Tnpsc

அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் – Tnpsc General Tamil

அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்

பெயர் அடைமொழி
திருநாவுக்கரசர் ஆளுடைய அரசு, அப்பர், வாகீசர், மருள்நீக்கியார், திருவாமூரார்
திருஞானசம்பந்தர் ஆளுடைய பிள்ளை, திராவிட சிசு
சுந்தரர் தம்பிரான் தோழர், ஆளுடையநம்பி, திருநாவலூரார், ஆரூரார், வன்தொண்டன்
கம்பர் கல்வியிற் பெரியார், கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசர்
ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி, சர்வக்ஞகவி, கௌடப் புலவர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திவ்யகவி, அழகிய மணவாளதாசர்
மாணிக்கவாசகர் திருவாதவூரார், அழுது அடியடைந்த அன்பர், தென்னவன் பிரம்மராயன்
பாரதியார் தேசியகவி, சிந்துக்குத்தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச் சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லிதாசன், நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா, செந்தமிழ்த் தேனீ
பாரதிதாசன் பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், இயற்கைக் கவிஞர், புதுவைக் குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ், பூங்காட்டுத் தும்பி
அண்ணாமலை கவிராயர் காவடி சிந்துக்குத் தந்தை
வெ. இராமலிங்கனார் காந்தியக் கவிஞர், ஆட்சிமொழிக்காவலர், நாமக்கல் கவிஞர்
ம. பொ. சிவஞானம் சிலம்பு செல்வர்
அனுமன் சொல்லின் செல்வன், சிறிய திருவடி
திரு. வி. கல்யாணசுந்தரம் தமிழ்த்தென்றல்
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை கிறித்துவக் கம்பன்
காளமேகப்புலவர் வசைகவி, ஆசுகவி
நச்சினார்க்கினியர் உச்சிமேற்கொள் புலவர், தமிழ்மல்லி நாதசூரி
நம்பியாண்டார் நம்பி தமிழ் வியாசர்
கோ. வி. மணிசேகரன் புதினப் பேரரசு
தியாகராஜ பாகவதர் ஏழிசை மன்னர்
தேவநேயப் பாவாணர் மொழிஞாயிறு
அப்துல் ரகுமான் கவிக்கோ
கல்கி தமிழ் வரலாற்று நாவலின் தந்தை
அகத்தியர் தமிழ்முனி, குறுமுனி, பொதிகைமுனி
மே. வி. வேணுகோபால் இலக்கண தாத்தா
கி. ஆ. பெ. விஸ்வநாதப்பிள்ளை முத்தமிழ்க் காவலர்
சேக்கிழார் தொண்டர்சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர், அருண்மொழித் தேவர்
வீரமா முனிவர் தமிழ் இலக்கிய தோற்றுநர், சிறுகதையின் தந்தை
புதுமைப்பித்தன் சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
வ. வே. சு. ஐயர் சிறுகதையின் முன்னேடி
ஜெயகாந்தன் சிறுகதையின் முடிசூடரமன்னன், தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன்
மு. வரதராசனார் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
அண்ணாதுரை தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர்
ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் முன்னேடி
உ. வே. சாமிநாதய்யர் தமிழ்த் தாத்தா
பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம்
ஈ. வெ. ராமசாமி பகுத்தறிவுப் பகலவன், தெற்காசிய சாக்ரடீஸ், பெரியார்
வாணிதாசன் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வர்த், பாவலர்மணி, பாவலர் மன்னன், தமிழ்நாட்டின் தாகூர், கவிஞரேறு, ரமி (புனைப்பெயர்)
சுத்தானந்த பாரதி கவியோகி
ஆறுமுக நாவலர் தற்கால உரைநடையின் தந்தை, வசனநடை கைவந்த வல்லாளர்
ஜவஹர்லால் நேரு ஆசியஜோதி
தேசிக விநாயகம் பிள்ளை நாஞ்சில்நாட்டு கவிஞர், கவிமணி, தழுவல் கவிஞர்
சுஜாதா தமிழ்நாட்டின் அட்லிசேஸ்
வெங்கட ரமணி தென்னாட்டு தாகூர்
கதிரேச செட்டியார் பண்டிதமணி
பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கிய முன்னேடி, பட்டர்பிரான்
ஜேக்கப் கரீம் நாட்டுப்புறவியலின் தந்தை
வானமாமலை தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை
கோவலன் மண்தோய்ந்த புகழினான்
