MCQ Questions

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் 11th History Lesson 12 Questions in Tamil

11th History Lesson 12 Questions in Tamil

12] ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

1) ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்ற கீழ்கண்ட எந்த போர் முக்கிய காரணமாக விளங்கியது?

A) பிளாசிப் போர்

B) பக்சார் போர்

C) வந்தவாசி போர்

D) ஆம்பூர் போர்

(குறிப்பு – ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்ற பக்சார் போர் முக்கிய காரணமாகும். வங்காளம், அவத் நவாபுகள் மட்டுமல்லாமல் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் ஆங்கிலேயரை எதிர்த்தார். பக்சார் போரின் முடிவில் கிழக்கிந்திய கம்பெனி வியாபார தன்மையை இழந்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது)

2) பக்சார் போருக்கு பின்னர் நடந்தவற்றுள் எது சரியானது?

I. ராபர்ட் கிளைவ் இங்கிலாந்திற்கு சென்றார். வங்காள நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்ட தாக கருதப்பட்டதால் அவர் வில்லியம் கோட்டை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

II. வான்சிடார்ட் சூஜாஉத்தவுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

III. வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் திவானி அதிகாரம் கம்பெனி வசம் ஒப்படைக்கப்பட்டது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அலகாபாத், காரா பகுதிகளின் நிர்வாகத்தை பெறுவதோடு பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் வருவாயில் இருந்து ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் பெறப் போவதாக அறிவிக்கப்பட்டது)

3) கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைவராக எந்த ஆண்டு வரை ஆளுநரே செயல்பட்டார்?

A) 1770 வரை

B) 1772 வரை

C) 1774 வரை

D) 1776 வரை

(குறிப்பு – 1772 வரை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைவர் ஆளுநரே ஆவார். அவர் வில்லியம் கோட்டையிலோ அல்லது ஜார்ஜ் கோட்டையிலோ வீற்றிருப்பார்.)

4) ஒழுங்குமுறை சட்டத்தின் (1773) மூலமாக கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைவரான ஆளுநர் எவ்வாறு உயர்த்தப்பட்டார்?

A) ஜெனரல்

B) கவர்னர் ஜெனரல்

C) வைஸ்ராய்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வில்லியம் கோட்டையில் ஆளுநராக பதவியில் இருந்த வாரன் ஹேஸ்டிங் ஒழுங்குமுறை சட்டத்தின் (1773) மூலமாக கவர்னர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். கவர்னர் ஜெனரல் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர் மன்றத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.)

5) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?

A) லின்லித்கோ பிரபு

B) கானிங் பிரபு

C) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

D) வில்லியம் பென்டிக் பிரபு

(குறிப்பு – 1858இல் விக்டோரியா ராணியின் பிரகடனம் முதன்முறையாக அரசப் பிரதிநிதி ( வைசிராய் மற்றும் கவர்னர் ஜென்ரல்) என்ற சொற்றொடரை கையாண்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக கானிங் பிரபு நியமிக்கப்பட்டார்)

6) 1773இல் ஒழுங்குமுறை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு

B) காரன் வாலிஸ் பிரபு

C) வெல்லெஸ்லி பிரபு

D) வில்லியம் பெண்டிங் பிரபு

(குறிப்பு – இரட்டை ஆட்சி முறை, பொறுப்புகளை இயற்கை அரசாட்சி முறையாக இருந்தது. வங்காளத்தில் 1770 ஆம் ஆண்டு கடுமையான பஞ்சத்திற்கு இட்டுச் சென்றது. இறுதியாக கம்பெனி தனது பொறுப்பை உணர்ந்ததன் விளைவாக 1773 இல் ஒழுங்குமுறை சட்டத்தை பிரகடனப்படுத்தியது)

7) பிட் இந்தியா சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

A) 1780 இல்

B) 1782 இல்

C) 1784 இல்

D) 1786 இல்

(குறிப்பு – ஒழுங்குமுறை சட்டம் 1773 இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குனர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது. ஆளுநரும் தலைமைத் தளபதியும் இரு ஆலோசகர்களும் கொண்ட குழு வருவாய் வாரியமாக செயல்பட்டு வருவது குறித்து விவாதித்தது. 1784ஆம் ஆண்டின் பிட் இந்திய சட்டம், ராணுவ மற்றும் குடிமை அமைப்புகளை தனித் தனியாக பிரித்தது)

8) மகல்வாரி திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1880 இல்

B) 1881 இல்

C) 1882 இல்

D) 1883 இல்

(குறிப்பு – வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் (1883) மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது)

9) நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்யும் முறை சாசுவதம் என்று அழைக்கப்பட்டது. இது வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1791 இல்

B) 1793 இல்

C) 1795 இல்

D) 1797 இல்

(குறிப்பு – இந்த முறையின் மூலமாக வரி வசூலிப்பவர் ஆக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்கள் ஆக மாற்றி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு மேலாக வசூலிக்கப்பட்ட அனைத்தையும் ஜமீன்தார்கள் கையகப்படுத்தி கொண்டார்கள்)

10) ரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வில்லியம் பெண்டிங் பிரபு

B) காரன்வாலிஸ் பிரபு

C) தாமஸ் மன்றோ பிரபு

D) வெல்லெஸ்லி பிரபு

(குறிப்பு – 1814ஆம் ஆண்டு இயக்குனர் குழுவில் ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது ஆளுநராக இருந்த தாமஸ்மன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது)

11) தாமஸ் மன்றோ சிலை சென்னையில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A) 1830ஆம் ஆண்டு

B) 1833ஆம் ஆண்டு

C) 1836ஆம் ஆண்டு

D) 1839ஆம் ஆண்டு

(குறிப்பு – மக்களிடையே பிரபலமாகி இருந்த ஆளுநரான தாமஸ் மன்றோ விளைவாக பல நினைவிடங்கள் எழுப்பப்பட்ட தோடு, குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட படத்திலிருந்து அவரது சிலை வடிவமைக்கப்பட்டு 1839 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது)

12) 1820 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பை ஏற்றவர் யார்?

