6th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பசிபிக் பெருங்கடல் தரையில் சிக்கித் தவித்ததற்காக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘படானியா II’ என்றால் என்ன?

அ) சரக்குக்கப்பல்

ஆ) நீர்மூழ்கிக்கப்பல்

இ) சுரங்கப்பணி செய்யும் ரோபோ

ஈ) செயற்கைக்கோள் தொகுதி

 • பசிபிக் பெருங்கடலில் நான்கு கிமீக்கும் அதிகமான ஆழத்தில் சோதனை மேற்கொண்டிருந்த கடற்படுகையைத் தோண்டி ஆராயும் படானியா II என்ற ரோபோ அங்கு சிக்குண்டது. அதனை புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி நிறுவனமான டெம் குழுமத்தின் ஆழ்கடல் ஆய்வுப்பிரிவான குளோபல் சீ மினரல் ரிசோர்சஸ் சோதனைசெய்தது. பசிபிக் கடற்பரப்பில் காணப்படும் கோபால்ட் மற்றும் பிற மின்கல உலோகங்கள் நிறைந்த முடிச்சுகளை ஆராய்வதற்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டது.

2. சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டுசெல்வதற்கு, உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம், பின்வரும் எந்த மாநிலத்திற்கு அனுமதியளித்துள்ளது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) தெலங்கானா

ஈ) ஆந்திர பிரதேசம்

 • சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டு செல்வதற்கு, தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய உள்நாடு வான் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த விலக்கு ஓர் ஆண்டுகாலத்திற்கோ (அ) அடுத்த உத்தரவு வரையோ செல்லுபடியாகும். COVID-19 தடுப்பூசியை விநியோகிக்க டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து சாத்தியக்கூறு ஆய்வுசெய்ய, ஏப்ரல் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலுக்கு அவ்வமைச்சகம் அனுமதியளித்தது.

3. “இந்தியாவில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்கள்” என்ற தலைப்பில் கூட்டு திட்டமொன்றை வெளி -யிட்டுள்ள நிறுவனம் எது?

அ) APEDA

ஆ) MPEDA

இ) TRIFED

ஈ) NABARD

 • மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் முதன்மை நிறுவனம் TRIFED ஆகும். “இந்தியாவில் பழங்குடியின குடும்பங்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்கள்” என்ற தலைப்பில் ஒரு கூட்டு திட்டத்தில் TRIFED நுழைந்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத்தணிப்பதற்கும் இலக்காகக்கொண்ட ஓர் அறக்கட்டளையான LINK FUND இந்தத் திட்டத்திற்காக TRIFED உடன் கைகோர்த்து உள்ளது.

4. உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளிக்கதிர்கள் ஆகியவை எந்த நாட்டால் வழங்கப்படுகிற விருதுகளாகும்?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) ரஷ்யா

ஈ) பிரான்ஸ்

 • நாற்பதாண்டுகளாக கர்நாடகாவில் ஜப்பானிய மொழி கற்பித்துவரும் 79 வயதான பெங்களூரு ஆசிரியர் ஷியாமலா கணேஷ், ஜப்பானின் உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளிக் கதிர்கள் ஆகிய கெளரவங்களைப் பெற்றார். சர்வதேச உறவுகளில் சாதனைகள், ஜப்பானிய கலாச்சாரத்தை மேம்படுத்துதல், தங்கள் துறையில் முன்னேற்றம் (அ) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இந்தக்கெளரவம் வழங்கப்படுகிறது. ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சூரியனில் இது ஐந்தாம் வகுப்பு.

5. உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 3

ஆ) மே 4

இ) மே 5

ஈ) மே 6

 • ஆண்டுதோறும் மே.3 அன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. UN பொது அவையானது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந் நாளை அறிவித்தது. இதுதொடர்பான தீர்மானத்தை, ஐநா, கடந்த 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. “Information as a Public Good” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

6. கீழ்காணும் எந்த மாநிலத்தில், முதல் பசுமை சூரிய ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்தும் ஆலையை இந்திய இராணுவமானது திறந்துள்ளது?

அ) இராஜஸ்தான்

ஆ) சிக்கிம்

இ) நாகாலாந்து

ஈ) தெலங்கானா

 • வடக்கு சிக்கிமில் 56 KVA’இன் முதல் பசுமை சூரிய ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்தும் ஆலையை 16000 அடி உயரத்தில் இந்திய இராணுவம் திறந்துள்ளது. வனடியம் அடிப்படையிலான மின்கல தொழி -ல்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தத் திட்டம், மும்பை IIT உடன் இணை -ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் 175 GW புதுப்பி -க்கத்தக்க ஆற்றலை உற்பத்திசெய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளது.

