Book Back QuestionsTnpsc

அணுக்கரு இயற்பியல் Book Back Questions 10th Science Lesson 6

10th Science Lesson 6

6] அணுக்கரு இயற்பியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content`

உங்களுக்குத் தெரியுமா?

இதுவரையில் 29 கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் (rare earth metals), இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன.

யுரேனஸ் கோள் பெயரிட்டப் பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து யுரெனியத்தை ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார்.

எலக்ட்ரான் வோல்ட்: அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் [eV] ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப் பயன்படுத்தி முடுக்குவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும். 1eV = 1.602 x 10-19 ஜீல். 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் = 1 MeV = 106 eV (மெகா எலக்ட்ரான் வோல்ட்). அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல 200 MeV.

இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது யுரேனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும். அதனைத் தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும்.

இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் நேர்மின் சுமைக் கொண்டிருப்பதால் நிலை மின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்போது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்கு விசை ஏற்படும். உயர் வெப்ப நிலையின் (அதாவது 107 முதல் 109 K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது.

ஓவ்வொரு வினாடியிலும் 620 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு சூரியனில் நடைபெறுகிறது. ஒரு வினாடியில் 3.8 x 1026 ஜீல் ஆற்றல் கதிரியக்கமாக வெளியாகிறது. கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி வரும்போது படிப்படியாகக் குறைகிறது. பூமியை அடையும்போது ஒரு வினாடியில், ஓரலகுப் பரப்பில் இதன் மதிப்பு 1.4 கிலோ ஜீல் ஆகும்.

நமது பூமியின் வயது என்னவென்று தெரியுமா? தோராயமாக 4.54 x 109 ஆண்டுகள் (அதாவது 45 கோடியே 40 இலட்சம் ஆண்டுகள்) அப்படியா?

அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் டோசிமீட்டர் ஆகும். அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியவும் மருத்துவ நிழலுரு தொழில் நுட்பத்திலும் பயன்படுகிறது. X மற்றும் காமா (γ) கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசி மீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்கவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் __________ எனக் கருதப்படுகிறது.

(அ) தூண்டப்பட்ட கதிரியக்கம்

(ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்

(இ) செயற்கைக் கதிரியக்கம்

(ஈ) அ மற்றும் இ

2. கதிரியகத்தின் அலகு ____________

(அ) ராண்ட்ஜன்

(ஆ) கியூரி

(இ) பெக்கொரல்

(ஈ) இவை அனைத்தும்

3. செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்

(அ) பெக்கொரல்

(ஆ) ஐரின் கியூரி

(இ) ராண்ட்ஜன்

(ஈ) நீல்ஸ் போர்

4. கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்.

(i) α – சிதைவு

(ii) β – சிதைவு

(iii) γ – சிதைவு

(iv) நியூட்ரான் சிதைவு

(அ) (i) மட்டும் சரி

(ஆ) (ii) மற்றும் (iii) சரி

(இ) (i) மற்றும் (iv) சரி

(ஈ) (ii) மற்றும் (iv) சரி

5. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு __________

(அ) ரேடியோ அயோடின்

(ஆ) ரேடியோ கார்பன்

(இ) ரேடியோ கோபால்ட்

(ஈ) ரேடியோ நிக்கல்

6. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை

(அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்

(ஆ) திசுக்களைப் பாதிக்கும்

(இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்

(ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்

7. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _________ உறைகள் பயன்படுகின்றன.

(அ) காரீய ஆக்சைடு

(ஆ) இரும்பு

(இ) காரீயம்

(ஈ) அலுமினியம்

8. கீழ்கண்ட எந்தக் கூற்று/கூற்றுகள் சரியானவை?

(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்

(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு

(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்

(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்

(அ) (i) மற்றும் (ii) சரி

(ஆ) (ii) மற்றும் (iii) சரி

(இ) (iv) மட்டும் சரி

(ஈ) (iii) மற்றும் (iv) சரி

9. புரோட்டான் – புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு

(அ) அணுக்கரு பிளவு

(ஆ) ஆல்பாச் சிதைவு

(இ) அணுக்கரு இணைவு

(ஈ) பீட்டாச் சிதைவு

10. அணுக்கரு சிதைவு வினையில் எனில் A மற்றும் Z ன் மதிப்பு

(அ) 8, 6

(ஆ) 8, 4

(இ) 4, 8

(ஈ) கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது

11. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்

(அ) கல்பாக்கம்

(ஆ) கூடங்குளம்

(இ) மும்பை

(ஈ) இராஜஸ்தான்

12. கீழ்கண்ட எந்தக் கூற்று/கூற்றுகள் சரியானவை?

