Tnpsc

8th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. தேசிய மாணவர் படையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி

இ) கொச்சின்

ஈ) விசாகப்பட்டினம்

  • தேசிய மாணவர் படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் இளையோர் பிரிவாகும். அதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • தேசிய மாணவர் படை தலைமை இயக்குநரகத்தின் திறன்பேசி பயிற்சி செயலி 2.0’ஐ 2021 மே.28 அன்று பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தொடங்கிவைத்தார். COVID-19 பெருந்தொற்றின்போது நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையினருக்கு இணையவழியில் பயிற்சியளிப்பதற்கு இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும்.

2. புலம்பெயர் வனவுயிரிகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர் யார்?

அ) சோனு சூத்

ஆ) ரண்தீப் ஹூடா

இ) மனோஜ் பாஜ்பாய்

ஈ) சுனில் ஷெட்டி

  • ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழியங்கும் புலம்பெயர் வனவுயிரிகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரண்தீப் ஹூடா நீக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ரண்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். CMS அல்லது பான் தீர்மானம் என்பது கடந்த 1979’இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச தீர்மானமாகும். அது புலம்பெயர்ந்த உயிரினங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. உலக கடலாமை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மே 22

ஆ) மே 23

இ) மே 24

ஈ) மே 25

  • ஒவ்வோர் ஆண்டும் மே.23 அன்று உலகம் முழுவதும் உலக கடலாமை நாள் அனுசரிக்கப்படுகிறது. நிலம் மற்றும் நீரில் வாழும் ஆமை மற்றும் அவற்றின் பாதிக்கப்படக்கூடிய வாழ்விடங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1990’இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆமை மீட்பு என்ற இலாபநோக்கற்ற அமைப்பு, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் உலக கடலாமை நாள் கொண்டாட்டத்திற்கு தலைமைதாங்குகிறது. “Turtles Rock!” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

4. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு ஐநா அமைதிகாப்போர் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Women in Peacekeeping: A Key to Peace

ஆ) Honouring Peacekeeping

இ) Women, Peace and Security

ஈ) The road to a lasting peace

  • அமைதிகாக்கும் படையினரின் பங்களிப்பை போற்றுதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.29 அன்று பன்னாட்டு ஐநா அமைதிகாப்போர் நாள் கொண்டாடப்படுகிறது. “The road to a lasting peace: Leveraging the power of youth for peace and security” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  • கடந்த 1948ஆம் ஆண்டு முதல், தங்கள் சேவையின்போது உயிரிழந்த 3,900’க்கும் மேற்பட்ட ஐநா அமைதிகாக்கும் படையினரை ஐநா அவை கெளரவித்து வருகிறது.

5. நடப்பாண்டில் (2021) வரும் உலக புகையிலை ஒழிப்பு நாளுக் -கான கருப்பொருள் என்ன?

அ) Tobacco: deadly in any form or disguise

ஆ) Tobacco – a threat to development

இ) Tobacco kills, don’t be duped

ஈ) Quit Tobacco to be a Winner

  • உலகளாவிய புகையிலை நுகர்வினை 24 மணிநேர காலத்திற்கு தவிர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வோர் ஆண்டும் மே.31 அன்று உலக புகையிலை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • புகைப்பதனால் ஏற்படும் உடல்நலச்சீர்கேடு விளைவுகளால் தற்போது உலகெங்கிலும் கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணிக் -கின்றனர். இதில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புகைப்பவர்களின் அருகில் இருப்பதாலேயே நோய்த்தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். “Quit Tobacco to be a Winner” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமும் மே.30 அன்று அதன் மாநில நாளைக் கொண்டாடும் மாநிலமும் எது?

அ) கோவா

ஆ) சிக்கிம்

இ) திரிபுரா

ஈ) மேகாலயா

  • கோவா – இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடி -ப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.
  • அதன்பிறகு கோவா, டாமன் & டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் & டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.

7. பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மே 28

ஆ) மே 29

இ) மே 30

ஈ) மே 31

  • ஆண்டுதோறும் மே.29 அன்று உலகெங்கும் பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1953ஆம் ஆண்டு இதே நாளன்று, நேபாளத்தின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தனர். போற்றத்தக்க இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் மனி -தர்களாவர் இவ்விருவர்.
  • 2008ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி காலமானதிலிருந்து இந்நாளை பன்னாட்டு எவரெஸ்ட் நாளாகக் கொண்டாட நேபாளம் முடிவுசெய்தது.

