MCQ Questions

இந்தியாவும் அண்டை நாடுகளும் 12th Political Science Lesson 10 Questions in Tamil

12th Political Science Lesson 10 Questions in Tamil

10] இந்தியாவும் அண்டை நாடுகளும்

1) இந்தியாவுடன் நிலவழி எல்லையை பகிர்ந்து கொள்ளாத நாடு எது?

A) பூட்டான்

B) மியான்மர்

C) சீனா

D) மாலத்தீவு

(குறிப்பு – இந்தியா நீளமான கடல் மற்றும் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், சீனா, மியான்மர், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்றவை இந்தியாவுடன் நில மற்றும் நீர் வழி எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளாகும். இவற்றுள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நிலவழி எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளாகும்.)

2) இந்தியாவுடன் நீர்வழி எல்லையை பகிர்ந்து கொள்ளாத நாடு எது?

A) இலங்கை

B) மாலத்தீவு

C) வங்கதேசம்

D) நேபாளம்

(குறிப்பு – இந்தியாவுடன் நீர்வழி எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகள் ஆகும். இந்தியா தனது அணி சேராக் கொள்கை அல்லது ராணுவ மோதல்களில் ஈடுபடாமை ஆகியவற்றை தனது அயல்நாட்டுக் கொள்கையாகக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக எல்லை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வருகிறது.)

3) இந்தியா மட்டும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே “நட்புறவு ஒப்பந்தம்” எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 1950 இல்

B) 1955 இல்

C) 1960 இல்

D) 1965 இல்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த 1947 ஆம் ஆண்டு முதல் இந்தியா தன்னுடைய கொள்கைத் திட்டத்தை மேம்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறது.1950 ஆம் ஆண்டு இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.)

4) ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் உறவு கீழ்காணும் எந்த ஆண்டு காலத்தில் தடைப்பட்டிருந்தது?

A) 1979 – 1989

B) 1976 – 1986

C) 1975 – 1985

D) 1974 – 1984

(குறிப்பு – ஆப்கானிஸ்தான் மன்னர் நாதிர் ஷாவின் ஆட்சிகாலம் இந்தியாவிற்கான நட்புறவில் சிறந்த காலமாகக் கருதப்பட்டது. 1979ஆம் ஆண்டில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்பாகவே பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாகவும் நெறிமுறைகளின் மூலமாகவும் சோவியத் ஆதரவு அரசாங்கங்களுடன் இந்தியா நட்புறவை வளர்த்து வந்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் உறவு 1929 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை தடைப்பட்டிருந்தாலும், இந்தியா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்குபெற்று ஆப்கானிஸ்தானின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது)

5) கீழ்க்காணும் எந்த ஆண்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நேரடி வான்வெளி சரக்கு மற்றும் வர்த்தகம் ஏற்படுத்தப்பட்டது?

A) 2015 முதல்

B) 2016 முதல்

C) 2017 முதல்

D) 2018 முதல்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானின் முகத்தோடு மாகாணங்களில் 116 புதிய அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டு திட்டங்களை இந்தியா செய்து கொடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே நேரடி வான்வெளி சரக்கு மற்றும் வர்த்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.)

6) ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் கட்டித் தர இந்தியா கொடுத்த நிதி உதவி தொகை எவ்வளவு?

A) 60 மில்லியன் டாலர்

B) 70 மில்லியன் டாலர்

C) 80 மில்லியன் டாலர்

D) 90 மில்லியன் டாலர்

(குறிப்பு – இந்தியா 290 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆப்கானிஸ்தான் இந்தியா கூட்டுறவில் அணையை கட்டியது. இதற்கு முன்னதாக சல்மா அணை என்று அறியப்பட்டது. இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிராட் மாகாணத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டிடம் 90 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவால் கட்டித்தரப்பட்டது.)

7) இந்தியா-ஆப்கானிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி எந்த ஆண்டு நடைபெற்றது

A) 2011 இல்

B) 2013 இல்

C) 2015 இல்

D) 2017 இல்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானில் தனியார் முதலீடு குறிப்பாக இந்தியா ஆப்கானிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் 31 மாகாணங்களில் 116 புதிய அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானுக்கு 1.1 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா வழங்குகிறது.

8) கீழ்க்காணும் எந்த சாலை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் வளர்ச்சி நிதியில் இருந்து முழுமையான நிதியுதவியுடன் கட்டித்தரப்பட்டது?

A) டெல்லாராம் – சரான்ஜ்

B) லோமன் – கஜினி

C) மாலிஸ்தான் – சங்கார்

D) டெல்லாராம் – சங்கார்

(குறிப்பு – ஈரான் எல்லைக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் செல்வதற்கு உதவுவதற்காக 218 கிலோமீட்டர் சாலையானது சரான்ஜில் இருந்து டெல்லாராம் வரை இந்தியா அமைத்துக் கொடுத்துள்ளது. இந்திய கலாச்சார உறவு குழுவின்(ICCR) கீழ் ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

9) எந்த ஆண்டு இந்தியா சார்க் மண்டல அமைப்பில் ஆப்கானிஸ்தான் உறுப்பினராக சேர்வதற்கு வழி மொழிந்தது?

A) 2001 இல்

B) 2003 இல்

C) 2005 இல்

D) 2007 இல்

(குறிப்பு – இந்தியாவானது ஈரான், ரஷ்யா மற்றும் தஜகஸ்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து, வடக்கு நாடுகளின் கூட்டணிக்கு வேண்டிய பொருள் வளங்களை ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வலிமைப்படுத்தியது. 2001ம் ஆண்டு முதல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மேம்பாட்டில் இந்தியா ஈடுபடத் தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான் உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா வழிமொழிந்தது.)

10) கீழ்காணும் எந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் சார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது?

A) 2006 இல்

B) 2007 இல்

C) 2008 இல்

D) 2009 இல்

(குறிப்பு – . 2005 ஆம் ஆண்டு சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான் உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா வழிமொழிந்தது. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் சார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. ஆப்கன் நாட்டின் குடிமக்கள் மற்றும் ராணுவத்திற்கு ஆயுதப் பயிற்சியை அளித்து இந்தியா அதன் உறவுமுறையை பலப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு முறை போட்டி பெரும் சவாலாக உலக அரங்கில் கருதப்படுகிறது.)

11) எந்த ஆண்டு இந்தியா ஆப்கான் இடையே வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது?

A) 2001 இல்

B) 2003 இல்

C) 2005 இல்

D) 2007 இல்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்திய முதலீடு சுமார் 3 பில்லியன் டாலர்கள் இருப்பதால் இந்தியர்களையும் அவர்களது முதலீட்டையும் காப்பது தலையாய கடமையாக உள்ளது. ஆப்கானுக்கு முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக பருப்புகள், மின் சாதனங்கள், பால்பொருட்கள், தேன், ரப்பர் பொருட்கள், மருந்துகள் மற்றும் இதர இயந்திர பொருள்கள் விளங்குகின்றன.மேலும் இறக்குமதி பொருள்களாக பழங்கள், உலர் பருப்பு அல்லது பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், விலை மதிப்புள்ள கற்கள் ஆகியவை உள்ளன. 2003 ஆம் ஆண்டில் இந்தியா ஆப்கானிஸ்தான் முன்னேற்றம் பொருட்டு முன்னுரிமை வாணிப ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டன.)

