MCQ Questions

மனிதரால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு 12th Geography Lesson 8 Questions in Tamil

12th Geography Lesson 8 Questions in Tamil

8] மனிதரால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு

1) பேரிடர் என்ற வார்த்தையின் மூலம் கீழ்காணும் எந்த மொழியிலிருந்து வந்தது?

A) லத்தீன்

B) அரேபி

C) பிரென்ச்

D) ஆங்கிலம்

(குறிப்பு – பேரிடர் என்ற வார்த்தையின் மூலம் கிரேக்க, லத்தீன் மொழியில் இருந்து தோன்றியது. கெட்ட நட்சத்திரம் என்பதை முன்னோர்கள் பேரிடர் என கருதினர். சுனாமி, பூகம்பம் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்றவைகள் பேரிடர்களாக கருதப்படுகிறது.)

2) பேரிடரினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பினை குறைக்கும் நடவடிக்கைகளில் உள்ளடக்கியது எது?

A) பேரிடர் ஆபத்து மேலாண்மை

B) பேரிடர் ஆபத்து குறைப்பு

C) பேரிடர் மேலாண்மை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – பேரிடர் ஆபத்து மேலாண்மை என்பது சில நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும்.இது பேரிடரினால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுத்தல் அல்லது குறைத்தல் மற்றும் தயாராக இருத்தல் போன்ற கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சார் நடவடிக்கைகளை கொண்டதாகும். பேரிடர் ஆபத்து குறைப்பு என்பது பேரிடரினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பினை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது.)

3) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பேரிடர் என்பது மக்களுக்கு பாதிப்பு அல்லது காயத்தை ஏற்படுத்தி கட்டிடங்கள், சாலைகள், வாழ்வாதாரங்கள் சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு மோசமான இடையூறாகும்.

கூற்று 2 – பேரிடர்களின் அளவும், தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளதாக சர்வதேச ஆய்வு கூறுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பேரிடர்கள் உலக அளவில் 2.5 பில்லியன் மக்களை பாதித்ததோடு 690 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையான நேரடி பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பேரிடருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகி பேரிடர் ஆபத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஆய்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.)

4) சமூகம் என்பதற்கான சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. சமூகம் என்பது ஒரு இடத்தில் வாழும் ஒத்த தன்மையுடைய கூறுகளைக் கொண்ட மக்கள் தொகுப்பாகும்.

II. சமூகம் என்பது அனுபவ பரிமாற்றங்கள், இருப்பிடம், பண்பு, மொழி, சமூக அக்கறை ஆகியவற்றை உள்ளடக்கியது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சமூகம் என்பது ஒரு இடத்தில் வாழும் ஒத்த தன்மையுடைய கூறுகளைக் கொண்ட மக்கள் தொகுப்பாகும்.இது அனுபவ பரிமாற்றங்கள், இருப்பிடம், பண்பு, மொழி, சமூக அக்கறை ஆகியவற்றை உள்ளடக்கியது. பேரிடர் ஆபத்து குறைப்பு என்பது ஒரு சமூகத்திற்க்குள்ளும் அந்த சமூகத்திற்காகவும் ஆன செயல்முறை ஆகும்.)

5) கீழ்க்கண்டவற்றுள் இது மனிதனால் ஏற்படும் பேரிடர் அல்ல?

A) தீ விபத்து

B) சுரங்க விபத்து

C) குண்டு வெடிப்பு

D) நில சரிவு

(குறிப்பு – மனிதனால் தூண்டப்படும் பேரிடர்கள் மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் என அழைக்கப்படுகின்றன. தீ விபத்து, போக்குவரத்து விபத்து, சுரங்க விபத்துகள், குண்டுவெடிப்புகள், கூட்ட நெரிசல் போன்றவை இதனால் ஏற்படும் பேரிடர் ஆகும்.)

6) கீழ்காணும் சுற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – கூட்டநெரிசல் என்பது திடீரென திரண்டு வரும் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் மிதிப்படுதல் போன்றவற்றால் காயங்கள் மட்டும் மரணம் ஏற்படுவது ஆகும்.

