MCQ Questions

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 10th Social Science Lesson 20 Questions in Tamil

10th Social Science Lesson 20 Questions in Tamil

20] இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

1) வெளியுறவு கொள்கை என்பது கீழ்க்கண்டவற்றுள் எதை பிரதிபலிக்கிறது?

I. ஒரு நாட்டின் பாரம்பரிய மதிப்புகள்.

II. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த தேசிய கொள்கை.

III. ஒரு நாட்டின் எதிர்பார்ப்பு மற்றும் சுய கருத்து.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் மூலம் தேசிய நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்)

2) இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளை பொறுப்பேற்று நடத்துவது கீழ்க்கண்டவற்றுள் எந்த துறை ஆகும்?

A) வெளியுறவு அமைச்சகம்

B) வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்

C) வெளியுறவு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சகம்

D) வெளியுறவு மற்றும் பிரதமர் அலுவலகம்.

(குறிப்பு – வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளை பொறுப்பை ஏற்று நடத்துகிறது. இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது)

3) இந்திய வெளிநாட்டு சேவை பயிற்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A) 1986ம் ஆண்டு

B) 1988ம் ஆண்டு

C) 1990ம் ஆண்டு

D) 1992ம் ஆண்டு

(குறிப்பு – 1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டு சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகளுக்கு ( Indian Foreign Service) பயிற்சி அளிக்கிறது)

4) வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. உடன்படிக்கைகள்

II. நிர்வாக ஒப்பந்தங்கள்

III. தூதுவர்களை நியமித்தல்

IV. வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வணிகம்.

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஒரு குறிக்கோள் மற்றும் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது நாடுகளிடையே மேம்பட்ட உறவுகளை அடையும் திறனையும் விரைவான வளர்ச்சிக்கான பலத்தையும் கொண்டிருக்கும்)

5) இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1950ம் ஆண்டு

B) 1951ம் ஆண்டு

C) 1952ம் ஆண்டு

D) 1953ம் ஆண்டு

(குறிப்பு – இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன)

6) இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த சட்டப்பிரிவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது?

A) சட்டப்பிரிவு 50

B) சட்டப்பிரிவு 51

C) சட்டப்பிரிவு 52

D) சட்டப்பிரிவு 53

(குறிப்பு – இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 51 கீழ் அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன)

7) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி(1950) அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள் எது?

I. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

II. சர்வ நாடுகளிடையே நியாயமான மற்றும் கவுரவமான உறவுகளை பேணுதல்

III. சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளை மதித்தல்

IV. சர்வதேச பிரச்சினைகளை நடுவர்மன்ற மூலம் தீர்க்க ஊக்குவித்தல்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் ஒரு அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 சட்டப்பிரிவு 51றின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன)

8) இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் ஆவன எது?

I. தேசிய பாதுகாப்பு

II. தேசிய வளமை

III. நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

IV. உலக அமைதி அடைதல்.

V. பொருளாதார வளர்ச்சி

A) I, II, III, IV மட்டும்

B) II, III, IV, V மட்டும்

C) I, III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வலிமையை பயன்படுத்தாமல் அமைதி வழிமுறைகளை பின்பற்றுவதை புத்தர் ஆதரித்தார்)

9) இந்தியாவின் பஞ்சசீல கொள்கைகள் முதலில் எந்த நாட்டுடன் கையெழுத்தானது?

A) பாகிஸ்தான்

B) நேபாளம்

C) சீனா

D) இலங்கை

(குறிப்பு – இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீனாவின் பிரதமர் சூ யென் லாய் ஆகியோருக்கு இடையே அமைதியுடன் இணைந்து இருத்தலுக்கான ஐந்து கொள்கைகளை உள்ளடக்கிய பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது)

10) பஞ்சசீல கொள்கைகள் எந்த நாளில் கையெழுத்தானது?

A) 1954ஆம் ஆண்டு, ஏப்ரல் 22ஆம் நாள்

B) 1954ஆம் ஆண்டு, ஏப்ரல் 24ஆம் நாள்

C) 1954ஆம் ஆண்டு, ஏப்ரல் 26ஆம் நாள்

D) 1954ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் நாள்

(குறிப்பு – பாஞ் – ஐந்து, சீலம் – நற்பண்புகள் = பஞ்சசீலம்.)

11) பஞ்சசீலக் கொள்கைகளில் தவறானது எது?

A) பரஸ்பர ஆக்கிரமிப்பு

B) பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திருத்தணி

C) பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்

D) அமைதியாக சேர்ந்து இருத்தல்

(குறிப்பு – ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல், பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை, பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது இருத்தல், பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல், அமைதியாக சேர்ந்து இருத்தல் ஆகியன பஞ்சசீல கொள்கைகள் ஆகும்)

12) பஞ்சசீல கொள்கைகள் எந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய மாநாட்டில் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன?

A) 1954ஆம் ஆண்டு

B) 1955ஆம் ஆண்டு

C) 1956ஆம் ஆண்டு

D) 1957ஆம் ஆண்டு

(குறிப்பு – பஞ்சசீல கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்கஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன)

13) வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள் எது?

I. நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.

II. நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.

III. இயற்கை வளங்கள்

IV. ராணுவ வலிமை மற்றும் சர்வதேச சூழ்நிலை

A) I, II, III, IV மட்டும்

B) II, III, IV, V மட்டும்

C) I, III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அமைதிக்கான அவசியம், ஆயுத குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத் தடை, அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு, பொருளாதார வளர்ச்சியின் அவசியம் போன்றவைகள் வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் ஆகும்)

14) அணிசேராமை என்ற கொள்கையை உருவாக்கியவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) சர்தார் வல்லபாய் பட்டேல்

D) டாக்டர் அம்பேத்கர்

(குறிப்பு – நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 மற்றும் 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வழிகாட்டுதலின்படி முக்கிய குறிக்கோள்களை கொண்டதாக அமைந்து இருந்தன. அணி சேராமை என்ற கொள்கையை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார்)

15) அணி சேராமை என்ற கொள்கை மூலம் யாருக்கு இந்தியா ஆதரவளித்தது?

I. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்

II. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

A) I க்கு மட்டும்

B) II க்கு மட்டும்

C) இரண்டும் அல்ல

D) இரண்டிற்கும்

(குறிப்பு – ஜவஹர்லால் நேரு அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா ஆசியாவில் புதிதாக தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கை செலுத்துவதை எதிர்த்தார் எனவே பனிப்போர் நிலவும் இரு துருவமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியை தேர்ந்தெடுத்தார்)

16) அணிசேரா இயக்கம் என்ற சொல் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1951ஆம் ஆண்டு

B) 1953ஆம் ஆண்டு

C) 1956ஆம் ஆண்டு

D) 1959ஆம் ஆண்டு

(குறிப்பு – அணிசேரா இயக்கம் என்ற சொல் 1953 ஆம் ஆண்டு ஐநா சபையில் உரையாற்றிய கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது)

17) அணிசேரா இயக்கம் என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) வி. கிருஷ்ணமேனன்

C) டாக்டர் ராதாகிருஷ்ணன்

D) டாக்டர் அம்பேத்கார்

(குறிப்பு – வி.கிருஷ்ணமேனன் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் ஆவார்)

18) அணிசேரா இயக்கம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் சரியானது எது?

I. அணிசேரா இயக்கத்தின் நோக்கம் இராணுவக் கூட்டணி சேராமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரித்தல் ஆகும்.

II. அணிசேரா இயக்கம் 120 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது.

III. அணிசேரா இயக்கம் 27 நாடுகளை பார்வையாளராக கொண்டுள்ளது.

IV. அணிசேரா இயக்கத்தில் 10 சர்வதேச நிறுவனங்கள் உள்ளது.

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

(குறிப்பு – அணிசேரா இயக்கம் 17 நாடுகளை பார்வையாளராக கொண்டுள்ளது. வளர்ச்சி குறைந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை நிறுவுவதில் அணிசேரா நாடுகள் வெற்றி அடைந்துள்ளன)

19) அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்களில் கீழ்கண்டவர்களுள் தவறானவர்கள் யார்?

A) இந்தியாவின் ஜவஹர்லால் நேரு

B) யூகோஸ்லாவியாவில் டிட்டோ

C) எகிப்தின் நாசர்

D) நேபாளத்தின் ஷிக்கோமா

(குறிப்பு – அணிசேரா இயக்கத்தின் நிறுவன தலைவர்கள் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யூகோஸ்லாவியாவில் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆவர்.)

20) இந்தியா எந்த ஆண்டில் சோவியத் யூனியனுடன் 20 ஆண்டுகாலம் ஒப்பந்தமான அமைதி நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பதில் இணைந்தது?

A) 1970ஆம் ஆண்டு

B) 1971ஆம் ஆண்டு

C) 1972ஆம் ஆண்டு

D) 1973ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா அணிசேரா இயக்கத்தின் இருந்தபோதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா ராணுவ நவீனமயமாக்கல் மேற்கொண்டது)

21) சீனா எந்த ஆண்டு லாப் நார் என்னுமிடத்தில் அணு சோதனை மேற்கொண்டது?

A) 1960ஆம் ஆண்டு

B) 1962ஆம் ஆண்டு

C) 1964ஆம் ஆண்டு

D) 1966ஆம் ஆண்டு

(குறிப்பு – சீனா 1964 ஆம் ஆண்டு லாப் நார் என்னும் இடத்தில் மேற்கொண்ட அணு சோதனைக்கு பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனை திட்டத்தினை நடத்தியது.)

22) இந்தியா தனது முதலாவது பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தினை எந்த ஆண்டு நிகழ்த்தியது?

A) 1966ஆம் ஆண்டு

B) 1974ஆம் ஆண்டு

C) 1978ஆம் ஆண்டு

D) 1984ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா தனது முதலாவது நிலத்தடி அணு வெடிப்புத் திட்டத்தை (subterranean Nuclear Explosions Project ) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் 1974ஆம் ஆண்டு நிகழ்த்தியது)

23) இந்தியா எப்பொழுது அரசியல் விடுதலை பெற்றதாக கருதப்படுகிறது?

A) முதலாம் உலகப் போருக்குப் பின்

B) இரண்டாம் உலகப் போருக்கு முன்

C) இரண்டாம் உலகப் போருக்குப் பின்.

D) கார்கில் போருக்குப் பின்

(குறிப்பு – பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்தியா அரசியல் விடுதலை பெற்றதாக கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தீவிர வறுமை, படிப்பறிவின்மை, குழப்பமான சமூக பொருளாதார நிலைகளில் இருந்து இந்தியா தன்னை மீட்டு எடுக்க வேண்டி இருந்தது).

24) அணிசேராமை என்பதற்கான பொருள் எது?

I. நடுநிலைமை ஆக இருப்பது

II. பிரச்சினைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரமாக தீர்மானிப்பது

III. ஏதேனும் ஒரு நாட்டிற்கு மட்டும் ஆதரவளிப்பது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) II, III மட்டும் சரி

( குறிப்பு – அணிசேராமை என்பது ராணுவ வலிமை இல்லாது இருத்தல் என்ற பொருள் அல்ல. அணிசேராமை என்பது நடுநிலைமையாக இருத்தல் என்றும் பொருளல்ல. பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரமாக தீர்மானிப்பது ஆகும்)

25) சோவியத் யூனியனின் வீழ்ச்சி எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A) 1990களில்

B) 1980களில்

C) 1970களில்

D) 1960களில்

(குறிப்பு – 1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு ஒரு புதிய உலகளாவிய பொருளாதார கொள்கை ( தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல்) எழுச்சி பெற்றது.)

26) இந்தியா உலக பொருளாதார மன்றத்துடன்(GATT) கீழ்க்காணும் எந்த ஒப்பந்தத்தின் மூலம் இணைந்துள்ளது?

I. இருதரப்பு ஒப்பந்தம்

II. முத்தரப்பு ஒப்பந்தம்

III. பலதரப்பு ஒப்பந்தம்

A) I மட்டும்

B) II மட்டும்

C) I, II மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்தியா உலகப் பொருளாதார மன்றத்துடன் (GATT) ஒரு ஒப்பந்தத்தின் சேர்ந்த தவுடு இருதரப்பு, முத்தரப்பு, பலதரப்பு ஒப்பந்தங்களிலும் இணைந்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுத சோதனைகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து அச்சுறுத்தும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின)

27) இந்தியாவின் சீனா உடனான நட்புறவு கிழக்கு நோக்கு கொள்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1990ஆம் ஆண்டு

B) 1992ஆம் ஆண்டு

C) 1994ஆம் ஆண்டு

D) 1994ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட ஒரு மாற்றமாக, இந்தியா சீனாவுடனான நட்புறவு கிழக்கு நோக்கு கொள்கை 1992 பார்க்கப்படுகிறது)

28) இந்தியாவின் இரண்டாம் அணு சோதனை 1998ஆம் ஆண்டு எந்த இடத்தில் நிகழ்த்தப்பட்டது?

A) ராஜஸ்தான்

B) ஜார்கண்ட்

C) பஞ்சாப்

D) ஸ்ரீஹரிகோட்டா

(குறிப்பு – இந்தியா தனது இரண்டாவது அணு சோதனையை ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் 1998ஆம் ஆண்டு நிகழ்த்தியது.)

29) இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமாக கருதப்படுவது யாது?

I. அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி ஆற்றல் வள தூதரக உறவு.

II. அமெரிக்காவின் அணு ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

III. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்களிப்பு.

IV. இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான உறவு.

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சீனாவுடன் இந்தியா ஏற்படுத்திக்கொண்ட நட்புறவு கிழக்கு நோக்கு கொள்கை(1992), மற்றும் மேற்கண்ட அவைகள் அனைத்தும் இந்திய வெளியுறவுக் கொள்கைகள் ஏற்பட்ட மாற்றங்களாக கருதப்படுகிறது)

30) இந்தியா கீழ்காணும் எதில் உறுப்பினர் அல்ல?

