Book Back QuestionsTnpsc

ஆசியா மற்றும் ஐரோப்பா Book Back Questions 6th Social Science Lesson 20

6th Social Science Lesson 20

20] ஆசியா மற்றும் ஐரோப்பா

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆசியாவில் 12 நாடுகள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அதில் ஒன்று இரண்டு முறை நிலத்தால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. அதாவது, அந்நாட்டைச் சூழ்ந்துள்ள அனைத்து நாடுகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடுகளாகும். அந்நாடு எது என்பதைக் கண்டறிக.

“முடிச்சு” என்பது மலைத் தொடர்கள் கூடும்/பிரியும் இடங்கள் ஆகும்.

திபெத் “உலகின் கூரை” என அழைக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடுங் குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல் காணப்படுவதாலும் திபெத் “மூன்றாம் துருவம்” என்றும் அழைக்கப்படுகின்றது.

ஓன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியா மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும்.

முப்பள்ளத்தாக்கு நீர்த் தேக்கமானது யாங்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இஃது உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இது சீனாவின் மின்சார தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

பாலைவனம்: பாலைவனப் பிரதேசம் என்பது மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதியாகும். இங்குக் குறைந்த அளவிலேயே தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. ஆசியாவில் இரண்டு வகையான பாலைவனங்கள் உள்ளன. வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனம்.

ரூப-அல்-காலி பாலைவனம் உலகின் மிகத் தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனமாகும். இது சௌதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றது.

பனாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம்: இப்கௌஸ் என்ற பிலிப்பைன்ஸ் மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன் இது உருவாக்கப்பட்டதாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1524 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

அங்கோர்வாட்: இஃது உலகப் பாரம்பரிய தளமாகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரால் கி. பி. (பொ. ஆ) 1100ம் ஆண்டில் கம்போடியாவில் கட்டப்பட்டது. கெமர் மொழியில் “அங்கோர்வாட்” என்றால் “கோயில்களின் நகரம்” எனப் பொருள், இதுவே உலகின் மிகப்பெரிய கோயிலாகும்.

ஐரோப்பிய ஒன்றியம்: ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது 28 உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும். இது தனக்கென ஒரு தனி கொடியும், பொதுவான நாணய (யூரோ) (€) மதிப்பும் கொண்டது.

நெதர்லாந்து: நெதர்லாந்தில் சுமார் 25 சதவீத நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழாகக் காணப்படுகின்றது. எனவே டைக் (dikes) எனப்படும் பெருஞ்சுவர்களை எழுப்பியுள்ளனர். இந்த டைக்குகளினால் கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுத்துள்ளனர். கடலிலிருந்து மீட்டெக்கப்பட்ட இந்நிலங்கள் “போல்டர்கள்” என அழைக்கப்படுகின்றன.

ஃபியார்ட் (fjord) (பிளவுபட்ட கடற்கரை) செங்குத்தான பாறைகளுக்கிடையே (பனியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை எனப்படும். பின்வரும் வழிகளில் பயன்படுகிறது. 1. இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன. 2. கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே, இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது.

கருங்காடுகள்: கருத்த நிறமுடைய, செழித்து வளரும் அத்தி மற்றும் பைன் மரங்கள் இப்பகுதிக்குக் கருமை நிறத்தை அளிக்கின்றன.

மேட்டர்ஹார்ன்: பிரமிடு வடிவத்தில் காணப்படும் மேட்டர்ஹார்ன் மலை சுவிஸ்நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 4478மீ ஆகும். இம்மலை இதன் வடிவத்திற்குப் புகழ் பெற்றதாகும்.

காலநிலை பிரிப்பான்: ஆல்ப்ஸ் மலைதொடர் மத்தியத் தரைகடல் காலநிலையையம் வட ஐரோப்பாவில் காணப்படும் குளிர்ந்த கால நிலையும் பிரிக்கின்ற ஒரு அரணாக உள்ளது.

வட அட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கின்றது. மேலும் மேற்கத்திய காற்று ஐரோப்பா முழுவதும் வெப்பத்தைக் கடத்துகின்றது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

(அ) கருங்கடல்

(ஆ) மத்திய தரைக்கடல்

(இ) செங்கடல்

(ஈ) அரபிக்கடல்

2. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப்பீடபூமி

(அ) திபெத்

(ஆ) ஈரான்

(இ) தக்காணம்

(ஈ) யுனான்

3. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது

i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

ii) சராசரி மழையளவு 200 மி. மீ ஆகும்.

iii) சராசரி வெப்பநிலை 100 C ஆகும்.

