Book Back QuestionsTnpsc

அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions 8th Science Lesson 15

8th Science Lesson 15

15] அன்றாட வாழ்வில் வேதியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

LPG சிலிண்டர்களில் புரப்பேன் வாயு பயன்படுத்தப்படுகிறது. அது மணமற்ற வாயு என்பதால், அதில் கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறிய முடியாது. மெர்கேப்டன் என்ற துர்நாற்றம் தரும் வேதிப்பொருள் LPG உடன் கலக்கப்படுகிறது. இதனால் வாயுக்கசிவினைக் கண்டறிய முடியும்.

சுற்றுச் சூழலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஓவியங்களையும் தொன்மையான கலைப் பொருள்களையும் காப்பதற்கு மிதமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே, அருங்காட்சியகங்களில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க இயற்கை வாயு பயன்படுகிறது.

உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இது அமெரிக்காவில் மரவாயு என்றும், இங்கிலாந்தில் உறிஞ்சு வாயு என்றும் அழைக்கப்படுகிறது.

CNGயின் சராசரி இயைபு:

பகுதிப்பொருள்கள் – சதவீதம்

மீத்தேன் – 88.5

ஈத்தேன் – 5.5

புரோப்பேன் – 3.7

பியூட்டேன் – 1.8

பென்டேன் – 0.5

பழங்கால நாகரிக மக்கள் கச்சா எண்ணெயை ஒட்டும் பொருள்களாகப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு பரப்புகளில் நீர் புகாவண்ணம் தடுப்பதற்கு ஒட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.

நிலக்கரி ஒரு விலை மதிக்க முடியாத பொருள் என்பதால் இது கருப்பு வைரம் என்று அழைக்கப்படுகிறது. சிதைத்து வடித்தலில் 1000 கி.கி. நிலக்கரியானது 700 கி.கி. கல்கரி, 100 லிட்டர் அம்மோனியா, 50 லிட்டர் கரித்தார் மற்றும் 400 மீ3 கரி வாயுவைத் தரவல்லது.

உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1859ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது. இரண்டாவது எண்ணெய்க் கிணறு 1867ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அசாமில் “மாக்கும்” என்ற இடத்தில் தோண்டப்பட்டது.

ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள்: எதிர்காலத்தில் ஹைட்ரஜன் வாயு ஒரு மிகச் சிறந்த மாற்று எரிபொருளாக இருக்கும். இந்த எரிபொருள் தூய்மையானது. ஏனெனில், இது எரியும் பொழுது நீர் மட்டுமே வெளிவரும். இது மட்டுமல்லாமல் அதிகமான ஆற்றலையும் தரவல்லது. மேலும், காற்றை மாசுபடுத்தாத தன்மையையும் இது பெற்றுள்ளது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் _________

அ) மெத்தனால்

ஆ) எத்தனால்

இ) கற்பூரம்

ஈ) மெர்காப்டன்

2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?

அ) சதுப்பு நில வாயு

ஆ) நீர்வாயு

இ) உற்பத்தி வாயு

ஈ) நிலக்கரி வாயு

3. ஒரு எரிபொருளின் கலோரிமதிப்பின் அலகு

அ) கிலோ ஜீல்/மோல்

ஆ) கிலோ ஜீல்/கிராம்

இ) கிலோ ஜீல்/கிலோ கிராம்

ஈ) ஜீல்/கிலோ கிராம்

4. ___________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.

அ) பீட்

ஆ) லிக்னைட்

இ) பிட்டுமினஸ்

ஈ) ஆந்த்ரசைட்

5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ___________

அ) மீத்தேன்

ஆ) ஈத்தேன்

இ) புரோப்பேன்

ஈ) பியூட்டேன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உற்பத்தி வாயு என்பது __________ மற்றும் _________ ஆகியவற்றின் கலவையாகும்.

2. __________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.

3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது __________

4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது ________ எனப்படும்.

5. படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம் __________

III. பொருத்துக:

1. ஆக்டேன் மதிப்பீடு – ­அ. டீசல்

2. சீட்டேன் மதிப்பீடு – ஆ. மீத்தேன்

3. எளிய ஹைட்ரோகார்பன் – இ. பெட்ரோல்

4. பீட் – – ஈ. பழுப்பு நிறம் கொண்டது

5. லிக்னைட் – உ. முதல் நிலை நிலக்கரி

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மெர்காப்டன், 2. நீர்வாயு, 3. கிலோ ஜீல்/கிலோ கிராம், 4. ஆந்த்ரசைட், 5. மீத்தேன்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கார்பன் மோனாக்சைடு+ நைட்ரஜன், 2. மீத்தேன், 3. பாறை எண்ணெய், 4. சிதைத்து வடித்தல், 5. நிலக்கரி

III. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஆ, 4.உ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!