கூற்று 2 – கூட்ட நெரிசலின் போது கூட்டத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணமும் செயலும் கொண்டிருப்பர். அவர்களது செயல்கள் உணர்ச்சிவயப்பட்டதாகவும், பகுத்தறிவற்றதாகவும் இருக்கும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – கூட்ட நெரிசல் போன்ற நிகழ்வுகள் பல்வேறு சமூக கலாச்சார சூழ்நிலைகளில் ஏற்படலாம். அவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், நகரும் படிக்கட்டுகள், நகரும் பாதைகள், அன்னதானம் செய்யும் இடங்கள் போன்ற இடங்களில் ஏற்படும்.)

7) இந்தியாவில் எத்தனை சதவீத கூட்டநெரிசல் மதம் சார்ந்த விழாக்களில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது?

A) 70%

B) 73%

C) 76%

D) 79%

(குறிப்பு – கூட்ட நெரிசல் போன்ற நிகழ்வுகள் பல்வேறு சமூக கலாச்சார சூழ்நிலைகளில் ஏற்படலாம். அவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், நகரும் படிக்கட்டுகள், நகரும் பாதைகள், அன்னதானம் செய்யும் இடங்கள் போன்ற இடங்களில் ஏற்படும். வளர்ந்து வரும் நாடுகளில் பெரிய மதம் சார்ந்த கூட்டங்களில் தான் குறிப்பாக கூட்டநெரிசல் அபாயம் ஏற்படுகின்றது. 2013ஆம் ஆண்டின் ஆய்வின்படி இந்தியாவின் 79 சதவீத கூட்ட நெரிசல் மதம் சார்ந்த விழாக்களில் நடைபெற்று உள்ளது.)

8) கூட்ட நெரிசலின் போது பின்பற்றப்படும் வழிமுறைகளுள் தவறானது எது?

A) வெளியேற மாற்று வழியை கண்டறிதல்

B) நடக்கும் நிலையில் நகர்தல்

C) கைகளை மார்போடு வைத்துக்கொள்ளுதல்

D) அனைவரையும் தள்ளிவிட்டு வெளியேறுதல்

(குறிப்பு – மக்கள் ஒழுங்குமுறையில் நகரவும், கூடவும் ஏற்படுத்தும் தேவையான ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் கண்காணிப்பு கூட்ட நெரிசல் மேலாண்மை என அழைக்கப்படுகிறது.குழு நடத்தையை கட்டுப்படுத்துவதில் கூட்டநெரிசல் கட்டுப்பாடாகும்.)

9) கூட்ட நெரிசலின் போது செய்ய வேண்டியவைகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

கூற்று 1 – கூட்ட நெரிசலின் போது வெளியேறும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

கூற்று 2 – கூட்ட நெரிசலின் போது கைகளை மார்போடு வைத்து கொள்ள வேண்டும். இது நகர்வதை எளிதாக்கும்.

கூற்று 3 – கூட்ட நெரிசலில் கீழே விழுந்துவிட்டால், முதலில் நுரையீரல் இருக்கும் நெஞ்சுப்பகுதியை கூட்டத்திற்கு காட்டுவதை தவிர்க்க வேண்டும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கும் போது அசையாமல் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ கூட்ட நகர்வை தடுக்கக்கூடாது. ஏனெனில் கூட்டநெரிசலின் சக்தியை நம்மால் எதிர்கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் கடல் அலையைப் போல கூட்ட நெரிசலில் சக்தி அதிகமாக இருக்கும். எனவே மெதுவாக நடக்கும் நிலையில் நகர வேண்டும்.)

10) கூட்ட நெரிசலின் போது செய்ய வேண்டியவை கீழ்கண்டவற்றுள் எது?

