Book Back QuestionsTnpsc

பலபடி வேதியியல் Book Back Questions 7th Science Lesson 16

7th Science Lesson 16

16] பலபடி வேதியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நைலான் இழை அதிக வலுவானதாக உள்ளதால் மலை ஏறவும் பயன்படுத்தப்படுகிறது. நைலான் என்ற பலபடி இழையானது பாலி அமைடுகள் என்ற வேதித்தொகுப்புகளால் ஆனது. ஹெக்ஸாமெத்திலீன்-டை-அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் பாலி அமைடுகள். திண்ம சில்லுகளாக இந்த பாலி அமைடுகளை உருக்கி, வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது நைலான் உருவாகிறது.

பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி வடிக்கும்பொழுது கிடைக்கும் துணை விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்களே செயற்கை இழைகளாகும். பெட்ரோலிய எண்ணெய்யைக் காய்ச்சி வடித்தல் பற்றி உயர் வகுப்புகளில் கற்றுக் கொள்வீர்கள்.

ஏறத்தாழ 200 ஆண்டுகளாகவே, நெகிழி நமது பயன்பாட்டில் உள்ளது. ‘பார்க்கிசீன்’ என்ற முதல் நெகிழியினை உருவாக்கியவர் எட்மண்ட் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் என்பவர் ஆவார்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமாக நாம் ஒரு டிரில்லியன் (ஒரு நிமிடத்திற்கு இரு மில்லியன்) என்ற அளவில் நெகிழிப் பைகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றில் ஒன்று முதல் மூன்று சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

செயற்கை இழைகளால் ஆன உடைகளில் நெகிழிப் பொருள்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு முறையும் அத்தகைய ஆடைகளை நாம் தோய்க்கும் பொழுது, சிறிய இழைகளான – நுண் இழைகள் ஆடைகளிலிருந்து வெளியேறி, நிலம், நீரோடைகள், ஆறுகள் மற்றும் கடல்களில் கலக்கின்றன. கடலின் மேற்பரப்பில் மிதக்கும் (persistent organic pollutants) தொடர்ச்சியான கரிம மாசுபடுத்திகள் மேற்சொன்ன நுண்ணிய இழைகளில் ஒட்டிக்கொண்டு ஆபத்தான மாசுபாட்டை உண்டாக்குகின்றன. கடல் வாழ் உயிரினங்களான இறால், மீன் போன்றவை நுண்ணிய நெகிழிகளை, தமது இயற்கையான உணவு ஆதாரம் என்று எண்ணி உண்கின்றன. அத்தகைய நெகிழிகளை உண்பதால் பலவித நச்சுகள் கடல்வாழ் உயிரினங்களின் உடலுக்குள் சேர்கின்றன. அந்தக் கடல்வாழ் உயிரினங்களை மனிதர்களாகிய நாம் உண்ணும் பொழுது உயிரினங்களின் உடலில் தங்கிய நச்சுகள், நமது உடல்களை அடைகின்றன. இவ்வாறாக, உணவுச் சங்கிலித் தொடரில் நாம் உண்ணும் உணவு, பருகும் நீர் மற்றும் சுவாசிக்கும் காற்றிலும் நுண் இழைகள் காணப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ________ ஆகும்.

(அ) நைலான்

(ஆ) பாலியஸ்டர்

(இ) ரேயான்

(ஈ) பஞ்சு

2. வலுவான இழை ____________ ஆகும்.

(அ) ரேயான்

(ஆ) நைலான்

(இ) அக்ரிலிக்

(ஈ) பாலியஸ்டர்

3. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ___________

(அ) உருகும்

(ஆ) எரிதல்

(இ) ஒன்றும் ஏற்படுவதில்லை

(ஈ) வெடித்தல்

4. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ___________ ஆகும்.

(அ) நைலான்

(ஆ) பாலியெஸ்டர்

(இ) அக்ரிலிக்

(ஈ) PVC

5. நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ____________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.

(இ) இரத்தப்பைகள்

(ஆ) நெகிழிக் கருவிகள்

(இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்

(ஈ) நெகிழி கேரி பைகள்

6. __________ என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்

(அ) காகிதம்

(ஆ) நெகிழி புட்டி

(இ) பருத்தி துணி

(ஈ) கம்பளி

7. PET என்பது ____________ இன் சுருக்கெழுத்தாகும்.

(அ) பாலியெஸ்டர்

(ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்

(இ) பாலி எத்திலின் டெரிப்தாலேட்

(ஈ) பாலித்தின் டெரிலின்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.

2. பல்வகை நெகிழிகளை இனம் காண ____________ பயன்படுகின்றன.

3. சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் __________ ஆகும்.

4. முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு _________ ஆகும்.

5. கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை ___________ என்று பெயர்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன.

2. மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.

3. செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையறையில் வேலை செய்வது சிறந்ததே.

4. வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்.

5. பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்.

பொருத்துக:

 A B

1. நைலான் – வெப்பத்தால் இளகும் நெகிழி

2. PVC – வெப்பத்தால் இறுகும் நெகிழி

3. பேக்லைட் – இழை

4. டெஃப்லான் – மரக்கூழ்

5. ரேயான் – ஒட்டாத சமையல் கலன்கள்

சரியான வரிசையில் எழுது:

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.

2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிர வைக்கவும்.

3. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.

4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.

5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.

6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.

ஒப்புமை தருக:

1. பருத்தி: இயற்கை: பாலியெஸ்டர்: ___________

2. PLA கரண்டி: மட்கும் தன்மை:: நெகிழி ஸ்பூன்: __________

3. நைலான்: வெப்பத்தால் உருகும்: பட்டு: ____________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. வாக்கியம்: மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.

காரணம்: காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை.

2. வாக்கியம்: நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாத காலம் போதுமானது.

காரணம்: நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.

3. வாக்கியம்: நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

காரணம்: நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பஞ்சு 2. நைலான் 3. எரிதல் 4. அக்ரிலிக் 5. இரத்தப் பைகள் 6. நெகிழி புட்டி

7. பாலி எத்திலின் டெரிப்தாலேட்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. குடை 2. ரெசீன் குறியீடுகள் 3. பலபடி 4. பருத்தி 5. பட்டு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு 

சரியான விடை: இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.

4. சரி

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. நைலான் – இழை

2. PVC – வெப்பத்தால் இளகும் நெகிழி

3. பேக்லைட் – வெப்பத்தால் இறுகும் நெகிழி

4. டெஃப்லான் – ஒட்டாத சமையல்கலன்கள்

5. ரேயான் – மரக்கூழ்

சரியான வரிசையில் எழுதுக: (சரியான வரிசை)

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனை கலக்கவும்.

2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து வைக்கவும்.

3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம்.

4. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.

5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமைக்கவும்.

6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.

ஒப்புமை தருக: 

1. செயற்கை 2. மட்காத தன்மை 3. வெப்பத்தால் எரியும்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. வாக்கியம் மற்றும் காரணம் சரி. R ஆனது A க்கான சரியான விபலபடி வேதியியல் Book Back Questions 7th Science Lesson 16ளக்கம் ஆகும்.

2. வாக்கியம் மற்றும் காரணம் சரி. R ஆனது A க்கான சரியான விளக்கம் ஆகும்.

3. வாக்கியம் மற்றும் காரணம் சரி. R ஆனது A க்கான சரியான விளக்கம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button