Ethics Questions

இந்தியப் பண்பாடும் சமயங்களும் 12th Ethics Lesson 4 Questions

12th Ethics Lesson 4 Questions

4] இந்தியப் பண்பாடும் சமயங்களும்

1) நம் நாட்டின் பண்பாட்டுயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன எவை?

A) ஆன்மீக அறிவு

B) சமயங்கள்

C) கலாச்சாரம்

D) A மற்றும் B

விளக்கம்: நம் நாட்டின் பண்பாட்டுயர்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன சமயங்களாகும். நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் வாழ்வியல்முறைகள், மனப்பக்குவம், ஆன்மீக அறிவு போன்றவற்றைச் சமயங்களே தீர்மானிக்கின்றன. எது நல்லது? எது கெட்டது? என்பதைத் தெளிவுபடுத்தும் சமயங்கள், அவர்களுக்கு வாழ்வின் மெய்ப்பொருளை உணர்த்துகின்றன.

2) சமயங்கள் மக்களுக்கு எது மிக அவசியமானது என வலியுறுத்துகின்றன?

A) அறம்

B) பொருள்

C) இன்பம்

D) வீடுபேறு

விளக்கம்: சமயங்கள், மக்களுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விட வீடுபேறே அவசியமானது என்று வலியுறுத்துகின்றன. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றிச் சமூக பணிகளையும் சமயங்கள் ஊக்குவிக்கின்றன. உலகின் ஒரே பரம்பொருள் கடவுள் என்று இவை கூறுகின்றன. பரம்பொருள் ஒன்றே என்றாலும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொரு விதமாக அப்பரம்பொருளை வழிபடுகின்றனர்.

3) தமிழறிஞர்கள் ‘சமயம்’ என்ற சொல் எதிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர்?

A) சமைத்தல்

B) ஆன்மீகம்

C) சமை

D) சுமை

விளக்கம்: தமிழறிஞர்கள் “சமயம்” என்ற சொல் ‘சமை’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். சமைத்தல் என்றால் மூலப்பொருட்களைக் கொண்டு சமைக்கும் போது உண்பதற்கு பக்குவப்படுத்துவதுபோல, சமயத்தில் இணையும் மனிதன் மனப்பக்குவம் அடைகிறான் எனக் கருதலாம்.

4) “அஜிதநாதர்” பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க

A) 2-ம் தீர்த்தங்கரர்

B) மூல பெண் தெய்வம் – அஜிதபலா

C) சின்னம் – யானை

D) அனைத்தும் சரி

விளக்கம்: 2-ம் தீர்த்தங்கரர்

மூல பெண் தெய்வம் – அஜிதபலா

சின்னம் – யானை

5) தவறானதைத் தேர்வு செய்க.

A) சமயம், மனிதனை அறிவுநெறிப்பட்டவனாக்குகிறது, அன்புடையவனாக்குகிறது. அமைதிக்கு வழிவகுக்கிறது. கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்கிறது.

B) சமயம், மனிதனை மாற்றுகிறது. தன்னை உணரும்படி செய்து, தன்னிடமுள்ள அன்பை உலகிற்கு உணர்த்தி உலக உயிர்களைப் பாதுகாக்கிறது.

C) சமயம், சமயச் சடங்குகள் மூலம் மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகின்றது. அவனது ஆன்மீகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது

D) அனைத்தும் சரி

விளக்கம்: சமயம், மனிதனை அறிவுநெறிப்பட்டவனாக்குகிறது, அன்புடையவனாக்குகிறது. அமைதிக்கு வழிவகுக்கிறது. கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்கிறது.

சமயம், மனிதனை மாற்றுகிறது. தன்னை உணரும்படி செய்து, தன்னிடமுள்ள அன்பை உலகிற்கு உணர்த்தி உலக உயிர்களைப் பாதுகாக்கிறது.

சமயம், சமயச் சடங்குகள் மூலம் மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகின்றது. அவனது ஆன்மீகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது

6) மனிதர்களது அறிவுப் பசிக்கு தத்துவக் கோட்பாடுகளின் மூலம் உணவளிப்பது எது?

A) அறிவியல்

B) விஞ்ஞானி

C) சமயம்

D) A மற்றும் C

விளக்கம்: மனிதர்களது அறிவுப் பசிக்கு தத்துவக் கோட்பாடுகள் மூலம் உணவளிப்பது சமயமே ஆகும்.

7) பொருத்தமற்றதை தேர்வு செய்க.

A) சீக்கியம்

B) ஜெராஸ்டிரம்

C) கிறித்துவம்

D) இஸ்லாம்

விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்கள் – இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம்

இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படும் சமயங்கள் – இஸ்லாம், கிறித்துவம், ஜெராஸ்டிரியம்

8) எந்த நாடு, பல சமயங்களின் தாயகமாகும்?

A) நேபாள்

B) பூடான்

C) வங்காளதேசம்

D) இந்தியா

விளக்கம்: இந்தியா பல சமங்களின் தாயகமாகும். நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.

9) இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது எது?

A) இந்து

B) சீக்கியம்

C) சமணம்

D) புத்தமதம்

விளக்கம்: இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும். இஃது, உலகச் சமயங்களுள் தொன்மையான சமயமாகக் கருதப்படுகிறது.

10) பெரும்பாலான இந்துக்கள் எங்கு வசிக்கின்றனர்?

A) இந்தியா, பூடான்

B) இந்தியா, நேபாளம்

C) இந்தியா, வங்கதேசம்

D) இந்தியா, இலங்கை

விளக்கம்: பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றனர். பிற சமயங்களைப்போல் அல்லாது, இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை.

11) பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயம் எது?

A) இந்து

B) சீக்கியம்

C) சமணம்

D) புத்தமதம்

விளக்கம்: பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பவனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே, இந்து சமயமாகும்.

12) பாரத நாட்டை சிந்து ஆற்றின் பெயரால்(ஸிந்து) ஹிந்து என்று அழைத்தவர் யார்?

A) கிரேக்கர்

B) அராபியர்

C) பாரசீகர்

D) அனைத்தும்

விளக்கம்: கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால் (ஸிந்து) ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடையில் ஹிந்து என்று மாறியது. அது தமிழில் ‘இந்து’ என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும், இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.

13) இந்து – பிரித்தெழுதுக

A) இந்திஸ் + உ

B) ஹிந்தி + உ

C) ஹிம் + து

D) இம் + து

விளக்கம்: ‘இந்து’ அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை “ஹிம் + து” எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில் து-துக்கிப்பவன். ஓர் உயிர் எந்த காரணத்தினாலவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே ‘இந்து’ ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

14) ‘சனாதன தருமம்’ என்று அழைக்கப்படும் சமயம் எது?

A) இஸ்ஸாம்

B) கிறித்துவம்

C) சமணம்

D) இந்து

விளக்கம்: இந்து சமயம், சனாதன தருமம் என்றும், வேத சமயம், வைதீக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப் பொருள். வேதங்களை அடிப்படையாக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம் என்றும் வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாக் கொண்டுள்ளதால் ‘வைதீக சமயம்’ எனவும் அழைக்கப்படுகிறது

15) “சம்பவனநாதர்” பற்றிய கூற்றுகளை ஆராய்க

A) 4-ம் தீர்த்தங்கரர்

B) மூல பெண் தெய்வம் – துரிதாரி

C) சின்னம் – குதிரை

D) சமயம் – சமணம்

விளக்கம்: சம்பவனநாதர், சமண சமயத்தின் 3-வது தீர்த்தங்கரர் ஆவார்.

16) “உடலுக்கு அழிவு உண்டு, ஆன்மாவுக்கு அழிவில்லை” என்று கூறும் சமயம் எது?

A) இஸ்ஸலாம்

B) கிறித்துவம்

C) இந்து

D) ஜொரஸ்டிரம்

விளக்கம்: ஆன்மா உடலுடன் வாழும்போது ஜீவாத்மா என்றழைக்கப்படுகிறது. அஃது அழிவில்லாத, ‘உடலுக்கு அழிவு உண்டு, ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்று இந்துசமயம் குறிப்பிடுகிறது.

17) ‘கர்மா’ எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பாவம், புண்ணியம் என கர்மா இருவகைப்படும். உயிர்கள் வினைப்பயன் அடிப்படையில் செயலாற்றுகின்றன. அதனால், அவ்வினைப்பயன் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன.

18) கூற்றுகளை ஆராய்க.

1. புனர் ஜென்மம் (மறுபிறப்பு) உண்டு என்று, இந்துசமயம் நம்புகிறது. மேலும் இறப்பு என்பது, பிறப்புக்குச் செல்லும் வழியாகும். அவரவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்று நம்பப்படுகிறது.

2. தொடர்ந்து பிறவிச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஆன்மா வீடுபேறு அடையும்போது பிறவிச்சக்கரத்தின் சுழற்சி நிற்கும் என்றும், நம்பப்படுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. புனர் ஜென்மம்(மறுபிறப்பு) உண்டு என்று, இந்துசமயம் நம்புகிறது. மேலும் இறப்பு என்பது, பிறப்புக்குச் செல்லும் வழியாகும். அவரவர்கள் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்று நம்பப்படுகிறது.

2. தொடர்ந்து பிறவிச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஆன்மா வீடுபேறு அடையும்போது பிறவிச்சக்கரத்தின் சுழற்சி நிற்கும் என்றும், நம்பப்படுகிறது

19) பொருத்துக.

அ. ஆன்மா – 1. வினைபயன்

ஆ. கர்மா – 2. உயிர்

இ. புணர்-ஜென்மம் – 3. மோட்சம்

ஈ. வீடுபேறு – 4. மறுபிறப்பு

A) 2, 1, 4, 3

B) 1, 2, 4, 3

C) 2, 1, 3, 4

D) 1, 2, 3, 4

விளக்கம்: ஆன்மா – உயிர்

கர்மா – வினைபயன்

புணர்ஜென்மம் – மறுபிறப்பு

வீடுபேறு – மோட்சம்

20) இந்துசமயத்தின் உறுதிப்பொருள்களில் இறுதியானது எது?

A) அறம்

B) பொருள்

C) இன்பம்

D) மோட்சம்

விளக்கம்: இந்துசமயத்தின் உறுதிப்பொருள்களில் இறுதியானது வீடுபேறு. வினைப்பயனில் பற்றின்றித் தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்தால் மறுபிறவு எடுக்க வேண்டிய நிலை வராது. இதுவே வீடுபேறு அல்லது மோட்சம் எனப்படுகிறது. உயிர்களின் மறுபிறவியற்ற நிலைமையை இது குறிப்பிடுகிறது.

21) கூற்றுகளை ஆராய்க.

1. இந்து சமயம் மனிதனை இயற்கையிலிரு;நது பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது

2. இந்த உண்மையின் அடிப்படையில், இந்து சமயத்தவர் 7 கடமைகளை வேள்வியாக செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இந்து சமயம் மனிதனை இயற்கையிலிரு;நது பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதுகிறது

2. இந்த உண்மையின் அடிப்படையில், இந்து சமயத்தவர் 5 கடமைகளை வேள்வியாக செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அவை தெய்வ வழிபாடு, வேதம் ஓதுதல், முன்னோர் வழிபாடு, உயிரினங்களின் வழிபாடு மற்றும் மனித வழிபாடு.

22) பொருத்துக.

அ. தெய்வ வழிபாடு – 1. பிரம்ம யஞ்சம்

ஆ. வேதம் ஓதுதல் – 2. பித்ரு யக்ஞம்

இ. முன்னோர் வழிபாடு – 3. தேவ யக்ஞம்

ஈ. உயிரினங்களின் வழிபாடு – 4. பூத யக்ஞம்

A) 4, 3, 2, 1

B) 4, 1, 3, 2

C) 3, 1, 2, 4

D) 1, 3, 2, 4

விளக்கம்: ஐந்து வேள்விகளும் பஞ்ச யக்ஞம் எனப்படுகின்றன.

1. தெய்வ வழிபாடு – தேவ யக்ஞம்

2. வேதம் ஓதுதல் – பிரம்ம யக்ஞம்

3. முன்னோர் வழிபாடு – பித்ரு யக்ஞம்

4. உயிரினங்கள் வழிபாடு – பூத யக்ஞம்

5. மனித வழிபாடு – மனுஷ்ய யக்ஞம்

23) “கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்” என்பது எவ்வகை யக்ஞம்?

A) தேவ யக்ஞம்

B) பிரம்ம யக்ஞம்

C) பூத யக்ஞம்

D) பிரம்ம யக்ஞம்

விளக்கம்: தெய்வ வழிபாடு (தேவ யக்ஞம்) கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்.

24) நாள்தோறும் வேதங்களையும், அறநூல்களையும ஓதுதல் வேண்டும் – என்பது எவ்வகை யக்ஞம்?

A) தேவ யக்ஞம்

B) பிரம்ம யக்ஞம்

C) பூத யக்ஞம்

D) பிரம்ம யக்ஞம்

விளக்கம்: வேதம் ஓதுதல் (பிரம்ம யக்ஞம்) நாள்தோறும் வேதங்களையும், அறநூல்களையும் ஓதுதல் வேண்டும்.

25) “இறந்த மூதாதையர்கள் தெய்வங்களோடு உள்ளனர்” எனக் கருதி அவர்களை வழிபட வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?

A) தேவ யக்ஞம்

B) பிரம்ம யக்ஞம்

C) பித்ரு யக்ஞம்

D) பிரம்ம யக்ஞம்

விளக்கம்: முன்னோர் வழிபாடு (பித்ரு யக்ஞம்) இறந்த மூதாதையர்கள் தெய்வங்களாக உள்ளனர் எனக் கருதி அவர்களை வழிபட வேண்டும்.

26) அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேண வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?

A) தேவ யக்ஞம்

B) பிரம்ம யக்ஞம்

C) பூத யக்ஞம்

D) பிரம்ம யக்ஞம்

விளக்கம்: உயிரினங்கள் வழிபாடு (பூத யக்ஞம்) செடி, கொடி, மரம், விலங்கு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேண வேண்டும்.

27) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிட வேண்டும் என்பது எவ்வகை யக்ஞம்?

A) தேவ யக்ஞம்

B) பிரம்ம யக்ஞம்

C) பூத யக்ஞம்

D) மனுஷ்ய யக்ஞம்

விளக்கம்: மனித வழிபாடு (மனுஷ்ய யக்ஞம்) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிட வேண்டும்.

28) தவறானதைத் தேர்வு செய்க.

A) 4-ம் தீர்த்தங்கரர் – அபிநந்தநாதர்

B) மூல பெண் தெய்வம் – காளி அல்லது வச்சர சாருங்கலா

C) சின்னம் – சிவப்பு வாத்து

D) சமயம் – சமணம்

விளக்கம்: சின்னம் – குரங்கு

29) ‘ஆசிரம தர்மம்’ கூறும் கடமைகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்) மனித வாழ்க்கையின் படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி கூறுகிறது. அவை,

1. பிரம்மச்சரியம்

2. கிருகஸ்தம்

3. வனப்பிரஸ்தம்

4. சன்னியாசம்.

இவை படிப்படியாக மனிதன் வாழ்வு முழுமை பெற ஏற்படுத்தப்பட்டவை.

30) “வர்ணஸ்ரம தர்மம்” சமூகத்தை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) – இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,

1. பிராமணர்

2. சத்திரியர்

3. வைசியர்

4. சூத்திரர் ஆவார்கள்.

இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது.

31) இந்து சமயம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

A) 2

B) 3

C) 6

D) 9

விளக்கம்: இந்து சமயம் முறையே சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் என 6 உள்ளடக்கியதாகும்.

32) சைவர்கள் எக்கடவுள்களை வழிபடுவர்?

A) சிவபெருமான்

B) விஷ்ணு

C) முருகன்

D) குரு

விளக்கம்: சிவபெருமானை முழுமுதற் கடவுளாக் கொண்டு வழிபடுகிற சமயம் சைவமாகும். இச்சமயத்தைப் பின்பற்றுவோர் சைவர் ஆவர்.

33) “முப்பொருள் உண்மை” என்று அழைக்கப்படும் சமயம் எது?

A) சைவம்

B) வைணவம்

C) கௌரம்

D) சாக்தம்

விளக்கம்: சைவ சமயம் பதி, பசு, பாசம் என்னும் 3 பொருள்களை அடிப்படையாக் கூறி, அவை மூன்றும் தொடக்கமும் முடிவுமின்றி அழியாமல் இருப்பவை எனக் கூறுகிறது. இதனால் இச்சமயத்திற்கு “முப்பொருள் உண்மை” என்ற வேறுபெயரும் உண்டு.

34) ‘பதி’ என்பதன் பொருள் என்ன?

A) தலைவி

B) தலைவன்

C) உயிர்

D) கடவுள்

விளக்கம்: சைவம், கடவுளைப் ‘பதி’ என்று கூறுகிறது. பதி என்றால் ‘தலைவன்’இ சிவபெருமான் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் உள்ளார் எனக் கூறுகிறது.

35) தவறானதை தேர்க.

A) 5-வது தீர்த்தங்கரர் – சுமதிநாதர்

B) மூல பெண் தெய்வம் – முகாகாளி

C) சின்னம் – சிகப்பு வாத்து

D) சமயம் – புத்தம்

விளக்கம்: சமயம் – சமணம்

36) ஆணவம், கன்மம், மாயை போன்ற இச்சைகளைக் கடக்கும்போது, உயிர் இறைவனை அடைய இயலும் என்று கூறும் பொருள் எது?

A) பசு

B) பதி

C) பாசம்

D) கன்மம்

விளக்கம்: ஆணவம், கன்மம், மாயை போன்ற இச்சைகளைக் கடக்கும்போது, உயிர் இறைவனை அடைய இயலும் என்று சைவ முப்பொருள்களில் ஒன்றான “பாசம்” குறிப்பிடுகிறது.

37) சிவபெருமானின் அருவ வடிவமாகக் கருதப்படுவது எது?

A) நடராஜர்

B) ஒளி

C) சிவலிங்கம்

D) A மற்றும் C

விளக்கம்: சிவபெருமானுடைய அருவ வடிவமாக சிவலிங்கம் கருதப்பட்டது. இதேபோல், சைவர்கள், சிவபெருமானை உருவ நிலையிலும், வழிபடுகின்றனர். சிவபெருமானுடைய உருவநிலையில் நடராசர் வடிவம் குறிப்பிடத்தக்கது. இவ்வடிவத்தில் நடனம் ஆடும் நிலையில் சிவபெருமான் காணப்படுகிறார்.

38) சிவலிங்கத்தின் பாகங்களைப் பொருத்துக.

அ. நிலத்திற்குள் உள்ள பகுதி – 1. விஷ்ணு பாகம்

ஆ. மேலுள்ள விரிந்த பகுதி – 2. சிவ பாகம்

இ. விரிந்த பகுதியின் மேலுள்ள பகுதி – 3. பிரம்ம பாகம்

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 3, 1, 2

D) 1, 3, 2

விளக்கம்: நிலத்திற்குள் பகுதி – பிரம்ம பாகம்

மேலுள்ள ஆவுடை என்னும் விரிந்த பகுதி – சிவ பாகம்

அதன் மேலுள்ள பகுதி – விஷ்ணு பாகம்.

எனவே சிவலிங்கம் 3 பகுதிகளைக் கொண்டது.

39) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் எது?

A) சைவம்

B) வைணவம்

C) சாக்தம்

D) சௌரம்

விளக்கம்: விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம், வைணவம் அல்லது வைஷ்ணம். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் வைணவர் எனப்பட்டனர். விஷ்ணு பரமாத்மா (பேரூயிர்), நாராயணன், திருமால், கிருஷ்ணன் போன்ற பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறார்.

40) விஷ்ணுவின் உருவ அமைப்பு எத்தனை கைகளைக் கொண்டது?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: விஷ்ணுவின் உருவ அமைப்பு, 4 கைகளைக் கொண்டது. கையில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாமரை ஆகியன காணப்படும்.

41) பொருத்துகஃ

அ. சங்கு – 1. நீர்

ஆ. சக்கரம் – 2. தீ

இ. கதாயுதம் – 3. காற்று

ஈ. தாமரை – 4. வானம்

A) 3, 4, 2, 1

B) 2, 4, 1, 3

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: விஷ்ணுவின் கைகளிலுள்ள சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியன முறையே வானம், காற்று, தீ, நீர் ஆகிய தத்துவங்களை உணர்த்துகிறது.

42) விஷ்ணுவின் தசாவதாரம் என்பது எத்தனை?

A) 5

B) 10

C) 12

D) 108

விளக்கம்: அவதாரம் என்பது, கடவுள் தன்னிலையிலிருந்து உயிரினங்களின் பிறப்பாகக் கீழிறங்குவதாகும்.

1. மச்ச அவதாரம்

2. கூர்ம அவதாரம்

3. வராக அவதாரம்

4. நரசிம்ம அவதாரம்

5. வாமன அவதாரம்

6. பரசுராம அவதாரம்

7. பலராம அவதாரம்

8. ராம அவதாரம்

9. கிருஷ்ண அவதாரம்

10. கல்கி அவதாரதம்

43) தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க.

A) மச்ச அவதாரம் – மீன் உருவம்

B) கல்கி அவதாரம் – மனித உருவம்

C) கிருஷ்ண அவதாரம் – மனித உருவம்

D) கூர்ம அவதாரம் – மனித உருவம்

விளக்கம்: கூர்ம அவதாரம் – ஆமை உருவம்

44) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

A) ராம் அவதாரம் – மனித உருவம்

B) பலராம அவதாரம் – மனித உருவம்

C) வாமன அவதாரம் – குள்ள மனித உருவம்

D) நரசிம்ம அவதாரம் – மீன் உருவம்

விளக்கம்: மச்ச அவதாரம் – மீன் உருவம்

நரசிம்ம அவதாரம் – சிங்கத்தலை மற்றும் மனித உடல்

45) வராக அவதாரத்தில் விஷ்ணு எந்த உருவத்தில் உள்ளார்?

A) மீன்

B) ஆமை

C) பன்றி

D) குதிரை

விளக்கம்: வராக அவதாரம் – பன்றி உருவம்.

46) விஷ்ணுவின் வாகனம் எது?

A) குரங்கு

B) அணில்

C) பாம்பு

D) கருடன்

விளக்கம்: விஷ்ணுவின் தசாவதாரங்கள் அறிவியல் முறைப்படி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை விளக்குகின்றன. இவரின் வாகனம் “கருடன்”. கருடன் வேதங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

47) ‘சிறிய திருவடி’ என வைணவர்களால் அழைக்கப்படுபவர் யார்?

