TnpscTnpsc Current Affairs

11th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

11th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த மாநிலத்தின் நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் டாலர் கடனுதவி செய்ய ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?

அ) தமிழ்நாடு 

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) கர்நாடகா

ஈ) கேரளா

 • சென்னை – கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகையில் நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக $251 மில்லியன் டாலர் கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் இப்பகுதியில் காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய நகர்ப்புற வெள்ளப் பாதுகாப்பு உட் கட்டமைப்பை நிறுவும். இது 588 கிமீ நீள புதிய மழைநீர் வடிகால்களை அமைக்கும். மேலும், 175 கிமீ மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் அல்லது மாற்றியமைக்கும். சென்னையின் விரைவான நகரமயமாக்கல், அதனை பரவலான வெள்ளத்தால் பாதிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளது.

2. ‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2021’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) IMF

ஆ) உலக வங்கி

இ) UNCTAD 

ஈ) WTO

 • டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2021’ஐ ஐநா’இன் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு (UNCTAD) வெளியிட்டது. இந்த அறிக்கை வளர்ந்து வரும் எல்லைதாண்டிய தரவுப்பாய்வுகளின் தாக்கங்களை ஆராய்கிறது. தரவுப்பாய்வுகளிலிருந்து ஆதாயங்களை சமமாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தரவு மற்றும் தரவுப் பாய்வுகளை நிர்வகிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளையும் இந்த அறிக்கை வரவேற்கிறது.

3. “மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமு -றைகள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) எய்ம்ஸ்

ஆ) NITI ஆயோக் 

இ) ஐஎம்ஏ

ஈ) உலக வங்கி

 • NITI ஆயோக் சமீபத்தில் ‘மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறனில் சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் இந்தியாவின் மாவட்ட மருத்துவமனைகளின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் WHO இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
 • இந்த மதிப்பீட்டு கட்டமைப்பில், 10 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் இடம்பெற்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி -லும் உள்ள மொத்த 707 மாவட்ட மருத்துவமனைகள் மதிப்பீட்டில் பங்கேற்றன. 2017–18ஆம் ஆண்டிற்கான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் தரவு இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்ட மருத்துவமனைகள் சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன.

4. ‘சாச்சா சௌத்ரி’ என்பது இந்தியாவில் எத்திட்டத்தின் முகப்பமாக (mascot) அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) தூய்மை இந்தியா 2.0

ஆ) சௌபாக்யா

இ) நமாமி கங்கே திட்டம் 

ஈ) பிரதமர் உஜ்வாலா யோஜனா

 • நமாமி கங்கே திட்டத்தின் முகப்பமாக பிரபல காமிக் புத்தக கதாபாத்திரமான ‘சாச்சா சௌத்ரி’ அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தூய்மை கங்கை இயக்கம் அறிவித்தது. கங்கை மற்றும் பிற ஆறுகளை தூய்மைப்படுத்துவதுபற்றி குழந்தைகள் மற்றும் இளையோருக்கு உணர்த்துவதற்கு இந்தப் பாத்திரம் பயன்படுத்தப்படும்.
 • ‘கங்கா கி பாத், சாச்சா சௌத்ரி கே சாத்’ என்பது நமாமி கங்கே பணியின் பொதுச்செயல்பாடுகளின்கீழ் ஒரு பொது ஈடுபாட்டு நடவடிக்கையாகும்.

5. “பால ரக்ஷா கிட்” என்பது எந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்தாகும்?

அ) AIIMS

ஆ) IIT பாம்பே

இ) AIIA 

ஈ) DRDO

 • அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனமானது (AIIA), மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ், “பால ரக்ஷா கிட்” என்ற குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்தை உருவாக்கியுள்ளது. இதை 16 வயது வரையுள்ள குழந்தைகள் உட்கொள்ளலாம். COVID நோய்க்கான தடுப்பூசி கிடைக்கும் வரை குழந்தைகள் இதை பயன்படுத்தலாம். தேசிய ஆயுர்வேத நாளன்று (நவ.2) 10,000 பால ரக்ஷா மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

6. “அத்தியாவசிய மருந்துகளின் மாதிரி பட்டியலை” வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) AIIMS

ஆ) IMA

இ) WHO 

ஈ) FAO

 • உலக நலவாழ்வு அமைப்பானது அண்மையில், “குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் மாதிரி பட்டியல்களின்” அண்மைய பதிப்பை வெளியிட்டது. இப்புதிய பட்டியலில் நீரழிவு & புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
 • புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு உதவும் புதிய மருந்துகள் மற்றும் தீவிர பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

7. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரம் எப்போது அனுசரிக்கப்பட்டது?

