Tnpsc

அரசியல் கொள்கைகள் பகுதி – I Online Test 11th Political Science Lesson 8 Questions in Tamil

அரசியல் கொள்கைகள் பகுதி - I Online Test 11th Political Science Lesson 8 Questions in Tamil

Congratulations - you have completed அரசியல் கொள்கைகள் பகுதி - I Online Test 11th Political Science Lesson 8 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தாராளவாதம்: நவீன அரசியல் கோட்பாட்டில் மிக முக்கிய கொள்கையாக உள்ளது.
  • (ii) ஜெர்மன் மொழியில் liber என்றால் விடுதலை என்று பொருளாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 1 Explanation: 
தாராளவாதம்: நவீன அரசியல் கோட்பாட்டில் மிக முக்கிய கொள்கையாக உள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சம கால உலகில் பெருமளவில் உலக நாடுகளால் தாராளவாதம் பின்பற்றப்படுகிறது. இலத்தீன் மொழியில் liber என்றால் விடுதலை என்று பொருளாகும். தாராளவாதத்தின் ஆங்கிலச்சொல்லான liberalism இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து தோன்றியது. 19 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் அரசியல் அமைப்பை ஆதரித்தவர்கள் இச்சொல்லை பயன்படுத்த்தினார்கள்.
Question 2
தாராளவாதம் வரலாற்றில்  எத்தனை வகைகளாக காணப்படுகிறது?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
இரண்டு
Question 2 Explanation: 
மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் தாராளவாதத்தை அரசியலிலும் பொருளாதாரத்திலும் பின்பற்றுகின்றன. தாராளவாதம் வரலாற்றில் மூன்று வகைகளாக காணப்படுகிறது.
Question 3
உலகப்பொருளாதார பெரு மந்த நிலைக்குப்பின் தாராளவாதம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
சமகால தாராளக்கொள்கை
B
நேர்மறை தாராளவாதம்
C
எதிர்மறை தாராளவாதம்
D
நடுநிலை தாராளவாதம்
Question 3 Explanation: 
முதலாவதாக 1930 ஆம் ஆண்டு வரையில் இது எதிர்மறை தாராளவாதம் என அழைக்கப்பட்டது. இரண்டாவதாக உலகப்பொருளாதார பெரு மந்த நிலைக்குப்பின் நேர்மறை தாராளவாதம் என அழைக்கப்பட்டது. மூன்றாவதாக 1970 களுக்கு பின்னர் இது சமகால தாராளக்கொள்கை என அழைக்கப்படுகிறது.
Question 4
பாரம்பரிய தாராளவாதம் என்று அழைக்கப்படுவது எது?
A
சமகால தாராளக்கொள்கை
B
நேர்மறை தாராளவாதம்
C
எதிர்மறை தாராளவாதம்
D
நடுநிலை தாராளவாதம்
Question 4 Explanation: 
எதிர்மறைத்தாராளவாதம்: எதிர்மறைத்தாராளவாதம், பாரம்பரிய தாராளவாதம் laissez faire (பிரெஞ்சு மொழியில்) என்றும் அழைக்கப்படுகிறது.
Question 5
' சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?
A
சல்மாண்டு
B
ஜான் ரஸ்கின்
C
லாஸ்கி
D
ஜான்லாக்
Question 5 Explanation: 
ஜான்லாக் என்ற அரசியல் சிந்தனையாளர் ' சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்' என்ற தனது நூலில் எதிர்மறைத்தாராளவாதத்தை எடுத்துரைத்தார். ஜான் லாக் பாரம்பரிய தாராளவாதத்தின் தந்தை. உயிர், விடுதலை, தனிச்சொத்துக்கள், சம உரிமை.
Question 6
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) தாமஸ் பெயின், மாண்டெஸ்க்கோ, பெந்தம் ஆகியோரும் எதிர்மறைத்தாராளவாதத்தை ஆதரித்தனர்.
  •  (ii) பொருளாதாரப் பாடத்தில் ஆதம் ஸ்மித் தேசங்களின் செல்வங்களை பற்றிய ஓர் ஆய்வு என்ற தனது நூலில் எதிர்மறை தாராளவாதத்தை ஆதரித்தார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 6 Explanation: 
தாமஸ் பெயின், மாண்டெஸ்க்கோ, பெந்தம் ஆகியோரும் எதிர்மறைத்தாராளவாதத்தை ஆதரித்தனர். பொருளாதாரப் பாடத்தில் ஆதம் ஸ்மித் தேசங்களின் செல்வங்களை பற்றிய ஓர் ஆய்வு என்ற தனது நூலில் எதிர்மறை தாராளவாதத்தை ஆதரித்தார்.
Question 7
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசை leissez faire என்று அழைக்கிறோம்.
  • (ii) பிரெஞ்சு மொழியில் இதன் பொருள் தனியே விடு என்பதாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 7 Explanation: 
அரசு ஒரு அவசியமான தீமை ஆகும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு அரசு தேவைப்படுகிறது. இருந்தபோதிலும் அரசு ஒரு தீமையாகும். ஏனென்றால் அது மனிதனின் சுதந்திரத்தை பறிக்கக்கூடும். அரசு எதிர்மறை அரசு ஆகும். ஏனென்றால் முன்னேற்றத்திட்டங்களை அது கொண்டு வரக்கூடாது. அரசை leissez faire என்று அழைக்கிறோம். பிரெஞ்சு மொழியில் இதன் பொருள் தனியே விடு என்பதாகும். அதாவது அரசு மனிதனை சுதந்திரமாக விட்டு விட வேண்டும்.அவனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக்கூடாது. சட்ட ஒழுங்கை பராமரிப்பது, சட்டப்பூர்வமாக உருவான ஒப்பந்தங்களை அமல்படுத்துவது அரசின் பணிகள் ஆகும்.
Question 8
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) பொருளாதாரத்தில் எதிர்மறைத்தாராளவாதம் தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் இயங்கும்.
  •  (ii) சந்தை பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தக்கூடாது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 8 Explanation: 
பொருளாதாரத்தில் எதிர்மறைத்தாராளவாதம் தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் இயங்கும். சந்தை பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தக்கூடாது. அரசானது கிரிக்கெட் விளையாட்டின் நடுவரைப்போன்றது. விளையாட்டில் நடுவர் பங்கேற்க மாட்டார். வீரர்கள் விதிகளுக்குட்பட்டு விளையாடுகிறார்களா என்று கண்காணிப்பார். அதைப்போல அரசு அதைப்போல அரசு சந்தையை கண்காணிக்க வேண்டும். சந்தையின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. ‘தேசங்களின் செல்வங்கள் பற்றிய ஓர் ஆய்வு’ – ஆதம் ஸ்மித்
Question 9
எதிர்மறை தாராளவாதம் குறித்த  கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) எதிர்மறைத் தாராளவாதம் இயற்கை உரிமைகள் கோட்பாட்டை ஆதரிக்கின்றது.
  •  (ii) மூன்று இயற்கை உரிமைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை என்று கூறுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 9 Explanation: 
எதிர்மறைத் தாராளவாதம் இயற்கை உரிமைகள் கோட்பாட்டை ஆதரிக்கின்றது. இயற்கை அன்னை மனிதனை படைத்து அவனது முன்னேற்றத்திற்காக உரிமைகளை வழங்கியுள்ளது. இந்த இயற்கை உரிமைகளை பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. மூன்று இயற்கை உரிமைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகும். 1) வாழ்க்கை உரிமை 2) சுதந்திர உரிமை 3) சொத்துரிமை இவைகள் மனிதனுக்கு அவசியமானவைகள் ஆகும்.
Question 10
எதிர்மறை தாராளவாதம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) சொத்துரிமை எதிர்மறை தாராளவாதத்தின் மிக முக்கிய உரிமை ஆகும்.
  •  (ii) சொத்துக்களை வாங்கவும், விற்கவும், அனுபவிக்கவும் மனிதனுக்கு உள்ள உரிமையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 10 Explanation: 
சொத்துரிமை எதிர்மறை தாராளவாதத்தின் மிக முக்கிய உரிமை ஆகும். சொத்துக்களை வாங்கவும், விற்கவும், அனுபவிக்கவும் மனிதனுக்கு உள்ள உரிமையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது.
Question 11
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) 19 - ஆம் நூற்றாண்டில் எதிர்மறைத் தாராளவாதம் நேர்மறைத் தாராளவாதமாக மாற்றப்பட்டது.
  •  (ii) எதிர்மறைத் தாராளவாதம் மேற்கத்திய நாடுகளின் வளத்தைப் பெருக்கியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 11 Explanation: 
நேர்மறைத் தாராளவாதம்: 20-ஆம் நூற்றாண்டில் எதிர்மறைத் தாராளவாதம் நேர்மறைத் தாராளவாதமாக மாற்றப்பட்டது. எதிர்மறைத் தாராளவாதம் மேற்கத்திய நாடுகளின் வளத்தைப் பெருக்கியது. ஆனால் சாதாரண மக்களுக்கு கடுமையான துன்பங்களை அளித்தது. மக்களிடையே விரும்பத்தகாத ஏற்றத்தாழ்வுகள், நகரங்களில் பெருகி வந்த ஆரோக்கியமற்ற குடிசைப் பகுதிகள், தொழிலாளர்களை சுரண்டுவது போன்ற துன்பங்கள் மக்களை வாட்டியது. ஜான் ரஸ்கின் போன்ற மனித நேய சிந்தனையாளர்கள் எதிர்மறைத் தாராளவாதத்தை விமர்சித்தனர்.
Question 12
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) மக்களாட்சி, மார்க்சியம் ஆகிய இரண்டு காரணிகளால் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதமாக மாறியது.
  •  (ii) 19-ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி மேற்கத்திய நாடுகளில் பரவியது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 12 Explanation: 
இரண்டு காரணிகளால் தாராளவாதம், நேர்மறைத் தாராளவாதமாக மாறியது. அவைகள் 1) மக்களாட்சி 2) மார்க்சியம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் மக்களாட்சி மேற்கத்திய நாடுகளில் பரவியது. மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மக்கள் எதிர்மறைத் தாராளவாத கொள்கையை மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். மேலும் புரட்சிகர சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் தனது பொதுவுடைமைவாதம் சிந்தனையை எடுத்துரைத்தார். மார்க்சியமும் மக்களாட்சியும் கொடுத்த அழுத்தத்தால் எதிர்மறைத் தாராளவாத கொள்கை நேர்மறைத் தாராளவாத கொள்கையாக மாறியது.
Question 13
பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுப்பதற்காக “New Deal” என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியவர் யார்?
A
ரொனால்டு ரீகன்
B
ஹரால்டு லஸ்கி
C
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
D
எல்.டி.ஹார்டு ஹவுஸ்
Question 13 Explanation: 
உலக பொருளாதார மந்த நிலை மேற்கத்திய நாடுகளை 1928-முதல் பாதித்தது. அமெரிக்காவின் அதிபரான பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பொருளாதார மந்த நிலையில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுப்பதற்காக “New Deal” என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தினார்.
Question 14
நேர்மறைத் தாராளவாதத்தை அமல்படுத்த ஆலோசனை வழங்கியவர் யார்?
A
ஜே.எம்.கீன்
B
ஹரால்டு லஸ்கி
C
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
D
எல்.டி.ஹார்டு ஹவுஸ்
Question 14 Explanation: 
அவருடைய பொருளாதார ஆலோசகரான ஜே.எம்.கீன் நேர்மறைத் தாராளவாதத்தை அமல்படுத்த ஆலோசனை வழங்கினார். டி.எச்.கிரின், ஹரால்டு லஸ்கி, எல்.டி.ஹார்டு ஹவுஸ் ஆகியோரும் நேர்மறைத் தாராளவாத கொள்கையை ஆதரித்தனர்.
Question 15
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) நேர்மறைத்தாராளவாத கொள்கை சமூக நல அரசு என்ற புதிய சிந்தனையை உருவாக்கியது.
  •  (ii)  நேர்மறை தாராளவாதம் சமூக நலனுக்கும் மக்களாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 15 Explanation: 
நேர்மறைத்தாராளவாத கொள்கை சமூக நல அரசு என்ற புதிய சிந்தனையை உருவாக்கியது. அரசானது மக்களின் நலனுக்கான ஒரு கருவி ஆகும். மக்களுக்கு சேவை ஆற்றுவதே அரசின் முக்கியப்பணி ஆகும். கல்விக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை உருவாக்குவது அரசின் முக்கியக்கடமையாகும்.அரசு என்பது சமூக மக்களாட்சி அரசாகும். நேர்மறை தாராளவாதம் சமூக நலனுக்கும் மக்களாட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
Question 16
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) பிராங்கிளின் ரூஸ்வெல்ட் குறுகிய காலங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர்.
  •  (ii) அவர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 16 Explanation: 
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மிக நீண்ட காலங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு அருமையான பணியாற்றினார். பொருளாதார மந்த நிலையில் இருந்து தனது புதிய ஒப்பந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவை மீட்டெடுத்தார். கோடிக்கணக்கான மக்கள் இன்றைக்கும் அவரால் ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்.
Question 17
"சக்கர நாற்காலியில் வரும் நான் மீண்டும் அமெரிக்காவை முன்னேற்றம் எனும் சக்கரத்தில் அமர்த்திடுவேன்" என்று கூறியவர் யார்?
A
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
B
ரொனால்டு ரீகன்
C
ஜான் எப் கென்னடி
D
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
Question 17 Explanation: 
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் 1932 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களிடையே வாக்குகளை சேகரிப்பதற்காக அவர் உணர்ச்சிகரமாக பேசினார். சக்கர நாற்காலியில் வரும் நான் மீண்டும் அமெரிக்காவை முன்னேற்றம் எனும் சக்கரத்தில் அமர்த்திடுவேன் என்று கூறினார். வாழ்க்கையில் இன்னல்களை சமாளித்து வெற்றி சிகரங்களை தொடுவது எப்படி என்பதற்கு இலக்கணமாக ரூஸ்வெல்ட் இன்றைக்கும் திகழ்கிறார்.
Question 18
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) மக்கள் நல உரிமை கோட்பாட்டை நேர்மறை தாராளவாதம் ஆதரிக்கின்றது.
  •  (ii) அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் தான் மனிதனுக்கு விடுதலையை கொடுக்கும்
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 18 Explanation: 
மக்களின் உரிமைகளை சமூக நலத்திற்காக அரசு கட்டுப்படுத்தலாம். மக்கள் நல உரிமை கோட்பாட்டை நேர்மறை தாராளவாதம் ஆதரிக்கின்றது. உரிமைகள் இருந்தால் கடமைகளும் இருக்கும். விடுதலை என்பது நேர்மறையானது ஆகும். எதிர்மறைத்தாராள வாதம் அரசிடம் இருந்து மனிதனுக்கு விடுதலை கோருகிறது. அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் தான் மனிதனுக்கு விடுதலையை கொடுக்கும்.
Question 19
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) மக்களை எதிர்பாராத பொருளாதார ஏற்றம் மற்றும் மந்த நிலைகளில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும்.
  •  (ii) வங்கிகளை தேசியமயமாக்குதல், தொழில்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்குதல் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்கள் நல அரசு கொண்டு வரலாம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 19 Explanation: 
அரசு பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மக்களை எதிர்பாராத பொருளாதார ஏற்றம் மற்றும் மந்த நிலைகளில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்காக முற்போக்கான வரிவிதிப்பை மேற்கொள்ளலாம். வங்கிகளை தேசியமயமாக்குதல், தொழில்களை பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்குதல் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்கள் நல அரசு கொண்டு வரலாம்.
Question 20
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) நேர்மறை தாராளவாதம் 1950களில் இருந்து மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்பட்டது.
  •  (ii) பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதால் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 20 Explanation: 
நேர்மறை தாராளவாதம் 1930களில் இருந்து மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்பட்டது. ஆனால் மெல்ல மெல்ல தத்துவஞானிகளும் அரசியல் தலைவர்களும் நேர்மறை தாராளவாதத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதால் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டது. பொருளாதார திறமையின்மை, குறைந்து போன உற்பத்தி திறன், ஊழல், பொருளாதார மந்த நிலை, பறிபோன மக்கள் உரிமைகள் போன்ற தீமைகளுக்காக நேர்மறைத்தாராள வாதம் விமர்சிக்கப்பட்டது.
Question 21
தற்போதைய தாராளவாதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சமகாலத்தாராளவாதம்
B
புதிய தாராளவாதம்
C
நேர்மறை தாராளவாதம்
D
a) அல்லது b)
Question 21 Explanation: 
சமகாலத்தாராளவாதம் (புதிய தாராளவாதம்): தற்போதைய தாராளவாதம் சமகாலத்தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் 1970இல் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வருகிறது.
Question 22
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) பல அரசியல் அறிஞர்கள் சமகால தாராளவாதத்தை ஆதரித்துள்ளனர்.
  •  (ii) பிரெட்ரிக் ஹெயக், ஆல்பெர்ட் ஜே. நாக், மில்டன் பிரிட்மென், எம்.ஒக்சாட், காரல் பாப்பர், நாசிக் போன்றவர்கள் முக்கியமான ஆதரவாளர்கள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 22 Explanation: 
பல அரசியல் அறிஞர்கள் சமகால தாராளவாதத்தை ஆதரித்துள்ளனர். பிரெட்ரிக் ஹெயக், ஆல்பெர்ட் ஜே. நாக், மில்டன் பிரிட்மென், எம்.ஒக்சாட், காரல் பாப்பர், நாசிக் போன்றவர்கள் முக்கியமான ஆதரவாளர்கள்.
Question 23
"இந்த உலகில் மக்களை சமமாக பார்ப்பதற்கும் மக்களை சமமாக ஆக்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது." - என்று கூறியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
மில்டன் பிரிட்மேன்
C
ஜே.எம்.கீன்
D
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
Question 23 Explanation: 
அரசானது சட்ட ஒழுங்கை மட்டுமே பராமரிக்க வேண்டும். நாசிக் என்ற சிந்தனையாளர் குறைந்த அதிகார அரசு எழுச்சியூட்டுகிறது மற்றும் சரியானதும் ஆகும். என்று முழங்கினார். மற்றொரு சிந்தனையாளர் எம். ஒக்சாட் அரசாங்கம் அமைதியை மட்டுமே கண்காணிக்கிறது என்று கூறினார். "இந்த உலகில் மக்களை சமமாக பார்ப்பதற்கும் மக்களை சமமாக ஆக்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது." - பிரட்ரிக் ஹெயக்
Question 24
"சமூகம் விடுதலையை விட சமத்துவத்தை ஆதரித்தால் இரண்டையுமே அதனால் பெற முடியாது." என்று கூறியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
மில்டன் பிரிட்மேன்
C
ஜே.எம்.கீன்
D
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
Question 24 Explanation: 
"சமூகம் விடுதலையை விட சமத்துவத்தை ஆதரித்தால் இரண்டையுமே அதனால் பெற முடியாது. மாறாக சமத்துவத்தை விட விடுதலையை நாடினால் இரண்டையுமே அது பெருமளவில் பெறும்." - மில்டன் பிரிட்மேன்
Question 25
பின்வருபவர்களில் இங்கிலாந்தின் முதல் பிரதமர் யார்?
A
மார்கரெட் தாட்சர்
B
மில்டன் பிரிட்மேன்
C
ஜே.எம்.கீன்
D
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
Question 25 Explanation: 
இங்கிலாந்தின் முதல் பிரதமரான மார்கரெட் தாட்சர் சமகால தாராளவாதத்தை ஆதரித்தார்
Question 26
தனது புத்தகத்திற்கு "அரசு நமது எதிரி" என்று பெயர் சூட்டியவர் யார்?
A
எம்.ஓக்.சாட்
B
ஆல்பெர்ட் ஜே .நாக்
C
காரல் பாப்பர்
D
பிளாட்டோ
Question 26 Explanation: 
மற்றொரு சிந்தனையாளர் எம்.ஓக்.சாட் அரசாங்கம் அமைதியை மட்டுமே கவனிக்கிறது என்று கூறினார். ஆல்பெர்ட் ஜே .நாக் தனது புத்தகத்திற்கு "அரசு நமது எதிரி" என்று பெயர் சூட்டினார்.