A) கருடன்

B) அனுமன்

C) ஜடாயு

D) ஆதிசேசன்

விளக்கம்: பெரிய திருவடி – கருடன்

சிறிய திருவடி – அனுமன்

48) சரியானதைத் தேர்வு செய்க.

A) 6-வது தீர்த்தங்கரர் – பத்ம பிரபர்

B) மூல பெண் தெய்வம் – சியாமா

C) சின்னம் – தாமரை மலர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 6-வது தீர்த்தங்கரர் – பத்ம பிரபர்

மூல பெண் தெய்வம் – சியாமா

சின்னம் – தாமரை மலர்

49) வைணவக் கொள்கைகளை நெறிப்படுத்தி விளக்கியவர் யார்?

A) இராமானுஜர்

B) பெரியாழ்வார்

C) ஆண்டாள்

D) பேயாழ்வார்

விளக்கம்: வைணவக் கொள்கைகளை நெறிப்படுத்தி விளக்கியவர் இராமானுஜர். அவருக்கு பின் வந்தவர்களிடையே கொள்கைகளை விளக்குவதில் கருத்து வேறுபாடு எழுந்தது. இவ்வேறுபாடே வடகலை, தென்கலை என்ற இரு பிரிவினர் தோன்றக் காரணமானது.

50) வடகலைப்பிரிவினர் (வைணவம்) யாருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்?

A) இராமானுஜர்

B) வேதாந்ததேசிகர்

C) மணவாள மாமுனி

D) A மற்றும் B

விளக்கம்: வடகலைப்பிரிவினர் வேதாந்ததேசிகர் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.

51) தென்கலைப்பிரிவினர் (வைணவம்) யாருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்?

A) இராமானுஜர்

B) வேதாந்ததேசிகர்

C) மணவாள மாமுனி

D) A மற்றும் B

விளக்கம்: வைணவ, தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிவரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.

52) தவறானக் கூற்றை தெரிவு செய்

A) வடகலை – ஸ்ரீரங்கம், தென்கலை – காஞ்சிபுரம்

B) திருமண அணியும்போது பாதமின்றி அணிவர் – வடகலை

C) திருமண அணியும்போது பாதமிட்டு அணிவர் – தென்கலை

D) B மற்றும் C

விளக்கம்: வடகலை – காஞ்சிபுரம் தென்கலை – ஸ்ரீரங்கம்

53) தவறானக் கூற்றைத் தெரிவு செய்க.

A) வேதங்களே முதன்மையானது என்பர் – வடகலை

B) நம்மாழ்வாரின் பாடல்களே முதன்மையானது என்பர் – தென்கலை

C) வேள்விகள் இன்றியமையாதது என்பர் – வடகலை

D) வேள்விகள் இன்றியமையாதது என்பர் – தென்கலை

விளக்கம்: வேள்விகள் முக்கியத்துவம் – வடகலை

வேள்விகள் இன்றியமையாதது அன்று – தென்கலை

54) கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?

A) காணாபத்யம்

B) கௌமாரம்

C) சாக்தம்

D) சைவம்

விளக்கம்: ‘காணாத்யம்’ என்ற சமயம் கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் ‘காணாபத்யர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். கணபதி எல்லாத் தெய்வங்களுக்கும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.

55) பிள்ளையாரின் வாகனம் எது?

A) மயில்

B) மூஷிகம்

C) புலி

D) சிங்கம்

விளக்கம்: பிள்ளையாரின் வாகனம் “மூஷிகம்”(எலி) பக்தர்கள் பிள்ளையாரைப் போற்றிப் பாடிய பின்னரே, ஏனைய தெய்வங்களை வழிபாடும் மரபு உள்ளது.

56) முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றன சமயம் எது?

A) காணாபத்யம்

B) கௌமாரம்

C) சாக்தம்

D) சைவம்

விளக்கம்: முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்ற சமயம் ‘கௌமாரம்’. இச்சமயத்தினர் கௌமாரர், ஸ்கந்தர் என அழைக்கப்படுகின்றனர்.

57) சரியானதைத் தேர்வு செய்க.

A) 7-வது தீர்த்தங்கரர் – சுபார்க்கவநாதர்

B) மூல பெண் தெய்வம் – காந்திமதி

C) சின்னம் – சிங்கம்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 7-வது தீர்த்தங்கரர் – சுபார்க்கவநாதர்

மூல பெண் தெய்வம் – சாந்தி

சின்னம் – ஸ்வஸ்திகா

58) சங்க இலக்கியங்கள் எந்தக் கடவுளை “சேயோன்” என்று குறிப்பிடுகின்றன?

A) திருமால்

B) சிவபெருமான்

C) முருகன்

D) கணபதி

விளக்கம்: சங்க இலக்கியங்கள் முருகனைச் “சேயோன்” என்று குறிப்பிடுகின்றன. குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக நம்பப்படுகிறது.

59) பத்துமலை முருகன் சிற்பம் எங்குள்ளது?

A) தமிழ்நாடு

B) இலங்கை

C) சிங்கப்பூர்

D) மலேசியா

விளக்கம்: உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் முருகக் கடவுளுக்குக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிற்பம் சிறப்புமிக்கது.

60) ‘சக்தி’ என்ற பெண் தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுகிற சமயம் எது?

A) காணபத்யம்

B) கௌமாரம்

C) சாக்தம்

D) கௌரம்

விளக்கம்: சக்தி என்ற பெண் தெய்வத்தை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றன சமயம் சாக்தமாகும். இச்சமய மக்கள் ‘சாக்தர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

61) பாலைநிலக் கடவுளாகச் சங்ககால மக்கள் வழிபட்ட கடவுள் யார்?

A) இந்திரன்

B) முருகன்

C) திருமால்

D) கொற்றவை

விளக்கம்: சக்தி, பண்புகளுக்கு ஏற்பப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறார். சிங்கத்தின் மீது வீற்றிருக்கிறார். சினங்கொண்ட உருவத்துடன் விளங்கும் சக்தியை வழிபடுவதே காளி வழிபாடாகும். இக்காளியைப் (கொற்றவை) பாலைநிலக் கடவுளாகச் சங்ககால மக்கள் வழிபட்டனர். சக்தி, கிரமாங்களில் மக்கள் மனப்பான்மைக்கு ஏற்ப கிராம தேவதையாக வழிபடப்படுகிறார்.

62) சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுகிற சமயம் எது?

A) கானாபத்யம்

B) கௌமாரம்

C) சாக்தம்

D) சௌரம்

விளக்கம்: சௌரம் என்பது, சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடுகிற சமயமாகும். இதனைப் பின்பற்றுவோர் சௌரர் என்றழைக்கப்படுவர்.

63) சூரியன் எத்தனை குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருப்பார்?

A) 4

B) 6

C) 7

D) 8

விளக்கம்: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமைந்திருப்பார். சூரியனுக்கு நன்றிகூறும் விதமாகவே நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

64) சரியானக் கூற்றை தெரிவு செய்க.

A) கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். அவை மரபு தெய்வங்கள் சிறு தெய்வங்கள் என்றும் நாட்டார் தெய்வங்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.

B) இந்தச் சிறுதெய்வ வழிபாட்டில் கிராம தெய்வங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை ஊருக்கு ஊர் வேறுபட்டு காணப்படுகின்றன. இதில் ஆண், பெண் தெய்வங்கள் இணையான மதிப்புகொண்டவை.

C) பெரிய கோயில்களில் இல்லாது மரத்தடி, திறந்தவெளிகள் போன்ற இடங்களில் எளிமையாகவே மரபு தெய்வங்கள் காணப்படுகின்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: கிராமங்களில் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல்வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். அவை மரபு தெய்வங்கள் சிறு தெய்வங்கள் என்றும் நாட்டார் தெய்வங்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன.

இந்தச் சிறுதெய்வ வழிபாட்டில் கிராம தெய்வங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை ஊருக்கு ஊர் வேறுபட்டு காணப்படுகின்றன. இதில் ஆண், பெண் தெய்வங்கள் இணையான மதிப்புகொண்டவை.

பெரிய கோயில்களில் இல்லாது மரத்தடி, திறந்தவெளிகள் போன்ற இடங்களில் எளிமையாகவே மரபு தெய்வங்கள் காணப்படுகின்றன.

65) சரியான கூற்றை தெரிவு செய்க.

A) தன்னுடைய ஊரை, கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை அறுவடைப் பயிரை காக்கும்போதும், போரில் இறந்த ஆண்களையும், ஊருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவனோடு உயிர்நீத்த பெண்களையும் கிராமப்புற தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.

B) ஐயனார், முனீஸ்வரர், சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன் போன்ற ஆண் தெய்வங்களும், முத்தாலம்மன், பெரியநாச்சி, இசக்கியம்மாள், மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் கிராமங்களில் மரபு தெய்வங்களால் வணங்கப்படுகின்றன.

C) மக்கள் உருவமில்லாத இயற்கை சக்திகள் போன்றவற்றையும் தெய்வமாக வழிபடுகின்றனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: தன்னுடைய ஊரை, கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை அறுவடைப் பயிரை காக்கும்போதும், போரில் இறந்த ஆண்களையும், ஊருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவனோடு உயிர்நீத்த பெண்களையும் கிராமப்புற தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.

ஐயனார், முனீஸ்வரர், சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன் போன்ற ஆண் தெய்வங்களும், முத்தாலம்மன், பெரியநாச்சி, இசக்கியம்மாள், மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் கிராமங்களில் மரபு தெய்வங்களால் வணங்கப்படுகின்றன.

மக்கள் உருவமில்லாத இயற்கை சக்திகள் போன்றவற்றையும் தெய்வமாக வழிபடுகின்றனர்

66) கூற்றுகளை ஆராய்க.

1. ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பலநூல்கள் உள்ளன.

2. வேதம் என்ற சொல்லுக்கு “அறிவுக் களஞ்சியம்” என்று பொருள். வேதங்கள் 4. அவை, ரிக், யஜுர், சாம, அதர்வண

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பலநூல்கள் உள்ளன.

2. வேதம் என்ற சொல்லுக்கு “அறிவுக் களஞ்சியம்” என்று பொருள். வேதங்கள் 4. அவை, ரிக், யஜுர், சாம, அதர்வண

67) “மந்திரங்களின் அரசி” எனப் போற்றப்டும், காயத்ரி மந்திரம் எந்த வேதத்தில் இடம்பெற்றுள்ளது?

A) ரிக்

B) யஜுர்

C) சாம

D) அதர்வண

விளக்கம்: ரிக் பழைமையான வேதமாகும். “மந்திரங்களின் அரசி” எனப்போற்றப்படும் காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளது.

68) “சம்கிதைகள்” என்பவை என்ன?

A) செய்யுள்களின் தொகுப்பு

B) புராணங்களின் தொகுப்பு

C) கதைகளின் தொகுப்பு

D) வேதங்களின் தொகுப்பு

விளக்கம்: வேதங்களின் தொகுப்பு “சம்கிதைகள்” ஆகும். பிராமணங்கள் என்பவை யாகங்களில் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறும் நூலாகும்.

69) “வேதாந்தம்” என்று கூறப்படுவது எது?

A) உபநிடங்கள்

B) ஆகமங்கள்

C) திருமுறைகள்

D) A மற்றும் B

விளக்கம்: உபநிடதங்கள் (உபநிஷத்) என்ற சொல் குருவின் அருகில் சீடன் அமர்ந்து அவரின் உபதேசம் கேட்டறிதலைக் குறிப்பிடுகிறது. இவை பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். எனவே வேதாந்தம் என்றும், கூறப்படுகிறது.

70) சரியானதைத் தேர்வு செய்க.

A) 9-வது தீர்த்தங்கரர் – புஷ்பதந்தர்

B) மூல பெண் தெய்வம் – சதாரி

C) சின்னம் – முதலை

D) அனைத்தும் சரி

விளக்கம்: 9-வது தீர்த்தங்கரர் – புஷ்பதந்தர்

மூல பெண் தெய்வம் – சதாரி

சின்னம் – முதலை

71) கூற்றுகளை ஆராய்க.

1. மனிதன் தோன்றிய காலம் முதலே சமயம் தோன்றியது எனலாம். சமயமே மனிதனின் வாழ்க்கை சமயத்தின் மூலமாகத்தான் மனிதன் தன் ஆன்மாவின் உண்மை நிலையையும் வாழ்க்கையின் பயனையும், மனத்தின் ஆனந்தத்தையும் முழுமையான அமைதியையும் நிலைத்த தன்மையையும் பெற முடியும்.

2. இவ்வாறு தைத்திரிய உபநிடம் கூறுகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மனிதன் தோன்றிய காலம் முதலே சமயம் தோன்றியது எனலாம். சமயமே மனிதனின் வாழ்க்கை சமயத்தின் மூலமாகத்தான் மனிதன் தன் ஆன்மாவின் உண்மை நிலையையும் வாழ்க்கையின் பயனையும், மனத்தின் ஆனந்தத்தையும் முழுமையான அமைதியையும் நிலைத்த தன்மையையும் பெற முடியும்.

2. இவ்வாறு தைத்திரிய உபநிடம் கூறுகிறது

72) சமய வழிபாடு முறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) உபநிடதம்

B) ஆகமங்கள்

C) திருமுறை

D) A மற்றும் C

விளக்கம்: சமய வழிபாட்டு முறைகளே ஆகமங்கள் எனப்படும். இவை மனத்தை ஒருமுகப்படுத்திக் கடவுளை அடைய வழிகாட்டுகின்றன.

73) சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களால் இறைநிலையை அடையலாம் எனக் கூறுபவை எவை?

A) உபநிடதம்

B) ஆகமங்கள்

C) திருமுறை

D) A மற்றும் C

விளக்கம்: சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சாதனங்களால் இறைநிலையை அடையலாம் என ஆகமங்கள் உரைக்கின்றன. சைவ ஆகமங்களைப் பின்பற்றிச் சிவாச்சாரியார்கள் சைவக் கோவில்களில் அர்ச்சகர்களாகவும், பாஞ்சராத்ர ஆகமங்களைப் பின்பற்றி வைணவக் கோயில்களில் ‘நம்பி’(பட்டார்ச்சரியார்) எனப்படும் சாத்தரத ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்ச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

74) சைவ ஆகமங்கள் எத்தனை பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

A) 2

B) 4

C) 14

D) 28

விளக்கம்: சிவ வழிபாட்டின் முக்கியத்துவம், சிவலாயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், சிவாச்சரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றை விளக்கும் சைவ நெறிகளே சைவ ஆகமங்களாகும். இது 2 பெரும்பிரிவுகளையும், 28 உட்பிரிவுகளையும் கொண்டது.

75) சைவத்திருமுறைகள் எத்தனை?

A) 12

B) 7

C) 24

D) 4000

விளக்கம்: தமிழில் திருமுறை என்பதற்குத் தம்மை அடைந்தவர்களைச் சிவமேயாக்குகின்றன முறையென பொருள் கூறுவர். சைவத்திருமுறைகள் 12 ஆகும்.

76) சரியானைத் தேர்வு செய்க.

A) 10-வது தீர்த்தங்கரர் – சிதலநாதர்

B) மூல பெண் தெய்வம் – மானவி (கந்தர்ப்ப)

C) சின்னம் – கற்பகமரம்

D) அனைத்தும்

விளக்கம்: 10-வது தீர்த்தங்கரர் – சிதலநாதர்

மூல பெண் தெய்வம் – மானவி (கந்தர்ப்ப)

சின்னம் – கற்பகமரம்

77) எந்தெந்த திருமுறைகள் சேர்ந்தது ‘தேவாரம்’ எனப்படும்?

A) 1 முதல் 7 வரையிலான திருமுறைகள்

B) 1 முதல் 6 வரையிலான திருமுறைகள்

C) 1 முதல் 12 வரையிலான திருமுறைகள்

D) 1 முதல் 18 வரையிலான திருமுறைகள்

விளக்கம்: ஒன்று முதல் 7 வரையிலான திருமுறைகள் தேவாரம் எனப்படும். இதனை சைவமூவர் அருளினார்.

78) சைவமூவர்களில் பொருந்தாதவரைத் தேர்வு செய்க?

A) சம்பந்தர்

B) திருநாவுக்கரசர்

C) சுந்தரர்

D) திருமூலர்

விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சைவமூவர் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் அருளிய 1 முதல் 7 வரையிலான திருமுறைகள் “தேவாரம்” எனப்பட்டது.

79) பொருத்துக.

அ. 8-வது திருமுறை – 1. திருமூலர்

ஆ. 9-வது திருமுறை – 2. மாணிக்கவாசகர்

இ. 10-வது திருமுறை – 3. நாயன்மார்கள்

A) 2, 3, 1

B) 2, 1, 3

C) 3, 2, 1

D) 1, 3, 2

விளக்கம்: 8-வது திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

9-வது திருமுறை – ஒன்பதாம் திருமுறை – நாயன்மார்கள்

10-வது திருமுறை – திருமந்திரம் – திருமூலர்.

80) 12 பேர் சேர்ந்து அருளிய திருமுறை எது?

A) 1-ம் திருமுறை

B) 5-ம் திருமுறை

C) 7-ம் திருமுறை

D) 11-ம் திருமுறை

விளக்கம்: காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர்கள் வழங்கியவை 11-ம் திருமுறையாகும்.

81) திருத்தொண்டர் புராணம் எனப்படுவது எது?

A) திருவிளையாடற்புராணம்

B) பெரியபுராணம்

C) கந்தப்புராணம்

D) எதுவுமில்லை

விளக்கம்: திருத்தொண்டர் புராணம் என்பது அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் காட்டுகிறது. “பெரியபுராணம்” என அழைக்கப்படுகிறது.

82) 12-ம் திருமுறை யாரால் இயற்றப்பட்டது?

A) சேக்கிழார்

B) திருமூலர்

C) அப்பர்

D) ஓளவை

விளக்கம்: சேக்கிழார் அருளியது பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணமாகும். இது 12-ம் திருமுறை என்றழைக்கப்படுகிறது. அக்கால நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறது.

83) ஆழ்வார்கள் எத்தனை பேர்?

A) 12

B) 24

C) 63

D) 64

விளக்கம்: வைணவ சமயத்தில், விஷ்ணுவைத் தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்டவர்கள் 12 ஆழ்வார்கள் .

84) ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நூல் எது?

A) தேவாரம்

B) பெரியபுராணம்

C) திருமுறைகள்

D) நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம்

விளக்கம்: விஷ்ணுவைத் தமிழ்பாமாலைகளால் வழிபட்ட 12 ஆழ்வார்கள் அருளியவை நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் ஆகும்.

85) “சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்” என்று புகழப்படுபவர் யார்?

A) காக்கை பாடினியார்

B) ஒளவையார்

C) மங்கையர்கரசியார்

D) ஆண்டாள்

விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களில் “ஆண்டாள்” மட்டுமே பெண் ஆழ்வார்கள். இவர் “சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்” என்றும் புகழப்படுகிறார்.

86) நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

A) நம்பியாண்டார் நம்பி

B) உக்கிரப்பெருவழுதி

C) நாதமுனிவர்

D) மத்தர்

விளக்கம்: 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் நாதமுனியால் தொகுக்கப்பட்டது.

87) தவறானைத் தேர்வு செய்க.

A) 11-வது தீர்த்தங்கரர் – ஸ்ரேயாம்சின்நாதர்

B) மூல பெண் தெய்வம் – கௌரி

C) சின்னம் – கண்டாமிருகம்

D) சமயம் – சீக்கியம்

விளக்கம்: சமயம் – சமண சமயம்

88) வேதாந்த நெறிகள் எத்தனை?

A) 2

B) 3

C) 6

D) 12

விளக்கம்: வேதாந்த நெறிகள் முறையே

1. அத்வைதம்

2. வசிஷ்டாத்வைதம்

3. துவைதம் என்பனவாகும்.

89) அத்வைத கோட்பாட்டை உலகிற்களித்தவர் யார்?

A) இராமானுஜர்

B) ஆதிசங்கரர்

C) ரிஷபதேவர்

D) திருமூலர்

விளக்கம்: அத்வைத கோட்பாட்டை உலகிற்களித்தவர் “ஆதிசங்கரர்”. இவர் கேரளாவிலுள்ள “காலடி” என்னும் ஊரில் பிறந்தார். இவர் பௌத்த சமண சமயங்களின் எழுச்சியால் குன்றிப் போயிருந்த இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.

90) ஆதிசங்கரர், இந்தியாவில் அத்வைத மடத்தை எங்கு நிறுவினார்?

A) சிருங்கேரி

B) பூரி

C) துவாரகை

D) அனைத்தும்

விளக்கம்: இவர், இந்தியா முழுவதும் பயணம் செய்து சிருங்கேரி, பூரி, துவாரகை, ஜோஷி போன்ற இடங்களில் அத்வைத மடங்களை நிறுவினார்.

91) “அத்வைதம்” – பிரித்தெழுதுக.

A) அத்து + வைதம்

B) அ + வைதம்

C) அத் + துவைதம்

D) அ + துவைதம்

விளக்கம்: அத்வைதம் – அ + துவைதம். அ-இல்லை. துவைதம் – இரண்டு. அத்வைதம் என்பது இரண்டு அல்ல ஒன்றே என்பதாகும். அதாவது பிரம்மமும், ஆன்மாவும் இரண்டல்ல அவை ஒன்றேயாகும் எனப்பொருள்படும்.

92) “அத்வைதம்” பற்றிய சரியானக் கூற்றைத் தேர்வு செய்க

A) பிரம்மம் ஒன்றைத் தவிர, காணப்படுகின்ற அனைத்தும் வெறும் மாயத்தோற்றங்களே.

B) ஜீவாத்மா, தான் பிரம்மம் என்பதை உணர்ந்து பற்றற்ற செயல் புரிவதன் மூலம் பிரம்மமாக மாறமுடியும் என்பதே அத்வைதமாகும்.

C) ஞான மார்க்கத்தின் வழி பிரம்மத்தை அறிய, விழைதலே அத்வைதம் என சங்கரர் வலியுறுத்தினார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பிரம்மம் ஒன்றைத் தவிர, காணப்படுகின்ற அனைத்தும் வெறும் மாயத்தோற்றங்களே.

ஜீவாத்மா, தான் பிரம்மம் என்பதை உணர்ந்து பற்றற்ற செயல் புரிவதன் மூலம் பிரம்மமாக மாறமுடியும் என்பதே அத்வைதமாகும்.

ஞான மார்க்கத்தின் வழி பிரம்மத்தை அறிய, விழைதலே அத்வைதம் என சங்கரர் வலியுறுத்தினார்.

