MCQ Questions

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 10th Social Science Lesson 12 Questions in Tamil

10th Social Science Lesson 12 Questions in Tamil

12] ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

1) வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது?

A) 1805ஆம் ஆண்டு

B) 1806ஆம் ஆண்டு

C) 1807ஆம் ஆண்டு

D) 1808ஆம் ஆண்டு

(குறிப்பு – வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்றவர்களும் தமிழகத்தின் பிற பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இது பாளையக்காரர் போர் என்று அறியப்பட்டது. இது பின்னாளில் நிகழ்ந்த வேலூர் புரட்சிக்கு இட்டுச்சென்றது)

2) பாளையம் என்பது கீழுள்ள எதைக் குறிக்கிறது?

I. ஒரு பகுதி

II. ராணுவ முகாம்

III. சிற்றரசு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – பாளையம் என்பது மேற்கண்ட அனைத்தையும் குறிப்பது ஆகும். மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர்)

3) பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்?

A) போலிகார்

B) பாலியன்ஸ்

C) பாளையன்ஸ்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் ‘போலிகார்’ என்று குறிப்பிட்டனர். இந்த போலிகார் என்ற தமிழ்ச் சொல் இறையான்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசை குறிப்பது ஆகும்)

4) பாளையக்கார முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்?

A) விஸ்வநாத நாயக்கர்

B) பிரதாப ருத்திரன்

C) அரியநாதர்

D) சிம்ம ருத்ரன்

(குறிப்பு – வாராங்கல்லை சார்ந்த பிரதாபருத்திரனின் ஆட்சி காலத்தில் காகதீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது)

5) தமிழகத்தில் பாளையக்கார முறையை அறிமுகம் செய்தவர் யார்?

A) விஸ்வநாத நாயக்கர்

B) பிரதாப ருத்திரன்

C) அரியநாதர்

D) சிம்ம ருத்ரன்

(குறிப்பு – மதுரை நாயக்கராக பதவி ஏற்ற விஸ்வநாத நாயக்கர், தமது அமைச்சரான அரியநாதரின் உதவியோடு தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்)

6) மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பதவி ஏற்ற ஆண்டு எது?

A) 1523ஆம் ஆண்டு

B) 1526ஆம் ஆண்டு

C) 1529ஆம் ஆண்டு

D) 1530ஆம் ஆண்டு

(குறிப்பு – விஸ்வநாத நாயக்கர் 1529 ஆம் ஆண்டு மதுரை நாயக்கராக பதவி ஏற்றார். அவரது அமைச்சர் அரியநாதர் என்பவர் ஆவார்)

7) பாளையக்காரர்களின் பணிகள் ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. வரி வசூலித்தல்

II. நிலப்பகுதிகளை நிர்வகித்தல்

III. வழக்குகளை விசாரித்தல்

IV. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்

A) I, II, III மட்டும்

B) I, II, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பாளையக்காரர்கள் வரு வசூலித்தல், நிலப் பகுதிகளை நிர்வகித்தல், வழக்குகளை விசாரித்தல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தன்னிச்சையாக செயல்பட முடிந்தது. அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது)

8) தமிழகத்தில் எத்தனை பாளையங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது?

A) 70

B) 72

C) 74

D) 76

(குறிப்பு – பரம்பரை பரம்பரையாக 72 பாளையக்காரர்கள் இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாயக்க ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பாளையக்காரர்கள் உதவி புரிந்தனர்)

9) கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு பாளையம் அல்லாதவை எது?

A) சாத்தூர்

B) நாகலாபுரம்

C) எட்டயபுரம்

D) ஊத்துமலை

(குறிப்பு – கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள் ஆவன, சாத்தூர், நாகலாபுரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி போன்றவையாகும்)

10) கீழ்க்கண்டவற்றுள் மேற்கு பாளையம் அல்லாதவை எது?

A) தலைவன்கோட்டை

B) நடுவக்குறிச்சி

C) பாஞ்சாலங்குறிச்சி

D) சிங்கம்பட்டி

(குறிப்பு – முக்கியமான மேற்குப் பாளையங்கள் ஆவன, ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியன ஆகும்)

11) கர்நாடக போரின் போது ஆற்காடு நவாப் யாரிடம் கடன் பெற்றிருந்தார்?

A) பிரஞ்சுக்காரர்கள்

B) ஆங்கிலேயர்கள்

C) பாளையக்காரர்கள்

D) போர்த்துக்கீசியர்கள்

(குறிப்பு – ஆற்காடு நவாப் கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடன் பெற்றிருந்தார்)

12) கிழக்கிந்திய கம்பெனிக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கிய காரணம் எது?

A) வரி வசூலித்தல் தொடர்பாக

B) அதிகாரப் பகிர்வு தொடர்பாக

C) வழக்குகள் விசாரித்தல் தொடர்பாக

D) சுதந்திரமின்மை தொடர்பாக

(குறிப்பு – தெற்கத்திய பாளையக்காரர்கள் இடமிருந்து வரி வசூல் செய்யும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மறுத்தனர். இது அவர்களிடையே மோதல் போக்கை உருவாக்கியது)

13) ஆற்காடு நவாப்பின் சகோதரர் மாபூஸ்கான் ஆங்கிலேயர் துணையுடன் திருநெல்வேலியை முற்றுகையிட சென்ற ஆண்டு எது?

A) 1750ஆம் ஆண்டு

B) 1755ஆம் ஆண்டு

C) 1760ஆம் ஆண்டு

D) 1765ஆம் ஆண்டு

(குறிப்பு – ஆற்காடு நவாப்பின் சகோதரர் மாபூஸ்கான், கர்னல் ஹெரான் தலைமையிலான கம்பெனியின் படை ஒன்றை அழைத்துக்கொண்டு 1755ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியை முற்றுகையிட சென்றார். மதுரையை எளிதில் அவர் வீழ்த்தினார்)

14) யாரை அடக்குமாறு கிழக்கிந்திய கம்பெனி கர்னல் ஹெரானை பணித்தது?

A) வேலுநாச்சியார்

B) தீரன் சின்னமலை

C) பூலித்தேவன்

D) வீரபாண்டிய கட்டபொம்மன்

(குறிப்பு – கம்பெனிக்கு கீழ்படிய மறுத்துவந்த பூலித்தேவரை அடக்க கர்னல் ஹெரான் பணிக்கப்பட்டார். மேற்குப் பகுதியில் இருந்த பாளையக்காரர்களிடம் புலித்தேவர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்)

15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

III. கிழக்கிந்திய கம்பெனி படையின் துணையுடன் கர்னல் ஹெரான் பூலித்தேவரை கைது செய்தார்.

II. பீரங்கிகளின் தேவையும் துணைக்கலப்பொருட்கள் மற்றும் படை வீரர்கள் ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் கர்னல் ஹெரான் தனது திட்டத்தை கைவிட்டு மதுரைக்கு திரும்பினார்.

III. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கர்னல் ஹெரான் அவர்களை திரும்ப அழைத்தது டன் நிரந்தர பணி நீக்கம் செய்தது.

A) கூற்று I, II மட்டும் சரியானது

B) கூற்று II, III மட்டும் சரியானது

C) கூற்று I, III மட்டும் சரியானது

D) எல்லா கூற்றுகளும் சரியானது

(குறிப்பு – கிழக்கிந்திய கம்பெனி பூலித்தேவரை அடக்க கர்னல் ஹெரான் அவர்களை பணித்தது. எனினும் கர்னல் ஹெரான் அவர்கள் பீரங்கிகளின் தேவையும், படை வீரர்களின் ஊதியம் இல்லாமை காரணமாக மதுரைக்கு திரும்பினார். எனவே அவரை கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் நிரந்தர பணி நீக்கம் செய்தது)

16) பூலித்தேவர் மறைந்த ஆண்டு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 1801ஆம் ஆண்டு

B) 1802ஆம் ஆண்டு

C) 1803ஆம் ஆண்டு

D) 1804ஆம் ஆண்டு

(குறிப்பு – பூலித்தேவரின் புரட்சிக்காலம் 1755முதல் 1767ஆம் ஆண்டு வரை ஆகும். எனினும் 1801ஆம் ஆண்டு பூலித்தேவர் கொல்லப்பட்டார் )

17) நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் கீழ்க்கண்டவருள் யார்?

I. மியானா

II. முடிமையா

III. நபீகான் கட்டாக்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாரும் சரி

(குறிப்பு – மியானா, முடிமையா, நபீகான் கட்டாக் ஆகியோர் நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்தனர்)

18) ஆங்கிலேயர்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கிய கூட்டமைப்பில் இணையாதவர்கள் யார்?

A) சிவகிரி பாளையம்

B) எட்டயபுரம்

C) பாஞ்சாலங்குறிச்சி

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – மியானா, முடிமையா, நபீகான் கட்டக் எனும் மூன்று பத்தானிய அதிகாரிகள் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்தனர். இவர்களோடு பூலித்தேவர் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.)

19) ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்த மன்னர் யார்?

I. புதுக்கோட்டை மன்னர்

II. ராமநாதபுரம் மன்னர்

A) I மட்டும்

B) II மட்டும்

C) இருவரும்

D) இருவரும் அல்ல.

(குறிப்பு – பூலித்தேவர் உருவாக்கிய ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பில் சிவகிரி பாளையம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகியவை இணையவில்லை. புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளித்தனர்)

20) பூலித்தேவர் யாருடைய ஆதரவை பெற முயன்றார்?

I. மைசூரின் ஹைதர் அலி

II. பிரெஞ்சுக்காரர்கள்

III. டச்சுக்காரர்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவர்கள் அனைவரிடத்திலும்

(குறிப்பு – பூலித்தேவருக்கு பல பாளையங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே பூலித்தேவர் மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவினைப் பெற முயன்றார்)

21) ஹைதர் அலியால் ஏன் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை?

I. அப்போது ஹைதர் அலி மராத்தியர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டிருந்தார்.

II. ஹைதர் அலி பூலித்தேவருக்கு உதவ விரும்பவில்லை.

III. ஹைதர் அலி பூலித்தேவருக்கு உதவக்கூடாது என ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II மட்டும் சரி

(குறிப்பு – பூலித்தேவர் ஹைதர் அலியிடம் உதவி கேட்டபோது, ஹைதர் அலி மராத்தியர்களோடு கடுமையான மோதலில் ஈடுபட்டிருந்தார். எனவே ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை)

22) களக்காட்டில் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டவர் யார்?

A) ஆற்காடு நவாப்

B) மாபூஸ்கான்

C) ஆங்கிலேயர்கள்

D) பூலித்தேவர்

(குறிப்பு – ஆற்காட்டு நவாபின் சகோதரரான மாபூஸ்கான், மற்றும் பூலித்தேவருக்கு இடையே களக்காடு போர் நிகழ்ந்தது. இதில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.)

23) பூலித் தேவருக்கு எதிரான களக்காடு போரில் ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கானுக்கு உதவி புரிந்தவர்கள் யார்?

I. ஆங்கிலேயர்கள்

II. கர்நாடக பகுதி சிற்றரசர்கள்.

III. ஆற்காடு நவாப்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – களக்காடு போரின்போது மாபூஸ்கானுக்கு ஆதரவாக கிழக்கிந்திய கம்பெனி ஆயிரம் சிப்பாய்கள் அனுப்பி வைத்தது. கர்நாடகப் பகுதியில் இருந்து குதிரைப்படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் மாபூஸ்கானுக்கு அளிக்கப்பட்டது. எனினும் இப்போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன)

24) திருநெல்வேலியில் ஆங்கிலேயருக்கு எதிராக யாருடைய தலைமையின் கீழ் பாளையக்காரர்கள் ஒருங்கிணைந்தனர்?

A) பூலித்தேவர்

B) வீரபாண்டிய கட்டபொம்மன்

C) மருதநாயகம்

D) வேலு நாச்சியார்

(குறிப்பு – பூலித்தேவர் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட பாளையக்காரர்கள் எதிர்ப்பு திருநெல்வேலி பகுதியில் ஆங்கிலேயர் நேரடியாகத் தலையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது)

25) பூலித்தேவரை அடக்க கம்பெனியாரால் அனுப்பப்பட்டவர் யார்?

A) ஹைதர் அலி

B) ஆற்காடு நவாப்

C) மாபூஸ்கான்

D) யூசுப் கான்

(குறிப்பு – யூசுப்கான் என்பவர் கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு பின்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டார்.)

26) பூலித்தேவரின் எந்த கோட்டைகளை யூசுப்கான் கைப்பற்றினார்?

I. நெற்கட்டும்சேவல்

II. வாசுதேவநல்லூர்

III. பனையூர்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – 1761ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகளான நெற்கட்டும்சேவல், வாசுதேவநல்லூர் மற்றும் பனையூர் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன)

27) கிழக்கிந்திய கம்பெனியால் நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் யார்?

A) மாபூஸ்கான்

B) யூசுப்கான்

C) கேப்டன் கேம்ப்பெல்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – கம்பெனியின் நிர்வாகத்திற்கு முறையான தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார்)

28) யூசுப்கான் என்றும்,கான்சாகிப் என்றும் அழைக்கப்பட்ட மருதநாயகம் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

A) 1760ஆம் ஆண்டு

B) 1762ஆம் ஆண்டு

C) 1764ஆம் ஆண்டு

D) 1766ஆம் ஆண்டு

(குறிப்பு – 1764ஆம் ஆண்டு நம்பிக்கை துரோகம் குற்றம் சாட்டப்பட்டு மருதநாயகம் தூக்கிலிடப்பட்டார்)

29) மருதநாயகம் மறைவுக்குப் பின்னர் பூலித்தேவர் நெற்கட்டும்சேவலை எந்த ஆண்டு கைப்பற்றினார்?

A) 1764ஆம் ஆண்டு

B) 1766ஆம் ஆண்டு

C) 1768ஆம் ஆண்டு

D) 1770ஆம் ஆண்டு

(குறிப்பு – நாடிழந்த நிலை நிலையில் சுற்றி வந்த பூலித்தேவர் மீண்டும் 1764 ஆம் ஆண்டு நெற்கட்டும் சேவல் கைப்பற்றினார்)

30) 1767ஆம் ஆண்டு பூலித்தேவரை தோற்கடித்தவர் யார்?

A) கேப்டன் கில்லஸ்பி

B) கேப்டன் கேம்ப்பெல்

C) கேப்டன் ப்யூலே

D) கேப்டன் ஜார்ஜ்

(குறிப்பு – 1767 ஆம் ஆண்டு கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் தப்பிச் சென்ற அவர் நாடிழந்த நிலையிலேயே காலமானார்)

31) ஒண்டிவீரன் என்பவர் யார்?

A) பூலித்தேவரின் படைப்பிரிவுகள் ஒன்றனுக்கு தலைமை ஏற்று இருந்தவர்

B) பூலித்தேவரின் படைத்தளபதி

C) பூலித்தேவரின் முதன்மை அமைச்சர்

D) பூலித்தேவரின் நண்பர்

(குறிப்பு – ஒண்டிவீரன் என்பவர் பூலித்தேவரின் படை பிரிவுகளில் ஒன்றனுக்கு தலைமை ஏற்றிருந்தார். பூலித்தேவரோடு பல போர்களில் இணைந்து போரிட்டவர் ஆவார்)

32) வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு?

A) 1730ஆம் ஆண்டு

B) 1731ஆம் ஆண்டு

C) 1732ஆம் ஆண்டு

D) 1733ஆம் ஆண்டு

(குறிப்பு – ராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே பெண் வாரிசாக வேலுநாச்சியார் பிறந்தார்)

33) வேலுநாச்சியார் எந்த மன்னரை மணந்துகொண்டார்?

A) முத்து வடுகநாதர்

B) கோபால நாயக்கர்

C) ராமநாத சேதுபதி

D) விஜயரங்க சேதுபதி

(குறிப்பு – வீரமங்கை வேலுநாச்சியார் தனது பதினாறாவது வயதில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து கொண்டார். வெள்ளச்சி நாச்சியார் என்பவர் வேலுநாச்சியாரின் மகள் ஆவார் )

34) வேலு நாச்சியாரின் காளையார்கோவில் அரண்மனையை எந்த ஆண்டு ஆங்கிலேயர்கள் தாக்கினர்?

A) 1770ஆம் ஆண்டு

B) 1772ஆம் ஆண்டு

C) 1774ஆம் ஆண்டு

D) 1776ஆம் ஆண்டு

(குறிப்பு – 1722 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபும், ஆங்கிலேயரும் இணைந்து வேலு நாச்சியாரின் அரண்மனை யான காளையார்கோவில் அரண்மனையை தாக்கினர். இந்தப் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்)

35) 1772ஆம் ஆண்டு காளையார்கோவில் அரண்மனையை தாக்கிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி யார்?

A) கேப்டன் கேம்பெல்

B) கேப்டன் கில்லஸ்பி

C) லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்

D) லெப்டினன்ட் கர்னல் ஜார்ஜ்

(குறிப்பு – ஆற்காடு நவாபும், லெப்டினன்ட் கர்னல் பான்சோர் தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையை தாக்கினர். இதில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். வேலு நாச்சியார் தனது மகளோடு தப்பித்தார்)

36) வேறு நாச்சியாருக்கும் அவர்தம் மகளான வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்கும் ஆதரவளித்த மன்னர் யார்?

A) கோபால நாயக்கர்

B) லட்சுமி நாயக்கர்

C) பூஜை நாயக்கர்

D) ஆனைமலை நாயக்கர்

(குறிப்பு – வேலுநாச்சியாருக்கும் அவர்தம் மகளுக்கும் கோபாலநாயக்கர் ஆதரவு அளித்து காப்பாற்றினார். எட்டு ஆண்டுகள் வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் ஆதரவில் மறைந்து வாழ்ந்தார்)

37) வேலூர் ஆட்சியருக்கு ஆதரவளித்த கோபால நாயக்கர் எந்தப் பகுதியின் பாளையக்காரர் ஆவார்?

A) விருப்பாட்சி

B) சிவகங்கை

C) ஆனைமலை

D) செங்கோட்டை

(குறிப்பு – கோபால நாயக்கர் விருப்பாட்சியின் பாளையக்காரர் ஆவார். இவர் திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றினார்)

38) வேலுநாச்சியார் சார்பில் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதியவர் யார்?

A) கோபால நாயக்கர்

B) லட்சுமி நாயக்கர்

C) தாண்டவராயனார்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – வேலு நாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கடிதம் எழுதியவர் தாண்டவராயன் ஆர் என்பவர் ஆவார். இவர் வேலுநாச்சியாரின் படையின் ராணுவ தலைவர் ஆவார்)

39) வேலுநாச்சியாருக்கு உதவ ஹைதர் அலி யாரை பணித்தார்?

A) சையது

B) முகமது

C) அப்சல்

D) அகமது

(குறிப்பு – வேலு நாச்சியாரின் படை தலைவரான தாண்டவராயனாரின் கடிதத்தைக் கண்ட ஹைதர் அலி, அவர்களுக்கு உதவ திண்டுக்கல் கோட்டை படைத் தலைவரான சையத் அவர்களுக்கு ஆணையிட்டார்)

40) கோபால நாயக்கர் யாரால் ஈர்க்கப்பட்டார்?

