Tnpsc

28th November 2020 Current Affairs in Tamil & English

28th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. முதன்மை கூட்டுறவு சங்கங்களுக்கான தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தொடங்கியுள்ள பயிற்சி தொகுதிகளின் பெயரென்ன?

அ. சகாகர் பிரக்யா

ஆ. NCDC சகாகர்

இ. கோஆப் எஜூகேட்

ஈ. PACS திறன் பராமரிப்பு

 • கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சிகளை அளிப்பதற்காக, ‘சகாகர் பிரக்யா’ என்னும் திட்டத்தை மத்திய உழவு, உழவர்கள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் & உணவுப்பதப்படுத்துதல் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்மூலம், 45 புதிய பயிற்சிகள் நாட்டின் கிராமப் புறங்களிலுள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தால் அளிக்கப்படும்.

2. திருமணத்திற்காக சட்டத்துக்குப் புறம்பாக மதமாற்றம் செய்தலை தடை செய்வதற்காக அவசர ஆணை பிறப்பித்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. அஸ்ஸாம்

 • திருமணம் செய்து கொள்வதற்காக சட்டத்துக்குப் புறம்பாக மதமாற்றம் செய்தலை தடை செய்வதற்காக அவசர ஆணை பிறப்பித்து உத்தர பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அவசர ஆணையின்படி, திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாயப்படுத்தியோ, வஞ்சகம்-சூழ்ச்சி செய்தோ, அல்லது மனவழுத்தத்துக்கு உள்ளாக்கியோ ஒருவர் சட்டத்துக்குப்புறம்பாக மதம்மாற்றினால், மதமாற்றம் செய்யும் அந்நபர், பிணையில் வெளிவர இயலாத குற்றஞ்செய்தவரா கருதப்படுவான்/ள். அவனு/ளுக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், `50,000 அபராதமும் விதிக்கப்படும்.

3. தேசிய அறிவியல் திரைப்பட விழாவின் பத்தாவது பதிப்பு தொடங்கப்படுகிற மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. அஸ்ஸாம்

இ. திரிபுரா

ஈ. உத்தரகண்ட்

 • தேசிய அறிவியல் திரைப்பட விழாவின் பத்தாவது பதிப்பானது திரிபுரா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. மெய்நிகர் முறையில் இந்தத் திருவிழா நடைபெறும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டு வரும் விக்யான் பிரஸார் இந்த விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு, திரிபுரா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுடன் இணைந்து விக்யான் பிரசார் இதனை நடத்துகிறது. வெவ்வேறு மொழிசார்ந்த 372 படங்கள் பெறப்பட்டுள்ளன.

4. CII மற்றும் எர்ன்ஸ்ட் & யங் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, முதலீட்டாளர்களின் விருப்ப நாடாக உள்ளது எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. மொரிசியஸ்

 • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் எர்ன்ஸ்ட் & யங் ஆகியவை சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வின்படி, உலகெங்கிலும் உள்ள முதலீடுகளின் அடிப்படையில், பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் இந்தியாவை தங்கள் முதல் விருப்பமாக கருதுகின்றன.
 • அந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை வகுப்பாளர்களுள் 82% பேர் அடுத்த 2-3 ஆண்டுகளில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். இந்தியாவுக்குப்பிறகு, இரண்டாவது மிகவும் சாதகமான நாடாக வட அமெரிக்கா உள்ளது.

5. துன்பத்திலிருக்கும் மகளிர்க்கு உதவுதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. அஸ்ஸாம்

ஆ. கோவா

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

 • கோவா மாநில முதலமைச்சர் அம்மாநிலத்தில் துன்பத்தில் உள்ள பெண்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் உதவி எண்ணை (7875756177) அறிமுகப்படுத்தியுள்ளார். கோவா மாநில காவல்துறை கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் எண் 24 மணி நேரமும் செயல்படும். மத்திய பாதுகாப்பு இணை அமைச்சரும் AYUSH அமைச்சருமான ஸ்ரீ பத் நாயக் மருத்துவ ரீதியாக உதவிபுரியும் ஓர் அவசர ஊர்தியை கோவா மாநிலத்திற்கு வழங்கியுள்ளார்.