93) வசிஸ்டாத்வைதக் கருத்துக்களைக் கூறியவர் யார்?

A) இராமானுஜர்

B) ஆதிசங்கரர்

C) ரிஷபதேவர்

D) திருமூலர்

விளக்கம்: வசிஷ்டாத்வைதக் கருத்தைக் கூறியவர் இராமானுஜர். இவர் திருவரங்கத்தின் தலைமை ஆச்சாரியராகப் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் வைணவத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர். இந்துக்களிடையே நிலவிய சாதி வேற்றுமையைக் களைய முற்பட்டார்.

94) விசிஷ்டாத்வைதத்தில் இராமானுஜர் கூறிய கருத்துகளில் சரியானதைத் தேர்வு செய்க.

A) பிரம்மம் ஒருவரே அவர் சத்து என்றும், பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும், அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.

B) பரமாத்வாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர். சித்தும் அசித்தும் அவரை சார்ந்திருப்பவை.

C) ஆசாரிய அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுத்தல், தர்மசிந்தனை, வேதபாராயணம், சாது, சங்கமச்சேர்க்கை முதலானவற்றால் கர்ம பந்தத்தைவிட்டு முக்தி பெறலாம்.

D) அனைத்தும் சரி.

விளக்கம்: பிரம்மம் ஒருவரே அவர் சத்து என்றும், பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும், அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.

பரமாத்வாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர். சித்தும் அசித்தும் அவரை சார்ந்திருப்பவை.

ஆசாரிய அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுத்தல், தர்மசிந்தனை, வேதபாராயணம், சாது, சங்கமச்சேர்க்கை முதலானவற்றால் கர்ம பந்தத்தைவிட்டு முக்தி பெறலாம்.

95) “பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் இம்மூன்றிற்கும் பிரிக்க இயலாத ஒரு பந்தம் இருக்கிறது” என்று கூறியவர் யார்?

A) மத்துவர்

B) ஆதிசங்கரர்

C) இராமானுஜர்

D) திருமூலர்

விளக்கம்: “சத்” என்னும் ‘உயிர்’, ‘அசித்’ என்னும் ‘உடலுடன்’ இணைவதால் பரமாத்மா ஒன்றாகவே காணப்படுகிறது. பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் இம்மூன்றிற்கும் பிரிக்க இயலாத ஒரு பந்தம் இருக்கிறது என்று இராமானுஜர் கூறினார்.

96) “துவைதம்” நெறியைப் பரப்பியர் யார்?

A) மத்துவர்

B) ஆதிசங்கரர்

C) இராமானுஜர்

D) திருமூலர்

விளக்கம்: “துவைதம்” என்னும் நெறியை பரப்பியர் மத்துவர். இவருடைய தத்துவக் கோட்பாடு துவைதமாகும்.

97) “துவைதம்” நெறியில் “துவி” என்பதன் பொருள் என்ன?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

D) பத்து

விளக்கம்: ‘துவி’ என்றால் ‘இரண்டு’ என்று பொருள்படும். அதாவது பிரபஞ்சமும், பரமாத்வாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாகும். பரமாத்மா, ஜீவாத்மா, ஜடவுலகம், இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருளாகும். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. கருமத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். இவை “துவைதக் கோட்பாடாகும்”.

98) சரியானதைத் தேர்வு செய்க

A) 14-வது தீர்த்தங்கரர் – சிதலநாதர்

B) மூல பெண் தெய்வம் – அஜிதபலா

C) சின்னம் – யானை

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 14-வது தீர்த்தங்கரர் – அனந்தநாதர்

மூல பெண் தெய்வம் – அனந்தமதி

சின்னம் – முள்ளம்பன்றி

99) கூற்றுகளை ஆராய்க.

1. அறிவுக் கூர்மையுடையவர்கள் நல்லதையும், கெட்டதையும் அறிந்து என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள்.

2. இவற்றின் துணைக்கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளையும் தேடும் வழியே “இராஜ மார்க்கம்” எனப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அறிவுக் கூர்மையுடையவர்கள் நல்லதையும், கெட்டதையும் அறிந்து என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள். இவற்றின் துணைக்கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளையும் தேடும் வழியே ‘ஞானமார்க்கம்’ எனப்படும். நல்லறிவுக்கு வழிகாட்டுவன முறையே வேதாந்தங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியனவும் இரமணமகரிஷி, அரவிந்தர், தாயுமானவர் மற்றும் திருமூலர் போன்ற ஆன்றோர்களின் உபதேசங்கள் ஆகும்.

100) மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம், இவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குப்படுத்தித் தனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சக்திகளை தூண்டி வெளிப்படுத்துவது_________மார்க்கம் எனப்படும்?

A) கர்ம மார்க்கம்

B) பக்தி மார்க்கம்

C) இராஜ மார்க்கம்

D) ஞான மார்க்கம்

விளக்கம்: மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம் இவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குப்படுத்தித் தனக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சக்திகளை தூண்டி வெளிப்படுத்துவது “இராஜ மார்க்கம்” எனப்படும்.

101) “ஓம்” எனப்படும் பிரணவம் எங்கு வழிபடப்படுகிறது?

A) கர்ம மார்க்கம்

B) பக்தி மார்க்கம்

C) இராஜ மார்க்கம்

D) ஞான மார்க்கம்

விளக்கம்: “ஓம்” என்னும் பிரணவம் இராஜ மார்க்கத்தில் வழிபடப்படுகிறது.

102) சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும், திறமையாகவும் ஆற்றுவது_______________மார்க்கம் ஆகும்?

A) கர்ம மார்க்கம்

B) பக்தி மார்க்கம்

C) இராஜ மார்க்கம்

D) ஞான மார்க்கம்

விளக்கம்: சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும், திறமையாகவும் ஆற்றுவது கர்ம மார்க்கம் ஆகும்.

103) வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் எத்தனை விதமான பயன்கள் இருக்க வேண்டும் என கர்ம மார்க்கம் கூறுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் 2 விதமான பயன்கள் இருக்க வேண்டும் என கர்ம மார்க்கம் கூறுகிறது. அவை, 1. அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.

2. அச்செயலினால் சமுதாயத்திறகு பயன் கிடைக்க வேண்டும்.

104) கடவுள்மீது பக்தி கொண்ட மனிதன் அகந்தையை ஒழித்து, சிறுமையை தவிர்த்து, தியாகம் அன்பு, வாயிலாக உயரிய நிலையை அடைவதே_____________மார்க்கமாகும்.

A) கர்மா மார்க்கம்

B) இராஜ மார்க்கம்

C) ஞான மார்க்கம்

D) பக்தி மார்க்கம்

விளக்கம்: கடவுள்மீது பக்தி கொண்ட மனிதன் அகந்தையை ஒழித்து, சிறுமையை தவிர்த்து, தியாகம் அன்பு, வாயிலாக உயரிய நிலையை அடைவதே பக்தி மார்க்கமாகும்.

105) “நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய்” எனக் குறிப்பிடுவது எது?

A) இராமாயணம்

B) குரான்

C) பகவத் கீதை

D) விவிலியம்

விளக்கம்: “நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே மாறிவிடுகிறாய்” எனக் கீதை குறிப்பிடுகிறது. நற்குணங்களைக் கொண்ட பரம்பொருளை வணங்கும்போது நாமும் நற்குணங்களை கொண்டவராகவே மாறிவிடுகிறோம்.

106) பகவத் கீதை எதன் ஒரு பகுதியாகும்?

A) இராமாயணம்

B) மகாபாரதம்

C) திருக்குறள்

D) விவிலியம்

விளக்கம்: பகவத் கீதை, மாபெரும் இதிகாசமான மகாபாரத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்குக் “கடவுளின் பாடல்” என்று பொருள்.

107) சரியானதைத் தேர்வு செய்க.

A) 15-வது தீர்த்தங்கரர் – தர்மநாதர்

B) மூல பெண் தெய்வம் – மானவி

C) சின்னம் – வஜ்ராயுதம்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – தர்மநாதர்

மூல பெண் தெய்வம் – மானவி

சின்னம் – வஜ்ராயுதம்

108) கீதை, கிருஷ்ணரால் யாருக்கு உபதேசமாக வழங்கப்பட்டது?

A) தர்மன்

B) வீமன்

C) அர்ஜுனன்

D) இராமன்

விளக்கம்: மகாபாரதத்தில் குருஷேத்ரப் போர் தொடங்கும் முன் எதிரணியை பார்வையிட்ட அர்ஜுனன் அங்கே அவனது உறவினர், நண்பர்கள், குரு போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக்கண்ட அவரது தேரோட்டியாக வந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தருமத்திற்காகப் போரிடும்போது, உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

109) எது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்பகிறது?

A) தேவாரம்

B) பிள்ளைப்புராணம்

C) பகவத்கீதை

D) பெரியபுராணம்

விளக்கம்: கீதை அர்ஜுனனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று. மனிதர்கள் அனைவருக்குமானது என இந்து சமயம் நம்புகிறது. ஏனெனில் “இது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது”.

110) சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) இறைவனது பரிபூரண அருள் பக்தனுக்குக் கிடைக்கும் என்பதை நினைவூட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

B)இவ்விழாக்கள் மக்கள் மனதில் அன்பு, இரக்கம், ஈகை, மனிதநேயம் முதலான நற்பண்புகளை வளர்த்து ஆன்மீக அறிவைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ உதவுகின்றன.

C) இந்துக்கள் கொண்டாடக்கூடிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், பிரதோஷம் போன்ற விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இறைவனது பரிபூரண அருள் பக்தனுக்குக் கிடைக்கும் என்பதை நினைவூட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவ்விழாக்கள் மக்கள் மனதில் அன்பு, இரக்கம், ஈகை, மனிதநேயம் முதலான நற்பண்புகளை வளர்த்து ஆன்மீக அறிவைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ உதவுகின்றன.

இந்துக்கள் கொண்டாடக்கூடிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், பிரதோஷம் போன்ற விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

111) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையானது. அஃது உலகெங்கும் பரவி இருந்ததை நவீன கால ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

B) இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துக்கள் பிற சமயங்களில் இடம்பெறவில்லை.

C) இந்து சமயம் பிற சமயங்களை இழிவுபடுத்தாமல், அவற்றின் கோட்பாடுகளை மதித்து அரவணைத்துச் செயல்படுகிறது.

D) இந்து சமயத்தின் மீது பல்வேறு தாக்குதல் நிகழ்ந்தபோதும், அது தாழாமல் உயர்ந்து திகழ்கிறது.

விளக்கம்: இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கருத்துக்கள் பிற சமயங்களிலும் இடம்பெற்றுள்ளன.

112) தவறானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) இந்து சமயம் வெறும் நம்பிக்கை உணர்வோடு நின்றுவிடாமல் நம்பிக்கைகளுக்கான அறிவியல் காரணங்களையும் தன்னகத்தே கொண்டது.

B) மனித உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தாது சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்குகிறது. நமது சமூகத்தில் கட்டுப்பாடு நிலவினாலும் சமயத்தில் அளப்பரிய சுதந்திரம் வழங்கப்படுகிறது.

C) இல்லறத்தில் இருப்பவர்கள் வீடுபேறு அடைவது இயலாது எனவும், துறவறத்தில் இருப்பவர்கள் வீடுபேறு அடையலாம் எனவும் கூறுகிறது.

D) மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி உண்டெனக் கூறி, மக்களின் வாழ்வை நெறிப்படுத்தித் துன்பமற்ற வாழ்க்கைக்கு வழிசெய்கிறது.

விளக்கம்: இல்லறத்தில் இருப்பினும் துறவறத்தில் இருப்பினும் நல்வாழ்வின் வாயிலாக வீடுபேறு அடையலாம் என இந்து சமயம் கூறுகிறது.

113) இந்து சமயம் உலகிற்கே வழங்கிய கொடை எது?

A) வேதங்கள்

B) உபநிடதங்கள்

C) இதிகாசங்கள்

D) அனைத்தும்

விளக்கம்: இந்து சமயத்தில் காணப்படும் இல்லற, ;மனிதாபிமான உணர்வு, சகிப்புத்தன்மை, உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றன. இந்து சமய இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழங்கப்பட்ட கொடைகளாகும்.

114) இந்து சமயம் உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை எது?

A) வேதங்கள்

B) கலைகள்

C) யோகா

D) மருத்துவம்

விளக்கம்: ‘யோகா’ என்னும் அற்புதமான அறிவியல் உண்மையை மிகப்பெரிய கொடையாக இந்து சமயம் உலகிற்கு அளித்துள்ளது.

115) கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மீக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்கு காட்டிய சமயம் எது?

A) இந்து

B) இஸ்லாம்

C) கிறித்துவம்

D) சீக்கியம்

விளக்கம்: கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம், இந்து சமயமாகும். உருவ வழிபாடு முறை, வீடுபேறு அடைவதற்கான அறநெறி கோட்பாடுகள், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ, சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக்கோட்பாடுகளையும் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயம்தான்.

116) எத்தனை தீர்த்தங்கரர்களின் போதனைத் தொகுப்பே சமண மதமாகும்?

A) 6

B) 12

C) 24

D) 26

விளக்கம்: இந்தியாவின் பழம்பெரும் சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இந்திய மக்களால் இச்சமயம் பின்பற்றப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்களின் போதனைத் தொகுப்பே சமணசமயமாகும்.

117) ‘ஜைன மதம்’ எனப்படுவது எது?

A) சமணம்

B) புத்தம்

C) சீக்கியம்

D) இந்து

விளக்கம்: சமணமதம் ஜைனமதம், அருக மதம், பிண்டி மதம், நிகண்ட மதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஜுனரின் வழி செல்பவர்கள் ஜைனர்-சமணர் எனப்பட்டனர்.

118) சரியானதைத் தேர்வு செய்க

A) 16-வது தீர்த்தங்கரர் – சாந்திநாதர்

B) மூல பெண் தெய்வம் – முகாமானிசி

C) சின்னம் – மான்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 15-வது தீர்த்தங்கரர் – சாந்திநாதர்

மூல பெண் தெய்வம் – முகாசிமானிசி

சின்னம் – மான்

119) “ஜீனர்” என்பதன் பொருள் என்ன?

A) உலகை வெற்றிக் கொண்டவர்

B) உயிர்களை வெற்றிக் கொண்டவர்

C) புலன்களை வெற்றிக் கொண்டவர்

D) அனைத்தும்

விளக்கம்: ஜீனர் என்றால் புலன்களை வெற்றிக் கண்டவர் என்று பொருள். அதாவது, தனது மனத்தையும், பொறிகளையும் அடக்கி வெற்றி கண்டவர் என்பது பொருள். அத்தகைய ஜீனர்களைக் கொண்ட சமயமே சமண சமயமாகும்.

120) சமண சமயத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சமண சமயத்தில் திகம்பரர் சுவேதாம்பரர் என்ற இருபெரும் பிரிவுகள் உள்ளன.

121) “அம்பரம்” என்பதன் பொருள் என்ன?

A) திசை

B) ஆடை

C) வெள்ளை

D) எண்

விளக்கம்: அம்பரம் என்பதன் பொருள் “ஆடை” என்பதாகும்.

122) தவறானதைத் தேர்வு செய்க.

A) 17-வது தீர்த்தங்கரர் – குந்துநாதர்

B) மூல பெண் தெய்வம் – காளி

C) சின்னம் – ஆடு

D) சமயம் – சமணம்

விளக்கம்: 17-வது தீர்த்தங்கரர் – குந்துநாதர்

மூல பெண் தெய்வம் – விஜயா

சின்னம் – ஆடு

சமயம் – சமணம்

123) “திகம்பரர்” பிரித்து எழுதுக.

A) தி + அம்பரர்

B) திக்கு + அம்பரர்

C) திக் + அம்பரர்

D) திகம் + பரர்

விளக்கம்: திகம்பரர் – திக் + அம்பரர். திக் – திசை, அம்பரம் – ஆடை. திசைகளையே ஆடைகளாக அணிபவர்கள் எனப் பொருள். (ஆடையே அணியாதவர்கள்).

124) சுவேதாம்பரர் – பிரித்தெழுதுக.

A) சுவே + தம்பரர்

B) சு + வேதம் + பரர்

C) சுவேதம் + அம்பரர்

D) சுவேதம் + பரர்

விளக்கம்: சுவேதம்பரர் – சுவேதம் + அம்பரம் (ஸ்வேதம் + அம்பரம்). சுவேதம் – வெள்ளை, அம்பரம் – ஆடை. வெண்ணிற ஆடை அணிபவர்கள் என பொருள்.

125) கூற்றுகளை ஆராய்க.

1. “தீர்த்தங்கரர்”- பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி என்று பொருள்.

2. தெய்வத் தன்மையும் மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனத்தில் உள்ள அறியாமை பற்றிய அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசிக் கரையேற்றுபவர்கள் ஆவர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. “தீர்த்தங்கரர்” – பிறவிப் பெருங்கடலைக் கடந்த ஞானி என்று பொருள்.

2. தெய்வத் தன்மையும் மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனத்தில் உள்ள அறியாமை பற்றிய அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசிக் கரையேற்றுபவர்கள் ஆவர்.

126) சமண சமயத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் தோன்றியதாகக் குறிப்பிடுவர்?

A) 12

B) 6

C) 3

D) 24

விளக்கம்: சமண சமயத்தில் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியதாகக் குறிப்பிடுவர்.

127) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

A) பார்சவநாதர்

B) வர்த்தமானர்

C) மகாவீரர்

D) ரிஷபர்

விளக்கம்: 1 – ரிஷபர்

23 – பார்சவநாதர்

24 – வர்த்தமானர் என்ற மகாவீரர்

128) யார் சமண சமயத்திற்குப் புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கினர்?

A) ரிஷபர்

B) பார்சவநாதர்

C) வர்த்தமானர்

D) தர்மநாதர்

விளக்கம்: வர்த்தமான மகாவீரரே சமண சமயத்திற்குப் புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கினார்.

129) “ஆதிநாதர்” என வழங்கப்படுபவர் யார்?

A) சுமதிநாதர்

B) நேமிநாதர்

C) பார்சவநாதர்

D) ரிஷபர்

விளக்கம்: முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் என்கிற ரிஷபர் ஆவார்.

130) தவறானதைத் தேர்வு செய்க.

A) முதல் தீர்த்தங்கரர் – ஆதிநாதர் (ரிஷபர்)

B) இவரை இயக்கிய மூல பெண் தெய்வம் – சக்கரேஸ்வரி

C) இவரது சின்னம் – காளை

D) இவர் அஜிதநாதர் எனவும் அழைக்கப்படுகிறார்

விளக்கம்: முதல் தீர்த்தங்கரர் – ஆதிநாதர் (ரிஷபர்)

இவரை இயக்கிய மூல பெண் தெய்வம் – சக்கரேஸ்வரி. இவரது சின்னம் – காளை

131) Religio என்பது எம்மொழிச்சொல்?

A) இலத்தீன்

B) கிரேக்கம்

C) ஸ்பானிஷ்

D) ஆங்கிலம்

விளக்கம்: Religion-என்ற சொல் இலத்தீன் மொழியில் Religio என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதில் Re-திரும்பு ligion-கொணர்தல். இதைக் ‘கட்டுண்ட ஆன்மா மீண்டும் இறைவனை அடைதல்’ என இந்து சமயம் விளக்குகிறது.

132) தவறானக் கூற்றை தேர்வு செய்க.

A) இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும்.

B) எல்லாவற்றையும்விட, மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது.

C) கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூத்தொழில்களையும் செய்கிறார்.

D) படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், காக்கும்போது சிவபெருமான் என்றும், அழிக்கும்போது விஷ்ணு என்றும் அறியப்படுகிறார்.

விளக்கம்: படைத்தல் – பிரம்மன்

காத்தல் – விஷ்ணு

அழித்தல் – சிவபெருமான்

இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும்.

133) இந்து சமயம் எத்தனை கடமைகளை வலியுறுத்துகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனிமனித கடமைகள் (ஆசிரம தர்மம்) சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.

134) ‘பசு’ என்பது எதைக் குறிக்கிறது?

A) தலைவி

B) தலைவன்

C) உயிர்

D) கடவுள்

விளக்கம்: சைவசித்தாந்தம் உயிரைப் ‘பசு’ எனக் குறிப்பிடுகிறது. உயிர்கள் எண்ணற்றவை, நிலைத்திருப்பவை என்ற தத்துவத்தை இது கூறுகிறது.

135) வைணவ சமயத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உள்ளன.

136) முருகனின் கொடி எது?

A) மீன் கொடி

B) புலிக்கொடி

C) வில்-அம்பு கொடி

D) சேவல் கொடி

விளக்கம்: முருகன் எனத் தமிழகத்தில் வணங்கப்படும் குமரன் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் உடையவர். முருகன் தமிழ்க்கடவுளாகவும் கருதப்படுகிறார்.

137) தவறானதைத் தேர்வு செய்க (8-வது தீர்த்தகங்கரர் பற்றிய கூற்று)

A) 8-வது தீர்த்தங்கரர் – ப்ருகுடி

B) மூல பெண் தெய்வம் – ஜீவாலா மாலினி

C) சின்னம் – சந்திரன்

D) சமயம் – சமணம்

விளக்கம்: 8-வது தீர்த்தங்கரர் – சந்திரபிரபா

மூல பெண் தெய்வம் – ப்ருகுடி அல்லது ஜீவாலா மாலினி

சின்னம் – சந்திரன்

சமயம் – சமணம்

138) எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், மாற்றுத்தத்துவங்களை வெளிக்கொணர்வதும் எதன் தனிச்சிறப்பாகும்?

A) உபநிடங்கள்

B) ஆகமங்கள்

C) திருமுறைகள்

D) A மற்றும் B

விளக்கம்: அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டென்றால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படி தோன்றியது? போன்ற கேள்விகளை உபநிடதம் எழுப்புகிறது. எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல் கேள்விகளை எழுப்புவதும் மாற்றுத்தத்துவங்களை வெளிக்கொணர்வதும் உபநிடதத்தின் தனிச்சிறப்பாகும்

139) சைவத்திருமுறைகளை தொகுத்தவர் யார்?

A) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

B) மத்தர்

C) நம்பியாண்டார் நம்பி

D) திருமூலர்

விளக்கம்: சைவத்திருமுறைகள் 12-யையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.

140) சைவ சித்தாந்த சாத்திரங்கள் எத்தனை?

