Book Back QuestionsTnpsc

இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Book Back Questions 8th Social Science Lesson 12

8th Social Science Lesson 12

12] இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

2017ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் இந்தியா மிகப் பெரிய நாடாகவும் (17 மில்லியன்) இதைத் தொடர்ந்து மெக்சிகோவும் (13 மில்லியன்) உள்ளன.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெயர்கிறார்கள்.

சமீப காலங்களில் சர்வதேச அளவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2000இல் 173 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010இல் 220 மில்லியன்களாகவும் 2017இல் 258 மில்லியன்களாகவும் அதிகரித்துள்ளது.

2007ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது. அதன் பிறகு நகர்புற மக்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018-2050ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் 35 சதவீதத்தைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் இந்தியா 416 மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையையும், சீனா 255 மில்லியன் மக்கள் தொகையையும், நைஜீரியா 159 மில்லியன் மக்கள் தொகையையும் நகர்ப்புறவாசிகளாக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.

1950இல் உலகின் மக்கள் தொகையில் 30 சதவீதம் நகர மக்கள் தொகையாகும். 2050இல் இவை 68 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலக நகரமயமாக்கல்
வ. எண் கண்டங்கள் நகர மக்கள் தொகை (%)
1 வட அமெரிக்கா 82
2 இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் 81
3 ஐரோப்பா 74
4 ஓசியானியா 68
5 ஆசியா 50
6 ஆப்பிரிக்கா 43
உலக சராசரி 55
அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் முதல் ஐந்து மாநகரங்கள்
மாநகரத்தின் பெயர் மக்கள் தொகை (மில்லியனில்)
1. டோக்கியோ (ஜப்பான்) 37
2. புது தில்லி (இந்தியா) 29
3. சாங்காய் (சீனா) 26
4. மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) 22
5. சா பாலோ (பிரேசில்) 22

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மக்கள் ____________ லிருந்து __________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.

(அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

(ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

(இ) மலையிலிருந்து சமவெளிக்கு

(ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ___________ எனப்படுகிறது.

(அ) குடிபுகுபவர்

(ஆ) அகதி

(இ) குடியேறுபவர்

(ஈ) புகலிடம் தேடுபவர்

3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது ____________

(அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

(ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

(இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

(ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு

4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு __________ ஐ சார்ந்தது.

(அ) மக்களியல்

(ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்

(இ) அரசியல்

(ஈ) பொருளாதாரம்

5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________

(அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

(ஆ) கால்நடை வளர்ப்பு

(இ) மீன் பிடித்தல்

(ஈ) வேட்டையாடுதல்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நகரமயமாதல் __________ எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

2. ___________ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.

3. இந்தியாவின் ____________ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.

4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ___________ இடம்பெயர்வு எனப்படும்.

5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ___________ வளர்ச்சியால் அதிகரிக்கிறது.

பொருத்துக:

1. குடிபெயர்தல் – குடிபுகுபவர்

2. குடியேற்றம் – வெளியேறுதல்

3. இழுக்காரணி – வேலை வாய்ப்பின்மை

4. உந்து காரணி – சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு

5. திருமணம் – வேலைவாய்ப்புகள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெரு நகரங்களில் காணப்படுகிறது.

2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.

3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.

4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.

5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அமைக்கப்படுகிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.

காரணம்: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

(அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு (ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி (ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு 2. குடியேறுபவர்

3. கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு 4. அரசியல் 5. மிகையான உணவு தானிய உற்பத்தி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மூன்று 2. வேலையின்மை 3. புது தில்லி 4. தன்னார்வ

5. தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் தொழிற்துறை

பொருத்துக: (விடைகள்)

1. குடிபெயர்தல் – வெளியேறுதல்

2. குடியேற்றம் – குடிபுகுபவர்

3. இழுக்காரணி – வேலைவாய்ப்புகள்

4. உந்து காரணி – வேலை வாய்ப்பின்மை

5. திருமணம் – சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு

சரியான / தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: நகரமயமாக்கம் நீண்ட கால வரலாறுடையது.

4. சரி

5. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!