I. உரக்க சத்தம் இட வேண்டும்.

II. யாரேனும் உதவிக்காக கையை நீட்டினால் அவரது கையை பிடித்து எழ செய்யவேண்டும்.

III. கூட்ட நெரிசலின் போது, பிறரை தொடர்புகொள்ள கைகளை மேல்நோக்கி ஆட்டுவது போன்ற சைகை மொழியை பயன்படுத்தலாம்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கும்போது, கத்தியை சேமித்து வைக்கவேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உரக்க சத்தமிட முயற்சிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது பீதியை அதிகரிக்கும்.)

11) உலகில் காயம் ஏற்பட்டு மரணம் அடைதலில் மூழ்குதலின் சதவீதம் எத்தனை?

A) 5 சதவீதம்

B) 6 சதவீதம்

C) 7 சதவீதம்

D) 8 சதவீதம்

(குறிப்பு – உலக அளவில் நீரில் மூழ்குதல் என்பது எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டு மரணம் ஏற்படுவது மூன்றாவது முக்கிய காரணியாகும். உலகில் காயம் ஏற்பட்டு மரணம் அடைதலில் மூழ்குதல் 7% ஆகும்.)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மூழ்குதல் என்பது நீரின் வெகு ஆழத்தில் கை, கால்களை பலமாக உதைத்தல், நுரையீரல்கள் ஆக்சிஜன் இன்றி தவித்தல் போன்ற நிகழ்வுகளால் பீதியை கிளப்பும் ஒரு நிகழ்வாகும்.

கூற்று 2 – மூழ்குதல் பொருளாதாரத்தோடு தொடர்புடையதாகவும் காணப்படுகிறது.

கூற்று 3 – ஏழ்மையான நாடுகளில் உள்ள மக்கள் மூழ்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – மூழ்குதல் என்பது நீரின் வெகு ஆழத்தில் கை, கால்களை பலமாக உதைத்தல், நுரையீரல்கள் ஆக்சிஜன் இன்றி தவித்தல் போன்ற நிகழ்வுகளால் பீதியை கிளப்பும் ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் மூழ்குதல் ஆயிரக்கணக்கான உயிர்களை பறிக்கின்றது.மூழ்குதல் பொருளாதாரத்தோடு தொடர்புடையதாகவும் காணப்படுகிறது.ஏழ்மையான நாடுகளில் உள்ள மக்கள் மூழ்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.)

13) மூழ்குதலில் எத்தனை சதவீதம் நன்னீரில் நடைபெறுவதாக ஆய்வு கூறுகிறது?

A) 50%

B) 60%

C) 70%

D) 90%

(குறிப்பு – முதல் கண்ணோட்டத்தில் கடலில் நீச்சல் அடிப்பது, ஏரியில் நீச்சல் அடிப்பதை விட அபாயகரமாக தோன்றும். மோதும் மற்றும் கொந்தளிக்கும் அலைகளால் கடற்கரைக்கு செல்பவர்களை எளிதாக மரணத்தை நோக்கி இழுத்துச் செல்ல முடியும். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 90% மூழ்குதல் என்பது நன்னீரில்தான் நடைபெறுகிறது.)

14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ரத்தத்தை விட உவர் நீரில் அதிக அளவு உப்பு உள்ளது.

கூற்று 2 – மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெண்களின் இறப்பு விகிதத்தை விட ஆண்கள் இருமடங்கு அதிக உயிரிழப்பை கொண்டுள்ளனர்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ரத்தத்தை விட உவர் நீரில் அதிக அளவு உப்பு உள்ளது. உவர் நீர் உள் இழுக்கப்படும் பொழுது உவர் நீரை நுரையீரலுக்குள் செலுத்தி ரத்தத்தை தடிமன் ஆக்குவதன் மூலம் உடலானது தன்னைத்தானே கட்டுப்படுத்த முயல்கிறது. இது மரணம் சம்பவிக்க 8 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுவதால் காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்பு அளிக்கிறது.)

15) வெள்ள பேரிடர்களின் போது எத்தனை சதவீத இறப்புகள் மூழ்குவதால் நடக்கின்றன?

