TnpscTnpsc Current Affairs

4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Integrated Approach in Science and Technology for Sustainable Future 

ஆ) Science and Technology for Atmanirbhar Bharat

இ) Vigyan Sarvatra Pujyate

ஈ) Amrut Kaal Vigyan

 • ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோராண்டும் பிப்.28 அன்று இந்தியாவில் ‘தேசிய அறிவியல் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், சர் சி வி ராமன் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். மேலும் அவருக்கு 1930இல் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. “Integrated Approach in Science and Technology for Sustainable Future” என்பது 2022-தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. இந்தியாவில் விளையும் அனைத்து பசுமை உணவு வகைகளிலும் அதிகமாக ஏற்றுமதியான பொருள் எது?

அ) பசுந்திராட்சை 

ஆ) கொய்யா

இ) பசுமையான மாம்பழங்கள்

ஈ) வெற்றிலை & பாக்கு

 • இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு $314 மில்லியன் அமெரிக்க டாலர்.
 • இதர பழங்களின் ஏற்றுமதி மதிப்பு $302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி $36 மில்லியன் டாலராகவும், வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி $19 மில்லியன் டாலராகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த பழங்கள் ஏற்றுமதியில், திராட்சை மற்றும் இதர பழங்கள் 92 சதவீதம் உள்ளன.

3. 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளர் யார்?

அ) ஆரிப் கான் 

ஆ) நீரஜ் சோப்ரா

இ) சிவ கேசவன்

ஈ) ஜெகதீஷ் சிங்

 • ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் பங்கேற்கும் ஆரிப் கான், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர் ஆவார். ஈராண்டுகளுக்கு முன்பு கால்வன் மோதலில் காயமடைந்த சீன இராணுவ வீரர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதை அடுத்து, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை அரசியல் ரீதியாக புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது.

4. CPEC என்பது சீனாவின் சிஞ்சியாங் பகுதியையும் எந்த நாட்டின் குவாடர் துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடமாக உள்ளது?

அ) ஈரான்

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) கஜகஸ்தான்

 • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் வடமேற்கு சிஞ்சியாங் உய்குர் பகுதி மற்றும் பாக்கின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை இணைக்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான 3,000-கிமீ நீளமுடைய பாதையாகும். $60 பில்லியன் டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கு பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

5. ‘பால சுவராஜ்’ தளத்துடன் தொடர்புடையது எது?

அ) பிரதம் அறக்கட்டளை

ஆ) தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 

இ) பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம்

 • சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) ஆனது அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஐநா நிறுவனங்களுடன் இணைந்து வீதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் காணுதல், அவர்களை மீட்டல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் பற்றிய தேசிய அளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
 • NCPCR, ‘பால ஸ்வராஜ் இணையதளம் – Children in Street Situations (CiSS)’ ஒன்றைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்காணிக்க NCPCR, ‘பால ஸ்வராஜ் (கோவிட்-கேர்)’ போர்ட்டலை உருவாக்கியது.

6. ‘SWIFT’ நிதிச்செய்தியிடல் சேவையில் ‘S’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Secure

ஆ) Society 

இ) Simple

ஈ) Service

 • SWIFT அமைப்பு என்பது Society for Worldwide Interbank Financial Telecommunication என்பதன் சுருக்கமாகும். இது பாதுகாப்பான நிதிச்செய்தியிடல் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநராகும். அண்மையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு ரஷ்ய வங்கிகளை SWIFT அமைப்பிலிருந்து நீக்க முடிவுசெய்தன.
 • ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.

7. ‘மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன்’ என்பது எந்த நாட்டின் முன்முயற்சியாகும்?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) ஜப்பான்

 • கடந்த 2004இல் அமெரிக்கா உருவாக்கிய மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனானது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க பெரும் மானியங்களை வழங்குகிறது. சமீபத்தில், நேபாளத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பையும் மீறி, அந்த நாட்டின் நாடாளுமன்றம், $500 மில்லியன் மானியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 • உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக நேபாளம் அமெரிக்க அரசாங்கத்தின் MCC ஒப்பந்தத்தில் கடந்த 2017இல் கையெழுத்திட்டது. ஆனால் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக அதற்கான ஒப்புதல் இன்னமும் பெறப்படவில்லை.

8. பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனீவா

ஆ) வியன்னா 

இ) நியூயார்க்

ஈ) மாஸ்கோ

 • பன்னாட்டு அணுசக்தி முகமை என்பது ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது அணுவாற்றலின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அணுவாயுதங்களுக்கான அதன் பயன்பாட்டைத் தடுக்கவும் எண்ணுகிறது. இதன் தலைமையகம் வியன்னாவில் உள்ளது.
 • IAEA’இன் 35 நாடுகளைக் கொண்ட ஆளுநர்கள் குழு உக்ரைன்குறித்த அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்களான கனடா மற்றும் போலந்து உக்ரைனின் வேண்டுகோளின் பேரில் இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இவ்விரு நாடுகளுமே அவ்வாரியத்தில் இடம்பெறாதவையாகும்.

9. InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்திய டிஜிட்டல் சூழல் கட்டமைப்பு 2.0 அல்லது InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 • InDEA 2.0, ஒரு குடிமகன் வைத்திருக்க வேண்டிய டிஜிட்டல் அடையாளங்களின் எண்ணிக்கையை மேம்படுத்த முற்படும் ‘Federated Digital Identities’இன் மாதிரியை முன்மொழிகிறது. இந்த வரைவு அறிக்கைக்கு முன்னாள் MeitY செயலாளர் J சத்யநாராயணா தலைவராகவும், தற்போதைய செயலாளர் அஜய் பி சாவ்னி இணைத் தலைவராகவும் உள்ளார்.

10. இந்தியாவில் எந்தத் தேதியில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) மார்ச் 4 

ஆ) மார்ச் 3

இ) மார்ச் 1

ஈ) மார்ச் 2

 • பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.4ஆம் தேதியன்று இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கானக் கருப் பொருளாக, “Nurture young minds develop a Safety Culture” தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு வாரம் மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.
 • நடப்பு 2022ஆம் ஆண்டு 51ஆவது தேசிய பாதுகாப்பு நாள் / தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் தகவல்

வங்கக்கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் கூறும்போது,

“மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான். இதுவரை 1938, 1994 ஆகிய இரு ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் ஏற்பட்டுள்ளன. இவையிரண்டும் தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்ந்து கரையை வந்து அடைவதற்குள் வலுவிழந்துவிட்டன. 28 ஆண்டுகட்குப் பிறகு மீண்டும் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

2. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுகத் தேர்தல்

தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2006இலும் இதுபோன்றே மறைமுகத் தேர்தல் நடந்தது.

3. துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணிக்கு தங்கம்

எகிப்தில் நடைபெறும் ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.

இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீநிவேதா, ஈஷா சிங், ருசிதா வினெர்கர் ஆகியோர் கூட்டணி 16-6 புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா கேத்ரினா எக்னர், சாண்ட்ரா ரீட்ஸ், கேரினா விம்மர் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி, இப்போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

3. இன்றுமுதல் மகளிர் உலகக்கோப்பை

ஐசிசியின் மகளிர் ஒன்டே கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6ஆம் தேதி பாகிஸ்தானைச் சந்திக்கிறது.

பின்னர் நியூஸிலாந்தை 10ஆம் தேதியும், மேற்கிந்தியத் தீவுகளை 12ஆம் தேதியும், இங்கிலாந்தை 16ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 19ஆம் தேதியும், வங்கதேசத்துடன் 22ஆம் தேதியும், தென்னாப்பி -ரிக்காவுடன் 27ஆம் தேதியும் விளையாடுகிறது.

கரோனா சூழல்காரணமாக ஓராண்டு தாமதமாக நடக்கும் இப்போட்டியின் ஆட்டங்கள், நியூஸிலாந்தின் 6 நகரங்களி -ல் நடைபெறவுள்ளன. 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும், மற்றொரு அணி -யுடன் தலா ஒருமுறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் இருபிரிவுகளிலும் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.