அ) அக்.1 முதல் அக்.5, 2021 வரை

ஆ) அக்.2 முதல் அக்.7, 2021 வரை

இ) அக்.10 முதல் அக்.17, 2021 வரை

ஈ) அக்.5 முதல் அக்.10, 2021 வரை 

 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது அக்.5-10, 2021 வரை மனநல விழிப்புணர்வு பிரச்சார வாரமாக கடைபிடித்தது. இது, அக். 10 உலக மனநல நாளின் ஒருபகுதியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் ஒருபகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மான்சுக் மாண்டவியா, UNICEF’இன் உலக குழந்தைகள் அறிக்கையையும் வெளியிட்டார்.

8. பின்வரும் எந்த இந்திய நகரத்தில் “ஆசாதி@75 – புதிய நகர்ப்புற இந்தியா” என்ற மாநாடு தொடங்கப்பட்டது?

அ) மும்பை

ஆ) புது தில்லி

இ) வாரணாசி

ஈ) லக்னோ 

 • இந்தியப் பிரதமர் மோடி, “ஆசாதி@75 – புதிய நகர்ப்புற இந்தியா” என்ற ஒரு நகர்ப்புற மாநாடு & கண்காட்சியை லக்னோவில் தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்வின்போது, பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் அமைந்துள்ள 75,000 பயனாளிகளுக்கு, பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) வீடுகளின் சாவியை டிஜிட்டல் முறையில் வழங்கினார்.

9. தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின் தலைமையகம் உள்ள இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) ஔரங்காபாத்

ஈ) கொல்கத்தா

 • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும். வாரியத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகர் பகுதியில் இருக்க வேண்டும்.
 • இந்தியாவில் மற்ற இடங்களில் அலுவலகங்களை வாரியம் நிறுவலாம். மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய தலைவர் மற்றும் 3 பேருக்கு குறையாமல் 7 பேருக்கு மிகாமல் உறுப்பினர்கள் வாரியத்தில் இருக்க வேண்டும்.

10. விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டம் என்பது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டமாகும்?

அ) MSME அமைச்சகம்

ஆ) ஜவுளி அமைச்சகம் 

இ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

 • விரிவான கைவினைப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தை `160 கோடி மதிப்பீட்டில் தொடர ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2026 மார்ச் வரை இத்திட்டம் தொடரும். கைவினைஞர்களுக்கு உட்கட் -டமைப்பு ஆதரவு, சந்தை அணுகல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆதரவு போன்றவை இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சாா்பில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை கனிமொழி எம்பி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, நாகரிகம், வணிகம் ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியவர்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் என்பது நாட்டிலேயே முதல் முதலாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் களமாகும். இங்கு, முதன்முறையாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜாகோர் கடந்த 1876’இல் அகழாய்வுகள் மேற்கொண்டார். பின்னர் கடந்த 1896, 1904ஆம் ஆண்டில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அக்காலக்கட்டத்தில் அலெக்சாண்டர் ரெயா என்பவர் ஆயிரக்கணக்கான தொல்பொருள்களை கண்டெடுத்துள்ளார். இதில், முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்புக்கருவிகள், ஆயுதங்கள், வெண்கலப்பொருள் -கள், பழங்கால மனிதர்களின் எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள் -கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர், 2004’இல் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அலுவலரர் சத்தியமூர்த்தி தலைமையில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழ் ஆய்வுப்பணிகள் நடைபெற்றன. இதன் ஆய்வு முடிவுகள் வரலாற்று ஆர்வலர்களின் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. எனினும் முழுமையான ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால பொருள்களை கொண்டுவர வேண்டும் எனவும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனரர்.

சுமார் 114 ஏக்கர் பரப்பளவிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளத்தில் பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டு சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துகளுடன் கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக தொல்லியல்துறை சார்பில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020இல் நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

2. ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி திருவள்ளூர் கோலப்பன்சேரியில் ‘சங்கல்ப்’ சிறப்பு குழந்தைகள் பள்ளி – முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் கோலப்பன்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சங்கல்ப்’ சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியை முதல்வர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் அமைக்கப்பட்டுள்ள ‘சங்கல்ப்’ சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை, சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். ‘சங்கல்ப்’ பள்ளி 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக -ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், இப்புதிய ‘சங்கல்ப்’ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைக -ளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப்பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்தும் வகையில் தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேட்டா என்ட்ரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. அக்டோபர்.10 – உலக மனநல நாள்

கருப்பொருள்: சமத்துவமற்ற உலகில் மனநலம் பேணுதல்.

