Tnpsc Tamil Current Affairs 25th August 2016

Tnpsc Tamil Current Affairs 25th August 2016

Tamil Current Affairs 25th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 25th August 2016 is given below.

நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 25, 2016
1. சமீபத்தில் மறைந்த, கே கே ஸ்ரீதரன் நாயர் எந்த துறையுடன் தொடர்புடையவர் ?
A. விளையாட்டு
B.அரசியல்
C.இதழியல்
D.அறிவியல்
விடை : C.இதழியல்
கே கே ஸ்ரீதரன் நாயர் (86), மாத்ருபூமி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், சமீபத்தில் கேரள மாநிலம், கொச்சினில் காலமானார்.  கேரளாவின் கோழிக்கோட்டில் மாத்ருபூமி பிரிண்டிங் மற்றும் பப்ளிஷிங் நிறுவனத்தால் இந்த வார பத்திரிக்கை பிரசுரிக்கப்படுகிறது.
2.சமீபத்தில் மறைந்த, டாக்டர் ஏ.ஆர்.கித்வாய் எந்த துறையுடன் தொடர்புடையவர்  ?
A.அரசியல் 
B.இதழியல் 
C.புகைப்படம் 
D.ஓவியம்
விடை :  A.அரசியல்
டாக்டர். அக்லாக் ரகுமான் கித்வாய் (96), ஒரு சுதந்திர போராட்ட வீரர், புகழ்பெற்ற பாராளுமன்ற நிர்வாகி, சமீபத்தில் காலமானார். இவர் பீகார், மேற்கு வங்கம், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் ஆவார். மேலும்  பத்ம விபூஷன் விருதும்  பெற்றுள்ளார். 
3. “பிரிக்ஸ்-ன்  சர்வதேச மத்தியஸ்தம்: சவால்கள், வாய்ப்புகள் மற்றும் முன்னுள்ள சாலை” மாநாடு  இந்தியாவின்  எந்த நகரத்தில் நடைபெற உள்ளது ?
A.புது தில்லி 
B.மும்பை
C.ஜெய்ப்பூர் 
D.அகமதாபாத்
விடை: A.புது தில்லி
“பிரிக்ஸ்-ன் சர்வதேச மத்தியஸ்தம்: சவால்கள், வாய்ப்புகள் மற்றும் முன்னுள்ள  சாலை” மாநாடு புது தில்லியில் உள்ள  விஞ்ஞான் பவனில் ஆகஸ்ட் 27, 2016 அன்று நடைபெற இருக்கிறது. இது பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம்,  காமர்ஸ் & இன்டஸ்ட்ரி (FICCI), மத்தியஸ்த இந்திய கவுன்சில் (ICA) ஆகிய துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தகராறு தீர்மான முறைகளை  மதிப்பீடு செய்தல், விவாதித்தல்,  கருத்துகளை பகிர்தல், நுண்ணறிவின் மூலம் ஆராய்தல் போன்றவை    இம்மாநாட்டின் நோக்கம்.
4.  தென் இந்தியாவின் முதல் குழந்தைகள் நீதிமன்றம் பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது ?
A.கொச்சி
B.ஹைதராபாத் 
C.விசாகப்பட்டினம் 
D.சென்னை
விடை : B.ஹைதராபாத் 
தென் இந்தியாவின் முதல் குழந்தைகள் நீதிமன்றம் மற்றும் இந்தியாவில் 6வது குழந்தைகள் நீதிமன்றம் இது.  குழந்தைகள் தொடர்பான வழக்குகளை வேகமாக தீர்க்க  ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்த நீதிமன்றம் , குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் குற்றங்கள் (போஸ்கோ) தடுப்புச்சட்டம் – 2012 ல் கீழ் துவங்கபட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் , குழந்தைகள் காத்திருக்க தனி அறைகள் மற்றும் குற்றவாளியை விசாரிக்க  வீடியோ கேமரா விசாரணை  போன்ற அம்சங்கள் உள்ளன .
5. பின்வரும் எந்த அண்டை நாட்டு மக்கள் கேட்பதற்கு வசதியாக ‘ஆகாசவாணி மைத்ரி’ என்ற புதிய ரேடியோ சேனலை இந்திய அரசு துவங்கி உள்ளது ?
A.நேபாளம்  
B.வங்காள தேசம் 
C.பூட்டான் 
D.மியான்மர் 
விடை : B.வங்காள தேசம் 
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் பெங்காலி கேட்பவர்களுக்காக, கொல்கத்தா ராஜ்பவன், மேற்கு வங்கத்தில் “ஆகாசவானி மைத்ரி”   என்ற சேனலை துவங்கி வைத்தார். அனைத்திந்திய ரேடியோவின்(AIR ) புது முயற்சி இது.  இந்தியா மற்றும் வங்காளம் இடையே, கலாச்சாரம் , பொருளாதாரம் , அரசியல் மற்றும் உணர்ச்சி பிணைப்பு உறவுகளை வலுப்படுத்துவதை இலக்காக இது கொண்டுள்ளது. இரு நாடுகளும் பெங்காலி கலாச்சாரத்தை  பாதுகாக்கும் ஒரு பொதுவான மேடையில் இருக்கிறது. புதிய உயர் சக்தி 1000Kw டிஆர்எம் டிரான்ஸ்மிட்டர் கொண்டு,  நடுத்தர அலை மூலம் வங்காளம் முழுவதும்  ஒலிபரப்பு செய்யப்படுகிறது மற்றும் வலைத்தளம்  மற்றும் மொபைல் செயலியிலும் உலகளவில் இதனை கேட்க முடியும்.