8. ஒலிபரப்பாளர்களின் உயர்மட்ட அமைப்பான இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையின் புதிய பெயர் என்ன?

அ) Indian Broadcasting Union

ஆ) Indian Broadcasting and Digital Foundation

இ) Indian Broadcasting and OTT Union

ஈ) National Digital Broadcasting Federation

  • ஒலிபரப்பாளர்களின் உயர்மட்ட அமைப்பான இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையானது இந்திய ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் ஊடக உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சில் என்ற தன்கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதன்மூலம், டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கும் வகையில் அதன் பார்வையை விசாலாமாக்குகிறது இந்த அமைப்பு. ஒலிபரப்பாளர்களையும், OTT தளங்களையும் இது ஒரே கூரையின்கீழ் கொண்டுவரும்.

9. 1977 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எந்த அரசு சாரா அமைப்பு, மே.28 அன்று நினைவுகூரப்படுகிறது?

அ) ஐக்கிய நாடுகள்

ஆ) உலக நலவாழ்வு அமைப்பு

இ) பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ) உலக வங்கி

  • பன்னாட்டு மன்னிப்பு அவை என்பது மனிதவுரிமைகளை மையமாகக் கொண்ட ஓர் அரசு-சாரா அமைப்பாகும். இது, கடந்த 1961ஆம் ஆண்டில் லண்டனில் நிறுவப்பட்டது. பன்னாட்டு பொது மன்னிப்பு நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று கொண்டாடப்படுகிறது.
  • சித்திரவதைக்கு எதிரான பரப்புரைக்காக, 1977ஆம் ஆண்டில் அமைதிக் -கான நோபல் பரிசும், 1978’இல் மனிதவுரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் பரிசும் வழங்கப்பட்டது.

10. எந்த மாநிலம், சமீபத்தில் தனது கிராமப்புற வீடுகளுக்கு, சூரிய ஆற்றல் அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) ஒடிஸா

இ) அஸ்ஸாம்

ஈ) கோவா

  • முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா மாநில அரசு, மாநிலத்தின் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சூரிய ஆற்றல் அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளது. மின் கட்டமைப்பின் வழியான இணைப்பு சாத்தியமில்லாத வீடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, கோவா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கோவிஷீல்ட் தடுப்பூசி மூலமாக அதிக நோய்எதிர்ப்புத் திறன்: ஆய்வில் தகவல்

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியைவிட கோவிஷீல்ட் தடுப்பூசியின் மூலமாக அதிக நோய்எதிர்ப்புத்திறன் உருவாவதாக ஆய்வில் தெரியவந் -துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின், சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளின் செயல்திறனை ஒப்பிடுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

13 மாநிலங்களைச் சேர்ந்த 22 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கரோனா தடுப்பூசிகளின் இருதவணைகளையும் செலுத்திக்கொண்ட 515 சுகாதாரப்பணியாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 210 பேர் பெண்களாவர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. அதில், கரோனா தீநுண்மியை எதிர்கொள்வதற்கான நோயெதிர்பொருள் எவ்வளவு உருவாகியுள்ளது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர் அவதேஷ் குமார் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்ட பிறகு, உடலில் கரோனா தீநுண்மிக்கு எதிராக நோயெதிர்ப்புத்திறன் சிறப்பாக உருவாகிறது. எனினும். கோவேக்ஸின் தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில் கோவிஷீல்ட் தடுப்பூசியில் நோயெதிர்பொருள் அதிக அளவில் உருவாகி -றது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவா்களில் 425 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 98.1% பேருக்கு அதிக அளவில் நோயெதிர்பொருள் உருவாகியிருந்தது.

கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்ட 90 பேரில் 80 சதவீதம் பேருக்கு மட்டுமே அதிக அளவில் நோய்எதிர்பொருள் உருவாகியிருந்தது.

கரோனா தீநுண்மியின் புறப்பரப்பு புரதத்தைத் தாக்கக்கூடிய நோய்எதிர் பொருள் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களிடம் அதிகமாக உருவாகியிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். பாலினம், எடை, உயரம், இணை-நோய்கள் உள்ளிட்ட காரணிகள் உடலில் நோய்எதிர் பொருள் உருவாவதில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மட்டும் நோய்எதிர்ப்புத்திறன் குறைவாக உருவாகியிருந்தது.

கரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, 6 வாரங்களுக்குப்பிறகு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அதிகளவில் நோய்எதிர்பொருள் உருவாகியிருந்தது. கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 5.5 சதவீதத்தினருக்கும், கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 2.2 சதவீததினருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2. இந்திய MSME துறையை ஊக்குவிக்க `3,650 கோடி திட்டம்: உலக வங்கி ஒப்புதல்

கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்துறையை புத்துயிரூட்ட `3,650 கோடி ($50 கோடி) திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது. இது குறித்து உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குறு, சிறு & நடுத்தர தொழில் துறையைப் புத்துயிரூட்ட இந்திய அரசு தேசிய அளவிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு உதவும் வகையில் `3,650 கோடி திட்டத்துக்கு உலக வங்கியின் செயல் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள 5,55,000 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும். அத்துடன், இந்தத் துறைக்கு புத்துயிரளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள `24,820 கோடி கடனுதவித் திட்டத்தின் ஒருபகுதியாக `1,13,150 கோடி நிதியைத் திரட்டவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உலக வங்கி அளிக்கும் இரண்டாவது உதவித்திட்டம் இது. ஏற்கனவே, MSME அவசரகால உதவி திட்டத்தினகீழ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலையில் `5,475 கோடி திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. அதன்மூலம், 50 இஇலட்சம் குறு, சிறு நிறுவனங்கள் அரசிடமிருந்து கடனுதவி பெற்று, தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இப்போது புதிதாக அளித்திருக்கும் ஒப்புதல்மூலம், MSME துறையின் உற்பத்தியைப்பெருக்கவும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கென கடந் -த ஓராண்டில் `9,125 கோடி அளவில் உலக வங்கி ஒப்புதல் அளித்திருக் -கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் NASA திட்டத்தை வழிநடத்தும் தமிழ்ப்பெண்

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் NASA’இன் திட்டத்தில் தமிழ்ப் பெண் முக்கிய பங்காற்றிவருகிறார். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லிம்யம்ஸ் உட்பட பலர் அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வுமையத்தின் திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் NASA’இன் பெர்ஸிவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இந்த திட்டத்தை கர்நாடகாவின் சுவாதி மோகன் வழிநடத்தி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த வரிசையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி, நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் NASA’இன் திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

கடந்த 1969 ஜூலை 20ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலா 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

வரும் 2024ஆம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப NASA தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியான் என்ற விண்கலத்தை NASA உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 2014ஆம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று NASA பெயரிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஓரியான் விண்கலம் ஆளில்லாமல் நிலவின் விண்வெளி பகுதிக்கு செலுத்தப்பட்டு, பூமிக்கு திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் வரும் 2023 அல்லது 2024ஆம் ஆண்டில் ஓரியான் விண்கலம், விண்வெளி வீரர்க -ளுடன் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணை தயாரிப்பு திட்டம்

இந்த திட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ஏவுகணை தயாரிப்பு திட்டப் பணிகளை தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த சுபாஷினி அய்யர் வழிநடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை NASA செயல்படுத்த உள்ளது. நிலவை தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் இந்ததிட்டம் முன்னோடியாக இருக்கும்.

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரியான் விண்கலம் 4.5 இலட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் செலுத்தப்பட உள்ளது. இது 3 வார பயண திட்டமாகும். எஸ்எல்எஸ் என்ற உலகின் அதிகசக்திவாய்ந்த ஏவுகணைடில், ஓரியான் நிலவுக்கு செலுத்தப்பட உள்ளது. NASA மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்த ஏவுகணைடை தயாரிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போயிங்நிறுவன குழுவின் மேற்பார்வையாளரா -க பணியாற்றி வருகிறேன். 500 விநாடிகளில் 5.3 இலட்சம் அடி பாயும் வகையில் ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1. Where is the headquarters of the National Cadet Corps located?

A) Mumbai

B) New Delhi

C) Cochin

D) Vishakapatnam

  • National Cadet Corps is the youth wing of the Indian Armed Forces with its headquarters located in New Delhi. Defence Secretary has recently launched Directorate General National Cadet Corps (NCC) Mobile Training App Version 2.0. This app will assist in conducting countrywide online training to NCC cadets during the COVID–19 pandemic conditions.

2. Which Indian personality has been removed as ambassador of Convention for the Conservation of Migratory Species of Wild Animals (CMS)?

A) Sonu Sood

B) Randeep Hooda

C) Manoj Bajpai

D) Sunil Shetty

  • Actor Randeep Hooda has been removed as the ambassador of the Convention for the Conservation of Migratory Species of Wild Animals (CMS), United Nation’s environmental treaty.
  • This announcement came after a controversy over his derogatory comments against Bahujan Samaj Party chief Mayawati. CMS or Bonn Convention, is an international agreement signed in 1979, that aims to conserve migratory species throughout their ranges.

