Book Back QuestionsTnpsc

அரசாங்கமும் வரிகளும் Book Back Questions 10th Social Science Lesson 26

10th Social Science Lesson 26

26] அரசாங்கமும் வரிகளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வரி அமைப்பு: ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன. நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும். ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர். அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.

1. சமத்துவ விதி: வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்த வேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.

2. உறுதி விதி: ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

3. சிக்கன மற்றும் வசதி விதி: வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.

4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி: அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.

வருமான வரி வலைத்தளத்தின் மூலம் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையினை மாணவர்களை அறிந்து கொள்ளக் கூறுதல்.

இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது. நடுவண் அரசால் எளிதில் வசூலிக்கக் கூடிய வரிகள் உள்ளன. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் நடுவண் அரசால் வசூலிக்கப்படுகின்றன. பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி நடுவண் மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது. சொத்துக்களுக்கான வரி உள்ளுர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக்கப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்க வரி மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST): மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST) (மாநிலத்திற்குள்): மதிப்புக் கூட்டு வரி (VAT)/விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST) (மாநிலத்திற்குள்): மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST) (மாநிலங்களுக்கு இடையே): நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18%, மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்

(அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

(ஆ) மைய, மாநில மற்றும் கிராம

(இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து

(ஈ) ஏதுமில்லை

2. இந்தியாவில் உள்ள வரிகள்

(அ) நேர்முக வரிகள்

(ஆ) மறைமுக வரிகள்

(இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)

(ஈ) ஏதுமில்லை

3. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?

(அ) பாதுகாப்பு

(ஆ) வெளிநாட்டுக் கொள்கை

(இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

4. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

(அ) சேவை வரி

(ஆ) கலால் வரி

(இ) விற்பனை வரி

(ஈ) மத்திய விற்பனை வரி

5. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

(அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)

(ஆ) வருமான வரி

(இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

(ஈ) விற்பனை வரி

6. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் __________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

(அ) 1860

(ஆ) 1870

(இ) 1880

(ஈ) 1850

7. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ___________ வரி விதிக்கப்படுகிறது.

(அ) வருமான வரி

(ஆ) சொத்து வரி

(இ) நிறுவன வரி

(ஈ) கலால் வரி

8. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?

(அ) பண்டங்களின் பற்றாக்குறை

(ஆ) அதிக வரி விகிதம்

(இ) கடத்தல்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.

2. “வரி” என்ற வார்த்தை __________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.

3. _________ வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.

4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி __________ ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

5. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ___________ என்று அழைக்கப்படுகிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

(i) GST “ஒரு முனைவரி”

(ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(iii) இது ஜீலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.

(iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

(அ) i மற்றும் ii சரி

(ஆ) ii, iii மற்றும் iv சரி

(இ) i, iii மற்றும் iv சரி

(ஈ) மேற்குரிய அனைத்தும் சரி

பொருத்துக:

1. வருமான வரி – மதிப்புக் கூட்டு வரி

2. ஆயத்தீர்வை – ஜீலை 1, 2017

3. VAT – கடத்துதல்

4. GST – நேர்முக வரி

5. கருப்பு பணம் – மறைமுக வரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மைய, மாநில மற்றும் உள்ளாட்சி 2. இரண்டும் (அ) மற்றும் (ஆ) 3. மேற்கூறிய அனைத்தும்

4. விற்பனைவரி 5. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி 6. (1860) 7. சொத்து வரி

8. மேற்கூறிய அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. வரி 2. வரிவிதிப்பு 3. நேர்முக 4. (1 ஜீலை 2017) 5. கருப்பு பணம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i, iii மற்றும் iv சரி

பொருத்துக: (விடைகள்)

1. வருமான வரி – நேர்முக வரி

2. ஆயத்தீர்வை – மறைமுக வரி

3. VAT – மதிப்புக் கூட்டு வரி

4. GST – ஜீலை 1, 2017

5. கருப்பு பணம் – கடத்துதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!