(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்

(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்

(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்

(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது

(அ) (i) மட்டும் சரி

(ஆ) (i) மற்றும் (ii) சரி

(இ) (iv) மட்டும் சரி

(ஈ) (iii) மற்றும் (iv) சரி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு ராண்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் __________ சிதைவுக்குச் சமமாகும்.

2. பாசிட்ரான் என்பது ஓர் _________

3. இரத்த சோகையைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு ____________

4. ICRP என்பதன் விரிவாக்கம் ___________

5. மனித உடலின் மேல் படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது __________

6. ___________ அதிக ஊடுறுவு திறன் கொண்டவை.

7. ZYA 🡪 Z+1YA + X; எனில், X என்பது ____________

8. ZXA 🡪 ZYA இந்த வினை ____________ சிதைவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

9. ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் _________ ஜீல்.

10. அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்ப நிலையானது __________ K என்ற அளவில் இருக்கும்.

11. வேளாண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு __________

12. கதிரியக்கப் பாதிப்பின் அளவானது 100 R என்ற அளவில் உள்ள போது, அது __________ ஐ உண்டாக்கும்.

பொருத்துக:

1.

அ. BARC – கல்பாக்கம்

ஆ. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் – அப்சரா

இ. IGCAR – மும்பை

ஈ. இந்தியாவின் முதல் அணுக்கரு உலை – தாராப்பூர்

2.

அ. எரிபொருள் – காரீயம்

ஆ. தணிப்பான் – கனநீர்

இ. குளிர்விப்பான் – காட்மியம் கழிகள்

ஈ. தடுப்புறை – யுரேனியம்

3.

அ. சாடிஃபஜன் – இயற்கைக் கதிரியக்கம்

ஆ. ஐரின் கியூரி – இடப்பெயர்ச்சி விதி

இ. ஹென்றி பெக்கொரல் – நிறை ஆற்றல் சமன்பாடு

ஈ. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – செயற்கைக் கதிரியக்கம்

4.

அ. கட்டுப்பாடற்ற தொடர்வினை – ஹைட்ரஜன் குண்டு

ஆ. வளமைப் பொருள்கள் – அணுக்கரு உலை

இ. கட்டுப்பாடான தொடர்வினை – உற்பத்தி உலை

ஈ. இணைவு வினை – அணுகுண்டு

5.

அ. Co – 60 – படிமங்களின் வயது

ஆ. I – 131 – இதயத்தின் செயல்பாடு

இ. Na – 24 – ரத்த சோகை

ஈ. C – 14 – தைராய்டு நோய்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. புளுட்டோனியம் 239 பிளவுக்கு உட்படும் பொருளாகும்.

2. அணு எண் 83க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு இணைவிற்கு உட்படும்.

3. அணுக்கரு இணைவு என்பது அணுக்கரு பிளவினை விட அபாயகரமானது ஆகும்.

4. அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-238 எரிபொருளாகப் பயன்படுகிறது.

5. அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை. எனில், அது அணுகுண்டாகச் செயல்படும்.

6. அணுக்கரு பிளவின்போது, ஒரு பிளவில் சராசரியாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உற்பத்தியாகும்.

7. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு ஆகியவற்றில் பயன்படுகிறது.

கீழ்க்கண்டவற்றைச் சரியான வரிசையில் எழுதுக:

1. ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக:

ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்

2. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக:

அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு

தொடர்புபடுத்தி விடைக்காண்க:

1. தன்னிச்சையான உமிழ்வு: இயற்கைக் கதிரியக்கம் தூண்டப்பட்ட உமிழ்வு: __________

2. அணுக்கரு இணைவு: உயர் வெப்ப நிலை, அணுக்கரு பிளவு: ___________

3. வேளாண் விளைச்சல் அதிகரிப்பு: ரேடியோ பாஸ்பரஸ், இதயத்தின் சீரான செயல்பாடு: ___________

4. மின்புலத்தால் விலக்கம்: α – கதிர், சுழிவிலக்கம்: __________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று

ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது

1. கூற்று: ஒரு நியூட்ரான் U235 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது.