A) 60 சதவீதம்

B) 65 சதவீதம்

C) 70 சதவீதம்

D) 75 சதவீதம்

(குறிப்பு – பெண்களின் இறப்பு விகிதத்தை விட ஆண்கள் இருமடங்கு மூழ்குதலால் இறக்கும் ஆபத்திலிருக்கிறார்கள். மூழ்கி இழப்பதில் ஆண்களின் விகிதம் அதிகமாக இருக்க காரணம் தனியாக நீச்சல் அடித்தல், நீச்சல் அடிப்பதற்கு முன் மது அருந்துதல், படகு சவாரி செய்தல் போன்ற ஆபத்து நிறைந்த நடத்தைகள் என ஆய்வுகள் கூறுகின்றன. வெள்ள பேரிடர்களின் போது 75 சதவீத இறப்புகள் மூழ்குவதால் நடக்கின்றன.)

16) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – உவர் நீரை விட நன்னீர் அதிக அளவு நம் ரத்தத்தை ஒத்த கலவையாகும்.

கூற்று 2 – ரத்தத்தை விட உவர் நீரில் அதிக அளவு உப்பு உள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – உவர் நீரை விட நன்னீர் அதிக அளவு நம் ரத்தத்தை ஒத்த கலவையாகும். நன்னீர் நுரையீரலுக்குள் செல்லும் பொழுது சவ்வூடுபரவல் முறையில் அது நம் ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இவ்வாறு இரத்தம் அதிக அளவு நீர்த்துப் போகும் போது ரத்த அணுக்கள் வெடித்து, உறுப்புகள் செயலிழக்கின்றன. இவை நிகழ 2 முதல் 3 நிமிடங்கள் ஆகின்றன.)

17) மூழ்கி இறப்பதைத் தடுக்கும் வழிமுறைகளுள் கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

A) நீச்சல் குளங்களை சுற்றி தடுப்பு அமைத்தல்

B) அடிப்படை நீச்சல், நீர் பாதுகாப்பு அறிவுரை வழங்குதல்

C) கப்பல் மற்றும் படகு பயணத்தை தடுத்தல்

D) வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் திறனை வளர்த்தல்

(குறிப்பு – மூழ்குதலை தடுக்க பல செயல்முறைகள் உள்ளன. கிணறுகளை மூடி வைத்தல், கதவு தடுப்புகளை பயன்படுத்துதல், குழந்தைகள் விளையாட தடுப்பு அமைக்கப்பட்ட பகுதிகளை அமைத்தல், நீச்சல் குளத்தை சுற்றி தடுப்பு அமைத்தல் போன்றவை நீரினால் ஏற்படும் ஆபத்துகளை கட்டுப்படுத்துகின்றன. பள்ளி பருவ குழந்தைகளுக்கு அடிப்படை நீச்சல், நீர் பாதுகாப்பு, காப்பாற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தல் என்பது மூழ்குதல் ஆபத்தை குறைக்கும் மற்றொரு வழி முறையாகும்.)

18) அதிக அளவு தீயின் வேகம் நொடிக்கு________மீட்டராகும்.

A) 100

B) 200

C) 300

D) 400

(குறிப்பு – வறண்ட அல்லது காற்று வீசும் காலநிலையில் தீ குட்டையான தாவரங்களையும் மரங்களையும் அழித்துவிடும். குறைந்த அளவு தீயின் வேகம் நொடிக்கு 1 முதல் 3 மீட்டர் வரை ஆகும். அதிக அளவு தீயின் வேகம் நொடிக்கு 100 மீட்டர் ஆகும். தீ விபத்தானது கட்டிடங்கள், மரப்பாலங்கள் மற்றும் தகவல்தொடர்பு கம்பிகள் ஆகியவற்றை அழித்து விடும்.)

19) தீ விபத்தின்போது செய்யக்கூடாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) கூச்சல் இடுதல் மற்றும் மணி ஒலி எழுப்புதல்

B) தீ விபத்து பகுதிக்கு அருகில் உள்ள தீப்பிடிக்கும் பொருட்களை அகற்றுதல்

C) முதன்மை மின் இணைப்பினை துண்டித்தல்

D) விலை மதிப்பான உடைமைகளை பாதுகாத்தல்.