A) 12

B) 14

C) 18

D) 24

விளக்கம்: சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14 ஆகும். இவற்றை “மெய்க்கண்ட சத்திரங்கள்” என்பர். இவற்றில் தலைசிறந்தது சிவஞான போதகமாகும். இந்;நூலை இயற்றியவர் மெய்கண்ட தேவராவார். இதில் சைவசித்தாந்த மெய்யியல் கருத்துக்களைக் காணலாம்.

141) இந்திய பண்பாடிற்குச் சீக்கிய சமயத்தின் கொடை என்ன?

A) இந்து, இஸ்லாமிய ஒற்றுமையே சீக்கிய சமயத்தின் முக்கிய கொடையாகும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டிற்குச் சீக்கிய சமயம் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.

B) கடுமையான போராட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட இனமாதலால், இவர்கள் நாட்டுப்பற்றுடன் இந்திய இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

C) அன்பு, கொடை, சகிப்புத்தன்மை, சடங்குகளை மறுத்தல் போன்றவற்றை இச்சமயம் போதிக்கிறது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இந்து, இஸ்லாமிய ஒற்றுமையே சீக்கிய சமயத்தின் முக்கிய கொடையாகும். இந்தியாவின் பன்முகப் பண்பாட்டிற்குச் சீக்கிய சமயம் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.

கடுமையான போராட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட இனமாதலால், இவர்கள் நாட்டுப்பற்றுடன் இந்திய இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அன்பு, கொடை, சகிப்புத்தன்மை, சடங்குகளை மறுத்தல் போன்றவற்றை இச்சமயம் போதிக்கிறது.

142) சரியானதைத் தேர்வு செய்க.

A) 13-வது தீர்த்தங்கரர் – விமலநாதர்

B) மூல பெண் தெய்வம் – வைரோதி

C) சின்னம் – பன்றி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 13-வது தீர்த்தங்கரர் – விமலநாதர்

மூல பெண் தெய்வம் – வைரோதி

சின்னம் – பன்றி

143) கீதை எத்தனை வகை மார்க்கங்களை உணர்த்துகிறது?

A) 2

B) 4

C) 8

D) 16

விளக்கம்: கீதை உணர்த்தும் 4 மார்க்கங்கள்: இந்து மதத்தில் ஆன்மீகவழிகள் “சாதனம்” என்றழைக்கப்படுகின்றன. இறைவனை அடையும் வழியே மார்க்கமாகும். அவற்றுக்குப் பல்வேறு வகையான சாத

னங்கள் உதவுகின்றன. பகவத் கீதை இறைவனை அடைய 4 மார்க்கங்களைக் காட்டுகிறது.

1. ஞான மார்க்கம்

2. இராஜ மார்க்கம்

3. கர்ம மார்க்கம்

4. பக்தி மார்க்கம்

144) பகவத் கீதை எத்தனை ஸ்லோகங்களால் ஆனது?

A) 18

B) 1800

C) 700

D) 70

விளக்கம்: மகாபாரதம் 700 ஸ்லோகங்கள் 18 அத்தியாயங்கள் கொண்டது.

145) “ஜீத்” என்பதன் பொருள் என்ன?

A) ஜெயித்தல்

B) தோற்றல்

C) நாணுதல்

D) A மற்றும் C

விளக்கம்: ஜீன் என்பது ஜீத் என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. ஜீத் என்பதற்கு ஜெயித்தல், வெற்றிபெறுதல் என்று பொருள்.

146) கூற்றுகளை ஆராய்க.

1. ஆடையே அணியாதவர்கள் – சுவேதாம்பரர்கள்

2. வெண்ணிற ஆடை அணிபவர்கள் – திகம்பரர்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஆடையே அணியாதவர்கள் – திகம்பரர்

2. வெண்ணிற ஆடை அணிபவர்கள் – சுவேதாம்பரர்

147) மனம், வாக்கு, காயங்களை அடக்கி நல்வினை, தீவினை உயிரை வந்து அடையாமல் தடுப்பது எது?

A) பாவம்

B) புண்ணியம்

C) ஊற்று

D) செறிப்பு

விளக்கம்: செறிப்பு (சம்வார்) – மனம், வாக்கு, காயங்களை அடக்கி நல்வினை, தீவினை உயிரை வந்து அடையாமல் தடுக்கும்.

148) சமணம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறி எது?

A) தீங்கிழையாமையைத் தங்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்

B) மூக்கை திரையிட்டு மூடிக்கொள்ள வேண்டும்.

C) மயில் பீலியை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். தங்களின் பாதம்பட்டு சிறு உயிரினங்கள் கூட இறக்கக்கூடாது என்பது, சமண சமயம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறியாகும்.

D) அனைத்தும்

விளக்கம்: தீங்கிழையாமையைத் தங்களின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்

மூக்கை திரையிட்டு மூடிக்கொள்ள வேண்டும்.

மயில் பீலியை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். தங்களின் பாதம்பட்டு சிறு உயிரினங்கள் கூட இறக்கக்கூடாது என்பது, சமண சமயம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறியாகும்.

149) 9-வது சீக்கிய குரு யார்?

A) குரு தேஜ்பகதூர்

B) அர்ஜுன் சிங்

C) துளிப் சிங்

D) குருகோவிந்த சிங்

விளக்கம்: 9-வது சீக்கிய குருவான குரு தேஜ்பகதூரை முகலாய அரசர் ஒளரங்கசீப் கொன்றதால், கோபமடைந்த கோவிந்தசிங் சீக்கிய சமயத்தினரை இராணுவ அமைப்பாக மாற்றினார். இதுவே ‘கால்சா’ எனப்படுகிறது.

150) தில்வாரா கோயில் யாரால் கட்டப்பட்டது?

A) சாளுக்கியர்கள்

B) சோலங்கி வம்ச மன்னர்கள்

C) குப்தர்கள்

D) மௌரியர்கள்

விளக்கம்: “தில்வாரா கோயில்” சோலங்கி வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது.

151) தவறானதைத் தேர்வு செய்க.

A) 22-வது தீர்த்தங்கரர் – நேமிநாதர்

B) மூல பெண் தெய்வம் – அம்பிகா (துஸ்மாண்தினி)

C) சின்னம் – பாம்பு

D) சமயம் – சமணம்

விளக்கம்: 22-வது தீர்த்தங்கரர் – நேமிநாதர்

மூல பெண் தெய்வம் – அம்பிகா (துஸ்மாண்தினி)

சின்னம் – சங்கு

சமயம் – சமணம்

152) கோமதீஸ்வரர் சிலை எந்த பெயராலும் அழைக்கப்படுகிறது?

A) பாகுபலி

B) மகாபலி

C) சாமுண்டராயர்

D) A மற்றும் C

விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை, பாகுபலி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கங்க வம்சத்து மன்னரின் படைத்தளபதியான சாமுண்டராயா என்பவரால் நிறுவப்பட்டது.

153) சரியானதைத் தேர்வு செய்க.

A) 24-வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்

B) மூல பெண் தெய்வம் – சித்தாக்கியா

C) சின்னம் – சிங்கம்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 24-வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்

மூல பெண் தெய்வம் – சித்தாக்கியா

சின்னம் – சிங்கம்

154) தவறானதைத் தேர்வு செய்க.

A) மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர்

B) இவரே சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்

C) தேடலின் விளைவாய்ச் சுகங்களைத் துறந்து, துறவறம் மேற்கொண்டார்

D) 14 ஆண்டுகள் கடந்து ரிஜீபாலிகா என்னும் இடத்தில் ஞானம் பெற்றார்

விளக்கம்: 12 ஆண்டுகள் கடந்து ரிஜீபோலிகா என்னுமிடத்தில் சால மரத்தடியில் “கைவல்யா” எனப்படும் உயரிய ஆன்மீன ஞானத்தை அடைந்தார். அதன் பிறகு மகாவீரர் என அழைக்கப்பட்டார்.

155) மகாவீரர் எந்தப் பகுதியில் சமண சமய, கருத்துக்களைப் பரப்பினார்?

A) மகதம், இலங்கை

B) கோசலம், இலங்கை

C) மகதம், கோசலம்

D) இலங்கை

விளக்கம்: கங்கைச் சமவெளியில் குறிப்பாக மகதம், கோசலம் போன்ற பகுதிகளில் சமண சமய கருத்துகளைப் பரப்பினர்.

156) கூற்றுகளை ஆராய்க.

1. வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.

2. இச்சமயம் கடவுள் கொள்கை அவசியமில்லை என்று கருதுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.

2. இச்சமயம் கடவுள் கொள்கை அவசியமில்லை என்று கருதுகிறது.

157) வீடுபேறு அடைய மூன்று மணிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறும் மதம் எது?

A) இந்து

B) புத்தம்

C) சமணம்

D) சீக்கியம்

விளக்கம்: வீடுபேறு அடைய 3 மணிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சமணம் சமயம் கூறுகிறது.

158) மகாவீரர் கூறும் மும்மணிகள் (திரிரத்தினங்கள்) எவை?

A) நன்னம்பிக்கை, முயற்சி, நற்செயல்

B) நன்னம்பிக்கை, முயற்சி, நல்லறிவு

C) நன்னம்பிக்கை, முயற்சி, நல்லறிவு

D) நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்.

விளக்கம்: திரி ரத்தினங்கள்:

நன்னம்பிக்கை – வீடுபேற்றினை அடைய மகாவீரர் போதித்த தத்துவங்களில் முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நல்ல நம்பிக்கை(சம்யக் தரிசனம்) என்பர்.

நல்லறிவு – இந்த உலகத்தை யாரும் படைக்கவில்லை. இது இயற்கையாகத் தோன்றியது என்ற முழுமையான அறிவு பெற வேண்டும். அது நல்லறிவு(சம்யக் ஞானம்) எனக் கூறப்படுகிறது.

நற்செயல் – கொல்லாமை, பொய் போசாமை, திருடாமை, சொத்து சேர்க்காமை, கற்புடைமை ஆகிய 5 நற்செயல்களையும் பின்பற்ற வேண்டும். இவை(சம்யக் சரித்திரம்) எனப்படுகிறது.

159) பொருத்துக

அ. நன்னம்பிக்கை – 1. சம்யக் சரித்திரம்

ஆ. நல்லறிவு – 2. சம்யக் ஞானம்

இ. நற்செயல் – 3. சம்யக் தரிசனம்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 3, 2

D) 3, 1, 2

விளக்கம்: நன்னம்பிக்கை – சம்யக் தரிசனம்

நல்லறிவு – சம்யக் ஞானம்

நற்செயல் – சம்யக் சரித்திரம்

160) சமண சமயத்தில் எத்தனை பெரும் நோன்புகள் மேற்கொள்ளப்படுகின்றன?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: சமண சமயத்தின் 5 பெரும் நோன்புகள் அல்லது பஞ்ச மஹாவிரதம்:

1. அகிம்சை

2. வாய்மை

3. அஸ்டேயா

4. அபரிகிரஹா

5. பிரம்மச்சரியம்

161) பஞ்ச மஹாவிரதங்களைப் பொருத்துக.

அ. தீங்கிழைக்காமை – 1. வாய்மை

ஆ. உண்மைபேசுதல் – 2. அகிம்சை

இ. திருடாமை – 3. பிரம்மச்சரியம்

ஈ. தன்னடக்கம் – 4. அஸ்டேயா

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 3, 1, 2, 4

D) 2, 1, 4, 3

விளக்கம்: தீங்கிழைக்காமை – அகிம்சை

உண்மைப்பேசுதல் – வாய்மை

திருடாமை – பிறர் பொருளைக் கவராமை

சொத்துக்கள் – சேர்த்தலை விடுதல்

தன்னடக்கம் – பிரம்மச்சரியம்

162) கூற்றுகளை ஆராய்க.

1. நாம்தாரி – நிறுவியவர் – பாபா ராம் சிங்

2. நிரங்காரி – நிறுவியவர் – பாபா தயாள் தாஸ்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாம்தாரி – நிறுவியவர் – பாபா ராம் சிங்

2. நிரங்காரி – நிறுவியவர் – பாபா தயாள் தாஸ்

163) “கால்சா” என்பதன் பொருள் என்ன?

A) கல்லூரி

B) சீக்கியம்

C) மதம்

D) தூய்மை

விளக்கம்: கால்சா என்றால் தூய்மை எனப் பொருள். இதில் சேருபவர்கள் அகாலி (இறவாதவன்) என அழைக்கப்பட்டனர்.

164) குருநானக்கின் போதனை எது?

1. உருவ வழிபாடு செய்வதாலோ, நோன்பு இருப்பதாலோ புனித தலங்களுக்கு செல்வதாலோ எந்தப் புண்ணியமும் கிடைக்காது. உடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும்.

2. நேர்மையான வழியில் பிறரை ஏமாற்றாமல் பொருளீட்டுங்கள்

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) இரண்டும்

D) எவுமில்லை

விளக்கம்: 1. உருவ வழிபாடு செய்வதாலோ, நோன்பு இருப்பதாலோ புனித தலங்களுக்கு செல்வதாலோ எந்தப் புண்ணியமும் கிடைக்காது. உடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதுவே இறைவனை அடையும் வழியாகும்.

2. நேர்மையான வழியில் பிறரை ஏமாற்றாமல் பொருளீட்டுங்கள்.

165) எந்த சமயத்தின் வாழ்வியல் நெறிகள் “நவபதார்த்தங்கள்” என்றழைக்கப்படுகின்றன?

A) புத்தம்

B) சமணம்

C) இந்து

D) சீக்கியம்

விளக்கம்: சமணம் சமயத்தின் வாழ்வில் நெறிகள் “நவபதார்த்தங்கள்” என்றழைக்கப்படுகின்றன. அவை,

1. ஜீவன்

2. அஜீவன்

3. புண்ணியம்

4. பாவம்

5. ஊற்று

6. செறிப்பு (சம்வளர்)

7. உதிர்ப்பு

8. பந்தம்

9. மோட்சம்

166) நல்வினை, தீவினை அகற்றித் தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிவது எது?

A) ஜீவன்

B) அஜீவன்

C) ஊற்று

D) உதிர்ப்பு

விளக்கம்: நல்வினை, தீவினை அகற்றித் தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடி அறிவது ஜீவன்.

167) உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப, துன்பங்களைத் துய்ப்பவை எது?

A) ஜீவன்

B) அஜீவன்

C) ஊற்று

D) உதிர்ப்பு

விளக்கம்: உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப, துன்பங்களைத் துய்ப்பவை – அஜீவன்.

168) நல்லெண்ணம், நல்லசெயல், நல்லசொல் இவற்றால் விளைபவை எவை?

A) ஜீவன்

B) அஜீவன்

C) புண்ணியம்

D) பாவம்

விளக்கம்: நல்லெண்ணம், நல்லசெயல், நல்லசொல் இவற்றால் விளைபவை புண்ணியம் ஆகும்.

169) தீய எண்ணம், தீய செயல், தீய சொல் இவற்றால் விளைபவை எவை?

A) ஜீவன்

B) அஜீவன்

C) புண்ணியம்

D) பாவம்

விளக்கம்: தீய எண்ணம், தீய செயல், தீய சொல் இவற்றால் விளைவது பாவம் ஆகும்.

170) உயிரிகள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்பப் பயன்கள் வந்து சேரும் என்பது என்ன?

A) பாவம்

B) புண்ணியம்

C) ஊற்று

D) செறிப்பு

விளக்கம்: ஊற்று (ஆசிரமம்) – உயிரிகள் செய்த புண்ணியம் பாவங்களுக்கேற்பப் பயன்கள் வந்து சேரும்.

171) தவறானதைத் தேர்வு செய்க.

A) 18-வது தீர்த்தங்கரர் – அறநாதர்

B) மூல பெண் தெய்வம் – விஜயாதேவி

C) சின்னம் – கலசம்

D) சமயம் – சமணம்

விளக்கம்: 18-வது தீர்த்தங்கரர் – அறநாதர்

மூல பெண் தெய்வம் – விஜயாதேவி

சின்னம் – மீன்

சமயம் – சமணம்

172) இரு வினைகளும் உயிருடன் சேராமல் தடுத்தபின், எஞ்சிய வினைகளை நீக்குவது எது?

A) உதிர்ப்பு

B) பந்தம்

C) மோட்சம்

D) புண்ணியம்

விளக்கம்: உதிர்ப்பு – இரு வினைகளும் உயிருடன் சேராமல் தடுத்தபின், எஞ்சிய வினைகளை நீக்கும்.

173) சிந்தை, சொல், செயல், ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பது எது?

A) உதிர்ப்பு

B) பந்தம்

C) மோட்சம்

D) புண்ணியம்

விளக்கம்: பந்தம் – சிந்தை, சொல், செயல், ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பது பந்தம் ஆகும்.

174) ஐம்புலன்களின் ஆசைகளையும் அறவே அழித்து, இரு வினைகளிலும் நீங்கி உயர்ந்து வீடுபேறு அடைவது எது?

A) உதிர்ப்பு

B) பந்தம்

C) மோட்சம்

D) புண்ணியம்

விளக்கம்: மோட்சம் – ஐம்புலன்களின் ஆசைகளையும் அறவே அழித்து, இரு வினைகளிலும் நீங்கி உயர்ந்த, வீடுபேறு அடைவது மோட்சமாகும்.

175) சமணம் கூறும் துறவிகளுக்கான வாழ்வியல் நெறி எது?

A) சமணத் துறவிகள் கடுந்துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

B) எளிமையான பற்றற்ற நிலையை மேற்கொண்டு உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும்.

C) அடிக்கடி உண்ணா நோன்பு இருந்து இறுதியில் முழுப்பட்டினி இருந்து உயிர் துறக்க வேண்டும்

D) அனைத்தும் சரி

விளக்கம்: சமணத் துறவிகள் கடுந்துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

எளிமையான பற்றற்ற நிலையை மேற்கொண்டு உலக வாழ்க்கையைத் துறக்க வேண்டும்.

அடிக்கடி உண்ணா நோன்பு இருந்து இறுதியில் முழுப்பட்டினி இருந்து உயிர் துறக்க வேண்டும்

176) சரியானதைத் தேர்வு செய்க.

A) 19-வது தீர்த்தங்கரர் – மல்லிநாதர்

B) மூல பெண் தெய்வம் – அபராஜிதா

C) சின்னம் – கலசம்

D) அனைத்தும் சரி

விளக்கம்: 19-வது தீர்த்தங்கரர் – மல்லிநாதர்

மூல பெண் தெய்வம் – அபராஜிதா

சின்னம் – கலசம்

177) சமண சமயத்தின் தத்துவம் எது?

A) உலகம் அழியக்கூடியப் பொருளாலும், அழியாத்தன்மையாலும், ஆத்மாக்களாலும் உருவானது.

B) மனிதன் மட்டுமின்றி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் கல்லுக்கும் உயிர் இருப்பதாக நம்பப்படுகிறது.

C) உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. அதற்குக் காரணம் உயிர்கள் செய்யும் வினையும், வினைப்பயனுமே ஆகும்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: உலகம் அழியக்கூடியப் பொருளாலும், அழியாத்தன்மையாலும், ஆத்மாக்களாலும் உருவானது. மனிதன் மட்டுமின்றி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் கல்லுக்கும் உயிர் இருப்பதாக நம்பப்படுகிறது. உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. அதற்குக் காரணம் உயிர்கள் செய்யும் வினையும், வினைப்பயனுமே ஆகும்.

178) சமண சமயத்தின் தத்துவம் எது?

A) தூய்மையான உயிர், வினைப்பயனால் கறைபடிந்திருக்கிறது.

B) வினைப்பயன்களைக் களைய கடுமையான தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும்.

C) தன்னை உண்மையில் உணர்ந்தவனே ஜீவ முக்தி அடைந்தவனாவான்

D) அனைத்தும் சரி

விளக்கம்: தூய்மையான உயிர், வினைப்பயனால் கறைபடிந்திருக்கிறது. வினைப்பயன்களைக் களைய கடுமையான தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும். தன்னை உண்மையில் உணர்ந்தவனே ஜீவ முக்தி அடைந்தவனாவான்

179) சமணம் கூறும் அறிவு நிலைகள் எத்தனை?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: சமணம் கூறும் 5 வகையான அறிவு நிலைகள்:

1. மதி ஞானம்

2. ஸ்ருதி ஞானம்

3. அவதி ஞானம்

4. மனப்பிரயாய ஞானம்

5. கைவல்யா ஞானம்

180) மனம் மற்றும் புலன்களால் கிடைக்கும் அறிவு எது?

A) மதி ஞானம்

B) ஸ்ருதி ஞானம்

C) அவதி ஞானம்

D) மனப்பிரயாய ஞானம்

விளக்கம்: மனம் மற்றும் புலன்களால் கிடைக்கும் அறிவு – மதி ஞானம்.

181) சமண நூல்கள் மூலமும், துறவிகள் மூலமும் கிடைக்கும் அறிவு எது?

A) மதி ஞானம்

B) ஸ்ருதி ஞானம்

C) அவதி ஞானம்

D) மனப்பிரயாய ஞானம்

விளக்கம்: சமண நூல்கள் மூலமும் துறவிகள் மூலமும் கிடைக்கும் அறிவு – ஸ்ருதி ஞானம்

182) கடந்த காலம், எதிர்காலம், தொலைவில் உள்ளவற்றைப் பற்றிய அறிவு எது?

A) மதி ஞானம்

B) ஸ்ருதி ஞானம்

C) அவதி ஞானம்

D) மனப்பிரயாய ஞானம்

விளக்கம்: கடந்த காலம், எதிர்காலம், தொலைவில் உள்ளவற்றைப் பற்றி அறிய – அவதி ஞானம்

183) அடுத்தவர் மனத்தில் உள்ளவற்றை அறிவது எது?

A) மதி ஞானம்

B) ஸ்ருதி ஞானம்

C) அவதி ஞானம்

D) மனப்பிரயாய ஞானம்

விளக்கம்: அடுத்தவர் மனத்தில் உள்ளவற்றை அறிவது – மனப்பிரயாய ஞானம் ஆகும்.

184) அனைத்துப் பந்தங்களும் வினையால் ஏற்பட்ட தடைகள் நீங்கிய பிறகு, ஆன்மாவிற்குக் கிடைக்கும் முழுமையான உண்மையான அறிவு எது?

A) கைவல்யா ஞானம்

B) ஸ்ருதி ஞானம்

C) அவதி ஞானம்

D) மனப்பிரயாய ஞானம்

விளக்கம்: அனைத்துப் பந்தங்களும் வினையால் ஏற்பட்ட தடைகள் நீங்கிய பிறகு, ஆன்மாவிற்குக் கிடைக்கும் முழுமையான உண்மையான அறிவு -கைவல்யா ஆகும்

185) மாகவீரரின் சீடர்கள் எத்தனை பேர்?