Question 27
முன்னேற்றம் சமூக நலன் என்ற பெயரில் அரசின் அதிகாரங்கள் அதிகரித்தால் மனிதனின் தனி நபர் உரிமைகள் பறிபோய்விடும் என்று  கூறுவது எது?
A
நேர்மறை தாராளவாதம்
B
எதிர்மறை தாராளவாதம்
C
சமகால தாராளவாதம்
D
பழைய தாராளவாதம்
Question 27 Explanation: 
முன்னேற்றம் சமூக நலன் என்ற பெயரில் அரசின் அதிகாரங்கள் அதிகரித்தால் மனிதனின் தனி நபர் உரிமைகள் பறிபோய்விடும் என்று சமகால தாராளவாதம் கூறுகின்றது.
Question 28
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) சமூக நல அரசு அல்லது தாராள மக்களாட்சி  அரசு  தோன்றியதால் மனிதனின் அரசியல் பொருளாதார தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது
  •  (ii) மனித வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல அரசு , அதிகார பரவல், கலப்பு பொருளாதாரம், மற்றும் போட்டி அரசியல் கட்சிகள் அமைப்பு ஆகியவைகள் பின்பற்றப்பட  வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 28 Explanation: 
சமூக நல அரசு அல்லது தாராள மக்களாட்சி அரசு தோன்றியதால் மனிதனின் அரசியல் பொருளாதார தேடுதல் முடிவுக்கு வந்துள்ளது.மனித வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல அரசு , அதிகார பரவல், கலப்பு பொருளாதாரம், மற்றும் போட்டி அரசியல் கட்சிகள் அமைப்பு ஆகியவைகள் பின்பற்றப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்த அருமையான சமூக அரசியல் தன்மைகளை பெற்றுள்ளன. ஆகவே தாராளவாதத்திற்கும் பொதுவுடைமைக்குமான போட்டி முடிவு பெற்றது.
Question 29
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) சீரமைக்கப்பட்ட பொதுவுடைமைவாதம் தாராள மக்களாட்சியைவிட சிறப்பானது என்று புதிய இடது சாரிகள்  கூறுகிறார்கள்.
  •  (ii) சில சிந்தனையாளர்கள் கொள்கையின் முடிவைவிட தாராளவாதத்தின் பொருள் வேட்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 29 Explanation: 
மக்களாட்சிதான் உன்னதமான ஆட்சி முறையாகும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் நல்ல ஆட்சியை வழங்குவதற்கும் மக்களாட்சி பொருத்தமானது என்று பாராட்டுகிறார்கள். ஆனால் புதிய இடது சாரிகள் என்ற சிந்தனையாளர்கள் கொள்கை முடிவுக்கு கருத்தை நிராகரிக்கின்றனர். இவர்கள் பொதுவுடைமையில் சில மாற்றங்கள் செய்து அதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். சீரமைக்கப்பட்ட பொதுவுடைமைவாதம் தாராள மக்களாட்சியைவிட சிறப்பானது என்று கூறுகிறார்கள். மேலும் சில சிந்தனையாளர்கள் கொள்கையின் முடிவைவிட தாராளவாதத்தின் பொருள் வேட்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர்.
Question 30
" வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்"என்ற நூலை எழுதியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
பிரான்சிஸ் புக்கியோமா
D
சாமுவேல் ஹென்சன்
Question 30 Explanation: 
வரலாற்றின் முடிவு: அமெரிக்க அரசியல் சிந்தனையாளர் பிரான்சிஸ் புக்கியோமா " வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்" என்ற நூலை எழுதினார். பனிப்போர் முடிவடைந்ததால் வரலாறே முடிவடைந்தது என்று அவர் கூறினார்.
Question 31
தாராள அரசும் பொருளாதாரமும் உருவான பின் மனிதனின் வரலாற்று தேடுதல் முடிவுக்கு வருகின்றது என்று கூறியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
பிரான்சிஸ் புக்கியோமா
D
சாமுவேல் ஹென்சன்
Question 31 Explanation: 
மனிதனின் வரலாறே சரியான அரசியல் சமூக பொருளாதார முறையை பெறுவதற்கான மனிதனின் தேடுதல் ஆகும். பனிப்போருக்கு பின் தாராளவாதம் பொதுவுடைமையை வெற்றி கண்டுள்ளது. தாராள அரசும் பொருளாதாரமும் உருவான பின் மனிதனின் வரலாற்று தேடுதல் முடிவுக்கு வருகின்றது என்று புக்கியோமா கூறினார்.
Question 32
வன்முறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல், பஞ்சம், மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை தாராள மக்களாட்சி விட வேற எந்த அமைப்பிலும் மனித இனம் காணவில்லை என்று கூறியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
பிரான்சிஸ் புக்கியோமா
D
ஜாக் டெரிடா
Question 32 Explanation: 
வரலாற்றின் முடிவு என்ற கருத்தை பல அறிஞர்கள் ஏற்கவில்லை.ஜாக் டெரிடா என்ற அறிஞர் தாராள மக்களாட்சி உன்னதமானது என்ற கருத்தை மறுக்கிறார். வன்முறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல், பஞ்சம், மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை தாராள மக்களாட்சி விட வேற எந்த அமைப்பிலும் மனித இனம் காணவில்லை என்று கூறினார்.
Question 33
"நாகரிகப்போர் வருங்கால வரலாற்றை தீர்மானிக்கும்" என்று கூறியவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
சாமுவேல் ஹண்டிங்டன்
C
பிரான்சிஸ் புக்கியோமா
D
ஜாக் டெரிடா
Question 33 Explanation: 
நாகரிகங்களின் மோதல்: அமெரிக்க அரசியல் அறிஞரான சாமுவேல் ஹண்டிங்டன் நாகரிகங்களின் மோதல் என்ற கோட்பாட்டை வரலாற்றின் முடிவு என்ற கருத்துக்கு எதிராக கொண்டு வந்தார். பனிப்போர் முடிவடைந்ததால் எல்லா போர்களும் முடிவடைந்தன என்று கூற முடியாது. தற்போது உலகத்தில் ஓர் புதிய போர் அல்லது மோதல் தோன்றியுள்ளது. உலகின் மிகப்பெரிய நாகரீகங்களான மேற்கத்திய நாகரிகமும் இஸ்லாமிய நாகரிகமும் தற்பொழுது மோதுகின்றன. இந்த நாகரிகப்போரில் இதர உலக நாகரிகங்களும் பிற்காலத்தில் பங்கேற்கும். நாகரிகப்போர் வருங்கால வரலாற்றை தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.
Question 34
நமது நாட்டில்  எந்த ஆண்டில் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன?
A
1992
B
1991
C
1990
D
1993
Question 34 Explanation: 
இந்தியாவும் புதிய தாராளவாதமும்: நமது நாட்டில் 1991 ஆம் ஆண்டில் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தனியார் மயமாதல், தாராளமயமாதல், மற்றும் உலகமயமாதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொருளாதார சமூக நடவடிக்கைகளிலிருந்து அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.
Question 35
"குறைவான அரசாங்கம் சிறந்த ஆட்சி"  என்பது தற்பொழுது எந்த நாட்டின் முழக்கமாகும்?
A
இந்தியா
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
ரஷ்யா
Question 35 Explanation: 
"குறைவான அரசாங்கம் சிறந்த ஆட்சி" என்ற முழக்கம் இந்தியாவை தற்போது வழிநடத்தி வருகிறது.புதிய தாராளவாதத்தால் ஐந்தாண்டு திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
Question 36
அக்டோபர்  புரட்சி ரஷ்யாவில் எந்த ஆண்டு நடத்தப்பட்டது?
A
1918
B
1916
C
1917
D
1919
Question 36 Explanation: 
பொதுவுடைமைவாதம்: புரட்சிகர சிந்தனையாளராகிய லெனின் 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை புரட்சியை நடத்தினார். இது பொதுவுடைமைவாத புரட்சியாகும்.
Question 37
சோவியத் சோசியலிஸ்ட் குடியரசுகள் யூனியன் என்ற நாட்டை உருவாக்கியவர் யார்?
A
முசோலினி
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 37 Explanation: 
லெனின் USSR என்ற சோவியத் சோசியலிஸ்ட் குடியரசுகள் யூனியன் என்ற நாட்டையும் உருவாக்கினார்.
Question 38
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) முசோலினி  1924 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
  • (ii) அவருடைய உடல் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில்  இன்றளவும் பதனிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 38 Explanation: 
விளாடிமிர் லெனின் 1924 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய உடல் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்றளவும் பதனிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பூத உடல் ரசாயன பொருட்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் உடல் பாதுகாப்புக்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது.
Question 39
சோவியத் சோசியலிஸ்ட் குடியரசுகள் யூனியன் உடைந்த ஆண்டு எது?
A
1992
B
1991
C
1990
D
1993
Question 39 Explanation: 
1991 ஆம் ஆண்டு லெனின் உருவாக்கிய நாடான USSR உடைந்தவுடன் பொதுமக்களின் நன்கொடையால் அவருடைய உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவருடைய பூத உடலை அவருடைய அன்னையின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று சிலர் கோருகின்றனர்.
Question 40
பொதுவுடைமைவாத கட்சிக்கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
A
முசோலினி
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 40 Explanation: 
பொதுவுடைமைவாத கட்சிக்கோட்பாட்டை லெனின் உருவாக்கினார். "செய்ய வேண்டியது என்ன?" "what is to be done" என்ற தனது நூலில் பொதுவுடைமைவாதத்தை பற்றி விளக்கினார். பொதுவுடைமைவாத கட்சி பாட்டாளி வர்க்கப்புரட்சியின் கருவியாக செயல்படும்.
Question 41
பொதுவுடைமைவாதம் குறித்து லெனின் கூறியவை எது/ எவை?
A
கட்சியின் கிளைகள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உருவாக வேண்டும்.
B
கட்சியின் உறுப்பினர்கள் புரட்சிகர மார்க்சியத்தை புரிந்திருக்க வேண்டும்
C
உறுப்பினர்கள் கடமை, தியாகம், கட்டுப்பாடு, கடின உழைப்பு, ஆகிய குணங்களை பெற்றிருக்க வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 41 Explanation: 
கட்சியின் கிளைகள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உருவாக வேண்டும். கட்சியின் உறுப்பினர்கள் புரட்சிகர மார்க்சியத்தை புரிந்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் கடமை, தியாகம், கட்டுப்பாடு, கடின உழைப்பு, ஆகிய குணங்களை பெற்றிருக்க வேண்டும். பொதுவுடைமைவாத புரட்சிக்காக மக்களை தயார் படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கப்புரட்சியின் முன்னணியில் பொதுவுடைமைவாதம் கட்சி செயல்படும்.
Question 42
அமைப்பு ரீதியாக ஒரு புதிய கோட்பாட்டை பொதுவுடைமைவாத கட்சிக்கு வழங்கியவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 42 Explanation: 
அமைப்பு ரீதியாக ஒரு புதிய கோட்பாட்டை பொதுவுடைமைவாத கட்சிக்கு லெனின் வழங்குகிறார். இதற்கு மக்களாட்சி மத்தியத்துவம் என்பது பெயராகும்.
Question 43
பொதுவுடைமைவாத கட்சிக்கு எத்தனை அமைப்பு கோட்பாடுகள் உள்ளன
A
மூன்று
B
நான்கு
C
இரண்டு
D
ஒன்று
Question 43 Explanation: 
பொதுவுடைமைவாத கட்சிக்கு இரண்டு அமைப்பு கோட்பாடுகள் உள்ளன.ஒன்று மக்களாட்சி, மற்றொன்று மத்தியில் அதிகார குவிப்பு.
Question 44
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பொதுவுடைமை வாத கட்சியின் கீழ்நிலையில் உள்ள கிளைகள் தங்களுக்கு மேல் நிலையில் உள்ள கட்சி கிளைகளை மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • (ii) பாலிட்பிரோ பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 44 Explanation: 
பொதுவுடைமை வாத கட்சியின் கீழ்நிலையில் உள்ள கிளைகள் தங்களுக்கு மேல் நிலையில் உள்ள கட்சி கிளைகளை மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பாலிட்பிரோ பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே மக்களாட்சி கோட்பாடாகும்.
Question 45
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அதிகார குவியல் அல்லது அதிகார மத்தியத்துவம் பொதுவுடைமைவாத கட்சியில் காணப்படுகிறது.
  • (ii) மேல்நிலையில் உள்ள கட்சி கிளைகள் சொல்வதை கீழ்நிலையில் உள்ள கட்சி கிளைகள் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 45 Explanation: 
அதிகார குவியல் அல்லது அதிகார மத்தியத்துவம் பொதுவுடைமைவாத கட்சியில் காணப்படுகிறது. மேல்நிலையில் உள்ள கட்சி கிளைகள் சொல்வதை கீழ்நிலையில் உள்ள கட்சி கிளைகள் கண்டிப்பாக கேட்க வேண்டும். கட்சியின் மத்திய கிளையின் முடிவுகளை மாநிலக்கிளைகள் கேட்க வேண்டும். மாநிலக்கிளையின் முடிவுகளை மாவட்டக்கிளைகள் கேட்க வேண்டும். மாவட்டக்கிளையின் முடிவுகளை கிராமக்கிளைகள் கேட்க வேண்டும். இதுதான் மத்தியத்துவம் அல்லது அதிகாரக்குவியல் கோட்பாடு ஆகும்.
Question 46
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) லெனினின் மக்களாட்சி மத்தியதத்துவ  கோட்பாட்டின்படி பொதுவுடைமைவாத கட்சியில் கீழ் கிளைகளில் இருந்து மேல் கிளைகளுக்கு அதிகாரக்குவியல் அமைப்பு ரீதியாக காணப்படுகிறது.
  • (ii) மேல் கிளைகளில் இருந்து கீழ் கிளைகளுக்கு மக்களாட்சி அமைப்பு ரீதியாக காணப்படுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 46 Explanation: 
லெனினின் மக்களாட்சி மத்தியதத்துவ கோட்பாட்டின்படி பொதுவுடைமைவாத கட்சியில் கீழ் கிளைகளில் இருந்து மேல் கிளைகளுக்கு மக்களாட்சியும் மேல் கிளைகளில் இருந்து கீழ் கிளைகளுக்கு அதிகாரக்குவியலும் அமைப்பு ரீதியாக காணப்படுகிறது.
Question 47
"ஏகாதிபத்தியம்" "முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்"  என்ற தனது நூலில் ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை விவரிப்பவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 47 Explanation: 
ஏகாதிபத்தியம்: ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை இராணுவ பலம் மூலம் அடிமையாக்கி சுரண்டிய முறையே ஏகாதிபத்தியம். லெனின், "ஏகாதிபத்தியம்" "முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்" என்ற தனது நூலில் ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை விவரிக்கிறார்.
Question 48
"முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்" என்று கூறியவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 48 Explanation: 
: முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்று காரல் மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் அது நடக்கவில்லை, காரணம் ஏகாதிபத்தியம் ஆகும்.
Question 49
  • கூற்று(கூ): கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை தங்கள் நாட்டின் தொழிலாளிகளுக்கு முதலாளித்துவம் வழங்கியது.
  • காரணம் (கா): ஏகாதிபத்தியத்தின் மூலமாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அவைகளின் செல்வங்களை கொள்ளை அடித்து தங்கள் நாடுகளுக்கு முதலாளித்துவம் எடுத்துச்சென்றது.
A
கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்றும் தவறு காரணமும் தவறு
D
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
Question 49 Explanation: 
ஏகாதிபத்தியத்தின் மூலமாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அவைகளின் செல்வங்களை கொள்ளை அடித்து தங்கள் நாடுகளுக்கு முதலாளித்துவம் எடுத்துச்சென்றது. கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை தங்கள் நாட்டின் தொழிலாளிகளுக்கு முதலாளித்துவம் வழங்கியது. இவ்வாறு தான் முதலாளித்துவம் தன்னை காப்பாற்றி கொண்டது.
Question 50
'உலகில் இரண்டு வகை புரட்சிகள் நடைபெற வேண்டும்' என்று கூறியவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
லெனின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 50 Explanation: 
உலகில் இரண்டு வகை புரட்சிகள் நடைபெற வேண்டும். முதலாவதாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். இரண்டாவதாக மேற்கத்திய நாடுகளில் உள்ள தொழிலாளிகள் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். இந்த இரண்டு புரட்சிகள் மூலமாக ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் அழிக்கப்படும். சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் சர்வதேச அளவிலும், மேலை நாடுகளிலும் பொதுவுடைமை வாத சமுதாயம் மலரும் என லெனின் கூறினார்.
Question 51
லெனினுடைய காலத்திற்கு பின் சோவியத் ரஷ்யாவின் தலைவராகவும், பொதுவுடைமை வாத கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
ஸ்டாலின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 51 Explanation: 
லெனினுடைய காலத்திற்கு பின் சோவியத் ரஷ்யாவின் தலைவராகவும், பொதுவுடைமை வாத கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஜோசப் ஸ்டாலின் இருந்தார்.
Question 52
" ஒரு நாட்டில் சமதர்மவாதம்" என்ற புதிய கருத்தை ஸ்டாலின் மார்க்சியத்தில் உருவாக்கியவர் யார்?
A
ஜோசப் ஸ்டாலின்
B
ஸ்டாலின்
C
காரல்மார்க்ஸ்
D
மாவோ
Question 52 Explanation: 
" ஒரு நாட்டில் சமதர்மவாதம்" என்ற புதிய கருத்தை ஸ்டாலின் மார்க்சியத்தில் உருவாக்கினார்.
Question 53
" ஒரு நாட்டில் சமதர்மவாதம்" என்ற கருத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
நிகோலை புக்காரின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 53 Explanation: 
பொதுவுடைமை கோட்பாட்டாளரான நிகோலை புக்காரின் இக்கருத்தை முதன் முதலில் தோற்றுவித்தார்.
Question 54
தேசியவாதத்தை 'முதலாளிகளின் கருத்து' என்று கூறியவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
நிகோலை புக்காரின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 54 Explanation: 
மார்க்சியம் தேசியவாதத்தை நிராகரித்து சர்வதேச வாதத்தை ஆதரித்தது. காரல்மார்க்ஸ் தேசியவாதத்தை முதலாளிகளின் கருத்து என்று கூறினார்.
Question 55
பாட்டாளி வர்க்க புரட்சி மூலமாக உலக சமுதாயத்தை உருவாக்குவது யாருடைய  அடிப்படை நோக்கமாகும்?
A
காரல் மார்க்ஸ்
B
நிகோலை புக்காரின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 55 Explanation: 
பாட்டாளி வர்க்க புரட்சி மூலமாக உலக சமுதாயத்தை உருவாக்குவது காரல் மார்க்சின் அடிப்படை நோக்கமாகும்.
Question 56
"தொழிலாளர்களுக்கு சொந்த நாடு இல்லை" என்று கூறியவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
நிகோலை புக்காரின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 56 Explanation: 
காரல் மார்க்ஸ் "தொழிலாளர்களுக்கு சொந்த நாடு இல்லை" என்று கூறினார். லெனின் அவர்களும் இக்கருத்தை ஆதரித்தார்.
Question 57
"அக்டோபர் புரட்சி உலகப்புரட்சிக்கு வழிவகுக்கும்" என்று கூறியவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 57 Explanation: 
ரஷ்யாவின் 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி உலகப்புரட்சிக்கு வழிவகுக்கும் என்று லெனின் கூறினார்.
Question 58
ஒரு நாட்டில்  சமதர்ம வாதம் என்ற பெரிய மாற்றுக்கருத்தை  முன் வைத்தவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 58 Explanation: 
ஒரு நாட்டில் சமதர்ம வாதம் என்ற பெரிய மாற்றுக்கருத்தை ஸ்டாலின் முன் வைக்கின்றார்.
Question 59
" ஐரோப்பிய ஐக்கிய நாடுகளுக்கான முழக்கம்" என்பது யாருடைய உரை ஆகும்?
