Book Back QuestionsTnpsc

மனித உறுப்பு மண்டலங்கள் Book Back Questions 6th Science Lesson 13

6th Science Lesson 13

13] மனித உறுப்பு மண்டலங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நமது உடலில் காணப்படும் எலும்புளில் மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி (stapes) எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்). நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும். குழந்தைகள் பிறக்கும் பொழுது 300க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.

மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய 300 மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடுகிறோம்.

இரத்த தானம்: மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்காக இரத்தம் தற்காலிகமாக இரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகின்றது. 18 வயதுக்கு மேல், ஆரோக்கியமான ஒவ்வொருவரும் இரத்த தானம் செய்யலாம். அதன் மூலம் அவசரகால விபத்துக் காலங்களிலும், அறுவை சிகிச்சையின் போதும், இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உரிய காலத்தில் இரத்தம் கொடுக்கப்படுகிறது. இரத்த தானம் இவர்களின் உயிர்காக்க உதவுகிறது.

மூளையில் நூறு மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உங்கள் உணர் உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்: மிக அதிகமான ஒளியிலோ அல்லது மிகக்குறைந்த ஒளியிலோ, மேலும் நகரும் வாகனத்தில் செல்லும் பொழுதோ படிக்க வேண்டாம். தொலைக்காட்சி, கணினி, செல்பேசி, மடிக்கணினி போன்ற ஒளித்திரைகளை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் கண்களை மிகக் கடினமாகத் தேய்க்க வேண்டாம். கண்ணில் உள்ள தூசிகளை அகற்ற தினந்தோறும் 2 அல்லது 3 முறை தூய்மையான தண்ணீர் கொண்டு உங்கள் கண்களை மெதுவாக (மென்மையாக) சுத்தம் செய்யவும். செவிகள் கடுமையான அடி அல்லது தாக்குதல் போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். கொண்டை ஊசி, பல் குச்சி இவற்றை வைத்து செவிகளைச் சுத்தம் செய்வது ஆபத்தான செயல், எனவே இதனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் காதுச் சவ்வு கிழிந்து விடும் காது தொற்று ஏற்படும். தினமும் தோலைச் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும்.நாம் ஏன் நீரை அருந்துகிறோம்? நமது உடலில் 70% நீர் உள்ளது. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (85%) நீர் உள்ளது. கொழுப்பு செல்களில் குறைந்த அளவு (15%) மட்டுமே உள்ளது. நாம் உணவின் மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு நாளைக்கு 1.5 முதல் 3.5 லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் ________

(அ) ஆக்சிஜன்

(ஆ) சத்துப் பொருள்கள்

(இ) ஹார்மோன்கள்

(ஈ) இவை அனைத்தும்

2. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு __________

(அ) இரைப்பை

(ஆ) மண்ணீரல்

(இ) இதயம்

(ஈ) நுரையீரல்கள்

3. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

(அ) தசைச் சுருக்கம்

(ஆ) சுவாசம்

(இ) செரிமானம்

(ஈ) கழிவு நீக்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது ____________ மண்டலம் ஆகும்.

2. மனித மூளையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் __________ ஆகும்.

3. மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு __________ என்று பெயர்.

4. மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு ___________ ஆகும்.

5. நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருள்களுக்கு _________ என்று பெயர்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.

2. இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

3. உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப் பாதை.

4. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.

5. மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.

IV. பொருத்துக:

1. காது – அ. இதயத் தசை

2. எலும்பு மண்டலம் – ஆ. தட்டையான தசை

3. உதர விதானம் – இ. ஒலி

4. இதயம் – ஈ. நுண் காற்றுப்பைகள்

5. நுரையீரல்கள் – உ. உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றது

V. கீழுள்ளவற்றை முறைபடுத்தி எழுதுக:

1. இரைப்பை 🡪 பெருங்குடல் 🡪 உணவுக் குழல் 🡪 தொண்டை 🡪 வாய் 🡪 சிறுகுடல் 🡪 மலக்குடல் 🡪 மலவாய்

2. சிறுநீர்ப் புறவழி 🡪 சிறுநீர் நாளம் 🡪 சிறுநீர்ப்பை 🡪 சிறு நீரகம்.

VI. ஒப்புமை தருக:

1. தமனிகள்: இரத்தத்தை இதயத்திலிருந்து எடுத்து செல்பவை:: __________ இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருபவை.

2. நுரையீரல்: சுவாச மண்டலம்:: __________: இரத்த ஓட்ட மண்டலம்.

3. நொதிகள்: செரிமான சுரப்பிகள்:: __________: நாளமில்லாச் சுரப்பிகள்.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இவை அனைத்தும், 2. நுரையீரல்கள், 3. செரிமானம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உறுப்பு, 2. மண்டையோடு, 3. கழிவுநீக்கம், 4. தோல், 5. ஹார்மோன்கள்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. எலும்பு மஜ்ஜை, 2. கழிவுநீக்க மணடலம், 3. சரி, 4. ரத்த தந்துகிகள், 5. சரி

IV. பொருத்துக:

1. இ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. ஈ

V. கீழுள்ளவற்றை முறைபடுத்தி எழுதுக:

1. வாய் 🡪 தொண்டை 🡪 உணவுக் குழல் 🡪1. இரைப்பை 🡪 சிறுகுடல் 🡪 பெருங்குடல் 🡪 மலக்குடல் 🡪 மலவாய்

2. சிறு நீரகம்🡪 சிறுநீர் நாளம் 🡪 சிறுநீர்ப்பை 🡪 சிறுநீர்ப் புறவழி 🡪

VI. ஒப்புமை தருக:

1. சிரைகள், 2. இதயம், 3. ஹார்மோன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button