3. When is World Turtle Day celebrated annually, across the world?

A) May 22

B) May 23

C) May 24

D) May 25

  • Every year, the World Turtle Day is observed on May 23, across the world. The day is celebrated to sensitise people about turtle and tortoise and their vulnerable habitats.
  • A non–profit organization called American Tortoise Rescue, that was established in 1990 leads the World Turtle Day celebration since 2000. The 2021 theme of the day is, “Turtles Rock!”

4. What is the theme of the International Day of United Nations Peacekeepers, 2021?

A) Women in Peacekeeping: A Key to Peace

B) Honouring Peacekeeping

C) Women, Peace and Security

D) The road to a lasting peace

  • The International Day of United Nations Peacekeepers is celebrated on 29 May every year, to pay tribute to the contribution of the peacekeepers. This year the theme of the International Day of United Nations Peacekeepers, 2021 is “The road to a lasting peace: Leveraging the power of youth for peace and security”.
  • UN honours more than 3,900 UN peacekeepers who have lost their lives during their service, since 1948.

5. What is the 2021 theme of World No Tobacco Day?

A) Tobacco: deadly in any form or disguise

B) Tobacco – a threat to development

C) Tobacco kills, don’t be duped

D) Quit Tobacco to be a Winner

  • The World No Tobacco Day is observed every year on May 31 to encourage a 24–hour period of abstinence from all forms of tobacco consumption around the globe.
  • The day is further intended to draw attention to the widespread prevalence of tobacco use and to negative health effects, which currently lead to nearly 6 million deaths each year worldwide, including 600,000 of which are the result of non–smokers being exposed to second–hand smoke. The 2021 theme is “Quit Tobacco to be a Winner”

6. Which is the smallest state of India by area that celebrates its statehood day on May 30?

A) Goa

B) Sikkim

C) Tripura

D) Meghalaya

  • Goa is the smallest state of India, by are and the fourth–smallest state by population. It recently celebrated its statehood day on May 30. In 1961, Indian Army invaded and annexed Goa, Daman and Diu into the Indian union, through Operation Vijay.
  • After that, Goa along with Daman and Diu, was categorised as a centrally administered Union territory of India. On 30 May 1987, the union territory was split and Goa was made the 25th state of India and Daman and Diu remained as a UT.

7. When is International Everest Day celebrated across the world?

A) May 28

B) May 29

C) May 30

D) May 31

  • International Everest Day is celebrated on May 29, across the world every year. On the same day in the year 1953, Tenzing Norgay of Nepal and Edmund Hillary of New Zealand had successfully scaled the Mt. Everest. The mountaineer duo were the first human beings to achieve the prestigious feat.
  • Nepal decided to observe the day as International Everest Day since the climber Edmund Hillary passed away in the year 2008.

8. What is the new name of the Indian Broadcasting Foundation (IBF), the top body of broadcasters?

A) Indian Broadcasting Union

B) Indian Broadcasting and Digital Foundation

C) Indian Broadcasting and OTT Union

D) National Digital Broadcasting Federation

  • The Indian Broadcasting Foundation (IBF), the top body of broadcasters, will be renamed the Indian Broadcasting and Digital Foundation (IBDF). The apex body is also expanding its scope to cover digital streaming platforms, by forming a self–regulatory body, the Digital Media Content Regulatory Council (DMCRC). This would bring broadcasters and OTT (over–the–top) platforms under one roof.

9. Which non–governmental organization, that won 1977 Nobel Peace Prize, is commemorated on May 28?

A) United Nations

B) World Health Organisation

C) Amnesty International

D) World Bank

  • Amnesty International, is a non–governmental organisation focused on human rights, which was founded in London in the year 1961.
  • Amnesty International Day is celebrated on May 28 every year, to honour its founding day. The organisation was awarded the 1977 Nobel Peace Prize for its campaign against torture and the United Nations Prize in the Field of Human Rights in 1978.

10. Which state has recently launched a solar–based electrification programme for its rural households?

A) Uttar Pradesh

B) Odisha

C) Assam

D) Goa

  • The State Government of Goa headed by Chief Minister Pramod Sawant has launched a solar–based electrification programme to provide power connectivity to rural households of the state.
  • This project aims to deliver renewable power to the households, where grid connectivity is not possible. In this regard, the Goa Energy Development Agency has entered into an agreement with Convergence Energy Services Ltd.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!