MCQ Questions

அரசாங்கத்தின் வகைகள் 9th Social Science Lesson 14 Questions in Tamil

9th Social Science Lesson 14 Questions in Tamil

14. அரசாங்கத்தின் வகைகள்

1) அரசாங்கத்தின் உறுப்பு எனப்படுவது எது?

I. சட்டமன்றம்

II. நிர்வாக துறை

III. நீதித்துறை

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அரசாங்கத்தின் உறுப்புகளாக சட்டமன்றம், நிர்வாக துறை மற்றும் நீதித்துறை அமைந்துள்ளன. இவ்வுறுப்புக்கள் அரசின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன)

2) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. ஒற்றை ஆட்சி முறை

II. கூட்டாட்சி முறை

III. நாடாளுமன்ற ஆட்சி முறை

IV. ஜனாதிபதி ஆட்சி முறை

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆட்சிமுறைகள் ஒற்றையாட்சி, கூட்டாட்சி, அதிபர் மக்களாட்சி, நாடாளுமன்ற ஆட்சி என பல வகைப்படுத்தப்படுகின்றன)

3) குபர்னர் (Gubernare) என்னும் சொல்லுக்கு பொருள்?

A) இயக்கு

B) ஆட்சி செய்

C) வழிநடத்து

D) அடக்கு

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குபர்னர் ( Gubernare) என்பது லத்தீன் வார்த்தையாகும். இதற்கு இயக்கு, ஆட்சி செய், வழிநடத்து, ஆள் என்று பொருள் தரும்.)

4) இறையாண்மை மிக்க ஒரு அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வது………… ஆட்சி முறையாகும்.

A) ஒற்றை

B) கூட்டாட்சி

C) அதிபர் ஆட்சி

D) இவை எல்லாமே தவறு

(குறிப்பு – ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும். மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும் நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்)

5) ஒற்றை ஆட்சி முறைக்கான தவறான உதாரணம் எது?

A) பிரான்ஸ்

B) ஜப்பான்

C) இலங்கை

D) கனடா

(குறிப்பு – இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணமாகும். கனடா என்பது கூட்டாட்சி முறைக்கான உதாரணம் ஆகும்)

6) அரசு என்னும் பதம் பழைய……….. வார்த்தையான கவர்னர் (Governer) என்பதிலிருந்து பெறப்பட்டது.

A) பிரெஞ்சு

B) லத்தீன்

C) கிரேக்க

D) அரேபிய

(குறிப்பு – அரசு (Government) என்னும் பதம் பழைய பிரஞ்சு வார்த்தையான கவர்னர் என்பதிலிருந்தும் லத்தீன் வார்த்தையான குபர்னர் என்பதிலிருந்து பெறப்பட்டது)

7) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.

II. ஒற்றையாட்சி முறை அரசியல் அமைப்பிலும் அதிகாரப் பரவலாக்கம் இருக்கக்கூடும்.ஆனாலும் அதனை கூட்டாட்சி முறை எனக் கொள்ளலாகாது.

A) கூற்று I மட்டும் சரி

B) கூற்று II மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஒரு அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்)

8) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சி முறை அம்சங்களுள் தவறானது எது?

A) பலமான மத்திய அரசு

B) மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை

C) இரட்டை அரசியலமைப்பு

D) அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை

(குறிப்பு – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றை ஆட்சி முறை அம்சங்களாவன பலமான மத்திய அரசு, மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை, ஒற்றை அரசமைப்பு, அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை, மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம், அவசரகால ஏற்பாடுகள், ஒற்றைக் குடியுரிமை, ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை போன்றவைகளாகும்)

9) ஒற்றை ஆட்சி முறையின் நிறைகளுள் அல்லாதவை எது?

A) அரசியல் அமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்

B) ஒற்றுமை சீரான சட்டம் கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது

C) ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்து துரிதமாக செயல்படுகிறது

D) அதிகமான அதிகாரங்கள் குறிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகை செய்கிறது.

