Tnpsc

23rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலக நலவாழ்வு அமைப்பின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் ____ மில்லியன் மக்கள் உணவுமூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அ) 250

ஆ) 350

இ) 600

ஈ) 750

  • உலக நலவாழ்வு அமைப்பு உணவுமூலம் பரவும் நோய்களின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு உதவும் ஒரு கையேட்டை வெளியிட்டது.
  • சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துதற்கு உதவும் தரவு இடைவெளிகளைக் கண்டறிவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுமூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 0.12 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறார்கள் பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதால் மரணிக்கின்றனர் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

2. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக்கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோவிஃபைண்ட் (CoviFind) என்பது ____?

அ) விரைவான பிறபொருளெதிரியாக்கி பரிசோதனை

ஆ) RT-PCR பரிசோதனை

இ) ஊனீரியல் பரிசோதனை

ஈ) குருதிப்பரிசோதனை

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது அண்மையில் மெட்வெக் நிறு -வனத்தின் தன்பயன்பாட்டு COVID-19 விரைவான பிறபொருளெதிரியாக்கி பரிசோதனையான CoviFind’க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உள்நாட்டிலேயே ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இப்பரிசோத -னையின்மூலம், SARS-CoV-2 வைரஸை பதினைந்து நிமிடங்களுக் -குள் விரைவாக கண்டறிய முடியும்.

3. பின்வரும் எந்தப் பதவிக்கு, அண்மையில், மகேஷ்குமார் ஜெயின் மீண்டும் நியமிக்கப்பட்டார்?

அ) ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்

ஆ) SEBI தலைவர்

இ) NABARD தலைவர்

ஈ) SBI தலைவர்

  • துணை ஆளுநர் மகேஷ்குமார் ஜெயின் பதவிக்காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. M K ஜெயின், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம், மூன்றாண்டுகளுக்கு துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக பணியாற்றும் மற்ற மூன்று பேர் – மைக்கேல் பத்ரா, M ராஜேஸ்வர் ராவ் மற்றும் T இரவிசங்கர்.

4. தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது எந்த மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) பீகார்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • அஸ்ஸாம் மாநிலத்தின் தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது அஸ்ஸாம் மாநிலத்தின் ஏழாவது தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், ரைமோனா, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்திற்குப்பின் (11), நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேசியப்பூங்காக்களைக்கொண்ட மாநிலம் அசாம். அந்தமான் மற்றும் நிகோபார் 9 தேசியப்பூங்காக்களைக் கொண்டுள்ளது.

5. சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடு, பின்வரும் எந்தக் கோளின் துணைக்கோளாகும்?

அ) சனி

ஆ) வியாழன்

இ) புதன்

ஈ) வெள்ளி

  • NASA’இன் ஜூனோ விண்கலமானது சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடை பார்வையிட்டது. அது வியாழன்கோளின் துணைக் கோளும் சூரியக்குடும்பத்தில் ஒன்பதாவது மிகப்பெரிய வான்பொருளும் ஆகும். இந்த ஆய்வுக்கலம் கனிமீடின் உயர்தெளிவுத்திறன்கொண்ட நிழற்படங்களை எடுத்துள்ளது. இந்த நிழற்படங்கள், கனிமீடின் பள்ளம் மற்றும் மேற்பரப்பு அம்சங்களை அடையாளங்காண உதவக்கூடும்.

6. பெரும்பாலும் ‘மூன்றாம் துருவம்’ என அழைக்கப்படுகிற மலைத் தொடர் எது?

அ) ஹிந்துகுஷ் இமயமலை மலைத்தொடர்

ஆ) மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

இ) கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

ஈ) ஆரவல்லி மலைத்தொடர்

  • பெரும்பாலும் ‘மூன்றாம் துருவம்’ என்று அழைக்கப்படும் ஹிந்துகுஷ் இமயமலைப்பகுதி இந்தியா, நேபாளம், சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளில் 3,500 சகிமீ பரப்பளவில் பரவியுள்ளது. UNDP’ன் சமீபத்திய ஆய்வின்படி, ஹிந்துகுஷ் இமயமலை மலைத்தொடர்கள் 2100ஆம் ஆண்டுவாக்கில் அதன் மூன்றில் இரண்டு பங்கு பனியை இழக்கும் காரணத்தால் தென் கிழக்காசியாவில் உள்ள 2 பில்லியன் மக்கள்வரை உணவு மற்றும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவுள்ளனர்.