A) வில்லியம் பெண்டிங் பிரபு

B) காரன்வாலிஸ் பிரபு

C) தாமஸ் மன்றோ பிரபு

D) வெல்லெஸ்லி பிரபு

(குறிப்பு – கடப்பா, கர்னூல், சித்தூர், அனந்தபூர் ஆகியவற்றிற்கு ஆட்சிரியராக பணிபுரிந்தார். காலத்தில்தான் அவர் ரயத்துவாரி முறை பற்றி யோசித்தார். 1820ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கும் ஆளுநராக பொறுப்பேற்று அதன் பின் ஏழு வருடங்கள் சேவையாற்றினார். அப்போது 1822 ஆம் ஆண்டில் ரயத்வாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார்)

13) ரயத் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

A) உழவர்

B) வரி

C) நிலம்

D) நில வரி

(குறிப்பு – ரையா என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திரிவே ரயத் என்பதாகும். ரயத் என்ற சொல்லுக்கு உழவர் என்று பொருள். எந்த இடைத்தரகர் இல்லாமல் அரசே நேரடியாக பயிரிடுவோரின் தொடர்பு கொள்வதே இம்முறையாகும்)

14) ரயத்துவாரி முறையைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – எந்த இடைத்தரகர் இல்லாமல் அரசே நேரடியாக பயிரிடுவோருடன் தொடர்பு கொள்வதே இம்முறையாகும்.

கூற்று 2 – நில வரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கூற்று 3 – வரி செலுத்தாதோர் ஐ நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அதோடு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கால்நடை, வீடு, தனிப்பட்ட உடைமை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – அரசு, பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு வயல் இருந்தும் கிடைக்கக்கூடிய வருவாயை கணித்தது. தானிய விலை மாற்றம், சந்தைப்படுத்தும் வசதிகள், பாசன வசதி போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு 30 ஆண்டுக்கு ஒரு முறை தீர்வு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. ரயத்துவாரி முறை நிலத்தில் தனியுடைமையை அறிமுகப்படுத்தியது)

15) துணைப்படை திட்டத்தினை அறிமுகம் செய்தவர் யார்?

A) வெல்லெஸ்லி பிரபு

B) தாமஸ் மன்றோ பிரபு

C) காரன்வாலிஸ் பிரபு

D) டல்ஹவுசி பிரபு

(குறிப்பு – கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்த படைகளை கலைத்து விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும். பிரிட்டிஷ் படை கால பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் அது முடியாதபோது மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும்)

16) துணைப்படை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இடங்கள் கீழ்கண்டவற்றுள் எது?

I. ஹைதராபாத், மைசூர்

II. லக்னோ, மராத்திய பேஷ்வா

III. போன்ஸ்லே, சிந்தியா

IV. மதராஸ், கர்நாடகம்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – துணைப்படை திட்டத்தின் மூலம் ஹைதராபாத், மைசூர், லக்னோ, மராத்திய பேஷ்வா, போன்ஸ்லே( கோலாப்பூர்), சிந்தியா( குவாலியர்) போன்ற அரசுகளையும் அரசர்களையும் அதன் கீழ் கொண்டு வந்தார்.)

17) வெல்லெஸ்லி அறிமுகம் செய்த துணைப்படை திட்டம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்த படைகளை கலைத்து விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்ப தோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.

B) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும்.

C) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசர் பிற ஐரோப்பிய நாடுகள் உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு நிர்வாகத்தோடு மட்டும் தொடர்பில் இருக்கலாம்.

D) பிரிட்டிஷார் அனுமதி அல்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியில் அமர்த்தக் கூடாது.

(குறிப்பு – பாதுகாப்புக்கு உட்பட்ட அரசர் ஐரோப்பிய நாடுகள் உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிரஞ்ச் நிர்வாகத்தோடு தொடர்பு இருக்கக்கூடாது. எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட கூடாது போன்றவை துணைப்படை திட்டத்தின் கூறுகளாகும்)

18) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் மாகாணம் என அழைக்கப்பட்டது.

II. மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம் ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.

III. சென்னை, பம்பாய் போன்றவை மாகாணம் ஆகும்.

IV. கல்கத்தா மாகாணம் அல்ல, அது ஒரு மாநிலம் ஆகும்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மாகாணம் (Presidency), என்பதற்கும் மாநிலம் என்பதற்குமான வேறுபாடு, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அந்த விதத்தில் சென்னை, பம்பாய். கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும்)

19) வாரிசு உரிமை இழப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?

A) வெல்லெஸ்லி பிரபு

B) தாமஸ் மன்றோ பிரபு

C) காரன்வாலிஸ் பிரபு

D) டல்ஹவுசி பிரபு

(குறிப்பு – இந்து சம்பிரதாயங்களின் படி வாரிசு இல்லாத மன்னர் ஒரு ஆண் மகவை தத்தெடுக்க முடியும். அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தில் முழு உரிமையும் உண்டு. தல்ஹவுசி இம்முறை உச்சபட்ச அதிகாரத்தின் பார்வைக்கு சென்றால் சட்டபூர்வமான சிக்கலை எதிர் கொள்ளலாம் என்று நினைத்தார். எனவே வாரிசு உரிமை இழப்பு கொள்கையை அறிமுகம் செய்தார்)

20) வாரிசு உரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு எது?

A) உதய்பூர்

B) சதாரா

C) கான்பூர்

D) ஜெய்ப்பூர்

(குறிப்பு – வாரிசு உரிமை இழப்பு கொள்கையின் மூலம் முதலில் கைப்பற்றப்பட்ட அரசு சதாரா ஆகும். சதாராவின் மன்னரான ஷாஜி இறந்த பின்பு (1848) அவரது தத்தெடுக்கப்பட்ட வாரிசை தல்ஹவுசி அங்கீகரிக்க மறுத்தார்)

21) ஜான்சியின் அரசர் கங்காதரராவ் இறந்த பின்பு வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் ஜான்சி எந்த ஆண்டு கைப்பற்றப்பட்டது?

A) 1850 இல்

B) 1851 இல்

C) 1852 இல்

D) 1853 இல்

(குறிப்பு – ஜான்சியின் அரசர் கங்காதரராவ் நவம்பர் மாதம் 1853 இல் இறந்தார். அவர் இறந்த கணமே ஜான்சி அரசு டல்ஹவுசியால் இணைக்கப்பட்டது. கங்காதர்ராவின் மனைவியான ராணி லட்சுமிபாய், தத்து பிள்ளையுடன் ஜான்சியை விட்டு தப்பினார்)

22) மராத்தியர்களின் கடைசி பேஷ்வா எந்த ஆண்டு காலமானார்?

A) 1850 இல்

B) 1851 இல்

C) 1852 இல்

D) 1853 இல்

(குறிப்பு – மராத்தியர்களின் கடைசி பேஷ்வா 1851 இல் காலமானார். அவர் 33 வருடம் கம்பெனி கொடுத்த ஓய்வூதியத்தை பெற்றிருந்தார். ஆனால் கல்லூரியோ அவரது வாரிசான நானாசாகிப் அவருக்கு ஓய்வூதியம் கொடுக்க மறுத்தார்)

23) மேலளவில் ஒரு அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு அவரது பின்புறத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றும் முறையானது எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) வாரிசு இழப்பு கொள்கை

B) இரட்டை ஆட்சி முறை

C) துணைப்படை திட்டம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – பிளாசிப் போருக்குப் பின்னர்(1757) கம்பெனி தன்னை விரிவுபடுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியது. இம்முறையின் கீழ் மேல் அளவில் ஒரு அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு அவரது பின்புறத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றினர்)

24) துணைப்படை திட்டம் கொண்டுவரப்படாத இடம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) ஹைதராபாத்

B) பூனா

C) தஞ்சாவூர்

D) மைசூர்

(குறிப்பு – இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தபோது, வெல்லஸ்லி மேலும் நெருக்கடியை கூட்டும் வண்ணமாக பிரிட்டிஷாருக்கு சாதகமாக துணைப்படைத் திட்டத்தை கடைபிடித்தார். அதனை ஐதராபாத், பூனா மற்றும் மைசூர் போன்ற முக்கிய அரசுகளை ஏற்க வைத்தார்)

25) வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக எந்த ஆண்டு பதவி ஏற்றார்?

A) 1811 இல்

B) 1813 இல்

C) 1815 இல்

D) 1817 இல்

(குறிப்பு – கவர்னர் ஜெனரலாக 1813 ஆம் ஆண்டு பதவி ஏற்ற ஹாஸ்டிங்ஸ் முகலாய முத்திரையை பரிவர்த்தனைகளில் தவித்தார். கம்பெனியின் உரிமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரை தான் சந்திக்க முடியாது என்று அறிவித்தார்)

26) 1830ஆம் ஆண்டு எந்த இடத்தில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை கம்பெனி நிர்வாகம் சரிசெய்து, ஆட்சி நிர்வாகத்தை கம்பெனி சார்பாக மார்க் கப்பன் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்தது?

A) ஹைதராபாத்

B) மைசூர்

C) குவாலியர்

D) உதய்பூர்

(குறிப்பு – மைசூர் அரசு 1830 ஆம் ஆண்டு நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து ஏற்பட்ட கிளர்ச்சியை வெல்லஸ்லியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கம்பெனி தலையிட்டு சரி செய்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் அரசரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் விடுவித்து மார்க் கப்பன் என்பவரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்)

27) வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்தில் இருந்தும் நீதித் துறையில் இருந்தும் பிரித்தவர் யார்?

A) ராபர்ட் கிளைவ்

B) வில்லியம் ஜோன்ஸ்

C) டல்ஹவுசி

D) காரன் வாலிஸ்

(குறிப்பு – குற்றம் நடப்பதை கண்டுபிடிக்கவும் தண்டனை வழங்கவும் ஒரு சீரிய முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ராபர்ட் கிளைவ் உருவாக்கிய இரட்டை ஆட்சி முறையை காரன்வாலிஸ் முடிவுக்கு கொண்டு வந்தார். வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்தில் இருந்தும் நீதித்துறையில் இருந்தும் பிரித்தார். ஆட்சியர்களை வரி வசூலிக்க மட்டுமே பணித்தார்)

28) காரன்வாலிஸ் ஆட்சி காலத்தில் நீதித்துறையின் உச்சங்களாக இருந்தவை எது?

A) சதர் திவானி அதாலத்

B) சதர் நிஜாமத் அதாலத்

C) இவை இரண்டும்

D) இவை இரண்டும் அல்ல

(குறிப்பு – ஆட்சியர் களை வரி வசூலிக்க மட்டுமே பறித்து அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து காரன்வாலிஸ் விடுவித்தார். குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன. நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத், சதர் நிஜாமத் அதாலத் ஆகியவை திகழ்ந்தன)

29) குற்றவியல் மற்றும் குடிமையியல் நீதியில் உச்சபட்ச முறையீட்டு நீதிமன்றம் காரன்வாலிஸ் ஆட்சிக் காலத்தில் எந்த இடத்தில் அமையப் பெற்றன?

