TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd July 2024

1. 2024 – செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீட்டில் (AIPI) இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 65ஆவது

. 72ஆவது

இ. 85ஆவது

ஈ. 62ஆவது

 • பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) AI தயார்நிலை குறியீட்டு (AIPI) தகவல் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 174 நாடுகள் AI தொழில்நுட்பங்களைப் பின்பற்றத் தயாராகவுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் (LIC), வளர்ந்து வரும் சந்தைப்பொருளாதாரங்கள் (EM) மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்கள் (AE) ஆகியவை இதிலடங்கும். சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகியவை AE பிரிவில் முன்னணியில் உள்ளன, அதே நேரத்தில், EM பிரிவில் உள்ள இந்தியா 0.49 மதிப்பெண்களுடன் 72ஆவது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா 0.63 மதிப்பெண்களுடன் 31ஆவது இடத்தில் உள்ளது.

2. இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகளை, வசீகரிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தும், “ஹுனார்” என்ற கண்காட்சியை நடத்திய நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. காஞ்சிபுரம்

இ. துபாய்

ஈ. பாரிஸ்

 • துபாய் கலை மையமானது இந்தியாவின் வளமான நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், “ஹுனார்” என்ற கண்காட்சியை நடத்தியது. விதேஷா பாண்டே ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் இராமாயண ஓவியம், உத்தரகாண்டின் ஐபன் கலை, பீகாரின் மதுபானி கலை, மகாராஷ்டிராவின் வார்லி கலை மற்றும் சத்தீஸ்கரின் முரியா கலை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சியானது இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட கலை வடிவங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. அண்மையில் தனது மாநில பள்ளிப்பாடத்திட்டத்தில் அவசரநிலை பற்றிய அத்தியாயத்தை சேர்ப்பதாக அறிவித்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. கேரளா

ஈ. அருணாச்சல பிரதேசம்

 • மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், 1975-77இன் அவசரநிலை குறித்த புதிய பள்ளி பாடத்திட்ட அத்தியாயத்தை அறிவித்தார். இந்த அத்தியாயம் அந்தக் காலகட்டத்திய, “அதிகப்படியான மற்றும் அடக்குமுறையை” எடுத்துக்கூறும். அவசரநிலைக்கு எதிரான போராட்டம்குறித்து இளைய தலைமுறையினருக்கு அறிவூட்டுவது இதன் நோக்கமாகும்.

4. அண்மையில், ‘முதலமைச்சர் மஜி லட்கி பகின்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. ஒடிசா

இ. குஜராத்

ஈ. கேரளா

 • மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் மஜி லட்கி பகின் திட்டம், பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் வேலையற்றோருக்கு ஆதரவினை வழங்குகிறது. இத்திட்டத்தின்கீழ், 21-60 வயதுடைய தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் `1500 வழங்கப்படும். நிதிச்சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டமானது 46,000 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீட்டைக் கொண்டது. பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குதல், அவர்களின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துதல் இதன் முதன்மை நோக்கமாகும்.

5. அண்மையில், நிதியியல் நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சீனா

ஆ. பிரான்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. சிங்கப்பூர்

 • 2024 ஜூன்.26-28 வரை சிங்கப்பூரில் நடைபெற்ற அதன் முழுமையான கூட்டத்திற்குப் பிறகு, நிதி நடவடிக்கை பணிக்குழுமூலம் இந்தியா, “வழக்கமான பின்தொடர்தல் பிரிவில்” வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு குறித்து 17 நாடுகளை மதிப்பீடு செய்தது. இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகியவை, “வழக்கமான பின்தொடர்தல்” பிரிவில் வைக்கப்பட்டன. அதே நேரத்தில் ஒரு நாடு மட்டும் சாம்பல்-பட்டியலில் வைக்கப்பட்டது.