4. இந்தியா-டென்மார்க் நான்கு ஒப்பந்தங்கள்: சுகாதாரம், வேளாண் துறைகளில் உறவை வலுப்படுத்த முடிவு

சுகாதாரம், வேளாண்மை, நீர்மேலாண்மை, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே
-யான உறவை மேலும் விரிவுபடுத்த இந்தியாவும், டென்மார்க்கும் முடிவு செய்துள்ளன. இந்தியா வந்துள்ள அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரட்ரிக்சென் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய 4 ஒப்பந்தங்கள் என்னென்ன?

இந்தியா – டென்மார்க் இடையே கையெழுத்தான 4 ஒப்பந்தங்களில், நிலத்தடி நீர் வளங்கள் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐதராபாதில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டென்மார்க் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு அமைப்பு ஆகியவை இடையே கையெ -ழுத்தானது.

பாரம்பரிய அறிவு எண்ம (டிஜிட்டல்) நூலக அணுகல் குறித்த ஒப்பந்தம் CISR மற்றும் டென்மார்க் காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் இடையே கையெழுத்தானது. கோடைக் காலங்களில் இயற்கை குளிர் பதன சீர்மிகு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், டான்போஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது.

திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக இந்தியா-டென்மார்க் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக செயலாளர் ராஜேஷ் அகர்வால், டென்மார்க் தூதர் ப்ரெடி ஸ்வானே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

5. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 30 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

ISSF ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி 13 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் முப்பது பதக்கங்களுடன் முதலிடம் பெற்றுள்ளது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக ஆடவர் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வலா, ஆதர்ஷ் சிங், விஜயவீர் சித்து ஆகியோா் அடங்கிய அணி 10-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனியின் பேபியன், பெலிக்ஸ், டோபியாஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

மேலும் ஜூனியர் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் மான்வி சோனி (105), சக வீராங்கனைகள் ஏஷயா (90) ஹிடாஷா (76) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலங்களை வென்றனர். ஆடவர் டபுள் டிராப் பிரிவில் வினய் பிரதாப் சிங் 120 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சேஜா ப்ரீத் சிங் 114 புள்ளிகளுடன் வெள்ளியையும், மயங்க் ஷோகின் 111 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் வென்றனர்.

கலப்பு 50 மீ ரைபிள் 3 பிரிவில் இந்தியாவின் ஆயுஷி பொடர், பிரதாப் சிங் டோமர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்வான், விஜய்வீர் சித்து 9-1 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து அணியை வென்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் தேஜஸ்வினி-அனிஷ் இணை வெண்கலம் வென்றது.

ஒட்டுமொத்தமாக 13 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது.

6. நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம்: பணியாளர், சட்ட விவகார குழுவின் தலைவராக சுஷில் மோடி நியமனம்

தேசநலன்சார்ந்த விஷயங்கள், சர்ச்சைக்குரிய மசோதாக்கள் போன்றவ -ற்றை ஆய்வுசெய்து ஒன்றிய அரசுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கும் முக்கிய பணியை நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பர்மாதம் இக்குழுக்கள் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 24 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் மாற்றம் செய்து மாநிலங்களவை தலைமைச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. இதில், பணியாளர், சட்டத்துறை நிலைக்குழுவின் தலைவராக சுஷில்குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான அறிக்கை அளிக்கும் முக்கிய குழுவாகும். பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரான சுஷில் குமாருக்கு அமைச்சரவையில் இடம்தரப்படாததால், முக்கியமான இக்குழுவின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

7. மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரத்தை – ‘உரம்’ என்ற பிராண்டில் விற்பனை:

சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம், சுமார் 1,750 டன் அளவில் கையிருப்பில் உள்ளது. அதை ‘உரம்’ என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்வதற்காக மத்திய அரசு, தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன்மூலம் நிதி ஒதுக்கி வருகிறது. சென்னையில் தினமும் சராசரியாக 5,200 டன் குப்பைகள் உருவாகின்றன. இதுநாள் வரை அவை அனைத்தும் அப்படியே கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வந்தன. அதனால் அப்பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை -கள் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயு தயாரிக்கவும் பயன்படுத்தப் -பட்டு வருகிறது.

