Book Back QuestionsTnpsc

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back Questions 10th Science Lesson 17

10th Science Lesson 17

17] தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது துவக்க நிலை பாலிக்கிள்களின் எண்ணிக்கை 7 மில்லியன் ஆகும். பருவமடையும் போது 60000லிருந்து 70000மாகக் காணப்படுகிறது. பெண்களின் வாழ் நாளில் 1-2 மில்லியன் அண்டத்தில், 300-400 அண்டம் மட்டுமே அண்டம் விடுபடும் நிகழ்வின் மூலம் வெளியேற்றப்படுகிறது. மாறாக, ஆண்களின் வாழ்நாளில் 500 பில்லியன் விந்தணுக்கள் வெளியேறுகின்றன.

மாதவிடாய் சுழற்சி என்பது பருவமடைதலில் தொடங்கி மாதவிடைவு வரை நடைபெறும் தொடர் நிகழ்வாகும். விடுபட்ட அண்டமானது விந்துவால் கருவுறச் செய்யப்படாதவரை இந்நிகழ்வு நடைபெறும். பொதுவாக கருவுற்ற நிலையில் மாதவிடாய் நிகழ்வதில்லை.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையானது அண்டகத்தில் முதிர்ச்சியுறுகிறது. அண்டம் அல்லது முட்டையானது பாலிக்கிளிலிருந்து வெடித்து வெளியேற்றப்படுவது அண்டம் விடுபடும் நிலை (Ovulation) எனப்படும். கருவுற்ற முட்டையைப் பெறுவதற்கு கருப்பையானது ஒவ்வொரு மாதமும் தன்னைத் தயார்படுத்துகிறது. கருவுற்ற முட்டை பதிவதற்கு ஏதுவாக கருப்பையின் உட்சுவர் தடிமனாகவும், மிருதுவாகவும் மாறுகிறது.

கருவுற்ற மற்றும் கருவுறா நிலையைத் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள்: கருவுற்ற காலம் முதல் கர்ப்பகாலம் முடியும் வரை கார்பஸ்லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் கருப்பையின் சுவரை தடிமனாகவும் மற்றும் மற்ற பாலிக்கிள்கள் முதிர்ச்சியடைவதைத் தடுத்தும் பராமரிக்கிறது. கருவுறா நிலையில், கார்பஸ்லூட்டியம் அழிவதன் காரணமாக முட்டை சிதைவுற்று கருப்பையின் உட்சுவர் மெதுவாக உரிந்து இரத்தம் மற்றும் கோழைப் பொருளை மாதவிடாய் சுழற்சியின் மூலம் வெளியேற்றுகிறது.

சில சமயங்களில், அண்டகத்தினால் இரண்டு முட்டையானது வெளியிடப்பட்டு, இரு வேறுபட்ட விந்துவால் கருவுறுதல் நடைபெற்று வேறுபட்ட இரட்டையர்கள் (Fraternal Twins) உருவாகின்றனர். ஒரு முட்டையானது ஒரு விந்துவால் கருவுறச் செய்யப்பட்டு, இரண்டு கருவாக பிளவுபட்டால் ஒத்த இரட்டையர்கள் உருவாகின்றனர்.

குழந்தை பிறப்பிற்குப் பிறகு முதல் 2 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் மார்பகங்களால் சுரக்கப்படும் பால் சீம்பால் (கொலஸ்ட்ரம்) எனப்படும். பிறந்த குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கக் கூடிய நோய் எதிர்ப்புப் பொருள்களை இது கொண்டுள்ளது.

தலைகீழான சிவப்பு வடிவ முக்கோண குறியீடு இந்தியாவில் குடும்ப நல மேம்பாட்டிற்கான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது. இது குறிப்பாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப நல மையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படுவோருக்கு குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக உதவி மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. “சிறு குடும்பமே சீரான வாழ்வு” என்ற வாசகத்துடன் இந்த தலைகீழான சிவப்பு முக்கோண குறியீடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். முhதவிடாயை மையப்படுத்தி தற்போது திரைப்படங்கள், விவாதங்கள் மற்றும் முகாம்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தால் 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாப்கின்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் யுனிசெஃப் அமைப்பானது, பள்ளிகளில் நாப்கின்களை எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகளை வழங்கியதுடன், அவற்றை சிதைப்பதற்கான (மட்கச் செய்தல்) குழிகளையும் ஏற்படுத்தியது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்.

(அ) வெங்காயம்

(ஆ) வேம்பு

(இ) இஞ்சி

(ஈ) பிரையோஃபில்லம்

2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ____________

(அ) அமீபா

(ஆ) ஈஸ்ட்

(இ) பிளாஸ்மோடியம்

(ஈ) பாக்டீரியா

3. சின்கேமியின் விளைவால் உருவாவது ____________

(அ) சூஸ்போர்கள்

(ஆ) கொனிடியா

(இ) சைகோட் (கருமுட்டை)

(ஈ) கிளாமிடோஸ்போர்கள்

4. மலரின் இன்றியமையாத பாகங்கள்

(அ) புல்லிவட்டம், அல்லிவட்டம்

(ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்

(இ) அல்லிவட்டம், சூலக வட்டம்

(ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

5. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்.