A) 8

B) 9

C) 24

D) 11

விளக்கம்: மகாவீரரின் சீடர்கள் 11 பேர் எனக் கூறுவர். சாதி, ஆண், பெண் வேறுபாடின்றி சீடர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நிர்கிரந்தர்கள் (நிர்கிந்தர் – தளைகளிலிருந்து விடுபட்டோர்) எனப்பட்டனர்.

186) மகாவீரரின் சீடர்களுள் முக்கியமானவர் யார்?

A) பரசுராமர்

B) மகாபலி

C) பத்ரபாகு

D) வாலி

விளக்கம்: மகாவீரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்ரபாகு ஆவார்.

187) முதல் சமண சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.

A) கி.மு.(பொ.ஆ.மு) 3-ம் நூற்றாண்டில் பாடலிபுத்திர நகரில் நடைபெற்றது.

B) இது தேவாதி க்ரஷ்மர்மனா என்பவர் தலைமையில் நடைபெற்றது.

C) இங்கு சமண சமய நூல்களை 12 அங்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டன.

D) இம்மாநாட்டில் சமண சமயம் ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

விளக்கம்: முதல் சமண சமய மாநாடு பாடலிபுத்திர நகரில் ஸ்தூலபத்திரர் தலைமையில் நடைபெற்றது.

188) 2-ம் சமண சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.

A) 2-ம் சமண சமய மாநாடு கி.பி (பெ.ஆ) 502-ல் நடைபெற்றது.

B) இது வல்லபி நகரில் நடைபெற்றது.

C) தலைமை – தேவாதி க்ரஷ்மர்னா

D) இதில் சமய சமய நூல்களான 12 அங்கங்கள், 12 உப அங்கங்கள் ஆகியவை இறுதி செய்யப்பட்டன.

விளக்கம்: இது கி.பி. 512-ல் நடைபெற்றது.

189) சமணப் புனித நூல் எது?

A) ஆகமசித்தாந்தம்

B) சூத்திரம்

C) கல்பம்

D) A மற்றும் B

விளக்கம்: சமண புனித நூல் – ஆகம சித்தாந்தம். இது 12 அங்கங்களைக் கொண்டது.

190) ஆகமசித்தாந்த நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

A) பாலி

B) இந்தி

C) சமஸ்கிருதம்

D) பிராகுயி

விளக்கம்: சமணப் புனித நூலான ஆகமசித்தாந்தம், பாலி மொழியில் எழுதப்பட்டது. இது உரைநடையும் செய்யுள் நடையும் கலந்தவையாகும்.

191) தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கூறும் நூல் எது?

A) ஆகமசித்தாந்தம்

B) கல்ப சூத்திரம்

C) கல்பம்

D) A மற்றும் B

விளக்கம்: “கல்ப சூத்திரம்” என்னும் நூல் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறுகிறது.

192) ‘கல்ப சூத்திரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) மகாவீரர்

B) கௌதமர்

C) சித்தார்தர்

D) பத்ரபாகு

விளக்கம்: ‘கல்ப சூத்திரம்’ என்னும் நூலின் ஆசிரியர் “பத்ரபாகு” இவர் மகாவீரரின் முக்கிய சீடர் ஆவார்

193) பொருந்தாததைத் தேர்வு செய்க

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) வளையாபதி

விளக்கம்: மணிமேகலை என்பது பௌத்த நூல், மற்றவை சமண நூல்கள்.

194) பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

A) யாப்பெருங்கலங்காரிகை

B) நன்னூல், நான்மணிக்கடிகை

C) வளையாபதி, பழமொழி

D) மணிமேகலை, குண்டலகேசி

விளக்கம்: சமண நூல்கள் – சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, யாப்பெருங்கலங்காரிகை, நன்னூல், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி.

பௌத்த நூல் – மணிமேகலை, குண்டலகேசி

195) சமணர்கள் இலக்கியங்களையும், தத்துவங்களையும் எந்தெந்த மொழியில் அளித்துள்ளனர்?

A) இந்தி, குஜராத்தி

B) மராத்தி, கன்னடம்

C) சமஸ்கிருதம்

D) அனைத்தும்

விளக்கம்: இந்தி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், சமஸ்கிருதம் போன்றவற்றிலும் சமணர்கள், இலக்கியங்களையும், தத்துவங்களையும் அளித்துள்ளனர்.

196) “தில்வாரா கோயில்” எங்குள்ளது?

A) ஒடிசா

B) குஜராத்

C) இராஜஸ்தான்

D) மகாராஷ்டிரா

விளக்கம்: சமணக் கட்டடக்கலை என்பது இந்தியக் கலையுடன் இணைந்து, இராஜஸ்தானிலுள்ள மவுண்ட் அபுவில் உள்ள “தில்வாரா கோயில்” புகழ்பெற்ற ஒன்றாகும்.

197) தவறானதைத் தேர்வு செய்க

A) 21-வது தீர்த்தங்கரர் – நாமிநாதர்

B) மூல பெண் தெய்வம் – சாமுண்டி (கந்தாரி)

C) சின்னம் – பாம்பு

D) சமயம் – சமணம்

விளக்கம்: 21-வது தீர்த்தங்கரர் – நாமிநாதர்

மூல பெண் தெய்வம் – சாமுண்டி(கந்தாரி)

சின்னம் – நீலத்தாமரை

சமயம் – சமணம்

198) “ரனக்பூர் ஜெயின் கோயில்” யாருடைய கோயில்?

A) பத்ரபாகு

B) ஆதிநாதர்

C) மகாவீரர்

D) பார்சவநாதர்

விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் – இது ஆதிநாதர் கோயிலாகும். இக்கோயில் பழுப்பு நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.

199) ரனக்பூர் ஜெயின் கோயில் எத்தனை தூண்களைக் கொண்டது?

A) 1008

B) 512

C) 732

D) 1444

விளக்கம்: இது 1444 மார்பில் தூண்களைக் கொண்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டவை.

200) ரனக்பூர் ஜெயின் கோயில் யாரால் கட்டப்பட்டது?

A) சேத் தர்னாஷா

B) ரானாகும்பா

C) சோலாங்கி வம்ச மன்னர்

D) A மற்றும் B

விளக்கம்: ரனக்பூர் ஜெயின் கோயில் “சேத் தர்னாஷா” என்பவரால் மன்னர் ரானாகும்பாவின் உதவியுடன் கட்டப்பட்டது. ஒவ்வொரு தூணும் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டன.

201) உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலை எது?

A) திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி

B) படேல் சிலை, குஜராத்

C) கோமதீஸ்வரர் சிலை, கர்நாடகா

D) ஆதியோகி சிலை, கோயம்புத்தூர்

விளக்கம்: கர்நாடகா மாநிலத்திலுள்ள சிரவணபெலகொலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாகும். இதன் உயரம் 57 அடி.

202) சரியானதைத் தேர்வு செய்க.

A) 23-வது தீர்த்தங்கரர் – பார்சவநாதர்

B) மூல பெண் தெய்வம் – பத்மாவதி

C) சின்னம் – பாம்பு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 23-வது தீர்த்தங்கரர் – பார்சவநாதர்

மூல பெண் தெய்வம் – பத்மாவதி

சின்னம் – பாம்பு

203) “தேரவாதம்” என அழைக்கப்படும் மதம் எது?

A) சமணம்

B) பௌத்தம்

C) சீக்கியம்

D) ஜெராஸ்டிரம்

விளக்கம்: புத்த மத்தின் வேறுபெயர்கள்:

1. சாக்கிய மதம்

2. பாலிபௌத்தம்

3. திருமறைபௌத்தம்

4. தென்னாட்டுப் பௌத்தம்

5. தேரவாதம்

6. ஸ்தவிரவாதம்

204) ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

A) மகாவீரர்

B) புத்தர்

C) குருநானக்

D) ஜெராஸ்டர்

விளக்கம்: ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்டவர் ‘ஜெராஸ்டிரர்’.

205) பவங்கஜா ஆதிநாதர் சிலை எங்குள்ளது?

A) இராஜஸ்தான்

B) பந்தல்கண்ட்

C) மத்தியப்பிரதேசம்

D) மகாராஷ்டிரா

விளக்கம்: பவங்கஜா ஆதிநாதர் சிலை (மத்தியப் பிரதேசம்), இராஜஸ்தான், பந்தல்கண்ட் போன்ற இடங்களில் சமணக் கலையின் சிதைவுகள் காணப்படுகின்றன.

206) தமிழ்நாட்டில் எந்த இடத்தில் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன?

A) கழுகு மலை, மதுரை

B) சித்தன்ன வாசல், சீயமங்கலம்

C) காஞ்சிபுரம், எண்ணாயிரம்

D) அனைத்தும்

விளக்கம்: தமிழ்நாட்டில் கழுகு மலை(மதுரை), சித்தன்ன வாசல்(சீயமங்கலம்), காஞ்சிபுரம், எண்ணாயிரம், மேல்சித்தாமூர் போன்ற இடங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன.

207) இந்தியப் பண்பாட்டிற்குச் சமணசமயத்தின் கொடை என்ன?

A) கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது.

B) சமண சமயத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் 12 அங்கங்களைக் கொண்டது. இந்நூல்அர்த்தமதி என்ற பாலி மொழியில் “தேவாதி” என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது.

C) பிராகிருதம், பாலி, தமிழ் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழில் நன்னூல், சீவகசிந்தாமணி, வளையாபதி, நாலடியார் போன்ற நூல்களை அளித்தவர்கள் சமணர்கள்

D) அனைத்தும் சரி

விளக்கம்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது.

சமண சமயத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் 12 அங்கங்களைக் கொண்டது. இந்நூல்அர்த்தமதி என்ற பாலி மொழியில் “தேவாதி” என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது.

பிராகிருதம், பாலி, தமிழ் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழில் நன்னூல், சீவகசிந்தாமணி, வளையாபதி, நாலடியார் போன்ற நூல்களை அளித்தவர்கள் சமணர்கள்

208) இந்தியப் பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடை என்ன?

A) வடமொழியில் இலக்கணம், அகராதி, குறியீட்டுமுறை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இவர்களுடைய பணி சிறப்பானதாகும்.

B) சமண சமயக் கலைகளில் கட்டடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் ஸ்தூபிகள் கோயில்கள் போன்றவற்றைக் கட்டினர். கோயிலில் முழு உருவச் சிலையையும் வைத்தும் வழிபட்டனர்.

C) கோமதீஸ்வரரின் முழுஉருவச் சிலை சிரவணபெலகொலா என்னுமிடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

D) அனைத்தும்

விளக்கம்: வடமொழியில் இலக்கணம், அகராதி, குறியீட்டுமுறை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இவர்களுடைய பணி சிறப்பானதாகும்.

சமண சமயக் கலைகளில் கட்டடக்கலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் ஸ்தூபிகள் கோயில்கள் போன்றவற்றைக் கட்டினர். கோயிலில் முழு உருவச் சிலையையும் வைத்தும் வழிபட்டனர்.

கோமதீஸ்வரரின் முழுஉருவச் சிலை சிரவணபெலகொலா என்னுமிடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

209) இந்திய பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடை என்ன?

A) குவாலியருக்கு அருகில் உள்ள பாறைகளில் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், உதயகிரி, எல்லோரா, ஹதிகும்பா ஆகிய இடங்களிலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் சமண சமயச் சிற்பக் கலைக்கு உதாரணம்.

B) பவபுரியிலுள்ள கோயில், இராஜகிரி மற்றும் அபுமலையிலுள்ள தில்வாராகோயில், சித்தூர் சமணக் கோபுரம் போன்றவை, சமணர்களின் கலை, கட்டடக்கலையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றன.

C) சமணம் அகிம்சையை வலியுறுத்தியதால் விலங்குகள் பலியிடப்படுவது குறையத் தொடங்கியது

D) அனைத்தும்

விளக்கம்: குவாலியருக்கு அருகில் உள்ள பாறைகளில் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், உதயகிரி, எல்லோரா, ஹதிகும்பா ஆகிய இடங்களிலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் சமண சமயச் சிற்பக் கலைக்கு உதாரணம்.

பவபுரியிலுள்ள கோயில், இராஜகிரி மற்றும் அபுமலையிலுள்ள தில்வாராகோயில், சித்தூர் சமணக் கோபுரம் போன்றவை, சமணர்களின் கலை, கட்டடக்கலையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றன.

சமணம் அகிம்சையை வலியுறுத்தியதால் விலங்குகள் பலியிடப்படுவது குறையத் தொடங்கியது

210) பொருத்துக.

அ. கோமதீஸ்வரர் சிலை – 1. சித்தூர்

ஆ. இராஜகிரி கோயில் – 2. அபுமலை

இ. தில்வாராக் கோயில் – 3. பவபுரி

ஈ. சமணக் கோபுரம் – 4. சிரவணபெலகோலா

A) 4, 3, 2, 1

B) 4, 3, 1, 2

C) 4, 2, 3, 1

D) 4, 1, 3, 2

விளக்கம்: கோமதீஸ்வரர் சிலை – சிரவணபெலகோலா

இராஜகிரி கோயில் – பவபுரி

தில்வாரக் கோயில் – அபுமலை

சமணக் கோபுரம் – சித்தூர்

211) ஜப்பான், சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் பெரும்பான்மைச் சமயமாக விளங்குவது எது?

A) இந்து

B) புத்தம்

C) சமணம்

D) சீக்கியம்

விளக்கம்: இந்தியாவில் தோன்றிய பழமையான சமயங்களில் புத்த சமயமும் ஒன்றாகும். ஜப்பான், சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இச்சமயம் பெரும்பான்மைச் சமயமாக விளங்குகின்றது. இக்கால சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சடங்குகள், சிக்கலான நடைமுறைகள் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பௌத்த சமயம் தோன்றக் காரணமாயிற்று. புத்தரின் ஆளுமையும், எளிமையான கொள்கைகளும், மன்னர்களின் ஆதரவும் கிடைத்தமையால் பௌத்த சமயம் எளிதில் பரவியது.

212) “சாக்கிய மதம்” என்று அழைக்கப்படும் மதம் எது?

A) சமணம்

B) பௌத்தம்

C) சீக்கியம்

D) ஜெராஸ்டிரம்

விளக்கம்: பௌத்த மதம் “சாக்கிய மதம்” என்று அழைக்கப்படுகிறது. பௌத்தம் என்பது புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமாகும்.

213) சமண கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு தருக?

A) தில்வாரா கோயில்

B) ரனக்பூர் ஜெயின் கோயில்

C) கோமதீஸ்வரர் சிலை மற்றும் எல்லோரா இந்திர சபை

D) அனைத்தும்

விளக்கம்: இராஜஸ்தான் தில்வாரா கோயில், ரனக்பூர் ஜெயின் கோயில், கர்நாடகா கோமதீஸ்வரர் கோயில், உதயகிரியிலுள்ள புலிக்குகை, எல்லோரா இந்திரசபை போன்றவை சமணக் கலைக்கு உதாரணங்கள் ஆகும்.

214) புத்தரின் இயற்பெயர் என்ன?

A) கௌதமர்

B) சித்தார்த்தர்

C) கௌமிபரஜாபதி

D) சாக்கியமுனி

விளக்கம்: புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். இவர் இன்றைய நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள லும்பினி வனத்தில் சுத்தோதனருக்கும்-மாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

215) திரிபீடகம் என்பது எத்தனை பீடகங்களைக் கொண்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: திரிபீடகங்கள் “ 1. சுத்த பீடகம் 2. வினைய பீடகம் 3. அபிதம்ம பீடகம்.

216) சாக்கியமுனி என அழைக்கப்படுபவர் யார்?

A) மகாவீரர்

B) குருநானக்

C) புத்தர்

D) A மற்றும் B

விளக்கம்: சாக்கிய வம்சத்தைச் சார்ந்தவர் என்பதால் “சாக்கியமுனி” என்றும், மெய்ஞானம் பெற்றதால் ஆன்மீகத் துறையில் “புத்தர்” எனறும் அழைக்கப்படுகிறார்.

217) புத்தர் ஒருநாள் நகர்வலத்தின்போது கண்ட எத்தனை காட்சிகள் அவரது வாழ்வை மாற்றின?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: புத்தர் கண்ட 4 காட்சிகள்:

1. வயது முதிர்ந்த மனிதன் 2. நோயாளி 3. பிணம்; 4. துறவி

போன்றவர்கள் படும் துன்பத்தைக்கண்டு அதனைப் போக்க வழிகாண முயன்றார். இதனால் அனைத்தையும் துறந்து துறவியானார்.

218) ‘அகூரமஸ்தா’ என்பது யார் வலியுறுத்திய தெய்வம்?

A) ரிஷபதேவர்

B) ஆதிசங்கரர்

C) ஜொராஸ்டிரர்

D) முஸ்லீம்

விளக்கம்: ‘அகூரமஸ்தா – உயிரும் உள்ளமும்’ எனப் பொருள். ஜொராஸ்டிரர் வலியுறுத்திய தெய்வமே ‘அகூரமஸ்தா’ சூரியன் – நெருப்பு – ஒளி ஆகியவற்றின் உருவமாக மஸ்தா தெய்வம் உள்ளது.

219) புத்தர் தமது முதல் உரையை எங்கு நிகழ்த்தினார்?

A) லும்பினி வனம்

B) புத்தகயா

C) சாரநாத்

D) பூரி

விளக்கம்: புத்தர் தனது முதல் உரையை சாரநாத்திலுள்ள மான் பூங்காவில் நிகழ்த்தினார். அது தர்மசக்கர பரிவத்தனா அல்லது சட்டச்சக்கரம் எனப்படுகிறது.

220) புத்த மதக் கொள்கைகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: ஆரிய சத்தியங்கள் – நான்கு பேருண்மைகள்:

1. இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது. நோய், பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய துன்பங்கள் நம்மைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. தான் இன்பமாக வாழவேண்டும் என்ற தன்னல ஆசையே துன்பத்திற்குக் காரணம்

3. தன்னல ஆசைகளை ஒழித்தால் துன்பங்கள் அறவே நீங்கும்.

4. எண்வகை நல் வழிகளை மேற்கொண்டால், ஆசைகளை ஒழித்து, துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாணம் (மெய்யறிவு) என்னும் உயரிய நிலையை அடையலாம்.

221) துன்பத்தைப் போக்குவதற்குப் புத்தர் காட்டிய நல்வழிகள் எத்தனை?

A) 4

B) 6

C) 7

D) 8

விளக்கம்: பௌத்த சமயத்தில் உலகத்தின் அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக, மனிதனின் ஒழுக்க நடைமுறைகளே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று கூறினால் மட்டும் போதாது. அதை அகற்ற வேண்டிய வழியையும் காட்ட வேண்டும். எனவே துன்பத்தைப் போக்க புத்தர் காட்டிய எண்வகை நல்வழிகள்:

1. நன்னம்பிக்கை

2. நல்லெண்ணம்

3. நல்வாக்கு

4. நற்செயல்

5. நல்வாழ்க்கை

6. நன்முயற்சி

7. நற்சிந்தனை

8. நல்தியானம்

222) ‘பார்சி சமயம்’ என அழைக்கப்படும் மதம் எது?

A) புத்தம்

B) சமணம்

C) ஜெராஸ்டிரியம்

D) சீக்கியம்

விளக்கம்: மஸ்தாநெறி, பார்சி சமயம் போன்ற பெயர்களிலும் ஜொரஸ்டிரிய சமயம் அழைக்கப்படுகிறது.

223) பௌத்தத்தின் கோட்பாடுகளில் சரியானதைத் தேர்வு செய்க.

A) பௌத்தம் மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அறநெறிப்படுத்துவதிலேயே பெரிதும் முனைந்துள்ளது.

B) புத்தர் கடவுள் இருப்பதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மேலும் கடவுள், உயிர், சடங்கு பற்றி வரையறுத்துக் கூறவில்லை.

C) தம்மை வழிபடும்படியும் கூறவில்லை. தமது கருத்துக்களை நல்வாழ்க்கைக்கான பாதையாக மட்டும் வழங்கினார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பௌத்தம் மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அறநெறிப்படுத்துவதிலேயே பெரிதும் முனைந்துள்ளது.

புத்தர் கடவுள் இருப்பதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மேலும் கடவுள், உயிர், சடங்கு பற்றி வரையறுத்துக் கூறவில்லை.

தம்மை வழிபடும்படியும் கூறவில்லை. தமது கருத்துக்களை நல்வாழ்க்கைக்கான பாதையாக மட்டும் வழங்கினார்.

224) “நல்லவை-தீயவை என்பவற்றிற்கு இடையேயான தொடர் போராட்டம்” என்பது எந்த சமயத்தின் மையக்கருத்தாகும்?

A) புத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) ஜொராஸ்டிரியம்

விளக்கம்: “நல்லவை-தீயவை என்பவற்றிற்கு இடையேயான தொடர் போராட்டமே” ஜெராஸ்டிரிய சமயத்தின் மையமான கருத்தாகும்.

225) கூற்றுகளை ஆராய்க.

1. கர்மவினை கோட்பாட்டிலும், மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். வினைப்பயனிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றார்.

2. இல்லறத்தாரும், துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய 10 ஒழுக்கங்கள் பற்றியும் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கர்மவினை கோட்பாட்டிலும், மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். வினைப்பயனிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றார்.

2. இல்லறத்தாரும், துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய 10 ஒழுக்கங்கள் பற்றியும் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

226) இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய புத்தர் கூறிய ஒழுக்கங்களில் பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) பிறர் பொருள் விரும்பாமை

B) பொய்யாமை

C) செல்வத்தை வைத்துக் கொள்ளாமை

D) கொல்லாமை

விளக்கம்: இல்லறத்தார் பினபற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:

1. பிறர் பொருள் விரும்பாமை.

2. பொய்யாமை

3. கொல்லாமை

4. பிறர் மனை விழையாமை

5. கள்ளுண்ணாமை.

227) பௌத்தப் பிக்குணிகளால் எழுதப்பட்டது எது?

A) தேரி கதைகள்

B) தீபவம்சம்

C) ஜாதகக் கதைகள்

D) தேராகதைகள்

விளக்கம்: தேரி கதைகள் பௌத்தப் பிக்குணிகளால் எழுதப்பட்டது.

228) பௌத்த சமய மாநாடுகள் மொத்தம் எத்தனை நடைபெற்றன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: புத்தர் காலத்தில் மொத்தம் 4 பௌத்த சமய மாநாடுகள் நடைபெற்றன.

229) முதல் புத்த சமய மாநாடு பற்றிய தகவல்களில் தவறானதைத் தேர்வு செய்க.