(குறிப்பு – தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டியவை. கூச்சல் இடுதல் அல்லது மணி ஒலி எழுப்பி அனைவரையும் எச்சரிக்க வேண்டும். மணல் மற்றும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும். முதன்மை மின் இணைப்பினை உடனடியாக துண்டிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பிடித்தால் தீ பிடித்தவர் தரையில் விழுந்து உருண்டு தீயை அணைக்க வேண்டும்.)

20) தீ விபத்தை தவிர்க்கும் முறைகளுள் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பான பெட்டகங்கள் வைக்கவேண்டும்.

II. தீயணைப்பான் வைத்திருக்க வேண்டும்.அதை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

III. வீட்டின் அருகே மூன்று மீட்டர் உயரத்திற்கு குறைவான உயரம் கொண்ட மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வீட்டின் அருகே உள்ள பாசி மற்றும் தாவரங்களின் உலர்ந்த கிளைகளை வெட்டிவிட வேண்டும். வீட்டிற்கும் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய தாவரங்களுக்கு இடையில் ஒரு பாதுகாப்பு பகுதியை ஏற்படுத்த வேண்டும். சாக்கடை மற்றும் குழிகளிலிருந்து உலர்ந்த கிளைகள், இலைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கண்டிப்பாக வீட்டில் தீயணைப்பான் கருவி இருக்க வேண்டும். இவை அனைத்தும் தீ விபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் ஆகும்)

21) நெருப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் கீழ்க்கண்டவர்களில் யார்?

A) பாபா குர்குர்

B) பாபா குருதேவ்

C) பாபா குருசிங்

D) பாபா குருராம்

(குறிப்பு – பாபா குர்குர்வின் (Baba Gurgur) அணையா நெருப்பு (நெருப்பின் தந்தை என அழைக்கப்படுபவர்) என்னும் ஈராக்கில் உள்ள இயற்கை எரிவாயு குழாய் துவாரத்தில் எரியும் இந்த நெருப்பு நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இன் நெருப்பைப் பற்றி ஹெரோடாடஸ் மற்றும் புளூடார்க் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.)

22) தீயை அணைக்க பயன்படும் பொருள் கீழ்கண்டவற்றுள் எது?

I. மணல்

II. சமையல் சோடா

III. கால்சைட் சோடா

IV. மண்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தீயை அணைக்க நீரை பயன்படுத்த முடியாத போது (மின்சாரக் கருவிகள் இயங்கிக் கொண்டிருப்பதால் அல்லது நீர் இல்லாதபோது மற்றும் நெருப்பு பெரிய அளவில் இல்லாத போது) சமையல் சோடா, கல்சைட் சோடா,சலவைத்தூள், மணல், மண் ஆகியவற்றை கொண்டு அணைக்க வேண்டும். ஆடைகள் தீ பிடித்துவிட்டால் ஓடக்கூடாது. இது தீ பரவுதலை அதிகரிக்கும்.)

23) போபால் வாயு பேரிடர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A) 1982 ஆம் ஆண்டு

B) 1983 ஆம் ஆண்டு

C) 1984 ஆம் ஆண்டு

D) 1985 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1984 ஆம் ஆண்டு போபால் வாயு பேரிடர் நிகழ்ந்தது. போபால் மாநிலத்திலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து மெத்தில் ஐசோ சயனைடு வாயு கசிவினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 25 ஆயிரம் பேர் மரணமடைந்தனர்.)

24) தீ விபத்தின் போது கண்டிப்பாக செய்யக்கூடாதவை கீழ்க்கண்டவற்றுள் எது?

I. இயங்கிக்கொண்டிருக்கும் மின்சாதனங்களின் மீது தண்ணீர் ஊற்றக்கூடாது.

II. மேல்தளங்களில் ஜன்னல்கள் வழியே குதிக்கக்கூடாது.

III. மின்சாதனங்களை தொடக்கூடாது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தீ விபத்தின் போது இயங்கிக்கொண்டிருக்கும் மின்சாதனங்களின் மீது தண்ணீர் ஊற்றக்கூடாது. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியோ, ஒரு குளிர்சாதனப் பெட்டியோ எரிந்து கொண்டிருக்கும் போது முக்கிய மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். நீங்களாகவே நெருப்பை அணைக்க முயலக்கூடாது. மேல்தளங்களிலிருந்து ஜன்னல்கள் வழியாக குதிக்கக் கூடாது.)

