Tnpsc

Tnpsc Tamil Current Affairs 31st August 2016

Tnpsc Tamil Current Affairs 31st August 2016

Tnpsc Tamil Current Affairs 31st August 2016
Tnpsc Tamil Current Affairs 31st August 2016

Tamil Current Affairs 31st August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 31st August 2016 quiz format is given below.

Tnpsc Tamil Current Affairs 31st August 2016

Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 31st August 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.

நடப்பு நிகழ்வுகள் –  ஆகஸ்ட்-31,2016

1. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(CRPF) விளம்பர தூதுவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார் ?
A.சாக்ஷி மாலிக் 
B.ஜித்து ராய்
C.பி.வி.சிந்து 
D.தீபா கர்மாகர்
விடை : C. பி.வி.சிந்து 
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), இந்தியாவின் மிகப் பெரிய துணை இராணுவப்படை. அதன் விளம்பர தூதராக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து நியமிக்கப்பட்டு அவருக்கு படைத்தளபதி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்வில் இவருக்கு படைதளபதிக்கான பட்டயமும்,  சீருடையும் வழங்கப்பட்டது. CRPF-ன் படைத்தளபதி பதவியானது, போலீஸ் பிரிவின் SP (Superintendent of Police)-க்கு இணையானது. களத்தில் பணியமர்த்தப்பட்டால் இவருக்கு கீழ் சுமார் 1000 பணியாளர்கள் பணிபுரிவர்.
2. 2016 லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் பட்டியலில் (LPI) இந்தியாவின் தரம் என்ன?
A. 54வது
B. 46வது
C. 22வது 
D. 35வது 
விடை: D. 35வது 
“Connecting to Complete 2016” தலைப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, உலக வங்கியின் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன்(LPI) பட்டியலில் 160 நாடுகளில் இந்தியா  35வது இடத்தில் உள்ளது.  LPI-ஆனது வர்த்தக  பரிமாற்றத்தின் செயல் திறனை அதிகரிக்கும் பொருட்டு உலக நாடுகள் அதில் எதிர்கொள்ளும் சவால்களை அறியவும், அதனை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்குகிறது. உலக வங்கி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை LPI அறிக்கையை வெளியிடுகிறது.  
3. “Prakampana-2016” எனப்படும் வருடாந்திர பேரழிவு நிவாரண கூட்டுப்பயிற்சி இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கியது ?
A.கொச்சி
B.விசாகப்பட்டினம் 
C.சென்னை 
D.ராஞ்சி
விடை : B.விசாகப்பட்டினம் 
வருடாந்திர பேரழிவு நிவாரண கூட்டுப்பயிற்சி “Prakampana-2016”,  கிழக்கு கடற்படை பிரிவான ஆந்திராவில் உள்ள  விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கியது. இந்திய கடற்படைநடத்திய இப்பயிற்சியில்,  மிகப்பெரும் சூறாவளி ஏற்படும் பொழுது மேற்கொள்ளவேண்டிய  நிவாரணம் மற்றும் உதவி குறித்த பயிற்சி  வழங்கப்பட்டது. இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படை ஆகிய படைகளுடன் கூடுதலாக, பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த  பல்வேறு மத்திய, மாநில அரசு முகவர்கள் மற்றும் நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
4. இந்தியாவின் முதல் ஆற்றுத்தீவு மாவட்டமான  “மஜுலி”, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A.நாகாலாந்து
B.அசாம்
C.மேற்கு வங்கம்
D.திரிபுரா
விடை : B.அசாம்
செப்டம்பர் 8, 2016 அன்று, மஜுலி இந்தியாவின் முதல் ஆற்றுத்தீவு மாவட்டமாக மாறவுள்ளது .  இது அசாம் அரசின் துணை பிரிவில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக மாறவுள்ளது. இத்தீவில் பெரும்பாலும் Mishing என்றழைக்கப்படும் பழங்குடி மக்கள் குடியேறி உள்ளனர் மேலும் அஸ்ஸாமி நவ-வைணவ கலாச்சாரத்தின் மையமாக இது உள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளைநதிகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக இத்தீவு உருவானது. குறிப்பாக லோஹித் எனப்படும் துணைநதி இதற்கு முக்கிய காரணமாகும். இது 340 மைல் பரப்பளவில், வட கிழக்குப் பகுதியின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
5. இந்தியா எந்த நாட்டுடன், லாஜிஸ்டிக்ஸ் பரிமாற்றத்திற்கான(LEMOA) ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது ?
A.அமெரிக்கா
B.ரஷ்யா 
C.பிரான்ஸ்
D.ஜப்பான்
விடை : A.அமெரிக்கா
LEMOA – Logistics Exchange Memorandum of Agreement. சமீபத்தில், அமெரிக்காவின் வாஷிங்டன் DC-ல்,இந்தியா மற்றும் அமெரிக்காஆகிய இருதரப்பு நாடுகளும் தங்களுக்குள் இராணுவ பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கொண்டன.  இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஆஷ்டன் கார்ட்டர் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் , இந்தியப்படைகளின் செயல்திறனை அதிகரிக்க முடியும் மேலும் மனிதாபிமான நெருக்கடிகள் அல்லது பேரழிவு நிவாரணங்களில் தகுந்த உதவிகளை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.  