A) முதல் பௌத்த சமய மாநாடு இராஜகிருதத்தில் நடைபெற்றது

B) தலைமை – மகாகசபர்

C) இம்மாநாட்டில் புத்தரின் போதனைகளுக்கு வடிவம் தரப்பட்டது.

D) காலசோகன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.

விளக்கம்: முதல் பௌத்த சமய மாநாடு அஜாதசத்ருவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.

230) தவறானதைத் தேர்வு செய்க (இஸ்லாம்).

A) முதல் கடமை – கலிமா

B) இரண்டாம் கடமை – நமாஸ்

C) மூன்றாம் கடமை – நோன்பு

D) நான்காம் கடமை – ஹஜ்

விளக்கம்: 4-ம் கடமை – ஸக்காத் (பொருள் தானம்)

ஐந்தாம் கடமை – ஹஜ் (புனிதப் பயணம்).

231) 3-வது புத்த சமய மாநாடு பற்றிய தகவல்களில் சரியானதைத் தேர்வு செய்க.

A) நடைபெற்ற இடம் – பாடலிபுத்திரம்

B) தலைமை – மெக்காலி புத்ததிசா

C) அசோகர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது

D) அனைத்தும் சரி

விளக்கம்: நடைபெற்ற இடம் – பாடலிபுத்திரம்

தலைமை – மெக்காலி புத்ததிசா

அசோகர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது

232) “அபிதம்மபீடகம்” என்ற நூல் எந்த புத்த மாநாட்டில் தொகுக்கப்பட்டது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: 3-வது புத்த சமய மாநாட்டில் பௌத்த தத்துவ விளக்ககங்களைக் கூறும் அபிதம்ம பீடகம் என்ற நூல் தொகுக்கப்பட்டது.

233) 4-ஆம் பௌத்த மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?

A) வைசாலி

B) இராஜகிருகம்

C) பாடலிபுத்திரம்

D) குந்தல்வனம்

விளக்கம்: 4-ம் பௌத்த மாநாடு காஷ்மீரில் குந்தல்வனம் என்ற இடத்தில் நடைபெற்றது

234) 4-ம் பௌத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?

A) மகாகசபர்

B) சபாசமிகா

C) புத்ததிசா

D) வசுமித்திரர்

விளக்கம்: 1-வது மாநாடு – மகாகசபர்

2-வது மாநாடு – சபாசமிகா

3-வது மாநாடு – புத்ததிசா

4-வது மாநாடு – வசுமித்திரர்

235) கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில் எத்தனையாவது புத்த சமய மாநாடு நடைபெற்றது?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: 1-வது மாநாடு – அஜாதசத்ரு

2-வது மாநாடு – காலசோகன்

3-வது மாநாடு – அசோகர்

4-வது மாநாடு – கனிஷ்கர்

236) ஜென்ட் அவஸ்தா என்பது எந்த மதப் புனித நூல்?;

A) பௌத்தம்

B) ஜெராஸ்டிரியம்

C) சமணம்

D) சீக்கியம்

விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருள்பட்டதாக நம்பப்படுகிறது. அகூரமஸ்தா – புத்தம்,

ஜென்ட் – கட்டளை.

‘ஜென்ட் அவஸ்தா’ – ‘கட்டளைகள் அடங்கிய புத்தகம்’

237) ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்கா நகரிலுள்ள காபாவைத் தரிசிப்பது இஸ்லாமின் எத்தனையாவது கடமை?

A) முதல் கடமை

B) மூன்றாம் கடமை

C) ஐந்தாம் கடமை

D) ஏழாம் கடமை

விளக்கம்: ஹஜ் (புனிதப் பயணம்)-ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்கா நகரிலுள்ள காபாவைத் தரிசிப்பது இஸ்லாமின் ஐந்தாவது கடமையாகும்.

238) பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் எந்த மொழியில் எழுதப்பட்டன?

A) சமஸ்கிருதம்

B) பாலி

C) பிராகிருதம்

D) இந்தி

விளக்கம்: பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன.

239) எந்த சமயத்தின் புனித நூல் “திரிபீடகம்” என அழைக்கப்படுகிறது?

A) புத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) கிறிஸ்துவம்

விளக்கம்: பௌத்த சமயத்தின் புனித நூல் “திரிபீடகம்” என்று அழைக்கப்படுகிறது.

240) “திரிபீடகம்” என்பதன் பொருள் என்ன?

A) மூன்று குன்றுகள்

B) மூன்று நீரோடைகள்

C) மூன்று கொடைகள்

D) மூன்று கூடைகள்

விளக்கம்: “திரிபீடகம்” என்றால் “மூன்று கூடைகள்” என்று பொருள்படும்.

241) புத்தரின் சிற்றன்னை பெயர் என்ன?

A) மாயாதேவி

B) யசோதா

C) கௌதமி பிராஜாபதி

D) சிற்றன்னை இல்லை

விளக்கம்: புத்தரின் தாய் மாயாதேவி. இவர் இறந்த பின் கௌதமி பிராஜாபதி என்ற சிற்றன்னை மூலம் புத்தர் வளர்க்கப்பட்டடார். எனவேதான் கௌதமர் என அழைக்கப்பட்டார்.

242) புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு எது?

A) சுத்த பீடகம்

B) வினைய பீடகம்

C) அபிதம்ம பீடகம்

D) A மற்றும் B

விளக்கம்: புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பு சுத்த பீடகமாகும்.

243) ஆண், பெண் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கூறுவது எது?

A) சுத்த பீடகம்

B) வினைய பீடகம்

C) அபிதம்ம பீடகம்

D) A மற்றும் B

விளக்கம்: ஆண், பெண் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வினய பீடகம் எனப்படும்.

244) பௌத்த தத்துவ விளக்கங்களைகக் கூறுவது எது?

A) சுத்த பீடகம்

B) வினைய பீடகம்

C) அபிதம்ம பீடகம்

D) A மற்றும் B

விளக்கம்: “அபிதம்ம பீடகம்” பௌத்த தத்துவ விளக்கங்கள் பற்றிக் கூறுகிறது.

245) திரிபீடகங்கள் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பெற்றிருந்தாலும் “வட்டக் காமினி அபயன்” என்ற இலங்கை மன்னர் காலத்தில் தான் நூல் வடிவம் பெற்றன எனக் கூறும் நூல் எது?

A) அர்த்த சாஸ்திரம்

B) இண்டிகோ

C) மகாவம்சம்

D) தீபவம்சம்

விளக்கம்: திரிபீடகங்கள் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டது. “வட்டக் காமினி அபயன்” என்ற இலங்கை மன்னர் காலத்தில்தான் நூல் வடியம் பெற்றன என ‘மகாவம்சம்’ என்னும் பௌத்த நூல், பீடகங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.

246) யுனானி மருத்துவ முறையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் யார்?

A) ஜொராஸ்டிரியர்

B) இஸ்லாமியர்

C) கிறித்துவர்

D) இந்து

விளக்கம்: யுனானி என்ற மருத்துவ முறையை இந்தியாவிற்கு இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தினர். இது இந்தியாவிற்கு இஸ்லாமியர் அளித்த கொடையாகும்.

247) பௌத்த சமய பெண்துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) பிக்குகள்

B) பிக்குனிகள்

C) உபாசகர்கள்

D) துறவி

விளக்கம்: பௌத்த சமய பெண்துறவிகள் “பிக்குனிகள்” என அழைக்கப்பட்டனர்.

248) பௌத்த பிக்குகள் மூலம் எழுதப்பட்டது எது?

A) மகாவம்சம்

B) தீபவம்சம்

C) ஜாதகக் கதைகள்

D) தேராகதைகள்

விளக்கம்: ‘தேராக்கதைகள்’ பௌத்தபிக்குகள் மூலம் எழுதப்பட்டது.

249) புத்தர் கூறும் துறவறத்தார் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) ஆடல்பாடல்களில் பங்குகொள்ளாமை

B) அகாலத்தில் உண்ணுதல்

C) ஆடம்பரப் படுக்கைகளில் உறங்காமை

D) செல்வத்தை வைத்துக் கொள்ளாமை

விளக்கம்:துறவறத்தார் பின்பற்ற வேண்டிய 5 ஒழுக்கங்கள்:

1. ஆடல்பாடல்களில் பங்குகொள்ளாமை

2. நறுமணப் பொருள்கள் போன்ற ஆடம்பரப்பொருட்களைப் பயன்படுத்தாமை 3. அகாலத்தில் உண்ணாமை

4. ஆடம்பரப் படுக்கைகளில் உறங்காமை

5. செல்வத்தை வைத்துக்கொள்ளாமை.

250) பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) மணிமேகலை

B) வீரசோழியம்

C) யசோதரக் காவியம்

D) குண்டலகேசி

விளக்கம்: தமிழ்மொழியில் மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி போன்றவை பௌத்த சமய படைப்புகள். யசோதரக்காப்பியம் என்பது சமணக்காப்பியம் ஆகும்.

251) ‘ஹீனயானம்’ என்பதன் பொருள் என்ன?

A) பெரிய வாகனம்

B) சிறிய வாகனம்

C) பெரிய திருவடி

D) சிறிய திருவடி

விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்

மஹாயானம் – பெரிய திருவடி

கருடன் – பெரிய திருவடி

அனுமன் – சிறிய திருவடி

252) ஹீனயானம் பற்றிய கருத்துக்களில் சரியானதைத் தேர்வு செய்க.

A) புத்தருக்கு உருவ வழிபாடு இல்லை

B) வீடுபேறு அடைவதற்காகத் துறவறம் சிறந்தது என்கிறது.

C) தன் முயற்சியிலேயே ஒருவன் மெய்யறிவு பெற வேண்டும் என்கிறது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு இல்லை

வீடுபேறு அடைவதற்காகத் துறவறம் சிறந்தது என்கிறது.

தன் முயற்சியிலேயே ஒருவன் மெய்யறிவு பெற வேண்டும் என்கிறது.

253) கூற்றுகளை ஆராய்க.

1. சமயங்களே மனிதவாழ்வின் அடித்தளமாக அமைகின்றன.

2. சமயங்களே மக்களின் தனிமனிதக் கடமை, சமூகக் கடமை போன்றவற்றைக் கற்பித்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சமயங்களே மனிதவாழ்வின் அடித்தளமாக அமைகின்றன.

2. சமயங்களே மக்களின் தனிமனிதக் கடமை, சமூகக் கடமை போன்றவற்றைக் கற்பித்து அவர்களை நல்வழிப்படுத்துகின்றன

254) மகாயானம் கொள்கைகளில் பொருந்தாததைத் தேர்வு செய்க.

A) புத்தருக்கு உருவ வழிபாடு இல்லை

B) துறவறத்தை வலியுறுத்தவில்லை

C) போதிசத்துவர்களின் துணையோடுதான் மெய்யறிவை அடைய முடியும் என்கிறது.

D) ஆன்மாவை நம்புகிறது.

விளக்கம்: புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு.

255) கூற்றுகளை ஆராய்க.

1. மகாயானம் – சமஸ்கிருதமொழிக்கும், ஹீனயானம் – பாலி மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தன.

2. இந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது – மகாயானம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மகாயானம் – சமஸ்கிருதமொழிக்கும், ஹீனயானம் – பாலி மொழிக்கும் முக்கியத்துவம் அளித்தன.

2. இந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது – மகாயானம்

256) “வஜ்ராயனம்” என்பது எந்த சமயப் பிரிவு?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) இந்து

விளக்கம்: பௌத்த சமயத்தில் ஹீனயானம், மகாயானத்தை அடுத்து ‘வஜ்ராயனம்’ என்ற பிரிவும் தோன்றுகிறது.

257) ‘வஜ்ராயனம்’ என்பதன் பொருள் என்ன?

A) சிறிய வாகனம்

B) பெரிய வாகனம்

C) வைர வாகனம்

D) எதுவுமில்லை

விளக்கம்: ஹீனயானம் – சிறிய வாகனம்

மகாயானம் – பெரிய வாகனம்

வஜ்ராயனம் – வைர வாகனம்

258) பௌத்தத்தில் மாந்திரீக யோகத்தை பரிந்துரைத்த பிரிவு எது?

A) ஹீனயானம்

B) மகாயானம்

C) வஜ்ராயனம்

D) A மற்றும் B

விளக்கம்: பௌத்தத்தில் வஜ்ராயனப் பிரிவு மாந்தீரிக யோகத்தைப் பரிந்துரைத்தது.

259) திபெத், பூடான் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படும் பௌத்த சமயப் பிரிவு எது?

A) ஹீனயானம்

B) மகாயானம்

C) வஜ்ராயனம்

D) A மற்றும் B

விளக்கம்: திபெத், பூடான் போன்ற நாடுகளில் வஜ்ராயனக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

260) ‘ஜென் பௌத்தம்’ பற்றிய சரியானக் கூற்றை தேர்வு செய்க.

A) பௌத்தத்தின் ஒரு வழிமுறையே ஜென் பௌத்தமாகும். இது தனி சமயமல்ல.

B) ஜென் என்ற சீனமொழிச் சொல்லின் பொருள் ‘தியானம்’.

C) ஜென் எதை போதிக்கிறது என்றால் ஏதுமில்லை என்பதே பதில், இதன் பொருள் “நீ நீயாக இரு” என்பதாகும்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பௌத்தத்தின் ஒரு வழிமுறையே ஜென் பௌத்தமாகும். இது தனி சமயமல்ல.

ஜென் என்ற சீனமொழிச் சொல்லின் பொருள் ‘தியானம்’.

ஜென் எதை போதிக்கிறது என்றால் ஏதுமில்லை என்பதே பதில், இதன் பொருள் “நீ நீயாக இரு” என்பதாகும்.

261) பௌத்த சமய ஆண்துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) பிக்குகள்

B) பிக்குனிகள்

C) உபாசகர்கள்

D) துறவி

விளக்கம்: புத்தரின் கொள்கைகளை பரப்பிய சமய நிறுவனங்களே “சங்கம்” எனப்பட்டது. பௌத்த சங்கத்தில் புத்தரது தர்மம் போதிக்கப்பட்டது. ஆண்துறவிகள் ‘பிக்குகள்’ எனப்பட்டனர்.

262) புத்தரின் முற்பிறப்பு அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் எது?

A) மகாவம்சம்

B) தீபவம்சம்

C) ஜாதகக் கதைகள்

D) தேராகதைகள்

விளக்கம்: ஜாதகக் கதைகள் – புத்தரின் முற்பிறப்பு அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன.

263) பௌத்த சங்கங்களில் இடம் பெற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) பிக்குகள்

B) பிக்குனிகள்

C) உபாசகர்கள்

D) துறவி

விளக்கம்: பௌத்த சங்கங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடம் அளிக்கப்ட்டது. அவர்கள் ‘உபாசகர்கள்’ எனப்பட்டனர்.

264) ஸ்தூபிகள் காணப்படும் இடம் எது?

A) பர்கூத்

B) சாஞ்சி

C) அமராவதி

D) அனைத்தும்

விளக்கம்: புத்தர், போதிசத்துவர் இவர்களின், நினைவுச் சின்னங்களில் மீது கல்லால் கட்;டப்பட்ட ஸ்தூபிகள் போன்ற கட்டடக் கலைகள், விஹாரங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் அழகிய வேலைப்பாடுகளோடு புத்தரின் வாழ்க்கை வரலாறுகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கோயிலை உருவாக்கியவர்களும் இவர்களே. பர்கூத், சாஞ்சி, அமராவதி போன்ற இடங்களில் ஸ்தூபிகளும், கன்ஹேரி, கார்லே போன்ற இடங்களிலுள்ள குகைக்கோயில்களும் பௌத்த சமயச் சிற்பக் கலையினை பறைசாற்றும் மிகச் சிறந்த கலைச் சின்னங்களாக விளங்குகின்றன.

265) யாருடைய காலத்தில் “காந்தாரக் கலை” தோன்றியது?

A) அசோகர்

B) காலசோகர்

C) கனிஷ்கர்

D) சமுத்திர குப்தர்

விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் தான் “காந்தாரக் கலை” தோன்றியது.

266) இந்தியப் பண்பாடு வெளிநாடுகளில் பரவ சரியானக் காரணத்தைத் தேர்வு செய்க.

1. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால், இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை வெளிநாடுகளிலும் பரவியது. பௌத்தபிக்குகளும், அறிஞர்களும், பௌத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடு சென்றபோது, இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்து சென்றதால் சீனா, மங்கோலியா, மஞ்சூரியா, கொரியா, ஜப்பான், பர்மா, சாவகம், சுமத்திரா, இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது.

2. பௌத்த சமயத்தைத் தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவியது.

A) 1 சரி

B) 2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால், இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை வெளிநாடுகளிலும் பரவியது. பௌத்தபிக்குகளும், அறிஞர்களும், பௌத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடு சென்றபோது, இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்து சென்றதால் சீனா, மங்கோலியா, மஞ்சூரியா, கொரியா, ஜப்பான், பர்மா, சாவகம், சுமத்திரா, இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது.

2. பௌத்த சமயத்தைத் தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்தியப் பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவியது.

267) ஆசியாவிலேயே சிறந்த பௌத்த சமய கலைச்சின்னமாக விளங்கும் ஸ்தூபி எது?

A) பர்கூத் ஸ்தூபி

B) சாஞ்சி ஸ்தூபி

C) அமராவதி ஸ்தூபி

D) போராபுதூர் ஸ்தூபி

விளக்கம்: ஜாவாவிலுள்ள போராபுதூர் ஸ்தூபி ஆசியாவிலேயே சிறந்த பௌத்த சமய கலைச்சின்னமாகும். பௌத்த கட்டக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் உன்னதமாக இது திகழ்கிறது. இங்குத் தங்கம், வெள்ளி, தந்தம், மரம் போன்றவற்றாலான பௌத்தச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

268) பௌத்தச் சின்னங்களின் உறைவிடமாகவும் பௌத்த பூமியாகவும் கருதப்படுவது எது?

A) இலங்கை

B) தாய்லாந்து

C) ஜாவா

D) அமராவதி

விளக்கம்: பௌத்தச் சிற்பங்களின் உறைவிடமாகவும் பௌத்த பூமியாகவும் கருதப்படுவது தாய்லாந்து. இங்கு பௌத்தச் சிற்பக் கலை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

269) சுண்ணாம்புக் கல்லால் ஆன புத்தரின் நின்றகோல சிற்பம் எங்கு வைக்கப்பட்டுள்ளது?

A) இலங்கை

B) தாய்லாந்து

C) ஜாவா

D) அமராவதி

விளக்கம்: கி.பி (பொ.ஆ) 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுண்ணாம்புக் கல்லால் ஆன புத்தரின் நின்றகோல சிற்பம் இலங்கை அனுராதபுரம் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

270) இந்தியாவிலிருந்த அக்கால பௌத்த சமய பல்கலைக்கழகங்கள் எத்தனை?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: பௌத்த பல்கலைக்கழகங்கள் (இந்தியா):

1. நாளந்தா

2. விக்ரமசீலா

3. ஓதாந்தபுரி

4. கோமபுரா

5. ஆகத்தாலா

6. வல்லபி ஆகியவை இந்தியாவிலிருந்த பௌத்த சமய பல்கலைக்கழகங்களாகும்.

271) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.

A) இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக பௌத்த சமயம் திகழ்கிறது.

B) விலங்குகளை பலியிடும் கொடியப்பழக்கத்தை பௌத்தர்கள் வெறுத்தனர். கடவுளை மனிதவடிவில் வணங்கினர்.

C) பௌத்த விகாரங்களின் பிரதிபலிப்பே சைவ, வைணவ சமயங்களின் மடாலயப் பணிகளில் எதிரொலிக்கிறது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக பௌத்த சமயம் திகழ்கிறது.

விலங்குகளை பலியிடும் கொடியப்பழக்கத்தை பௌத்தர்கள் வெறுத்தனர். கடவுளை மனிதவடிவில் வணங்கினர்.

பௌத்த விகாரங்களின் பிரதிபலிப்பே சைவ, வைணவ சமயங்களின் மடாலயப் பணிகளில் எதிரொலிக்கிறது.

272) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.

A) பாலி, தமிழ் போன்ற மொழிகளில் பௌத்த இலக்கியங்கள் அதிகமாக எழுதப்பட்டன.

B) குண்டலகேசி, மணிமேகலை, வீரசோழியம் உட்பட பல இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டு பௌத்தத்தின் கொடைகளாக திகழ்ந்தன.

C) மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை பௌத்த நூல்கள் பழங்கால இந்தியா, இலங்கை வரலாற்றை அறிய உதவுகின்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பாலி, தமிழ் போன்ற மொழிகளில் பௌத்த இலக்கியங்கள் அதிகமாக எழுதப்பட்டன.

குண்டலகேசி, மணிமேகலை, வீரசோழியம் உட்பட பல இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டு பௌத்தத்தின் கொடைகளாக திகழ்ந்தன.

மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை பௌத்த நூல்கள் பழங்கால இந்தியா, இலங்கை வரலாற்றை அறிய உதவுகின்றன.

273) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.

A) காந்தாரக்கலை, மதுராக்கலை பாணிகள் பௌத்தம் இந்தியாவிற்கு அளித்த கொடைகளாகும்.

B) புத்தரின் உயர்ந்த அறக்கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாகத் திகழ்கின்றன.

C) வைதீக சமயத்திற்கெதிரான மறுப்பியக்கமாக மட்டுமல்லாமல் இது சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. புத்தர் சாதி வேறுபாட்டை கண்டித்தார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: காந்தாரக்கலை, மதுராக்கலை பாணிகள் பௌத்தம் இந்தியாவிற்களித்த கொடைகளாகும்.

புத்தரின் உயர்ந்த அறக்கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாகத் திகழ்கின்றன.

வைதீக சமயத்திற்கெதிரான மறுப்பியக்கமாக மட்டுமல்லாமல் இது சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. புத்தர் சாதி வேறுபாட்டை கண்டித்தார்.

274) பௌத்தம் வழங்கிய கொடைகளுள் சரியானதைத் தேர்வு செய்க.

A) அடித்தட்டு மக்களுக்கு புரியாத சாத்திரங்களுக்கு எதிராக மக்களுக்குப் புரியக்கூடிய வாழ்வியல் வழிகாட்டியாகப் பௌத்த சமயம் திகழ்கிறது.