மக்காத குப்பைகளில் உள்ள உலோகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாநகராட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பைகளின் அளவு தினமும் 1,000 டன்னுக்கு மேல் குறைந்துள்ளது. மேலும், மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரங்களுக்கு பிராண்ட் பெயர் உருவாக்கி, அதை விவசாயிகளுக்கு விற்க வேளாண் துறையில் அனுபவம் பெற்ற மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் 160 அமைவிடங்களில் செயல்படும் 208 மையங்களில், மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கு -ம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தில் தினமும் 583 டன் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படு -கின்றன. இவை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் மாநகரப் பகுதியில் மரக்கன்றுகள் நடவும், நகர்ப்புற அடர் வனங்கள் அமைக்கவும் பயன்படு -த்தப்பட்டு வருகின்றன.

தற்போது மாநகராட்சியிடம் 1,750 டன் இயற்கை உரங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விற்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஏற்பாடு செய்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில் மாநகராட்சியின் இயற்கை உரத்துக்கு ‘உரம்’ என்ற பிராண்ட் பெயர் வைக்கப்பட்டு, எழுத் -துருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி உற்பத்தி செய்யும் இயற்கை உரம் இந்தப் பெயரில்தான் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

8. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தையாக மாறிய அப்துல் காதிர் கான் காலமானார்

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் “அணு ஆயுதத்தின் தந்தை” எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் (85) காலமானார்.

9. முத்திரை பதிக்காத முத்ரா திட்டம்!

கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ‘முத்ரா’ (சிறு தொழில்கள் மேம்பாடு – கடனளிப்பு நிறுவனம்) தொடங்கியபோது நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் தங்கள் வாழ்வுக்கான ஒளி விளக்கு ஏற்றப்பட்டுள்ளதாகக் கருதினர். ‘பிரதமர் முத்ரா’ திட்டம் மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அரசு மகிழ்ச்சியுடன் கூறுகிறது.

இத்திட்டம் 31 கோடி பேருக்கு உதவியுள்ளதாகவும் (இந்த எண்ணிக்கை ஏறக்குறைய அமெரிக்க மக்கள்தொகைக்கு இணையானது; கனடா மக்கள்தொகையைவிட எட்டு மடங்கு அதிகம்) இத்திட்டத்தில் `15.86 இலட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தத் தொகை நியூஸிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) இணையானது. இது தவிர உலகின் வெவ்வேறு 160 நாடுகளின் ஜிடிபி-யைவிட அதிகமானது. இக்கடன் அனைத்தும் 2015 ஏப்ரல் முதல் 2021 செப்.10ஆம் தேதி வரை (சுமார் ஆறு ஆண்டுகளில்) அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறம், நகர்ப்புறங்களில் சிறிய அளவில் தொழில், வர்த்தகம் நடத்துவோருக்கு அதிக கெடுபிடிகள் இல்லாமல் `10 இலட்சம் வரை கடன் அளிக்கப்படும் என்பதே ‘முத்ரா’ திட்டத்தின் அடிப்படை. எவ்வித அடமானமும் இன்றி இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

இதில் சிஷு பிரிவின் கீழ் `50,000 வரை, கிஷோர் பிரிவின்கீழ் `50,000 முதல் `5,00,000 இலட்சம் வரை, தருண் பிரிவின் கீழ் `5,00,000 முதல் `10,00,000 இலட்சம் வரை என மூன்று வகை திட்டங்கள் இதில் உள்ளன. இதில் சிஷு கடன் திட்டத்துக்கு ஒரு பக்கம் மட்டுமே விண்ணப்பம் இருக்கும். மற்ற இரு கடன் திட்டங்களுக்கும் மூன்று பக்கங்கள் மட்டுமே கடன் விண்ணப்பம். இதன் மூலம் கடன் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டது.

இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உண்மையான களநிலவரம் அதனுடன் ஒத்துப் போகிா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு முன்பு முத்ரா திட்டத்தின் தேவை பற்றியும் அது உருவாக்கப்பட்ட விதம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 2015 மார்ச் மாதத்தில், நிறுவனங்க -ள் சட்டம் 2013’இன்கீழ் முத்ரா ஒரு நிறுவனமாக தொடங்கப்பட்டது. மேலும், இது இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) துணை நிறுவனமாகும். தொடர்ந்து 2015 ஏப்ரல் 7ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கி சாராநிதி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

அதற்கு அடுத்த நாளில் (2015 ஏப்ரல் 8) பிரதமர் மோடி ‘பிரதமர் முத்ரா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் `1,000 கோடி என்றும் செயல்பாட்டு மூலதனம் `750 கோடி என்று அறிவிப்பு வெளியானது. முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் அது நேரடியாகக் கடன் வழங்காது. அதே நேரத்தில் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது. மேலும், தெளிவாக விளக்குவதென்றால் வங்கிகள் சிறு தொழில்களுக்குக் கடன் அளிக்கின்றன. அதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா அளிக்கிறது.

வங்கிகள்மூலம் கடனளித்து சிறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்; சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதை எளிதாக்க வேண்டும் என்பவையே முத்ரா திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராப்புற வங்கிகள், சிறுகடன் வங்கிகள், உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகள், சிறுகடன் நிறுவனங்கள், வங்கி சாரா கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்குகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தில் சிறுதொழில்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் அவற்றுக்குத் தேவையான நிதியாதாரத்தை, கடன் மூலம் அளிக்க முத்ரா கடன் திட்டம் போன்றவை அவசியம் என்று அறியப்படுகிறது. ஏனெனில், நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்து சிறு, குறு தொழில்களே பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியப் படிநிலையாக உள்ளன. சிறு, குறு தொழில்கள் 11 கோடிக்கு மேற்பட்டோருக்கு நேரடியாகப் பணி வாய்ப்பு அளிக்கின்றன. மேலும், அதன் இதர படிநிலைகள் மூலம் மேலும் சுமார் 11 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 55 கோடி மக்களின் வாழ்க்கைக்கு உதவுவதாக உள்ளது. மேலும், சிறு, குறு தொழில் புரிபவர்களில் 97 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களாக உள்ளனர்.

நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கையில் (GVA) சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 33 சதவீதமாகும். நாட்டின் ஏற்றுமதியில் சிறு, குறு நிறுவன உற்பத்திப் பொருள்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 2018-19 நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதியில் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு 48.10 சதவீதம் என அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

குறுந்தொழில் நிறுவனங்களில் 54 சதவீதம் கிராமப்புறங்களில்தான் செயல்படுகின்றன. உற்பத்தி, உற்பத்திக்கு தயாா்படுத்துதல், வர்த்தகம், வியாபாரிகளுக்கான சேவைகளை அளித்தல், பழங்கள், காய்கறி விற்பனையாளர், இயந்திரப்பணியாளர்கள், கைவினைக் கலைஞர்கள், குடிசைத்தொழில்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த 54 சதவீதத்தில் அடங்குவர். இவற்றில் பல தொழில்கள் ஒருவரால் மட்டுமே, ஓரிடத்தில் மட்டுமே நடத்தப்படுபவையாக இருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தபோதும் சிறுதொழிகளுக்கு கடனுதவி முறையாகக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. சிறுதொழில்கள் செய்வோர் கடன் வழங்கும் தனிநபர்களை நம்பியே உள்ளனர். இத் துறையின் அளவுக்கு ஏற்ப வங்கிக் கடன் வழங்கப்படுவதில்லை.

‘இந்தியாவில் சிறு, குறு தொழில்களுக்கான மொத்த கடன் தேவை `3.7 இலட்சம் கோடியாக உள்ளது. ஆனால், `1.45 இலட்சம் கோடி வரை மட்டுமே வங்கி போன்ற அமைப்புகள் மூலம் கடன் அளிக்கப்படுகின்றன. சிறு, குறு நிறுவனங்களுக்கு `2 இலட்சம் முதல் 2.5 இலட்சம் கோடி வரை கடன் கிடைக்காத நிலை உள்ளது.

மேலும், இப்போது நமது பொருளாதாரக் கொள்கைகள் சிறு, குறு தொழில்களுக்கு தேவையான கடன்களைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை. இந்த விவகாரத்தில் நவீன அணுகுமுறை தேவை. இல்லையென்றால் தேவையான வளர்ச்சியை நாம் எட்டமுடியாது’ என ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு (யுகே சின்ஹா குழு-2019) கூறியுள்ளது.