12) 2003 ஆம் ஆண்டு முன்னிரிமை வாணிப ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 38 பொருள்களுக்கு எத்தனை சதவீத வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது?

A) 50 சதவீதம்

B) 65 சதவீதம்

C) 75 சதவீதம்

D) 100 சதவீதம்

(குறிப்பு – 2003 ஆம் ஆண்டில் இந்தியா ஆப்கானிஸ்தான் முன்னேற்றம் பொருட்டு முன்னுரிமை வாணிப ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் சுமார் முப்பத்தி எட்டு வகை இறக்குமதி பொருள்களுக்கு 50 சதவீதத்தில் இருந்து 100 விழுக்காடு வரை வரிச்சலுகைகளை இந்தியா அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.)

13) எந்த ஆண்டு முதல் இந்தியா, ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதியாகக் கூடிய அனைத்து பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரியை நீக்கியது?

A) 2010 இல்

B) 2011 இல்

C) 2012 இல்

D) 2013 இல்

(குறிப்பு – 2011 ஆம் ஆண்டில் இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி ஆகக் கூடிய அனைத்து பொருட்களுக்கும்( மது மற்றும் புகையிலை தவிர) அடிப்படை சுங்க வரியை நீக்கியது. இதன் மூலம் மேற்கூறிய அனைத்துப் பொருட்களுமே இந்திய சந்தையில் சுலபமாக விற்பதற்கு வழிவகுத்தது. ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய சந்தையாக இந்தியா விளங்குவதை இதன் மூலம் அறிய முடியும்.)

14) கீழ்காணும் எந்த துறைமுகத்தில் இந்தியா வர்த்தகம் போக்குவரத்து மையம் ஒன்றை அமைத்துள்ளது?

A) சபாஹர்

B) பந்தர் பிஷர்

C) ஹோர்முஸ்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – ஈரானில் அமைந்திருக்கக் கூடிய சபாகர் துறைமுகத்தின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் ஏனைய மற்ற நாடுகளுக்கும் வாணிபம் எளிதாக மேற்கொள்ள வழி செய்யலாம். சமீபத்தில் சபாகர் துறைமுகத்தில் 85 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வர்த்தக போக்குவரத்து மையம் ஒன்றை அமைத்துள்ளது இது மற்றொரு மைல்கல் ஆகும்.)

15) தங்க பிறை நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளின் கூட்டமைப்பில் இல்லாத நாடு எது?

A) பாகிஸ்தான்

B) ஆப்கானிஸ்தான்

C) ஈராக்

D) ஈரான்

(குறிப்பு – தங்கப் பிறை (Golden Crescent) நாடுகள் என்பது நடு ஆசியாவின் தெற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், தெற்காசியாவின் மேற்கு உள்ள பாகிஸ்தான் மற்றும் மேற்காசியாவின் கிழக்கில் உள்ள ஈரான் நாடுகளின் பகுதிகளைக் குறிக்கும்.)

16) ஆப்கானிஸ்தானில் எந்த நகரம் தீவிரவாதிகளின் முக்கிய நகரமாக செயல்பட்டது?

A) லோயா பாக்டியா

B) காபூல்

C) கஜினி

D) சங்கார்

(குறிப்பு – ஆப்கன்-தலிபான்களையும் அவர்களின் அச்சுறுத்தல்களையும் 1990களில் இந்தியா மிகப்பெரிய சவாலாகவே பார்த்தது.பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் ராணுவம் சார்ந்த உறவுமுறைகளில் பாகிஸ்தானை பலப்படுத்தியும், இந்தியாவை செயலிழக்கவும் செய்தன. ஆப்கானிஸ்தானில் பல்வேறு தீவிரவாத குழுக்களை அதன் எல்லைப் பகுதியில் எங்கு வேண்டுமென்றாலும் செயல்பட வைத்தது பாகிஸ்தான். முக்கிய நகரமாக லோயா பாக்டியா செயல்பட்டது.)

17) ஆப்கானிஸ்தானில் இந்திய அரசின் சார்பில் செய்யப்படவுள்ள வளர்ச்சி திட்டங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. ஸ்டோர் அரண்மனையை அதே நகரத்தில் மீட்டெடுப்பது.

II. காபூலில் சிம்ட்டாலா துணை மின் நிலையம் அமைப்பது.

III. காந்தஹரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஸ்டோர் அரண்மனையை அதே நகரத்தில் மீட்டெடுப்பது, காபூலில் சிம்ட்டாலா துணை மின் நிலையம் அமைப்பது, காந்தஹரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது, சில மண்டலங்களில் குழாய்க் கிணறுகள் தோண்டுவது போன்றவைகள் ஆப்கானிஸ்தானில் இந்திய அரசின் சார்பாக செய்து கொடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகும்.இந்தியா பேருந்துகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அவசர ஊர்திகளையும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இலவசமாக கொடுத்துள்ளது.)

18) இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ராணுவம் சார்ந்த ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2007 இல்

B) 2009 இல்

C) 2011 இல்

D) 2013 இல்

(குறிப்பு – 2011ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் உடனான ராணுவம் சார்ந்த தொடர்பை ஒப்பந்தத்தின் மூலமாக உறுதி செய்த முதல் நாடு இந்தியா ஆகும். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு இந்தியா குறைந்த அளவிலேயே நட்புறவை கொண்டிருந்தது. மேலும் இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவை பாகிஸ்தானின் பாதிப்பில்லாத வகையில் மட்டுமே நோக்கியது).

19) ஆப்கானிஸ்தானின் எந்த மன்னரின் ஆட்சி காலம் இந்தியாவிற்கான நட்புறவில் சிறந்த காலமாக கருதப்பட்டது?

A) ஜாஹிர் ஷா

B) நஜிபுல்லா

C) அமானுல்லா கான்

D) சர்தார் தாவுத் கான்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் ஜாகிர் ஷாவின் ஆட்சிக்காலமாகும். ஆப்கானிஸ்தான் மன்னர் ஜாகீர் ஷாவின் ஆட்சி காலம் இந்தியாவிற்கான நட்புறவில் சிறந்த காலமாக கருதப்பட்டது)

20) ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய கனிமவளங்கள் கீழ்கண்டவற்றுள் எது?

I. பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு

II. இரும்புத்தாது, லித்தியம், குரோமியம்

III. தங்கம், யுரேனியம்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய கனிம வளங்களை இரும்புத்தாது, லித்தியம், குரோமியம், இயற்கை வாயு மற்றும் பெட்ரோலியத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 1 ட்ரில்லியன் முதல் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்திய முதலீடு சுமார் 3 பில்லியன் டாலர்கள் இருப்பதால் இந்தியர்களையும் அவர்களது முதலீட்டையும் காப்பது ஆப்கானிஸ்தானின் தலையாய கடமையாக உள்ளது.)

