Tnpsc Tamil Current Affairs Quiz Questions 5th October 2016

Tnpsc Tamil Current Affairs 5th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 5th October 2016.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
1. சமீபத்தில் வெளியிடப்பட்ட 4வது இருமாத பணவியல் கொள்கை(4th bi-monthly monetary policy) அறிக்கையின்படி, 2016-17 ஆண்டிற்கான ரெபோ வீதம்(repo rate) என்ன ?
A
6.00%
B
6.50%
C
6.25%
D
6.75%
Question 1 Explanation: 
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2016-17 ஆண்டிற்கான அதன் 4வது இரு மாத பணவியல் கொள்கை (4th bi-monthly monetary policy) அறிக்கையை வெளியிடப்பட்டது. பணவியல் கொள்கை அறிக்கையின் படி, ரேபோ(Repo) வீதமானது Liquidity Adjustment Facility (LAF)-ன் கீழ் 25 bps குறைக்கப்பட்டு 6.25% ஆக உள்ளது. LAF-ன் கீழ் தலைகீழ் ரேபோ வீதம் 5.75 % ஆகவும், Marginal Standing Facility (MSF) வீதம் மற்றும் வங்கி வீதம் 6.75% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. Statutory Liquidity Ratio (SLR) வீதம் 20.75 % ஆகும். 4 % இடைநிலை பணவீக்க(midterm inflation target) இலக்கினை அடையும் பொருட்டு சீரான + or – 2 %.வீதத்தில் வட்டிவீதம் குறைக்கப்பட்டது. நிகர தேவை(Net Demand) மற்றும் நேர பொறுப்புகளின் (NDTL - Net Demand and Time Liabilities (NDTL) வங்கி ரொக்க இருப்பு விகிதம் (CRR - Cash Reserve Ratio) 4.0% ஆகவே நீடிக்கிறது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நாணய கொள்கை குழு (MPC) இந்தியாவில் வட்டி விகிதத்தை கூட்டாக முடிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும் .அடுத்த நிதி கொள்கையின் மறு ஆய்வு டிசம்பர் 7, 2016ம் தேதி அறிவிக்கப்படும்.
Question 2
2. 2016 உலக விண்வெளி வாரத்தின் (World Space Week) மையக்கரு என்ன?
A
Space for Education
B
Exploring the Universe
C
50 Years in Space
D
Remote Sensing: Enabling our Future
Question 2 Explanation: 
உலக விண்வெளி வாரம் (WSW) ஓர் ஆண்டு நிகழ்வாகும். அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4-10 தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச கொண்டாட்டம் மற்றும் மனித நன்மைக்காக அவர்களின் பங்களிப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் மையக்கரு “Remote Sensing: Enabling our Future” என்பதாகும். மனித இனத்தின் நன்மைக்காக விண்வெளியில் இருந்து பூமியை கண்காணிப்பதை விண்வெளி வாரம் கொண்டாடுகிறது.
Question 3
3. கேரளாவின் 'ஹரிதா கேரளம்(Haritha Keralam)' திட்டத்தின் விளம்பர தூதர் யார் ?
A
ஜென்சி அந்தோணி
B
கே ஜே யேசுதாஸ்
C
ஏ. ஆர். ரகுமான்
D
விஜய் பிரகாஷ்
Question 3 Explanation: 
கேரள அரசாங்கத்தின் 'ஹரிதா கேரளம்(Green Kerala)' திட்டத்தின் விளம்பர தூதராக மூத்த இசைக் கலைஞர் மற்றும் பின்னணிப் பாடகரான டாக்டர் கே ஜே யேசுதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டம் கேரளாவை குப்பை இல்லாத சுத்தமான மாநிலமாக மாற்றும் ஒரு பெரிய முன்னெடுப்பு ஆகும்.
Question 4
4. எந்த மத்திய அமைச்சர், இந்திய பாலம் மேலாண்மை அமைப்பை ( Indian Bridge Management System) புது தில்லியில் துவக்கி வைத்தார் ?
A
நிதின் கட்காரி
B
ராஜ்நாத் சிங்
C
கல்ராஜ் மிஸ்ரா
D
ஆனந்த் கீதே
Question 4 Explanation: 
பாலங்களின் நேர்த்தி மற்றும் காலத்திற்கேற்ப பராமரிப்புகளை உறுதிப்படுத்த, இந்திய பாலம் மேலாண்மை அமைப்பை( Indian Bridge Management System - IBMS ) புது தில்லியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரி தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள அனைத்து பாலங்களின் தகவல்கள் பட்டியலை உருவாக்கி, அவற்றின் கட்டமைப்பு நிலையை மதிப்பிட்டு அதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பாலங்களில் சரியான நேரத்தில் பழுது மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள இந்த IBMS உருவாக்கப்பட்டுள்ளது. 1,50,000 க்கும் மேற்பட்ட பாலம் கட்டமைப்பு தகவல்களுடன்(Database) ஒரே ஒரு உரிமையாளரை கொண்ட உலகின் மிகப்பெரிய தளம் IBMS ஆகும்.
Question 5
5. எஸ்டோனியா(Estonia) நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி யார் ?