7. எதன் பரிந்துரையின்கீழ், SDRF பங்களிப்பானது மாநிலங்களுக்கு இரு சம தவணைகளில் வழங்கப்படுகிறது?

அ) திட்ட ஆணையம்

ஆ) நிதி ஆணையம்

இ) NITI ஆயோக்

ஈ) இந்திய உச்சநீதிமன்றம்

 • நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், 2021-22ஆம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பங்கின் முதல் தவணையை, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை, பொதுவாக வழங்கப்படும் காலகட்டத்தைவிட முன்கூட்டியே விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு, `8873.6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுவா -க ஜூன் மாதத்தில் இது விடுவிக்கப்படும்.
 • விடுவிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவீதத்தை, அதாவது, `4436.8 கோடியை, COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற லித்தானி ஆறும் கரவுன் ஏரியும் அமைந்துள்ள நாடு எது?

அ) லாவோஸ்

ஆ) லெபனான்

இ) ஈரான்

ஈ) இஸ்ரேல்

 • லெபனானில் அமைந்துள்ள ஒரு முதன்மை நீராதாரம் லித்தானி ஆறு ஆகும். இது பெக்கா பள்ளத்தாக்கில் பாய்ந்தோடி மத்தியதரைக்கடலில் கலக்கிறது. சமீபத்தில், லெபனானின் லித்தானி ஆற்றில் உள்ள கரவுன் ஏரிக்கரையில் டன் கணக்கில் மீன்கள் இறந்துகிடந்தன. இவ்வேரிக்கு அருகே, கழிவுநீரால் நீர் மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.

9. வார்சா மம்மி திட்டத்தில் முதல் முறையாக எந்த வகை மம்மி கண்டுபிடிக்கப்பட்டது?

அ) உறுப்பு நீக்கப்பட்ட மம்மி

ஆ) கர்ப்பிணி மம்மி

இ) மூன்றாம் பாலின மம்மி

ஈ) பச்சிளங்குழந்தை மம்மி

 • வார்சா மம்மி திட்டத்தில், உலகின் முதல் கர்ப்பிணி மம்மியை ஆராய்ச்சி -யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கூறப்படும் இந்த மம்மி, ஓர் ஆண் போதகருக்கு சொந்தமான சவப்பெட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1826ஆம் ஆண்டில் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு இந்த மம்மி நன்கொ -டையாக வழங்கப்பட்டது. இந்தக்கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களுக்கு பண்டைய காலங்களில் நிலவிய பேறுகாலத்திற்கு முந்தைய நலன் குறித்த முதலாவது ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “MACS 1407” என்றால் என்ன?

அ) COVID தடுப்பு மருந்து

ஆ) சோயாபீன்ஸ் வகை

இ) புதிய கோள்

ஈ) பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

 • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் MACS 1407 என்ற புதிய அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சி-எதிர்ப்புத் திறன்கொண்ட சோயாபீன்ஸை உருவாக்கியுள்ளனர்.
 • இந்த விதை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரான்ஸில் இருந்து புறப்பட்ட மேலும் 3 ரபேல் விமானங்கள்

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன. இந்த விமானங்களுடன் சேர்த்து இந்தியாவிடம் உள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கவுள்ளது. பிரான்ஸிடம் இருந்து `59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை கொள் முதல் செய்ய அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று முதல் தொகுப்பாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்களின் ஐந்தாவது தொகுப்பாக 4 விமானங்கள் கடந்த மாதம் 21 அன்று இந்தியா வந்தன.

இந்நிலையில், மேலும் 3 ரபேல் விமானங்கள் பிரான்ஸிலிருந்து இந்தியா புறப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. இதை அடுத்து, இந்திய வான்படையில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிக்கவுள்ளது. தற்போது வந்து சேரவுள்ள விமா -னங்கள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசீமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படவுள்ளன.

1. What is Patania II, which was seen in the news recently, for being stranded on the Pacific Ocean floor?

A) Container Ship

B) Submarine

C) Mining Robot

D) Satellite module

 • A seabed mining robot, which was being tested on the Pacific Ocean floor at a depth of more than 4 km has become detached. Patania II is a 25–tonne mining robot prototype, which was being tested by Global Sea Mineral Resources (GSR), the deep–sea exploratory division of the famous dredging company DEME Group. The robot was meant to collect the nodules rich in cobalt and other battery metals found on the seabed.