A) ஹைதர் அலி

B) திப்பு சுல்தான்

C) வீரபாண்டிய கட்டபொம்மன்

D) வேலு நாச்சியார்

(குறிப்பு – கோபால நாயக்கர், தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நல்லுறவு குழுவை அனுப்பி வைத்த திப்பு சுல்தானால் ஈர்க்கப்பட்டார். கோயம்புத்தூரை மையமாக கொண்டு பிரிட்டிஷாரை கோபாலநாயக்கர் எதிர்த்தார்)

41) சரியான இணை எது?

I. விருப்பாச்சி – கோபால நாயக்கர்

II. தேவதானப்பட்டி – பூஜை நாயக்கர்

III. மணப்பாறை – லட்சுமி நாயக்கர்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கோபால நாயக்கரை தலைவராக கொண்ட திண்டுக்கல் கூட்டமைப்பில் (Dindigul League) மணப்பாறையின் லட்சுமி நாயக்கர், தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்)

42) ஊமைத்துரையும், கோபால நாயக்கரும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக எங்கு போர் புரிந்தனர்?

A) கோயம்புத்தூர்

B) திண்டுக்கல்

C) ஆனைமலை

D) காளையார்கோவில்

(குறிப்பு – கட்டபொம்மனின் சகோதரரான ஊமைதுரையோடு இணைந்து கோபாலநாயக்கர் உள்ளூர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆனைமலையில் கடும் போர் புரிந்தார். எனினும் ஆங்கிலேயர் படைகளால் அவர் 1801ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டார்)

43) வேலுநாச்சியார் கோபால நாயக்கர் மற்றும் ஹைதர் அலியின் ராணுவ உதவியோடு ____________ கைப்பற்றினார்.

A) மதுரையை

B) சிவகங்கையை

C) தென்காசியை

D) திண்டுக்கல்லை

(குறிப்பு – வேலுநாச்சியார் சிவகங்கையை கைப்பற்றியபின் அரசியாக முடிசூட்டிக்கொண்டார். வேலு வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களின் ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள உளவாளிகளை நியமித்தார்)

44) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாக திகழ்ந்தவர் யார்?

A) உடையாள்

B) குயிலி

C) பூங்குழலி

D) மைனா

(குறிப்பு – வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாக திகழ்ந்தவர் குயிலி. இவர் உடையால் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று வழி நடத்தினார்.)

45) வேலுநாச்சியாரின் தோழி குயிலி எந்த ஆண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கையும் ராணுவ தளவாடங்களையும் அழித்தார்?

A) 1780ஆம் ஆண்டு

B) 1782ஆம் ஆண்டு

C) 1784ஆம் ஆண்டு

D) 1786ஆம் ஆண்டு

(குறிப்பு – 1780ஆம் ஆண்டு தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்கில் இருந்த அனைத்து தளவாடங்களையும் அழித்து விட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டார்)

46) வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த பாளையத்தின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்?

A) பாஞ்சாலங்குறிச்சி

B) எட்டயபுரம்

C) நடுவக்குறிச்சி

D) சிங்கம்பட்டி

(குறிப்பு – தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப்பின் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்)

47) கிழக்கிந்திய கம்பெனியுடன் ஆற்காடு நவாப் எந்த ஆண்டு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்?

A) 1780ஆம் ஆண்டு

B) 1781ஆம் ஆண்டு

C) 1782ஆம் ஆண்டு

D) 1783ஆம் ஆண்டு

(குறிப்பு – மைசூர் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர் புரிந்து கொண்டிருந்த போது கர்நாடகப் பகுதியில் வரி மேலாண்மையும் நிர்வாகமும் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் என கிழக்கிந்திய கம்பெனியுடன் ஆற்காட்டு நவாப் ஒப்பந்தம் மேற்கொண்டார்)

48) 1781ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆற்காடு நவாப் இடையேயான உடன்படிக்கையின்படி கர்நாடகப்பகுதியில் செய்யும் வரிவசூலில் __________________ ஆற்காடு நவாப்பிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் தர வேண்டும் என ஒதுக்கப்பட்டது.

A) ஐந்தில் ஒரு பங்கு

B) ஆறில் ஒரு பங்கு

C) நான்கில் ஒரு பங்கு

D) பத்தில் ஒரு பங்கு

(குறிப்பு – இவ்வாறு கர்நாடகப் பகுதியில் வரிமேலாண்மையும் நிர்வாகமும் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. எனவே பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரிவசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது)

49) வீரபாண்டிய கட்டபொம்மன் 1798ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனிக்கு செலுத்தவேண்டிய வரிநிறுத்தம் எவ்வளவு?

A) 3570 பகோடாக்கள்

B) 3460 பகோடாக்கள்

C) 3310 பகோடாக்கள்

D) 3250 பகோடாக்கள்

(குறிப்பு – கிழக்கிந்திய கம்பெனி வீரபாண்டிய கட்டபொம்மன் இடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவை தொகையானது 3310 பகோடாகளாகும்.)

50) வீரபாண்டிய கட்டபொம்மனை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்க ஆணை பிறப்பித்தவர் யார்?

A) ஜாக்சன்

B) வில்லியம் பிரவுன்

C) வில்லியம் ஓரம்

D) ஜான் காஸா மேஜர்

(குறிப்பு – 1798ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு ஜாக்சன் என்ற ஆங்கிலேய ஆட்சியர் ஆணை பிறப்பித்தார்)

51) வீரபாண்டிய கட்ட பொம்மன் ஜாக்சன் பிரபுவை எப்போது இராமநாதபுரத்தில் சந்தித்தார்?

A) 1798ஆம் ஆண்டு செப்டம்பர் 15

B) 1798ஆம் ஆண்டு செப்டம்பர் 18

C) 1798ஆம் ஆண்டு செப்டம்பர் 12

D) 1798ஆம் ஆண்டு செப்டம்பர் 19

(குறிப்பு – 1798 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய ஆட்சியரான ஜாக்சன் என்பவரை ராமநாதபுரத்தில் சந்தித்தார்.

52) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சந்திப்பின்போது, ஆங்கிலேயரின் கைது செய்யும் முயற்சியில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மனும், அவரது அமைச்சரான ஊமைத்துரையும் தப்பித்தனர்.

கூற்று 2 – வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமைத்துரையின் உதவியோடு இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பித்தார்.