A) G-20

B) IBSA

C) BRICS

D) G-8

(குறிப்பு – G-8 கூட்டமைப்பு என்பது அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன்(UK), கனடா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை கொண்டது ஆகும். இந்த கூட்டமைப்பின் உறுப்பினராக இந்தியா இல்லை)

31) இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் ஆவன எது?

I. தேசிய நலனை பேணுதல்

II. உலக அமைதியை எய்துதல்

III. ஆயுதகுவிப்பு

IV. பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்

A) I, II, III மட்டும்

B) I, II, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சர்வதேச விவகாரங்களில் சமத்துவம், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம் இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு போன்றவைகளும் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் ஆகும்)

32) இந்தியாவின் அணு கொள்கையின் மையக் கருத்துக்கள் ஆவன எது?

I. முதலில் பயன்படுத்துவதில்லை.

II. குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்

III. ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்தியாவின் 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டு அணு சோதனைகள் போர்த் திறமை சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவை ஆகும். அணு ஆயுதத்தை போர் தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக பயன்படுத்துவதும் இல்லை என இந்தியா தீர்மானித்துள்ளது)

33) சார்க் கூட்டமைப்பை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சார்க் கூட்டமைப்பு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

கூற்று 2 – இது 6 நாடுகளை உறுப்பினராக கொண்டது.

கூற்று 3 – இஸ்ரோ அமைப்பு சார்க் பிராந்தியத்திற்கான ‘செய்தி தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக ‘ சார்க் செயற்கைக்கோளை செலுத்த உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரியானது

B) கூற்று 1, 3 மட்டும் சரியானது

C) கூற்று 2, 3 மட்டும் சரியானது

D) அனைத்து கூற்றுகளும் சரியானது

(குறிப்பு – சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகள் இடையே கூட்டு தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரிவுபடுத்துதல் ஆகியவையாகும்)

34) சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

A) புதுடெல்லி

B) அலகாபாத்

C) அகமதாபாத்

D) லக்னோ

(குறிப்பு – சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தெற்காசியாவில் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மைக்கான வல்லுநர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்)

35) சார்க் கூட்டமைப்பில் அல்லாத நாடு எது?

A) ஆப்கானிஸ்தான்

B) மியான்மர்

C) நேபாளம்

D) மாலத்தீவு

(குறிப்பு – ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் சார்க் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆகும்)

36) இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக உள்ள நாடு எது?

A) சிங்கப்பூர்

B) மியான்மர்

C) இந்தோனேஷியா

D) மாலத்தீவு

(குறிப்பு – வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியா தொடங்குகிறது. மியான்மர் இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உள்ள நாடுகளுக்கும் பாலமாக உள்ளது)

37) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினர் நாடு அல்லாதது எது?

A) காம்போடியா

B) மியான்மர்

C) இந்தோனேஷியா

D) அந்தமான் நிகோபார்

(குறிப்பு – காம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகியவை தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகும்)

38) இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மூன்று முக்கிய கூறுகள் ஆவன?

I. வலிமையான நிலப்பரப்பு இணைப்பு தொடர்பானவை

II. வணிகம் தொடர்பானவை

III. பாதுகாப்பு தொடர்பானவை

IV. பொருளாதார வளர்ச்சி தொடர்பானவை

A) I, II, III மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

(குறிப்பு – இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மூன்று முக்கிய கூறுகள் வலிமையான நிலப்பரப்பு இணைப்பு, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானவை ஆகியன ஆகும்)

39) கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

கூற்று 1 – ஐநா சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியா ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்கிறது.

கூற்று 2 – ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சி மாநாடு, BRICS கூட்டமைப்பு போன்றவற்றில் இந்தியா உறுப்பினர் நாடாக உள்ளது.

கூற்று 3 – இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஆற்றல் வளம், முக்கிய வளங்களை பாதுகாத்தல், அவசியமான கப்பல் வழித்தடங்களை திறத்தல் மற்றும் பராமரித்தல், முதலீடுகளை எதிர்நோக்கல், கடல்கடந்த வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நுழைவினைப்பெறுதல் போன்ற பல்வேறு காரணிகளால் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது)

40) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. உள்நாட்டு கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்கு உள்ளான விவகாரங்கள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கையாகும்.

II. வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானவையாகும்.

III. வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவைகள் உள்நாட்டு கொள்கைகளில் அடங்கும்.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – உள் விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது உள்நாட்டு கொள்கை ஆகும்.)

41) காமன்வெல்த் நாடுகளின் எண்ணிக்கை என்ன?

A) 51 நாடுகள்

B) 53 நாடுகள்

C) 55 நாடுகள்

D) 57 நாடுகள்

(குறிப்பு – காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர் எண்ணிக்கை 53 ஆகும். இதன் தலைமையகம் இலண்டனில் அமைந்துள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!