2. Which state has been permitted by the Civil Aviation Ministry to use drones for experimental delivery of vaccines?

A) Kerala

B) Karnataka

C) Telangana

D) Andhra Pradesh

 • The Civil Aviation Ministry has permitted the Telangana government to use drones for experimental delivery of vaccines. This exemption will be valid for a period of one year or until further orders.
 • In the month of April, the Ministry had permitted the Indian Council of Medical Research (ICMR) to conduct a feasibility study on using drones to deliver COVID–19 vaccine.

3. Which institution has unveiled a collaborative project titled “Sustainable Livelihoods for Tribal Households in India”?

A) APEDA

B) MPEDA

C) TRIFED

D) NABARD

 • TRIFED is the nodal agency working for the empowerment of tribal people, under the aegis of the Ministry of Tribal Affairs. TRIFED has entered into a collaborative project titled “Sustainable Livelihoods for Tribal Households in India”. The LINK Fund, a foundation which aims to eradicate poverty and mitigate the effects of climate change, is also joining hands with TRIFED for this project.

4. Order of the Rising Sun, Gold and Silver Rays is an honour conferred by which country?

A) China

B) Japan

C) Russia

D) France

 • Indian Institute of Technology–Bombay (IIT–B), has set up a demonstration unit to convert nitrogen generators, into oxygen generators by modifying the existing nitrogen plant set up. The oxygen generated by this plant at IIT–B lab was tested and found to be 93–96% pure and at 3.5 atmospheric pressure.

5. When is the World Press Freedom Day observed every year?

A) May 3

B) May 4

C) May 5

D) May 6

 • Every year, 3rd May is observed as World Press Freedom Day by the United Nations. The United Nations General Assembly (UNGA) declared this day to raise awareness of the importance of freedom of the press and to lay emphasis on the right to freedom of expression. A resolution in this regard was passed by the UN in the year 1993. The theme for the year 2021 is “Information as a Public Good”.

6. Indian Army has inaugurated the First Green Solar Energy harnessing plant in which state?

A) Rajasthan

B) Sikkim

C) Nagaland

D) Telangana

 • Indian Army inaugurated the First Green Solar Energy harnessing plant of 56 KVA in North Sikkim, at an altitude of 16000 ft. The project, which uses Vanadium based battery technology, was completed in collaboration with IIT Mumbai. India has fixed a target of producing 175 GW of renewable energy by 2022.

7. The SDRF contribution is released in two equal instalments to the states, as per the recommendation of ………?

A) Planning Commission

B) Finance Commission

C) NITI Aayog

D) Supreme Court of India

 • The Finance Ministry has recently released in advance the first instalment worth Rs 8,873.6 crore of the state disaster response fund (SDRF) for the current fiscal, to the states.
 • SDRF contribution is released in two equal instalments to the states, as per the recommendation of the Finance Commission. Normally, the first instalment of SDRF is released in the month of June. Around half of the amount released, can be used by the states for COVID–19 containment measures.

8. Litani river and Qaraoun lake, which were making the news recently, are located in which country?

A) Laos

B) Lebanon

C) Iran

D) Israel

 • The Litani River is an important water resource located in Lebanon. It rises Beqaa Valley and gets into the Mediterranean Sea. Recently, tonnes of dead fish have washed up on the banks of the Qaraoun lake on Lebanon’s Litani river.
 • Environmental Activists have been warning of water pollution caused by sewage and waste, near the lake for several years.

9. Which type of mummy was discovered for the first time in the Warsaw Mummy Project?

A) Amputee Mummy

B) Pregnant Mummy

C) Transgender Mummy

D) Newborn Mummy

 • Researchers have discovered the world’s first–known pregnant mummy, in the Warsaw Mummy Project. The mummy, which is said to be dating from the first century in Egypt, has been found inside the coffin belonging to a male priest. The mummy was donated to the University of Warsaw in Poland in 1826.
 • This discovery helps the researchers to gather first hand evidence of prenatal health in ancient times.

10. What is “MACS 1407”, which is seen in the news recently?

A) COVID vaccine

B) Soybean variety

C) New planet

D) Anti–tank missile

 • Scientists of Agharkar Research Institute (ARI), Pune in collaboration with Indian Council for Agricultural Research (ICAR) have developed a new high–yielding and pest–resistant variety of soybean named MACS 1407. This seed is suited for cultivation in North Eastern states and in states like West Bengal, Jharkhand and Chhattisgarh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *