Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

2nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. முதன்முறையாக ‘சோலார் புரோட்டான் நிகழ்வு’களை கண்டறிந்த ISRO’இன் விண்வெளிப்பயணம்/செயற்கைக் கோள் எது?

அ) சந்திரயான்-1

ஆ) சந்திரயான்-2 

இ) செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம்

ஈ) மங்கள்யான்-2

  • சந்திரயான்-2இன் சுற்றுக்கலனானது சூரிய புரோட்டான் நிகழ்வுகளை அதன் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (CLASS) மூலம் கண்டறிந்தது. இந்தப் புரோட்டான் நிகழ்வுகள் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களிடையே கதிர்வீச்சு தாக்கத்ததை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

2. தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமானது (NIUA) எந்நிறுவனத்துடனான, ‘நிலையான நகரங்கள் இந்தியா’ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) NITI ஆயோக்

ஆ) உலகப் பொருளாதார மன்றம் 

இ) உலக வங்கி

ஈ) UNDP

  • உலகப் பொருளாதார மன்றமும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனமும் (NIUA) இணைந்து ‘நிலையான நகரங்கள் இந்தியா’ திட்டத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு கூட்டுத்திட்டம் ஆகும். இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைக்கப் -பட்ட சுற்றுச்சூழல் துறைகளில் டிகார்பனைசேஷன் தீர்வுகளை உருவாக்க நகரங்களுக்கு உதவும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. எந்த நாட்டின் ஊர்தி, நிலவின் தொலைவில் இரண்டு கண்ணாடிக்கோளங்களைக் கண்டறிந்துள்ளது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) அமெரிக்கா

  • சீனாவின் Yutu-2 ஊர்தியானது அண்மையில் நிலவின் தொலைவில் இரண்டு விசித்திரமான கண்ணாடிக் கோளங்களைக் கண்டறிந்தது. நிலவின் மேற்பரப்பில் முதன்முறையாக இது போன்ற கோளங்கள் காணப்படுகி -ன்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவை மிகச் சமீபத்தில் உருவானவை.

4. நடப்பு 2022இல், சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகிற நகரம் எது?

அ) மும்பை

ஆ) கான்பூர் 

இ) சென்னை

ஈ) பனாஜி

  • அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் பாரத் சிங் 58ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்-2022’ஐ கான்பூரில் நடத்தப்படும் என அறிவித்தார். இதில் 23 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் 30 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 184 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
  • செஸ் ஒலிம்பியாட் & ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்
    -கான இந்திய அணிக்கான தேர்வு மேடையாக இது இருக்கும். 7ஆவது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் – 2022 புவனேஸ்வரில் நடைபெறுகிறது.

5. ‘தேவயாதனம் – இந்தியக் கோவில் கட்டடக்கலையின் பயணம்’ என்ற மாநாடு நடைபெறும் இடம் எது?

அ) பூரி

ஆ) ஹம்பி 

இ) மைசூரு

ஈ வாரணாசி

  • இந்திய அரசின் மத்திய கலாசார அமைச்சகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் கர்நாடகாவின் ஹம்பியில் ‘இந்தியக் கோவில் கட்டடக்கலையின் பயணம் – தேவயாதனம்’ என்ற சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநாட்டை தொடங்கிவைத்தார்.
  • இது கோவிலின் தத்துவ, மத, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டடக்கலை அம்சங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவில் கட்டடக்கலையின் பல்வேறு பாணிகளின் பரிணாம வளர்ச்சியையும் இது எடுத்துக் கூறுகிறது.

6. சமீபத்தில் காலமான இப்ராகிம் சுதார் என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்த ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவரும் சமூக சேவகரும் ஆவார்?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா 

இ) மத்திய பிரதேசம்

ஈ) கேரளா

  • ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவரும் சமூக சேவையாளருமான இப்ராகிம் சுதார் கர்நாடகாவில் தனது 82ஆவது வயதில் காலமானார். அவர் ‘கன்னடத்தின் கபீர்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதற்கான அவரது அரும்பணிக்காக அறியப்பட்டவர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

7. இந்தியாவின் முதலாவது கடற்பசுப் பாதுகாப்பகத்தை அமைக்கவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) மகாராஷ்டிரா

  • தமிழநாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத் -தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடற்பசு என்பது அழிந்துவரும் ஒரு கடற்பாலூட்டியினமாகும். இது வாழ்விட இழப்பு, கடல் மாசுபாடு மற்றும் கடற்பாசி இழப்பு காரணமாக அழிவை எதிர்கொள்கிறது.
  • தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குப்பகுதிக்கும் இடையே உள்ள ஆழமற்ற விரிகுடா பகுதியான மன்னார் வளைகுடாவிலும், பாக் விரிகுடாவிலும் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.

