பயன்பாட்டு வேதியியல் Book Back Questions 9th Science Lesson 16
9th Science Lesson 16
16] பயன்பாட்டு வேதியியல்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
பூமியிலுள்ள யுரேனியமானது சிதைவடைந்து மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ரேடான் வாயுவை வெளியிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய ஐசோடோப்பு என்று கருதப்படுகிறது.
இன்றைய உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதுவே உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட வேலை வாய்ப்பு ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ஒரு நானோ மீட்டர் என்பது
(அ) 10-7 மீட்டர்
(ஆ) 10-8 மீட்டர்
(இ) 10-6 மீட்டர்
(ஈ) 10-9 மீட்டர்
2. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ___________ லிருந்து பெறப்படுகிறது.
(அ) தாவரங்கள்
(ஆ) நுண்ணுயிரிகள்
(இ) விலங்குகள்
(ஈ) சூரிய ஓளி
3. 1% அயோடோபார்ம் __________ ஆக பயன்படுத்தப்படுகிறது.
(அ) எதிர் நுண்ணுயிரி
(ஆ) மலேரியா
(இ) புரைத்தடுப்பான்
(ஈ) அமில நீக்கி
4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ___________ நிகழும்
(அ) ஆக்ஸிஜனேற்றம்
(ஆ) ஒடுக்கம்
(இ) நடுநிலையாக்கல்
(ஈ) சங்கிலி இணைப்பு
5 இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ____________ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
(அ) கார்பன்
(ஆ) அயோடின்
(இ) பாஸ்பரஸ்
(ஈ) ஆக்ஸிஜன்
6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
(அ) உருளைக்கிழங்கு
(ஆ) பீட்ருட்
(இ) கேரட்
(ஈ) மஞ்சள்
7. ___________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
(அ) கார்போஹைட்ரேட்
(ஆ) வைட்டமின்கள்
(இ) புரதங்கள்
(ஈ) கொழுப்புகள்
8. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
(அ) ஆக்ஸிஜனேற்றம்
(ஆ) மின்கலங்கள்
(இ) ஐசோடோப்புகள்
(ஈ) நானோ துகள்கள்
9. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் __________ என அழைக்கப்படுகின்றன.
(அ) ஐசோடோப்புகள்
(ஆ) நிற உயர்த்தி
(இ) நிற ஜனனிகள்
(ஈ) நிறத் தாங்கி
10. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் ___________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
(அ) உரங்கள்
(ஆ) பூச்சிக்கொல்லிகள்
(இ) உணவு நிறமிகள்
(ஈ) உணவு பதப்படுத்திகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதி மின்கலம் ____________ ஆகும்.
2. வலி மருந்துகள் ____________ என்று அழைக்கப்படுகின்றன.
3. இண்டிகோ ஒரு ____________ சாயம் ஆகும்.
4. ____________, ____________ மற்றும் ___________ ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
5. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ____________ ஆகும்.
பொருத்துக:
1. காய்ச்சல் நிவாரணி – பெரிய மேற்பரப்புப் பகுதி
2. அரிப்பைத் தடுத்தல் – அயோடின் 131
3. ஹைப்பர்தைராய்டிசம் – காய்ச்சல்
4. நானோ துகள்கள் – புற்று நோய் செல்களைக் கண்டறிதல்
5. நானோ ரோபாட்டிக்ஸ் – மின் மூலாம் பூசுதல்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. 10-9 மீட்டர் 2. நுண்ணுயிரிகள் 3. புரைத் தடுப்பான் 4. ஒடுக்கம் 5. கார்பன் 6. உருளைக்கிழங்கு 7. வைட்டமின்கள்
8. ஐசோடோப்புகள் 9. நிறத்தாங்கி 10. பூச்சிக்கொல்லிகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. மின் பகுப்புக் கலம் 2. வலி நீக்கிகள் அல்லது வலி நிவாரணிகள் 3. நிறமுடைய 4. நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம்
5. நின்ஹைட்ரின் மற்றும் சையனோ அக்ரிலேட் எஸ்டர்
பொருத்துக: (விடைகள்)
1. காய்ச்சல் நிவாரணி – காய்ச்சல்
2. அரிப்பைத் தடுத்தல் – மின் முலாம் பூசுதல்
3. ஹைப்பர் தைராய்டிசம் – அயோடின் 131
4. நானோ துகள்கள் – பெரிய மேற்பரப்புப் பகுதி
5. நானோ ரோபாட்டிக்ஸ் – புற்று நோய் செல்களைக் கண்டறிதல்