A
காரல் மார்க்ஸ்
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 59 Explanation: 
" ஐரோப்பிய ஐக்கிய நாடுகளுக்கான முழக்கம்" என்ற உரையின் மூலம் லெனினே ஒரு நாட்டில் சமதர்ம வாதம் என்ற கருத்தை வலியுறுத்தினார் என்று ஸ்டாலின் கூறினார்.
Question 60
'சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாதத்தை  தற்பொழுது காப்பாற்றுவதுதான் முக்கிய கடமையாகும்'  என்று கூறியவர் யார்?
A
காரல் மார்க்ஸ்
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 60 Explanation: 
ரஷ்யாவில் மட்டுமே சமதர்மம் இருந்தால் போதும், உலக நாடுகளுக்கு சமதர்ம புரட்சியை ஏற்றுமதி செய்யத்தேவை இல்லை என்பதே இக்கோட்பாட்டின் கருத்தாகும். சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாத முதலாளித்துவ எதிரிகளால் சூழப்பட்டு இருக்கிறது. சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைவாத தற்பொழுது காப்பாற்றுவதுதான் முக்கிய கடமையாகும் என்று ஸ்டாலின் கூறினார். சோவியத் ரஷ்யாவும் சர்வதேச பொதுவுடைமைவாத நிறுவனமும் ஸ்டாலினின் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டன.
Question 61
"சோவியத் ரஷ்யா தனது பொதுவுடைமைவாத உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலேயே  பொதுவுடைமைவாத மறைந்து விடும்" என்று கூறியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 61 Explanation: 
லியோன் ட்ராட்ஸ்கி ஸ்டாலினின் சமதர்மத்தை நிராகரித்தார். நிரந்தர உலகப் புரட்சி, காரல் மார்க்ஸ் கூறியதை போல வேண்டும் என்றார். சோவியத் ரஷ்யா தனது பொதுவுடைமைவாத உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டிலேயே பொதுவுடைமைவாத மறைந்து விடும் என்று ட்ராட்ஸ்கி எச்சரித்தார்.
Question 62
சீன பொதுவுடைமைவாத கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 62 Explanation: 
பொதுவுடைமைவாதத்தின் மிகப்பெரிய கொள்கைவாதிகளில் ஒருவராக மாவோ உள்ளார். அவர் சீன பொதுவுடைமைவாத கட்சியைத் தோற்றுவித்து 1949-ஆம் ஆண்டு பொதுவுடைமைவாத புரட்சியை நிகழ்த்தினார்.
Question 63
"எல்லா அரசியல் அதிகாரமும் துப்பாக்கியின் பீப்பாயில் இருந்து வருகிறது" என்று கூறியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 63 Explanation: 
எல்லா அரசியல் அதிகாரமும் துப்பாக்கியின் பீப்பாயில் இருந்து வருகிறது – மாவோ
Question 64
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பொதுவுடைமைவாத கொள்கையில் சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை மாவோ கொண்டு வந்தார்.
  • (ii) இதற்கு பொதுவுடைமைவாத சீனமயமாதல் என்பது பெயராகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 64 Explanation: 
பொதுவுடைமைவாதம் சீனமயமாதல்: பொதுவுடைமைவாத கொள்கையில் சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை மாவோ கொண்டு வந்தார். இதற்கு பொதுவுடைமைவாத சீனமயமாதல் என்பது பெயராகும்.
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) காரல் மார்க்ஸ் தொழிற்சாலைகள் நிறைந்த, தொழிலாளர்கள் நிறைந்த, மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் பொதுவுடைமைப் புரட்சிக்கு சாத்தியம் இருந்ததாகக் கூறினார்.
  • (ii) புரட்சியை  விவசாயிகள்தான் நடத்துவார்கள் என நம்பினார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 65 Explanation: 
விவசாயிகள் தலைமையில் புரட்சி: காரல் மார்க்ஸ் தொழிற்சாலைகள் நிறைந்த, தொழிலாளர்கள் நிறைந்த, மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் பொதுவுடைமைப் புரட்சிக்கு சாத்தியம் இருந்ததாகக் கூறினார். புரட்சியை தொழிலாளர்கள்தான் நடத்துவார்கள் என நம்பினார்.
Question 66
விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பொதுவுடைமைவாத புரட்சியை நடத்தியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
காரல்மார்க்ஸ்
C
லெனின்
D
மாவோ
Question 66 Explanation: 
1940- களில் சீன ஒரு பின்தங்கிய விவசாய நாடு ஆகும். தொழிற்சாலைகளோ, தொழிலாளிகளோ அதிகம் இல்லை. மாவோ விவசாயிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பொதுவுடைமைவாத புரட்சியை நடத்தினார். சீனாவில் மாவோவின் வெற்றி விவசாய நாடுகளான ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு ஊக்கத்தை வழங்கியது.
Question 67
“மக்களிடம் இருந்து மக்களுக்காக” என்பது யாருடைய  பொதுவுடைமைவாத கட்சியின் வழிகாட்டுக் கோட்பாடாக இருந்தது?
A
ட்ராட்ஸ்கி
B
காரல்மார்க்ஸ்
C
லெனின்
D
மாவோ
Question 67 Explanation: 
பொதுவுடைமைவாத கட்சியின் கொள்கையிலும், போராட்டத்திலும் மக்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள். “மக்களிடம் இருந்து மக்களுக்காக” என்பது மாவோவின் பொதுவுடைமைவாத கட்சியின் வழிகாட்டுக் கோட்பாடாக இருந்தது.
Question 68
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மாவோ, பொதுவுடைமைவாத கட்சியின் முன்னணியில் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார்.
  • (ii) லெனின் புரட்சியின் முன்னணியில் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 68 Explanation: 
மக்கள் முன்னணி: லெனின், பொதுவுடைமைவாத கட்சியின் முன்னணியில் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார். மாவோ புரட்சியின் முன்னணியில் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.
Question 69
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சுரண்டலுக்கு எதிரான  பொதுவுடைமைப் புரட்சியில், மக்களுக்கு முக்கியத்துவத்தை மாவோ வலியுறுத்துகிறார்.
  • (ii) பல கோடிகணக்கான மக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்த மாவோ வாதிட்டார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 69 Explanation: 
மக்கள் போர், கொரில்லா போர்: சுரண்டலுக்கு எதிரான பொதுவுடைமைப் புரட்சியில், மக்களுக்கு முக்கியத்துவத்தை மாவோ வலியுறுத்துகிறார். பல கோடிகணக்கான மக்களை நேரடியாக போரில் ஈடுபடுத்த மாவோ வாதிட்டார்.
Question 70
ஏகாதிபத்தியமும், நிலப்பிரபுக்கள் முறையும் மக்களின் எதிரிகள் என்று கூறியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 70 Explanation: 
ஏகாதிபத்தியமும், நிலப்பிரபுக்கள் முறையும் மக்களின் எதிரிகள் என்று மாவோ கூறினார். கிராமப்புற விவசாயிகளை ஒருங்கிணைத்து நகரங்களை கைப்பற்ற வேண்டும் என்பது மாவோவின் உத்தி ஆகும்.
Question 71
கொரில்லா போர் முறையை பின்பற்றியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 71 Explanation: 
மாவோ கொரில்லா போர் முறையை பின்பற்றினார். இந்த உத்தியில் மூன்று கட்டங்கள் உள்ளன.
Question 72
பின்வருவனவற்றுள் மாவோவின் இரண்டாம் நிலை உத்தி எது?
A
பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள்
B
பொதுவுடைமைவாத கட்சியினர் இராணுவ மற்றும் அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.
C
ஒரு வழக்கமான ராணுவமாக மாறி பொதுவுடைமைவாத கட்சி கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்ளும்.
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 72 Explanation: 
முதல் நிலையில் பொதுவுடைமைவாத தொண்டர்கள் பிரச்சாரம் மூலம் மக்களை கவர்வார்கள். இரண்டாம் நிலையில் பொதுவுடைமைவாத கட்சியினர் இராணுவ மற்றும் அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். மூன்றாம் கட்டத்தில் ஒரு வழக்கமான ராணுவமாக மாறி பொதுவுடைமைவாத கட்சி கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்ளும். தேவைக்கு தகுந்தவாறு இந்த மூன்று நிலைகளை பொதுவுடைமைவாத கட்சி பின்பற்றலாம்.
Question 73
நூறு மலர்கள் மலரட்டும் இயக்கம் எந்த ஆண்டு  நடைபெற்றது?
A
1950
B
1945
C
1949
D
1940
Question 73 Explanation: 
நூறு மலர்கள் மலரட்டும்: 1950களில் நூறு மலர்கள் மலரட்டும் இயக்கம் சீனாவில் நடைபெற்றது.
Question 74
" நூறு மலர்கள் மலரட்டும், நூறு வகையான சிந்தனைகள் போட்டியிடட்டும்" என்று கூறியவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 74 Explanation: 
" நூறு மலர்கள் மலரட்டும், நூறு வகையான சிந்தனைகள் போட்டியிடட்டும்" என்று மாவோ கூறினார்.
Question 75
"நல்ல புதிய கருத்துகள் பழைய தேவையற்ற கருத்துகளை தோற்கடிக்கும்" என கூறியவர்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 75 Explanation: 
கருத்து சுதந்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. நல்ல புதிய கருத்துகள் பழைய தேவையற்ற கருத்துகளை தோற்கடிக்கும் என மாவோ கூறினார். தொடக்கத்தில் பொதுவுடைமைவாத அரசாங்கம் இவ்வியக்கத்தை நடத்தியது. பின்னர் பொதுவுடைமை கட்சிக்கு எதிராக கருத்துகள் தோன்றியதால் இந்த இயக்கம் கைவிடப்பட்டது.
Question 76
நூறு மலர்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் போட்டியிடட்டும் என்ற வாசகத்தை தனது கவிதையில் தோற்றுவித்தவர் யார்?
A
ட்ராட்ஸ்கி
B
லெனின்
C
ஸ்டாலின்
D
கன்புசியஸ்
Question 76 Explanation: 
நூறு மலர்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் போட்டியிடட்டும் என்ற வாசகத்தை பண்டைய கால சீன சிந்தனையாளர் கன்புசியஸ் தனது கவிதையில் தோற்றுவித்தார். இதன் பொருள் எல்லோருக்கும் சிந்திக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். 1956 ஆம் ஆண்டு மாவோ இதனை அமல்படுத்தினார். சீன மக்களின் ஆலோசனை கருத்துக்கள் பொதுவுடைமை கட்சிக்கு வேண்டும் என்று அவர் கூறினார்.
Question 77
"நான்கு பழையவைகள்" நீக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட புரட்சி எது?
A
தொழிற்புரட்சி
B
நாகரிக புரட்சி
C
வர்க்கப்புரட்சி
D
கலாச்சாரப்புரட்சி
Question 77 Explanation: 
கலாச்சாரப்புரட்சி: மாவோ பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியை 1965-66 ஆம் ஆண்டு அமல்படுத்தினார். பழைய கருத்துக்கள், பழைய பழக்கங்கள், பழைய கலாச்சாரம்,பழைய வழக்கங்கள் ஆகிய "நான்கு பழையவைகள்" நீக்கத்திற்காக இப்புரட்சியை கொண்டு வந்தார்.
Question 78
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தொழில் மயம் ஆக்குவதையும், நிலம் மற்றும் தொழில் கூட்டு வாதத்தையும் அமல்படுத்தி விரைவாக சீனாவை சமதர்ம அமைப்பாக மாற்ற மாவோ முயற்சித்தார்.
  • (ii) துரதிஷ்ட வசமாக அவரது நடவடிக்கைகள் கொடிய பஞ்சத்தை கொண்டு வந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 78 Explanation: 
பொதுவுடைமைவாத கட்சி அரசாங்கம் , இராணுவம், கலாச்சாரத்தில் தேவையில்லா கருத்துக்கள் புகுந்துவிட்டன. அவைகளை அகற்றி பொதுவுடைமையை காக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். தொழில் மயம் ஆக்குவதையும், நிலம் மற்றும் தொழில் கூட்டு வாதத்தையும் அமல்படுத்தி விரைவாக சீனாவை சமதர்ம அமைப்பாக மாற்ற மாவோ முயற்சித்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக அவரது நடவடிக்கைகள் கொடிய பஞ்சத்தை கொண்டு வந்தது.
Question 79
பொதுவுடைமையின் எதிரிகளை வீழ்த்துவதற்கு உருவாக்கப்பட்டவர்கள்?
A
கருப்பு பூனைகள்
B
கருப்பு காவலர்கள்
C
சிவப்பு காவலர்கள்
D
சிவப்பு சட்டைக்காரர்கள்
Question 79 Explanation: 
பொதுவுடைமைவாத அரசை காப்பாற்ற பொதுவுடைமையின் எதிரிகளை வீழ்த்துவதற்கு சிவப்பு காவலர்கள் உருவாக்கப்பட்டனர்.
Question 80
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1960 களில் மாவோ தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக புதிய புரட்சிகர இயக்கத்தை தொடங்கினார்.
  • (ii) மாணவர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரை கொண்டு செஞ்சட்டையினரை  உருவாக்கினார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 80 Explanation: 
1960 களில் மாவோ தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக புதிய புரட்சிகர இயக்கத்தை தொடங்கினார். மாணவர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரை கொண்டு சிவப்பு காவலர்களை உருவாக்கினார்.
Question 81
புதிய மக்களாட்சி என்ற கொள்கையை கொண்டு வந்தவர் யார்?
A
லெனின்
B
முசோலினி
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 81 Explanation: 
புதிய மக்கள் கட்சி: மாவோ புதிய மக்களாட்சி என்ற கொள்கையை கொண்டு வந்தார். அரசு ஏழைகளை சுரண்டும் பணக்காரர்களின் ஆயுதம் என்ற மார்க்சிய கருத்தை மாவோ சிறிது மாற்றியமைத்தார். விவசாயிகள், தொழிலாளிகள், சிறிய முதலாளிகள், தேசிய முதலாளிகள் என்ற நான்கு வர்க்கங்களுக்காக புதிய மக்களாட்சியை கொண்டு வந்தார்.
Question 82
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) புதிய மக்களாட்சிக்கு மாவோ மக்கள் மக்களாட்சி சர்வாதிகாரம் என்ற பெயரையும் அவர் சூட்டினார்.
  • (ii) சிறிய முதலாளிகளும், பெரிய முதலாளிகளும் அரசின் இளைய பங்குதாரர்களாக கருதப்பட்டனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 82 Explanation: 
புதிய மக்களாட்சிக்கு மாவோ மக்கள் மக்களாட்சி சர்வாதிகாரம் என்ற பெயரையும் அவர் சூட்டினார். இம்முறையில் தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சிறிய முதலாளிகளும், பெரிய முதலாளிகளும் அரசின் இளைய பங்குதாரர்களாக கருதப்பட்டனர்
Question 83
அரசின் எதிரிகளாக கருதப்பட்ட வர்க்கங்களை "ஏகாதிபத்தியத்தை இயக்கும் நாய்கள்" என்று கடுமையாக வர்ணித்தவர்?
A
லெனின்
B
முசோலினி
C
ஸ்டாலின்
D
மாவோ
Question 83 Explanation: 
இந்த நான்கு வகை வர்க்கங்களுக்கும் அரசு மக்களாட்சியாக செயல்பட்டது. மற்ற வர்க்கங்கள் அரசின் எதிரிகளாக கருதப்பட்டனர். அவர்களை "ஏகாதிபத்தியத்தை இயக்கும் நாய்கள்" என்று மாவோ கடுமையாக வர்ணித்தார்.
Question 84
'பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமல்ல;  அது எலியைப் பிடித்தால் போதும்'. என்று கூறியவர் யார்?
A
ஸ்ராட்ஸ்கி
B
புக்காரின்
C
ஆண்டனியோ கிராம்சி
D
டெங் ஜியாபெங்
Question 84 Explanation: 
'பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமல்ல; அது எலியைப் பிடித்தால் போதும்'. - டெங் ஜியாபெங்
Question 85
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இருபத்தியோராவது நூற்றாண்டில் கூட மாவோயிசம் பல மாற்றங்களுடன் சீனாவில் பின்பற்றப்படுகிறது.
  • (ii) சீனாவின் தேசிய தலைவரான டெங் ஜியாபெங்  1978 ஆம் ஆண்டிற்கு பிறகு சீனப்பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 85 Explanation: 
இருபத்தியோராவது நூற்றாண்டில் கூட மாவோயிசம் பல மாற்றங்களுடன் சீனாவில் பின்பற்றப்படுகிறது. சீனாவின் தேசிய தலைவரான டெங் ஜியாபெங் 1978 ஆம் ஆண்டிற்கு பிறகு சீனப்பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
Question 86
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தாராளமயமாதல் சீனப்பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.
  • (ii) இருந்தபோதும் அரசியலில் சீனப்பொதுவுடைமைவாத கட்சி எல்லையற்ற ஆதிக்கத்தை தொடர்ந்து பெற்றிருக்கிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 86 Explanation: 
தாராளமயமாதல் சீனப்பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. இருந்தபோதும் அரசியலில் சீனப்பொதுவுடைமைவாத கட்சி எல்லையற்ற ஆதிக்கத்தை தொடர்ந்து பெற்றிருக்கிறது.
Question 87
மேலாதிக்கம் என்ற புதுக்கருத்து மூலம் முதலாளித்துவ அரசின் செயல்பாடுகளை வர்ணித்தவர் யார்?
A
ஸ்ராட்ஸ்கி
B
டெங் ஜியாபெங்
C
சாமுவேல் ஹண்டன்
D
ஆண்டனியோ கிராம்சி
Question 87 Explanation: 
ஆண்டனியோ கிராம்சி : இத்தாலிய மார்க்சியவாதியான கிராம்சி மேலாதிக்கம் என்ற புதுக்கருத்து மூலம் முதலாளித்துவ அரசின் செயல்பாடுகளை வர்ணித்தார்.
Question 88
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மேலாதிக்கம் என்றால் அறிவுசார், தார்மீக தலைமை என்பது பொருளாகும்.
  • (ii) அரசு மக்களுடைய ஆதரவை தனக்கு சாதகமாக அறிவுசார் தார்மீக தலைமையின் மூலம் உருவாக்குகின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 88 Explanation: 
மேலாதிக்கம் என்றால் அறிவுசார், தார்மீக தலைமை என்பது பொருளாகும். அரசு மக்களுடைய ஆதரவை தனக்கு சாதகமாக அறிவுசார் தார்மீக தலைமையின் மூலம் உருவாக்குகின்றது. பிரச்சாரத்தின் மூலம் தனக்கு ஆதரவாக பொய் எழுச்சி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.
Question 89
'முதலாளித்துவ அரசை வீழ்த்துவதற்கு உயிரோட்டமான அறிவு ஜீவிகளும் பொதுவுடைமைவாத கட்சியும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.' என்று கூறியவர் யார்?
A
ஸ்ராட்ஸ்கி
B
புக்காரின்
C
சாமுவேல் ஹண்டன்
D
கிராம்சி
Question 89 Explanation: 
அரசின் எண்ணங்கள், நோக்கங்கள் மக்களின் மனதில் திரும்ப திரும்ப பதிய வைக்கப்படுகின்றன. மக்களின் மனதை மயக்க முடியாத போதுதான் வன்முறையை அரசு பயன்படுத்துகிறது. முதலாளித்துவ அரசை வீழ்த்துவதற்கு உயிரோட்டமான அறிவு ஜீவிகளும் பொதுவுடைமைவாத கட்சியும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அறிவு ஜீவிகள் அரசை பற்றி யோசித்து எவ்வாறு அதை தோற்கடிப்பது என்று கூறுவார்கள். பொதுவுடைமைவாத கட்சி அதன் பின் புரட்சியை நடத்தி பொதுவுடைமையை நிறுவும் என்று கிராம்சி கூறினார்.
Question 90
'எல்லா மனிதர்களும் அறிவு ஜீவிகளே ஆனால் சமூகத்தில் அறிவுஜீவிகளின் பணியை எல்லோரும் செய்வது இல்லை' என்று கூறியவர் யார்?
