Book Back QuestionsTnpsc

கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Book Back Questions 9th Science Lesson 15

9th Science Lesson 15

15] கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கிராஃபீன் என்பது தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும். இதில் தேனீயின் கூட்டைப் போல அறுங்கோண வளைய வடிவில் கார்பன் அணுக்கள் ஒரே பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. கிராஃபீன்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடிமன் குறைவான சேர்மமாகும். இதன் தடிமன் ஒரு அணு அளவு மட்டுமே உள்ளது. இதுதான் உலகிலேயே மிகவும் லேசான சேர்மமாகும் (ஒரு சதுர அடியின் எடை 0.77 மி.கி. மட்டுமே). மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான சேர்மமும் இதுவே ஆகும். (எஃகு இரும்பைக் காட்டிலும் 100 – 300 மடங்கு வலிமையானது). அறை வெப்ப நிலையில் இது ஒரு மிகச் சிறந்த வெப்பக் கடத்தி ஆகும். கிராபீனை 0.335 நானோமீட்டர் இடைவெளியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது. கிராஃபட்டில் உள்ள கிராஃபீன் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

(அ) மாற்றியம்

(ஆ) புறவேற்றுமை வடிவம்

(இ) சங்கிலித் தொடராக்கம்

(ஈ) படிகமாக்கல்

2. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.

(அ) புறவேற்றுமை வடிவம் மற்றும் மாற்றியம்

(ஆ) நான்கு இணைதிறன்

(இ) சங்கிலித் தொடராக்கம்

(ஈ) இவை அனைத்தும்

3. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

(அ) பாலிஸ்டைரீன்

(ஆ) பி.வி.சி

(இ) பாலிபுரொப்பலீன்

(ஈ) எல்.டி.பி.இ

4. பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைஈன் ஸ்டைரின் (ABS) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

(அ) 2

(ஆ) 5

(இ) 6

(ஈ) 7

5. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

(அ) வைரம்

(ஆ) ஃபுல்லரின்

(இ) கிராஃபைட்

(ஈ) வாயு கார்பன்

6. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் ___________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.

(அ) வனத்துறை

(ஆ) வனவிலங்கு

(இ) சுற்றுச்சூழல்

(ஈ) மனித உரிமைகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்.

2. பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் __________ கார்பன் அணுக்களைக் கொண்டது.

3. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் _____________

4. சல்பரின் கார்ப்பான் ____________

5. நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை ____________

பொருத்துக:

1. அல்கைன் – பளபளப்பான பந்து

2. ஆண்ட்ரே ஜெம் – ஆக்ஸிஜனேற்றம்

3. C60 – கிராஃபீன்

4. தெர்மாக்கோல் – முப்பிணைப்பு

5. எரித்தல் – பாலிஸ்டைரின்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. புறவேற்றுமை வடிவம் 2. சங்கிலித் தொடராக்கம் 3. பாலிபுரொப்பலீன் 4. (7) 5. கிராஃபைட் 6. சுற்றுச்சூழல்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆண்டனி லவாய்சியர் 2. (60) 3. மாற்றியங்கள் 4. புற வேற்றுமை தத்துவம் 5. ஏழு

பொருத்துக: (விடைகள்)

1. அல்கைன் – முப்பிணைப்பு

2. ஆண்ட்ரே ஜெம் – கிராஃபீன்

3. c60 – பளபளப்பான பந்து

4. தெர்மாக்கோல் – பாலிஸ்டைரின்

5. எரித்தல் – ஆக்ஸிஜனேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!