Book Back QuestionsTnpsc

உயிர்க்கோளம் Book Back Questions 9th Social Science Lesson 16

9th Social Science Lesson 16

16] உயிர்க்கோளம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு சூழலியல் (Ecology) எனப்படுகிறது. சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழலியலாளர் (Ecologist) எனப்படுகிறார்.

ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70%ற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்து விடுமேயானால் அவ்விடம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய வளமையங்களாகக் (Hotspot) கருதப்படுகிறது. இந்தியாவின் இமயமலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தோ பர்மா பிரதேசம், சுந்தா நிலப்பகுதி போன்றவை வளமையங்களாகும். உலகில் 34 இடங்கள் உயிரினப்பன்மை தகுதி வளமையங்களாகக் (Hotspot) கருதப்படுகிறது.

புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் சுமார் 70% தாவரங்கள் மழைக் காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. (எ. கா): லப்போச்சா.

சவானா புல்வெளிகளின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் இங்குக் காணப்படும் பல்வேறு விதமான விலங்கினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. (எ. கா): சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்கினங்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகின்றன.

பாலைவனச் சோலை என்பது பாலைவனங்கள் மற்றும் அரை வறண்டப் பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர்ப் பகுதியாகும். பாலைவனச் சோலைகள் நீருற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன. பேரீச்சை, அத்தி, சிட்ரஸ் பழங்கள் மக்காச்சோளம் போன்றவை பாலைவனச் சோலைக்கு அருகில் விளைவிக்கப்படுகின்றன.

மிதவெப்ப மண்டலப் புல்வெளியானது, உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. ப்ரெய்ரி – வடஅமெரிக்கா. ஸ்டெப்பி – யுரோஷியா. பாம்பாஸ் – அர்ஜென்டினா மற்றும் உருகுவே. வெல்ட் – தென் ஆப்பிரிக்கா. டௌன்ஸ் – ஆஸ்திரேலியா. கேன்டர்பர்க் – நியூசிலாந்து. மஞ்சூரியன் – சைனா.

உயிர்க்கோள காப்பகங்கள் (Biosphere Reserve) என்பவை ஒரு சிறப்பு சுற்றுச்சூழ்நிலை மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்தியாவில் பதினெட்டு முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த் தொகுதி

(அ) தூந்திரா

(ஆ) டைகா

(இ) பாலைவனம்

(ஈ) பெருங்கடல்கள்

2. உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு

(அ) சூழ்நிலை மண்டலம்

(ஆ) பல்லுயிர்த் தொகுதி

(இ) சுற்றுச்சூழல்

(ஈ) இவற்றில் எதுவும் இல்லை

3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

(அ) உற்பத்தியாளர்கள்

(ஆ) சிதைப்போர்கள்

(இ) நுகர்வேர்கள்

(ஈ) இவர்களில் யாரும் இல்லை

4. பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

(அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

(ஆ) குறைந்த அளவு ஈரப்பசை

(இ) குளிர் வெப்ப நிலை

(ஈ) ஈரப்பதம்

5. மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்

(அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்

(ஆ) மிக அதிகமான வெப்பநிலை

(இ) மிக மெல்லிய மண்ணடுக்கு

(ஈ) வளமற்ற மண்

II. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.

காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.

2. கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.

காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங்காண்பர்.

3. கூற்று: கடந்த இருபது ஆண்டுகளில் 60 சதவீத ஆப்ரிக்க கொரில்லாக்கள் எண்ணிக்கையில் குறைந்துள்ளன.

காரணம்: காடுகளில் மனிதன் குறுக்கீடு இல்லை

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ————— எனப்படும்.

2. பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை —————-

3. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை —————— என அழைக்கின்றோம்.

4. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை —————– என்கிறோம்.

5. பாலைவனப் பல்லுயிர்த் தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ————– எனப்படும்.

6. ————– நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

IV. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி:

1. உலக வனவிலங்குகள் தினம்: —————

2. பன்னாட்டு காடுகள் தினம்: —————-

3. உலக நீர் தினம்: —————

4. புவி தினம்: —————

5. உலக சுற்றுச் சூழல் தினம்: ——————

6. உலக பேராழியியல் தினம்: —————–

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தூந்திரா, 2. சூழ்நிலை மண்டலம், 3. சிதைப்போர்கள், 4. உவர்ப்பியமுள்ள மணற்பகுதி, 5. மிக அதிகப்படியான ஈரப்பதம்

II. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது, 2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது, 3. கூற்று சரி, காரணம் தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சூழ்நிலைமணடலம், 2. நுகர்வோர்கள், 3. உணவு வலை, 4. பல்லுயிர் தொகுதி, 5. பாலை வகை தாவரங்கள், 6. கடல்

IV. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி:

1. அக்டோபர் 4, 2. மார்ச் 21, 3. மார்ச் 22, 4. ஏப்ரல் 22, 5. ஜூன் 5, 6. டிசம்பர் 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!