A
ஸ்ராட்ஸ்கி
B
புக்காரின்
C
சாமுவேல் ஹண்டன்
D
கிராம்சி
Question 90 Explanation: 
எல்லா மனிதர்களும் அறிவு ஜீவிகளே ஆனால் சமூகத்தில் அறிவுஜீவிகளின் பணியை எல்லோரும் செய்வது இல்லை.- ஆண்டனியோ கிராம்சி
Question 91
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஜெர்மனியில் உள்ள பிராங் பர்ட் சமூக ஆய்வு நிறுவனத்தின் தத்துவஞானிகள் புது மார்க்சியம் அல்லது  விமர்சனக்கோட்பாடு என்பதை உருவாக்கினர்.
  • (ii) இவர்களுடைய கருத்துகள் மக்களின் விடுதலைக்கான கருத்துக்களாகவும், ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு கலாச்சாரமாகவும் இருந்தன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 91 Explanation: 
புது மார்க்சியம்: ஜெர்மனியில் உள்ள பிராங் பர்ட் சமூக ஆய்வு நிறுவனத்தின் தத்துவஞானிகள் புது மார்க்சியம் அல்லது விமர்சனக்கோட்பாடு என்பதை உருவாக்கினர். இவர்கள் அனைவரும் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்த்தவர்கள் ஆவார்கள். ஆதிக்கத்தின் வேர்களை புரிந்துகொள்ள முயற்சித்தவர்கள் ஆவார்கள். புரட்சிகர மாற்றத்திற்காக மக்களின் உண்மை விழிப்புணர்வை தட்டி எழுப்பினார்கள். ஆதிக்கம் சார்ந்த சமூக கலாச்சார தன்மைகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்கள். இவர்களுடைய கருத்துகள் மக்களின் விடுதலைக்கான கருத்துக்களாகவும், ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு கலாச்சாரமாகவும் இருந்தன.
Question 92
கருவி மார்க்சிசம் என்ற கருத்தை வலியுறுத்தியவர் யார்?
A
ரால்ப் மிலிபன்ட்
B
புக்காரின்
C
பிராங் பர்ட்
D
கிராம்சி
Question 92 Explanation: 
கருவி மார்க்சிசம்: ரால்ப் மிலிபன்ட், கருவி மார்க்சிசம் என்ற கருத்தை வலியுறுத்தினார். அரசை இவர் கருவியாக பார்க்கிறார். பணக்காரர்களும் அரசாங்கத்தின் அதிகாரிகளும் ஒரே சமூக வர்க்கத்தில் இருந்து தோன்றுகிறார்கள். அரசு அதிகாரிகள் பணக்காரர்களின் சொந்தக்காரர்களாக உள்ளனர். இந்த தனிப்பட்ட உறவினால் அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டுவதற்கு மேலாதிக்கம் செய்வதற்கும் அரசானது போகிறது என்று ரால்ப் மிலிபன்ட் கூறினார்.
Question 93
கட்டுமான மார்க்சிசம் என்ற கருத்தை வலியுறுத்தியவர் யார்?
A
அல்துசர்
B
போலண்ட்ஸ்சாஸ்
C
a) மற்றும் b)
D
கிராம்சி
Question 93 Explanation: 
கட்டுமான மார்க்சிசம்: பிரான்சு நாட்டின் தத்துவ ஞானியான அல்துசர், போலண்ட்ஸ்சாஸ் கட்டுமான மார்க்சியம் என்ற கருத்தை 1970 களில் வலியுறுத்தினர். இவர்கள் கருவி மார்க்சிய கருத்தை நிராகரித்தனர்
Question 94
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அல்துசருக்கும் மிலிபன்ட் அவருக்கும் நீண்ட விவாதம் நடந்தது.
  • (ii) அரசு எப்பொழுதுமே பணக்காரர்களால் ஏழைகளை சுரண்டும் கருவியாக செயல்படும் என்று கட்டுமான மார்க்சிசம் கூறுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 94 Explanation: 
அல்துசருக்கும் மிலிபன்ட் அவருக்கும் நீண்ட விவாதம் நடந்தது. அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு முக்கியமில்லை. அதிகாரிகளின் தனிப்பட்ட சமூக உறவுகள் அரசின் தன்மையை பாதிப்பது இல்லை. அரசு எப்பொழுதுமே பணக்காரர்களால் ஏழைகளை சுரண்டும் கருவியாக செயல்படும் என்று கட்டுமான மார்க்சிசம் கூறுகிறது.
Question 95
மார்க்சியத்தின் அரசு கோட்பாட்டில் புதிய கருத்துகளை கொண்டு வந்தவர் யார்?
A
பிரட்ரிக் ஹெயக்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
லூயி அல்துசர்
D
சாமுவேல் ஹென்சன்
Question 95 Explanation: 
லூயி அல்துசர்: மார்க்சியத்தின் அரசு கோட்பாட்டில் புதிய கருத்துகளை இவர் கொண்டு வந்தார். முதலாளித்துவ அரசு ஏழைகளை அடக்குவதற்கு இரண்டு வகையான கருவிகளை பயன்படுத்துகிறது. 1. கொள்கை அரசு கருவிகள் 2. அடக்குமுறை அரசு கருவிகள்
Question 96
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) கொள்கை அரசு கருவிகளில் குடும்பம், பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள் போன்றவை அடங்கும்.
  • (ii) அரசானது கொள்கை கருவிகள் மூலமாக பிரச்சாரங்களை செய்து மக்களின் மனதை மயக்கி தனது நலனுக்கு தகுந்தவாறு மாற்றுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 96 Explanation: 
கொள்கை அரசு கருவிகளில் குடும்பம், பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள் போன்றவை அடங்கும். அரசானது கொள்கை கருவிகள் மூலமாக பிரச்சாரங்களை செய்து மக்களின் மனதை மயக்கி தனது நலனுக்கு தகுந்தவாறு மாற்றுகிறது.
Question 97
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அடக்குமுறை அரசு கருவிகளில் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் அடங்கும்.
  • (ii) அரசானது, கொள்கை அரசின் கருவிகளால் செயல்பட முடியாவிட்டால் அடக்குமுறை அரசு கருவிகளை பயன்படுத்தும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 97 Explanation: 
அடக்குமுறை அரசு கருவிகளில் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் அடங்கும். அரசானது, கொள்கை அரசின் கருவிகளால் செயல்பட முடியாவிட்டால் அடக்குமுறை அரசு கருவிகளை பயன்படுத்தும். வன்முறை, மிரட்டல் போன்ற நடவடிக்கைகளை பயன்படுத்தி மக்களை அடக்கும் என்று அல்துசர் கூறினார்.
Question 98
"வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு மனிதர்களை உருவாக்கி மாற்றி  தயார்படுத்துவதற்கு கொள்கை இன்றியமையாதது" என்று கூறியவர் யார்
A
பிரட்ரிக் ஹெயக்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
லூயி அல்துசர்
D
சாமுவேல் ஹென்சன்
Question 98 Explanation: 
"வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு மனிதர்களை உருவாக்கி மாற்றி தயார்படுத்துவதற்கு கொள்கை இன்றியமையாதது". - லூயி அல்துசர்
Question 99
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமதர்மவாதம் செல்வங்கள் அனைத்தும் பொதுச்சொத்துக்களாக இருக்க வேண்டும், தனிச்சொத்து உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • (ii) தாராளவாதத்திற்கு எதிரான கோட்பாடு சமதர்மவாதம் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 99 Explanation: 
சமதர்மவாதம் செல்வங்கள் அனைத்தும் பொதுச்சொத்துக்களாக இருக்க வேண்டும், தனிச்சொத்து உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறுகிறது. தாராளவாதத்திற்கு எதிரான கோட்பாடு சமதர்மவாதம் ஆகும். பல வகையான சமதர்மவாதங்கள் உள்ளன. மக்களாட்சி சமதர்ம வாதம், பேபியன் சமதர்ம வாதம், பரிணாம சமதர்மவாதம், கில்டு சமதர்ம வாதம் என்பவைகள் முக்கியமானவையாகும்.
Question 100
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பல நேரங்களில் சமதர்மவாதமும் பொதுவுடைமைவாதமும் ஒரே பொருள் கொண்டவைகள் போல் அழைக்கப்படுகின்றன.
  • (ii) காரல் மார்க்ஸ் தனது பொதுவுடைமையை அறிவியல் சமதர்மவாதம் என்றும் இதர சமதர்மவாதங்களை கற்பனை சமதர்மவாதம் என்றும் வர்ணித்தார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 100 Explanation: 
பல நேரங்களில் சமதர்மவாதமும் பொதுவுடைமைவாதமும் ஒரே பொருள் கொண்டவைகள் போல் அழைக்கப்படுகின்றன. ஆனால் காரல் மார்க்ஸ் இரண்டையும் வேறுபடுத்தினார். தனது பொதுவுடைமையை அறிவியல் சமதர்மவாதம் என்றும் இதர சமதர்மவாதங்களை கற்பனை சமதர்மவாதம் என்றும் வர்ணித்தார்.
Question 101
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பல அரசியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தாராளவாதத்தின் எதிர்மறை விளைவுகளை தாக்கி பேசினர்.
  • (ii) இராபர்ட் ஓவன் என்பவர் மனித நேயம் உள்ள தொழில் அதிபர் ஆவார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 101 Explanation: 
கற்பனை சமதர்மவாதம்: பல அரசியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தாராளவாதத்தின் எதிர்மறை விளைவுகளை தாக்கி பேசினர். உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றனர். இராபர்ட் ஓவன் என்பவர் மனித நேயம் உள்ள தொழில் அதிபர் ஆவார். அவர் கூட்டுறவு முறையில் தனது தொழிற்சாலைகளை நடத்தினார். தொழிலாளிகளை நன்கு கவனித்துக்கொண்டார். தொழிற்சாலைகளின் மேலாண்மையில் தொழிலாளிகளையும் சேர்த்துக் கொண்டார். தொழிலில் வரும் லாபத்தில் தொழிலாளிகளுக்கும் பங்கு வழங்கினார்.
Question 102
"திறமையான பொருளாதாரத்திற்கு தொழிலாளிகளின் நலன்களை முதலாளிகள் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
இராபர்ட் ஓவன்
B
தூய சைமன்
C
சார்லஸ் புரியர்
D
கிராம்சி
Question 102 Explanation: 
தூய சைமன் என்பவர் பிரான்சு நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறிஞர் ஆவார். திறமையான பொருளாதாரத்திற்கு தொழிலாளிகளின் நலன்களை முதலாளிகள் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
Question 103
தொழிலாளர்களின்  அமைப்புகளுக்கு பலான்ஜீஸ் என்று பெயரிட்டவர் யார்?
A
இராபர்ட் ஓவன்
B
தூய சைமன்
C
சார்லஸ் புரியர்
D
கிராம்சி
Question 103 Explanation: 
சார்லஸ் புரியர் என்ற அறிஞர் தொழிலாளர்களின் அமைப்புகள் உருவாக வேண்டும் என்றார். அந்த அமைப்புகளுக்கு பலான்ஜீஸ் என்று பெயரிட்டார். இவர் முதலாளிகள் மனசாட்சியுடன் தொழிலாளர்களுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
Question 104
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தூய சைமன், சார்லஸ் புரியர், இராபர்ட் ஓவன் சமதர்ம வாதத்தை ஆதரித்தனர்.
  • (ii) காரல்மார்க்ஸ் இவர்களின் தொழிலாளர்களுக்கான கரிசனத்தை பாராட்டினார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 104 Explanation: 
தூய சைமன், சார்லஸ் புரியர், இராபர்ட் ஓவன் சமதர்ம வாதத்தை ஆதரித்தனர். காரல்மார்க்ஸ் இவர்களின் தொழிலாளர்களுக்கான கரிசனத்தை பாராட்டினார். ஆனால் இவர்களின் கருத்துகள் ஆழமற்றவை. அறிவியல் பூர்வமாக இல்லை என்று விமர்சித்தார். ஆகவே இவர்களின் சமதர்மவாத கருத்துகளை கற்பனை சமதர்மவாதம் என்று பெயரிட்டார்.
Question 105
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) விடுதலையும், சமத்துவத்தையும் அடைவதற்கு மக்களாட்சியும் சமதர்மவாதமும் தேவை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகிறது.
  • (ii) இது தனது அரசு கோட்பாட்டில் பொதுவுடைமையில் இருந்து வேறுபடுகின்றது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 105 Explanation: 
மக்களாட்சி சமதர்மவாதம்: விடுதலையும், சமத்துவத்தையும் அடைவதற்கு மக்களாட்சியும் சமதர்மவாதமும் தேவை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகிறது. இது தனது அரசு கோட்பாட்டில் பொதுவுடைமையில் இருந்து வேறுபடுகின்றது. அரசு சுரண்டலின் கருவி கிடையாது. அரசு மக்களின் நலன் காக்கும் கருவியாகும். அரசு முதலாளிகளின் கைப்பாவை இல்லை. சமூக நலனை காக்கும் தன்மை அரசிடம் உள்ளது.
Question 106
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூகத்தில் உள்ள எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது அரசு ஆகும்.
  • (ii) மக்களாட்சி சமதர்ம வாதம் வாக்குப்பெட்டி சமதர்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 106 Explanation: 
அரசு மக்களாட்சி அடிப்படையில் இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது அரசு ஆகும். சமூக மாற்றங்கள் அமைதியான முறையில் மெல்ல மெல்ல வர வேண்டும். மக்களாட்சி சமதர்ம வாதம் வாக்குப்பெட்டி சமதர்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Question 107
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் தேர்தல் பாதை மூலம் மாற்றங்களை கொண்டு வர முடியும், புரட்சியும் வன்முறையும் தேவை இல்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகிறது.
  • (ii) சமூக நலனுக்காக தனி சொத்துக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம், தனி சொத்துரிமையை அழிக்க வேண்டியது இல்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 107 Explanation: 
மக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் தேர்தல் பாதை மூலம் மாற்றங்களை கொண்டு வர முடியும். புரட்சியும் வன்முறையும் தேவை இல்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகிறது. தனி சொத்துக்களை முற்றிலும் அகற்ற வேண்டாம். சமூக நலனுக்காக தனி சொத்துக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தனி சொத்துரிமையை அழிக்க வேண்டியது இல்லை என்று மக்களாட்சி சமதர்மவாதம் கூறுகின்றது.
Question 108
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பேபியன் சமதர்மவாதம் இங்கிலாந்து நாட்டின் சமதர்மவாதம் ஆகும்.
  • (ii) பேபியன் குழுவால் 1884 முதல் இவ்வகை சமதர்ம வாதம் ஆதரிக்கப்பட்டு வந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 108 Explanation: 
பேபியன் சமதர்மவாதம்: இது இங்கிலாந்து நாட்டின் சமதர்மவாதம் ஆகும். பேபியன் குழுவால் 1884 முதல் இவ்வகை சமதர்ம வாதம் ஆதரிக்கப்பட்டு வந்தது. பண்டைய கால ரோமானிய ஜெனரல் 'பேபியஸ்' பெயரால் இது அழைக்கப்படுகிறது.
Question 109
"காத்திரு சரியான நேரத்தில் திருப்பி தாக்கு" என்பது யாருடைய இராணுவ உத்தியாகும்?
A
பேபியஸ்
B
சிட்னி வெப்
C
H.G. வெல்ஸ்
D
பெர்னார்ட்ஷா
Question 109 Explanation: 
"காத்திரு சரியான நேரத்தில் திருப்பி தாக்கு" என்பது பேபியஸ் அவர்களின் இராணுவ உத்தியாகும். சிட்னி வெப், H.G. வெல்ஸ் உள்ளிட்டோர் பேபியன் சமதர்ம வாதத்தை கொண்டு வந்தனர். ஆங்கில எழுத்தாளர் பெர்னார்ட்ஷா பேபியன் சமதர்ம வாதத்தின் தலை சிறந்த அறிஞர் ஆவார்.
Question 110
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பேபியன் சமதர்ம வாதம் முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்த்தது.
  • (ii) மக்களாட்சி அரசை பேபியன் சமதர்மவாதம் ஆதரித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 110 Explanation: 
பேபியன் சமதர்ம வாதம் முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்த்தது. எதிர்மறைத்தாராளவாதத்தை விமரிசித்தது. அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியது. மக்களாட்சி அரசை பேபியன் சமதர்மவாதம் ஆதரித்தது. அரசிற்கு இரண்டு தன்மைகள் உள்ளன. ஒன்று அதன் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இருக்க வேண்டும். மற்றொன்று நிபுணர்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதனை இந்த இரண்டு தன்மைகள் அடிப்படையில் மாற்றினால் போதும் என்று பேபியன் சமதர்ம வாதம் கூறுகிறது.
Question 111
"புரட்சிகள் கொடுங்கோலாட்சியின் கொடுமையை குறைக்கவில்லை. இன்னொரு கொடுங்கோலனிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துள்ளன" என்று கூறியவர் யார்?
A
பேபியஸ்
B
சிட்னி வெப்
C
H.G. வெல்ஸ்
D
பெர்னார்ட்ஷா
Question 111 Explanation: 
பேபியன் சமதர்மவாதத்தின் பொன்மொழி " தாக்கும்பொழுது நான் கடுமையாக தாக்குவேன்" என்பதாகும். புரட்சிகள் கொடுங்கோலாட்சியின் கொடுமையை குறைக்கவில்லை. இன்னொரு கொடுங்கோலனிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துள்ளன. - ஜார்ஜ் பெர்னார்ட்ஷா
Question 112
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்தியாவில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பேபியன் சமதர்ம வாதத்தின் ஆதரவாளர் ஆவார்.
  • (ii) பேபியன் சமதர்ம வாதம் மக்களாட்சியும் சமதர்மமும் மிகவும் நெருங்கிய கோட்பாடுகள் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 112 Explanation: 
இந்தியாவில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பேபியன் சமதர்ம வாதத்தின் ஆதரவாளர் ஆவார். பேபியன் சமதர்ம வாதம் மக்களாட்சியும் சமதர்மமும் மிகவும் நெருங்கிய கோட்பாடுகள் ஆகும். இரண்டு கொள்கைகளும் நீதியையும் சமத்துவத்தையும் மிகவும் ஆதரித்தன.
Question 113
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பேபியன் சமதர்மவாதம் தனி சொத்துரிமையை அழிக்க வேண்டும் எனக்கூறவில்லை.
  • (ii) பேபியன் சமதர்மவாதம் பொதுவுடைமை வாத கொள்கையின் புரட்சியை எதிர்த்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 113 Explanation: 
பேபியன் சமதர்மவாதம் தனி சொத்துரிமையை அழிக்க வேண்டும் எனக்கூறவில்லை. சமூக நலனுக்காக தனி சொத்துரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறியது. பேபியன் சமதர்மவாதம் பொதுவுடைமை வாத கொள்கையின் புரட்சியை எதிர்த்தது. வன்முறை மாற்றம் தராது. அமைதியான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் மாற்றம் வர வேண்டும் என்று கூறியது.
Question 114
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஜெர்மன் சமதர்ம மக்களாட்சி கட்சியின் தலைவரான இலேசில் பரிணாம சமதர்ம வாதத்தை ஆதரித்தார்.
  • (ii) ஜெர்மனியில் 1875 ஆம் ஆண்டு வந்த கோட்டா திட்டம் பரிணாம சமதர்ம வாதத்தை வளர்த்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 114 Explanation: 
பரிணாம சமதர்மவாதம்: ஜெர்மன் சமதர்ம மக்களாட்சி கட்சியின் தலைவரான இலேசில் பரிணாம சமதர்ம வாதத்தை ஆதரித்தார். ஜெர்மனியில் 1875 ஆம் ஆண்டு வந்த கோட்டா திட்டம் பரிணாம சமதர்ம வாதத்தை வளர்த்தது.
Question 115
"பரிணாம சமதர்ம வாதம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
அன்சில்
B
பிரான்சின் ஜாரஸ்
C
எட்வர்ட் பெர்ன்ஸ்டன்
D
இலேசில்
Question 115 Explanation: 
எட்வர்ட் பெர்ன்ஸ்டன் "பரிணாம சமதர்ம வாதம்" என்ற நூலை எழுதினார். இத்தாலியின் அன்சில், பிரான்சின் ஜாரஸ் என்று பல அறிஞர்கள் பரிணாம சமதர்மவாதத்தை ஆதரித்தனர்.