கூற்று 3 – வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சரான சிவசுப்பிரமணியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது அமைச்சராக சிவசுப்பிரமணியனாரும் இராமநாதபுரம் கோட்டையில் இருந்து தப்பிக்க முயன்றனர். எனினும் சிவசுப்பிரமணியன் ஆர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்)

53) வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் குறித்த குற்றச்சாட்டுக்களை மதராஸ் ஆட்சி குழுவிற்கு தெரியப்படுத்தினார். குழுவில் இடம் பெறாதவர் யாவர்?

I. வில்லியம் பிரவுன்

II. வில்லியம் ஓரம்

III. வில்லியம் ஹென்றி

IV. ஜான் காஸாமேஜர்

A) I மட்டும் இல்லை

B) II மட்டும் இல்லை

C) III மட்டும் இல்லை

D) எதுவுமே இல்லை

(குறிப்பு – மதராஸ் ஆட்சி குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், வில்லியம் பிரவுன், வில்லியம் ஓரம், ஜான் காஸாமேஜர் ஆவர். இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை குற்றவாளி அல்ல என்று முடிவு செய்து தீர்ப்பளித்தது)

54) வீரபாண்டிய கட்டபொம்மனை அவமானப்படுத்திய வழக்கில் கலெக்டர் ஜாக்சன் அவர்களை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர் யார்?

A) வில்லியம் பிரவுன்

B) எட்வர்ட் கிளைவ்

C) வில்லியம் ஹென்றி

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – எட்வர்ட் கிளைவ் சுப்பிரமணியனாரை சிறையிலிருந்து விடுவித்தும், கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.)

55) ஆட்சியர் ஜாக்சன் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர் யார்?

A) எஸ் ஆர் லூஷிங்டன்

B) வில்லியம் பியுளே

C) ஜார்ஜ் வாஷிங்டன்

D) பால் காலிங்வுட்

(குறிப்பு – 1798ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் மதராஸ் ஆட்சிக்குழு ஜாக்சன் அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்தது. பின் அவரது இடத்தில் புதிய ஆட்சியராக எஸ்.ஆர். லூஷிங்டன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.)

56) சிவகங்கையின் மருதுபாண்டியர் ஏற்படுத்திய தென்னிந்திய கூட்டமைப்பிற்கு ஆதரவு அளித்தவர்கள் யார்?

I. திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்

II. ஆனைமலையின் யதுல் நாயக்கர்

III. சிவகிரி பாளைய நாயக்கர்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், ஆனைமலையின் யதுல் நாயக்கர் போன்ற அருகாமையில் இருந்த பாளையங்கள் ஐ உள்ளடக்கிய தென்னிந்திய கூட்டமைப்பை சிவகங்கையின் மருதுபாண்டியர் ஏற்படுத்தினார். சிவகங்கையில் மருது பாண்டியர் அதன் தலைவராக செயல்பட்டார்)

57) எந்த பாளையத்தை நோக்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் படை நகர்வை தங்களுக்கு விடப்பட்ட சவாலாக கம்பெனியார் கருதினர்?

A) சிவகிரி பாளையம்

B) சிவகங்கை பாளையம்

C) பாஞ்சாலங்குறிச்சி பாளையம்

D) ஆனைமலை பாளையம்

(குறிப்பு – சிவகிரி பாளையத்தின் ஆர் கம்பெனிக்கு கப்பம் கட்டி வந்தனர். எனவே அவர்களுக்கு ஆதரவாக கம்பெனியார் செயல்பட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் சிவகிரி பாளைய தாக்குதல் கம்பெனியை நோக்கிய தாக்குதலாக கருதினர்)

58) திருச்சிராப்பள்ளி அறிக்கை யாருடைய தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்டது?

A) வீரபாண்டிய கட்டபொம்மன்

B) ஊமைத்துரை

C) மருது பாண்டியர்

D) வேலு நாச்சியார்

(குறிப்பு – தென்னிந்திய கூட்டமைப்பை சிவகங்கையில் மருது பாண்டியர் ஏற்படுத்தினார். அதன் தலைவராக அவர் செயல்பட்டார். அப்போது திருச்சிராப்பள்ளி அறிக்கை தயாரிக்கப்பட்டது.)

59) சிவகிரி பாளையத்திற்கு ஆதரவாக திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டவர் யார்?

A) வெல்லெஸ்லி பிரபு

B) இர்வின் பிரபு

C) டப்ரின் பிரபு

D) கில்லஸ்பி பிரபு

(குறிப்பு – 1799 ஆம் ஆண்டு மே மாதம் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சி தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார்)

60) வீரபாண்டிய கட்டபொம்மனை சரணடைய கூறிய நிபந்தனை எப்போது வழங்கப்பட்டது?

A) 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள்

B) 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள்

C) 1999ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள்

D) 1999ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள்

(குறிப்பு – மேஜர் பானர்மேன் தலைமையில், கம்பெனி படை திருநெல்வேலியை அடைந்தபின் வீரபாண்டிய கட்டபொம்மனை சரணடைய கோரி நிபந்தனை ஒன்று 1799ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் நாள் வழங்கப்பட்டது. கட்டபொம்மன் பிடிகொடுக்காத பதிலால் மேஜர் பானர்மேன் கோட்டையைத் தாக்கினார்)

61) பாண்டிய கட்டபொம்மனிடம் மேஜர் பானர்மேன் யாரை தூதராக அனுப்பினார்?

A) சுப்ரமணியனார்

B) இராமலிங்கர்

C) ஊமைத்துரை

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – 1799ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. மேஜர் பானர்மேன் ராமலிங்கர் i2p கட்டபொம்மனை சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். எனினும் வீரபாண்டியகட்டபொம்மன் மறுத்துவிட்டார்)

62) எங்கு நடைபெற்ற மோதலில் மேஜர் பானர்மேனால் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்?

A) சிவகிரி

B) பாஞ்சாங்குறிச்சி

C) கள்ளர்பட்டி

D) சிவகங்கை

(குறிப்பு – பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் ரகசியங்கள் அனைத்தையும் ராமலிங்கர் சேகரித்து, மேஜர் பானர்மேன் இடம் ஒப்படைத்தார். கள்ளர் பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்)

63) வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சரான சிவசுப்பிரமணியர் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

A) நாகலாபுரம்

B) புதுக்கோட்டை

C) திருப்பத்தூர்

D) எட்டயபுரம்

(குறிப்பு – கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்ற பின்னர் பிரிட்டிஷார் அவரது தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர். சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார். பின்னர் 1799ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்)

64) வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

A) கயத்தாறு

B) திருப்பத்தூர்

C) ஊத்துமலை

D) பாஞ்சாலங்குறிச்சி

(குறிப்பு – மேஜர் பானர்மேன் 1799ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு திருநெல்வேலிக்கு மிக அருகே உள்ள கயத்தாறு பழைய கோட்டைக்கு முன்பாக இருந்த புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்)

65) பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகியோர் யாருடைய படை தளபதிகளாக இருந்தனர்?