21) ஆப்கானிஸ்தான் எந்த ஆண்டு சோவியத் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது?

A) 1973 இல்

B) 1976 இல்

C) 1979 இல்

D) 1982 இல்

(குறிப்பு – 1979ஆம் ஆண்டு சோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்பாகவே பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாகவும் நெறிமுறைகளின் மூலமாகவும் சோவியத் ஆதரவு அரசாங்கங்களுடன் இந்தியா நட்புறவை வளர்த்து வந்துள்ளது. இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு 1979ம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை தடைபட்டிருந்தாலும் இந்தியா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்குபெற்று ஆப்கானிஸ்தானின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது)

22) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 1965 மற்றும் 1971ல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் எதிரான போர்களில் ஆப்கானிஸ்தான் தனித்து நின்று கொண்டது.

கூற்று 2 – காஷ்மீர் பிரச்சனையிலும் பொதுப்படையாக ஆப்கானிஸ்தான் இந்தியாவை ஆதரிக்க தயங்குகிறது.

கூற்று 3 – டியூரன்ட் எல்லை சர்ச்சையில் இந்தியா தனித்து நின்றது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் முத்தரப்பு நட்புறவானது பரஸ்பரம் தனித்தன்மையானது என்பதை இந்தியா உறுதி ஆக்கியது.அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அதன் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பங்கு இருந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா உணர்கிறது. ஆப்கானிஸ்தானில் மண்டல மற்றும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.)

23) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஐக்கிய நாடுகள் சபையில் ஆப்கானிஸ்தான் மீதான சர்வதேச ஒத்துழைப்புக்கும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பல்வேறு சர்வதேச மாநாடுகளுக்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது.

கூற்று 2 – ஆப்கானிஸ்தான்-இந்தியா-அமெரிக்க முத்தரப்பு மற்றும் ஆப்கானிஸ்தான்-இந்தியா-ஈரான் முத்தரப்பு போன்ற பல்வேறு பேச்சுவார்த்தை மூலம் ஆப்கானிஸ்தானில் ஒரு உரையாடலைத் தொடங்க இந்தியா உதவுகிறது. டோக்கியா மேம்பாட்டு மாநாடு 2012ஆம் ஆண்டு நடைபெற்றது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஜூன் 2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் டெல்லி முதலீட்டு உச்சி மாநாடு போன்ற முன்னோடி நிகழ்வுகளின் மூலம் அதன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான திறவுகோலை கொண்டுள்ளது என்பதை உணர்ந்து ஆசியாவின் இதயமான இந்திய எல்லைக்குள் இந்த செயல்பாட்டின் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.)

24) எந்த ஆண்டு இந்திய விமானம் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு கடத்தப்பட்டது?

A) 1997 இல்

B) 1999 இல்

C) 2001 இல்

D) 2003 இல்

(குறிப்பு – ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்காலத்தில் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814யை கடத்தி ஆப்கானிஸ்தானத்தில் கந்தஹாருக்கு கொண்டு சென்றனர்.)

25) கீழ்க்காணும் எந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு MI-25 ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது?

A) 2011 இல்

B) 2013 இல்

C) 2015 இல்

D) 2017 இல்

(குறிப்பு – 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு, MI-25 ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. தாக்குதல் பெரிய அளவில் நடத்த ஏதுவான இந்த வகை ஹெலிகாப்டர்களை பரிசாக அளித்து பாகிஸ்தானின், எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கான் போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டது.)

26) 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் போர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 70 ஆண்டுகளாக அண்டை நாடுகளாக நிலப்பரப்பு கலாச்சாரம் மதம் மொழி மற்றும் தத்துவம் போன்றவைகளை பகிர்ந்துகொள்ளும் பழங்கால நாகரிகங்கள் ஆகும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 1947 விடுதலைக்குப் பின்பு நடைபெற்ற போர்கள் மொத்தம் மூன்று ஆகும். 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக போர்களில் ஈடுபட்டன)

27) ஜம்மு காஷ்மீர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது அதன் ஆட்சியாளராக இருந்தவர் யார்?

A) ஹரி சிங்

B) ஹரி லால்

C) குலாப் சிங்

D) ரன்வீர் சிங்

(குறிப்பு – இந்திய சுதந்திர சட்டத்தின்படி எடுக்கப்பட்ட கொள்கை முடிவான பிரிவினை திட்டத்தின்படி, காஷ்மீர் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைய முழு சுதந்திரம் பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் தனி சுதந்திர நாடாக ஆசைப்பட்ட காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் அக்டோபர் 1947 ஆம் ஆண்டு பழங்குடியினரின் தாக்குதலால் இந்தியாவுடன் இணைய சம்மதித்தார்.)

28) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பழங்குடியினரால் தொடங்கிய போர் எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?

A) 1949 இல்

B) 1950 இல்

C) 1951 இல்

D) 1952 இல்

(குறிப்பு – பாகிஸ்தானை சேர்ந்த பழங்குடியினரால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முதல் போரானது 1947ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது ஆரம்பித்த போரில் இந்தியா ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டை கோரியது. இப்போர் ஜனவரி 1, 1949ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.)

29) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முதல் போர் கீழ்காணும் எந்த ஆண்டில் நடைபெற்றது?

A) 1947 இல்

B) 1965 இல்

C) 1971 இல்

D) 1979 இல்

(குறிப்பு – இந்தியா பாகிஸ்தான் இடையே ஆன முதல் 1947 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த போர் ஐநா சபையின் தலையீட்டால் 1949 ஆம் வருடம் முடிவுக்கு வந்தது. ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் படையின் ஆதரவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீருக்காக நடைபெற்ற நீண்ட போராகவும், செலவு குறைவான போராகவும் இது விளங்கியது.ஏனெனில் இருதரப்பு நாடுகளும் உபயோகப்படுத்திய துப்பாக்கி உபகரணங்கள் மிகக் குறைவானதாகும்.)

30) கீழ்காணும் எந்த ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஐக்கிய நாட்டு சபையின் பரிந்துரையை நிறைவேற்றியது?

A) 1949 இல்

B) 1950 இல்

C) 1952 இல்

D) 1953 இல்

(குறிப்பு – 1947 ஆம் ஆண்டு போரின் தொடர்ச்சியாக காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு இரு நாட்டு ராணுவமும் மதிக்கும்படியாக எல்லைக்கோடு அமைந்தது. மேலும் மூன்று பாகம் பாகிஸ்தான் எல்லையில் அமையப்பெற்றது. ஐக்கிய நாட்டு சபை கொள்கை முடிவாக பொதுவாக்கெடுப்பை சிபாரிசு செய்தது. இவ்வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதற்கு உரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கு முன்னர் இரு நாடுகளும் இராணுவம் அல்லாத பகுதியாக காஷ்மீர் இருப்பதற்கு சம்மதிக்கவில்லை. 1949 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஐக்கிய நாட்டு சபையின் பரிந்துரையை நிறைவேற்றியது.)

31) இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற எந்த ஆண்டு போர் பிரகடனம் செய்யப்பட்டு நடந்த போராகும்?

A) 1947

B) 1965

C) 1971

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – இந்தியா பாகிஸ்தான் இடையே இதுவரை மூன்று போர்கள் நடந்துள்ளன. அவை முறையே 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. இவ்வாறு நடந்த போர்களில் 1971ம் ஆண்டில் நடந்த போர் மட்டுமே முன் பிரகடனம் செய்யப்பட்டு நடந்தது. ஏனைய போர்கள் யாவுமே எல்லையில் நடந்த சிறு சர்ச்சைகளாக பாவிக்கப்படுகின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்விரு நாடுகளும் போரை நிறுத்தி அமைதிக்கு பாடுபட வேண்டும் என்ற கொள்கையை நிலை நிறுத்திக்கொண்டன)

32) இந்தியா பாகிஸ்தான் இடையே கார்கில் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1997 இல்

B) 1999 இல்

C) 2001 இல்

D) 2003 இல்

(குறிப்பு – இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு, கார்கில் போர் நடைபெற்றது. இந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அச்சமயத்தில் இவ்விரு நாடுகளும் அணு ஆயுத நாடுகளாக தங்களை பறைசாற்றிக்கொண்டன.1989ம் ஆண்டிலிருந்து பிரிவினைவாதிகள் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.)

33) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1972 இல்

B) 1973 இல்

C) 1974 இல்

D) 1975 இல்

(குறிப்பு – 1971 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரானது, 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. எல்லாம் ஒப்பந்தம் 1922 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாளன்று இமாச்சல பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவில் கையெழுத்தானது. பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்)

34) இந்தியா பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளில் சரியானது கீழ்கண்டவற்றுள் எது?

I. ஐக்கிய நாட்டு சபையின் கொள்கைகளும் நோக்கங்களும் இரு நாட்டின் உறவுகளுக்கு வழிகாட்டியாக அமைதல்.

II. இரு நாடுகளின் தேசிய ஒருமைப்பாடு இலைப்பரப்பு அரசியல் சுதந்திரம் இறையாண்மை சமத்துவம் போன்றவைகளை மதித்தல். .

III. ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு இரண்டு மாதங்களுக்குள் படைகளை திரும்பப் பெறுதல்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள் ஆவன, இரு நாடு தொடர்பான சர்ச்சைகளும் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் உடன்படிக்கை மூலம் தீர்வு கொண்டுவருதல், ஐக்கிய நாட்டு சபையின் கொள்கைகளும் நோக்கங்களும் இரு நாட்டின் உறவுகளுக்கு வழிகாட்டியாக அமைதல், இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு 30 நாட்களுக்குள் படைகளைத் திரும்பப் பெறுதல், இரு நாடுகளின் தேசிய ஒருமைப்பாடு, நிலபரப்பு, அரசியல், சுதந்திரம் இ, றையாண்மை, சமத்துவம் போன்றவைகளை மதித்தல் போன்றவைகள் ஆகும்)

35) ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசமைப்பின் உறுப்பு 370, கீழ்காணும் எந்த நாளில் திரும்பப் பெறப்பட்டது?

A) ஆகஸ்ட் 1, 2019

B) ஆகஸ்ட் 5, 2019

C) ஆகஸ்ட் 10, 2019

D) ஆகஸ்ட் 15, 2019

(குறிப்பு – 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் நாள் அன்று இந்திய குடியரசு தலைவர் உறுப்பு 370(1)க்கு ஒப்புதல் அளித்தார். இதன்படி உறுப்பு 370 இன் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் விதி 370(1)ன் கீழே சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இந்தத் திட்டங்களின் கீழ் இந்திய அரசமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்துமாறு மாற்றப்பட்டுள்ளது.)

36) உலகின் மிகவும் உயரமான போர்க் களம் எது?

A) சியாச்சின் போர்க்களம்

B) ஆல்ப்ஸ் போர்க்களம்

C) கார்கில் போர்க்களம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – 1984 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பாகிஸ்தான் போர் படைகள் உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனி மலையில் தங்களது எல்லைகளை பாதுகாத்து அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும் நிலையில் இதுவரை ஏமாற்றமே மிஞ்சுகிறது.சியாச்சின் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் (35.421226°N 77.109540°E) உள்ளது. இது இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு முடியும் என்.ஜெ.9842 என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது)

37) இந்தியாவின் துல்லிய தாக்குதல் முறையின் அம்சங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. இவ்வகை தாக்குதல் குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களை குறி வைப்பதாகும்.

II. குடிமை பகுதிகளுக்கு குறைந்த சேதாரத்தை அளிப்பது

III. குறைந்த அல்லது மனித சேதமில்லாத தாக்குதல்கள் நடத்துவது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பாகிஸ்தானின் அடுக்கடுக்கான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் குறைந்த பாதிப்புள்ள செயல்முறை திட்டமே “துல்லிய தாக்குதல்” என அழைக்கப்படுகிறது. இந்த வகை தாக்குதலின் அம்சங்களாவன, இவ்வகை தாக்குதல் குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களை குறி வைத்தல், குடிமை பகுதிகளுக்கு குறைந்த சேதாரத்தை அளித்தல், குறைந்த அல்லது மனித சேதமில்லாத தாக்குதல்கள் நடத்துதல் போன்றவை ஆகும்.)

38) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

A) 1952 இல்

B) 1956 இல்

C) 1960 இல்

D) 1964 இல்

(குறிப்பு – காஷ்மீரில் இருந்து உருவாகும் ஆறுகள் பாகிஸ்தானின் சிந்து நதி ஆற்றுப்படுகைகள் செல்லும் பட்சத்தில் நீர் பகிர்வில் கருத்து ஒற்றுமையின்மை எழுகிறது. 1960 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிந்துநதிநீர் உடன்படிக்கையின்படி, மூன்று கிழக்கு ஆறுகளில் இருந்து வரும் நீர் இந்தியாவிற்கும், மேற்கு ஆறுகள் மூன்றிலிருந்து இருந்து வரக்கூடிய நீர் பாகிஸ்தானுக்கும் உபயோகப்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சிந்து நதி நீர் உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது)

39) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சர்ச்சையிலுள்ள சர் கிரிக் பாதை என்பது?

A) நீர் பாதை

B) நில பாதை

C) வான்வெளி பாதை

D) மலைபாதை

(குறிப்பு – சர் கிரீக் பாதை என்பது ஒரு குறுகிய நீர் பாதை ஆகும். எனினும் இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஆன, பொருளாதாரத்துவ பாதையாகவும் முக்கிய சர்ச்சையாகவும் பார்க்கப்படுகிறது.1908ஆம் ஆண்டு கிரிக் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக கட்ச் பகுதியின் ராவ் ஆட்சியாளர்களுக்கும், சிந்து ஆட்சியாளர்களுக்கும் இடையே இந்த பிரச்சனை துவங்கியது. அது இன்று வரை தொடர்கிறது)

40) சர் கிரிக் தொடர்பான பிரச்சனையில் மும்பை அரசாங்கத்தின் தீர்மான வரைபடமானது எந்த ஆண்டு வெளியானது?

A) 1911 இல்

B) 1912 இல்

C) 1913 இல்

D) 1914 இல்

(குறிப்பு – 1908ஆம் ஆண்டு கிரிக் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக கட்ச் பகுதியின் ராவ் ஆட்சியாளர்களுக்கும், சிந்து ஆட்சியாளர்களுக்கும் இடையே இந்த பிரச்சனை துவங்கியது.1914ஆம் ஆண்டு மும்பை அரசாங்கத்தின் தீர்மான வரைபடமானது, கிரிக் பகுதியின் கிழக்கு கடற்கரை பகுதியை எல்லையாக வைத்தது. ஆனால் அந்த தீர்மானத்தின் பத்தாவது பத்தியானது கால்வாயின் நடுப்பகுதி அதன் எல்லை என்கிறது. இந்தப் பகுதிகள் முழுவதும் மும்பை மாகாணத்தின் அதிகார வரம்பிற்குள் வருபவைகள் ஆகும்)

41) சர் கிரிக் பகுதியின் உண்மையான பெயர் என்ன?

A) கன்வா

B) பான்கங்கா

C) கிரிக் கங்கா

D) எல்லாமே தவறு

(குறிப்பு – காஷ்மீர் மற்றும் சியாச்சின் மட்டுமல்லாது சிலபல முக்கிய பிரச்சனைகளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சுற்றி வலம் வருகின்றன. 70 ஆண்டுகளாக சர் கிரீக் பிரச்சனை தீர்வின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சர் கிரீக் என்பது 96 கிலோ மீட்டர் நீர் பிரச்சினையாக கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் பான்கங்கா ஆகும். பிரிட்டிஷ் பிரதிநிதி சர் கிரீக் என்பவருக்குபின் அவர் பெயர் மாற்றம் ஆகியுள்ளது)

42) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சுதந்திரத்திற்கு முன்பு சர் கிரிக் என்னும் இடம் மும்பை மாகாணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

கூற்று 2 – சுதந்திரத்திற்குப் பின்பு கட்ச் இந்தியாவின் பகுதியாகவும், சிந்து பாகிஸ்தானின் மாகாணமாகவும் பிரிந்தது.

கூற்று 3 – சர் கிரீக் நீர்நிலையில் இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்து உள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சுதந்திரத்திற்கு முன்பு சர் கிரிக் என்னும் இடம் மும்பை மாகாணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.சுதந்திரத்திற்குப் பின்பு கட்ச் இந்தியாவின் பகுதியாகவும், சிந்து பாகிஸ்தானின் மாகாணமாகவும் பிரிந்தது. இடம் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனை மட்டுமல்லாது இந்த இடம் மீன் வளம் அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது மட்டுமல்லாது சர் கிரீக் நீர்நிலையில் இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்து உள்ளது. எனவே இந்த இரு நாடுகளும் தீர்வு காணமுடியாமல் முடிவில்லாத பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.)

43) கீழ்க்காணும் எந்த காலகட்டத்தில் சர்கிரிக் இப்பகுதியில் இரண்டு சுற்று கூட்டுறவு எல்லை அளவீடானது மேற்கொள்ளப்பட்டது?

A) 2003-2005

B) 2005-2007

C) 2007-2009

D) 2009-2011

(குறிப்பு – 1997ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இணக்கமான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் கிரிக் பகுதியை குறித்த சிக்கல் தீர்மானமும் அடங்கும்.2005 முதல் 2007ஆம் ஆண்டில் சர்கிரிக் பகுதியில் இரண்டு சுற்று கூட்டுறவு எல்லை அளவீடானது இந்தியா பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை குழுவால் மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நான்காவது இணக்கப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் கூட்டாக அளவீடு செய்ய ஒத்துக் கொண்டது.).

44) இந்தியாவில் பாக் கிளர்ச்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை பொருத்துக.

I. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தாக்குதல் – a) 2019

II. மும்பை தாக்குதல் – b) 2008

III. யூரி தாக்குதல் – c) 2001

IV. புல்வாமா தாக்குதல் – d) 2016

A) I-c, II-b, III-d, IV-a

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-a, III-b, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் நாள், ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் அருகே கார் குண்டு வெடித்ததில் 22நபர்கள் உயிரிழந்தனர். நவம்பர் 2008 ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பாவின் தாக்குதலால் மும்பையில் 12 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள யூரி என்னும் இடத்தில் நடந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 38 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் படுகொலை செய்யப்பட்டனர்)

45) 2019ஆம் ஆண்டு, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்லாமிய தீவிரவாத குழு எது?

A) லஷ்கர் இ தொய்பா

B) அல்-கொய்தா

C) ஜெய்ஷ்-இ-முகமது

D) ஹர்கத்-வுல்-முஜாகிதீன்

(குறிப்பு – 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவப்படை வாகனங்கள் தற்கொலை தீவிரவாத வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே 38 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் படுகொலை செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தில் பயங்கரவாதி கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ் – இ – முகமது இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்றது)

46) கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது?

A) 1947 – இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் போர்.

B) 1954 – ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்புதல்

C) 1964 – இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது போர்

D) 1962 – இந்திய-சீனப் போர்

(குறிப்பு – 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதன் பின்னர் பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆரம்பித்த தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1947 ஆம் ஆண்டு முதல் போர் வெடித்தது. 1954 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைவதற்கு உண்டான ஒப்புதல் மாநில சாசன சட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வெடித்தது. இதன் பின்னர் 1965 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இரண்டாவது போர் நிகழ்ந்தது.)

47) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாஷ்கண்ட் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1965 இல்

B) 1966 இல்

C) 1967 இல்

D) 1968 இல்

(குறிப்பு – 1965 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஆன இரண்டாவது போரின் முடிவில், தாஷ்கண்ட் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1966 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாள், இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை மீட்பதற்கு உறுதி கொண்டனர்.)

48) ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எந்த ஆண்டு கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டன?

A) 1990 இல்

B) 1991 இல்

C) 1992 இல்

D) 1993 இல்

(குறிப்பு – 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது அணு ஆயுத தளங்களை தாக்காமல் இருப்பதற்கு உறுதி எடுத்துக்கொண்டன. 1989ஆம் ஆண்டு காஷ்மீரில் ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கின. 1992ஆம் ஆண்டு இரு நாடுகளும் ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன)

49) இந்தியா எந்த ஆண்டு பொக்ரானில் 5 அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டது?

A) 1997 இல்

B) 1998 இல்

C) 1999 இல்

D) 2000 இல்

(குறிப்பு – 1998 ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா 5 அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் தனது சாகை குன்றுகளில் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் லாகூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.)

50) பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் எந்த ஆண்டு இந்தியா துல்லிய தாக்குதலை மேற்கொண்டது?

A) 2015 ஆம் ஆண்டு

B) 2016 ஆம் ஆண்டு

C) 2017 ஆம் ஆண்டு

D) 2018 ஆம் ஆண்டு

(குறிப்பு – 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் குடிமகனாக கசாப் தூக்கிலிடப்பட்டார். மும்பை தாக்குதல் தீவிரவாதியான இவர் சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 2016ம் ஆண்டு பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் செப்டம்பர் மாதம் இந்தியாவின் சார்பில் துல்லிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.)

51) வங்கதேசத்தின் தேசிய கீதம் கீழ்க்கண்டவற்றில் யாரால் எழுதப்பட்டது?

A) ரவீந்திரநாத் தாகூர்

B) பக்கிம் சந்திர சட்டர்ஜி

C) உமேஷ் சந்திர பானர்ஜி

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – வங்கதேசத்துடன் வரலாற்று ரீதியான உறவு முறைக்கு அடித்தளமாக 1947 க்கு முன்பாக அமைந்த இந்தியாவின் நிலப்பரப்பில் பார்க்கலாம். இருநாட்டு மக்களின் கலாச்சாரம் மதம் மற்றும் மொழி ஆகியவை இடையே பல்வேறு ஒற்றுமைகளைக் காண முடியும். இந்த இரு நாடுகளின் தேசிய கீதமும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டதாகும்.வங்கதேசத்தின் உருவாக்கம் இந்தியாவின் மூலமாக என்பது தெற்காசிய நாடுகளின் மைல்கல் சாதனை ஆகும்.)

52) கீழ்க்காணும் எந்த ஆண்டில் வங்கதேசம் சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது?

A) 1970 இல்

B) 1971 இல்

C) 1972 இல்

D) 1973 இல்

(குறிப்பு – 1970 ஆம் ஆண்டு பாகிஸ்தானிய தேசிய தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றது ஆனால் மேற்கு பாகிஸ்தான் அந்த வெற்றியை அங்கீகரிக்காமல் அவாமி லீக் கட்சியினரை மிகவும் மோசமான அணுகுமுறையில் அடக்கியது. இந்த நிலைமை கிட்டத்தட்ட போர்க்களம் போன்ற சூழ்நிலையில் கிழக்கு பாகிஸ்தானில் உருவாக்கி “முக்தி வாஹினி” என்ற சுதந்திர இயக்க குழு உருவாக வழிவகுத்தது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசம் சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது.)

53) கீழ்காணும் எந்த ஆண்டு ஷேக் முஜிபூர் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி ஏற்றார்?

A) 1971 இல்

B) 1972 இல்

C) 1973 இல்

D) 1974 இல்

(குறிப்பு – 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதியநாடாக வங்கதேசம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியாவிற்கு அண்டை நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கு நிர்ப்பந்தமாக மாறியது. ஜனவரி மாதம் 1972 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரகுமான் பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்திய வங்கதேச உறவுகளில் பொற்காலமாக விளங்கியது. இந்தியா வங்கதேசம் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.)

54) பராக்கா தடுப்பணை குறித்து எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

A) பாகிஸ்தான்

B) வங்கதேசம்

C) நேபாளம்

D) மியான்மர்

(குறிப்பு – பல்வேறுபட்ட இந்தியா வங்கதேச உறவுகளின் பிரச்சனைகளில் மேற்கு வங்காளத்தில் உள்ள பராக்கா அணை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அணை வங்கதேசத்திலிருந்து 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஹூக்ளி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு, அதில் வண்டல் மண் தேங்காமல் இருப்பதற்கும், பராக்கா தடுப்பணை உபயோகமாக உள்ளது.)

55) கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலம் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்வதில்லை

A) மேகாலயா

B) மிசோராம்

C) அருணாச்சலப் பிரதேசம்

D) அசாம்

(குறிப்பு – இந்தியாவின் மாநிலங்களான மேற்கு வங்காளம், மேகாலயா, மிசோரம், அசாம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் வங்கதேசத்துடன் 4096 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.)

56) இந்தியா மற்றும் வங்கதேச எல்லைகளினிடையே எத்தனை ஆறுகள் அமைந்துள்ளது?

A) 50 ஆறுகள்

B) 52 ஆறுகள்

C) 54 ஆறுகள்

D) 56 ஆறுகள்

(குறிப்பு – இந்தியா வங்கதேசம் எல்லைக்கோடானது 2979 கிலோ மீட்டர் நீளத்தையும் 1,116 கிலோ மீட்டர் ஆற்று வழியையும் உள்ளடக்கியது ஆகும். இந்த எல்லை 54 ஆறுகளையும் உள்ளடக்கியது. பிரம்மபுத்திரா உள்பட இந்தியாவின் மேற்கு வங்காளம், மிசோராம், மேகாலயா, அசாம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் வங்கதேசத்துடன் 4096 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து காணப்படுகின்றன.)

57) டீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் கீழ்க்காணும் எந்த நாட்டுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது?

A) வங்கதேசம்

B) மியான்மர்

C) சீனா

D) பாகிஸ்தான்

(குறிப்பு – டீஸ்டா, காங்சே பனிப்பாறையில் இருந்து கிட்டத்தட்ட 7068மீட்டர் உயரத்தில் கிழக்கை நோக்கி சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்திற்கு பாயக்கூடியதாக உள்ளது. இந்த நதியானது வங்கதேசத்திற்கு நுழையும் போது பிரம்மபுத்திரா நதியோடு கலந்து பின் வங்காளவிரிகுடாவில் முடிகிறது.)

58) வங்கதேசத்தில் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாகாணம் எது?

A) டாக்கா

B) ராக்பூர்

C) சந்த்பூர்

D) நகர்ப்பூர்

குறிப்பு – டீஸ்டா நதியின் குறுக்கே 1979-ம் ஆண்டு மேற்கு வங்காள அரசு தடுப்பணையை கட்டியது. இதற்கு எதிர்ப்பாக வங்கதேச அரசு அந்த நாட்டின் நெற்களஞ்சியமான ராக்பூர் மாகாணம் பாதிப்பதாக வாதிட்டது.)

59) டீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1981 இல்

B) 1983 இல்

C) 1985 இல்

D) 1987 இல்

(குறிப்பு – டீஸ்டா நதியின் குறுக்கே 1979-ம் ஆண்டு மேற்கு வங்காள அரசு தடுப்பணையை கட்டியது. இதற்கு எதிர்ப்பாக வங்கதேச அரசு அந்த நாட்டின் நெற்களஞ்சியமான ராக்பூர் மாகாணம் பாதிப்பதாக வாதிட்டது. 1983 ஆம் ஆண்டு டீஸ்டா நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்தியா வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் வங்கதேசத்துக்கு தேவையான நீரை இந்தியாவால் வழங்கிட முடியவில்லை.)

