Book Back QuestionsTnpsc

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள் Book Back Questions 10th Social Science Lesson 6

10th Social Science Lesson 6

6] ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒண்டிவீரன்: ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார். பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார். செவிவழிச் செய்தியின் படி ஒரு போரில் அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் பூலித்தேவர் பெரிதும் வருந்தியதாகவும் தெரிகிறது. ஆனால் ஒண்டிவீரன், எதிரியின் கோட்டையில் தான் நுழைந்து பல தலைகளைக் கொய்தமைக்காகத் தமக்கு கிடைத்தப் பரிசு என்று கூறியுள்ளார்.

விருப்பாட்சியின் பாளையக்காரரான கோபால நாயக்கர்: கோபால நாயக்கரைத் தலைவராகக் கொண்ட திண்டுக்கல் கூட்டமைப்பில் (Dindigul League) மணப்பாறையின் லெட்சுமி நாயக்கரும், தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கரும் இடம் பெற்றிருந்தனர். தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நல்லுறவுக் குழுவை அனுப்பிவைத்த திப்பு சுல்தானால் கோபால நாயக்கர் ஈர்க்கப்பட்டார். கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு பிரிட்டிஷாரை எதிர்த்த அவர், பின்னாட்களில் கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரையோடு இணைந்தார். அவர் உள்ளுர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆனைமலையில் கடும் போர் புரிந்தார். ஆயினும் பிரிட்டிஷ் படைகளால் அவர் 1801இல் வெற்றி கொள்ளப்பட்டார்.

வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழி நடத்தினார். உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயராகும். குயிலி தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

(அ) மருது சகோதரர்கள்

(ஆ) பூலித்தேவர்

(இ) வேலு நாச்சியார்

(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

(அ) வேலு நாச்சியார்

(ஆ) கட்டபொம்மன்

(இ) பூலித்தேவர்

(ஈ) ஊமைத்துரை

3. சிவ சுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

(அ) கயத்தாறு

(ஆ) நாகலாபுரம்

(இ) விருப்பாட்சி

(ஈ) பாஞ்சாலங்குறிச்சி

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

(அ) மருது சகோதரர்கள்

(ஆ) பூலித்தேவர்

(இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

(ஈ) கோபால நாயக்கர்

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

(அ) 1805 மே 24

(ஆ) 1805 ஜீலை 10

(இ) 1806 ஜீலை 10

(ஈ) 1806 செப்டம்பர் 10

6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

(அ) கர்னல் பேன்கோர்ட்

(ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்

(இ) சர் ஜான் கிரடாக்

(ஈ) கர்னல் அக்னியூ

7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

(அ) கல்கத்தா

(ஆ) மும்பை

(இ) டெல்லி

(ஈ) மைசூர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

2. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக __________ பாதுகாப்பில் இருந்தனர்.

3. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் __________ என்பவரை அனுப்பி வைத்தார்.

4. கட்டபொம்மன் ____________ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

5. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் _____________ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

6. ___________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.

ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.

iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

(அ) i, ii மற்றும் iv ஆகியவை சரி

(ஆ) i, ii மற்றும் iii ஆகியவை சரி

(இ) iii மற்றும் iv மட்டும் சரி

(ஈ) i மற்றும் iv மட்டும் சரி

2. i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.

ii) காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலு நாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர்.

iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.

iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

(அ) i மற்றும் ii ஆகியவை சரி

(ஆ) ii மற்றும் iii ஆகியவை சரி

(இ) ii, iii மற்றும் iv ஆகியவை சரி

(ஈ) i மற்றும் iv ஆகியவை சரி

3. கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.

காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதல் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.

(இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

(ஈ) கூற்று தவறானது காரணம் சரியானது.

பொருத்துக:

1. தீர்த்தகிரி – வேலூர் புரட்சி

2. கோபால நாயக்கர் – இராமலிங்கனார்

3. பானெர்மென் – திண்டுக்கல்

4. சுபேதார் ஷேக் ஆதம் – வேலூர் கோட்டை

5. கர்னல் பேன்கோர்ட் – ஓடாநிலை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பூலித்தேவர் 2. பூலித்தேவர் 3. நாகலாபுரம் 4. மருது சகோதரர்கள்

5. (1806 ஜீலை 10) 6. சர் ஜான் சிராடக்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. விஸ்வநாத் நாயக்கர் 2. கோபால நாயக்கர் 3. இராமலிங்கர் 4. கயத்தாறு

5. இரண்டாவது பாளையக்காரர் போர் 6. பதேக் ஹைதர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. i, ii மற்றும் iii ஆகியவை சரி

2. ii மற்றும் iii ஆகியவை சரி

3. கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி, எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

பொருத்துக: (விடைகள்)

1. தீர்த்தகிரி – ஓடாநிலை

2. கோபால நாயக்கர் – திண்டுக்கல்

3. பானெர்மென் – இராமலிங்கனார்

4. சுபேதார் ஷேக் ஆதம் – வேலூர் புரட்சி

5. கர்னல் பேன்கோர்ட் – வேலூர் கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!