A) கோபால நாயக்கர்

B) ராமநாத சேதுபதி

C) விஜயரங்க சேதுபதி

D) முத்துவடுகநாதர்

(குறிப்பு – பெரியமருது என்ற வெள்ளை மருது, அவரது தம்பியான சின்னமருது ஆகிய இருவரும் சிவகங்கையின் முத்துவடுக நாதரின் திறமையான படைத் தளபதிகளாக இருந்தனர். காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் இறந்தபின் வேலுநாச்சியாருக்கு அரசு உரிமையை மீட்டுக் கொடுக்க மருது சகோதரர்கள் அரும்பாடு பட்டனர்)

66) இரண்டாவது பாளையக்காரர் போர் என்று அழைக்கப்பட்ட போரில் பங்கு பெற்றவர்கள் யார்?

I. மருது பாண்டியர்

II. கோபால நாயக்கர்

III. மலபாரின் கேரளவர்மா

IV. மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – 1800ல் இரண்டாவது பாளையக்காரர் போர் என்னும் போர் வெடித்தது, இதில் மேற்கண்ட அனைவரும் அடங்கிய கூட்டமைப்பால் வழி நடத்தப்பட்டது. விருப்பாட்சியில் ஏப்ரல் 1800 ஆம் ஆண்டு இவர்கள் அனைவரும் சந்தித்து கிழக்கிந்திய கம்பெனி யாருக்கு எதிராக கிளர்ந்தெழ முடிவெடுத்தார்கள்)

67) கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?

கூற்று 1 – 1800ஆம் ஆண்டு இரண்டாம் பாளையக்காரர் போர் வெடித்தது.

கூற்று 2 – கோயம்புத்தூர் சத்தியமங்கலம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்கள் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்.

கூற்று 3 – கோயம்புத்தூரில் 1801ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட எழுச்சி அதிவேகமாக ராமநாதபுரம் மற்றும் மதுரைக்கும் பரவியது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – கோயம்புத்தூரில் ஜூன் மாதம் 1800 இல் ஏற்பட்ட எழுச்சி அதிவேகமாக ராமநாதபுரத்திற்கு மதுரைக்கும் பரவியது. நிலைமையை புரிந்து கொண்ட கம்பெனியார் மைசூரில் கிருஷ்ணப்பா மீதும் மலபாரில் கேரளவர்மா மீதும் போர் தொடுத்தனர்)

68) பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை யாருடைய தலைமையின் கீழ் பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டனர்?

A) காலின் மெக்காலே

B) காலிங்வுட்

C) வில்லியம் ஹென்றி

D) மேஜர் ஜோசப்

(குறிப்பு – காலிங் மெக்காலே தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் 1801ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் கோட்டையை முற்றுகையிட்டனர்.)

69) ஊமைத்துரைக்கும், செவத்தையாவிற்கும் அடைக்கலம் அளித்தவர் யார்?

A) வேலு நாச்சியார்

B) கோபால நாயக்கர்

C) கட்டபொம்மன்

D) மருது சகோதரர்

(குறிப்பு – கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் செவத்தையாவும் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி கமுதியில் பதுங்கி இருந்தனர். இவர்களை சின்னமருது அவர்கள் தமது தலைமை இடமான சிறு வயலுக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் அளித்தார்)

70) கட்டபொம்மனின் சகோதரர்களை மருது பாண்டியர்கள் ஒப்படைக்க மறுத்ததால் அவர்களை நோக்கி படை நடத்திச் சென்ற ஆங்கிலேயர்கள் யார்?

I. கர்னல் அக்னியூ

II. கர்னல் இன்னஸ்

III. மேஜர் பானர்மேன்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – மருது சகோதரர்கள் ஊமைத்துரையையும், செவத்தையாவையும் ஒப்படைக்க மறுத்ததால் கர்னல் அக்னியூ, கர்னல் இன்னஸ் ஆகியோர் சிவகங்கையை நோக்கி படை நடத்திச் சென்றனர்.)

71) திருச்சிராப்பள்ளி பேர் அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

A) 1801 ஜூன்

B) 1801 ஆகஸ்ட்

C) 1801 செப்டம்பர்

D) 1801 நவம்பர்

(குறிப்பு – மருது சகோதரர்கள் ஜூன் 1801ஆம் ஆண்டு நாட்டின் விடுதலை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். இதுவே திருச்சிராப்பள்ளி பேரறிக்கை என்றழைக்கப்படுகிறது)

72) திருச்சிராப்பள்ளி பெயர் அறிக்கை என்று அழைக்கப்பட்ட 1801ஆம் ஆண்டு பீர் அறிக்கை எங்கு ஒட்டப்பட்டது?

I. திருச்சியில் உள்ள நவாப்பின் கோட்டை முன் சுவரில்

II. ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச்சுவரில்

III. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை சுவரில்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆங்கிலேயருக்கு எதிரான மண்டல சாதி சமய இன வேறுபாடுகளை கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.)

73) திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளித்த அரசர்கள் யார்?

A) புதுக்கோட்டை அரசர்

B) எட்டயபுரம் அரசர்

C) தஞ்சாவூர் அரசர்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி பாளையக்காரர்களிடையே படை பிரிவினையை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை, எட்டயபுரம் மற்றும் தஞ்சாவூர் அரசர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளித்தனர்)

74) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்?

A) அக்டோபர் 24, 1801ஆம் ஆண்டு

B) அக்டோபர் 16, 1801ஆம் ஆண்டு

C) அக்டோபர் 22, 1801ஆம் ஆண்டு

D) அக்டோபர் 19, 1801ஆம் ஆண்டு

(குறிப்பு – 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று மருது சகோதரர்கள் இராமநாதபுரத்தின் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்)

75) ஊமைத்துரையும், செவத்தையாவும் கொல்லப்பட்ட நாள்?

A) நவம்பர் 6, 1801

B) நவம்பர் 16, 1801

C) நவம்பர் 26, 1801

D) நவம்பர் 30, 1801

(குறிப்பு – வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும் செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்)

76) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஆங்கிலேயர்கள் மே மாதம் 1801ஆம் ஆண்டு தஞ்சாவூரிலும் திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களை தாக்கினார்கள்.

கூற்று 2 – கலகக்காரர்கள் காளையார்கோவிலில் தஞ்சம் புகுந்தனர்.