(அ) காம்பற்ற சூல்முடி

(ஆ) சிறிய மென்மையான சூல்முடி

(இ) வண்ண மலர்கள்

(ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி

6. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?

(அ) உற்பத்தி செல்

(ஆ) உடல செல்

(இ) மகரந்தத்தூள் தாய் செல்

(ஈ) மைக்ரோஸ்போர்

7. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

(அ) இருமயம் கொண்டவை

(ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை

(இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.

(ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன.

8. விந்துவை உற்பத்தி செய்யக் கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

(அ) எபிடிடைமிஸ்

(ஆ) விந்து நுண்நாளங்கள்

(இ) விந்து குழல்கள்

(ஈ) விந்துப்பை நாளங்கள்

9. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்

(அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு

(ஆ) செர்டோலி செல்கள்

(இ) லீடிக் செல்கள்

(ஈ) ஸ்பெர்மட்டோகோனியா

10. ஈஸட்ரோஜனை உற்பத்தி செய்வது

(அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு

(ஆ) முதன்மை பாலிக்கிள்கள்

(இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்

(ஈ) கார்பஸ் லூட்டியம்

11. கீழ்க்ண்டவற்றுள் எது IUCD?

(அ) காப்பர்-டி

(ஆ) மாத்திரைகள் (oral Pills)

(இ) கருத்தடை திரைச்சவ்வு

(ஈ) அண்டநாளத் துண்டிப்பு

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும் போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ______________

2. கருவுறுதலுக்குப் பின் சூற்பை ___________ ஆக மாறுகிறது

3. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ____________ ஆகும்.

4. மனிதரில் கருவுறுதல் ____________ ஆகும்.

5. கருவுறுதலுக்குப் பின் ___________ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.

6. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ____________ எனப்படும்.

7. புரோலாக்டின் _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

பொருத்துக:

1. கீழ்க்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக:

கலம் I கலம் II

பிளத்தல் – ஸ்பைரோகைரா

மொட்டு விடுதல் – அமீபா

துண்டாதல் – ஈஸ்ட்

2. கீழ்க்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக:

(அ) குழந்தை பிறப்பு 1. கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு

(ஆ) கர்ப்ப காலம் 2. கருவுற்றமுட்டை எண்டோமெட்ரியத்தில் பதிவது

(இ) அண்ட அணு வெளியேற்றம் 3. கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம்

(ஈ) கரு பதித்தல் 4. கிராஃபியன் பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதல்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.

2. விதைகள் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.

3. ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

4. மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல் தண்டாகும்.

5. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.

6. இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.

7. பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.

8. கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.

9. இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

10. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பிரையோஃபில்லம், 2. ஈஸ்ட், 3. சைகோட் (கருமுட்டை), 4. மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம், 5. பெரிய இறகு போன்ற சூல்முடி, 6. உற்பத்தி செல், 7. இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன, 8. எபிடைடிமிஸ், 9. செர்டோலி செல்கள்,
10. கிராஃபியன் பாலிக்கிள்கள், 11. காப்பர்-டி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும், 2. கனி, 3. இழப்பு மீட்டல், 4. அகக்கருவுறுதல், 5. (6 முதல் 7) 6.கொலஸ்ட்ரம் (சீம்பால்), 7. முன் பிட்யூட்டரி சுரப்பி

பொருத்துக: (விடைகள்)

1. கீழ்க்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக:

கலம் I கலம் II
பிளத்தல் அமீபா
மொட்டு விடுதல் ஈஸ்ட்
துண்டாதல் ஸ்பைரோகைரா

2.

1. குழந்தை பிறப்பு – கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம்

2. கர்ப்ப காலம் – கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு கிராஃபியன்

3. அண்ட அணு வெளியேற்றம் – பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதல்

4. கரு பதித்தல் – கருவுற்றமுட்டை எண்டோமெட்ரியத்தில் பதிவது

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: சூலின் காம்புப் பகுதி சூல்காம்பு எனப்படும்.

2. சரி

3. தவறு

சரியான விடை: ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

4. தவறு

சரியான விடை: மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல்முடியாகும்.

5. தவறு

சரியான விடை: காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும், மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக எடையற்றதாகக் காணப்படும்.

6. தவறு

சரியான விடை: இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் ஒற்றைமயத் தன்மையுடையவை.

7. தவறு

சரியான விடை: பிட்யூட்டரியின் முன்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.

8. சரி

9. தவறு

சரியான விடை: கருவுறுதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

10. தவறு

சரியான விடை: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் குறை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!