6. அண்மையில் காலமான அஜய் லோதா, கீழ்க்காணும் எந்தத் தொழிற்துறைடன் தொடர்புடையவர்?

அ. எழுத்தாளர்

ஆ. மருத்துவர்

இ. அரசியல்வாதி

ஈ. அறிவியலாளர்

 • மூத்த இந்திய-அமெரிக்க மருத்துவரான அஜய் லோதா (58) அமெரிக்காவில் கொரோனா தொற்றால் காலமானார். அவர், அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கத்தின் (AAPI) முன்னாள் தலைவராவார். 2016ஆம் ஆண்டில் ‘எல்லிஸ் தீவு’ பதக்கம் உட்பட பல்வேறு கெளரவங்களை அவர் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்களுக்கு அவராற்றிய பங்களிப்புக்காக அவர் அறியப்பட்டார்.

7. சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) MSME சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதற்காக கீழ்க்காணும் எந்த தென் மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

 • தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSME) சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) தமிழ்நாடு அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், SIDBI ஒரு திட்ட மேலாண்மை பிரிவை தமிழ்நாடு அரசில் நிறுவும். அது, மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும்.

8. 2013ஆம் ஆண்டு முதல் 93 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும், தனது நாட்டில் தீவிரமாக வறுமையை ஒழித்து வருவதாகவும் அறிவித்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. பாகிஸ்தான்

ஈ. இந்தோனேசியா

 • கடந்த 2014ஆம் ஆண்டின் மிகவும் ஏழ்மையான பிராந்தியங்களின் பட்டியலிலிருந்த மீதமுள்ள 832 பகுதிகளையும் சீனா அண்மையில் நீக்கியது. கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து 93 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.
 • சீனா தனது சொந்த தேசிய தீவிர வறுமைக்கான தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனிநபர் வருமான வரம்பில் ஆண்டுக்கு 4,000 யுவான் அல்லது நாளொன்றுக்கு $1.52 அமெரிக்க டாலர் மற்றும் பிற சமூக காரணிகளின் அடிப்படையில் அந்தத் தரம் உள்ளது.

9. ‘ஹர் கர் நல் யோஜனா’ செயல்படுத்தப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஒடிசா

 • பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலத்தில், ‘ஹர் கர் நல் யோஜனா’வை தொடங்கிவைத்தார். சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 4.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் செலவினம் `5,555 கோடியாகும். இந்தத்திட்டம் 3,000’க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும்.

10. DRDO’ஆல் தொடங்கிவைக்கப்பட்டு இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்ட கனமான எடைகொண்ட நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணையின் (torpedo) பெயர் என்ன?

அ. பிரமோஸ்

ஆ. வருணாஸ்திரம்

இ. ஆகாஷ்

ஈ. தனுஷ்

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைவர் அண்மையில் முதலாம் கனமான எடைகொண்ட நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணையான வருணாசுதிரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விசாகப்பட்டினம் பிரிவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் நடைபெற்ற விழாவில், இந்த நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணை இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதை, விசாகப்பட்டினம் கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

1. What is the name of the training modules launched for primary cooperative societies, by National Cooperative Development Corporation?

[A] Sahakar Pragya

[B] NCDC Sahakar

[C] Coop Educate

[D] PACS Skillcare

 • Union Agriculture Minister Narendra Singh Tomar has launched ‘Sahakar Pragya’, the 45 new training modules developed by the National Cooperative Development Corporation (NCDC). The modules will impart training to primary cooperative societies in rural areas of the country. The National Cooperative Development Corporation is a statutory Corporation, under the aegis of Ministry of Agriculture and Farmers Welfare.

2. Which state has passed ordinance to ban unlawful religious conversions for marriage?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Gujarat

[D] Assam

 • Uttar Pradesh government has passed an ordinance to ban unlawful religious conversions for marriage. As per the ordinance, unlawful conversion for the sake of getting married through force, deceit, undue pressure will be considered a non–bailable offence and can lead to imprisonment of a maximum of 10 years and penalty of Rs. 50,000.