6. GSAT 20 செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம் என்ன?

அ. பூமி கண்காணிப்பு

ஆ. தகவல் தொடர்பு

இ. வானிலை கண்காணிப்பு

ஈ. வழிசெலுத்தல்

 • முதன்முறையாக, ISRO தனது சமீபத்திய பெரிய செயற்கைக்கோளான GSAT 20ஐ ஸ்பேஸ்Xஇன் பால்கன்-9 ஏவுகலத்தின்மூலம் ஏவவுள்ளது. உயர்தொழில்நுட்ப தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT 20, 4,700 கிகி எடையும், 48 Gbps தகவல் பரிமாற்றத் திறனும் கொண்டதாகும். இது இந்தியா முழுவதையும், குறிப்பாக வடகிழக்குப் பகுதியை உள்ளடக்கிய 32 இடக்குறிக் கற்றைகளைக் கொண்டுள்ளது. ISROஇன் வணிகப்பிரிவான NSIL-க்கு சொந்தமான இது, இந்தியாவின் LV Mk-IIIஇன் வரம்புகள் காரணமாக SpaceXஇன் ஏவுகலத்தைப் பயன்படுத்துகிறது.

7. அண்மையில், ‘மினி ரத்னா’ அந்தஸ்தைப்பெற்ற மத்திய மின்னணு நிறுவனம் (CEL) சார்ந்த அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

 • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள ஓர் இந்திய அரசு நிறுவனமான மத்திய மின்னணு நிறுவனத்திற்கு (CEL), அண்மையில் “மினி ரத்னா” (வகை-1) அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த 1974ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட CEL, தேசிய ஆய்வகங்கள் மற்றும் R&D நிறுவனங்களின் உள்நாட்டு தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • சூரிய ஆற்றல் அமைப்புகள், உத்திசார் மின்னணுவியல் மற்றும் பல்வேறு உயர்-தொழில்நுட்பப்பகுதிகள், சூரிய மின்கலங்கள், ரெயில்வே சமிக்ஞை வழங்கு கருவிகள் மற்றும் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான கூறுகளை உற்பத்தி செய்வதில் CEL சிறந்து விளங்குகிறது.

8. அண்மையில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) அறிமுகப்படுத்திய சங்யான் செயலியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. ரெயில் அட்டவணையை வழங்குதல்

ஆ. குற்றவியல் சட்டங்கள்பற்றிய தகவல்களை RPF பணியாளர்களுக்குக் கற்பித்தல்

இ. ரெயில் பயணச்சீட்டு முன்பதிவுகளைக் கண்காணித்தல்

ஈ. RPF பணியாளர்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க

 • நடுவணரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களான சட்டரீதியான மேற்கோளுக்கு விரிவான செயலி-சங்யான் செயலியை ரெயில்வே பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் தொடக்கி வைத்தார். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச்சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்பற்றி ரெயில்வே பாதுகாப்புப்படையின் தொழில்நுட்ப குழுவினருக்கு விரிவான தகவல் வழங்க ஏதுவாக, இப்புதிய சங்யான் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, ரெயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சட்டங்கள்பற்றி எடுத்துரைத்து அதிகாரமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக அண்மையில் மெய்நிகர் NQAS மதிப்பீடு மற்றும் தள உணவு உரிம (spot food licence) முயற்சியைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான மூன்று முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் இந்த முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும். ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களுக்கான மெய்நிகர் தேசிய தர உத்தரவாத தரநிலைகள் மதிப்பீட்டு நடைமுறை, ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களுக்கான தரநிலைகள் வெளியிடுதல், உணவுப் பாதுகாப்பு அமைப்பு மூலம் உரிமங்கள் மற்றும் பதிவுகளை உடனடியாக வழங்குவதற்கான புதிய நடைமுறை ஆகியன அம்மூன்று முயற்சிகளாகும். இந்த முன்முயற்சிகள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும்.
 • இந்த முன்முயற்சிகள் பொது சுகாதார வசதிகளின் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும் என்றும், உணவு தொடர்பான உடனடி உரிம நடைமுறையை அறிமுகப்படுத்துவது இத்துறையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10. அண்மையில், ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC) பயிற்சியின் 29ஆவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. ஆக்லாந்து, நியூசிலாந்து

ஆ. ஹவாய், அமெரிக்கா

இ. பாரிஸ், பிரான்ஸ்

ஈ. கொல்கத்தா, இந்தியா

 • தென்சீனக்கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய மறைந்திருந்து தாக்கும் பல பாத்திர போர்க்கப்பலான INS ஷிவாலிக், ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC) பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகத்தை சென்றடைந்தது. RIMPAC என்பது உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல்சார் பயிற்சியாகும்; இது 29 பங்கேற்பு நாடுகளின் கடற்படை இயங்குதன்மை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. அமெரிக்க கடற்படையின் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சியானது கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார் செயல்பாடுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியது.