60) நியூ மூர் தீவு எங்கு அமைந்துள்ளது?

A) வங்காள விரிகுடா

B) பாக் வளைகுடா

C) அரபிக்கடல்

D) மாலத்தீவு

(குறிப்பு – நியூ மூர் தீவு அல்லது தென் தளபதி என்பது வங்காள விரிகுடாவில் இருக்கும் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவாகும். இந்த தீவு கங்கை மற்றும் பிரமபுத்திரா டெல்டாவில் அமைந்துள்ளது. 1970ஆம் ஆண்டில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான புயலால் இந்த தீவு உண்டானது. இந்தியா வங்கதேசம் இடையே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த தீவு பிரச்சனைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது)

61) வங்காள விரிகுடாவில் 19,467 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வங்கதேசத்திற்கு உரியதாக நிரந்தர நடுவர்மன்ற நீதிமன்றத்தால் எந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது?

A) 2011 ஆம் ஆண்டு

B) 2012 ஆம் ஆண்டு

C) 2013 ஆம் ஆண்டு

D) 2014 ஆம் ஆண்டு

(குறிப்பு – நியூ மூர் தீவு கடல் மட்டம் அதிகரிக்கும் போது காணாமல் போவதும் நீர்மட்டம் குறையும் போது தெரிவதும் வழக்கமாக காணப்படுகிறது. இந்த தீவில் நிரந்தர குடியேற்றங்கள் அல்லது நிலையங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதை பற்றிய ஊகங்கள் இந்தியாவும் வங்கதேசமும் அந்த நிலத்தின் மீது உரிமை கோருகின்றன. 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்ட நிரந்தர நடுவர் மன்ற நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வங்காள விரிகுடாவில் உள்ள 19 ஆயிரத்து 468 சதுரகிலோமீட்டர் வங்கதேசத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது.நியூ மூர் தீவு இந்தியாவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.)

62) வங்கதேசத்தை சார்ந்த சக்மா அகதிகள் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்?

A) மிசோராம்

B) அசாம்

C) அருணாச்சலப் பிரதேசம்

D) மேற்கு வங்காளம்

(குறிப்பு – சிட்டகாங் மலை குன்றுகளில் வாழும் சக்மா மற்றும் ஹஜாங் குழுமங்கள் 1964 மற்றும் 1965 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.கர்னாபுவி ஆற்றின் குறுக்கே கப்தாய் அணை கட்டும் போது மேற்கூறிய அவர்கள் தங்களின் பூர்வகுடி பகுதிகளை இழந்து அகதிகளாக மாறினார்கள். இம்மக்களுக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய அரசாங்கம் முகாம்களை உருவாக்கி இடம் தந்தது.)

63) இந்தியா மற்றும் வங்கதேச எல்லை நடுவே மொத்தம் எத்தனை உறைவிடங்கள் காணப்படுகின்றன?

A) 150 உறைவிடங்கள்

B) 155 உறைவிடங்கள்

C) 160 உறைவிடங்கள்

D) 162 உறைவிடங்கள்

(குறிப்பு – இந்தியாவும் வங்கதேசமும் 4096கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த எல்லையானது மொத்தம் ஐந்து மாநிலங்கள் வழியே அமைந்துள்ளது.அவை மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகும். இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் மொத்தம் 162 உறைவிடங்கள் காணப்படுகின்றன. பல்வேறு பேச்சுவார்த்தைகளின் மூலம் 50 உறைவிடங்கள் இந்தியாவிற்கும் 111 உறைவிடங்கள் வங்கதேசத்திற்கு பிரிக்கப்பட்டுள்ளது.)

64) வங்கதேசம் எந்த ஆண்டு “ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு ” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது?

A) 2012 இல்

B) 2014 இல்

C) 2016 இல்

D) 2018 இல்

(குறிப்பு – ஆசிய புவி அரசியலில் தற்போதைய முக்கிய அம்சமாக போக்குவரத்து இணைப்பு பாதையும் முக்கிய பங்கு வகிக்கின்றன 2016 ஆம் ஆண்டு சீன குடியரசு தலைவர் ஜி ஜின்பிங் பங்களாதேஷுக்கு வருகை புரிந்த போது அந்த நாடு “ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு ” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.)

65) இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது?

A) 15 சதவீதம்

B) 17 சதவீதம்

C) 19 சதவீதம்

D) 21 சதவீதம்

(குறிப்பு – இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே வர்த்தகம் நிதானமாக உயர் நிலையை நோக்கி எட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக இது 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் டாக்காவிற்கும் கொல்கத்தாவிற்கு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன)

66) 2013ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்திற்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் அனுப்பப்படுகிறது?

A) 400 மெகாவாட்

B) 500 மெகாவாட்

C) 600 மெகாவாட்

D) 700 மெகாவாட்

(குறிப்பு – இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் மின்னாற்றல் பகிர்வு நேர்மையாகவும், வலிமையாகவும் இருந்துவரும் நிலையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து வங்கதேசத்திற்கு 160 மெகாவாட் மற்றும் 2013-ம் ஆண்டிலிருந்து மேற்கு வங்காளத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து வங்கதேசத்திற்கு அனுப்பப்படுகிறது.)

67) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியா வங்கதேசம் இடையே இராணுவ உடன்படிக்கை என்பது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட நாளைய கனவாகவே இருந்து வருகிறது.

கூற்று 2 – ராணுவ உடன்படிக்கை என்பது தகவல் பரிமாற்றம், கூட்டுப்பயிற்சி, பாதுகாப்பு வலிமைப்படுத்துதல் இவையாவும் உள்ளடக்கமாகும்.

கூற்று 3 – இந்தியா உடனான பாதுகாப்பு உறவு உறுதியாக வங்கதேசத்திற்கு உலக அரங்கில் நன்மையை ஏற்படுத்தும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியா உடனான பாதுகாப்பு உறவு உறுதியாக வங்கதேசத்திற்கு உலக அரங்கில் நன்மையை ஏற்படுத்தும். அதேபோல் இந்தியாவிற்கு வங்கதேசம் உடனான வலிமையான ராணுவ நட்புறவே, கிழக்கு துணைக்கண்டத்தில் அமைதியையும் வளத்தையும் ஏற்படுத்தும். ராணுவ நட்புறவின் அடித்தளமாக சமஇறையாண்மையும் புவிப்பரப்பு உண்மை நிலவரமும் இருக்கும்பட்சத்தில் தொலைதூர வலிமையான நட்புறவாக மாறுவதற்கு வாய்ப்பு இரு நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது.)

68) இந்தியாவுடனான உறவு கீழ்க்காணும் எந்த நாட்டுடன் 3T – க்களில் அமைந்துள்ளது?