25) கீழ்க்கண்டவற்றுள் எது தொழிலக பேரிடர் அல்ல?

A) தீ

B) வெடித்தல்

C) நச்சுப்புகை வெளியேற்றம்

D) கூட்ட நெரிசல்

(குறிப்பு – தொழிலகப் பேரிடர்கள் நான்கு முக்கிய இடர்களை கொண்டது. இவை தீ, வெடித்தல், சுப்புவை வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றதாகும். இப்பேரிடர் அதற்கு காரணம் தொழிற்சாலைகள் பல்வேறு மூலப்பொருட்கள், கழிவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கையாள பல வழிமுறைகளை பயன்படுத்துவதே ஆகும்.)

26) நெருப்பு நச்சுவாயுவான அக்ரோலின் (Acrolein) கீழ்காணும் எந்த வாயுக்களை உற்பத்தி செய்யும்?

I. கார்பன் மோனாக்சைடு

II. சயனைட்

III. மீத்தேன்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தொழிலக தீ விபத்து என்பது அடிக்கடி நிகழும் பேரிடர் ஆகும். நெருப்பு நச்சுவாயுவான அக்ரோலின் (Acrolein) எரியும்போது கார்பன் மோனாக்சைடு மற்றும் செயலில் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது தீ பற்றுதல் அல்லது அதிக வெப்பம் காரணமாக கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம். மேலும் தொழிலக தீ விபத்தின் மூலம் அத்தியாவசிய தேவைகளான மின்சாரம் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியை பாதிக்கும்)

27) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தொழிற்சாலை வெடிப்புகள் அதிர்வலைகளால் உண்டாகின்றன. அதிக அழுத்தம் மக்களைக் கொல்லக்கூடியது.

கூற்று 2 – வெடிப்புகள் பொதுவாக வாயு வெடிப்பு, தூசி வெடிப்பு என பலவிதமாக உள்ளது.

கூற்று 3 – தீப்பற்றக் கூடிய வாயு காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது வாயுவெடிப்புகள் ஏற்படுகின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தொழிற்சாலை வெடிப்புகள் அதிர்வலைகளால் உண்டாகின்றன. இதன் விளைவாக கட்டிடங்கள் இடிந்து விழுதல், கண்ணாடி உடைதல், மற்றும் பொருட்கள் சிதறுதல் ஆகியவை அதிக அளவு உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்துகிறது. வெடிப்புகள் வாயு வெடிப்பு, தூசி வெடிப்பு என பலவிதமாக உள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய திடப்பொருள்கள் முக்கியமாக உலோகத்துகள்கள் காற்றுடன் கலந்து எரியும் போது தூசி வெடிப்புகள் ஏற்படுகின்றன)

28) கீழ்க்கண்டவற்றுள் எதுவிபத்து நடந்த பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் கூட பாதிப்பை ஏற்படுத்தும் பேரிடர் ஆகும்?

A) வேதிப் பொருட்களின் வெளியேற்றம்

B) வெள்ளப்பெருக்கு

C) தீ விபத்து

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – திடீரென வெளியேறும் நச்சு வாயுக்கள் பொதுவாக தோன்றும் இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் கூட இழப்பு மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இவை நீராலும் காற்றாலும் எடுத்துச் செல்லப்படுகின்றன. வேதிப் பொருள்கள் நேரிடையாக பொது கழிவுநீர் அமைப்புகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலப்பதாலும், தீயை அணைக்க பயன்படுத்திய கழிவுநீர் கலப்பதாலும் பொதுமக்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படுகிறது.)

29) மரங்களின் அழிவு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்குகிறது. இது கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணமாகும்?