7. பின்வரும் எவ்வமைப்புக்கு, 5 MHz அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) இந்திய இரயில்வே

ஆ) AIIMS

இ) விண்வெளி அமைச்சகம்

ஈ) BSNL

  • இரயில்கள் & இரயில் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 700 MHz கற்றையில் 5 MHz அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு ஒதுக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய இரயில்வேயின் தகவல்தொடர்பு மற்றும் சமிக்ஞை முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வலையமைப்பில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.
  • இந்த அலைக்கற்றைவாயிலாக நீண்டகால பரிணாமத்தின் அடிப்படையில் வழித்தடங்களில் நடமாடும் ரயில் வானொலி தொலைத்தொடர்பை வழங்க இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ள முதலீடு சுமார் `25,000 கோடியாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவடையும்.

8. சர்வதேச இருப்புப்பாதைக்கடவு குறித்த விழிப்புணர்வு நாளை எந்த நகரத்தை அடிப்படையாகக்கொண்டு பன்னாட்டு இரயில்வே யூனியன் கடைப்பிடிக்கிறது?

அ) ஜெனீவா

ஆ) பாரிஸ்

இ) நியூயார்க்

ஈ) ரோம்

  • பன்னாட்டளவிலான இருப்புப்பாதைக்கடவு குறித்த விழிப்புணர்வு நாள் என்பது இருப்புப்பாதைக்கடக்கும்போது செய்யக்கூடிய பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனை பன்னாட்டு இரயில் போக்குவரத்து தொழிலமைப்பான பாரிஸைச் சார்ந்த சர்வதேச இரயில்வே யூனியன் முன்னெடுத்துள்ளது.

9. நடப்பாண்டில் வரும் உலக அங்கீகார நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Supporting the Implementation of the SDGs

ஆ) Safety Accreditation

இ) Quality Accreditation

ஈ) Quality Certification

  • வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின் பங்கை முன்னி
    -லைப்படுத்தவும் ஊக்குவிக்கவுமாக உலக அங்கீகார நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Supporting the Implementation of the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். இது, பன்னாட்டு அங்கீகார மன்றம் & பன்னாட்டு ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப் -படுகிறது.

10. 2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பைக்கொண்டுள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கியப் பேரரசு

இ) ஜெர்மனி

ஈ) பிரான்ஸ்

  • நடப்பு 2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பை வகித்துவரும் ஐக்கியப் பேரரசு இந்தியா, ஆஸி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியாவை உச்சிமாநாட்டிற்கு அழைத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய G7 உச்சிமாநாட்டின் அமர்வுகளில் மெய்நிகராக பங்கேற்கவுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், பிரான்ஸ், இந்தியாவை ‘நல்லெண்ண கூட்டாளராக’ அழைத்த பின்னர், G7 உச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமர் பங்கேற்பது இது இரண்டாம் முறையாகும்.

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. கடல்சார் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்களை உருவாக்கும் ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், ஜிஎஸ்எல் நிறுவனம் கையெழுத்து

இந்திய கடலோரக்காவல்படையின் பயன்பாட்டிற்காக `583 கோடி மதிப் -பில் கடல்சார் மாசுவைக் கட்டுப்படுத்தும் 2 கப்பல்களை உருவாக்குவத -ற்காக கோவா ஷிப்யார்டு நிறுவனத்துடன் (GSL) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஜூன்.22 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, GSL நிறுவனத்தால் இந்தச் சிறப்பு கப்பல்கள் உருவாக்கப்படும். கடலில் எண்ணெய் கசிவால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் மாசு ஏற்படுவதைத் திறம்பட கையாளும் வகையில் இந்திய கடலோரக்காவல்படையின் செயல்திறனை இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இந்த இரு கப்பல்களை நவம்பர் 2024 மற்றும் 2025 மேயில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1. As per the recent report of the WHO, around ……… million people are affected by foodborne diseases every year.

A) 250

B) 350

C) 600

D) 750

  • The World Health Organization (WHO) released a handbook to help assess the burden of foodborne diseases. It also aims to locate data gaps to help strengthen health infrastructure.
  • As per the report, more than 600 million people are affected by foodborne diseases every year. It also highlighted that over 0.12 million children under five years die from consuming unsafe food.