சிறு, குறு நிறுவனங்கள் தரப்பிலும் பிரச்னை உள்ளது. அவர்கள் நிறுவனங்களைப் பதிவு செய்வதுமில்லை, முறையாக கணக்கு விவரங்களைப் பேணுவதுமில்லை. இதன் காரணமாகவே வங்கிகள் அவர்களுக்குக் கடனளிக்கத் தயங்குகின்றன. இப்பிரச்னைகளுக்கெல்
-லாம் தீர்வாக இருக்கும் என்றே முத்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக தரப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் நிச்சயமாக கிராம, நகர்ப்புறங்களில் சிறு தொழில் நடத்தும் சாமானியர்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. அதாவது, உணவு பரிமாறியதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு அவர் உண்ணக் கூடியதாக, போதுமானதாக இருந்தது என்பதே கேள்வி.

சிறுதொழில் செய்வோர் போதுமான அளவு குறைந்த வட்டியில் கடன் பெற முடியவில்லை. எவ்வித அடமானமும் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற இந்தத் திட்டம் போதுமான அளவு விளப்பரப்படுத்தப்படவுமில்லை.

அரசு கூறும் புள்ளிவிவரங்கள் எப்போதும் முரண்பாடாகவே உள்ளன. முத்ரா திட்டத்தில் 31,02,82,823 பேருக்கு `15,86,081.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சராசரியாக ஒரு நபருக்கு `51,117 வழங்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் பெரும்பாலானவர்களுக்கு `50,000 வரையிலான சிஷு பிரிவில் மட்டும்தான் கடன் கிடைத்துள்ளது. `10 இலட்சம் வரை கடன் பெறுவது என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இரண்டாவதாக, முத்ரா திட்டத்துக்கு முன்பும் குறுந்தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்கியே வந்தன. எனவே, அவர்கள் விவசாயம் அல்லாத அனைத்துக் கடன்களையும் முத்ரா திட்டக் கடன்கள் என்ற பெயரிலேயே முத்திரை குத்தலாம். இதுவே, இந்த புள்ளிவிவரத்தில் எதிரொலித்துள்ளது. மூன்றாவதாக, வங்கிகள் முத்ரா கடன்களுக்கும் அடமானம் கோரியதாக பரவலாக புகார்கள் உள்ளன.

இதன் மூலம் முத்ரா என்பது பிணையில்லாக் கடன் திட்டம் என்பது பொய்த்துப் போனது. மேலும், முத்ரா கடனுக்கு எவ்விதக் குறிப்பிட்ட வட்டி விகிதமும் பரிந்துரைக்கப்படவில்லை. வழக்கம்போல RBI விதிகளுக்கு உட்பட்ட நியாயமான வட்டி விகிதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன. எனவே, முத்ரா திட்டத்தில் குறைவான வட்டி விகிதம் என்பதும் சாத்தியமில்லாமல் போனது.

இவை அனைத்தையும் ஆய்வு செய்து பார்க்கும்போது, முத்ரா திட்டத்தில் கிடைத்த பலன்கள் என்று அரசால் கூறப்படுவது மிகவும் மிகைப்படுத்தப் -பட்டவை என்பது தெளிவாகிறது. முத்ரா திட்டத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது. குறுந் தொழில்களுக்குக் கடன் கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவை தீா்க்கப்பட வேண்டும். அதைவிடுத்து, ‘முத்ரா’ போன்று பெயரளவில் மட்டுமே புதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவது அரைத்த மாவையே அரைப்பத -ற்கு ஒப்பாகுமே தவிர, பிரச்னைக்கு சரியான தீர்வாக அமையாது.

1. The Asian Development Bank has approved a $251 million loan for urban flood protection and management in which state?

A) Tamil Nadu 

B) Andhra Pradesh

C) Karnataka

D) Kerala

 • The Asian Development Bank (ADB) has approved a $251 million loan for urban flood protection and management in the Chennai–Kosasthalaiyar river basin in the state of Tamil Nadu. The project will establish climate–resilient urban flood protection infrastructure in the region.
 • It will construct 588 kilometers of new stormwater drains, rehabilitate or replace 175 km of stormwater drains among others. Chennai’s rapid urbanization has made the city vulnerable to widespread flooding.

2. Which institution released a report titled ‘Digital Economy Report 2021’?

A) IMF

B) World Bank

C) UNCTAD 

D) WTO

 • Digital Economy Report 2021 was released by the United Nations Conference on Trade and Development (UNCTAD).
 • The report examines the implications of growing cross–border data flows, especially for developing countries. The Report also calls for innovative approaches to govern data and data flows to ensure equitable distribution of the gains from data flows.