(குறிப்பு – அதிகமான அதிகாரங்கள் குறிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகை செய்வது என்பது ஒற்றை ஆட்சி முறையின் குறைகளுள் ஒன்றாகும்)

10) கூட்டாட்சி முறை நாடுகளுள் தவறானது எது?

A) சுவிட்சர்லாந்து

B) ஆஸ்திரேலியா

C) இலங்கை

D) அர்ஜென்டினா

(குறிப்பு – ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையை கொண்டவை ஆகும்)

11) கூட்டாட்சியின் நிறைகளுள் தவறானது எது?

A) உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்

B) மிகப் பெரிய நாடுகள் தோன்றாமல் இருக்க வழி செய்கிறது

C) பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது

D) மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகத் திறன் மேம்பட வழி வகை செய்கிறது.

(குறிப்பு – கூட்டாட்சி முறை பெரிய நாடுகள் தோன்ற வழிவகுக்கிறது. மேலும் இந்த ஆட்சி முறை பெரிய நாடுகளுக்கு பொருத்தமானது )

12) கூட்டாட்சி முறையின் குறைகளில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. ஒற்றையாட்சி முறையோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி முறை பலவீனமானது.

II. நிர்வாக சமநிலையில் குறைபாடுகள் உள்ளது

III. மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க இயலாது திடமான அரசியலமைப்பு.

IV. வெளியுறவுக் கொள்கைகளில் சில நேரங்களில் மாநில அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன

V. ஒற்றைக் குடியுரிமை

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV மட்டும் சரி

C) II, III, IV, V மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கூட்டாட்சி என்பது இரட்டை குடியுரிமை கொண்டது ஆகும். மாகாண குடியுரிமை மற்றும் மத்திய குடியுரிமை என்பதாகும் )

13) இந்திய அரசியலமைப்பிலுள்ள கூட்டாட்சி முறை அம்சங்கள் எது?

I. இரட்டை அரசாங்கம்

II. எழுதப்பட்ட அரசியலமைப்பு

III. அதிகார பகிர்வு

IV. அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நாட்டின் உச்சபட்ச சட்டமாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அதன் விதிகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும். இவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பிலுள்ள கூட்டாட்சி முறை அம்சங்கள் ஆகும்)

14) நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு_________ பொறுப்பேற்கிறது.

A) நீதிமன்றம்

B) நிர்வாகத்துறை

C) நீதித்துறை

D) அரசியலமைப்பு

(குறிப்பு – நவீன மக்களாட்சி முறைகளை நாடாளுமன்ற ஆட்சி முறை அதிபர் மக்களாட்சி முறை என இரு வகைகளாக பிரிக்கலாம். நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது)

15) பொருத்துக

I. இஸ்ரேல் – a) ஸ்டார்டிங்

II. ஜெர்மனி – b) கெனெஸட்

III. டென்மார்க் – c) பந்தேஸ்டாக்

IV. நார்வே – d) போக்ட்டிங்

A) I-b, II-c, III-d, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-d, II-b, III-c, IV-a

D) I-b, II-a, III-c, IV-d

(குறிப்பு – நாடாளுமன்றங்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. எகா – ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நாடாளுமன்றம் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்றன)

16) பாராளுமன்ற ஆட்சி முறையின் வேறு பெயர்கள் ஆவன?

I. அமைச்சரவை அரசாங்கம்

II. பொறுப்பு அரசாங்கம்

III. வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – நாடாளுமன்ற ஆட்சி முறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது. இதனை அமைச்சரவை அரசாங்கம், அல்லது பொறுப்பு அரசாங்கம் அல்லது வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம் மாதிரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது)

17) நாடாளுமன்ற ஆட்சி முறை காணப்படும் நாடுகள் எது?