A
மார்ட் ஹெல்ம்
B
கெர்ஸ்டி கல்ஜூலைட்
C
எய்கி நெஸ்டர்
D
மெரினா கல்ஜுரந்த்
Question 5 Explanation: 
ஐரோப்பிய நீதிமன்ற தணிக்கை குழுவின் முன்னாள் உறுப்பினரான கெர்ஸ்டி கல்ஜூலைட், பாராளுமன்றத்தால் எஸ்டோனியாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், பால்டிக் நாடான எஸ்டோனியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். பருவத்திற்கு 5 ஆண்டுகள் வீதம் இரு தடவையாக (அதாவது கடந்த 10 ஆண்டுகளாக) இப்பதவியில் இருக்கும் ஜனாதிபதி டூமாஸ் ஹெண்டிரி ல்வேஸ் அடுத்த வாரம் ஓய்வு பெற உள்ள நிலையில் கல்ஜூலைட் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Question 6
6. இந்தியாவின் எந்த உள்நாட்டு வங்கி முதன்முதலில் மியான்மரின் யாங்கானில் அதன் கிளையை துவங்கியுள்ளது ?
A
பஞ்சாப் நேஷனல் வங்கி
B
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
C
பேங்க் ஆப் பரோடா
D
தேனா வங்கி
Question 6 Explanation: 
இந்திய உள்நாட்டு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதன் முதலில் அதன் கிளையை மியான்மர் தலைநகர் யாங்கானில் துவங்கியுள்ளது. கன்ஷியம் ஸ்ரீவஸ்தவா யாங்கான் கிளையின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். யாங்கான் கிளை, SBI-யின் 54வது வெளிநாட்டு கிளையாகும். இதன் மூலம், உலகளவில் 37 நாடுகளில் 198 கிளைகளை SBI அமைத்துள்ளது.
Question 7
7. பின்வரும் எந்த குழு, ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள் உருவாவதற்கான காரணத்தை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A
பிரதீப் மாத்தூர் குழு
B
பார்த்தா பிரதிம் சக்ரவர்த்தி குழு
C
தேவாங் காஹர் குழு
D
பிரடிப்தா பானர்ஜி குழு
Question 7 Explanation: 
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், ஐஐடி-காரக்பூர் இயக்குனர் பார்த்தா பிரதிம் சக்ரவர்த்தி தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் IIT மற்றும் NIT -யில் ஏற்படும் காலியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழிகளை கூற 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரிகளான IIT மற்றும் NIT யில் 2016 ஆம் ஆண்டு 6 கூட்டு ஆலோசனை(Counselling) சுற்று நடத்தியும் 3000 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததினால் இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேராத பட்சத்தில் அவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விருப்பங்களை கருத்தில் கொள்ள இக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது நிலைமையை ஓரளவு மேம்படுத்த உதவும். இது 3 வாரங்களுக்குள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யும்.
Question 8
8. 2016 ஜான் எஃப் ரிச்சர்ட்ஸ் பரிசு(John F. Richards Prize) யாருக்கு வழங்கப்பட உள்ளது ?
A
ஃபாரினா மீர்
B
நயன்ஜோட் லஹிரி
C
சுனில் அம்ரித்
D
அஷ்பர் மொயின்
Question 8 Explanation: 
பேராசிரியர் நயன்ஜோட் லஹிரி எழுதிய “Ashoka in Ancient India” என்ற புத்தகத்திற்காக 2016 ஆம் ஆண்டிற்கான ஜான் எஃப் ரிச்சர்ட்ஸ் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகம், அசோகர் பற்றிய பல செய்திகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் கூறி இருப்பதால் வெளிப்படையாக அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது பிரகடனங்கள், அவரது வெற்றிகள் மற்றும் அவரை விஞ்சிய பரம்பரை சொத்து இழப்பு ஆகியவற்றின் மூலம் அசோகர் தனது மக்களுடன் பேசினார். லஹிரி, ஹரியானா அசோகா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராக இருக்கிறார். தெற்காசிய பகுதிகளில் ஆங்கில மொழியில் வெளியாகும் சிறந்த வரலாற்று புத்தகத்திற்காக அமெரிக்க வரலாற்றுச் சங்கம்(American Historical Association) ஒவ்வொரு ஆண்டும் ஜான் எப் ரிச்சர்ட்ஸ் பரிசை வழங்குகின்றது. இப்பரிசு, ஜனவரி 2017-ல் நடைபெறும் அமெரிக்க வரலாற்றுச் சங்கத்தின் 131வது வருடாந்திர கூட்டத்தில் இவருக்கு வழங்கப்படும்.
Question 9
9. “Modi’s Midas Touch in Foreign Policy” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளவர் யார் ?
A
ரிச்சர்ட் ஈட்டன்
B
தருண் விஜய்
C
சுரேந்திர குமார்
D
மகேந்திர ஜோகி
Question 9 Explanation: 
“Modi’s Midas Touch in Foreign Policy” என்ற புத்தகம் முன்னாள் தூதுவர் சுரேந்திர குமாரால் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்புத்தகத்தை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு புது தில்லியில் வெளியிட்டார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடி செய்த முன்னேற்றம் மற்றும் அதன் வேக முத்திரையை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. இது வெவ்வேறு கொள்கை முயற்சிகளை இணைத்து வளரும் இந்தியாவை வலுவான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாக மாற்றும் பார்வையில் கவனம் செலுத்துகிறது.
Question 10
10. 2016 உலக ஆசிரியர் தினத்தின் (World Teachers’ Day) மையக்கரு என்ன ?
A
Valuing Teachers, Improving their Status
B
Empowering teachers, building sustainable societies
C
Invest in the future, invest in teachers!
D
A Call for Teachers
Question 10 Explanation: 
ஆசிரியர்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காக மற்றும் ஆசிரியர்கள், எதிர்கால தலைமுறையின் தேவைகளை சந்திப்பர் என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5ம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Valuing Teachers, Improving their Status" என்பதாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!