Question 116
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) புரட்சி மூலம் மாற்றங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிணாம சமதர்ம வாதம் கூறுகிறது.
  • (ii) மார்க்சியம் பரிணாம சமதர்மவாதத்தை தரகர் சமதர்மவாதம் என்று விமர்சித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 116 Explanation: 
மாற்றங்கள் பரிணாமத்தின் மூலம் மெல்ல மெல்ல வர வேண்டும். வன்முறை மூலம் வரக்கூடாது. புரட்சி மூலம் மாற்றங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிணாம சமதர்ம வாதம் கூறுகிறது. மேலும் மனித வாழ்க்கையை பொருளாதார காரணிகள் மட்டும் தீர்மானிப்பது கிடையாது. இதர காரணிகளும் மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. பரிணாம சமதர்மவாதமும், மக்களாட்சி சமதர்மவாதமும் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும். மார்க்சியம் பரிணாம சமதர்மவாதத்தை தரகர் சமதர்மவாதம் என்று விமர்சித்தது.
Question 117
'பொருளாதார மீட்புக்கான திட்டம்' என்ற நூலை எழுதியவர்  யார்?
A
G.D.H. கோல் கில்டு
B
பிரான்சின் ஜாரஸ்
C
எட்வர்ட் பெர்ன்ஸ்டன்
D
இலேசில்
Question 117 Explanation: 
கில்டு சமதர்மவாதம்: 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் கில்டு சமதர்ம வாதம் தோன்றியது.தேசிய கில்டுகள் அமைப்பின் தலைவரான G.D.H. கோல் கில்டு சமதர்ம வாதத்தை ஆதரித்தார். அவர் கில்டு சமதர்மவாதம்: பொருளாதார மீட்புக்கான திட்டம் ₹₹ என்ற நூலை எழுதினார்.
Question 118
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தொழிலாளர்களை சுரண்டுவதால் முதலாளித்துவத்தை விமர்சித்து கில்டு சமதர்ம வாதம் தோன்றியது.
  • (ii) இடைக்கால வரலாற்றில் ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட தொழிலில் உள்ள நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கிய சங்கம் தான் கில்டு ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 118 Explanation: 
தொழிலாளர்களை சுரண்டுவதால் முதலாளித்துவத்தை விமர்சித்து கில்டு சமதர்ம வாதம் தோன்றியது. கில்டு சமதர்மவாதம்: பொருளாதார மீட்புக்கான ஒரு திட்டம் - G.D.H. கோல் கில்டு. இடைக்கால வரலாற்றில் ஐரோப்பாவில் ஒரு குறிப்பிட்ட தொழிலில் உள்ள நிபுணர்கள் சேர்ந்து உருவாக்கிய சங்கம் தான் கில்டு ஆகும். அத்தொழிலில் உள்ளவர்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழ்வதற்கு கில்டுகள் உதவின. கில்டு சமதர்ம வாதம் ஐரோப்பாவின் இடைக்கால கில்டுகளையும் நவீன தொழிற்சங்கங்களையும் இணைக்கின்றது.
Question 119
கில்டு சமதர்மவாதம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) கில்டுகள் இணைந்து தல, மாவட்ட, மாநில, மத்திய ஆட்சி குழுக்களை உருவாக்கி நாட்டை நிர்வகிக்க வேண்டும்.
  • (ii) முக்கியமான அதிகாரங்கள் கில்டுகளிடமே இருக்க வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 119 Explanation: 
கில்டுகள் தான் ஆட்சி செய்ய வேண்டும். தொழிலில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள்தான் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும். கில்டுகள் இணைந்து தல, மாவட்ட, மாநில, மத்திய ஆட்சி குழுக்களை உருவாக்கி நாட்டை நிர்வகிக்க வேண்டும். முக்கியமான அதிகாரங்கள் கில்டுகளிடமே இருக்க வேண்டும்.
Question 120
கில்டு சமதர்மவாதம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) கில்டு சமதர்ம வாதம் அரசை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை.
  • (ii) அமைதியான மக்களாட்சி முறையில் மட்டுமே மாற்றம் வர வேண்டும் என்பது கில்டு சமதர்ம வாதத்தின் முக்கிய கொள்கையாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 120 Explanation: 
கில்டு சமதர்ம வாதம் அரசை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒரு சில பணிகளை மட்டுமே அரசு செய்ய வேண்டும். கல்வி மற்றும் அரசு சுகாதாரப் பணிகளை மட்டும் அரசு செய்ய வேண்டும். மாற்றங்கள் புரட்சி, வன்முறை மூலமாக வரக்கூடாது. அமைதியான மக்களாட்சி முறையில் மட்டுமே மாற்றம் வர வேண்டும் என்பது கில்டு சமதர்ம வாதத்தின் முக்கிய கொள்கையாகும்
Question 121
கில்டு சமதர்மவாதம் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) விமர்சகர்கள் கில்டு சமதர்ம வாதத்தை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று விமர்சிக்கின்றனர்.
  • (ii) அரசை ஒரு சாதாரண கில்டு என கருதுவது அரசின் சிறப்புத்தன்மையை அழித்து விடும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 121 Explanation: 
விமர்சகர்கள் கில்டு சமதர்ம வாதத்தை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று விமர்சிக்கின்றனர். அரசை ஒரு சாதாரண கில்டு என கருதுவது அரசின் சிறப்புத்தன்மையை அழித்து விடும்.அரசின் சக்தியை அதிகாரத்தை கில்டு சமதர்ம வாதம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. கில்டு சமதர்ம வாதத்தின் அதிகாரம் இல்லாத அரசினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது. போர்கள் மற்றும் கிளர்ச்சிகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.
Question 122
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) "சமதர்மவாத வகையான சமுதாயம்" என்பது தான் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும்.
  • (ii) மத,இன, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதும் ஏழ்மை, கல்லாமை ஆகியவற்றை அகற்றுவதும் இந்தியாவின் சமதர்ம வாதம் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 122 Explanation: 
இந்தியாவின் சமதர்மவாதம்: "சமதர்மவாத வகையான சமுதாயம்" என்பது தான் இந்தியாவின் சமதர்மவாதம் ஆகும். 1950 களில் இந்திய அரசு இதனை கொண்டு வந்தது. மத,இன, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதும் ஏழ்மை, கல்லாமை ஆகியவற்றை அகற்றுவதும் இந்தியாவின் சமதர்ம வாதம் ஆகும்.
Question 123
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 1951 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
  • (ii) பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 123 Explanation: 
1950 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தனது தீர்மானத்தின் மூலம் திட்டக்குழுவை அமைத்தது. 1951 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பொதுத்துறையும் தனியார்துறையும் கலந்து செயல்படும் கலப்பு பொருளாதாரத்தை பின்பற்றினோம்.பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தந்தது.
Question 124
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 44 வது அரசமைப்பு திருத்த சட்டம் சமதர்மவாதத்தை அரசமைப்பின் முகவுரையில் சேர்த்தது.
  • (ii) 42 வது அரசமைப்பு திருத்த சட்டம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கி சாதாரண சட்ட உரிமையாக அரசமைப்பின் 12 ஆம் பகுதியில் வைத்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 124 Explanation: 
மேலும் 42 வது அரசமைப்பு திருத்த சட்டம் சமதர்மவாதத்தை அரசமைப்பின் முகவுரையில் சேர்த்தது. 44 வது அரசமைப்பு திருத்த சட்டம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கி சாதாரண சட்ட உரிமையாக அரசமைப்பின் 12 ஆம் பகுதியில் வைத்தது.
Question 125
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அரசமைப்பின் நான்காம் பகுதியில் வேலை உரிமை, சில இடத்தில் செல்வங்கள் குவியாமை, போன்ற சமதர்மவாத கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
  • (ii) சுதந்திரம் முதல் 2000 ஆம் ஆண்டு வரை இந்தியா சமதர்மவாத கருத்துக்களை பின்பற்றியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 125 Explanation: 
அரசமைப்பின் நான்காம் பகுதியில் வேலை உரிமை, சில இடத்தில் செல்வங்கள் குவியாமை, போன்ற சமதர்மவாத கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சுதந்திரம் முதல் 1991 ஆம் ஆண்டு வரை இந்தியா சமதர்மவாத கருத்துக்களை பின்பற்றியது.
Question 126
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஒரு நாட்டின் மேல் மக்களுக்கு உள்ள பாசம், அன்பு, விசுவாசம், போன்ற உணர்வுகளை தேசியவாதம் என்று கூறுகிறோம்.
  • (ii) மக்களிடையே குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் அல்லது மொழிகளுக்கும், விழுமியங்களுக்கு, பாரம்பரியத்திற்கும் பாசம் காட்டுவதே தேசியவாதம் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 126 Explanation: 
தேசியவாதம்: ஒரு நாட்டின் மேல் மக்களுக்கு உள்ள பாசம், அன்பு, விசுவாசம், போன்ற உணர்வுகளை தேசியவாதம் என்று கூறுகிறோம். மக்களிடையே குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் அல்லது மொழிகளுக்கும், விழுமியங்களுக்கு, பாரம்பரியத்திற்கும் பாசம் காட்டுவதே தேசியவாதம் ஆகும்.
Question 127
"தேசமும் தேசியவாதமும்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
G.D.H. கோல் கில்டு
B
பிரான்சின் ஜாரஸ்
C
எட்வர்ட் பெர்ன்ஸ்டன்
D
ஏர்னெஸ்ட் கெல்னர்
Question 127 Explanation: 
மக்களின் விசுவாசம் எல்லா குழுக்களைவிடவும் தேசத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். ஏர்னெஸ்ட் கெல்னர் "தேசமும் தேசியவாதமும்" என்ற நூலை எழுதினார். "தேசியவாதம் என்பது அரசியல் தளமும் தேசத்தளமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று முதன்மையாக வலியுறுத்தும் அரசியல் கொள்கை " என்று அவர் கூறினார்.
Question 128
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசியவாதம் நவீன காலத்தில் ஐரோப்பாவில் தோன்றியது.
  • (ii) பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் பரவியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 128 Explanation: 
தேசியவாதம் ஒரு நவீன கருத்தாகும். நவீன காலத்தில் ஐரோப்பாவில் தோன்றியது. இங்கிலாந்தில் முதன்முதலில் தோன்றியது. பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் பரவியது. வட அமெரிக்க காலணிகள் ஐரோப்பாவிற்கு எதிராக தங்களது தேசியவாதத்தை உருவாக்கின
Question 129
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் பின் காலனி ஆதிக்க தேசிய வாதம் என்ற புதுவகை தேசிய வாதத்தை உருவாக்கின.
  • (ii) முதலாளித்துவம், பிரெஞ்சு புரட்சி, தொழில் புரட்சி, உலகப்போர்கள் மற்றும் காலனி ஆதிக்கம் போன்றவைகள் தேசியவாதத்தை வளர்த்தன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 129 Explanation: 
ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் பின் காலனி ஆதிக்க தேசிய வாதம் என்ற புதுவகை தேசிய வாதத்தை உருவாக்கின. பல காரணிகள் தேசிய வாதம் உலகம் முழுவதும் பரவுவதற்கு வழி வகுத்தது. முதலாளித்துவம், பிரெஞ்சு புரட்சி, தொழில் புரட்சி, உலகப்போர்கள் மற்றும் காலனி ஆதிக்கம் போன்றவைகள் தேசியவாதத்தை வளர்த்தன.
Question 130
பின்வருவனவற்றுள் தேசியவாதத்தின் கோட்பாடுகள் எவை?
A
ஆதிகால தேசியவாத கோட்பாடு
B
சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு
C
சமூக தொடர்பு தேசியவாத கோட்பாடு
D
இவை அனைத்தும்
Question 130 Explanation: 
தேசியவாத கோட்பாடுகள்; தேசியவாதத்தை பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. அ) ஆதிகால தேசியவாத கோட்பாடு ஆ) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு இ) சமூக தொடர்பு தேசியவாத கோட்பாடு ஈ) மார்க்சிய தேசியவாத கோட்பாடு உ) பின் கொள்கை தேசியவாத கோட்பாடு
Question 131
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசியவாத கோட்பாடுகளை நிரந்தரக்கோட்பாடுகள் மற்றும் நவீனவாத கோட்பாடுகள் என இரண்டாக பிரிக்கலாம்.
  • (ii) ஆதிகால தேசியவாத கோட்பாடு மற்றும் சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு ஆகிய இரண்டும் நிரந்தர கோட்பாடுகளாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 131 Explanation: 
தேசியவாத கோட்பாடுகளை நிரந்தரக்கோட்பாடுகள் மற்றும் நவீனவாத கோட்பாடுகள் என இரண்டாக பிரிக்கலாம். ஆதிகால தேசியவாத கோட்பாடு மற்றும் சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு ஆகிய இரண்டும் நிரந்தர கோட்பாடுகளாகும். கடைசி மூன்று கோட்பாடுகள் நவீன கோட்பாடுகளாகவும் கருதப்படுகின்றன.
Question 132
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆதிகால தேசியவாத கோட்பாடு ஆதிகாலத்தில் இருந்து ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்ளும் பாச உணர்வே தேசியவாதம் ஆகும்.
  • (ii) மொழி, மதம், பகுதி, இனம் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஆதிகாலம் முதல் இணைந்து வசிப்பதால் தேசிய உணர்வு இங்கு வளர்கிறது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 132 Explanation: 
ஆதிகால தேசியவாத கோட்பாடு ஆதிகாலத்தில் இருந்து ஓர் இடத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்ளும் பாச உணர்வே தேசியவாதம் ஆகும். மொழி, மதம், பகுதி, இனம் போன்ற காரணிகளின் அடிப்படையில் ஆதிகாலம் முதல் இணைந்து வசிப்பதால் தேசிய உணர்வு இங்கு வளர்கிறது. அவர்கள் இன உணர்வையும், விசுவாசத்தையும் பெற்று இருக்கிறார்கள். தங்களது சமூக நடவடிக்கைகளில் தினந்தோரும் தனிப்பட்ட முறையில் போட்டிகள் இருந்தாலும், பொது வாழ்வில் இன உணர்வுகள் அடிப்படையில் செயல்படுகின்றனர். இன தேசியவாதம் என்ற கொள்கையை இக்கோட்பாடு ஆதரிக்கின்றது
Question 133
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு ஒரு தாய் வழியில் வந்தவர்கள் இடையே காணப்படும் பாச உணர்வே தேசியவாதம் என்று இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது.
  • (ii) மக்கள் அனைவரும் ஒரு வம்சத்தை சேர்ந்தவர்கள்,  தேசமே ஒரு விரிவான குடும்பம் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 133 Explanation: 
சமூக உயிரியல் தேசியவாத கோட்பாடு ஒரு தாய் வழியில் வந்தவர்கள் இடையே காணப்படும் பாச உணர்வே தேசியவாதம் என்று இக்கோட்பாடு குறிப்பிடுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு வம்சத்தை சேர்ந்தவர்கள். தேசமே ஒரு விரிவான குடும்பம் ஆகும்.
Question 134
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசியவாதம் என்பது பகுத்தறிவையும் பெற்று இருக்கின்றது, உணர்வுப் பூர்வமாகவும் உள்ளது.
  • (ii) இது “பழங்கால மனதையும் நவீன தொழில் நுட்பத்தையும்” கொண்டுள்ளது. தங்கள் சமூகத்தின் வேர்களைக் கண்டறிய வரலாற்றில் தேசியவாதம் பயணிக்கின்றது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 134 Explanation: 
தேசியவாதம் என்பது பகுத்தறிவையும் பெற்று இருக்கின்றது. உணர்வுப் பூர்வமாகவும் உள்ளது. இது “பழங்கால மனதையும் நவீன தொழில் நுட்பத்தையும்” கொண்டுள்ளது. தங்கள் சமூகத்தின் வேர்களைக் கண்டறிய வரலாற்றில் தேசியவாதம் பயணிக்கின்றது.
Question 135
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அருகில் வசிக்கும் இனக் குழுக்களிடம் பழகும் பொழுது தற்காலத்தில் செயல்படுகின்றது, தம் மக்களிடையே இனப் பாசத்தை காட்டுகின்றது
  • (ii) இதர மக்களிடையே இன வெறுப்பை தேசியவாதம் விதைக்கின்றது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 135 Explanation: 
அருகில் வசிக்கும் இனக் குழுக்களிடம் பழகும் பொழுது தற்காலத்தில் செயல்படுகின்றது. தம் மக்களிடையே இனப் பாசத்தை காட்டுகின்றது. இதர மக்களிடையே இன வெறுப்பை தேசியவாதம் விதைக்கின்றது.
Question 136
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பின் கொள்கை தேசியவாத கோட்பாட்டை பல்வேறு அறிஞர்கள் ஆதரித்து உள்ளனர்.
  • (ii) அந்தோணி கிடன்ஸ், மைக்கல் மான், பால் பிராஸ் ஆகியோர் முக்கிய ஆதரவாளர்கள் ஆவர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 136 Explanation: 
பின் கொள்கை தேசியவாத கோட்பாடு இக்கோட்பாட்டை பல்வேறு அறிஞர்கள் ஆதரித்து உள்ளனர். அந்தோணி கிடன்ஸ், மைக்கல் மான், பால் பிராஸ் ஆகியோர் முக்கிய ஆதரவாளர்கள் ஆவர். அரசு தான் தேசியவாதத்தை கொண்டு வந்தது என்றுஇக்கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Question 137
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசங்களும், தேசிய உணர்வுகளும் இடைக்கால வரலாற்றில் இருந்த போதிலும், நவீன அரசு வந்த பிறகுதான் தேசியவாதம் முழுமையாக வளர்ந்தது என்று பின் கொள்கை தேசியவாத கோட்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
  • (ii) அந்தோணி கிடன்ஸ் பிரெஞ்சு புரட்சியால்தான் ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதம் உருவானது என கூறுகிறார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 137 Explanation: 
தேசங்களும், தேசிய உணர்வுகளும் இடைக்கால வரலாற்றில் இருந்த போதிலும், நவீன அரசு வந்த பிறகுதான் தேசியவாதம் முழுமையாக வளர்ந்தது என்று இவர்கள் கூறுகிறார்கள். அந்தோணி கிடன்ஸ் பிரெஞ்சு புரட்சியால்தான் ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதம் உருவானது என கூறுகிறார்.
Question 138
சமூக சக்திக்கு நான்கு ஆதாரங்கள் உள்ளன என கூறியவர் யார்?
A
மைக்கல் மான்
B
பிரான்சின் ஜாரஸ்
C
எட்வர்ட் பெர்ன்ஸ்டன்
D
ஏர்னெஸ்ட் கெல்னர்
Question 138 Explanation: 
மைக்கல் மான் சமூக சக்திக்கு நான்கு ஆதாரங்கள் உள்ளன என கூறினார். அவைகள் 1) கொள்கை சக்தி, (2) பொருளாதார சக்தி, (3) இராணுவ சக்தி, (4) அரசியல் சக்தி. இந்த நான்கு சக்திகளும் வரலாற்றில் ஒன்று சேர்ந்து தேசியவாதத்தை உருவாக்கின என்று கூறினார். கொள்கை சக்தி காரணி 16-ஆவது நூற்றாண்டில் இங்கிலாந்தில் தேசியவாதத்தை உருவாக்கியது. பொருளாதார சக்தி பின்னர் மேற்கு ஐரோப்பா முழுவதும் தேசங்களையும் தேசியவாதத்தையும் உருவாக்கியது. இராணுவ சக்தியும், அரசியல் சக்தியும் தேசியவாதத்தையும் வளர்ச்சிப் பெற வைத்தன.
Question 139
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பின் கொள்கை தேசியக் கோட்பாட்டார்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன.
  • (ii) ஆனால் எல்லோரும் நவீன அரசும், வர்த்தக முதலாளித்துவமும் தேசியவாதத்தை வளர்த்தன என்று கூறுவதில் ஒற்றுமையுடன் உள்ளனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 139 Explanation: 
பின் கொள்கை தேசியக் கோட்பாட்டார்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் எல்லோரும் நவீன அரசும், வர்த்தக முதலாளித்துவமும் தேசியவாதத்தை வளர்த்தன என்று கூறுவதில் ஒற்றுமையுடன் உள்ளனர்.
