியற்றும் வல்லமை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது.

இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவு: இந்திய நாடு, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பது மத்திய அரசே ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது: (1) சட்ட மன்ற உறவுகள் (பிரிவுகள் 245 முதல் 255 வரை). (2) நிர்வாக உறவுகள் (பிரிவுகள் 256 முதல் 263 வரை). (3) நிதி உறவுகள் (பிரிவுகள் 268 முதல் 294 வரை).

மத்திய மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் படைத்தவை. ஆனாலும் அதிகாரங்கள் வேறுபடுகின்றன. சில குறிப்பிட்ட துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. இத்துறைகள் மத்தியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சில துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துறைகளுக்கான சட்டங்களை அந்தந்த மாநில அரசுகளே இயற்றிக் கொள்ளும். இவை மாநிலப்பட்டியல் எனப்படுகிறது. சில துறைகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளன. இவை பொதுப்பட்டியல் எனப்படுகிறது.

மத்திய பட்டியல்: மத்தியப் பட்டியலில் 100 துறைகள் உள்ளடங்கியுள்ளது. வெளியுறவுத் துறைகள், பாதுகாப்பு, ஆயுதப்படைகள், தொலைதொடர்பு, தபால் மற்றும் தந்தி, மாநிலங்களுக்கிடையிலான வியாபாரம் மற்றும் வணிகம்.

மாநில பட்டியல்: மாநிலப் பட்டியல் 61 துறைகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பொது ஒழுங்கு, காவல் துறை, நீதித்துறை நிர்வாகம், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், விவசாயம் போன்றவை.

பொதுப்பட்டியல்: பொதுப்பட்டியல் 52 துறைகளாக உள்ளன. குற்றவியல் மற்றும் சிவில் நடைமுறைகள், திருமணம் மற்றும் விவாகரத்து, பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல், செய்தித்தாள், புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியன.

மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness GNH): மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது தற்போது வளர்ந்து வரும் ஓர் தத்துவமாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள மொத்த மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு குறியீடு ஆகும். பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள இக்கருத்து ஜீலை 18, 2008ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தைப் பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் அவர்களால் 1970இல் உருவாக்கப்பட்டது. மொத்த தேசிய மகிழ்ச்சி நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் ஊக்குவிப்பு, பண்பாடு மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது. இயற்கை மற்றும் பாரம்பரிய மதிப்புகளுக்கிடையே இசைவை வலியுறுத்தும் வகையில் மக்களிடையே கூட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது அரசின் இலக்காக இருக்க வேண்டும்.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ————–, —————– ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.

2. பாராளுமன்ற ஆட்சி முறை —————– என்றும் அழைக்கப்படுகின்றது.

3. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ————— ஆவர்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

நாடுகள் நாடாளுமன்றத்தின் பெயர்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் —————–

2. நார்வோ —————-

3. ——————- ஃபோக்டிங்

விடைகள்:

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், இலங்கை, 2. பொறுப்பு அரசாங்கம்/வெஸ்ட் மினிஸ்டர், 3. பிரதம மந்திரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. காங்கிரஸ், 2. ஸ்டார்டிங், 3. டென்மார்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!