4. நீர்மின்திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்: பாகிஸ்தானுக்கு அளிக்க இந்தியா ஒப்புதல்

சிந்து நதி மற்றும் அதன் கிளையாறுகளில் கட்டப்பட்டு வரும் நீர்மின்திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

சிந்து, ஜீலம், சீனாப் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தானும், சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய நதிகளின் நீரை இந்தியாவும் தடையின்றி பயன்படுத்திக்கொள்ள இருநாடுகளுக்கு இடையே 1960இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி, சிந்து நதி நீர் நிரந்தர ஆணையத்தின் கூட்டம், ஆண்டுக்கு ஒரு முறை பாகிஸ்தானில் அல்லது இந்தியாவில் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் கூட்டம் நடைபெற்றதால், இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் மார்ச்.1ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

அதில், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு சிந்து நதி நீர் ஆணையர் மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இந்தியத் தரப்பில் சிந்து நதி நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு விவாதித்தன.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கூறியிருப்பதாவது:

“சிந்து நதி நீர் ஆணைய ஒப்பந்தப்படி, அந்த நதிகளில் இந்தியா நீர்மின் திட்டங்களைத் தொடங்கலாம். அந்தத் திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாகக் கருதினால் பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

சிந்து மற்றும் அதன் கிளையாறுகளில் 10 நீர்மின் திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் 9 திட்டங்கள் 25 மெகாவாட் மற்றும் அதற்குக் குறைவான மின்னுற்பத்தித் திறன் கொண்டவை. இந்த நீர்மின் திட்டங்கள்பற்றிய விவரங்களை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில், அந்நாட்டு குழுவிடம் இந்தியத் தரப்பு அளித்தது. ஆனால், அந்த விவரங்கள் தெளிவின்றி இருப்பதாக பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

அதற்கு, ‘சிறிய நீர்மின் திட்டங்களின் வரைபடங்கள், தொழில்நுட்பங்கள்பற்றிய விவரங்கள் மாநில அரசுகளிடம் போதிய அளவில் இருக்காது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுத்தரப்படும்’ என இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபங்களை திறந்த மனதுடன் பரிசீலிக்கவும் இந்திய தரப்பு ஒப்புக்கொண்டது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டுள்ளது.

5. தேசிய செஸ்: அர்ஜூன் சாம்பியன்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வாகை சூடினார்.

11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி குகேஷ், பி இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘டை-பிரேக்கரில்’ வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு `6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

குகேஷ் 2ஆம் இடமும், இனியன் மூன்றாமிடமும் பிடிக்க, நடப்பு சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்தார்.

திவ்யா முதலிடம்: முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3ஆம் இடமும் பிடித்தனர்.

6. இன்று தேசிய பாதுகாப்பு தினம்

“இளம்தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாசாரத்தினை மேம்படுத்த புகட்டுவோம்” என்ற கருவுடன் இன்று 51ஆவது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு குழுமம் தொடங்கப்பட்ட மார்ச்.4ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் தேசிய பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1. What is the theme of the ‘National Science Day 2022’?

A) Integrated Approach in Science and Technology for Sustainable Future 

B) Science and Technology for Atmanirbhar Bharat

C) Vigyan Sarvatra Pujyate

D) Amrut Kaal Vigyan

 • National Science Day is being observed in India every year on 28th of February to commemorate the discovery of the ‘Raman Effect’. On the same day, CV Raman announced the discovery of the ‘Raman Effect’ and he was awarded the Nobel Prize in 1930.
 • The theme for National Science Day 2022 is “Integrated Approach in Science and Technology for Sustainable Future”.

2. Which is the largest exported items among all fresh food category from India?

A) Fresh Grapes 

B) Guava

C) Fresh Mangoes

D) Betel Leaves & Nuts

 • India’s export of fresh fruits has also witnessed considerable growth. Fresh Grapes is the largest exported items among all fresh food category. During 2020–21, the export value of Fresh Grapes was USD 314 million.
 • Export of other Fresh Fruits stood at USD 302 million, Fresh Mangoes at USD 36 million and Others (Betel Leaves & Nuts) at USD 19 million. During 2020–21, Fresh grapes and Other Fresh Fruits accounted for 92 per cent in India’s total export of Fresh Fruits.