A) தொழிலக தீ விபத்து

B) வேதிப் பொருட்களின் வெளியேற்றம்

C) சுற்றுச்சூழல் பாதிப்பு

D) வெடிப்புகள்

(குறிப்பு – பொதுவாக வெளியேறும் மற்ற பொருட்கள் மனிதனுக்கு நேரடியாக நஞ்சாக அமையாவிட்டாலும், சுற்றுச் சூழல் மாசுபடுதலை ஏற்படுத்தக்கூடியவை. இது இயற்கை வளங்களான தாவர மற்றும் விலங்கினங்களுக்கு நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற உண்மை அதிக அளவு உணரப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மரங்களின் அழிவு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகிறது.)

30) தொழிலக இடர்களை குறைக்கும் வழிமுறைகளுள் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. பெரிய செயல்முறை மாற்றங்களை கொண்டு வருவதற்கு முன் அதற்கான உபகரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

II. பாதுகாப்பு முறைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

III. தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியும், பாதுகாப்பு சேவைகளும் மேற்கொள்ள வேண்டும்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – தொழிலக இடர்களை குறைக்கும் வழிமுறைகள் ஆவன, பெரிய செயல்முறை மாற்றங்களை கொண்டு வருவதற்கு முன் அதற்கான உபகரணங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்குதல், உபகரணங்களை சுத்தம் செய்து வைத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியும் பாதுகாப்பு சேவைகளும் மேற்கொள்ள வேண்டும்.)

31) ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மக்கள் சாலை விபத்தில் இறக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது?

A) 1.30 மில்லியன்

B) 1.32 மில்லியன்

C) 1.34 மில்லியன்

D) 1.36 மில்லியன்

(குறிப்பு – ஒவ்வொரு ஆண்டும் 1.34 மில்லியன் மக்கள் சாலை விபத்துகளில் இழக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்து உலக அளவில் இறப்புக்கான காரணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.)

32) உலக அளவில் மக்களின் உயிரிழப்புக்கான காரணிகளில் சாலை விபத்து எந்த இடத்தில் உள்ளது?

A) 2 வது இடம்

B) 4 வது இடம்

C) 6 வது இடம்

D) 8 வது இடம்

(குறிப்பு – உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்கள் 8வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 50 மில்லியன் மக்கள் மோசமான, வாழ்க்கையையே தலைகீழாக்க கூடிய காயங்களால் அவதிப்படுகின்றனர்.)

33) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சாலை பாதுகாப்பை சீர்குலைக்கும் காரணிகள் கீழ்கண்டவற்றுள் எது?

I. வேகமாக செல்லுதல்

II. தலைக்கவசம் அணியாது இருத்தல்

III. இருக்கை பட்டைகள் அணியாது இருத்தல்

IV. மது அருந்தி வாகனம் ஓட்டுதல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சாலை பாதுகாப்பை குறைக்கும் காரணிகளுள் முக்கியமானவை, வேகமாக செல்லுதல், குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல், தலைக்கவசங்கள் அணியாது இருத்தல், இருக்கை பட்டைகள் அணியாது இருத்தல் போன்றவைகளாகும்.)

34) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) நட, நில், கவனி

B) நில், கவனி, நட

C) கவனி, நட, நில்

D) கவனி, நில், நட

(குறிப்பு – சாலை சந்திப்புகளில் பச்சை விளக்கு செல் என்பதை குறிக்கும். சிகப்பு விளக்கு நிற்க என்பதை குறிக்கும். மஞ்சள் விளக்கு மெதுவாக செல் என்பதை குறிக்கும். சாலை சந்திப்புகளில் காணப்படும் நடக்கும் மனிதன் சமிக்கை பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது.)

35) பாதசாரிகள் கடக்கும் பகுதி(Zebra Crossing) எந்த நிறத்தில் வரையப்பட்டிருக்கும்?