3. The 10th edition of the National Science film festival is inaugurated in which state?

[A] West Bengal

[B] Assam

[C] Tripura

[D] Uttarakhand

 • The 10th edition of the National Science film festival has been inaugurated in the state of Tripura. The festival will be held in virtual mode. Vigyan Prasar, an autonomous agency under the Department of Science and Technology, has been organizing this festival. This year, Vigyan Prasar is collaborating with the Tripura State Council of Science and Technology. As many as 372 films in different languages have been received.

4. As per a recent survey conducted by CII and Ernst & Young, which country is the top destination of investors?

[A] China

[B] India

[C] USA

[D] Mauritius

 • As per a recent survey conducted by Confederation of Indian Industries (CII) and Ernst & Young, Multi–national Companies regard India as their first option, in terms of investments across the globe. Out of the total key decision makers of those MNCs, 82 per cent of them said that they have plans to expand their business in the next 2 to 3 years. After India, the second most favourable place is North America followed by the rest of Asia–Pacific.

5. Which Indian state has launched an exclusive WhatsApp number to help women in distress?

[A] Assam

[B] Goa

[C] Kerala

[D] Telangana

 • The Chief Minister of Goa has launched an exclusive WhatsApp helpline number, to help women in distress in the state. The dedicated WhatsApp number 7875756177 will be functional round the clock at the State Police Control Room, Panaji.
 • Union Minister of State for Defence and AYUSH Shripad Naik handed over a medically well–equipped ambulance to Chief Minister for the use of Goa Police.

6. Ajay Lodha, who recently passed away, was associated with which profession?

[A] Writer

[B] Physician

[C] Politician

[D] Scientist

 • Veteran Indian–American physician Ajay Lodha has passed away due to complications from Covid–19, at the age of 58, in the United States. He is the former President of American Association of Physicians of Indian Origin (AAPI).
 • The physician has received several honours including the Ellis Island Medal of Honour in 2016. He was known for his contribution to the diaspora in the U.S, especially the Rajasthani community.

7. The Small Industries Development Bank of India (SIDBI) has signed MoU with which southern state to develop MSME ecosystem?

[A] Tamil Nadu

[B] Andhra Pradesh

[C] Karnataka

[D] Kerala

 • A memorandum of understanding (MoU) was signed by the Small Industries Development Bank of India (SIDBI) with the Tamil Nadu government to develop the ecosystem for micro, small and medium enterprises (MSMEs) in the state. Under the MoU, SIDBI will deploy a project management unit in the government of Tamil Nadu. It will undertake the process of designing the training and capacity–building programmes to be taken up by the state government in areas.

8. Which country lifted 93 million people out of poverty since 2013 and has announced eradication of extreme poverty in its country?

[A] India

[B] China

[C] Pakistan

[D] Indonesia

 • China has removed the last remaining counties (regions) from a list of 832 extremely poor regions, drawn up in the year 2014. China also announced that it has lifted 93 million people out of poverty since 2013. China sets its own national standard of extreme poverty, based on a per capita income threshold of 4,000 yuan per year, or around USD 1.52 per day, and other social factors.

9. ‘Har Ghar Nal Yojana’ has been implemented in which Indian state?

[A] Maharashtra

[B] Telangana

[C] Uttar Pradesh

[D] Kerala

 • Prime Minister Narendra Modi launched ‘Har Ghar Nal Yojana’ in the state of Uttar Pradesh. The scheme aims to provide piped water supply to over 4.1 million people in the two districts of Sonbhadra and Mirzapur. The outlay of the project is Rs 5,555 crore. The scheme will also benefit over 3,000 villages to access piped water supply.

10. What is the name of the heavy weight torpedo, flagged off by DRDO and was delivered to the Indian Navy?

[A] BrahMos

[B] Varunastra

[C] Akash

[D] Dhanush

 • The Chairman of the Defence Research and Development Organisation (DRDO) has recently flagged off the first heavy weight torpedo, Varunastra. The torpedo was delivered to the Indian Navy at a ceremony held at Bharat Dynamics Limited, Visakhapatnam Unit. It has been designed and developed by Naval Science & Technological Laboratory (NSTL), Visakhapatnam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content