3. Who is the only contestant from India, in the Beijing Winter Olympics 2022?

A) Arif Khan 

B) Neeraj Chopra

C) Shiva Keshavan

D) Jagdish Singh

 • Arif Khan, who will be competing in the Slalom and Giant Slalom events, is the only contestant from India, in the Beijing Winter Olympics 2022.
 • India announced a diplomatic boycott of the Beijing Winter Olympics, after the honour of carrying the Olympic torch went to a Chinese soldier who was wounded in the Galvan clash two years ago.

4. CPEC is an Economic Corridor connecting Xinjiang region of China and Gwadar Port of which country?

A) Iran

B) Pakistan 

C) Afghanistan

D) Kazakhstan

 • China–Pakistan Economic Corridor (CPEC) is a 3,000–km long route of infrastructure projects connecting China’s northwest Xinjiang Uygur Autonomous Region and the Gwadar Port in the western province of Balochistan in Pakistan.
 • Pakistan recently signed a new agreement with China to begin the second phase of the USD 60 billion China–Pakistan Economic Corridor.

5. ‘Baal Swaraj portal’ is associated with which institution?

A) Pratham Foundation

B) National Commission for Protection of Child Rights 

C) Amnesty International

D) National Human Rights Commission

 • National Commission for Protection of Child Rights (NCPCR) organized a national level meeting on Identification, Rescue and Rehabilitation of Children in Street Situations with NGOs and UN agencies. NCPCR developed a Standard Operating Procedure (SOP) 2.0 for Care and Protection of Children in Street Situations.
 • It also devised ‘Baal Swaraj portal – Children in Street Situations (CiSS)’. Earlier, NCPCR developed “Bal Swaraj (Covid–Care)” portal to track children who lost parent due to Covid–19.

6. What does ‘S’ stand for in ‘SWIFT’ financial messaging service?

A) Secure

B) Society 

C) Simple

D) Service

 • The SWIFT system stands for the Society for Worldwide Interbank Financial Telecommunication. It is the world’s leading provider of secure financial messaging services.
 • Recently, the US and European Union (EU) have decided to cut off a number of Russian banks from the SWIFT platform. The assets of Russia’s central bank are also expected to be frozen, to restrict Russia’s ability to access its overseas reserves.

7. ‘Millennium Challenge Corporation (MCC)’ is an initiative of which country?

A) USA 

B) Russia

C) China

D) Japan

 • Millennium Challenge Corporation (MCC) created by the United States in 2004, offers large grants to support economic growth. Recently, Nepal’s Parliament has approved a USD 500m US grant, in spite of several street protests and opposition in the country.
 • Nepal signed the US government’s MCC pact in 2017 to fund infrastructure projects. But its ratification was not made due to divisions within political parties.

8. Which is the headquarters of the International Atomic Energy Agency (IAEA)?

A) Geneva

B) Vienna 

C) New York

D) Moscow

 • The International Atomic Energy Agency (IAEA) is an international organization, which seeks to promote peaceful use of nuclear energy, and to inhibit its use for nuclear weapons. It is headquartered at Vienna.
 • The IAEA’s 35–nation Board of Governors has called for an emergency meeting about Ukraine. Board members Canada and Poland called the meeting at the request of Ukraine, which is not on the Board.

9. Which Union Ministry released a Draft Report on InDEA 2.0?

A) Ministry of Electronics and Information and Technology 

B) Ministry of Science and Technology

C) Ministry of Finance

D) Ministry of Corporate Affairs

 • Ministry of Electronics and Information and Technology (MeitY) has released a draft report on India Digital Ecosystem Architecture 2.0 or the InDEA 2.0. InDEA 2.0 proposes a model of ‘Federated Digital Identities’, which seeks to optimise the number of digital identities that a citizen needs to have.
 • The draft report is headed by former MeitY secretary J Satyanaraya as Chairman and current secretary Ajay P Sawhney as Co–Chairman.

10. The National Safety Day is observed on which date in India?

A) March 4 

B) March 3

C) March 1

D) March 2

 • March 4 is observed every year as National Safety Day in India with the aim of creating awareness among people with respect to safety measures. This year, the focus of National Safety Day is on road safety and the theme is ‘Sadak Suraksha’ (road safety).
 • The celebrations this year have also been spread over a week and National Safety Week will be observed from March 4 to March 10. The year 2022 marks the observance of the 51st National Safety Day/National Safety Week Campaign.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!