A) கருப்பு பட்டைகள்

B) வெள்ளை பட்டைகள்

C) கருப்பு வெள்ளை பட்டைகள்

D) மஞ்சள் பட்டைகள்

(குறிப்பு – சாலையை கடக்கும்போது பாதசாரிகள் கடக்கும் பகுதியில் கடக்க மாணவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நில் கவனி கடந்து செல் என்னும் கோட்பாட்டினை பாதசாரிகள் பின்பற்றுவதை உறுதி செய்வதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியும்.)

36) கீழ்காணும் எந்த சமயங்களில் வாகனங்கள் ஒலி எழுப்பக்கூடாது?

A) ஒரு வண்டியை கடக்கும்போது

B) திருப்பங்களில் வரும்பொழுது

C) ஆளில்லா சந்திப்புகளில்

D) சிவப்பு சிக்னல் போட்டிருக்கும்போது

(குறிப்பு – திருப்பங்களில் சாலையை கடக்கும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். இதற்கு கவனித்தல் மட்டுமே உதவிகரமாக இருக்கும். வாகனங்கள் பொதுவாக திருப்பங்களிலும், ஆளில்லா சந்திப்புகளிலும் ஒலி எழுப்பவேண்டும்.)

37) கீழ்க்கண்டவற்றுள் எதை செய்வதால் பாதசாரிகள் சாலை விபத்துகளை தவிர்க்க முடியும்?

I. சாலையில் அவசரமாக செல்லுதல்

II. நடைபாதையை பயன்படுத்துதல்

III. நில், கவனி, நட எனும் கோட்பாட்டை பின்பற்றுதல்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பாதசாரிகள் சாலையில் அவசரமாக செல்லக்கூடாது. வாகனம் இயக்கும் அவருக்கு பதற்றத்தை கொடுக்கும். பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்துதல் அவசியமாகும். பாதசாரிகள் சாலையின் குறுக்கே ஓடி செல்லுதல் தவிர்க்க வேண்டியதாகும்.)

38) கீழ்க்கண்டவற்றுள் எது தவறான செய்கையாகும்?

A) வாகனத்தில் வெளியே கை காட்டுதல்

B) வளைவுகளில் சாலையை கடத்தல்

C) சாலையில் வேகமாக ஓடுதல்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது, கை மற்றும் தலையை வெளியே நீட்டக் கூடாது. அதேபோல வாகனங்கள் திரும்பும் இடங்களில் சாலையை கடக்க கூடாது. வளைவுகள் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு கண்ணுக்கு தெரியாத பகுதியாகும். இவைகளை தவிர்ப்பதால் சாலை விபத்துகளை தவிர்க்க முடியும்.)

39) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பேருந்துகளின் முன் படிக்கட்டு வழியே இறங்க வேண்டும்.

II. வரிசையில் நின்று பேருந்தில் ஏறவும் இறங்கவும் வேண்டும்.

III. பேருந்தின் பின்னால் ஓடி சென்று ஏறக்கூடாது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பேருந்தை விட்டு இறங்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு குறிப்புகளை மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். பேருந்தின் பின்னால் ஓடி சென்று ஏறுவதை தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்தின் பின் பக்கமாக ஏறவேண்டும் மற்றும் முன்பக்கமாக இறங்க வேண்டும். வரிசையில் நின்று பேருந்தில் ஏறவும் இறங்கவும் வேண்டும்.)

40) Hyogo செயல் கட்டமைப்பு வரைபடம் எந்த ஆண்டு காலத்திற்கான பேரிடர் ஆபத்து குறைப்புகளை பற்றியதாகும்?

A) 2000 முதல் – 2020 வரையிலான

B) 2005 முதல் – 2015 வரையிலான

C) 2010 முதல் – 2020 வரையிலான

D) 2015 முதல் – 2025 வரையிலான

(குறிப்பு – உலகளவில் 2005-2015 வரையிலான காலத்தில் பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான முயற்சிகளை பற்றிய வரைபடம் Hyogo செயல் கட்டமைப்பு என்பதாகும். இது பேரிடர் ஆபத்துக்குறைப்பிற்கான ஊக்குவிக்கத்தக்க செயல்பாட்டு வழிகாட்டிகளை கொண்டது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!