A) கல்கத்தா

B) பம்பாய்

C) சென்னை

D) ஹைதராபாத்

(குறிப்பு – நான்கு பிராந்திய முறையிட்டு நீதி மன்றங்கள் கல்கத்தா, தக்காணம், முர்ஷிதாபாத் பாத்ரூம் பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகளும் அவர்களுக்கு உதவிபுரிய ஒரு இந்திய வல்லுநரும் நியமிக்கப்பட்டார்கள்)

30) காரன்வாலிஸ் நீதித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களுள் சரியானது எது?

I. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரு நகரிலும் ஒரு நீதிமன்றம் அமைந்தது.

II. ஒவ்வொரு நீதிமன்றத்தின் கீழ் இந்திய நீதிபதிகளை கொண்ட முன்சிப் நீதிமன்றங்கள் இயங்கின.

III. சீரியல் (சிவில்) வழக்குகளில் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்பட்டன.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவரின் சமயப் பின்னணியை பொறுத்து இந்து சட்டமும், இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்பட்டன. மேற்கண்ட அனைத்தும் காரன்வாலிஸ் நிதித்துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகும்)

31) குடிமைப் பணிகளில் காரன்வாலிஸ் ஏற்படுத்திய சீர்திருத்தங்களில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. காரன்வாலிஸ் ஒவ்வொரு மாவட்டத்தையும் தானாக்களாக (காவல் நிலையம்) பிரித்தார்.

II. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட தரோகா என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.

III. நீதி அதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்துக்கும் இடையே ஆன திடமான பிரிவு கைவிடப்பட்டது. ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் தொடங்கினார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குடிமை மற்றும் நீதி நிர்வாகத்தை பண்படுத்திய காரன் வாலிஸ் கம்பெனி ஊழியரின் கல்வியை மேம்படுத்த போதிய அக்கறை செலுத்தவில்லை. வெல்லெஸ்லி கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்)

32) கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் குடிமை பணியாளர்களுக்கு பயிற்சி கல்லூரி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

A) 1800 இல்

B) 1802 இல்

C) 1804 இல்

D) 1806 இல்

(குறிப்பு – இந்தப் பயிற்சி கல்லூரியில் பல ஐரோப்பிய பேராசிரியர்களும், 80 இந்திய பண்டிதர்களும் பணிபுரிந்தனர். இதுவே பின்னர் வங்காள கிழக்கிந்திய பள்ளியாக உருவெடுத்தது)

33) தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை எல்லிஸ் என்பவர் எந்த இடத்தில் உருவாக்கினார்?

A) சென்னையில்

B) பம்பாயில்

C) கல்கத்தாவில்

D) ஹைதராபாத்தில்

(குறிப்பு – கிழக்கிந்திய கல்லூரி 1806 இல் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. வில்லியம் கோட்டை கல்லூரியின் அடியொற்றி எல்லிஸ் என்பவர் தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை 1812 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்கினார். இங்குதான் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருததோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்னும் கருத்தாக்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது)

33) காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருத கல்லூரியை எந்த ஆண்டில் நிறுவினார்?

A) 1790 இல்

B) 1791 இல்

C) 1792 இல்

D) 1793 இல்

(குறிப்பு – இஸ்லாமியர்களுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் செய்தது போன்ற சேவையை இந்துக்களுக்கு மேற்கொள்ள அவருக்குப்பின் பொறுப்பேற்றவர்கள் தயாராக இருந்தனர். காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருத கல்லூரியை 1791-ஆம் ஆண்டு நிறுவினார். அதன்பின் வந்த 20 ஆண்டுகளில் பெரிய நடவடிக்கைகள் எதையும் பிற ஆளுநர்கள் மேற்கொள்ளவில்லை)

34) வங்காள வாராந்திர இதழான சமாச்சார் தர்பன் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

A) 1812 இல்

B) 1814 இல்

C) 1816 இல்

D) 1818 இல்

(குறிப்பு – 1799 இல் பத்திரிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது கல்வி வளர்ச்சியில் பாராட்டுக்குரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அந்த சூழலில்தான் 1818 ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ் சமாச்சார் தர்பன் துவங்கப்பட்டது.)

35) 1835 இல் காரன்வாலிஸ் மருத்துவ கல்லூரியை எங்கு துவங்கினார்?

A) கல்கத்தா

B) பாம்பே

C) சென்னை

D) தில்லி

(குறிப்பு – பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு சதி முறையை ஒழிக்கவும், கல்வி மேம்பாட்டுக்காக பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்க தலைப்பட்டார். கல்கத்தா மருத்துவ கல்லூரியை 1835 இல் துவங்கினார். இந்த கல்லூரியின் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டார்கள்)

36) கல்லூரிகளையும் அவை தோன்றிய வருடங்களையும் பொருத்துக.

I. கல்கத்தா மருத்துவ கல்லூரி – a) 1849

II. கிராண்ட் மருத்துவ கல்லூரி – b) 1847

III. தாம்சன் பொறியியல் கல்லூரி – c) 1835

IV. பெண்களுக்கான பயிற்சி பள்ளி – d) 1845

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-c, II-d, III-b, IV-a

(குறிப்பு – 1845ஆம் ஆண்டு பம்பாயில் கிராண்ட் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது. தாம்சன் பொறியியல் கல்லூரி 1847 ஆம் ஆண்டு ரூர்கியில் தோற்றுவிக்கப்பட்டது.)

37) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பட்டயம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டம் ஆகும்.

II. எலிசபெத் மகாராணி 1600 இல் வழங்கிய பட்டயத்தின் மூலம் இது தொடங்கப்பட்டது.

III. வாரன் ஹாஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக 1773 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமானது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853 ஆம் ஆண்டின் பட்டைய சட்டமே கடைசியானது ஆகும்)

38) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக எந்த ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்?

A) 1830 ஆம் ஆண்டு

B) 1835 ஆம் ஆண்டு

C) 1840 ஆம் ஆண்டு

D) 1845 ஆம் ஆண்டு

(குறிப்பு – மெக்காலே கல்வி குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உள்நாட்டு கல்வி மீது மதிப்பு இருக்கவில்லை. மெக்காலே ஆங்கில வழிக் கல்வியை ஆதரித்து பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியை பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக் கொண்டது)

39) ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரைவினை உடைய கல்வி அறிக்கையை சமர்ப்பித்தவர் யார்?

A) மெக்காலே

B) தல்ஹவுசி

C) ஜேம்ஸ் தாம்சன்

D) சார்லஸ் உட்

(குறிப்பு – டல்ஹௌசி கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவர் வட கிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநர் ஜேம்ஸ் தாமஸினால் உருவாக்கப்பட்ட தாய்மொழி கல்வி முறைக்கு ஆதரவு கொடுத்தார். சார்லஸ் உட் உருவாக்கிய கல்வி அறிக்கை ஆரம்ப கல்வி முதல் உயர் நிலைப்பள்ளியையும் கல்லூரிப் படிப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரைவாகும்)

40) 1857ஆம் ஆண்டு கீழ்க்காணும் எந்த இடங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன?

I. சென்னை

II. பம்பாய்

III. கல்கத்தா

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொது கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாண தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 1857 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகமும் பம்பாய் மற்றும் கொல்கத்தா பல்கலைக் கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன. தல்ஹவுசி மெக்காலேயின் கொள்கையை மாற்றி தாய்மொழியில் கல்வி நிலையங்கள் உருவாகுவதை ஆதரித்தார்)

41) பிண்டாரி கொள்ளைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் இருந்தனர்?

I. இஸ்லாமியர்கள்

II. கிருஸ்தவர்கள்

III. இந்துக்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – பிண்டாரி கொள்ளைக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். துணைப்படை திட்டத்தினால் வேலை இழந்த பல வீரர்கள் இந்த கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவுக்கு பெருகினர்)

42) பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது நடத்திய போர் கீழ்க்காணும் எந்த ஆண்டுகளில் நடந்தது?

A) 1810 – 1818

B) 1811 – 1818

C) 1815 – 1818

D) 1818 – 1820

(குறிப்பு – பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர் பிரகடனம் செய்தது. ஆனால் அது மராத்தி எடுத்து எதிரான போராக உருப்பெற்றது. இப்போர்கள் பல்லாண்டுகள் (1811முதல் – 1818 வரை ) நடைபெற்றாலும் மொத்த மத்திய இந்தியாவையும் இறுதியில் பிரிட்டிஷார் வசம் கொண்டு சேர்த்தது)

43) தக்கர்கள் எந்த இடத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவர்?

A) தில்லி

B) பீஹார்

C) குஜராத்

D) வங்காளம்

(குறிப்பு – தக்கர்கள் 14ஆம் நூற்றாண்டில் இருந்து தில்லி ஆக்ரா க்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவர். அவர்கள் தங்கள் அமைப்பை உறுதிமொழி ஏற்பதன் மூலமாகவும் சில சடங்கு ஆச்சாரங்களை பின்பற்றுவதன் மூலமாகவும் பலப்படுத்தி அப்பாவி வழிப்போக்கர்களை எதிர்பாராத தருணத்தில் தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து வந்தனர்)

44) தக்கர்களை ஒழிக்க வில்லியம் பென்டிங் ஒரு திட்டத்தை வகுத்து யாரை நியமித்தார்?

A) வில்லியம் ஹென்றி

B) வில்லியம் ரூதர்போர்டு

C) வில்லியம் ஜார்ஜ்

D) வில்லியம் ஸ்லீமேன்

(குறிப்பு – தக்கர்களை ஒழிப்பதற்கு வில்லியம் பென்டிங் ஒரு திட்டத்தை வகுத்து வில்லியம் ஸ்லீமேன் என்பவரை நியமித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837 வரையான காலகட்டத்தில் நிரூபணமானது.)

45) தக்கர்கள் குறித்த பிரச்சனைகள் எந்த ஆண்டு முடிவுக்கு வந்தன?

A) 1855 இல்

B) 1860 இல்

C) 1865 இல்

D) 1870 இல்

(குறிப்பு – தக்கர்கள் தொடர்பான வழக்குகளில் 500 பேர் அரசு சாட்சிகளாக மாறினர். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நிரூபணம் ஆனது. எனினும் தக்கர்கள் முன்னிட்டு எழுந்த பிரச்சனைகள் 1860 ஆம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வந்தனர்)

46) சதி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

A) 1823 இல்

B) 1825 இல்

C) 1827 இல்

D) 1829 இல்

(குறிப்பு – சதி முறையை ஒழிக்க முடிவு எடுப்பதன் மூலம் வில்லியம் பென்டிங் தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பதவி வகித்த கவர்னர் ஜெனரல்கள் சமயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட யோசித்த பின் புலத்தில், பென்டிக் தயக்கமில்லாமல் சட்டம் ஒன்றை இயற்றி அதன் மூலம் இப்பழக்கத்திற்கு ஒரு முடிவு கொண்டுவர முயன்றார்)

47) 1857 பெரும் கிளர்ச்சிக்கு முன்பு இந்தியாவில் எத்தனை மைல் தூரம் இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது?

A) 200 மைல்கள்

B) 300 மைல்கள்

C) 400 மைல்கள்

D) 500 மைல்கள்

(குறிப்பு – இருப்புப் பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபார சமூகமே ஆகும். இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களிடம் இருக்கவே செய்தது.)

48) இந்தியாவில் தந்தி போக்குவரத்து எந்த ஆண்டு தொடங்கியது?

A) 1852 ஆம் ஆண்டு

B) 1854 ஆம் ஆண்டு

C) 1856 ஆம் ஆண்டு

D) 1858 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவிற்கும் லண்டனுக்கும் இடையே தந்தி போக்குவரத்தை உருவாக்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் தந்தி போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது)

49) இந்தியாவின் முதல் இருப்புப்பாதை 1853 ஆம் ஆண்டு எந்த இரு நகரங்களுக்கு இடையில் அமைந்தது?

A) பம்பாய் – தானே

B) ஹௌரா – ராணிகஞ்

C) மதராஸ் – அரக்கோணம்

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களிடம் இருந்தது. இருப்புப் பாதை போக்குவரத்து மூலமாக பொருளாதார சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹவுசி வாதிட்டு அதை வலியுறுத்தினார்)

50) தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1853 இல்

B) 1854 இல்

C) 1855 இல்

D) 1856 இல்

(குறிப்பு – இந்தியாவின் முதல் இருப்புப்பாதை 1853 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே அமைந்தது. இரண்டாவது இருப்புப்பாதை ஹவுராவிற்கும் ராணிகஞ்சிற்கும் இடையே அமைந்தது. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது)

51) தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எந்த இரு இடங்களுக்கு இடையே அமைக்கப்பட்டது?

A) மதராஸ் – வேலூர்

B) மதராஸ் – அரக்கோணம்

C) மதராஸ் – விழுப்புரம்

D) மதராஸ் – காட்பாடி

(குறிப்பு – தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராஸ் மற்றும் அரக்கோணத்திற்குமிடையே அமைக்கப்பட்டது. அந்த ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்)

52) சூயஸ் கால்வாய் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?

A) 1861 இல்

B) 1863 இல்

C) 1866 இல்

D) 1869 இல்

(குறிப்பு – தந்தி அறிமுகமான பின்னர் லண்டனுக்கும் கல்கத்தாவிற்கு இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழிசெய்தது. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆன தூரம் 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாக குறைந்தது)

53) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாசன வசதி ஏற்படுத்தி கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது.

II. இந்திய அரசர்கள் விட்டுச்சென்ற பழைய கால்வாய்களும், குளங்களும் பயனற்று கிடப்பதை கண்ட போதும் அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொடுக்கவோ, புதுப்பிக்கவோ கம்பெனி அரசு முயற்சி செய்யவில்லை.

III. ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரபட்டன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சில பாசன வேலைகள் நடந்தேறின. எனினும் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை)

54) ஆர்தர் காட்டன் என்பவரால் கொள்ளிடத்தின் குறுக்கே எந்த ஆண்டு அணை கட்டப்பட்டது?

A) 1830 இல்

B) 1832 இல்

C) 1834 இல்

D) 1836 இல்

(குறிப்பு – ஆர்தர் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கொள்ளிடத்தின் குறுக்கே அணை கட்டப்பட்டது. கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.)

55) யமுனா கால்வாய் _____________ கங்கை கால்வாய் __________முறையே கட்டப்பட்டன.

A) 1830 இலும், 1856 இலும்

B) 1835 இலும், 1857 இலும்

C) 1830 இலும், 1857 இலும்

D) 1840 இலும், 1858 இலும்

(குறிப்பு – பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் 1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கை கால்வாய் 450 மைல்கள் வரை நீடித்த பணியும், 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரிடை துறை கால்வாய் தோண்டும் பணியும் பாசனவசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும்)

51) தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எந்த இரு இடங்களுக்கு இடையே அமைக்கப்பட்டது?

A) மதராஸ் – வேலூர்

B) மதராஸ் – அரக்கோணம்

C) மதராஸ் – விழுப்புரம்

D) மதராஸ் – காட்பாடி

(குறிப்பு – தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராஸ் மற்றும் அரக்கோணத்திற்குமிடையே அமைக்கப்பட்டது. அந்த ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்)

52) சூயஸ் கால்வாய் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?

A) 1861 இல்

B) 1863 இல்

C) 1866 இல்

D) 1869 இல்

(குறிப்பு – தந்தி அறிமுகமான பின்னர் லண்டனுக்கும் கல்கத்தாவிற்கு இடையே தொடர்பு கொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி 28 நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழிசெய்தது. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆன தூரம் 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாக குறைந்தது)

53) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாசன வசதி ஏற்படுத்தி கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது.

II. இந்திய அரசர்கள் விட்டுச்சென்ற பழைய கால்வாய்களும், குளங்களும் பயனற்று கிடப்பதை கண்ட போதும் அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொடுக்கவோ, புதுப்பிக்கவோ கம்பெனி அரசு முயற்சி செய்யவில்லை.

III. ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரபட்டன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சில பாசன வேலைகள் நடந்தேறின. எனினும் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை)

54) ஆர்தர் காட்டன் என்பவரால் கொள்ளிடத்தின் குறுக்கே எந்த ஆண்டு அணை கட்டப்பட்டது?

A) 1830 இல்

B) 1832 இல்

C) 1834 இல்

D) 1836 இல்

(குறிப்பு – ஆர்தர் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கொள்ளிடத்தின் குறுக்கே அணை கட்டப்பட்டது. கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.)

55) யமுனா கால்வாய் _____________ கங்கை கால்வாய் __________முறையே கட்டப்பட்டன.

A) 1830 இலும், 1856 இலும்

B) 1835 இலும், 1857 இலும்

C) 1830 இலும், 1857 இலும்

D) 1840 இலும், 1858 இலும்

(குறிப்பு – பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் 1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கை கால்வாய் 450 மைல்கள் வரை நீடித்த பணியும், 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரிடை துறை கால்வாய் தோண்டும் பணியும் பாசனவசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும்)

56) எந்த பழங்குடியின மக்கள் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாக திகழ்கிறார்கள்?

A) சந்தால்

B) பிண்டாரி

C) மோர்சா

D) படுகர்

(குறிப்பு – ஆங்கிலேய அரசால் காடுகளை அழித்து வேளாண் நிலங்களை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜங்கிள் மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்ட பின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன இந்த நிலங்களின் பூர்வீகக் குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டார்கள் ஆகவே சந்தால் இன மக்களில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாக திகழ்கிறார்கள்)

57) வனச் சட்டம் எந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது?

A) 1860 இல்

B) 1863 இல்

C) 1865 இல்

D) 1866 இல்

(குறிப்பு – இந்திய வனசட்டம் 1865 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது இந்தச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்வீக குடிகள் பயன்படுத்த தடை விதித்தால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.)

58) குற்றப் பழங்குடியினர் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

A) 1871 இல்

B) 1873 இல்

C) 1875 இல்

D) 1877 இல்

(குறிப்பு – இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்தது. அவர்களின் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. காலனிய ஆதிக்க காலம் முழுமையும் அவ்வபோது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்)

59) இஸ்லாமியர் ஆட்சி முறையே ஆங்கிலேய ஆட்சி முறையை விட மேலானது என கூறியவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) தாதாபாய் நௌரோஜி

C) கோபால கிருஷ்ண கோகலே

D) ஜவஹர்லால் நேரு

(குறிப்பு – இஸ்லாமிய ஆட்சிமுறையை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து வேறுபடுத்தி பார்த்த நவரோஜி முந்தைய ஆட்சியை நன்மை பயக்கக் கூடிய தாக கருதினார் என வில்லியம் பெண்டிங் எழுதுகிறார்.)

60) பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவு கணக்கில் இராணுவ நிர்வாக செலவுகள் எத்தனை சதவீதமாக இருந்தன?

A) 60 சதவீதம்

B) 70 சதவீதம்

C) 80 சதவீதம்

D) 90 சதவீதம்

( பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவு கணக்கில் ராணுவ மற்றும் குடிமை நிர்வாக செலவுகள் 80% ஆகவும் எஞ்சிய 20 சதவீதம் மட்டுமே மற்ற துறைகளுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. வேளாண்மை புறக்கணிக்கப்பட்டது. பாசன வசதி ஏற்படுத்தப்படவில்லை)

61) சித்திரவதை சட்டம் எந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது?

A) 1854 ஆம் ஆண்டு

B) 1856 ஆம் ஆண்டு

C) 1858ஆம் ஆண்டு

D) 1860 ஆம் ஆண்டு

(குறிப்பு – பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவரியை அரசின் பெரிய வருவாயாக இருந்ததால் கடுமையான முறைகளை பின்பற்றி வரி வசூலிப்பது முக்கியக் கொள்கையாக இருந்தது. கம்பெனி அரசால் சென்னையில் நியமிக்கப்பட்ட சித்திரவதை ஆணையம் 1855ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கை வருவாய் அதிகாரிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் வரி வசூலிக்கும் சமயங்களில் பயிரிடுவோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களை விளக்கமாக கூறியது)

62) 1833 இல் கிழக்கிந்திய கம்பெனி அரசு எடுத்த வணிக கொள்கை எது?

A) தடையில்லா வணிகக் கொள்கை

B) தலையிடா வணிகக் கொள்கை

C) தரமான வணிக கொள்கை

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – தலையிடா வணிகக் கொள்கை (Laissez Faire) என்பதை கடைப்பிடிப்பதாக 1833ஆம் ஆண்டு காலனி அரசு எடுத்த முடிவை பஞ்ச காலத்திலும் பலமாக பின்பற்றியதாக தெரிகிறது. 1800 ஆம் ஆண்டிலிருந்து 1825 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தோன்றிய பஞ்சங்கள் 22 என கணக்கிடப்பட்டுள்ளது)

63) இந்தியாவில் எந்த ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டது?

A) 1840 இல்

B) 1843 இல்

C) 1846 இல்

D) 1849 இல்

(குறிப்பு – தோட்டப் பயிர்களின் அறிமுகமும், மலைச்சரிவு நில பயிரிடும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் இலங்கை, மொரிஷியஸ், பிஜி, மலேயா, கரிபியன் தீவுகள், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமான தொழிலாளர் தேவையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள்)

64) நூற்றி ஐம்பது ஒப்பந்த தொழிலாளர்கள் 1828 ஆம் ஆண்டு முதன்முறையாக தஞ்சாவூர் பகுதியில் இருந்து எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்?

A) மொரிஷியஸ்

B) கரீபியன் தீவுகள்

C) தென்னாப்பிரிக்கா

D) இலங்கை

(குறிப்பு – காலனி அரசு நிலமற்ற விவசாயக் கூலிகளை ஏமாற்றியோ, ஆட்கடத்தல் முறையிலோ தொழிலாளர்களை கொண்டு வர கண்காணிகளை நியமித்தது. இவ்வாறு 150 ஒப்பந்த தொழிலாளர்கள் முதல்முறையாக 1828 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து இலங்கையில் அமையப்பெற்ற பிரிட்டிஷ் காபி தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்)

65) ஒப்பந்தக் கூலி முறை குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்த முறையின்படி கூலி சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும்

கூற்று 2 – பணியில் அலட்சியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ, மிடுக்காக திரிந்தாலோ, உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்தாலோ, ஒப்பந்த காலம் முடியும் முன் பணியை விட்டு விலகினாலோ, கூலியை மறுக்கவோ அல்லது சிறை தண்டனை வழங்கவோ முடியும்.