6. உஜாலா(UJALA) திட்டத்தின் கீழ், 2 கோடி LED பல்புகளை விநியோகித்த முதல் இந்திய மாநிலம் எது ?
A.உத்தரப் பிரதேசம்
B.ராஜஸ்தான் 
C.ஹரியானா 
D.குஜராத்
விடை : D.குஜராத்
 உஜாலா (UJALA- Unnat Jyoti by Affordable LEDs for All ) திட்டத்தின் கீழ், சுமார் 2 கோடி LED பல்புகளை குஜராத் மாநில அரசு விநியோகம் செய்துள்ளது. இந்த மைல்கல்லை வெறும் 96 நாட்களில் குஜராத் எட்டியுள்ளதுடன் , 42 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. மேலும் CO2 உமிழ்வு தினசரி 5000 டன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 
7. “Swachh Bharat Mission” குறித்த காமிக் புத்தகங்களை வெளியிட்டு விநியோகிக்க ‘அமர் சித்ரா கதா’ நிறுவனத்துடன் பின்வரும் எந்த அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ?
A.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
B.நகர அபிவிருத்தி அமைச்சகம்
C.வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
D.மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
விடை: B.நகர அபிவிருத்தி அமைச்சகம்
“Swachh Bharat Mission” குறித்த சிறப்பு காமிக் புத்தகங்களை வெளியிட்டு விநியோகிக்க ‘அமர் சித்ரா கதா’ நிறுவனத்துடன் நகர அபிவிருத்தி அமைச்சகம் (Ministry of Urban Development)  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 32 பக்கங்களை கொண்ட இப்புத்தகத்தில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு கூறுகள் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன.
8. மத்திய அரசு சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக PRS திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. PRS என்பதன் விரிவாக்கம் ?
A. Permanent Residuary Status
B. Permanent Residential Status 
C. Permanent Residence Status
D. Permanent Residency Status 
விடை : D. Permanent Residency Status 
மத்திய அரசு சமீபத்தில், இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க மற்றும் எளிதாக்க PRS(Permanent Residency Status) எனப்படும் நிரந்தர குடியுரிமை தகுதியை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டப்படி 10 வருடங்களுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்ல அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. PRS வைத்திருப்பவர் மீது எவ்வித பாதகமான அறிவிப்பும் இல்லையெனில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு குடியுரிமை தகுதியை நீட்டிக்க பரிசீலனை செய்யப்படும். நிர்ணயிக்கட்ட நிபந்தனைகளை  பூர்த்தி செய்யும் முதலீட்டாளர்களுக்கே PRS வழங்கப்படும். நிபந்தனைகள் அவரது மனைவி மற்றும் அவரை சார்ந்திருப்பவர்களுக்கு பொருந்தும். இத்திட்டத்தினை பயன்படுத்த,  வெளிநாட்டு முதலீட்டாளர் குறைந்தது 18 மாதங்களில் ரூ10 கோடி  அல்லது 36 மாதங்களில் ரூ25 கோடி முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 20 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
9. “SAHAYATA-2016” எனப்படும் வருடாந்திர பேரழிவு நிவாரண கூட்டுப்பயிற்சி இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற உள்ளது  ?
A.ஒடிசா
B.கேரளா 
C.அசாம் 
D.குஜராத்
விடை : D.குஜராத்
 இந்திய விமானப்படை,  “SAHAYATA-2016” எனப்படும் வருடாந்திர பேரழிவு நிவாரண கூட்டுப்பயிற்சியை குஜராத்தில் உள்ள புஜ் விமானநிலையத்தில் செப்டம்பர் 14-16, 2016ல் நடத்தவுள்ளது. இந்த பயிற்சியின்  முதன்மை நோக்கமானது,  மேற்கத்திய பகுதிகளில் பூகம்பங்களின் போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதேயாகும். 
10. “The Assassination of Rajiv Gandhi: An Inside Job?” என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A.ஜெயந்தி மதுகர்
B.நீனா கோபால் 
C.ஜெயந்தி நடராஜன்
D.G.K. மூப்பனார்
விடை : B.நீனா கோபால் 
“The Assassination of Rajiv Gandhi: An Inside Job?”  என்ற நூலின் ஆசிரியர் நீனா கோபால். வளைகுடா போர் மற்றும் குவைத் விடுதலை போன்ற நிகழ்வுகளை கண்காணித்து செய்திகளை எழுதிய முதல் இந்தியப் பெண் பத்திரிகையாளர் இவரே. இப்புத்தகம் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த மிகப்பெரிய சதித்திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் கூறுகிறது. மேலும், இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991 இடைத்தேர்தலில் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாத போதும் ஏன் கொல்லப்பட்டார் என்ற உண்மையையும், அதன் பின்னணியில் உள்ள கட்டுகதைகளையும் இப்புத்தகம் பகிரங்கமாக உடைக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!