மேற்கண்ட கூற்றுகளில்

(அ) i மட்டும் சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) i மற்றும் iii சரி

(ஈ) i மற்றும் ii சரி

4. பட்டியல் i ஐ பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

பட்டியல் I – பட்டியல் II

A. மலேசியா – 1. அத்தி

B. தாய்லாந்து – 2. ரப்பர்

C. கொரியா – 3. தேக்கு

D. இஸ்ரேல் – 4. செர்ரி

குறியீடுகள்:

A B C D

(அ) 2 3 4 1

(ஆ) 4 3 2 1

(இ) 4 3 1 2

(ஈ) 2 3 1 4

5. இந்தியா _________ உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது

(அ) துத்தநாகம்

(ஆ) மைக்கா

(இ) மாங்கனீசு

(ஈ) நிலக்கரி

6. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை

(அ) ஆஸ்ப்ஸ்

(ஆ) பைரனீஸ்

(இ) கார்பேதியன்

(ஈ) காகஸஸ்

7. “ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது” சரியான தெரிவினைத் தேர்வு செய்க

(அ) இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.

(ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.

(இ) இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.

(ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி.

8. கீழ்கண்டவற்றுளன் தவறான கூற்று எது?

(அ) ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.

(ஆ) ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

(இ) ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

(ஈ) ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.

9. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) மெஸடா – ஸ்பெயின்

(ஆ) ஜீரா – பிரான்ஸ்

(இ) பென்னின்ஸ் – இத்தாலி

(ஈ) கருங்காடுகள் – ஜெர்மனி

10. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

(அ) ஐஸ்லாந்து

(ஆ) நெதர்லாந்து

(இ) போலந்து

(ஈ) சுவிட்சர்லாந்து

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் __________ முடிச்சிலிருந்து பிரிக்கின்றது.

2. உலகின் மிக ஈரப்பதமான இடம் __________

3. உலகிலேயே __________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.

4. ஐரோப்பாவையும், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் கடல்வழி __________

5. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ___________

6. ஐரோப்பாவின் இரண்டாவது உயரமான சிகரம் ____________

7. ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ___________

8. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் __________

9. ஐரோப்பாவின் மக்களடர்த்தி __________

10. ____________ ஆறு ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது.

பொருத்துக:

1. மெசபடோமியா சமவெளி – அதிக மழை

2. மௌசின்ராம் – நார்வே

3. அரிசிக் கிண்ணம் – ஸ்பெயின்

4. ஃபியார்டு கடற்கரை – யூப்ரடீஸ் & டைக்ரிஸ்

5. எருதுச் சண்டை – தாய்லாந்து

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று A: இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.

காரணம் R: இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது

(அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல.

(இ) A சரி. ஆனால் R தவறு.

(ஈ) A தவறு. ஆனால் R சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அரபிக்கடல் 2. ஈரான் 3. i மட்டும் சரி

4. பொருத்துக: (விடைகள்)

i) மலேசியா – ரப்பர்

ii) தாய்லாந்து – தேக்கு

iii) கொரியா – செர்ரி

iv) இஸ்ரேல் – அத்தி

5. மைக்கா 6. பைரனீஸ்

7. இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.

8. ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.

9. பொருந்தாத இணை: (விடை)

இ) பென்னின்ஸ் – இத்தாலி

10. ஐஸ்லாந்து

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆர்மீனியன் 2. மௌசின்ராம் 3. பேரிச்சம்பழம் 4. சூயஸ்கால்வாய் 5. டினிக்லிங்

6. மாண்ட் பிளாங் 7. கண்ட காலநிலை 8. டாகர் பாங்க்ஸ் 9. 26105 நபர்கள்/ச. கி. மீ

10. டேன்யூப்

பொருத்துக: (விடைகள்)

1. மெசபடோமியா சமவெளி – யூப்ரடீஸ் ரூ டைக்ரிஸ்

2. மௌசின்ராம் – அதிக மழை

3. அரிசிக் கிண்ணம் – தாய்லாந்து

4. ஃபியார்டு கடற்கரை – நார்வே

5. எருதுச் சண்டை – ஸ்பெயின்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடை)

1. (A) தவறு, ஆனால் (R) சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!