Book Back QuestionsTnpsc

முகலாயப் பேரரசு Book Back Questions 7th Social Science Lesson 12

7th Social Science Lesson 12

12] முகலாயப் பேரரசு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

செங்கோட்டை: லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள “செங்கோட்டை” முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும். இது 1639இல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும், இக்கோட்டை சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

(அ) ஷீமாயூன்

(ஆ) பாபர்

(இ) ஜஹாங்கீர்

(ஈ) அக்பர்

2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

(அ) பானிபட்

(ஆ) சௌசா

(இ) ஹால்டிகட்

(ஈ) கன்னோசி

3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

(அ) பாபர்

(ஆ) ஹிமாயூன்

(இ) இப்ராஹிம் லோடி

(ஈ) ஆலம்கான்

4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

(அ) ஷெர்ஷா

(ஆ) அக்பர்

(இ) ஜஹாங்கீர்

(ஈ) ஷாஜஷான்

5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

(அ) பீர்பால்

(ஆ) ராஜா பகவன்தாஸ்

(இ) இராஜ தோடர்மால்

(ஈ) இராஜா மான்சிங்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர் ————– ஆகும்.

2. பதேபூர் சிக்ரியிலுள்ள ————– அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.

3. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி ————-

4. ஜப்தி என்னும் முறை ———— ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

5. ————- வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

III. பொருத்துக:

அ – ஆ

1. பாபர் – அ) அகமது நகர்

2. துர்க்காவதி – ஆ) அஷ்டதிக்கஜம்

3. ராணி சந்த் பீபி – இ) அக்பர்

4. தீன்-இலாஹி – ஈ) சந்தேரி

5. இராஜா மான்சிங் – உ) மத்திய மாகாணம்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.

2. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.

3. ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.

4. தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜீனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.

5. ஒளரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்.

காரணம்: ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

(ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்

(இ) கூற்று தவறு காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு

2. கூற்று: ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

காரணம்: ஒளரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்.

(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல

(இ) கூற்று தவறு, காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

3. சரியானவற்றை தேர்வு செய்க:

I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.

II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.

III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்று விட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

(அ) I, II மற்றும் III சரி

(ஆ) II, III மற்றும் IV சரி

(இ) II, III மற்றும் IV சரி

(ஈ) II, III, IV மற்றும் I சரி

4. காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக:

i) கன்வா போர்

ii) சௌசா போர்

iii) கன்னோசி போர்

iv) சந்தேரி போர்

5. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக:

i) சர்க்கார்

ii) பர்கானா

iv) சுபா

VI. பொருத்துக:

தந்தை – மகன்

1. அக்பர் – அ ) தில்வார் கான்

2. தௌலத்கான் லோடி – ஆ) ராணாபிரதாப்

3. ஹசன் சூரி – இ) ஹிமாயூன்

4. பாபர் – ஈ) ஷெர்ஷா

5. உதயசிங் – உ) ஜஹாங்கீர்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பாபர், 2. ஹால்டிகட், 3. ஹிமாயூன், 4. அக்பர், 5. இராஜ தோடர்மால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சேத்தக், 2. இபாதத்கான, 3. சலீம்சிஸ்டி, 4. ஷாஜகான், 5. சுயயூர்கள்

III. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. அ, 4. இ, 5. ஆ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. 1. சரி, 2. 1555, 3. அக்பர், 4. சரி, 5. ஷாஜகான்

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம், 2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும், 3. II, III மற்றும் IV சரி, 4. கன்வா போர்(1527), சந்தேரி போர்(1528), சௌசா போர்( 1539), கன்னோசி போர்( 1546), 5. சுபா, சர்க்கார், பர்கானா

VI. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!