கூற்று 3 – இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான தண்டனைக்குரிய ஒப்பந்த முறை இது ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஒரு அற்ப பிரச்சனைக்காக கூட சட்ட சரத்துக்களை காட்டி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை மறுப்பதோ அவர்களை சிறையில் அடைக்கவும் செய்தனர். கூலி உயர்வுக்காகவும் அல்லது ஒப்பந்தத்தை முறிக்க செய்திட சங்கம் வைத்து போராட ஒப்பந்தக் கூலி சட்டம் தோட்ட தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை)

66) கரும்புத் தோட்டத்திலே என்ற பாடல் மூலம் பெண் தோட்ட தொழிலாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக் கூறிய கவிஞர் யார்?

A) பாவேந்தர் பாரதிதாசன்

B) சுப்பிரமணிய பாரதியார்

C) திரு வி கல்யாண சுந்தரம்

D) நாமக்கல் கவிஞர்

(குறிப்பு – சுப்பிரமணிய பாரதியார் தனது கரும்புத் தோட்டத்திலே என்ற பாடலில் பெண் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை உருக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். மேலும் அவர் புரட்சிகரமான பாடல்கள் மூலம் சுதந்திர எழுச்சியை மக்களிடையே தோன்ற செய்தவர் ஆவார்)

67) சென்னை ஆளுநர் எந்த ஆண்டு இலங்கை ஆளுநரிடம் இருந்து காபி தோட்டங்களில் பணிபுரிய கூலி தொழிலாளர்களை கேட்டு கடிதம் ஒன்றை பெற்றார்?

A) 1811 இல்

B) 1813 இல்

C) 1815 இல்

D) 1817 இல்

(குறிப்பு – இலங்கை ஆளுநர் 1815 ஆம் ஆண்டு சென்னை ஆளுநருக்கு காபி தோட்டங்களில் பணிபுரிய கூலித் தொழிலாளர்களை கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார். சென்னை ஆளுநர் அந்தக் கடிதத்தை தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்பினார். தஞ்சாவூர் ஆட்சியர் மூலம் பல கூலித்தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். 1843 முதல் 1868 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையிலிருந்து சுமார் 15 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்)

68) வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) தாதாபாய் நௌரோஜி

C) கோபால கிருஷ்ண கோகலே

D) பால கங்காதர திலகர்

(குறிப்பு – வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும்(Poverty and UnBritish rule in India) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நௌரோஜி விளக்குகிறார். ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவ்வாறு அல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக இந்த மண்ணில் குடியமர்ந்த போது அவர்கள் சுரண்டல் போக்கை செயல்படுத்தினர் என கூறுகிறார்)

69) தாதாபாய் நௌரோஜி தன் வாதத்தில் இந்தியாவில் இருந்து பெரும் தொகை உள்நாட்டு செலவு கட்டணம் என்ற வகையில் இங்கிலாந்து போய் சேருகிறது என்கிறார். அவ்வாறான செலவுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட லாபம்

II. ராணுவத்தில் இருந்தும் குடிமைப் பணி களில் இருந்தும் ஓய்வு பெற்றோருக்கு செய்ய வேண்டிய ஓய்வூதிய தொகை.

III. இந்தியாவில் நிகழ்ந்த போர்களுக்கான செலவுகள், போர் நடத்துவதற்காக வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டி மற்றும் இருப்பு பாதை அமைக்க ஏற்பட்ட செலவுகள்.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – லண்டனில் அமைந்திருந்த இந்திய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் செயலருக்குமான வேண்டிய பெரும் சம்பளம், ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் போன்றோரின் சம்பளம் சேமிப்பு என்ற வகையில் இங்கிலாந்தில் வரவு வைக்கப்பட்ட தொகை போன்றவை செலவு கட்டணம் என்ற வகையில் இங்கிலாந்து போய் சேருகிறது என்கிறார்)

70) இங்கிலாந்திற்கு இந்தியா 1837 ஆம் ஆண்டில் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு?

A) 120 மில்லியன் பவுண்டு

B) 130 மில்லியன் பவுண்டு

C) 150 மில்லியன் பவுண்டு

D) 180 மில்லியன் பவுண்டு

(குறிப்பு – இங்கிலாந்திற்கு இந்தியா 1837 ஆம் ஆண்டில் கொடுக்க வேண்டிய கடன் 130 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அது சிறிது காலத்தில் 220 மில்லியன் பவுண்டுகள் ஆக உயர்ந்த போது அதில் 18% ஆப்கானிஸ்தானோடும், தர்மம் ஓடும் போர் நடத்திய வகையில் செலவு செய்ததாக சொல்லப்பட்டது)

71) மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தின் கடைசி பத்து ஆண்டுகளில் மொத்த வருவாயான 647 மில்லியன் பவுண்டுகளில் 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என கண்டறிந்து கூறியவர் யார்?

A) ஆர்.சி.தத்

B) தாதாபாய் நௌரோஜி

C) சுகுமார் சென்

D) சந்திரசேகர ராவ்

(குறிப்பு – இந்தியாவில் நடந்த செல்வ வள கடத்தல் (Drain of Wealth) என்று இப்போக்கை வர்ணிக்கும் தாதாபாய் நவரோஜி இவ் வளங்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்தால் இந்த நாடு செழித்து இருக்கும். மேலும் அவர் கூறுகையில் கஜினி முகமதுவின் கொள்ளை 18 முறையோடு நின்றுவிட பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது என்றார்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!