I. இந்தியா

II. பிரிட்டன்

III. ஜப்பான்

IV. கனடா

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) IV மட்டும் தவறு

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – மேற்க்கண்ட அனைத்து நாடுகளிலும் நாடாளுமன்ற ஆட்சி முறை காணப்படுகிறது)

18) நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்களும் தவறானது எது?

A) பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்

B) இரட்டை உறுப்பினர்

C) பிரதம மந்திரியின் தலைமை

D) சர்வாதிகார ஆட்சி

(குறிப்பு – ஆட்சி முறையின் அம்சங்களில், சர்வாதிகார ஆட்சி என்பது தவறானது. பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்ற கட்சியானது ஆட்சி அமைக்கிறது)

19) நாடாளுமன்ற ஆட்சி முறையின் நிறைகளுள் தவறானது எது?

A) பொறுப்பான அரசாங்கம்

B) நிலையான அரசாங்கம்

C) சர்வாதிகாரத்தை தடுக்கிறது

D) பரவலான பிரதிநிதித்துவம்

(குறிப்பு – நாடாளுமன்ற ஆட்சி முறையின் நிறைகளுள் இன்று நிலையான அரசாங்கம் என்பது தவறானது. நாடாளுமன்ற ஆட்சி முறையில் அரசாங்கம் என்பது நிலையானது அல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பொழுது, அரசாங்கம் அதன் அதிகாரத்தை இழக்கிறது)

20) பூடானில் நடைபெறும் ஆட்சி முறை என்ன?

A) கூட்டாட்சி முறை

B) நாடாளுமன்ற மக்களாட்சி முறை

C) சர்வாதிகார ஆட்சி முறை

D) ஒற்றையாட்சி முறை

(குறிப்பு – பூட்டான் ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி நாடாகும். அரசர் பூட்டானின் அரசமைப்பு இப்படி மன்னராக உள்ளார்)

21) அதிபர் மக்களாட்சி முறையின் பண்புநலன்கள் எது?

I. சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாதவை

II. நாடாளுமன்றம் அற்றவை

III. நிலைத்த நிர்வாக அமைப்பு மற்றவை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அதிபர் மக்களாட்சி என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும், நாடாளுமன்றம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும். அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் இவ்வரசு முறை அமைக்கப்பட்டுள்ளது)

22) அதிபர் மக்களாட்சி முறை உள்ள நாடுகளுள் தவறானது எது?

I. அமெரிக்கா II. பிரேசில் III. ரஷ்யா IV. இலங்கை V. இந்தியா

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) II, III, V மட்டும் சரி

(குறிப்பு – நாடாளுமன்ற ஆட்சி முறை கொண்ட நாடு ஆகும். மேற்கண்ட மற்ற நாடுகள் அதிபர் மக்களாட்சி முறை கொண்ட நாடுகளாகும்)

23) நேபாளத்தில் முடியாட்சி முடிவு பெற்று மக்களாட்சி துவங்கிய மாதம் மற்றும் ஆண்டு எது?

A) ஏப்ரல், 2004

B) மே, 2005

C) ஏப்ரல், 2006

D) மே, 2007

(குறிப்பு – ஏப்ரல் 2006 ஆம் ஆண்டு நேபாளத்தின் துடிப்பான ஜனநாயகம் சார்ந்த மக்கள் சமூக இயக்கத்தின் தலைவர்கள் 7 கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தப் புரட்சியின் காரணமாக நேபாளத்தில் முடியாட்சி முடிவு பெற்று மக்களாட்சி வந்தது)

24) நேபாளத்தின் கடைசி மன்னர் யார்?

A) ஞானேந்திரா

B) உபேந்திரா

C) தர்மேந்திரா

D) இவர் யாரும் அல்ல

(குறிப்பு – நேபாளத்தில் கடைசி அரசர் ஞானேந்திரா என்பவர் ஆவார். உங்களுடைய ஆட்சி காலம் ஏப்ரல் மாதம் 2006 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் நேபாளத்தில் மக்களாட்சி தோன்றியது)

25) அமெரிக்க அதிபர் எத்தனை ஆண்டுகள் ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

A) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

B) மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை

C) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை

D) ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

(குறிப்பு – அமெரிக்க அதிபர் மாகாணம் மற்றும் அரசின் தலைவராக திகழ்கிறார். அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்)

26) அமெரிக்க அதிபரின் அமைச்சரவையை எவ்வாறு அழைப்பர்?