காரணம்: U235 பிளவுக்குட்படும் பொருளாகும்.

2. கூற்று: β – சிதைவின் போது நியூட்ரான் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.

காரணம்: β – சிதைவின் போது, அணு எண் ஒன்று அதிகரிக்கிறது.

3. கூற்று: அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை தேவை.

காரணம்: அணுக்கரு இணைவில் அணுக்கருக்கள் இணையும் போது ஆற்றலை உமிழ்கிறது.

4. கூற்று: கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும்.

காரணம்: அணுக்கரு பிளவு வினையினை நிலைநிறுத்துவதற்காகக் கட்டுப்படுத்தும் கழிகள் பயன்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அ மற்றும் இ, 2. இவை அனைத்தும், 3. ஐரின் கியூரி, 4. ii மற்றும் iii சரி, 5.ரேடியோ கோபால்ட் 6. மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும், 7. காரீயம், 8. iii மற்றும் iv சரி 9. அணுக்கரு இணைவு, 10. ( 8, 4), 11. கல்பாக்கம், 12. i மற்றும் ii சரி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (2.5×10-4C/Kg, 2. எலக்ட்ரானின் எதிர்துகள்கள்/அடிப்படைத்துகள் 3. கதிரியக்க இரும்பு (Fe59) 4. பன்னாட்டு கதிரியக்க பாதுகாப்புக் கழகம், 5. டோசிமீட்டர், 6. காமாக்கதிர், 7. (-1e0 (எலக்ட்ரான்)) 8. காமா 9. (3.814×10-12) 10. (107 முதல் 109)
11. ரேடியோ பாஸ்பரஸ் -32 (P32), 12. இரத்தப் புற்றுநோய்

பொருத்துக: (விடைகள்)

I.

1. BARC – மும்பை

2. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் – தாராப்பூர்

3. IGCAR – கல்பாக்கம்

4. இந்தியாவின் அணுக்கரு உலை – அப்சரா

II.

1. எரிபொருள் – யுரேனியம்

2. தணிப்பான் – கனநீர்

3. கட்டுப்படுத்தும் கழிகள் – காட்மியம் கழிகள்

4. தடுப்புறை – காரீயம்

III.

1. சாடிஃபஜன் – இடப்பெயர்ச்சி விதி

2. ஐரின் கியூரி – செயற்கைக் கதிரியக்கம்

3. ஹென்றி பெக்கொரல் – இயற்கைக் கதிரியக்கம்

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – நிறை ஆற்றல் சமன்பாடு

IV.

1. கட்டுப்பாடற்ற தொடர்வினை – அணுகுண்டு

2. வளமைப் பொருள்கள் – உற்பத்தி உலை

3. கட்டுப்பாடான தொடர்வினை – அணுக்கரு உலை

4. இணைவு வினை – ஹைட்ரஜன் குண்டு

V.

1. Fe – 59 – ரத்தசோகை

2. I – 131 – தைராய்டு நோய்

3. Na – 24 – இதயத்தின் செயல்பாடு

4. C – 14 – படிமங்களின் வயது

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக. (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: அணுக்கரு 83 க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு பிளவிற்கு உட்படும்.

3. சரி

4. தவறு

சரியான விடை: அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-235 எரிபொருளாகப் பயன்படுகிறது.

5. தவறு

சரியான விடை: அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகள் இல்லை எனில் அது அணுகுண்டாகச் செயல்படும்.

6. சரி

7. சரி

கீழ்க்கண்டவற்றை சரியான வரிசையில் எழுதுக: (விடைகள்)

1. காஸ்மிக் கதிர்கள், காமாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், ஆல்பாக் கதிர்கள்.

2. கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு, செயற்கைக் கதிரியக்கம், அணுக்கரு உலை.

தொடர்புபடுத்தி விடைக்காண்க: (விடைகள்)

1. செயற்கைக் கதிரியக்கம்

2. அறை வெப்பநிலை

3. ரேடியோ சோடியம்

4. γ கதிர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

3. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

4. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!