8. தேசிய வான் விளையாட்டுக் கொள்கை வரைவை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ) விளையாட்டு அமைச்சகம்

ஆ) உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • உள்நாட்டு வான் போக்குவரவு அமைச்சகமானது நாட்டில் வான் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக தேசிய வான் விளையாட்டுக் கொள்கை வரைவை (NASP – 2022) தயாரித்துள்ளது. ஏரோபாட்டிக்ஸ், ஏரோ-மாடலிங், அமெச்சூர், டிரோன்கள், கிளைடிங், ஹேங்-கிளைடிங் மற்றும் பாராகிளைடிங் மைக்ரோ-லைட்டிங் மற்றும் பாரா -மோட்டரிங் ஸ்கை-டைவிங் மற்றும் விண்டேஜ் வான் விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான வான் விளையாட்டுகளை இந்தக் கொள்கை உள்ளடக்கும்.
  • மேலும், வான் விளையாட்டுக்களுக்கான சாதனங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும்.

9. உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 01

ஆ) மார்ச் 02

இ) மார்ச் 03 

ஈ) மார்ச் 04

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக வனவுயிரிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, புவியில் வாழும் விலங்கு மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • “Recovering key species for ecosystem restoration” என்பது நடப்பாண்டு (2022) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

10. உலக செவிப்புலன் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 02

ஆ) மார்ச் 03 

இ) மார்ச் 04

ஈ) மார்ச் 05

  • காதுகேளாமை மற்றும் செவித்திறன்குறை ஆகியவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக செவிப்புலன் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டுதோறும் உலக செவிப்புலன் நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறது. “To hear for life, listen with care!” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தின் 7 பேர் உள்பட 49 ஆசிரியர்களுக்கு தேசிய விருது: தில்லியில் மத்திய அமைச்சர் வழங்கினார்

தமிழகத்தைச் சேர்ந்த ஏழு ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 49 ஆசிரியர்களுக்கு தேசிய தகவல், தொலைத் தொடர்பு தொழில்நுட்ப விருதுகளை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி வழங்கினார்.

2020ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில், கற்பித்தல், கற்றல் செயல்முறைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விரிவான பயன்பாடு, திட்டமிடலை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகளை மத்திய கல்வித் துறை வழங்குகிறது. கல்வி கற்பிப்பதில் திக்ஷா, இ-பாடசாலை திட்டங்களின் கீழ் மின்னணு முறையில் பாடங்களைத் தயாரித்தல், காணொலிகள் போன்றவைமூலம் மாணவர்களுக்கான கற்றல் அணுகுதலுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

2. கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 3ஆவது இடம்

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் அதிக சொத்து வைத்துள்ளவர்களின் விவரங்களை தனியார் ஆய்வுநிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, உலகில் கடந்த ஆண்டில் 30 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் `226 கோடி) சொத்து வைத்திருந்த நபர்களின் எண்ணிக்கை 9.3 சதவீதம் அதிகரித்து 6,10,569ஆக இருந்தது. அவர்களில் 13,637 பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவில் அதிக சொத்து வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிக கோடீஸ்வரர்ரைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 748 கோடீஸ்வரர்கள் உள்ளனர். 554 கோடீஸ்வரர்களு -டன் சீனா 2ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 145 கோடீஸ்வரர்களுடன் இந்தியா உள்ளது.

3. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: சௌரவ் சௌதரிக்கு தங்கப்பதக்கம்

எகிப்தில் நடைபெற்று வரும் ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரவ் சௌதரி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் சௌரவ் 16-6 என்ற கணக்கில் ஜெர்மனியின் மைக்கேல் ஷ்வால்டை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.

ஈஷாவுக்கு வெள்ளி

இப்போட்டியின் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

4. பருவநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்: ஐநா அறிக்கையில் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள ஐநா அறிக்கை, கடலோரப்பகுதிகளிலுள்ள மக்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயர்ந்து, வெப்ப நிலை அதிகரிக்கும். உலகம் முழுவதும் பனிப்பாறைகள் முன்பில்லாத அளவில் வேகமாக உருகிவருகின்றன. வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளம், அனல்காற்று உள்ளிட்டவற்றின் காரணமாக நாட்டில் உணவு உற்பத்தி பாதிப்பைச் சந்திக்கும். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி 2050ஆம் ஆண்டில் 9% வரை குறைய வாய்ப்புள்ளது.

கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால், தென்னிந்தியாவில் சோள உற்பத்தி 17% வரை குறையும்.

கடல்மட்ட உயர்வால் நிலப்பயன்பாடு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும். கரியமில வாயு வெளியேற்ற அளவு தற்போதைய நிலையில் தொடர்ந்தால், நடப்பு நூற்றாண்டின் மத்தியில் சுமார் 3.5 கோடி பேர் கடல்மட்ட உயர்வு பிரச்னையால் பாதிக்கப்படுவர். அதுவே அந்த எண்ணிக்கை நூற்றாண்டின் இறுதியில் 5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக இருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பாதிக்கப்படுவர்.

இந்தியாவுக்கு அதிக பாதிப்பு:

கடல்மட்ட உயர்வு, திடீர் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பைச் சந்திக்கும் நாடாக இந்தியா விளங்கும். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவுள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அவ்வாறு குறைக்கும் பட்சத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு சுமார் `1.68 இலட்சம் கோடியாக இருக்கும். இல்லையெனில் இழப்பு சுமார் `2.52 இலட்சம் கோடியாக அதிகரிக்கும்.

கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்தால், மும்பை மட்டும் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு சுமார் `11.44 இலட்சம் கோடி இழப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்தால், ஈரக்குமிழ் வெப்பநிலை (வெப்பம், ஈரப்பதத்தின் அளவீடு) 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.

லக்னௌ, பாட்னா நகரங்களில் அந்த வெப்பநிலை 35 டிகிரியை விட அதிகமாக இருக்கும்.

புவனேசுவரம், சென்னை, மும்பை, இந்தூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஈரக்குமிழ் வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

கடல்மட்ட உயர்வு, திடீர் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பைச் சந்திக்கும் நாடாக இந்தியா இருக்கும்.

பருவநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டில் 40 சதவீத மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வர். தற்போது 33 சதவீத மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வருமானம் 23 சதவீதம் வரை குறையும். இந்தியாவில் 2100ஆம் ஆண்டுக்குள் 92 சதவீதம் வரை குறையும்.

பருவநிலை மாற்றத்தால் ஒட்டுமொத்தமாக அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை எதிர்கொள்ளும். நடப்பாண்டு இறுதியில் இந்தியாவின் பொருளாதாரம் 92 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்.

உலகில் பாதிபேர் பாதிக்கப்படும் அபாயம்

பருவநிலை மாற்றம் காரணமாக உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வறிக்கையில், “தொழில்மயமாதலுக்கு முந்தைய காலகட்டத்தைவிட வெப்பநிலை 1.5 டிகிரி C அதிகரித்தால், 14% உயிரினங்கள் அழிவைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவர்; மக்களின் உயிரிழப்பும் பெருமளவில் அதிகரிக்கும்.

கடல்மட்ட உயர்வால் அலைகளின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பை எதிர்கொள்வர். தற்போதைய கடல் மட்டத்தில் இருந்து 10 மீட்டருக்குள் 90 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். கடல்மட்டம் 75 செமீ வரை உயர்ந்தால், தற்போது கணிக்கப்பட்டுள்ளதைவிட இரு மடங்கு எண்ணிக்கையிலான மக்கள் 2100ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படுவர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளிலேயே உலகின் வெப்பநிலை உயர்வு 1.5°C நிலையை எட்டிவிடும்.

அதற்கு அதிக வெப்பநிலை உயர்ந்தால், சுற்றுச்சூழலில் பெரும் தாக்கங்களும் பாதிப்புகளும் ஏற்படும்; பவளப் பாறைகள் பாதிக்கப்படும். பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் வேகமாக உயரும். பனிப்பாறைகள் உருகும்போது கரியமில வாயு வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1. Which space mission/ satellite of ISRO has detected ‘Solar proton events’ for the first time?

A) Chandrayaan–1

B) Chandrayaan–2 

C) Mars Orbiter Mission

D) Mangalyaan 2

  • Chandrayaan–2 Orbiter has detected solar proton events, via its Large Area Soft X–ray Spectrometer (CLASS). The proton events are said to increase the radiation exposure to humans in space.