6. ரியோ 2016 துப்பாக்கி சுடுதல் தோல்வி குறித்து ஆராய  அமைக்கப்பட்ட  இந்தியா தேசிய குழுவின் துப்பாக்கி சங்க (NRAI) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர்  யார் ?
A.ஜீத்து ராய்  
B. கனக்  நராங் 
C.ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 
D.அபினவ் பிந்த்ரா 
விடை: D.அபினவ் பிந்த்ரா 
அபினவ் பிந்த்ரா, ரியோ 2016 துப்பாக்கி சுடுதல் தோல்வி குறித்து ஆராய  அமைக்கப்பட்ட  இந்தியா தேசிய குழுவின் துப்பாக்கி சங்க (NRAI) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இக்குழுவின் உறுப்பினராக இவர் இருப்பதால் இவரை கேள்வி கேட்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டுள்ளார். துப்பாக்கி சுடுதலில் எந்த பதக்கமும் வெல்லாததற்கான காரணங்களை அறியவும், எதிர்காலத்தில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் , எதனை எல்லாம் மாற்றி கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளையும் இக்குழு வழங்க உள்ளது.
7.  இந்தியாவின்  2016 சர்வதேச திரைப்பட விழாவில் , எந்த நாட்டின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு  வருகிறது ?
A.ஈரான்
B.தென் கொரியா
C.பிரேசில் 
D.ஸ்பெயின்
விடை : B.தென் கொரியா 
 நவம்பர் 2016 அன்று கோவாவில் நடைபெறும் 47-வது  இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) 2016-ல்  தென் கொரியாவின் மீது அனைவரது கவனமும் திருப்பியுள்ளது.  இதற்கு காரணம் ,   தென் கொரியாவின் திரைப்படங்கள் திரையிடப்படுவதும், நன்கு அறியப்பட்ட திரைப்பட நடிகர்கள் விழாவில் பங்கு பெறுவதே ஆகும்.
8.  புத்தகம் “கில்லிங் இண்டிமேட் வரலாறு: இருபதாம் நூற்றாண்டில்  நேருக்கு நேர் போர்க்கொலை  செய்தல் ” யாரால் எழுதப்பட்டுள்ளது  ?
A.  பிகு பரேக்
B. ஜோனா பார்கே  
C. பெனில் செரிடிவாலா 
D. கீர்த்தி ரம்பட்லா 
விடை : B. ஜோனா பார்கே  
கில்லிங் இண்டிமேட் வரலாறு: இருபதாம் நூற்றாண்டில்  நேருக்கு நேர் போர்க்கொலை  செய்தல் ”  என்ற புத்தகத்தை ஜோனா பார்கே எழுதியுள்ளார். இது ஒரு எளிய உண்மையை வெளிப்படுத்துகிறது: ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகாரப்பூர்வமாக கொல்லப்படுவதை சந்தோஷமாக  பெறுகின்றனர்.
9. பொறியியல் துறையில் சிறந்து விளங்கியமைக்காக IEI-IEEE-2015 பரிசு வென்ற முதல் நபர் யார் ? 
A. ஏ எஸ் கிரண் குமார்  
B. ஜி சதீஷ் ரெட்டி
C .கே கே ராதாகிருஷ்ணன்
D. அவினாஷ் சந்தர்
விடை : B. ஜி சதீஷ் ரெட்டி
டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு அமைச்சரின்  விஞ்ஞான ஆலோசகர் மற்றும் DRDO வின் டி.ஜி. (ஏவுகணைகள் மற்றும் போர்தந்திர அமைப்புகள்). ஏவுகணைகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் இவரது   கணிசமான தேசிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டு  உள்ளது.
10. டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A. கோவா  
B.ஒடிசா 
C.திரிபுரா
D.மணிப்பூர்
விடை :  A. கோவா
டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம் கோவாவின்  சோரோ தீவுவின்  மேற்கு முனையில் மண்டோவி நதியுடன் சேர்ந்து அமைந்துள்ளது.  முகத்துவார சதுப்புநில வாழ்விடத்தில் அமைத்துள்ள இவ்விடம் பிரபல பறவை ஆய்வாளர்  சலிம் அலி நினைவாக அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இச்சரணாலயத்தில்  சிறிய முள்ளம்பன்றியும், கருப்பு முள்ளம்பன்றியும், சிவப்பு முடிச்சு, பலா கத்தரி, பல வண்ணங்களால் ஆன கொக்கு , மேற்கு பாறைகள் கொக்கு முதலியன திரளாக  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!