கூற்று 3 – 1802 ஆம் ஆண்டு சிவகங்கை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – வலுவான ராணுவமும் சிறப்பான தலைமைத்துவமும் கொண்ட ஆங்கிலேய கம்பெனி, கலகக்காரர்களை ஒடுக்கி 1801ஆம் ஆண்டு சிவகங்கையை கைப்பற்றியது)

77) கர்நாடக உடன்படிக்கை எப்போது ஏற்படுத்தப்பட்டது?

A) ஜூலை 31, 1801

B) ஜூன் 25, 1801

C) அக்டோபர் 15, 1801

D) டிசம்பர் 25, 1801

(குறிப்பு – 1801ஆம் ஆண்டு ஜூலை 31 இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி ஆங்கிலேயர்கள் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்தது)

78) 1801ஆம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாம் பாளையக்காரர்கள் போரின் இறுதியில் கலகக்காரர்கள் எந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்?

A) மியான்மர்

B) இந்தோனேஷியா

C) பினாங்

D) பர்மா

(குறிப்பு – 1801ஆம் ஆண்டு கலகக்காரர்கள் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேயாவில் உள்ள பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர். பாளையக்காரர்கள் வீழ்ச்சி அடைந் தாலும் அவர்களது வீரமும் தியாகமும் எதிர்கால சந்ததிகளை இருப்பதாக அமைந்தது. எனவே மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்திய புரட்சி என்று அழைக்கப்படுகிறது)

79) தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு எது?

A) 1755

B) 1756

C) 1757

D) 1758

(குறிப்பு – தீர்த்தகிரி என்ற பெயரோடு பழையகோட்டை மன்றாடியார் பட்டம் பெற்ற மதிப்புமிகு குடும்பத்தில் 1756ஆம் ஆண்டு தீரன் சின்னமலை பிறந்தார். கொங்கு பகுதிகளில் நிலப் பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்குதல் போன்ற செயல்களை செய்து வந்தார்)

80) தீரன் சின்னமலை திப்பு சுல்தானின் திவானாக இருந்த ___________ என்பவரிடம் இருந்து வழிமறித்து வரிப்பணத்தை பறித்துக்கொண்டார்.

A) திவான் முகம்மது அலி

B) திவான் அகமது ஷா

C) திவான் ஷா ஆலம்

D) இவர்கள் yaarumillai

(குறிப்பு – கொங்கு மண்டலம் மைசூரின் திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது.திப்புவின் திவான் முகமது அலி என்பவரால் வரி வசூல் செய்யப்பட்டது. தீரன் சின்னமலை இவரிடமிருந்து வழிமறித்து வரிப் பணத்தை பறித்துக் கொண்டார். )

81) திவானின் படைகளும், தீரன் சின்னமலையின் படையும் எந்த இடத்தில் மோதிக் கொண்டனர்?

A) காவிரி ஆற்றங்கரையில்

B) நொய்யல் ஆற்றங்கரையில்

C) பாலாறு ஆற்றங்கரையில்

D) அமராவதி ஆற்றங்கரையில்

(குறிப்பு – திப்பு சுல்தானின் திவான் படையும், தீரன் சின்னமலையின் படையும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதிக்கொண்டன. அதில் தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்)

82) தீரன் சின்னமலைக்கு பயிற்சி அளித்தவர்கள் யார்?

A) பிரஞ்சுக்காரர்கள்

B) டச்சுக்காரர்கள்

C) போர்த்துக்கீசியர்கள்

D) சீனர்கள்

(குறிப்பு – பிரஞ்சுக்காரர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட தீரன் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு உடன் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராக சண்டையிட்டார்)

83) திப்புவின் இறப்பிற்குப் பிறகு தீரன் சின்னமலை எழுப்பிய கோட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஓடாநிலை

B) கொங்கு கோட்டை

C) சின்னமலை கோட்டை

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – தீரன் சின்னமலை திப்புவின் இறப்பிற்குப் பிறகு எழுப்பிய கோட்டையை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். எனவே அவ்விடம் ஓடாநிலை என்றழைக்கப்படுகிறது. அவர் பிடிபடாமல் இருக்க கொரில்லா முறைகளைக் கையாண்டார்)

84) தீரன் சின்னமலை எந்தக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்?

A) சங்ககிரி கோட்டை

B) வேலூர் கோட்டை

C) ஓடாநிலை கோட்டை

D) திருச்சி கோட்டை

(குறிப்பு – தீரன் சின்னமலையும், அவர்தம் ஆதரவாளர்களையும் ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அவர்களை சங்ககிரியில் உள்ள சிறையில் சிறை வைத்தனர், பின்னர் சங்ககிரி கோட்டையில் உச்சியில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்)

85) தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் எது?

A) ஜூலை 31, 1805

B) ஜூன் 24, 1805

C) ஆகஸ்ட் 20, 1805

D) டிசம்பர் 30, 1805

(குறிப்பு – தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையின் உச்சியில் 1805ஆம் ஆண்டு தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார்)

86) கிழக்கிந்திய கம்பெனி__________ இப்போது ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களை பெற்றுக்கொண்டது.

A) 1790ஆம் ஆண்டு

B) 1792ஆம் ஆண்டு

C) 1794ஆம் ஆண்டு

D) 1796ஆம் ஆண்டு

(குறிப்பு – தென் தமிழகத்தின் பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்குவதற்கு முன்பாகவே கிழக்கிந்திய கம்பெனி 1792 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை பெற்றுக்கொண்டது)

87) ஆங்கிலேய மைசூர் போர் நிகழ்ந்த ஆண்டு எது?

A) 1793ஆம் ஆண்டு

B) 1796ஆம் ஆண்டு

C) 1799ஆம் ஆண்டு

D) எல்லாமே தவறு

(குறிப்பு – 1799இல் நடந்த ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் ஆங்கிலேயர்களின் ஆட்சியோடு இணைக்கப்பட்டது)

88) 1801ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி ஆற்காடு நவாப் கீழ்க்காணும் எந்த மாவட்டங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார்?

I. வட மற்றும் தென் ஆற்காடு

II. திருச்சிராப்பள்ளி

III. மதுரை

IV. திருநெல்வேலி

V. ராமநாதபுரம்

A) I, II, III, V மட்டும்

B) I, II, III, IV மட்டும்

C) II, III, IV, V மட்டும்

D) I, III, IV, V மட்டும்

(குறிப்பு – 1801ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப் விசுவாசம் அற்றவர் என்று குற்றம் சுமத்தி அவர் மீது கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்தை திணித்தனர். அதன்படி வடக்கு ஆற்காடு, திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ஆங்கிலேயருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.)

89) வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது?

A) 1805ஆம் ஆண்டு

B) 1806ஆம் ஆண்டு

C) 1807ஆம் ஆண்டு

D) 1808ஆம் ஆண்டு

(குறிப்பு – 1801ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஆற்காடு நவாபின் பல பகுதிகளை ஆங்கிலேயர்கள் நிர்வகிக்கும் உரிமையை பெற்றனர். மேலும் சிற்றரசர்களும் நிலச்சுவான்தாரர்களும் வெளியேற்றப்பட்டனர். இவற்றின் விளைவாக வெளிப்பட்டது 1806ஆம் ஆண்டு நிகழ்ந்த வேலூர் புரட்சி ஆகும்)

90) வேலூர் புரட்சி ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக தலைமை தளபதி ____________ வெளியிட்ட புதிய ராணுவ விதிமுறை அமைந்தது.

A) மேஜர் கில்லஸ்பி

B) மேஜர் காலிவுட்

C) சர் ஜான் கிரடாக்

D) சர் ஜான் ஹென்றி

(குறிப்பு – சர் ஜான் கிரடாக் வெளியிட்ட புதிய ராணுவ விதிமுறையின்படி, இந்திய வீரர்கள் சீருடையில் இருக்கும் போது சாதி அடையாளங்களை காலணிகளை அணியக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்)

91) வேலூர் புரட்சி வெடித்த நாள் எது?

A) ஜூன் 10

B) ஜூலை 10

C) ஜூன் 11

D) ஜூலை 11

(குறிப்பு – தலைப்பாகையில் வைக்கப்படும் விலங்கு தோலினால் ஆன இலச்சினையை, அடியே தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று இந்திய சிப்பாய்கள் அறிவித்த போதும் அதை ஆங்கிலேயர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் வேலூர் புரட்சி வெடித்தது)

92) வேலூர் புரட்சியின் முதல் பலியாக கருதப்படுபவர்?

A) மேஜர் கில்லஸ்பி

B) மேஜர் கூட்ஸ்

C) கர்னல் பேன்கோர்ட்

D) கர்னல் மீகாரஸ்

(குறிப்பு – இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர். கோட்டை காவல் படையின் உயர் பொறுப்பு வகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர் வேலூர் புரட்சியின் முதல் பலியானார். கர்னல் மீகாரஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.)

93) வேலூர் புரட்சியின் போது கொல்லப்பட்ட பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவை சேர்ந்தவர்களில் சரியானவர் யார்?

I. லெப்டினன்ட் எல்லி

II. லெப்டினன்ட் பாப்ஹாம்

III. லெப்டினன்ட் பியூலி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்திமூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.கர்னல் மீகாரஸ், மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ஆங்கிலேய வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்)

94) வேலூர் புரட்சியை அடக்கியதில் பங்கு பெற்றவர்கள் யார்?

I. கர்னல் ஜில்லஸ்பி

II. கேப்டன் யங்க்

III. மேஜர் கூட்ஸ்

A) II, III மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ், ஆற்காட்டின் குதிரைப் படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார். கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரை படைப் பிரிவுடன் கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார்.பின்னர் புரட்சி அடக்கப்பட்டது.)

95) வேலூர் புரட்சியின் போது புரட்சிக்காரர்கள் யாரை புதிய மன்னராக பிரகடனம் செய்தனர்?

A) ஃபதே ஹைதர்

B) முகமது ஷா

C) ஹைதர் அலி

D) பகதூர் ஷா

(குறிப்பு – வேலூர் புரட்சியின் போது புரட்சிக்காரர்கள் திப்புசுல்தானின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராக பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர்.)

96) வேலூர் புரட்சிக்குப் பின்னர் திப்பு சுல்தானின் மகன் எங்கு அனுப்பட்டார்?

A) மும்பை

B) கல்கத்தா

C) ஹைதராபாத்

D) அலகாபாத்

(குறிப்பு – வேலூர் புரட்சி அடக்கப்பட்ட பின்னர், திப்புவின் மகன்கள் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.புரட்சியை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டது)

97) வேலூர் புரட்சிக்கு பின்னர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் யார்?

I. தலைமை தளபதி ஜான் கிரடாக்

II. உதவி தளபதி அக்னீயூ

III. ஆளுனர் வில்லியம் பெண்டிக்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வேலூர் புரட்சிக்கு மேற்கண்ட அனைவரும் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு ஆங்கிலேயே கம்பெனியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து நாட்டிற்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டனர்.)

98) வேலூர் புரட்சிக்கான ஏற்பாடுகளை செய்தவர்களாக கருதப்படுபவர்களில் கீழ்கண்டவருள் தவறானவர் யார்?

A) சுபேதார் ஷேக் ஆடம்

B) சுபேதார் ஷேக் ஹமீது

C) ஜமேதார் ஷேக் ஹுசைன்

D) ஜமேதார் அல் ஹாசன்

(குறிப்பு – 23ஆம் படைப்பிரிவின் 2வது பட்டாளத்தை சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடம், ஷேக் ஹமீது, ஜமேதரான ஷேக் ஹுசைன், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தை சார்ந்த இரு சுபேதார்களும் செய்தனர்.)

99) பொருத்துக

I. கர்னல் ஹெரான் – a) மருது சகோதரர்கள்

II. களக்காடு போர் – b) தீரன் சின்னமலை

III. நொய்யல் கரை போர் – c) பூலித்தேவர்

IV. காளையார் கோவில் – d) மாபூஸ்கான் தோல்வி

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-b, III-c, IV-a

C) I-b, II-a, III-d, IV-c

D) I-c, II-a, III-b, IV-d

(குறிப்பு – 1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்து விடவில்லை. பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதெராபாத், பெங்களூரு, நந்தி துர்க்கம் போன்ற இடங்களிலும் பரவியது.)

100) பொருத்துக

I. சிவசுப்ரமணியனார் – a) கயத்தாறு

II. கட்டபொம்மன் – b) திருப்பத்தூர்

III. ஊமைத்துரை – c) நாகலாபுரம்

IV. மருது சகோதரர்கள் – d) பாஞ்சாலங்குறிச்சி

A) I-c, II-a, III-d, IV-b

B) I-d, II-a, III-b, IV-c

C) I-b, II-a, III-d, IV-c

D) I-a, II-c, III-d, IV-b

(குறிப்பு – மேற்கண்ட அனைவரும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட காரணத்தினால் தூக்கில் இடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!