Question 140
"மற்றவர்களை விட தங்களுடைய குழு உறுப்பினர்களுடன் திறமையாகவும், உணர்வுபூர்வமாகவும் தகவலை பகிர்ந்துகொள்ளும் மக்கள் குழுவே தேசம்" என்று கூறியவர் யார்?
A
காரல் டியூட்ச்
B
பெனிடிக்ட் ஆண்டர்சன்
C
காரல்மார்க்ஸ்
D
இலேசல்
Question 140 Explanation: 
சமூகத்தொடர்பு தேசியவாத கோட்பாடு: காரல் டியூட்ச், பெனிடிக்ட் ஆண்டர்சன் தகவல் தொடர்பு தேசியவாத கோட்பாட்டை பிரபலப்படுத்தினார்கள். டியூட்ச் தேசத்தை இவ்வாறு விளக்கினார். "மற்றவர்களை விட தங்களுடைய குழு உறுப்பினர்களுடன் திறமையாகவும், உணர்வுபூர்வமாகவும் தகவலை பகிர்ந்துகொள்ளும் மக்கள் குழுவே தேசம்". அவர் பொருளாதாரம், வரலாறு, மக்கள் தொகையியல் ஆகிய பாடங்களை படித்து ஒரு முடிவிற்கு வருகிறார். தேசம் மற்றும் தேசியவாதம் தோற்றத்தில் தகவல் தொடர்புதான் பெற்றோராக பங்காற்றியுள்ளது. மக்களிடையே உள்நாட்டு தகவல் தொடர்பு தார்மீக மற்றும் அரசியல் அடையாளத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தது.
Question 141
"கற்பனை சமூகங்கள்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
காரல் டியூட்ச்
B
பெனிடிக்ட் ஆண்டர்சன்
C
காரல்மார்க்ஸ்
D
இலேசல்
Question 141 Explanation: 
பெனிடிக்ட் ஆண்டர்சன் தேசத்தை கற்பனை சமுதாயம் என்றும், தேசியவாதத்தை கற்பனை சமுதாயத்தின் உயிர் சக்தி என்றும் கூறினார். அவர் "கற்பனை சமூகங்கள்" என்ற நூலை எழுதினார்.
Question 142
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) தேசம் என்பது மனிதனின் எண்ணத்தில் கற்பனையில் இருக்கின்றது.
  • (ii) ஒரு தேசத்தின் உறுப்பினர்கள் எல்லா உறுப்பினர்களுடன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை, இருந்தபோதிலும் எல்லோரையும் தம்முடைய மக்களாக பார்க்கிறார்கள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 142 Explanation: 
தேசம் என்பது மனிதனின் எண்ணத்தில் கற்பனையில் இருக்கின்றது.ஒரு தேசத்தின் உறுப்பினர்கள் எல்லா உறுப்பினர்களுடன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை. இருந்தபோதிலும் எல்லோரையும் தம்முடைய மக்களாக பார்க்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும்போது மைதானத்திலும், தொலைகாட்சி முன்பும் அமர்ந்திருக்கும் கோடி கணக்கான மக்கள் தங்கள் தேசிய அணி வெற்றி பெற்றால் ஆனந்தம் கொள்கிறார்கள். தங்கள் தேசிய அணி தோல்வியுற்றால் தாங்களே தோற்றதாக வருத்தப்படுகிறார்கள். பல நாடுகளில், மறைந்த பெயர் தெரியாத இராணுவ வீரரின் கல்லறை உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட வீரரின் பெயர் தெரியாவிட்டாலும் அந்த கல்லறை மீது மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
Question 143
"மிகச்சிறிய நாட்டில் கூட ஒருவரையொருவர் மக்கள் தெரிந்திருப்பதில்லை, சந்திப்பதில்லை, கேள்விப்படுவதில்லை. இருந்தபொழுதிலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் சமூகத்தின் நினைவுகள் இருக்கின்றன", என்று கூறியவர் யார்?
A
காரல் டியூட்ச்
B
பெனிடிக்ட் ஆண்டர்சன்
C
காரல்மார்க்ஸ்
D
இலேசல்
Question 143 Explanation: 
"மிகச்சிறிய நாட்டில் கூட ஒருவரையொருவர் மக்கள் தெரிந்திருப்பதில்லை, சந்திப்பதில்லை, கேள்விப்படுவதில்லை. இருந்தபொழுதிலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் சமூகத்தின் நினைவுகள் இருக்கின்றன. சமூகங்களை உண்மை - பொய் என்று வேறுபடுத்த வேண்டியதில்லை. எவ்வாறு மக்கள் எண்ணத்தில், மனதில் நினைக்கப்பட்டு இருக்கின்றன என்பதுதான் முக்கியம்." - பெனடிக்ட் ஆண்டர்சன்
Question 144
"முதலாளித்துவமும், அச்சகமும் தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய பங்கை ஆற்றின" என்று கூறியவர் யார்?
A
காரல் டியூட்ச்
B
பெனிடிக்ட் ஆண்டர்சன்
C
காரல்மார்க்ஸ்
D
இலேசல்
Question 144 Explanation: 
ஆண்டர்சன் முதலாளித்துவமும், அச்சகமும் தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய பங்கை ஆற்றின என்று கூறினார். அச்சகம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பல ஆயிரக்கணக்கான நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் அச்சு அடிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்புத்தகங்களை மக்கள் திரும்ப திரும்ப படிப்பதால் ஒரே மாதிரியான எண்ணங்கள் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன. நாம் எல்லாம் ஒரே சமூகம் என்ற உணர்வு பிறந்தது.
Question 145
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) முதலாளித்துவமும் கற்பனை சமூகத்தை ஊக்கப்படுத்தியது.
  • (ii) முதலாளிகள் இலாபத்தை மனதில் வைத்து நூல்களை அச்சிட்டு அதிகம் விற்பனை செய்தார்கள்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 145 Explanation: 
முதலாளித்துவமும் கற்பனை சமூகத்தை ஊக்கப்படுத்தியது. முதலாளிகள் இலாபத்தை மனதில் வைத்து நூல்களை அச்சிட்டு அதிகம் விற்பனை செய்தார்கள். ஆகவே அச்சக முதலாளித்துவம் (அச்சகமும் முதலாளித்துவமும்) இணைந்து கற்பனை சமூகத்தை உருவாக்கி தேசியவாதத்தை வளர்த்தன.
Question 146
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மார்க்சியம் தேசியவாதத்தை புரட்சியின் குழந்தையாக கருதுகின்றது.
  • (ii) ஏழைகளை வளப்படுத்துவதற்காக தேசியவாதத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று இக்கோட்பாடு கூறுகின்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 146 Explanation: 
மார்க்சிய தேசியவாத கோட்பாடு: மார்க்சியம் தேசியவாதத்தை முதலாளித்துவத்தின் குழந்தையாக கருதுகின்றது. ஏழைகளை சுரண்டுவதற்காக பணக்காரர்கள் தேசியவாதத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று இக்கோட்பாடு கூறுகின்றது. முதலாளித்துவ வர்க்கம் தனியார் சொத்துக்களை கொண்டுள்ளதோடு ஏழைகளின் உழைப்பை சுரண்டுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தேசியவாதத்தை தொழிலாளி வர்க்கத்தின் உணர்ச்சிகளை ஊக்கப்படுத்தி தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியது. " தேசியவாத உணர்வு சுரண்டலை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கும் நீடிக்க வைப்பதற்கும் பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட உணர்வாகும்.
Question 147
"உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், புரட்சி செய்து புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள்" என்று தனது நூலில் குறிப்பிட்டவர்?
A
காரல் மார்க்ஸ்
B
மாவோ
C
ஸ்டாலின்
D
லெனின்
Question 147 Explanation: 
"பாட்டாளிகளுக்கு தந்தை நாடு இல்லை" என்று கூறினார். ஆகவேதான் கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ என்ற தனது நூலில் "உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், புரட்சி செய்து புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள்" என்று கூறினார்.
Question 148
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) காரல்மார்க்ஸ் தேசியவாதத்தை நிராகரித்தார், சர்வதேசியவாதத்தை  ஆதரித்தார்.
  • (ii) மைக்கல் எக்டர், டாம் நரின் ஆகியோரும் தேசியவாதத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 148 Explanation: 
காரல்மார்க்ஸ் தேசியவாதத்தை நிராகரித்தார். சர்வதேசியவாதத்தை ஆதரித்தார். மைக்கல் எக்டர், டாம் நரின் ஆகியோரும் தேசியவாதத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்தனர்.
Question 149
இந்திய தேசியவாதத்தை வளர்த்த காரணிகள் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 149 Explanation: 
இந்திய தேசியவாதம்: இந்திய தேசியவாதம் 19 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் தோன்றியது. மதம், மொழி, பகுதி, இன வேறுபாடுகளைக் கடந்து இந்தியர்கள் தேசிய உணர்வைப்பெற்றனர். இரண்டு வகையான காரணிகள் இந்திய தேசியவாதத்தை வளர்த்தன. அவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் ஆகும்.
Question 150
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இந்தியாவின் தனித்தன்மையை வேற்றுமையில் ஒற்றுமை என்று சிறப்பிப்பர்.
  • (ii) இந்தியாவில் அரசியல் ஒற்றுமை அரிதாகவே இருந்தது, ஆயினும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு அமைதியாக ஒன்றுபட்டு வாழ்ந்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 150 Explanation: 
இந்திய துணைக்கண்டம் பன்முகத்தன்மை கொண்டதாகும். மதம், பண்பாடு, மொழி, மரபு போன்றவற்றால் வெவ்வேறு விதமான மக்கள் வாழ்ந்தாலும் அவர்களை ஒரு பொது வரலாற்று அனுபவம் ஒன்றாக இணைக்கிறது. முன்னர் இந்தியாவில் அரசியல் ஒற்றுமை அரிதாகவே இருந்தது. ஆயினும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு அமைதியாக ஒன்றுபட்டு வாழ்ந்தனர். இந்தியாவின் இந்த தனித்தன்மையை வேற்றுமையில் ஒற்றுமை என்று சிறப்பிப்பர்.
Question 151
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வெளிக்காரணிகளை பொறுத்தமட்டில் ஆங்கிலேய காலனி ஆதிக்கம் தேசியவாதத்தை தட்டி எழுப்பியது.
  • (ii) முன்னர், இந்தியா நகரப் பொருளாதாரத்தைப் பின்பற்றியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 151 Explanation: 
வெளிக்காரணிகளை பொறுத்தமட்டில் ஆங்கிலேய காலனி ஆதிக்கம் தேசியவாதத்தை தட்டி எழுப்பியது.   காலனி ஆதிக்கம், அரசியல், நிர்வாக, பொருளாதார, தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை இந்தியாவில் உருவாக்கியது. அரசியலிலும், நிர்வாகத்திலும் ஏழுநூறுக்கும் மேற்பட்ட இந்திய அரசுகளை காலனியாதிக்கம் ஒருங்கிணைத்தது. முன்னர், இந்தியா கிராமப் பொருளாதாரத்தைப் பின்பற்றியது.
Question 152
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைக் கொண்டு வந்து  பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒருங்கிணைத்தது.
  • (ii) இரயில்கள், தந்தி, சீரான அஞ்சல் முறை ஆகியவைகளை அறிமுகப்படுத்தி தகவல் தொடர்புத் துறையில் இந்தியாவை ஒருங்கிணைத்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 152 Explanation: 
ஆங்கிலேயர் ஆட்சி நவீன பொருளாதாரத்தைக் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒருங்கிணைத்தது. இரயில்கள், தந்தி, சீரான அஞ்சல் முறை ஆகியவைகளை அறிமுகப்படுத்தி தகவல் தொடர்புத் துறையில் இந்தியாவை ஒருங்கிணைத்தது. ஆகவே தேசியவாதம் வளர்வதற்கான சூழல் தோன்றியது.
Question 153
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) காலனியாதிக்கம் மேற்கத்திய கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
  • (ii) நவீன அரசியல் கருத்துக்களான விடுதலை, சமத்துவம், இறையாண்மை போன்ற கருத்துக்களை அறிந்து கொண்டோம்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 153 Explanation: 
காலனியாதிக்கம் மேற்கத்திய கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. நாம் நவீன அரசியல் கருத்துக்களான விடுதலை, சமத்துவம், இறையாண்மை போன்ற கருத்துக்களை அறிந்து கொண்டோம். இந்திய தாய்திருநாடு இக்கருத்துக்களை பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Question 154
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கில மொழி இந்தியாவின் தொடர்பு மொழியாக காலனி ஆதிக்கத்தால் பயன்படுத்தப்பட்டது.
  • (ii) ஆங்கிலப் பயன்பாட்டால் தேசியவாதிகள் இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்து தேசியவாதத்தை வளர்த்தனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 154 Explanation: 
ஆங்கில மொழி இந்தியாவின் தொடர்பு மொழியாக காலனி ஆதிக்கத்தால் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மொழிகளை நாம் பேசுவதால் தொடர்பு கொள்வதில் சிரமம் இருந்தது. ஆங்கிலப் பயன்பாட்டால் தேசியவாதிகள் இந்தியா முழுவதையும் ஒருங்கிணைத்து தேசியவாதத்தை வளர்த்தனர்.
Question 155
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்வேறு சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின.
  • (ii) மகாராஷ்ட்ராவின் ‘பிரம்ம சமாஜமும்’ இராஜா ராம் மோகன்ராயின் “பிரார்த்தன சமாஜமும்” முக்கியமானவைகள் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 155 Explanation: 
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பல்வேறு சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இராஜா ராம் மோகன்ராயின் ‘பிரம்ம சமாஜமும்’ மகாராஷ்ட்ராவின் “பிரார்த்தன சமாஜமும்” முக்கியமானவைகள் ஆகும். இந்தியாவில் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்களை இவைகள் கொண்டுவந்தன. இந்திய சமுகத்தின் தீமைகளான சதி, சாதிமுறை மற்றும் தீண்டாமையை இவை எதிர்த்தன. பழங்கால இந்தியாவின் நல்ல தன்மைகளை மீண்டும் தழைக்க இவை வழிவகுத்தன.
Question 156
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இனவெறியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது.
  • (ii) ஆங்கிலேயர்களின் வெள்ளை மனிதனின் கடமை / சுமை என்ற கருத்து நிறவெறியைக் காட்டியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 156 Explanation: 
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இனவெறியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. ஆங்கிலேயர்களின் வெள்ளை மனிதனின் கடமை / சுமை என்ற கருத்து நிறவெறியைக் காட்டியது. வெள்ளையர்கள்தான் இந்த உலகில் வளர்ச்சியிலும் நாகரிகத்திலும் முன்னணியில் உள்ளவர்கள். இந்தியர்களுக்கு நாகரிகத்தை வழங்கவே வெள்ளையர்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று வெள்ளை மனிதனின் கடமை அல்லது சுமைக் கருத்துக் கூறியது. இதன் மூலம் வெள்ளையர்களின் நிறவெறி இந்தியர்களுக்குப் புரிந்தது. இதை எதிர்த்து இந்திய தேசியவாதம் வளர்ந்தது.
Question 157
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆங்கிலேய கவர்னர் ஜெனரலான ரிப்பன் பிரபுவின் தலைக்கன ஆட்சியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது.
  • (ii) இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் வாடியபோதிலும் நிவாரண முயற்சிகளை லிட்டன் மேற்கொள்ளவில்லை .
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 157 Explanation: 
ஆங்கிலேய கவர்னர் ஜெனரலான லிட்டன் பிரபுவின் தலைக்கன ஆட்சியும் இந்திய தேசியவாதத்தை வளர்த்தது. இவர், இந்திய பத்திரிக்கைகள் மீது தேவையற்ற தடைகளை விதித்தார். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆர்வம் காட்டினார். இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முட்டுகட்டைப் போட்டார். இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் வாடியபோதிலும் நிவாரண முயற்சிகளை அவர் மேற்கொள்ளவில்லை . ஆப்கானிஸ்தானுடன் தேவையில்லாமல் போர் தொடுத்ததால், பல ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் மாண்டு போயினர். இக்காரணிகளால் இந்திய தேசியவாதம் வளர்ந்தது.
Question 158
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ரிப்பன் பிரபு ஆட்சியில் இல்பர்ட் என்ற ஆட்சிக் குழுவின் சட்ட உறுப்பினர் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினர்.
  • (ii) ஐரோப்பியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்று இம் மசோதா கூறியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 158 Explanation: 
ரிப்பன் பிரபு ஒரு தலை சிறந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஆவார். அவரது ஆட்சியில் இல்பர்ட் என்ற ஆட்சிக் குழுவின் சட்ட உறுப்பினர் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினர். ஐரோப்பியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்று இம் மசோதா கூறியது. இனவெறி பிடித்த ஐரோப்பியர்கள் இந்திய நீதிபதிகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். இவர்களின் எதிர்ப்பால் ரிப்பன் பிரபுவும் இந்த மசோதாவை கைவிட்டார். இந்தியத்தலைவர்கள் இப்பிரச்சனையின் மூலம் ஐரோப்பியர்களின் இனவெறியை உணர்ந்தனர். மேலும் மக்கள் விரும்பாத அரசாங்க திட்டங்களை எதிர்ப்பதன் மூலமும், போராட்டங்கள் மூலமும் திரும்ப பெற வைக்கலாம் என்ற அரசியல் வித்தையை இந்திய தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
Question 159
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சமகாலத்தில் தேசியவாதம் பல்வேறு சவால்களை சந்திக்கிறது, சில சவால்கள் தேசத்திற்கு உள்ளேயும், சில சவால்கள் தேசத்திற்கு வெளியேயும் தோன்றுகின்றன.
  • (ii) இவைகளில் பிரிவினைவாதமும், உலகமயமாதலும் முக்கியமானவைகளாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 159 Explanation: 
தேசியத்திற்கு எதிரான சவால்கள்: சமகாலத்தில் தேசியவாதம் பல்வேறு சவால்களை சந்திக்கிறது. சில சவால்கள் தேசத்திற்கு உள்ளேயும், சில சவால்கள் தேசத்திற்கு வெளியேயும் தோன்றுகின்றன, செயல்படுகின்றன. இவைகளில் பிரிவினைவாதமும், உலகமயமாதலும் முக்கியமானவைகளாகும்.
Question 160
"போக்கிரிகளின் கடைசி புகலிடமே தேசியவாதம்" என்று கூறியவர் யார்?
A
டொனால்டு ரீகன்
B
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
C
வின்ஸ்டன் சர்ச்சில்
D
சின்ஜியாங்
Question 160 Explanation: 
போக்கிரிகளின் கடைசி புகலிடமே தேசியவாதம் - வின்ஸ்டன் சர்ச்சில்
Question 161
பொருத்துக:
  1. A) கனடா                  - 1) பலுச்சிஸ்தான்
  2. B) பாகிஸ்தான்     - 2) உய்கூர்
  3. C) சீனா                      - 3) ஸ்காட்டிஷ்
  4. D) ஸ்பெயின்          - 4) க்யூபெக்
  5. E) பிரிட்டன்             - 5) காலடான்
A
4 3 2 1 5
B
1 2 3 4 5
C
3 1 5 4 2
D
4 1 2 5 3
Question 161 Explanation: 
உள்நாட்டுக்காரணிகள்: பிரிவினைவாதம்: இன்று தேசியம் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பிரிவினைவாதம், துணை தேசியம், துண்டாகும் போக்கு ஆகியவை அத்தகைய சோதனைகளாகும். கனடாவின் க்யூபெக் பிரிவினைவாதம், பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் கோரிக்கை, சீனாவில் உய்கூர் பிரச்சனை, ஸ்பெயினில் காலடான் தேசியவாதம் பிரிட்டனில் ஸ்காட்டிஷ் பிரச்சனை போன்றவை அத்தகைய தேசியங்களை எதிர்நோக்கு உள்தேசியவாதங்களின் இன்றைய உதாரணங்களாகும்.