வேதநாயகம் பிள்ளை நீதிநாயகர்
சோமசுந்தர பாரதியார் கணக்காயர், நாவலர்
மூன்றாம் நந்திவர்மன் தமிழ் நந்தி
சீத்தலைச்சாத்தனார் தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன், கூலவாணிகன்
நக்கீரர் நற்றதமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர்
திருத்தக்க தேவர் தமிழ் கவிஞருள் அரசர்
நம்மாழ்வார் தமிழ்வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன், வகுளாபரணன், காரிமாறன், வைணவத் திராவிட சிசு
ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கோடி, வைணவம் தந்த செல்வி, நாச்சியார்
அழ. வள்ளியப்பா குழந்தை கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பன்மொழிப்புலவர், நவீன கம்பர்
கால்டுவெல் திராவிட ஒப்பிலக்கணத் தந்தை
நா. காமரசன் ஆஸ்தானக் கவிஞர்
வைரமுத்து கவிப்பேரரசு
செய்கு தம்பியார் தசவதானி
கரிகாலன் நரைமுடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்
ஔவையார் தமிழ் மூதாட்டி
முத்துராமலிங்க தேவர் தேசியம் காத்த செம்மல், பிரணவ கேசரி, வேதாந்த பாஸ்கர்
நாதமுனிகள் பெரிய முதலியார்
திருமழிசையாழ்வார் சக்கரத்தாழ்வார்
குலசேகர ஆழ்வார் கொல்லிக்காவலன்
திருமங்கையாழ்வார் கலிநாடன், பரபாலன், குறையலாளி, மங்கையர்கோன், மங்கை வேந்தன், ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
கி. இராஜநாராயணன் வட்டார கதைகளின் முன்னோடி, கரிசல் கதைகளின் தந்தை
கல்கி தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
மௌனி தமிழ் சிறுகதையின் திருமூலர்
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஞானதீபக் கவிராயர், அண்ணாவியார்
மனோன்மணீயம் சுந்தரனார் இராவ் பகதூர், தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
சுரதா உவமைக் கவிஞர், கிவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கவிமன்னர்
கண்ணதாசன் கவியரசு, காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி (புனைப்பெயர்கள்)
மருதகாசி திரைக்கவித் திலகம்
சி. சு. செல்லப்பா புதுக்கதைப் புரவலர்
அப்துல் ரகுமான் தமிழ்நாட்டு இக்பால், கவிக்கோ, சூரியக் கவிஞன்
ஆலந்தூர் மோகனரங்கன் கவிவேந்தர்
மறைமலையடிகள் தனித்தமிழ் மலை, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை, தன்மான இயக்கத்தின் முன்னோடி, முருகவேள் (புனைப்பெயர்), சாமி வேதாச்சலம் (இயற்பெயர்)
பரிதிமாற் கலைஞர் தமிழ்நாடகப் பேராசிரியர், திராவிட சாஸ்திரி, சூரியநாராயண சாஸ்திரி
பெருஞ்சித்திரனார் பாவலரேறு, தற்கால நக்கீரர்
ஜி. யூ. போப் தமிழ் பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி
இராமலிங்க அடிகள் இசைப்பெரும் புலவர், அருட்பிரகாச வள்ளலார், சன்மார்க்க கவிஞர், புதுநெறி கண்ட புலவர், புரட்சித் துறவி, ஓதாது உணர்ந்த அருட்புலவர், பசிப்பிணி மருத்துவர்
திருமூலர் முதல் சித்தர், தமிழ் சித்தர்களின் முதல்வர்
திருவள்ளுவர் நாயனார், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர், நான்முகன்
சேரன் பெருமான் நாயனார் பெருமாக்கோதையார், கழற்றறிவார்
உடுமலை நாராயணகவி பகுத்தறிவுக் கவிராயர்
டி. கே. சி ரசிகமணி
இராபர்ட் – டி – நொபிலி தத்துவ போதகர்
வ. உ. சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன்
வி. முனுசாமி திருக்குறளார்
அசலாம்பிகை அம்மையார் 20 – ஆம் நூற்றாண்டின் ஔவையார்
இராஜாஜி மூதறிஞர்
எம். எஸ். சுப்புலட்சுமி இசைக்குயில்
ந. பார்த்தசாரதி உருவகக் கவிஞர்
வெங்கடாசலம் பிள்ளை கரந்தைக் கவிஞர்
வரத நஞ்சயப்பிள்ளை புலவரேறு
தருமு. சிவராமு படிமக்கவிஞர்
வீரகவிராயர் ஆசுகவி
விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
ஏ. பி. ஜே. அப்துல்கலாம் இந்திய ஏவுகணை நாயகன்
மயில்சாமி அண்ணாதுரை இளையகலாம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!