2. National Institute of Urban Affairs (NIUA) signed MoU with which institution to collaborate on ‘Sustainable Cities India program’?

A) NITI Aayog

B) World Economic Forum 

C) World Bank

D) UNDP

  • The World Economic Forum and the National Institute of Urban Affairs (NIUA) signed a Memorandum of Understanding (MoU) to collaborate on ‘Sustainable Cities India program’.
  • It is a jointly designed project, which aims to create an enabling environment for cities to generate decarbonization solutions across energy, transport, and the built environment sectors.

3. Which country’s rover has spotted two glass spheres on the far side of the Moon?

A) India

B) China 

C) UAE

D) USA

  • China’s Yutu–2 rover has recently spotted two strange glass spheres on the far side of the Moon. The lunar ‘spherules’ are the first of their kind to be found on the lunar surface. As per researchers, they are formed fairly recently.

4. Which city is the host of Senior National Chess Championship–2022?

A) Mumbai

B) Kanpur 

C) Chennai

D) Panaji

  • All India Chess Federation secretary Bharat Singh organises the 58th Senior National Chess Championship–2022 at Kanpur.
  • It is participated by 184 players, including 23 grandmasters and 30 international masters in the field. It will be a selection platform for the Indian squads for the Chess Olympiad and Asian Games. The 7th National Women Chess Championship–2022 is held at Bhubaneswar.

5. Which is the venue of the ‘Devayatanam – An odyssey of Indian temple architecture’ conference?

A) Puri

B) Hampi 

C) Mysuru

D) Varanasi

  • Archaeological Survey of India (ASI) of Ministry of Culture, Government of India is organizing an international conference ‘Devayatanam – An odyssey of Indian temple architecture at Hampi, Karnataka. The union minister for Culture G Kishan Reddy inaugurated the conference.
  • It aims to highlight the philosophical, religious, social, economic, technical, scientific, art and architectural aspects of temple. It also aims to deliberate upon the evolution of various styles of temple architecture.

6. Ibrahim Sutar, who recently passed away, was Padma Shri awardee and social worker from which state?

A) Tamil Nadu

B) Karnataka 

C) Madhya Pradesh

D) Kerala

  • Padma Shri awardee and social worker Ibrahim Sutar passed away in Karnataka at the age of 82.
  • He is fondly referred to as the “Kabir of Kannada” Ibrahim Sutar was known for his work towards spreading social and communal harmony. He was awarded the Padma Shri award in the year 2018.

7. Which Indian state is to set up India’s first Dugong Conservation Reserve?

A) Tamil Nadu 

B) Kerala

C) Odisha

D) Maharashtra

  • The Tamil Nadu government has announced plans to set up India’s first Dugong Conservation Reserve in the Palk Bay on the southeast coast of the state.
  • Dugong or Sea Cow is an endangered marine mammal that is facing extinction due to habitat loss, sea pollution and loss of seagrass. Dugong is found in Gulf of Mannar, which is a shallow bay area between south eastern tip of Tamil Nadu and western part of Sri Lanka, and at Palk Bay.

8. Which Ministry unveiled the draft National Air Sports Policy?

A) Ministry of Youth Affairs and Sports

B) Ministry of Civil Aviation 

C) Ministry of Home Affairs

D) Ministry of Housing and Urban Affairs

  • Ministry of Civil Aviation has prepared a draft National Air Sports Policy (NASP 2022) to promote air sports in the country.
  • The policy will cover most of the air sports including aerobatics, aero–modelling, amateur, drones, gliding, hang gliding and paragliding micro–lighting and para–motoring skydiving and vintage aircraft. Domestic design, development and manufacturing of air sports equipment will be promoted.

9. When is the World Wildlife Day observed annually across the world?

A) March 01

B) March 02

C) March 03 

D) March 04

  • The World Wildlife Day is observed on March 3 every year to raise awareness about the dangers faced by the planet’s fauna and flora. The 2022 theme is “Recovering key species for ecosystem restoration”

10. When is the World Hearing Day observed?

A) March 02

B) March 03 

C) March 04

D) March 05

  • ‘World Hearing Day’ is observed on 3 March each year, to raise awareness on how to prevent deafness and hearing loss. ‘WHO’ organizes an annual World Hearing Day seminar at its headquarters in Geneva. The theme of this year’s day is “To hear for life, listen with care”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!