A) கிச்சன் கேபினட்

B) நல் கேபினட்

C) ஆக்டிவ் கேபினட்

D) பவர்ஃபுல் கேபினட்

(குறிப்பு – அமெரிக்க அதிபரின் அமைச்சரவையை கிச்சன் கேபினட் என்று அழைப்பர். இது தேர்ந்தெடுக்கப்படாத துறை சார்ந்த செயலர் கொண்ட சிறு ஆலோசனை அமைப்பு ஆகும்)

27) கிச்சன் கேபினட் என்றழைக்கப்படும் அமைச்சரவை உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

A) ஐக்கிய அமெரிக்க மாகாண உறுப்பினர்கள்

B) அமெரிக்க மக்கள்

C அமெரிக்க அதிபர்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – அமெரிக்க அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சி புரிகிறார் அல்லது அமைச்சரவையை கிச்சன் கேபினட் என்று அழைக்கிறார்கள். இதன் உறுப்பினர்களை அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கிறார்)

28) கீழ்க்காணும் கூற்றுக்களுள் சரியானது எது?

I. அமெரிக்க அதிபரின் மீது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆன ஒரு கடுமையான குற்றச்சாட்டு இருந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தால் பதவி இறக்கம் செய்ய முடியும்.

II. அமெரிக்க அதிபர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

III. அதிபரால் நியமனம் செய்யப்படும் கேபினட் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பதவி இறக்கம் செய்யப்படலாம்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – அமெரிக்க அதிபர் அமைச்சரவையின் உதவியோடு ஆட்சி புரிகிறார். அமைச்சரவையின் உறுப்பினர்களை அதிபர் தேர்ந்தெடுக்கிறார். அவர்களை எந்த நேரத்திலும் பதவியிறக்கம் செய்யும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. அவரும் அவரது செயலாளர்களும் மகா சபையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை)

29) கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

I. மகாசபையின் செயல்பாடுகளுக்கு அதிபரும் அவரது செயலாளர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

II. அமெரிக்க அதிபரும் அவரது செயலாளர்களும் மகாசபையில் உறுப்பினர்களாக மட்டும் இருப்பார்கள்.

III. மகாசபையின் கூட்டங்களில் அமெரிக்க அதிபரும், அவரது செயலாளர்களும் கலந்து கொள்வது இல்லை

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அமெரிக்க அதிபரும் அவரது செயலாளர்களும் மகா சபை என்று அழைக்கப்படும் காங்கிரஸில் உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள். இவர்கள் மகா சபை கூட்டங்களில் கலந்து கொள்வதும் இல்லை)

30) கீழக்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மக்களாட்சி முறையில் மகாசபையின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகளின் அவையை அதிபரால் கலைக்க இயலாது.

II. அதிபர் மக்களாட்சி முறையில் சட்டமன்றம், நிர்வாகத் துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மூன்றும் தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளாக உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அதிபர் மக்களாட்சி முறை என்பது ஜனநாயகமானது, அதிபரின் முறையான கட்டுப்பாடுமிக்கது, சர்வாதிகாரமாக சிதையும் வாய்ப்புமிக்கது.)

31) நல்லாட்சியின் பண்புகளுள் தவறானது எது?

I. பங்கேற்பு

II. சட்டத்தின் ஆட்சி

III. சமத்துவம்

IV. பொறுப்புடைமை

V. ஆக்கிரமிப்பு

A) I, II, III, IV மட்டும் சரி

B) II, III, IV, V மட்டும் சரி

C) I, III, IV, V மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நல்லாட்சியின் பண்புகள் ஆவன, பங்கேற்பு, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, விரைவான நேர்மறையான வினையாற்றல், கருத்தொற்றுமை, சமத்துவம், திறமை மற்றும் செயல்திறன், பொறுப்புடைமை ஆகியன ஆகும்)

32) அதிபர் மக்களாட்சி முறை குறித்த தவறான கருத்து எது?

