Book Back QuestionsTnpsc

இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back Questions 10th Social Science Lesson 12

10th Social Science Lesson 12

12] இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சமச்சீர் காலநிலை என்பது “பிரிட்டிஷ் காலநிலை” என்றும் அழைக்கப்படுகிறது. இக்காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது.

கடல் மட்டத்திலிருந்து 6. 7 மீ உயரத்தில் அமைந்துள்ள சென்னையின் வெப்பநிலை 35oC ஆக இருக்கும் பொழுது 2240 மீ உயரமுள்ள உதகை வெப்பநிலையைக் கண்டறிக.

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும். காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

உலகில் மிக அதிக அளவு மழை பெறும் (1141 செ. மீ) பகுதியான மௌசின்ராம் (Mawsynram) மேகாலயாவில் அமைந்துள்ளது.

புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________

(அ) தமிழ்நாடு

(ஆ) கேரளா

(இ) பஞ்சாப்

(ஈ) மத்தியப் பிரதேசம்

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு _________ காற்றுகள் உதவுகின்றன.

(அ) லூ

(ஆ) நார்வெஸ்டர்ஸ்

(இ) மாஞ்சாரல்

(ஈ) ஜெட் காற்றோட்டம்

3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.

(அ) சமவெப்ப கோடுகள்

(ஆ) சம மழைக்கோடுகள்

(இ) சம அழுத்தக் கோடுகள்

(ஈ) அட்சக் கோடுகள்

4. இந்தியாவின் காலநிலை ___________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.

(அ) அயன மண்டல ஈரக்காலநிலை

(ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை

(இ) அயன மண்டல பருவக்காற்று காலநிலை

(ஈ) மித அயன மண்டலக் காலநிலை

5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

(அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

(ஆ) இலையுதிர்க்காடுகள்

(இ) மாங்குரோவ் காடுகள்

(ஈ) மலைக்காடுகள்

6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் __________

(அ) தமிழ்நாடு

(ஆ) ஆந்திரப் பிரதேசம்

(இ) மத்தியப் பிரதேசம்

(ஈ) கர்நாடகா

7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது __________

(அ) நீலகிரி

(ஆ) அகத்திய மலை

(இ) பெரிய நிக்கோபார்

(ஈ) கட்ச்

பொருத்துக:

1. சுந்தரவனம் – பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் – அக்டோபர், டிசம்பர்

3. வடகிழக்குப் பருவக்காற்று – கடற்கரைக் காடுகள்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் – மேற்கு வங்காளம்

5. கடலோரக் காடுகள் – இமயமலைகள்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.

காரணம்: இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மித வெப்பமாக வைத்திருக்கிறது.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு.

(இ) கூற்று சரி காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு காரணம் சரி

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க:

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

(அ) பாலைவனம்

(ஆ) கங்கை பிரம்பபுத்ரா டெல்டா

(இ) கோதாவரி டெல்டா

(ஈ) மகாநதி டெல்டா

2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

(அ) அட்ச பரவல்

(ஆ) உயரம்

(இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

(ஈ) மண்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பஞ்சாப் 2. மாஞ்சாரல் 3. சம மழைக்கோடுகள்

4. அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை 5. இலையுதிர்க் காடுகள் 6. ஆந்திரப் பிரதேசம்

7. கட்ச்

பொருத்துக: (விடைகள்)

1. சுந்தரவனம் – மேற்கு வங்காளம்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள் – இமயமலைகள்

3. வடகிழக்குப் பருவக்காற்று – அக்டோபர், டிசம்பர்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் – பாலை மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள்

5. கடலோரக் காடுகள் – கடற்கரைக் காடுகள்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. பாலைவனம்

2. மண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!