2. CoviFind, that has been approved by the Indian Council of Medical Research (ICMR), is a ……………?

A) Rapid Antigen Test

B) RT–PCR Test

C) Serology Test

D) Blood Test

  • The Indian Council of Medical Research (ICMR) has recently approved the Medtech company Meril for its self use Rapid Antigen Test for Covid–19, CoviFind. This indigenously researched and developed test can detect the SARS–CoV–2 virus swiftly in 15 minutes. This affordable test does not have any specific storage requirements.

3. Mahesh Kumar Jain has been recently re–appointed as ………….

A) RBI Deputy Governor

B) SEBI Chairperson

C) NABARD Chairperson

D) SBI Chairperson

  • The Reserve Bank announced that the Government has extended the tenure of Deputy Governor Mahesh Kumar Jain for two years. M K Jain was appointed as the Deputy Governor for three years in June 2018. The other three serving Deputy Governors of the RBI are Michael Patra, M Rajeshwar Rao and T Rabi Sankar.

4. Dehing Patkai wildlife sanctuary has been notified as a national park of which state?

A) Assam

B) Sikkim

C) Bihar

D) Himachal Pradesh

  • Assam’s Dehing Patkai wildlife sanctuary has been recently notified as the seventh national park of the state of Assam. Recently, Raimona was declared as the National Park in the state. Assam is the state with the second highest number of national parks in the country, after Madhya Pradesh (11). The UT of Andaman and Nicobar has nine national parks.

5. Ganymede, the biggest moon in the solar system, is the satellite of which planet?

A) Saturn

B) Jupiter

C) Mercury

D) Venus

  • NASA’s Juno spacecraft visited the biggest moon in the solar system — Ganymede. It is the satellite of Jupiter and the ninth–largest object in the Solar System. The probe has also sent back high–resolution images of the moon, after it has hovered as close as 1,000 km to the surface of Ganymede. The new pictures could help in identification of surface features including craters and tectonic faults.

6. Which Mountain range is often called as the ‘Third Pole’?

A) Hindu Kush Himalayan range

B) Western Ghats

C) Eastern Ghats

D) Aravalli Range

  • The Hindu Kush Himalayan (HKH) region, often referred to as the ‘Third Pole’, is spread over 3,500 square kilometres across eight countries including India, Nepal and China. As per a recent research backed by the UNDP, up to two billion people in southeast Asia can face food and water shortages, as the HKH mountain ranges lose up to two–thirds of its ice by 2100.

7. The Union Cabinet has approved to allocate 5 MHz spectrum to which organisation?

A) Indian Railways

B) AIIMS

C) Space Ministry

D) BSNL

  • The Union Cabinet has decided to allocate 5 MHz spectrum in the 700 MHz frequency band to the Indian Railways. This is expected to improve the communication and signalling systems of the Indian Railways. It will also help to improve safety of passengers on the transport network. The LTE–based mobile train radio communication is to be completed in the next five years at a cost of Rs 25,000 crore.

8. The International Level Crossing Awareness Day (ILCAD) is organised by the International Union of Railways (UIC), based at which city?

A) Geneva

B) Paris

C) New York

D) Rome

  • The International Level Crossing Awareness Day (ILCAD) is a worldwide initiative to improve awareness of level crossing safety. The campaign has been spearheaded by the Paris based International Union of Railways, an international rail transport industry body.

9. What is the theme of World Accreditation Day, 2021?

A) Supporting the Implementation of the SDGs

B) Safety Accreditation

C) Quality Accreditation

D) Quality Certification

  • The World Accreditation Day is celebrated on 9th June every year to highlight and promote the role of accreditation in trade & economy. 1 The theme for World Accreditation Day 2021 is “Supporting the Implementation of the SDGs”. It is decided by the International Accreditation Forum and the International Laboratory Accreditation Cooperation.

10. Which country holds the Presidency of G7 in 2021?

A) USA

B) United Kingdom

C) Germany

D) France

  • The UK holds the presidency of G7 and has invited India, Australia, South Africa and South Korea to the outreach summit. Prime Minister Narendra Modi is to virtually participate in the outreach sessions of the G7 summit, hosted by UK Prime Minister Boris Johnson. This is the second time the Prime Minister is participating in the G7 meeting after France invited India in 2019 as a ‘Goodwill Partner’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!