B) பௌத்தமே முதன்முதலில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு முறையை உருவாக்கியது. அதன் விளைவே சங்கம்

C) பௌத்த சங்கங்கள் கல்வியை அனைத்து பிரிவுக்கும் கொண்டு சேர்த்தது. நாளந்தா, தட்சசீலா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்;கழகங்கள் உலப் புகழ்பெற்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: அடித்தட்டு மக்களுக்கு புரியாத சாத்திரங்களுக்கு எதிராக மக்களுக்குப் புரியக்கூடிய வாழ்வியல் வழிகாட்டியாகப் பௌத்த சமயம் திகழ்கிறது.

பௌத்தமே முதன்முதலில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு முறையை உருவாக்கியது. அதன் விளைவே சங்கம்

பௌத்த சங்கங்கள் கல்வியை அனைத்து பிரிவுக்கும் கொண்டு சேர்த்தது. நாளந்தா, தட்சசீலா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்;கழகங்கள் உலப் புகழ்பெற்றன.

275) பௌத்தம் வழங்கிய கொடைகளை ஆராய்க.

1. பௌத்தம், வெளிநாடுகளுக்குப் பரவியதால் சீனா, இலங்கை போன்ற நாடுகளுடன் உறவு ஏற்பட்டது.

2. இது மிகப்பெரிய பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பௌத்தம், வெளிநாடுகளுக்குப் பரவியதால் சீனா, இலங்கை போன்ற நாடுகளுடன் உறவு ஏற்பட்டது.

2. இது மிகப்பெரிய பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கிறது.

276) அல்லாஹ் ஒருவரே, முகமது நபி அவரது இறைத்தூதர் என முழு நம்பிக்கைக் கொண்டு உறுதிமொழி கொடுப்பது எது?

A) கலிமா

B) நமாஸ்

C) ஸக்காத்

D) ஹஜ்

விளக்கம்: அல்லாஹ் ஒருவரே, முகமது நபி அவரது இறைத்தூதர் என முழு நம்பிக்கை கொண்டு உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமையாகும். இதுவே கலிமா.

277) ‘மஸ்தாநெறி’ என அழைக்கப்படும் மதம் எது?

A) புத்தம்

B) சமணம்

C) ஜெராஸ்டிரியம்

D) சீக்கியம்

விளக்கம்: ஜெராஸ்ரியம் ‘மஸ்தாநெறி’ எனவும் அழைக்கப்படும்

278) வாழ்வியல் இடைவழி அல்லது மத்திய மார்க்கம் என்பது எந்த மதத்தோடு தொடர்புடையது?

A) சமணம்

B) சீக்கியம்

C) இந்து

D) பௌத்தம்

விளக்கம்: பௌத்த சமயத்தில் அதிகம் உண்டு உறங்கவாழும் இன்பவாழ்க்கைக்கு இடமில்லை. உண்ணாமல் உறங்காமல் தன்னைத் தானே வருத்தி வாடுதலும் கூடாது என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. கடுமையான நிலைப்பாட்டைத் தவிர்ந்து எளிய வழியில் நற்கதி அடைய வேண்டும் என்கிறது. இதுவே இடைவழி (மத்திய மார்க்கம்) என வழங்கப்படுகிறது.

279) ஜொராஸ்டிரர், எந்த மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூர் ஆவார்?

A) ஈரானிய மக்கள்

B) இஸ்ரேல் மக்கள்

C) பாபிலோனிய மக்கள்

D) ஆஸ்திரிய மக்கள்

விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார்.

280) எந்த சமணத் துறவியின் புகழை உலகறியச் செய்ய கோமதீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது?

A) மகாவீரர்

B) நேமிநாதர்

C) பார்சவநாதர்

D) கோமேதகா

விளக்கம்: “கோமேதகா” என்ற திகம்பர சமணத் துறவியின் புகழை உலகறியச் செய்யவே கோமதீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டது.

281) ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது எத்தனையாவது கடமையாகும்?

A) முதல் கடமை

B) இரண்டாம் கடமை

C) மூன்றாம் கடமை

D) நான்காம் கடமை

விளக்கம்: ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது 3-வது கடமையாகும். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்நோன்பு ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

282) “போதிமரம்” என்பது என்ன?

A) அரசமரம்

B) ஆலமரம்

C) சால்மரம்

D) வேம்பு

விளக்கம்: மெய்யறிவைத் தேடிப் பயணம் செய்த புத்தர் போதி மரத்தடியில்(அரசமரம்) அறிவொளி(ஞானம்) பெற்றார். இவர் “கயா” என்னும் இடத்தில் ஞானம் பெற்றார். நீண்ட தியானத்தின் விளைவாக ஞானம் பெற்றதால் புத்தர் என அறியப்பட்டார்.

283) ஆசையை அகற்றுவதே மகாநிர்வாணம் என கூறும் பீடகம் எது?

A) சுத்த பீடகம்

B) வினய பீடகம்

C) அபிதம்ம பீடகம்

D) எதுவுமில்லை

விளக்கம்: புத்தர் கூறும் நிர்வாணம் (மெய்யறிவு): ஆசையை அகற்றுவதே மகாநிர்வாணம் என சுத்தபீடகம் கூறுகிறது. பிறப்பு, இறப்பு போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிர்வாண நிலையை அடைய எண்வழி மார்க்கங்களைப் பின்பற்ற வேண்டும் என பீடகங்கள் குறிப்பிடுகின்றன

284) ஜொராஸ்டிரிய சமயம் பற்றிய சரியான கூற்றைத் தேர்க

A) பழைமையான மத நம்பிக்கையின்படி, பார்சிகள் முதலில் பல தெய்வங்களை வழிபட்டனர்.

B) ஜொராஸ்டிரர் இதைக் கண்டித்து ‘அகூரமஸ்தா’ என்னும் ஒரு கடவுள் வழிபாட்டை நிலை நிறுத்தினார்.

C) இறைவன் நிகரற்றவர், சொர்க்கம், பூமி அனைத்தையும் படைத்து இயற்கை முழுமைக்கும் மையமாக விளங்குகின்றார்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பழைமையான மத நம்பிக்கையின்படி, பார்சிகள் முதலில் பல தெய்வங்களை வழிபட்டனர்.

ஜொராஸ்டிரர் இதைக் கண்டித்து ‘அகூரமஸ்தா’ என்னும் ஒரு கடவுள் வழிபாட்டை நிலை நிறுத்தினார்.

இறைவன் நிகரற்றவர், சொர்க்கம், பூமி அனைத்தையும் படைத்து இயற்கை முழுமைக்கும் மையமாக விளங்குகின்றார்.

285) ஜொராஸ்டிரரின் சமயக்கொள்கையை ஆராய்க.

1. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உயிரே காரணம்

2. நல்லுயிர் வீடுபேற்றை அடையும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உயிரே காரணம்

2. நல்லுயிர் வீடுபேற்றை அடையும்.

286) உயிர்கள் வீடுபேறு அடைய எத்தனை கட்டளைகளை ஜொராஸ்டிரியம் குறிப்பிடுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: 3 கட்டளைகள்:

1. நற்சிந்தனை (ஹீமாதா)

2. நற்சொல் (ஹிக்தா)

3. நற்செயல் (ஹீவர்ஷ்தா)

இவை மூன்றும் இறைவனால் கண்காணிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். சிந்தனை, சொல், செயல் இம்மூன்றும் பெற்ற புனிதமான ஒருவனே வீடுபேறு அடைய முடியும் என்கிறது.

287) ஜெராஸ்டிரிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?

A) மகாவீரர்

B) புத்தர்

C) குருநானக்

D) ஜெராஸ்டர்

விளக்கம்: ஜொராஸ்டிரிய சமயத்தைத் தோற்றுவித்த ஜெராஸ்டர் பெயரிலேயே அம்மதம் அழைக்கப்படுகிறது.

288) பீடகங்களின் விளக்க உரையான விபாஷங்கள் எந்த பௌத்த மாநாட்டில் தொகுக்கப்பட்டன?

A) 1-வது மாநாடு

B) 2-வது மாநாடு

C) 3-வது மாநாடு

D) 4-வது மாநாடு

விளக்கம்: 4-வது பௌத்த மாநாட்டில், பௌத்த சமய நூல்களின் (பீடகங்கள்)விளக்க உரையான “விபாஷங்கள்” தொகுக்கப்பட்டன.

289) ‘ஜென்ட் அவஸ்தா’ என்ற புனித நூல் யார் மூலம் உலகத்திற்குக் கிடைத்தது?

A) ஜொராஸ்டிரர்

B) அகூரமஸ்தா

C) விஸ்தபா

D) பஹலவி

விளக்கம்: இந்நூல் அகூரமஸ்தாவால் அருளப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்புனித நூல் ஜொராஸ்டரின் சீடரான ‘விஸ்தபா’ மூலம் உலகத்திற்குக் கிடைத்தது.

290) ‘ஜென்ட் அவஸ்தா’ எந்த மொழியில் எழுதப்பட்டது?

A) தமிழ்

B) அவாஸ்தா

C) ஜென்ட்

D) பஹலவி

விளக்கம்: இப்புனித நூல், அவாஸ்தா மொழியில் பஹலவி எழுத்துகளில் எழுதப்பட்டது.

291) பார்சிகளின் தனித்த அடையாளங்களில், சரியானதைத் தேர்வு செய்க.

A) பார்சிக்கள் இந்தியாவின் ஏனைய மக்களோடு கலந்து வாழ்ந்த போதிலும் அவர்களின் பண்பாடும் சமய வழிபாட்டு முறையும் பெரிதும் பாதிப்பின்றித் தனித்தே காணப்படுகின்றது.

B) நெருப்புக் கோயில் வழிபாடு பின்பற்றப்படுகிறது. வீடுகளில் கூடத் தீயைமூட்டி, நெருப்பை உண்டாக்கித் தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.

C) பார்சிக்கள் இறந்துவிட்டால் அவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் விலங்குகள், பறவைகள் உண்ண செய்கின்றனர். ஆனால் தற்போது இதில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: பார்சிக்கள் இந்தியாவின் ஏனைய மக்களோடு கலந்து வாழந்த போதிலும் அவர்களின் பண்பாடும் சமய வழிபாட்டு முறையும் பெரிதும் பாதிப்பின்றித் தனித்தே காணப்படுகின்றது.

நெருப்புக் கோயில் வழிபாடு பின்பற்றப்படுகிறது. வீடுகளில் கூடத் தீயைமூட்டி, நெருப்பை உண்டாக்கித் தெய்வமாக வழிபாடு செய்கின்றனர்.

பார்சிக்கள் இறந்துவிட்டார் அவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல் விலங்குகள், பறவைகள் உண்ண செய்கின்றனர். ஆனால் தற்போது இதில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

292) இந்தியப் பண்பாட்டிற்குப் பார்சிகளின் கொடைகளில் சரியானதைத் தேர்வு செய்க.

A) வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியப் பண்பாட்டைச் சிதைக்காதவாறு நம் நாட்டு பண்பாட்டுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

B) இந்தியர்கள் என்ற உணர்வுடனே நாட்டுப்பற்றுடன் திகழ்கின்றனர்.

C) இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஓர் தொழில் சமூகமாக உருவெடுத்துத் தொழில் அறத்துடன் வாழ்கின்றனர்

D) அனைத்தும் சரி

விளக்கம்: வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியப் பண்பாட்டைச் சிதைக்காதவாறு நம் நாட்டு பண்பாட்டுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

இந்தியர்கள் என்ற உணர்வுடனே நாட்டுப்பற்றுடன் திகழ்கின்றனர்.

இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஓர் தொழில் சமூகமாக உருவெடுத்துத் தொழில் அறத்துடன் வாழ்கின்றனர்

293) இந்தியப் பண்பாட்டிற்குப் பார்சிகளின் கொடைகளில் சரியானதைத் தேர்வு செய்க.

1. பார்சி (ஜொராஸ்டிரிய சமய) இயக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்த்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றின.

2. தாதாபாய் நௌரோஜி, நௌரோஜி பர்டூன்ஜி ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. பார்சி (ஜொராஸ்டிரிய சமய) இயக்கங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்த்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றின.

2. தாதாபாய் நௌரோஜி, நௌரோஜி பர்டூன்ஜி ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.

294) ‘இஸ்லாம்’ – எம்மொழிச் சொல்?

A) அரபு

B) உருது

C) இலத்தீன்

D) கிரேக்கம்

விளக்கம்: இஸ்லாம் என்பது அரபுச் சொல், அதன் பொருள் பணிதல், சரணடைதல், கீழ்படிதல் என்ற மூலக்கூறுகள் உள்ளடக்கியது.

295) ஒவ்வொரு இஸ்லாமியரும் தமது செல்வத்தில் ஒரு பங்கினை ஆண்டுக்கு ஒருமுறை எளியோருக்கு தானம் வழங்க வேண்டும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கலிமா

B) நமாஸ்

C) ஹஜீ

D) ஸக்காத்

விளக்கம்: ஸ்க்காத் எனப்படுவது கட்டாயப் பொருள் தானம். இஃது இஸ்லாமின் 4-வது கடமையாகும்.

296) இஸ்லாம் எத்தனை அடிப்படை மூலாதாரங்களைக் கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இஸ்லாம் 2 அடிப்படை மூலாதாரங்களைக் கொண்டுள்ளது.

1. அல்லாவின் வேதம் (குர் ஆன்)

2. முகமது நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய மார்க்கம் (ஹதிஸ்)

297) இஸ்லாம் சமயத்தின் தீர்க்கதரிசி யார்?

A) ஹீரா

B) முகமது நபி

C) அபுல்-அலா-மௌருடி

D) அபுல்காசிம்

விளக்கம்: இஸ்லாம் சமயத்தின் தீர்க்கதரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் முகமது நபி ஆவார்.

298) முகமது நபி எங்கு பிறந்தார்?

A) ஹீரா

B) மெக்கா

C) காபிர்

D) ஆலந்தூர்

விளக்கம்: இவர் மெக்காவில் அப்துல்லா-அமீனா என்ற தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.

299) முகமது நபி யாரை மணந்துக்கொண்டார்?

A) ஹீரா

B) அமீனா

C) கதீஜா

D) மும்தாஜ்

விளக்கம்: கதீஜா என்ற செல்வ சீமாட்டியை மணந்த பிறகு, மெக்கா நகரத்திற்கு அப்பால் இருந்த ‘ஹீரா’ என்ற குகையில் தவம் செய்தார்.

300) இந்தியப் பண்பாட்டிற்கு சீக்கிய சமயத்தின் கொடை என்ன?

A) இந்தியப் பண்பாட்டு அடையாளங்களை அந்நியர்களிடமிருந்து பாதுகாத்து, இன்றும் அவற்றைப் போற்றுவது, சீக்கிய சமயம்.

B) இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் சீக்கியர்கள், இந்தியப்பண்பாட்டின் பெருமைகளைப் பறை சாற்றுகின்றனர்.

C) இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

D) அனைத்தும் சரி

விளக்கம்: இந்தியப் பண்பாட்டு அடையாளங்களை அந்நியர்களிடமிருந்து பாதுகாத்து, இன்றும் அவற்றைப் போற்றுவது, சீக்கிய சமயம்.

இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் சீக்கியர்கள், இந்தியப்பண்பாட்டின் பெருமைகளைப் பறை சாற்றுகின்றனர்.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

301) கூற்றுகளை ஆராய்க.

1. கடவுள் ஒருவரே, அவரே அல்லாஹ். அவரைத் தவிர, வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.

2. உலகின் முதல் இறைத்தூதர் முகமது நபி

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இறைத்துதர்கள் (நபிமார்கள்) உலகின் முதல் இறைத்தூதர் ‘ஆதாம்’. கடைசி இறைத்தூதர் முகமது நபி என இஸ்லாம் நம்புகிறது.

302) கூற்றுகளை ஆராய்க.

1. விதி என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பது இசுலாமின் ஆழ்ந்த நம்பிக்கைகளாகும்.

2. விதியைப் பற்றிச் சிந்திப்பதையோ அதைப்பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் மறுக்கிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விதி என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பது இசுலாமின் ஆழ்ந்த நம்பிக்கைகளாகும்.

2. விதியைப் பற்றிச் சிந்திப்பதையோ அதைப்பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் மறுக்கிறது

303) தன்சமயத்தவர் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என இஸ்லாம் குறிப்பிடும் கடமைகள் எத்தனை?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: தன் சமயத்தவர் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என ஐந்தைக் குறிப்பிடுகிறது. இவை “இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்” என அழைக்கப்படுகின்றன. அவை,

1. கலிமா

2. தொழுகை

3. நோன்பு

4. ஸக்காத்

5. ஹஜ்

304) பொருத்துக.

அ. நற்சிந்தனை – 1. ஹீமாதா

ஆ. நற்சொல் – 2. ஹிக்தா

இ. நற்செயல் – 3. ஹீவர்ஷ்தா

A) 1, 2, 3

B) 2, 3, 1

C) 3, 2, 1

D) 1, 3, 2

விளக்கம்: நற்சிந்தனை – ஹீமாதா

நற்சொல் – ஹிக்தா

நற்செயல் – ஹீவர்ஷ்தா

305) ஒவ்வொரு இஸ்லாமியரும் தினமும் எத்தனை முறை இறைவனைத் தொழுகை செய்ய வேண்டும்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: ஒவ்வொரு இஸ்லாமியரும் தினமும் 5 முறை இறைவனைத் தொழுகை செய்ய வேண்டியது. 2-வது கடமையாகும். மெக்காவிலுள்ள “புனித காபாவை” நோக்கி வணங்க வேண்டும். இதுவே நமாஸ்.

306) ‘ஜொராஸ்டிரர்’ என்பதன் பொருள் என்ன?

A) வெற்றி

B) தங்க நாண்

C) தங்க ஒளி

D) ஆன்மா

விளக்கம்: ஜொராஸ்டிரர், ஈரானிய மக்களின் நம்பிக்கைப்படி இறைத்தூதர் ஆவார். ‘ஸ்பிதமெ’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இறைவனைத் தரிசித்த பிறகு ‘தங்க ஒளி’ எனப் பொருள்படும் ‘ஜொராஸ்டிரர்’ என அழைக்கப்பட்டார்.

307) ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் நேர்ப்பொருள் என்ன?

A) பணிதல்

B) சரணடைதல்

C) கீழ்ப்படிதல்

D) அமைதி

விளக்கம்: ‘இஸ்லாம்’ என்பதன் நேர்ப்பொருள் ‘அமைதி’. ஒருவன் உடலையும், உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும்போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள்படும். அல்லாவின் விதிமுறைகளுக்கு ஏற்பப் பணிந்து செயல்படுபவர்கள் இஸ்லாமியர்கள் ஆவர். மேற்காணும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்த இனத்தையும், சமூகத்தையும், நாட்டையும், குலமரபையும் சேர்ந்தவனாக இருப்பினும் அவன் ஒரு முஸ்லீம் என அபுல்-அலா-மௌருடி கூறுகிறார்.

308) எந்த பௌத்த சமய மாநாட்டில், பௌத்த சமயம் 2-ஆகப் பிரிந்தது?

A) 1-வது மாநாடு

B) 2-வது மாநாடு

C) 3-வது மாநாடு

D) 4-வது மாநாடு

விளக்கம்: 4-வது பௌத்த சமய மாநாட்டில், பௌத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

309) ‘பெஸ்கி’ எனப்படுபவர் யார்?

A) கால்டுவெல்

B) ஜி.யூ.போப்

C) வீரமாமுனிவர்

D) அம்பேத்கர்

விளக்கம்: வீரமானமுனிவரின் வேறுபெயர் – பெஸ்கி, தைரியநாதன் ஆகும்.

310) பொருத்துக.

அ. கலிமா – 1. புனிதப் பயணம்

ஆ. நமாஸ் – 2. பொருள் தானம்

இ. நோன்பு – 3. ரமலான்

ஈ. ஸக்காத் – 4. இறைவணக்கம்

உ. ஹஜ் – 5. உறுதிமொழி

A) 5, 4, 3, 2, 1

B) 5, 4, 3, 1, 2

C) 5, 4, 1, 3, 2

D) 5, 4, 2, 3, 1

விளக்கம்: கலிமா – உறுதிமொழி

நமாஸ் – இறைவணக்கம் அல்லது தொழுகை

நோன்பு – ரமலான்

ஸக்காத் – பொருள் தானம்

ஹஜ் – புனிதப்பயணம்

311) இஸ்லாமிய மதப் பிரிவுகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இஸ்லாமியப் பிரிவுகள் – 2 இவை,

1. சன்னிப்பிரிவு

2. ஷியா பிரிவு

312) கூற்றுகளை ஆராய்க.

1. இறைத்தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்பது இஸ்லாமிய சன்னிப் பிரிவு.

2. அல்லாவின் புனிதவார்த்தைகளை ஏற்று, அதைப் பின்பற்றி, இறைத்தன்மையை அடைந்த தீர்க்கத்தரிசி எவரோ அவரை மதத்தலைவர், அதாவது, ‘இமாம்’ என ஏற்றுக்கொண்டு வழிநடத்துவது இஸ்லாமிய ஷியா பிரிவு.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இறைத்தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்பது இஸ்லாமிய சன்னிப் பிரிவு.

2. அல்லாவின் புனிதவார்த்தைகளை ஏற்று, அதைப் பின்பற்றி, இறைத்தன்மையை அடைந்த தீர்க்கத்தரிசி எவரோ அவரை மதத்தலைவர், அதாவது, ‘இமாம்’ என ஏற்றுக்கொண்டு வழிநடத்துவது இஸ்லாமிய ஷியா பிரிவு.

313) இரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி போன்ற பண்டிகைகள் எந்த மதத்தினரால் கொண்டாடப்படுகிறது?

A) இந்து

B) இஸ்லாம்

C) கிறிஸ்துவம்

D) சீக்கியம்

விளக்கம்: இரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி போன்ற பண்டிகைகள், இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

314) இந்தியப் பண்பாட்டிற்கு இஸ்லாம் சமயத்தின் கொடை என்ன?

A) இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்;பாடு இஸ்லாம் சமயத்தின் முக்கிய கொடையாகும்.

B) இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமைக்கு, முஸ்லீம் அறிஞர்கள் சூபி இயக்கத்தைக் கொடையாக வழங்கி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்டினர்.

C) சூபி இயக்கத்தின் மூலம் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு முடிவு கட்டுதல், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் நமது இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும்

D) அனைத்தும் சரி

விளக்கம்: இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்;பாடு இஸ்லாம் சமயத்தின் முக்கிய கொடையாகும்.

இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமைக்கு, முஸ்லீம் அறிஞர்கள் சூபி இயக்கத்தைக் கொடையாக வழங்கி, இந்து முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்டினர்.

சூபி இயக்கத்தின் மூலம் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு முடிவு கட்டுதல், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் நமது இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும்

315) இந்தியப் பண்பாட்டிற்கு இஸ்லாம் சமயத்தின் கொடை என்ன?