11. அண்மையில், இந்தியாவின் எந்த ஏரியில் 10 மெகாவாட் திறன்கொண்ட தனது முதலாவது மிதக்கும் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி ஆலையை மத்திய ரெயில்வே நிர்வாகம் திறந்து வைத்தது?

அ. லோனார் ஏரி

ஆ. இகத்புரி ஏரி

இ. பெரியார் ஏரி

ஈ. வெண்ணா ஏரி

 • மேற்குத்தொடர்ச்சிமலையில் உள்ள இகத்புரி ஏரியில் 10 மெகாவாட் திறன்கொண்ட இந்தியாவின் முதல் மிதக்கும் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி ஆலையை மத்திய ரெயில்வே நிர்வாகம் திறந்துள்ளது. இந்த முன்முயற்சி இந்திய ரெயில்வேயின் தூய்மையான எரிசக்தி முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது 2030ஆம் ஆண்டுக்குள் சுழிய கார்பன் உமிழ்வு என்ற நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. கேசவர் திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

 • இந்த ஆண்டு தசராவுக்கு முன்னதாக மைசூரு சுற்றுலா சுற்றுவட்டத்தில் முக்கிய ஈர்ப்பிடமாக உள்ள சோமநாதபூர் UNESCO உலக பாரம்பரிய தளத்தை, குறிப்பாக கேசவர் திருக்கோவிலை மேம்படுத்த கர்நாடக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. காவேரி ஆற்றங்கரையில் சோமநாதபுர நகரத்தில் அமைந்துள்ள இக்கோவில், பொ ஆ 1268ஆம் ஆண்டு ஹொய்சாள மன்னர் மூன்றாம் நரசிம்மரின்கீழ் கட்டிமுடிக்கப்பட்டது. மூன்று கருவறைகளுடன் கூடிய தனித்துவமான விண்மீன் வடிவ மேடையை இது கொண்டுள்ளது. ஹளபீது மற்றும் பேலூர் கோவில்களுடன் இணைந்து அங்கீகரிக்கப்படும் இது, ஹொய்சாள பாரம்பரியத்தின் ஒருபகுதியாக கலாச்சார முக்கியத்துவத்தைக் தன்னகத்தே கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பயிர்க்காப்பீட்டுக்கு ஜூலை.31 கடைசி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

நடப்பாண்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத்திட்டம் `1,775 கோடியில் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2. கீழடி அகழாய்வில் மீன் உருவிலான பானை ஓடுகள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 10ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவிலான இரு சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செமீ., 4.3 செமீ ஆகும்.

3. 91% ரெயில்களை சரியான நேரத்தில் இயக்கி தெற்கு ரெயில்வே சாதனை.

தெற்கு ரெயில்வே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 91.6 சதவீத ரெயில்களை சரியான நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளது. மாதத்துக்கு 10,000 ரெயில்களை கையாளும் மண்டலங்களில் தெற்கு ரெயில்வே 91.6% பெற்று முதலிடத்திலும், கிழக்கு மத்திய ரெயில்வே (82.4%), மத்திய ரெயில்வே (78.5%) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு-ரைஸ் (TN-RAISE) திட்டம்.

வழிகாட்டும் திட்டம்: தற்போது, நாட்டிலுள்ள மகளிர் தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களை நடத்துவோர் சுமார் 13.5% தமிழ்நாட்டில் உள்ளனர். இதுபோன்று தொழில்முனைவோராக விரும்பும் மகளிருக்கு வழிகாட்டவும், நிதி மேலாண்மை வழங்கவும் ‘தமிழ்நாடு ரைஸ்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு ரைஸ்’ திட்டம்மூலம் 126 மகளிர் தொழில்முனைவோருக்கும், 800 மகளிர் தொழில் குழு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!