Question 162
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) மத அடிப்படைவாதம், அளவுகடந்த மையப்படுத்தலுக்கு எதிரான குரல்கள், வட்டார ஏற்றத்தாழ்வுகள், மக்களாட்சி முறைத்தீர்வுகளில் நம்பிக்கை இழக்கிறது.
  • (ii) மோதல் ஆகியவையும், தேசியவாதத்திற்கு பெரும் சோதனைகளாகவும் பிரிவினைவாதங்களை ஊக்குவிப்பவையாகவும் உள்ளது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 162 Explanation: 
மத அடிப்படைவாதம், அளவுகடந்த மையப்படுத்தலுக்கு எதிரான குரல்கள், வட்டார ஏற்றத்தாழ்வுகள், மக்களாட்சி முறைத்தீர்வுகளில் நம்பிக்கை இழக்கிறது மோதல் ஆகியவையும், தேசியவாதத்திற்கு பெரும் சோதனைகளாகவும் பிரிவினைவாதங்களை ஊக்குவிப்பவையாகவும் உள்ளது.
Question 163
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சின்ஜியாங் சீனாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும்.
  • (ii) சீன மொழியில் சின்ஜியாங் என்றால் பழைய எல்லை என்பது பொருளாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 163 Explanation: 
உய்கர் பிரிவினை வாதம்: சின்ஜியாங் சீனாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். சீன மொழியில் சின்ஜியாங் என்றால் புது எல்லை என்பது பொருளாகும். இங்கு வசிக்கும் பூர்வகுடி மக்கள் உய்கர் முஸ்லீம்கள் ஆவர். சீன அரசாங்கம் தங்களுக்கு எதிரான அரசியல் பொருளாதார பாகுபாட்டை பின்பற்றுவதாக இம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீன பெரும்பான்மை மக்களான ஹன்ஸ் இன மக்கள் உய்கர் மாநிலத்தில் குடியேறி வருகின்றனர். பூர்வகுடிகளின் அளவு குறைந்து வருகிறது.
Question 164
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சின்ஜியாங் மாநில மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த ஹன்ஸ் இன மக்கள் தற்போது 40 சதவீதமாக அதிகரித்துவிட்டனர்.
  • (ii) மத ரீதியாகவும் சீன அரசாங்கம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று பூர்வ குடிமக்கள் கூறுகின்றனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 164 Explanation: 
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) சின்ஜியாங் மாநில மக்கள் தொகையில் 6 சதவீதமாக இருந்த ஹன்ஸ் இன மக்கள் தற்போது 40 சதவீதமாக அதிகரித்துவிட்டனர். (ii) மத ரீதியாகவும் சீன அரசாங்கம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று பூர்வ குடிமக்கள் கூறுகின்றனர்.
Question 165
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உலகமயமாதல் ஒரு முக்கிய காரணியாகும். பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்புகளுக்கு உலகமயமாதல் என்பது பொருளாகும்.
  • (ii) பல வெளிநாட்டு காரணிகளும் தேசியத்திற்கு எதிராக உள்ளன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 165 Explanation: 
வெளிநாட்டுக்காரணிகள்: பல வெளிநாட்டு காரணிகளும் தேசியத்திற்கு எதிராக உள்ளன. உலகமயமாதல் ஒரு முக்கிய காரணியாகும். பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்புகளுக்கு உலகமயமாதல் என்பது பொருளாகும்.
Question 166
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உலகமயமாதல் நாடுகளுக்கு இடையிலான தடைகளை உடைத்து வருகிறது.
  • (ii) பொருளாதார ரீதியாக பெரிய தொழில் நிறுவனங்கள் நாடுகளை கடந்து செயல்படுகின்றன, செல்வாக்கை பெற்றுள்ளன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 166 Explanation: 
உலகமயமாதல் நாடுகளுக்கு இடையிலான தடைகளை உடைத்து வருகிறது. பொருளாதார ரீதியாக பெரிய தொழில் நிறுவனங்கள் நாடுகளை கடந்து செயல்படுகின்றன, செல்வாக்கை பெற்றுள்ளன.
Question 167
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உலக வர்த்தக நிறுவனம் உலகமயமாதலை வளர்க்கிறது.
  • (ii) 'தடைகள் இல்லா வர்த்தகம்' என்பது இதன் இலட்சியமாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 167 Explanation: 
உலகமயமாதல்: உலக வர்த்தக நிறுவனம் உலகமயமாதலை வளர்க்கிறது. 'தடைகள் இல்லா வர்த்தகம்' என்பது இதன் இலட்சியமாகும். இது பல்வேறு ஒப்பந்தங்களை 1995 முதல் உருவாக்கி சர்வதேச வர்த்தகத்தில் இருந்த தடைகளை நீக்கியுள்ளது. வர்த்தக தடைகள் தான் முன்பு தேசியவாதம் வேர்களாக இருந்தன.
Question 168
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சர்வதேச மண்டல அமைப்புகளும் தேசியவாதத்தை பாதித்துள்ளன.
  • (ii) இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 168 Explanation: 
உலகம் முழுவதும் படித்த திறமையான மக்கள் நாடு விட்டு நாடு குடிபெயர்ந்துள்ளனர். முக்கியமாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் குடிபெயர்ந்துள்ளனர். சர்வதேச மண்டல அமைப்புகளும் தேசியவாதத்தை பாதித்துள்ளன.
Question 169
ஐரோப்பிய யூனியன் எத்தனை ஐரோப்பிய நாடுகளை  ஒன்றிணைத்துள்ளது?
A
28
B
27
C
25
D
23
Question 169 Explanation: 
ஐரோப்பிய யூனியன் 27 ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்துள்ளது.இந்த நாடுகளின் தேசியவாதம் வலுவிழந்துள்ளது.ஐரோப்பிய கண்டம் தேசியவாதத்தின் தொட்டில் என்ற நிலையில் இருந்து உலகளாவியத்தின் ஒளிவிளக்கு என்று மாறியுள்ளது.
Question 170
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஐக்கிய நாடுகளின் வளர்ச்சியும் தேசியவாதம் பிடிப்பை தளர்த்தியுள்ளது.
  • (ii) தூய இசுலாம் என்ற முழக்கத்துடன் இஸ்லாமிய அரசு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் கலீபா முறையை 2014 இல் கொண்டு வந்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 170 Explanation: 
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சியும் தேசியவாதம் பிடிப்பை தளர்த்தியுள்ளது. தேசியவாதம் மறைந்து உலக அரசாங்கம் தோன்றுவதற்கு தற்பொழுது வாய்ப்புகள் பெருகியுள்ளது. தீவிரவாதக்கொள்கைகள் தேசியவாதத்தை பலவீனப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, தூய இசுலாம் என்ற முழக்கத்துடன் இஸ்லாமிய அரசு சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் கலீபா முறையை 2014 இல் கொண்டு வந்தது. தேசியவாதத்தை அது நிராகரித்தது. இஸ்லாமிய மக்கள் அனைவரும் கலீஃபா ஆட்சிமுறையில் இருக்க வேண்டும் என்று கூறியது.
Question 171
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தேசியவாதத்தை பாதிக்கின்றன.
  • (ii) தகவல் தொடர்பும், தொழில் நுட்பமும் தேசியவாதத்தை பாதித்துள்ளன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 171 Explanation: 
சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தேசியவாதத்தை பாதிக்கின்றன. பருவநிலை மாற்றம், அமிலமழை, ஓசோன் அழித்தல் போன்ற சீர்கேடுகள் நாடுகளை கடந்து பாதிப்புகளை உருவாக்குகின்றன. உலக சுற்றுச்சூழலை பாதுகாப்பது உலக மக்களின் கடமையாகும். எனவேதான் பல உலக மாநாடுகள் நடத்தப்பட்டன. தகவல் தொடர்பும், தொழில் நுட்பமும் தேசியவாதத்தை பாதித்துள்ளன. வலைதளம், அலைபேசி, சமூக ஊடகங்கள் பல சமயங்களில் தேசியவாதத்தை பாதிக்கின்றன. உலக மயமாதலை ஊக்குவிக்கின்றன.
Question 172
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) சர்வதேச நடவடிக்கைகளை இன்றைக்கும் தேசியமும், தேச நலன்களும் தீர்மானிக்கின்றன.
  • (ii) ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் இதற்கு சான்றுகளாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 172 Explanation: 
இருந்தபோதிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தேசியவாதம் வலுவாக உள்ளது. தேசியவாதம் மறையும் காலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இல்லை. சர்வதேச நடவடிக்கைகளை இன்றைக்கும் தேசியமும், தேச நலன்களும் தீர்மானிக்கின்றன. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் இதற்கு சான்றுகளாகும்.
Question 173
பாசிசம் என்ற சர்வாதிகார கட்சி, இயக்கம் மற்றும் கொள்கையை தோற்றுவித்தவர்?
A
ஹிட்லர்
B
முசோலினி
C
ஸ்டாலின்
D
லெனின்
Question 173 Explanation: 
பாசிசம்: பெனிடோ முசோலினி பாசிசம் என்ற சர்வாதிகார கட்சி, இயக்கம் மற்றும் கொள்கையை தோற்றுவித்தார். பாசிசம் மூலம் இத்தாலியை 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆட்சி செய்தார்.
Question 174
எந்த மொழியில் பாசி என்றால் தண்டுகளின் மூட்டை என்று பொருள்?
A
ஜெர்மன்
B
இத்தாலி
C
பிரெஞ்சு
D
ரஷ்யா
Question 174 Explanation: 
இத்தாலி மொழியில் பாசி என்றால் தண்டுகளின் மூட்டை என்று பொருள். அந்நாட்டின் பண்டைய கால வரலாற்றில் ரோமானிய ஆட்சியாளர்களின் சின்னமாக பாசி இருந்தது.
Question 175
பின்வருவனவற்றுள் தண்டுகளின் மூட்டை எதனை  குறிக்கிறது?
A
ஒற்றுமை
B
வலிமை
C
வளமை
D
a) மற்றும் b)
Question 175 Explanation: 
தண்டுகளின் மூட்டை ஒற்றுமை மற்றும் வலிமையை குறிக்கிறது. முசோலினி தனது தொண்டர்களின் வலிமையை தட்டி எழுப்புவதற்காக தனது கட்சிக்கு இப்பெயரை வைத்தார்.
Question 176
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) உலகப்போருக்கு பின் இத்தாலியில் நிலவிய சமூக பொருளாதார பிரச்சனைகள் தான் பாசிசம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
  • (ii) வேலை இல்லாமை, விலை உயர்வு, அரசியல் குழப்பங்கள் மற்றும் பொருளாதாரப்பின்னடைவு ஆகிய பிரச்சனைகளில் இத்தாலி சிக்கி இருந்தது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 176 Explanation: 
உலகப்போருக்கு பின் இத்தாலியில் நிலவிய சமூக பொருளாதார பிரச்சனைகள் தான் பாசிசம் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. முதல் உலக போரின் முடிவில் வெற்றி பெற்ற கூட்டணியில் இத்தாலி இருந்தபோதிலும் எந்த வித பலனும் அதற்கு கிட்டவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. வேலை இல்லாமை, விலை உயர்வு, அரசியல் குழப்பங்கள் மற்றும் பொருளாதாரப்பின்னடைவு ஆகிய பிரச்சனைகளில் இத்தாலி சிக்கி இருந்தது.
Question 177
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இத்தாலியின் எல்லா வகைப்பிரிவினரும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • (ii) பெனிடோ முசோலினி தனது பேச்சாற்றலால் பாதிக்கப்பட்ட மக்களை பாசிச கட்சிக்கு இழுத்தார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 177 Explanation: 
இத்தாலியின் எல்லா வகைப்பிரிவினரும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெனிடோ முசோலினி தனது பேச்சாற்றலால் பாதிக்கப்பட்ட மக்களை பாசிச கட்சிக்கு இழுத்தார்.
Question 178
1922 ஆம் ஆண்டு தலை நகரில் "ரோம் அணிவகுப்பு" என்பதை நடத்தியவர் யார்?
A
ஹிட்லர்
B
முசோலினி
C
ஸ்டாலின்
D
லெனின்
Question 178 Explanation: 
முசோலினி 1922 ஆம் ஆண்டு தலை நகரில் "ரோம் அணிவகுப்பு" என்பதை நடத்தினார். முசோலியின் செல்வாக்கை கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் தேசிய பாசிச கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
Question 179
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிசம் தீவிர தேசியவாதத்தை வலியுறுத்தியது.
  • (ii) இத்தாலி தான் உலகில் தலை சிறந்த நாடு என கூறியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 179 Explanation: 
அடிப்படை கொள்கைத்தன்மைகள்: பாசிசம் தீவிர தேசியவாதத்தை வலியுறுத்தியது. இத்தாலி தான் உலகில் தலை சிறந்த நாடு என கூறியது. இதர நாடுகள் மற்றும் மக்களிடம் பாசிசம் வெறுப்பைக்காட்டியது.
Question 180
இத்தாலி மேற்கொண்ட காலனியாதிக்க நடவடிக்கைகள் எந்த நாட்டை  பாதித்தன?
A
ஆப்பிரிக்கா
B
அமெரிக்கா
C
ஸ்பெயின்
D
ஜெர்மனி
Question 180 Explanation: 
கொள்கையிலும் நடவடிக்கையிலும் பாசிசம் ஏகாதிபத்தியத்தை பின்பற்றியது. அது மேற்கொண்ட காலனியாதிக்க நடவடிக்கைகள் ஆப்பிரிக்காவை பாதித்தன. இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தன.
Question 181
"பாசிச கொள்கை " என்ற நூலை எழுதியவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 181 Explanation: 
ஜேவானி ஜேன்டிலா என்ற பாசிச கொள்கைவாதி "பாசிச கொள்கை " என்ற நூலை எழுதினார். பாசிச அரசு என்றால் அதிகாரத்தையும் பேரரசையும் விரும்பும் கொள்கை என்று கூறினார். பேரரசு என்றால் நிலம், இராணுவம், அல்லது வர்த்தகம் சம்பந்தப்பட்டது அல்ல. அது தார்மீகம் சம்மந்தப்பட்டது. பாசிச பேரரசு உலக நாடுகளை வெல்ல வேண்டும். பாசிச அரசு இத்தாலியின் வரலாற்றில் மூன்றாவது ரோமப்பேரரசு ஆகும்.
Question 182
“பெண்ணுக்குத் தாய்மை முக்கியம் ஆணுக்குப் போர் முக்கியம்” என்று கூறியவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 182 Explanation: 
பாசிசம் போரையும், போர் குணத்தையும் தீவிரமாக பாராட்டியது. “பெண்ணுக்குத் தாய்மை முக்கியம் ஆணுக்குப் போர் முக்கியம்” என்று முசோலினி கூறினார்.
Question 183
பெண்களை ‘தேசத்தின் இனப்பெருக்காளர்கள்’ என்று பாராட்டியது எது?
A
முசோலினி
B
பாசிசம்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 183 Explanation: 
பாசிசம் அமைதியை கோழைத்தனம் என்று வர்ணித்தது. பெண்களை ‘தேசத்தின் இனப்பெருக்காளர்கள்’ என்று பாராட்டியது.
Question 184
“அரசுக்கு உள்ளே எல்லாம், அரசுக்கு வெளியே எதுவுமில்லை, அரசுக்கு எதிராக எதுவும் இல்லை“ என்பது யாருடைய  முழக்கமாகும்?
A
முசோலினி
B
பாசிசம்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 184 Explanation: 
பாசிசம் குறைவான அதிகார அரசை நிராகரித்தது. ஆர்வத்துடன் சர்வதிகாரத்தையும் கொடுங்கோல் ஆட்சியையும் ஆதரித்தது. “அரசுக்கு உள்ளே எல்லாம், அரசுக்கு வெளியே எதுவுமில்லை, அரசுக்கு எதிராக எதுவும் இல்லை“ என்பது முசோலினியின் முழக்கமாகும்.
Question 185
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இத்தாலியை உலக வல்லரசாக மாற்றுவதற்கும் மக்களைதைரியமானவர்களாக ஆக்குவதற்கும் பாசிசம் முயன்றது.
  • (ii) குடிமக்களின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை அரசு நிர்ணயித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 185 Explanation: 
புதிய சமூகத்தை படைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்களின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை அரசு நிர்ணயித்தது. இத்தாலியை உலக வல்லரசாக மாற்றுவதற்கும் மக்களை தைரியமானவர்களாக ஆக்குவதற்கும் பாசிசம் முயன்றது.
Question 186
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பொதுவுடைமைவாதத்தை ஜென்ம விரோதியாக பாசிசம் ஒடுக்கியது.
  • (ii) இத்தாலியின் பொதுவுடைமைவாதத்தின் சிந்தனையாளரான புக்காரின்  பாசிசத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 186 Explanation: 
பொதுவுடைமைவாதத்தை ஜென்ம விரோதியாக பாசிசம் ஒடுக்கியது. இத்தாலியின் பொதுவுடைமைவாதத்தின் சிந்தனையாளரான அண்டனியோ கிராம்சி பாசிசத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.
Question 187
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிசம் பொதுவுடைமைவாதத்தின் கட்சி, நூல்கள் ஆகியவற்றைத் தடை செய்தது.
  • (ii) சமூகம் ஒற்றுமையாகத்தான் உள்ளது என பாசிசம் கூறியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 187 Explanation: 
பாசிசம் பொதுவுடைமைவாதத்தின் கட்சி, நூல்கள் ஆகியவற்றைத் தடை செய்தது. பொதுவுடைமைவாத அரசு, சமூக வர்க்கம், புரட்சி போன்ற கருத்துக்களை பாசிசம் நிராகரித்தது. சமூகம் வர்க்கங்களால் பொதுவுடைமைவாதம் கூறியது போல் பிளவுபடவில்லை. சமூகம் ஒற்றுமையாகத்தான் உள்ளது என பாசிசம் கூறியது.
Question 188
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிச கொள்கை, மக்களாட்சி, சமதர்மவாதம் மற்றும் பொதுவுடைமைவாதத்திற்கு எதிராக தோன்றியது.
  • (ii) மக்களாட்சியும், சமதர்மவாதமும் நவீன காலத்தின் முற்போக்கு சிந்தனையை பிரதிபலித்தன
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 188 Explanation: 
பாசிச கொள்கை, மக்களாட்சி, சமதர்மவாதம் மற்றும் பொதுவுடைமைவாதத்திற்கு எதிராக தோன்றியது. மக்களாட்சியும், சமதர்மவாதமும் நவீன காலத்தின் முற்போக்கு சிந்தனையை பிரதிபலித்தன. பாசிசம் இதற்கு எதிராக செயல்பட்டது.
Question 189
'பாசிசம் தொழில்சார் அரசு கொள்கை என்று அழைக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களும் அரசின் அதிகாரமும் பாசிசத்தில் இணைந்துள்ளன', என்று கூறியவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 189 Explanation: 
பாசிசம் தொழில்சார் அரசு கொள்கை என்று அழைக்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களும் அரசின் அதிகாரமும் பாசிசத்தில் இணைந்துள்ளன. -பெனிடோ முசோலினி
Question 190
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிசம் தொழில்சார் அரசு கோட்பாட்டை ஆதரித்தது.
  • (ii) ஒவ்வொறு தொழிலும், வர்த்தகமும், வேலையும் தொழில் சார்ந்த அமைப்பை பெற்றிக்க வேண்டும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 190 Explanation: 
பாசிசம் தொழில்சார் அரசு கோட்பாட்டை ஆதரித்தது. ஒவ்வொறு தொழிலும், வர்த்தகமும், வேலையும் தொழில் சார்ந்த அமைப்பை பெற்றிக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முதாலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை அந்தந்ததொழில் அமைப்புகள் தீர்க்க வேண்டும். தேசத்தின் நலன்களுக்கும், நோக்கங்களுக்கும் எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
Question 191
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிச அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகவும் குறைவாக நிர்ணயித்தது.
  • (ii) பாசிச பொருளாதாரத்தின் முதுகெலும்பான தொழில்சார் அரசு தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 191 Explanation: 
தொழிலாளர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது. பாசிச அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மிகவும் குறைவாக நிர்ணயித்தது. தொழில்சார் நிறுவனங்கள் ஊழல் மற்றும் திறமையின்மையால் பாதிக்கப்பட்டன. பாசிச பொருளாதாரத்தின் முதுகெலும்பான தொழில்சார் அரசு தொழிலாளர்களின் உரிமைகளை மிதித்தது.