3. Which institution released the report titled “Best Practices in the Performance of District Hospitals”?

A) AIIMS

B) NITI Aayog 

C) IMA

D) World Bank

 • NITI Aayog recently released a performance assessment report of district hospitals in India, titled Best Practices in the Performance of District Hospitals. The report is made with collaboration with the Ministry of Health and Family Welfare and WHO India.
 • The assessment framework covers 10 Key Performance Indicators and a total of 707 district hospitals across all States and UTs participated in the assessment. The Health Management Information System (HMIS) data for the year 2017–18 was used as baseline. 75 district hospitals across 24 States and UTs emerged as top performers.

4. ‘Chacha Chaudhary’ has been declared as the mascot of which programme in India?

A) Swachh Bharat 2.0

B) SAUBHAGYA

C) Namami Gange Programme 

D) PM Ujjwala Yojana

 • National Mission for Clean Ganga (NMCG) announced that Chacha Chaudhary, the popular comic book character, has been declared as a mascot of Namami Gange Programme.
 • The character would be used for sensitising children and youths about the cleaning of Ganga and other rivers. ‘Ganga ki Baat, Chacha Choudhary Ke Sath’ is a public engagement activity under the public outreach activities of Namami Gange mission.”

5. “Bal Raksha Kit” is an immunity boosting medicine developed by which organisation?

A) AIIMS

B) IIT Bombay

C) AIIA 

D) DRDO

 • The All–India Institute of Ayurveda (AIIA), under the aegis Union Ayush Ministry has developed an immunity booster kit for children named “Bal Raksha Kit”, which can be consumed by children upto the age of 16 years. This can be undertaken by the children till the time vaccine is available for COVID 19 disease.
 • The Ministry has planned that, on National Ayurveda Day (November 2), 10,000 Bal Raksha kits would be distributed free–of–cost.

6. Which organization publishes the “Model Lists of Essential Medicines”?

A) AIIMS

B) IMA

C) WHO 

D) FAO

 • The World Health Organisation (WHO) has recently published the latest edition of “Model Lists of Essential Medicines and Essential Medicines for Children”. The new list has prioritized access to diabetes and cancer treatments. The list has included new medicines to assist people who want to stop smoking and new antimicrobials to treat serious bacterial and fungal infections.

7. When is the Mental Health Awareness Campaign Week observed by the Union Ministry of Health and Family Welfare?

A) October 1 to October 5, 2021

B) October 2 to October 7, 2021

C) October 10 to October 17, 2021

D) October 5 to October 10, 2021 

 • The Union Ministry of Health and Family Welfare is observing October 5 to October 10, 2021 as Mental Health Awareness Campaign Week, as a part of the World Mental health Day celebration on October 10.
 • This week is observed to raise awareness about mental health and mobilize support in this regard. As a part of this initiative, the Union Health Minister Mansukh Mandaviya also released the UNICEF’s State of the World’s Children Report.

8. “Azadi@75 – New Urban India” – the Urban conclave was inaugurated in which city?

A) Mumbai

B) New Delhi

C) Varanasi

D) Lucknow 

 • The Prime Minister of India Shri. Narendra Modi has inaugurated the “Azadi@75 – New Urban India” – an urban conclave cum expo at Lucknow. During the inaugural event, the PM handed over digitally the keys of Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY–U) houses to 75,000 beneficiaries located in 75 districts of Uttar Pradesh.

9. The Headquarters of the ‘National Road Safety Board’ is in which Indian city?

A) Mumbai

B) New Delhi 

C) Aurangabad

D) Kolkata

 • The Ministry of Road Transport & Highways has notified the constitution of National Road Safety Board. The Board will be responsible for promoting road safety, innovation and adoption of new technology, and regulation of traffic and motor vehicles.
 • The Head Office of the Board in the National Capital Region and the board may set up offices at other places in India. It shall consist of the Chairman and not three to seven Members, to be appointed by the Central Government.

10. Comprehensive Handicrafts Cluster Development Scheme (CHCDS) is a scheme of which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Textiles 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Rural Development

 • The Ministry of Textiles has approved continuation of Comprehensive Handicrafts Cluster Development Scheme (CHCDS) with a total outlay of ₹160 crore. The scheme will now continue up to March 2026. Under the scheme, infrastructural support, market access, design and technology up–gradation support are provided to handicraft artisans.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button