Book Back QuestionsTnpsc

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Book Back Questions

8th Social Science Lesson 6

6] இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டாக்காவின் மஸ்லின் ஆடைகள்: கி. மு. (பொ. ஆ. மு) 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

தாதாபாய் நௌரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு: ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்குக் காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.

தொழிலக வகைப்பாடு: மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழில்களை வேளாண் அடிப்படையிலானவை மற்றும் கனிம அடிப்படையிலானவை என வகைப்படுத்தலாம். தொழிலகங்கள் அவைகளின் பங்களிப்பின் படி அடிப்படை தொழில்கள் மற்றும் முக்கிய தொழில்கள் எனவும் வகைப்படுத்தலாம். தொழில் உரிமத்தின் அடிப்படையில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத் துறை என தொழிலகங்களை வகைப்படுத்தலாம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

(அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்

(ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்

(இ) பட்டு சேலை நெய்தல்

(ஈ) இரும்பை உருக்குதல்

2. __________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

(அ) நெசவு

(ஆ) எஃகு

(இ) மின்சக்தி

(ஈ) உரங்கள்

3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ————

(அ) பம்பாய்

(ஆ) அகமதாபாத்

(இ) கான்பூர்

(ஈ) டாக்கா

4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

(அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

(ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

(இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

(ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்

5. இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

(அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

(ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

(இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

(ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ இந்திய மக்களின் வாழ்க்கையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

2. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ____________

3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________

4. கொல்கத்தா அருகிலுள்ள ஹீக்ளி பள்ளத்தாக்கில் ____________ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.

5. __________ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.

பொருத்துக:

1. தவர்னியர் – செல்வச் சுரண்டல் கோட்பாடு

2. டாக்கா – காகித ஆலை

3. தாதாபாய் நௌரோஜி – கைவினைஞர்

4. பாலிகன்ஜ் – மஸ்லின் துணி

5. ஸ்மித் – பிரெஞ்சு பயணி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.

2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

3. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.

4. 1948ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.

5. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும்.

i. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து”.

ii. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.

iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.

iv. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

(அ) i மற்றும் ii சரி

(ஆ) ii மற்றும் iv சரி

(இ) iii மற்றும் iv சரி

(ஈ) i, ii மற்றும் iii சரி

2. கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.

காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

(அ) கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்.

(ஆ) கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

(இ) கூற்றும் காரணமும் சரி.

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

3. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

(அ) பெர்னியர் – ஷாஜகான்

(ஆ) பருத்தி ஆலை – அகமதாபாத்

(இ) TISCO – ஜாம்ஜெட்பூர்

(ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. இரும்பை உருக்குதல் 2. நெசவு 3. கான்பூர்

4. வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல் 5. இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கைவினைப் பொருட்கள் 2. இங்கிலாந்து 3. (1839) 4. ரிஷ்ரா

5. சூயஸ்கால்வாய்

பொருத்துக: (விடைகள்)

1. டவேர்னியர் – பிரெஞ்சு பயணி

2. டாக்கா – மஸ்லின் துணி

3. தாதாபாய் நௌரோஜி – செல்வச் சுரண்டல் கோட்பாடு

4. பாலிகன்ஜ் – காகித ஆலை

5. ஸ்மித் – கைவினைஞர்

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: நவீன முறையில் முதன்முதலாக இரும்பு குல்டி யில் உற்பத்தி செய்யப்பட்டது.

4. சரி

5. தவறு

சரியான விடை: பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும்.

விடை: ii மற்றும் iஎ சரி

2. கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

3. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது எது?

விடை: பொருளாதார தாராளமயமாக்கல் – 1980

சரியான விடை: பொருளாதார தாராளமயமாக்கல் – 1991

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!