Question 192
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பாசிசம் சந்தர்ப்பவாதத்தை பின்பற்றியது.
  • (ii) பாசிசமும், நாசிசமும் மனித குலத்தின் மீது அளவற்ற அழிவை இரண்டாம் உலகப் போரில் திணித்தன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 192 Explanation: 
விமர்சனம் பாசிசம் மனித வரலாற்றில் வந்த மிக மோசமான சர்வாதிகாரம் ஆகும். அது சந்தர்ப்பவாதத்தை பின்பற்றியது. அறிவு ரீதியாக நேர்மை இல்லாமல் இருந்தது. பாசிசமும், நாசிசமும் மனித குலத்தின் மீது அளவற்ற அழிவை இரண்டாம் உலகப் போரில் திணித்தன. நாசிசத்தை விட பாசிசம் கொள்கை ரீதியாக வலுவாக இருந்ததால் 21-ஆம் நூற்றாண்டிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் அரசுகளையும் விமர்சிப்பதற்கு பாசிசம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
Question 193
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) அடால்ஃப் ஹிட்லர் நாசிசம் என்ற சர்வாதிகார கொள்கையைத் தோற்றுவித்தார்.
  • (ii) நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ பெயர் ‘தேசிய சமதர்ம ஜெர்மானிய தொழிலாளர்கள் கட்சி’ என்பதாகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 193 Explanation: 
நாசிசம் அடால்ஃப் ஹிட்லர் நாசிசம் என்ற சர்வாதிகார கொள்கையைத் தோற்றுவித்தார். ஜெர்மனி நாட்டை இரண்டு உலகபோர்களுக்கு இடையில் நாசிசம் மூலமாக ஹிட்லர் ஆட்சி செய்தார். நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ பெயர் ‘தேசிய சமதர்ம ஜெர்மானிய தொழிலாளர்கள் கட்சி’ என்பதாகும்.
Question 194
25 அம்சத்திட்டத்தினைக்கொண்டு வந்தவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 194 Explanation: 
1920ஆம் ஆண்டு தீவிர 25 அம்சத் திட்டதின் மூலமாக நாசி கட்சியை ஹிட்லர் தோற்றுவித்தார். பெரிய தொழிற்சாலைகளை தேசியமயமாக்குதல், போர்க்கால இலாபங்களைப் பறித்தல், கந்துவட்டியிலிருந்து மக்களை விடுவித்தல் போன்ற திட்டங்களை நாசிசக்கட்சி ஆதரித்தது.
Question 195
‘ஒவ்வொரு வயிறுக்கும் உணவு, ஒவ்வொரு உடலுக்கும் ஆடை, ஒவ்வொரு கைக்கும் வேலை, எல்லோருக்கும் எல்லாம்’ என்பது யாருடைய  அணுகுமுறையாக இருந்தது?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 195 Explanation: 
தனது பேச்சாற்றல் மூலம் ஜெர்மனியின் அனைத்து வகுப்பினரையும் நாசிக் கொள்கைகளுக்கு ஹிட்லர் கவர்ந்திழுத்தார். ‘ஒவ்வொரு வயிறுக்கும் உணவு, ஒவ்வொரு உடலுக்கும் ஆடை, ஒவ்வொரு கைக்கும் வேலை, எல்லோருக்கும் எல்லாம்’ என்பது ஹிட்லரின் அணுகுமுறையாக இருந்தது.
Question 196
ஹிட்லர் எந்த ஆண்டு பதவிக்கு வந்தார்?
A
1924
B
1933
C
1937
D
1939
Question 196 Explanation: 
இரத்தம் சிந்தாமல் அரசியல் சாசன, நாடாளுமன்ற வழிமுறைகளைத் தந்திரமாகப் பயன்படுத்தி 1933-ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வந்தார்.
Question 197
வெர்செயில்ஸ் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப் பட்டது?
A
1919
B
1933
C
1937
D
1939
Question 197 Explanation: 
தோற்றத்தின் காரணம் ஜெர்மனியில் நாசிசத்தின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக முதலாம் உலகப் போருக்குப் பின் பாரிஸ் நகரத்தில் கையெழுத்திடப்பட்ட ‘1919 வெர்செயில்ஸ் ஒப்பந்தம்’ இருந்தது.
Question 198
அரசு பூமியில் கடவுளின் அணிவகுப்பு’ என்ற முழக்கத்தை உருவாக்கியவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 198 Explanation: 
அடிப்படைத் தன்மைகள் நாசிசம் கொடுங்கோல் ஆட்சியை ஆதரித்தது. ஜெர்மானிய சிந்தனையாளரான பிரெட்ரிக் ஹெகல் என்பவர் உருவாக்கியமுழக்கமான ‘அரசு பூமியில் கடவுளின் அணிவகுப்பு’ என்பது நாசிசத்தின் ஆணிவேராக இருந்தது. அரசிற்கு மக்கள் முழுமையாக அடிபணிய வேண்டும் என்றும் நாசிசம் வலியுறுத்தியது.
Question 199
'போர்தான் வாழ்க்கை, போர்தான் எல்லாவற்றின் தொடக்கம்’ என்று கூறியவர் யார்?
A
முசோலினி
B
ஹிட்லர்
C
ஜேவானி ஜேன்டிலா
D
பிரெட்ரிக் ஹெகல்
Question 199 Explanation: 
நாசிசம் போர்க்குணமுள்ள கொள்கையாகும். ஹிட்லர், ‘போர் நிரந்தரமானது, போர் உலகளாவியலானது, போர்தான் வாழ்க்கை, போர்தான் எல்லாவற்றின் தொடக்கம்’ என்று சூளுரைத்தார். நாசிசத்தின் இந்த போர்க்குணம் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.
Question 200
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஹிட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அரசியல், பொருளாதார, இராணுவ அவமானங்களை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி மக்களைக் கவர்ந்தார்.
  • (ii) அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘உனது போராட்டம்’ ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 200 Explanation: 
ஹிட்லர் ஜெர்மனிக்கு இழைக்கப்பட்ட அரசியல், பொருளாதார, இராணுவ அவமானங்களை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி மக்களைக் கவர்ந்தார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘எனது போராட்டம்’ (மெயின் கேம்ப்) ஆகும்.
Question 201
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நாசிசத்தின் மிக முக்கியமான, பிரச்சனைக்குரிய நம்பிக்கை அதனுடைய இனவெறிக் கொள்கையாகும்.
  • (ii)  ஆரிய இனத்தை உலகின் முதல் இனமாக, மனித குலத்தின் முதலாளியாக அது கருதியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 201 Explanation: 
நாசிசத்தின் மிக முக்கியமான, பிரச்சனைக்குரிய நம்பிக்கை அதனுடைய இனவெறிக் கொள்கையாகும். அது ஆரிய இன மேன்மையையும் தூய்மையையும் வலியுறுத்தியது. ஆரிய இனத்தை உலகின் முதல் இனமாக, மனித குலத்தின் முதலாளியாக அது கருதியது.
Question 202
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஆரிய மக்களுக்கும் இதர இன மக்களுக்கும் இடையிலான திருமணங்களை அது தடை செய்தது.
  • (ii)  ஜெர்மானிய தேசத்தின் தோல்விக்கு யூதர்கள் தான் காரணம் என்று நாசிசம் கூறியது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 202 Explanation: 
ஆரிய மக்களுக்கும் இதர இன மக்களுக்கும் இடையிலான திருமணங்களை அது தடை செய்தது. நாசிசம் யூதர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. ஜெர்மானிய தேசத்தின் தோல்விக்கு யூதர்கள் தான் காரணம் என்று நாசிசம் கூறியது.
Question 203
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) ஜெர்மனிய மக்களின் குருதியை உறிஞ்சி யூதர்கள் வாழ்வதாக அவர்களை வெறுத்தது.
  • (ii)  சித்திரவதை முகாம்களில் அனுப்பப்பட்டு இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 203 Explanation: 
ஜெர்மனிய மக்களின் குருதியை உறிஞ்சி யூதர்கள் வாழ்வதாக அவர்களை வெறுத்தது. சித்திரவதை முகாம்களில் அனுப்பப்பட்டு இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதனை யூத மக்களின் பேரழிவு என்று யூத மக்கள் அனுசரிக்கிறார்கள்.
Question 204
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நாசிசம் ஜெர்மனியின் எல்லைகளை பரப்ப விரும்பியது.
  • (ii) இங்கிலாந்தை விட மிகப்பெரிய காலனி ஆதிக்க சக்தியாக ஜெர்மனி வரவேண்டும் என்று நாசிசம் முயன்றது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 204 Explanation: 
நாசிசம் ஜெர்மனியின் எல்லைகளை பரப்ப விரும்பியது. இதர நாடுகளை ஜெர்மனியின் காலணிகளாக அடிமையாக்க முயற்சித்தது. ஜெர்மனியின் மக்களை காலனி நாடுகளில் குடியேற்ற முயற்சித்தது. இங்கிலாந்தை விட மிகப்பெரிய காலனி ஆதிக்க சக்தியாக ஜெர்மனி வரவேண்டும் என்று நாசிசம் முயன்றது.
Question 205
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நாசிசம் இதர கொள்கைகளான பொதுவுடைமைவாதம், தாராளவாதம், மற்றும் சர்வதேசவாதம் ஆகியவற்றை வெறுத்தது.
  • (ii)  இவைகளை பின்பற்றும் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் பிற தேசங்களையும் அது எதிர்த்தது.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 205 Explanation: 
நாசிசம் இதர கொள்கைகளான பொதுவுடைமைவாதம், தாராளவாதம், மற்றும் சர்வதேசவாதம் ஆகியவற்றை வெறுத்தது. இவைகளை பின்பற்றும் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் பிற தேசங்களையும் அது எதிர்த்தது.
Question 206
ஆரிய இனத்தின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக எந்த ஆண்டு நுரம்பர்க் சட்டங்களை நாசிசம் தோற்றுவித்தது?
A
1924
B
1934
C
1937
D
1939
Question 206 Explanation: 
ஜெர்மனிக்கு அருகில் வசிக்கக்கூடிய ஸ்லாவ் மற்றும் யூத இனங்களை அது வெறுத்தது. ஆரிய இனத்தின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக 1934-ஆம் ஆண்டு நுரம்பர்க் சட்டங்களை நாசிசம் தோற்றுவித்தது.
Question 207
தலைவர் நாடு என்றழைக்கப்பட்ட நாடு எது?
A
இத்தாலி
B
ஜெர்மனி
C
பிரான்சு
D
ரஷ்யா
Question 207 Explanation: 
நாசிசம் நாயகன் வழிபாட்டை ஆதரித்தது. 'ஹிட்லர்தான் ஜெர்மனி, ஜெர்மனிதான் ஹிட்லர்' என்ற கருத்தை மக்களிடையே திணித்தது. மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை அது நிராகரித்தது. ஹிட்லர் ஜெர்மானிய மொழியில் fuehrer அதாவது தலைவர் என்று அழைக்கப்பட்டார். ஜெர்மனி நாடே தலைவர் நாடு என்று அழைக்கப்பட்டது.
Question 208
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) நாசிசம் பகுத்தறிவு வாதத்தை கடுமையாக எதிர்த்தது.
  • (ii)  நாசி கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒடுக்கப்பட்டன.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 208 Explanation: 
நாசிசம் பகுத்தறிவு வாதத்தை கடுமையாக எதிர்த்தது. மக்களுடைய உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. ஒரு கட்சி ஆட்சிமுறையை அது ஆதரித்தது. நாசி கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒடுக்கப்பட்டன. நாசிசக்கட்சியின் அமைப்பு படிநிலைக்கோட்பாட்டின்படி உருவாக்கப்பட்டது. கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் ஹிட்லரிடமே குவிக்கப்பட்டன.
Question 209
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வியும் ஹிட்லரின் தற்கொலையும் நாசிச கொள்கையையும் கட்சியையும் கலைத்தன.
  • (ii) இரண்டாம் உலகப்போருக்கு பின் மக்களாட்சியும், கட்சிப்போட்டிகள் முறையும் ஜெர்மனியில் வேரூன்றியதால் நாசிசம் மீண்டும் வளரவில்லை.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 209 Explanation: 
சுருக்கமாக கூறின் நாசிசம் சர்வாதிகார, இனவாத, பகுத்தறிவிற்கு எதிரான கொள்கையாகும். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வியும் ஹிட்லரின் தற்கொலையும் நாசிச கொள்கையையும் கட்சியையும் கலைத்தன. இரண்டாம் உலகப்போருக்கு பின் மக்களாட்சியும், கட்சிப்போட்டிகள் முறையும் ஜெர்மனியில் வேரூன்றியதால் நாசிசம் மீண்டும் வளரவில்லை.
Question 210
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) எதிர்மறைத்தாராளவாதம் மனிதனை பகுத்தறிவு உள்ள திறமையான சுதந்திரமான தன்மைகளை உடையவன் என்று கூறுகிறது.
  •  (ii) மனிதனின் வாழ்க்கையில் தலையிடுவதற்கு அரசிற்கோ சமூகத்திற்கோ அதிகாரம் இல்லை என்று கூறுகிறது
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 210 Explanation: 
எதிர்மறைத்தாராளவாதத்தின் சாரம்: எதிர்மறைத்தாராளவாதம் மனிதனை பகுத்தறிவு உள்ள திறமையான சுதந்திரமான தன்மைகளை உடையவன் என்று கூறுகிறது.எல்லா மனிதர்களும் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் தனது தேவையை அறிந்திருக்கிறான்.சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பு ஆகும். மனிதனின் வாழ்க்கையில் தலையிடுவதற்கு அரசிற்கோ சமூகத்திற்கோ அதிகாரம் இல்லை.
Question 211
”நான் உங்களுக்கு உறுதி மொழியளிக்கிறேன், எனக்கும் உறுதி மொழியளிக்கிறேன், அமெரிக்க மக்களின் புதிய ஒப்பந்தத்தின் பேரில்”. என்று கூறியவர் யார்?
A
ஜே.எம்.கீன்
B
ஹரால்டு லஸ்கி
C
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
D
எல்.டி.ஹார்டு ஹவுஸ்
Question 211 Explanation: 
”நான் உங்களுக்கு உறுதி மொழியளிக்கிறேன், எனக்கும் உறுதி மொழியளிக்கிறேன், அமெரிக்க மக்களின் புதிய ஒப்பந்தத்தின் பேரில்”. – பிராங்கிளின் ரூஸ்வெல்ட்.
Question 212
அமெரிக்காவில் சமகாலத்திய தாராளவாதத்தை கொண்டு வந்தவர் யார்?
A
ஜே.எம்.கீன்
B
ஹரால்டு லஸ்கி
C
ரொனால்டு ரீகன்
D
எல்.டி.ஹார்டு ஹவுஸ்
Question 212 Explanation: 
அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக இருந்த ரொனால்டு ரீகன் அந்நாட்டில் சமகாலத்திய தாராளவாதத்தை கொண்டு வந்தார்.
Question 213
"சமூகம் என்று ஒன்று கிடையாது. தனி ஆண்கள், பெண்கள், குடும்பங்கள் மட்டுமே உள்ளன" என்று கூறியவர் யார்?
A
ஜே.எம்.கீன்
B
ஹரால்டு லஸ்கி
C
மார்கரெட் தாட்சர்
D
எல்.டி.ஹார்டு ஹவுஸ்
Question 213 Explanation: 
சமூகம் என்று ஒன்று கிடையாது. தனி ஆண்கள், பெண்கள், குடும்பங்கள் மட்டுமே உள்ளன. - மார்கரெட் தாட்சர்
Question 214
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  •  (i) பழைய எதிர்மறை தாராளவாத கொள்கையை 20 ஆம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் அமல்படுத்துகிறது.
  •  (ii) தனிப்பட்ட சுயாட்சி கருத்து தாராளவாதத்தின் முக்கிய சிந்தனை ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 214 Explanation: 
சமகால தாராளவாத கொள்கை: பழைய எதிர்மறை தாராளவாத கொள்கையை 20 ஆம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் அமல்படுத்துகிறது. தனி மனிதனின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் இது ஆதரிக்கிறது. தனிப்பட்ட சுயாட்சி கருத்து தாராளவாதத்தின் முக்கிய சிந்தனை ஆகும். இதன்படி ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் விரும்பியதை செய்யும் விடுதலை உரிமையை பெற்றிருக்க வேண்டும்.
Question 215
மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவைகள் மூலம் சோவியத் ரஷ்யாவில் சமகால தாராள வாதத்தை அமல்படுத்தியவர் யார்?
A
மைக்கேல் கோர்பசேவ்
B
நிக்கோலே பெட்ரோவிக்
C
ரொனால்டு ரீகன்
D
சாமுவேல் ஹென்சன்
Question 215 Explanation: 
சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபரான மைக்கேல் கோர்பசேவ் மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவைகள் மூலம் சோவியத் ரஷ்யாவில் சமகால தாராள வாதத்தை அமல்படுத்தினார்.
Question 216
பிளாட்டோவை வெளிப்படையான சமூகத்தின் முதல் எதிரி என்று "open society and its  enemies" என்ற தனது நூலில் விமர்சித்தவர் யார்?
A
எம்.ஓக்.சாட்
B
ஆல்பெர்ட் ஜே .நாக்
C
காரல் பாப்பர்
D
பிளாட்டோ
Question 216 Explanation: 
காரல் பாப்பர் பிளாட்டோவை வெளிப்படையான சமூகத்தின் முதல் எதிரி என்று "open society and its enemies" என்ற தனது நூலில் விமர்சித்தார்.
Question 217
"கொள்கையின் முடிவு" என்ற நூலை எழுதியவர் யார்?
A
எம்.ஓக்.சாட்
B
மார்ட்டின் லிப்செட்
C
டேனியல் பெல்
D
காரல் பாப்பர்
Question 217 Explanation: 
கொள்கையின் முடிவு: சில அரசியல் சிந்தனையாளர்களும், சமூகவியலாளர்களும் 1950 களில் கொள்கையின் முடிவு என்ற கருத்தை கொண்டு வந்தனர். டேனியல் பெல் "கொள்கையின் முடிவு" என்ற நூலை எழுதினார். அவரும் அரசியல் சமூகவியலாளரான மார்ட்டின் லிப்செட்டும் இக்கருத்தை ஆதரித்தனர்.
Question 218
ஆரம்பத்தில் திட்டக்கொள்கைக்கு பதிலாக  கொண்டுவரப்பட்டது எது?
A
நிதி ஆயோக்
B
குறியீட்டு திட்டமிடல்
C
திட்டக்குறியீடு
D
குறியீட்டு வளர்ச்சி
Question 218 Explanation: 
ஆரம்பத்தில் திட்டக்கொள்கைக்கு பதிலாக குறியீட்டு திட்டமிடல் கொண்டுவரப்பட்டது. தற்போது திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது.
Question 219
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) பரிணாம மாற்றங்களே நன்மை தருகின்றன, நீடித்து நிற்கின்றன என்பது சமதர்ம வாதம்.
  • (ii) புரட்சி மாற்றத்தின் மூலம் புதிய சமூகத்தை உலகிற்கு கொண்டு வருகிறது என்பது பொதுவுடைமைவாதம்
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 220
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  • (i) வரலாற்று பொருள் முதல் வாதம் வரலாற்றை விளக்கும் என்பது பொதுவுடைமைவாதம் ஆகும்.
  • (ii)  கலாச்சாரம், மதம் போன்றவைகளும் வரலாற்றை விளக்கும் என்பது சமதர்மவாதம் ஆகும்.
A
(i) மற்றும் (ii) சரி
B
(i) மற்றும் (ii) தவறு
C
(i) சரி (ii) தவறு
D
(i) தவறு (ii) சரி
Question 221
பின்வருவனவற்றுள் தேசியத்திற்கு எதிரான உள்நாட்டு சவால்கள் எவை?
A
WTO
B
ஐக்கிய WTO நாடுகள்
C
தீவிரக்கொள்கைகள்
D
இவற்றில் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 221 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!