Book Back QuestionsTnpsc

மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Book Back Questions 9th Social Science Lesson 26

9th Social Science Lesson 26

26] மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தலா வருமானம்: உலக வங்கியின் அறிக்கையின்படி, நாடுகளின் வருமான அளவீடுகள் கீழ்க்கண்டவாறு புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (2017-18).

நாடுகளின் வகைகள் தலா வருமானம் (அமெரிக்க டாலரில்)

1. குறைந்த வருவாய் < 1005

2. குறைந்த நடுத்தர வருவாய் 1006-3955

3. உயர் நடுத்தர வருவாய் 3956-12, 235

4. உயர்ந்த வருவாய் >12, 235

ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென்மாநிலங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசியச் சராசரியை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவின் மிக உயர்ந்ததாகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி: தமிழ்நாடு குறைந்த காலகட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய சில மாநிலங்களுள் ஒன்று ஆகும். வறுமை, அடிப்படை வசதி, சமத்துவமின்மை போன்ற மிக மோசமான நிலையிலிருந்து மிக வேகமாகத் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது. தற்காலத்தில் தமிழ்நாடு துணிச்சலான சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்தது. அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொதுப்போக்குவரத்து, குடிநீர் வசதி, மின் இணைப்பு வழங்கல் போன்றப் பல திட்டங்களைக் குறிப்பிடலாம்.

பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் இன்று சிறப்பான பொதுச் சேவைகள் உள்ளது. அந்தச் சேவைகளில் பெரும்பாலானவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். வளர்ச்சிப் பாதையை பொறுத்தவரை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களிடையே பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இறுதியாக ஒரு முக்கியமான ஒன்று: மனிதத் திறன்களைப் பயன்படுத்தாமல் இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முயன்ற பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிட மனிதத் திறன்களை பயன்படுத்திய தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகமாகும் வறுமை நிலையும் பெரும்பாலான மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாகும் பொருளாதார வளர்ச்சியானது சமூக நலத் திட்டங்களை சாத்தியப்படுத்திப் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் ஆதரவும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படுவதே முக்கியமான காரணம் ஆகும்.

I. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

காரணம் (R): மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

2. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.

(அ) ஏழை மக்கள் மீதான முதலீடு

(ஆ) வேளாண்மை மீதான செலவு

(இ) சொத்துக்கள் மீதான முதலீடு

(ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

3. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.

(அ) வளர்ச்சி

(ஆ) வருமானம்

(இ) செலவீனம்

(ஈ) சேமிப்புகள்

4. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.

(அ) மொத்த நிகர உற்பத்தி

(ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி

(இ) நிகர தேசிய உற்பத்தி

(ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி

5. ————— வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.

(அ) சராசரி

(ஆ) மொத்த

(இ) மக்கள்

(ஈ) மாத

6. ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று.

(அ) ஜப்பான்

(ஆ) கனடா

(இ) ரஷ்யா

(ஈ) இந்தியா

7. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

(இ) இந்தியா

(ஆ) பாகிஸ்தான்

(இ) சீனா

(ஈ) பூடான்

8. கூற்று (A): நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.

காரணம் (R): இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

9. கூற்று (A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.

காரணம் (R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

10. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

(அ) பாலினம்

(ஆ) உடல்நலம்

(இ) கல்வி

(ஈ) வருமானம்

11. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

(அ) ஆந்திரபிரதேசம்

(ஆ) உத்திரபிரதேசம்

(இ) தமிழ்நாடு

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

12. பாலின விகிதம் என்பது

(அ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்

(ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்

(இ) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு

(ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

13. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

(அ) தொழிற்சாலை

(ஆ) பொருளாதார மேம்பாடு

(இ) நிலையான மேம்பாடு

(ஈ) பொருளாதார வளர்ச்சி

14. பொருந்தாத ஒன்றை கண்டறி:

(அ) சூரிய ஆற்றல்

(ஆ) காற்று ஆற்றல்

(இ) காகிதம்

(ஈ) இயற்கை வாயு

15. இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்

(அ) தமிழ்நாடு

(ஆ) மேற்கு வங்காளம்

(இ) கேரளா

(ஈ) ஆந்திரப் பிரதேசம்

16. பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்

(அ) இயற்கை

(ஆ) புதுப்பிக்க இயலும் வளம்

(இ) புதுப்பிக்க இயலாத வளம்

(ஈ) புதியவை

17. அனல் மின் நிலையம் அதிக அளவிளான ————- வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

(அ) ஆக்சிஜன்

(ஆ) நைட்ரஜன்

(இ) கார்பன்

(ஈ) கார்பன்-டை-ஆக்சைடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ————- என்று அறியப்படும்.

2. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் —————-

3. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ————–

4. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ————–

5. நிலத்தடி நீர் என்பது ————– வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்.

6. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ——————

III. பொருத்துக:

1. மேம்பாடு – அ] வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

2. மனித வளம் – ஆ] புதுப்பிக்க தக்க வளங்கள்

3. சூரிய சக்தி – இ] தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

4. 1972 – ஈ] கல்வி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 2. ஒட்டு மொத்த மக்களின் திறமை, 3. வருமானம், 4. நிகர தேசிய உற்பத்தி, 5. சராசரி, 6. இந்தியா, 7. சீனா, 8. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 9. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 10. பாலினம், 11. தமிழ்நாடு, 12. ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம், 13. நிலையான மேம்பாடு, 14. இயற்கை வாயு, 15. தமிழ்நாடு, 16. புதுப்பிக்க இயலாத வளம், 17. கார்பன்-டை-ஆக்சைடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பொருளாதார மேம்பாடு, 2. புதுடெல்லி, 3. கேரளா, 4. வளர்ச்சித்திட்டம், 5. புதுப்பிக்கத்தகுந்த, 6. அமர்தியாசென்

III. பொருத்துக:

1. 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!