A) இவர்களது கலையம்சமான பூச்சித்திர, தையல் வேலைப்பாடுகள், பூவேலைப்பாடுகள் அமைந்த மணிமண்டபங்கள், உலோகம் மற்றும் தங்க வேலைப்பாடுகள் போன்ற கவின்மிகு கலைகள் இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

B) இவர்களது விளையாட்டு அரங்கங்கள், நகர நுழைவாயில்கள், பூத்தோட்டங்கள், அரண்மனைக் கோட்டைகள், மசூதிகள், கட்டடக்கலை, வண்ணகற்கள், ஒடுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட பொருள்கள் ஆகியவை இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகக் திகழ்கின்றன.

C) இந்தியப் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாக விளங்கும் இயற்கணிதம், வானநூல், மருத்துவம், கணிதம் போன்ற நூல்கள் அரேபியர் மூலம் ஐரோப்பா முழுவதும் பரவி, இந்தியாவின் பெருமையை மேலோங்கச் செய்தது

D) அனைத்தும் சரி

விளக்கம்: இவர்களது கலையம்சமான பூச்சித்திர, தையல் வேலைப்பாடுகள், பூவேலைப்பாடுகள் அமைந்த மணிமண்டபங்கள், உலோகம் மற்றும் தங்க வேலைப்பர்டுகள் போன்ற கவின்மிகு கலைகள் இந்தியப் பண்பாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

இவர்களது விளையாட்டு அரங்கங்கள், நகர நுழைவாயில்கள், பூத்தோட்டங்கள், அரண்மனைக் கோட்டைகள், மசூதிகள், கட்டடக்கலை, வண்ணகற்கள், ஒடுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட பொருள்கள் ஆகியவை இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகக் திகழ்கின்றன.

இந்தியப் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாக விளங்கும் இயற்கணிதம், வானநூல், மருத்துவம், கணிதம் போன்ற நூல்கள் அரேபியர் மூலம் ஐரோப்பா முழுவதும் பரவி, இந்தியாவின் பெருமையை மேலோங்கச் செய்தது

316) மகாவம்சம், தீபவம்சம் என்ற நூல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?

A) பாலி

B) பிராகிருதம்

C) ஆங்கிலம்

D) சமஸ்கிருதம்

விளக்கம்: மகாவம்சம், தீபவம்சம் என்ற பாலிமொழி நூல்கள் இலங்கையைச் சார்ந்தவையாகும்.

317) ‘பெரோஷா கோட்லா’ என்ற விளையாட்டரங்கம் எங்கு உள்ளது?

A) டெல்லி

B) ஹைதராபாத்

C) ஆக்ரா

D) மும்பை

விளக்கம்: ‘பெரோஷா கோட்லா’ என்ற விளையாட்டரங்கம் டெல்லியில் உள்ளது. இது இஸ்லாமியர் இந்தியாவுக்கு அளித்த கொடையாகும்.

318) ‘சார்மினார்’ நகர நுழைவாயில் எங்குள்ளது?

A) டெல்லி

B) ஹைதராபாத்

C) ஆக்ரா

D) மும்பை

விளக்கம்: ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் நகர நுழைவாயில் இஸ்லாமியர் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.

319) ஷாலிமாத் தோட்டங்கள் எங்குள்ளது?

A) டெல்லி

B) ஹைதராபாத்

C) ஆக்ரா

D) மும்பை

விளக்கம்: ஆக்ராவிலுள்ள ஷாலிமாத் தோட்டங்கள் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.

320) டெல்லியில் அமையாத ஒன்றைத் தெரிவு செய்க.

A) செங்கோட்டை

B) ஜும்மா மசூதி

C) முத்து மசூதி

D) தாஜ்மகால்

விளக்கம்: தாஜ்மகால் ஆக்ராவில் அமைந்துள்ளது. மேற்காணும் அனைத்தும் இஸ்லாம் இந்தியாவிற்கு அளித்த கொடையாகும்.

321) “பியூட்ரா டியூரா” என்ற முறையால் ஆக்கப்பட்டது எது?

A) செங்கோட்டை

B) ஜும்மா மசூதி

C) முத்து மசூதி

D) தாஜ்மகால்

விளக்கம்: ஆக்ரா – பதேப்பூர் சிக்ரி, உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் ‘பியூட்ரா டியூரா’ என்ற முறையால் ஆக்கப்பட்டது.

322) பெத்தலேகம் என்ற இடம் எங்குள்ளது?

A) ஈரான்

B) சவுதி அரேபியா

C) இஸ்ரேல்

D) ஜெருசேலம்

விளக்கம்: கிறித்துவத்தின் முன்னோடி ஏசுகிறிஸ்து ஆவார். இவரை “ஜீஸஸ்” என்றும் அழைப்பர். இவர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ‘பெத்தலேகம்’ என்னும் இடத்தில் ஜோசப்-கன்னிமேரியின் குழந்தையாகத் தோன்றினார்.

323) கிறித்துவ சமயக் கொள்கைகளில் சரியானதைத் தேர்வு செய்க

1. மனித உயிர்கள் இறைவன்மீது இதயப்பூர்வமாகவும், தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்தவேண்டும்.

2. பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அல்லது சொர்க்கம் என்பதை அடைய அன்பு, நீதி, கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மனித உயிர்கள் இறைவன்மீது இதயப்பூர்வமாகவும், தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்தவேண்டும்.

2. பரலோகத்தில் இருக்கும் பரமபிதா அல்லது சொர்க்கம் என்பதை அடைய அன்பு, நீதி, கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.

ஆகியவை கிறித்துவ சயமத்தின் கொள்கை எனக் கூறப்படுகிறது.

324) கிறித்துவ சமயக் கோட்பாடுகளை ஆராய்க.

1. அன்பு, கடவுள், நீதி, நம்பிக்கை போன்றவற்றை முக்கிய கோட்பாடுகள்

2. உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பது கிறத்துவ சமயக் கோட்பாடாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இண்டும் தவறு

விளக்கம்: 1. அன்பு, கடவுள், நீதி, நம்பிக்கை போன்றவற்றை முக்கிய கோட்பாடுகள்

2. உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பது கிறத்துவ சமயக் கோட்பாடாகும்.

325) சீக்கிய சமயத்தை நிறுவியவர் யார்?

A) குருநானக்

B) பெய்ன்

C) ரஞ்சித் சிங்

D) துலிக் சிங்

விளக்கம்: சீக்கிய சமயத்தை நிறுவியவர் குருநானக் (கி.பி.(பொ.ஆ)1469-1538).

326) ஏசு கிறிஸ்து பிறந்த நாள் எது?

A) ஜனவரி 1

B) ஏப்ரல் 10

C) ஜுன் 22

D) டிசம்பர் 25

விளக்கம்: ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் நாள் ஒவ்வொர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், புனித வெள்ளி, ஈஸ்டர், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் அன்பு, நட்பு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய பண்புகளை வலியுறுத்துகின்றன.

327) கிறித்துவ சமயத்தின் பணியை தேர்வு செய்க

A) ஆதரவற்றோர் இல்லம், முதியோர் காப்பகங்களை நிறுவி சேவை புரிகின்றன.

B) வெள்ளம், பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரண பணிகளை செய்து வருகின்றன.

C) இச்சமயக்குழுக்கள் நாடெங்கும் மருத்துவமனைகளை நிறுவி நலவாழ்வுப் பணிகளைச் செய்து வருகின்றன.

D) அனைத்தும்

விளக்கம்: ஆதரவற்றோர் இல்லம், முதியோர் காப்பகங்களை நிறுவி சேவை புரிகின்றன. வெள்ளம், பூகம்பம், பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன. இச்சமயக்குழுக்கள் நாடெங்கும் மருத்துவமனைகளை நிறுவி நலவாழ்வுப் பணிகளைச் செய்து வருகின்றன.

328) கிறித்துவ சமயத்தின் பணிகளைத் தேர்வு செய்க.

A) பட்டித்தொட்டிகளிலும் கல்விக்கூடங்கள் நிறுவி இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கியும் ஒழுக்கம், கட்டுப்பாடுகள், நீதிபோதனைகளையும் புகட்டி வருகின்றன.

B) இக்குழுக்கள் வட்டார மொழிகளைக் கற்று பல்வேறு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இந்திய மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றியுள்ளன.

C) இச்சமயக் குழுக்களால் இந்தியாவில் அச்சுப்பொறி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

D) அனைத்தும்

விளக்கம்: பட்டித்தொட்டிகளிலும் கல்விக்கூடங்கள் நிறுவி இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கியும் ஒழுக்கம், கட்டுப்பாடுகள், நீதிபோதனைகளையும் புகட்டி வருகின்றன.

இக்குழுக்கள் வட்டார மொழிகளைக் கற்று பல்வேறு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இந்திய மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றியுள்ளன.

இச்சமயக் குழுக்களால் இந்தியாவில் அச்சுப்பொறி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

329) கிறித்துவ சமயத்தின் கொடை என்ன?

A) கிறித்துவம், சமய பணி மட்டுமின்றிச் சமூக சேவையிலும் கவனம் செலுத்தியது. கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், மருத்துவமணைகள் போன்றவை மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

B) கிறித்துவச் சமயப் பரப்பாளர்கள் மதப்பணியை மட்டுமின்றி, இலக்கியத்திற்கும் சேவையாற்றினர். உதாரணம். கால்டுவெல், ஜி.யூ.போப், வீரமாமுனிவர்.

C) இந்தியப் பண்பாட்டை மேற்குலகப் பண்பாட்டோடு இணைத்ததில் கிறித்துவ சமயம் முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் கிறித்துவம் இந்தியப் பண்பாட்டின் சில பழக்க வழக்கங்களையும் தம்முள் இணைத்துக் கொண்டது .

D) அனைத்தும் சரி

விளக்கம்: கிறித்துவம் சமய பணி மட்டுமின்றிச் சமூக சேவையிலும் கவனம் செலுத்தியது. கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள். மருத்துவமணைகள் போன்றவை மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

கிறித்துவச் சமயப் பரப்பாளர்கள் மதப்பணியை மட்டுமின்றி, இலக்கியத்திற்கும் சேவையாற்றினர். உதாரணம். கால்டுவெல், ஜி.யூ.போப், வீரமாமுனிவர்.

இந்தியப் பண்பாட்டை மேற்குலகப் பண்பாட்டோடு இணைத்ததில் கிறித்துவ சமயம் முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் கிறித்துவம் இந்தியப் பண்பாட்டின் சில பழக்க வழக்கங்களையும் தம்முள் இணைத்துக் கொண்டது .

330) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

A) கால்டுவெல்

B) ஜி.யூ.போப்

C) வீரமாமுனிவர்

D) அம்பேத்கர்

விளக்கம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் கால்டுவெல்.

331) திருவாசகம் மற்றும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

A) கால்டுவெல்

B) ஜி.யூ.போப்

C) வீரமாமுனிவர்

D) அம்பேத்கர்

விளக்கம்: திருவாசகம் மற்றும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யூ.போப் ஆவார்.

332) “பரமார்த்தகுரு கதைகள்” – யார் எழுதியது?

A) கால்டுவெல்

B) ஜி.யூ.போப்

C) வீரமாமுனிவர்

D) அம்பேத்கர்

விளக்கம்: “பராமார்த்தகுரு கதைகள்” – வீரமாமுனிவர்.

333) 2-வது பௌத்தசமய மாநாடு பற்றி சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.

A) நடைபெற்ற இடம் – வைசாலி

B) தலைமை – சபாசமிகா

C) காலசோகன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது

D) அனைத்தும் சரி

விளக்கம்: நடைபெற்ற இடம் – வைசாலி

தலைமை – சபாசமிகா

காலசோகன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது

334) “சீக்” என்பதன் பொருள் என்ன?

A) நோய்

B) சீக்கல்

C) சீடர்

D) குரு

விளக்கம்: சீக் என்றால் சீடர் அல்லது பின்பற்றுபவர் என்பது பொருள் ஆகும்.

335) “சீக்” எம்மொழிச்சொல்?

A) உருது

B) பஞ்சாபி

C) இந்தி

D) குஜராத்தி

விளக்கம்: “சீக்கியம்” என்பது, சீக் என்ற பஞ்சாபி வார்த்தையில் இருந்து தோன்றியது.

336) சீக்கியம் எந்த நாட்டில் தோன்றிய சமயமாகும்?

A) நேபாளம்

B) இலங்கை

C) பூடான்

D) இந்தியா

விளக்கம்: 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியச் சமயமாகும். சீக்கியர்கள் தங்கள் சமய குருவைப் பின்பற்ற வேண்டும். அவர்களே, சீக்கியர்களின் வழிகாட்டிகளாவர்.

337) சீக்கிய சமயம் தோன்றக் காரணம் என்ன?

A) சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்

B) குருநானக், கபீர் போன்றோர் கருத்துக்கள் மக்களிடம் வரவேற்றைப் பெற்றது.

C) பக்தி இயக்கங்களின் செல்வாக்கு

D) அனைத்தும்

விளக்கம்: சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள்

குருநானக், கபீர் போன்றோர் கருத்துக்கள் மக்களிடம் வரவேற்றைப் பெற்றது.

பக்தி இயக்கங்களின் செல்வாக்கு

மேலும் பல்வேறு, அந்நியப் படையெடுப்புகள் பஞ்சாப் வழியாகவே நடைபெற்றன. இது பஞ்சாப் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் தனித்த, அடையாளத்துடன் வீரம் செறிந்த பிரிவினராகவும் தோன்ற காரணமாக அமைந்தது.

338) கிறித்துவக் கோட்பாடுகள் அடங்கிய புனித நூல் எது?

A) பகவத் கீதை

B) திருக்குறள்

C) விவிலியம்

D) ஏசு கிறித்துவின் கட்டளைகள்

விளக்கம்: கிறிஸ்துவக் கோட்பாடுகள் அடங்கிய புனித நூல் பைபிள் (விவிலியம்) ஆகும்.

339) கூற்றுகளை ஆராய்க

1. நாம்தாரி – உருவமற்ற இறைக்கொள்கை

2. நிரங்காரி – குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. நாம்தாரி – குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்

2. நிரங்காரி – உருவமற்ற இறைக்கொள்கை

340) குரு நானக்கின் போதனை எது?

A) கடவுள் ஒருவரே

B) அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், சாதி வேறுபாடு கூடாது.

C) இராமன், கிருஷ்ணன், முகமது நபி போன்றோர் இறைவனின் தூதர்கள் என்றார்.

D) அனைத்தும்

விளக்கம்: கடவுள் ஒருவரே

அனைத்து மனிதர்களும் சமமானவர்கள், சாதி வேறுபாடு கூடாது. இராமன், கிருஷ்ணன், முகமது நபி போன்றோர் இறைவனின் தூதர்கள் என்றார்.

341) கால்சா அமைப்பை தோற்றுவித்தவர் யார்?

A) குருநானக்

B) அர்ஜுன் சிங்

C) துளிப் சிங்

D) குருகோவிந்த சிங்

விளக்கம்: 10-வது சீக்கிய குரு, கோவிந்த சிங் இவ்வமைப்பை தோற்றுவித்தார்.

342) சீக்கிய சமயக் கொள்கைகள் எத்தனையாகப் பிரித்து விளக்கப்படுகிறது?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சீக்கிய சமயக் கொள்கைகள் குர்மத், குர்தர்ஷன் என்று பிரித்து விளக்கப்படுகிறது. குர்மத் – சீக்கிய சமயத்தையும், குர்தர்ஷன் – சீக்கிய தத்துவத்தையும் குறிக்கும். ஒழுக்கம், பணிவு, நேர்மை, தருமம், உண்மை, கருணை போன்றவை இவர் போதனைகளில் முக்கிய இடம் பெற்றன. இறைவனின் பெயரை எப்போதும் உச்சரித்தல், உடலாலும், உள்ளத்தாலும் குருவிற்குக் கீழ்ப்படிந்து நடத்தல் போன்றவை சீக்கியர்களின் முக்கிய கடமையாகும். இறைவனின் திருநாமங்களை இனிய பாடல்களால் இசையுடன் பாடி இதயத்தைத் தூய்மை செய்ய வேண்டும் என்பது குருநானக்கின் கொள்கையாகும்.

343) ‘சத்தநாம்’ என்பது யாரைக் குறிக்கும்?

A) சீக்கியர்

B) குருநானக்

C) சீடர்

D) கடவுள்

விளக்கம்: சத்தநாம் – கடவுள். கடவுள் ஒருவரே, அவர் இரண்டாகவோ, மூன்றாகவோ பலவாகவோ இல்லை. அவர் வடிவமற்றவர். எனினும் அவரது ஒளி அனைத்து படைப்புகளிலும் உள்ளும், புறமுமாக விளங்குகிறது. அவர் ‘ஏக்-ஓம்கார’ என அழைக்கப்படுகிறார்.

344) சீக்கியம் பற்றிய கருத்துகளை ஆராய்க.

1. சீக்கியம், குருவின் மூலமாக மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறது.

2. குருவைக் கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தியாகக் கருதுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சீக்கியம், குருவின் மூலமாக மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறது.

2. குருவைக் கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தியாகக் கருதுகிறது.

345) எந்த சமயத்தில் “ஸச், கண்ட, சூன்ய” போன்ற பல பெயர்களால் வீடுபேறு குறிக்கப்படுகிறது?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) கிறிஸ்துவம்

விளக்கம்: சீக்கியத்தில் “ஸச், கண்ட, சூன்ய” போன்ற பல பெயர்களால் ‘வீடுபேறு’ குறிக்கப்படுகிறது. வீடுபேறு என்பது, மனிதன் கடவுளான மாறுகின்ற இறைநிலையைக் குறிப்பதாகும். உண்மையான வாழ்க்கையின் மூலம் மனிதன் வீடுபேறு அடைமுடியும் என இச்சமயம் கூறுகிறது.

346) ‘ஆதிகிரந்தம்’ எந்தச் சமயத்தின் புனித நூல்?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) கிறிஸ்துவம்

விளக்கம்: ஆதிகிரந்தம் – சீக்கியர்களின் புனித நூல்.

347) சீக்கிய சமயத்தின் 5-வது சமயகுரு யார்?

A) குருநானக்

B) அர்ஜுன்சிங்

C) பவசிங்

D) துளிப் சிங

விளக்கம்: குருநானக்கின் போதனைகளும் வழிபாட்டுப்பாடல்களும் வாய்வழியாகவே இருந்தன. அதை சீக்கிய சமயத்தின் 5-வது சமய குரு “அர்ஜுன் சிங்”, “ஆதிகிரந்தம்” என்ற பெயரில் தொகுத்தார்.

348) ‘கடவுளின் சொல்’ என்ற பெயரால் வழங்கப்படும் நூல் எது?

A) ஆதிகிரந்தம்

B) குருகிரந்தசாகிப்

C) A மற்றும் B

D) நன்னூல்

விளக்கம்: ஆதிகிரந்தம் என்ற நூல் ‘கடவுளின் சொல்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இது குர்முகி எழுத்து வடிவத்தில் உள்ளது. தற்போது குரு கிரந்தசாகிப் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதற்கு ‘குருவின் சொல்’ எனப் பொருள்.

349) “பஞ்ச காக்கர்” என்னும் 5 அடையாளங்களை அறிவித்த சீக்கிய குரு யார்?

A) அர்ஜுன் சிங்

B) குருநானக்

C) துளிப் சிங்

D) குருகோவிந்த் சிங்

விளக்கம்: “பஞ்ச காக்கர்” என்னும் 5 அடையாளங்களை அறிவித்த சீக்கிய குரு – குருகோவிந்த் சிங். இவர், சீக்கியரின் சின்னங்களாகக் கீழ்க்க்ணடவற்றை அறிவித்தார்.

‘பஞ்ச காக்கர்’ என்னும் 5 அடையாளங்கள்:

1. கேஷ்

2. கங்க

3. கச்சாஹெரா

4. கரா

5. கிர்பான்.

350) பொருத்துக. (பஞ்ச காக்கர் பற்றிய கூற்றுகளில்)

அ. கேஷ் – 1. வெட்டப்படாத முடி

ஆ. கங்க – 2. மரத்தாலான சீப்பு

இ. கச்சாஹெரா – 3. அரைக்கால்சட்டை

ஈ. கரா – 4. இரும்புக் கைவளையல்

உ. கிர்பான் – 5. குறுவாள்

A) 5, 4, 3, 2, 1

B) 4, 5, 3, 2, 1

C) 1, 3, 5, 4, 2

D) 1, 2, 3, 4, 5

விளக்கம்: கேஷ் – வெட்டப்படாத முடி

கங்க – மரத்தாலான சீப்பு

கச்சாஹெரா – அரைக்கால்சட்டை

கரா – இரும்புக் கைவளையல்

கிர்பான் – குறுவாள்

351) ‘குருகோவிந்த்சிங்’ எத்தனையாவது சீக்கிய குரு?

A) 1

B) 5

C) 10

D) கடைசி குரு

விளக்கம்: 10வது குரு – குருகோவிந்த் சிங்

352) யாருடைய வழிபாட்டுத் தலங்கள் ‘குருத்துவாராக்கள்’ என அழைக்கப்படுகின்றன?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) A மற்றும் C

விளக்கம்: சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் ‘குருத்துவாரக்கள்’ என அழைக்கப்படுகின்றன. ‘குருத்துவாரா’ – “குருவை அடையும் வழி” என்று பொருள். குருத்துவாராவில் ‘ஆதிகிரகந்தம்’ வைக்கப்பட்டிருக்கும்.

353) எதில் ‘லாங்கர்’ என்னும் சமபந்தி உணவுக் கூடங்கள் அமைந்திருக்கும்?

A) குருதுவாராக்கள்

B) ஸ்தூபிகள்

C) மடாலங்கள்

D) A மற்றும் B

விளக்கம்: குருத்துவாராக்களில் ‘லாங்கர்’ என்னும் சமபந்தி உணவுக் கூடங்களும் அமைந்திருக்கும்.

354) சீக்கிய மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சீக்கியப் பிரிவுகள் – 2

1. நாம்தாரி

2. நிரங்காரி

355) குருநானக் எந்த இடத்தில் ஞானம் பெற்றார்?

A) சால் மரம்

B) போதி மரம்

C) ‘பெய்ன்’ ஆறு

D) A மற்றும் B

விளக்கம்: ‘பெய்ன்’ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது ஆன்மீக ஞானம் பெற்றார். இவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு சமயநெறியை உருவாக்க எண்ணியதன் விளைவாகத் தோன்றியதே சீக்கிய சமயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!