A) குடியரசு தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

B) அதிபரே அதிகாரம் படைத்தவர் ஆவார்.

C) மகாசபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பேற்கிறார்.

D) மாகாணத்தின் தலைவரும், அரசாங்கத்தின் தலைவரும் அதிபர் ஆவார்

(குறிப்பு – மகாசபை (காங்கிரஸின்) நடவடிக்கைகளுக்கு அதிபரும் அவரது செயலாளர்களும் பொறுப்பேற்க மாட்டார்கள். அதிபரும் அவரது செயலாளர்களும் மகாசபையின் உறுப்பினர்களும் அல்ல அவர்கள் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் மாட்டார்கள்)

33) நாடாளுமன்ற ஆட்சி முறை குறித்த தவறான கருத்து எது?

A) மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது.

B) அரசின் தலைவர் குடியரசுத் தலைவராவார்.

C) கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் உள்ளவை.

D) பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ஜனாதிபதி ஆகிறார்.

(குறிப்பு – நாடாளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ஆகிறார். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய யூனியன் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற மேலவை கீழவை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள்)

34) பொருத்துக

I. மத்திய மாநில உறவுகள் – a) பிரிவு 256 முதல் 263 வரை

II. சட்டமன்ற உறவுகள் – b) பிரிவு 268 முதல் 294வரை

III. நிர்வாக உறவுகள் – c) அரசியலமைப்பு பிரிவுகள்

IV. நிதி உறவுகள் – d) பிரிவு 245 முதல் 255 வரை

A) I-c, II-d, III-a, IV-b

B) I-d, II-b, III-c, IV-a

C) I-a, II-d, III-c, IV-b

D) I-c, II-b, III-a, IV-d

(குறிப்பு – இந்திய நாடு இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழி முறைகளுக்கு உட்பட்டு மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு என்பது மேற்கண்ட வகைகள் ஆகும்)

35) சரியான இணை எது?

I. மத்தியப் பட்டியல் – 100 துறைகள்

II. மாநிலப் பட்டியல் – 61 துறைகள்

III. பொதுப் பட்டியல் – 52 துறைகள்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் என்பது சட்ட மன்ற உறவுகள், நிர்வாக உறவுகள் மற்றும் நிதி உறவுகள் ஆகும். மத்திய மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றும் அதிகாரங்கள் மத்திய பட்டியல் மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது)

36) சரியான இணை எது?

I. மத்திய பட்டியல் – தபால் மற்றும் தந்தி

II. மாநிலப் பட்டியல் – சிறைத்துறை

III. பொதுப்பட்டியல் – புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – மத்திய பட்டியலில் 100 துறைகள் அடங்கியுள்ளது. வெளியுறவு துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, தபால் மற்றும் தந்தி ஆகியவை மத்திய பட்டியல் ஆகும். மாநிலப் பட்டியல் 61 துறைகளை கொண்டுள்ளது. பொது ஒழுங்கு, காவல் துறை, சிறைத்துறை போன்றவை மாநிலப் பட்டியலில் அடங்குகின்றன. பொதுப் பட்டியல் 52 துறைகளாக உள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து, புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள் போன்றவை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன)

37) மொத்த தேசிய மகிழ்ச்சி என்னும் பதத்தை பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் என்பவரால்……….. ஆண்டு உருவாக்கப்பட்டது.

A) 1970ஆம்

B) 1975ஆம்

C) 1980ஆம்

D) 1985ஆம்

(குறிப்பு – மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness – GNP) என்பது, ஒரு நாட்டில் உள்ள மொத்த மகிழ்ச்சியை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும். இது ஜூலை 18ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!