A) வங்கதேசம்

B) பாகிஸ்தான்

C) மியான்மர்

D) பூடான்

(குறிப்பு – இந்தியா வங்கதேசம் உறவுகள் 3T-க்களில் அமைந்துள்ளதாக காணப்படுகிறது.1) தீவிரவாதத்தை சமாளித்தல், 2) வாணிபம் மற்றும் போக்குவரத்து, 3) டீஸ்டா ஒப்பந்தம். புதுடெல்லி மற்றும் டாக்கா இடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையும் அரசியல் ஆறுதலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனைகளை தீர்த்து உறவை முன்னெடுத்து கொண்டு செல்லும் என நம்பலாம். இந்தியாவின் வட கிழக்கு பகுதிக்கு இது அவசியமாகிறது.)

69) சீனா கீழ்காணும் எந்த ஆண்டில் கம்யூனிச நாடாக மாறியது?

A) 1947 முதல்

B) 1949 முதல்

C) 1951 முதல்

D) 1953 முதல்

(குறிப்பு – நவீன வரலாற்று பின்னணி கொண்ட இந்தியா-சீனா உறவுகள் சீனா 1949 ஆம் ஆண்டில் கம்யூனிச நாடாக மாறியதிலிருந்து தொடங்குகிறது. கலாச்சார பட்டு சாலை முன்னெடுப்பு நெருங்கிய பொருளாதார உறவுகளை கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும்.)

70) கீழ்காணும் எந்த ஆண்டில் சீனா ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது?

A) 1950 ஆம் ஆண்டு

B) 1951 ஆம் ஆண்டு

C) 1952 ஆம் ஆண்டு

D) 1953 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1985 ஆம் ஆண்டு சீனா ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது இந்தியா அதனை சந்தேகத்துடன் பார்த்த போது ஆரம்பகால நல்லுறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்தியரும் சீனரும் சகோதரர்கள் என்ற அங்கீகாரம் இந்தியாவின் அச்சத்தை சிறிதளவு போக்கியது இந்த எல்லா முன்னேற்றங்களும் 1962 ஆம் ஆண்டு சீனப் போரின் மூலம் தொலைந்து போயின.)

71) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – புத்த மார்க்கமானது நூல் வடிவத்திலும், பண்பாட்டு வடிவத்திலும் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்றது.

கூற்று 2 – பாஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் இந்தியாவை ஆய்வு செய்ய வந்த புகழ்பெற்ற சீன பயணிகள் ஆவர்.

கூற்று 3 – இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போர் 1963இல் நடைபெற்றது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டும் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நாகரீக ரீதியான சக்திகளாகும். புத்த மார்க்கமானது நூல் வடிவத்திலும், பண்பாட்டு வடிவத்திலும் இந்தியாவிலிருந்து சீனா சென்றது.பாஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் இந்தியாவை ஆய்வு செய்ய வந்த புகழ்பெற்ற சீன பயணிகள் ஆவர்.)

72) இந்தியா மற்றும் சீனா ஏறத்தாழ எத்தனை கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

A) 4056 கிலோமீட்டர்

B) 4230 கிலோமீட்டர்

C) 4350 கிலோமீட்டர்

D) 4630 கிலோமீட்டர்

(குறிப்பு – இந்தியா மற்றும் சீனா ஏறத்தாழ 4056 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கிழக்கு பூடான் உடனான எல்லை, உத்தரப்பிரதேசம் பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசங்களுடனான மைய எல்லை, ஜம்மு காஷ்மீர் பகுதிகளான சின்கியாங் மற்றும் திபெத் எல்லை பகுதிகள் போன்றவையாகும்.)

73) மெக்மோகன் கோடு கீழ்காணும் எந்த நாட்டின் உடனான எல்லையாக இந்தியாவால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது?

A) சீனா

B) பாகிஸ்தான்

C) ஆப்கானிஸ்தான்

D) வங்கதேசம்

(குறிப்பு – இந்திய சீன எல்லை ஆனது மெக்மோகன் கோடு (McMohon) என்ற எண்ணைக் கூட்டினால் பிரிக்கப்பட்டுள்ளது.இந்த பெயர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்தியாவிற்கான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி மெக்மோகன் என்பவர் நினைவாக வைக்கப்பட்டது.)

74) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீழ்க்காணும் எந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது?

A) 1914 இல்

B) 1916 இல்

C) 1918 இல்

D) 1920 இல்

(குறிப்பு – இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைவரையறையானது 1914 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்பட்டது. இந்த எல்லைக்கோடானது, வடக்கே திபெத் பீடபூமி மற்றும் தெற்கே இந்திய குன்றுகள் ஆகியவற்றுக்கு இடையே ஊடுருவிச் செல்லும் இயற்கையான எல்லைக்கோடு என்பதை கருத்தில் கொண்டு வரையப்பட்டதாகும்.)

75) கீழ்காணும் எந்த ஆண்டு சீனா திபெத்தை சீனாவுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது?

A) 1950 ஆம் ஆண்டு

B) 1952 ஆம் ஆண்டு

C) 1954 ஆம் ஆண்டு

D) 1956 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்திய சீன எல்லை பிரச்சனை ஒரு நூற்றாண்டு காலம் உடையதாக இருக்கிறது. அதன் உடனடி காரணம் 1950ம் ஆண்டு சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது ஆகும். சீனா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கான காரணம் வரலாற்று அடிப்படையிலான இணைப்பு மற்றும் முதன்மையானதாக, ராணுவம் சார்ந்த கணக்கீட்டின் அடிப்படையில்(Strategic calculation) எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிகிறது)

76) 1962ஆம் ஆண்டு சீனா இந்தியாவில் எந்த இடங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது?

I. லடாக்

II. அருணாச்சல பிரதேசம்

III. அசாம்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் நாள் சீனா லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தப் போரானது 31 நாட்கள் மட்டுமே நீடித்தது. இருந்த போதிலும் இந்தியாவின் மீது நீண்டகாலம் இருக்கும்படியான அவமானத்தை ஏற்படுத்தியது.)

77) கீழ்க்காணும் எந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அமைதியாக இணைந்திருப்பது என்ற ஐந்து கோட்பாடுகளைக் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தானது?

A) 1952 இல்

B) 1954 இல்

C) 1956 இல்

D) 1958 இல்

(குறிப்பு – சீனா திபெத்தை ஆக்கிரமிக்கும் என்று அறிவித்தவுடன் இந்தியா, நடக்க இருக்கும் திபெத் சிக்கல் பற்றி பேச்சுவார்த்தை குறித்த எதிர்ப்பு கடிதம் ஒன்றை அனுப்பியது. மேலும் சீனா இன்னும் அதிக படைகளை அக்ஷாய்சின் எல்லையில் மிகவும் மூர்க்கமாக குவித்தது. 1954 ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் அமைதியாக இணைந்திருப்பது என்ற ஐந்து கோட்பாடுகளைக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த விதிகளின் அடிப்படையில் திபெத்தில் சீனாவின் ஆட்சியை இந்தியா ஒத்துக்கொண்டது.)

78) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமர் யார்?

A) ஜீ ஜின்பிங்

B) சூ-யென்-லாய்

C) லீ-கெகியாங்

D) மாசோதுங்

(குறிப்பு – ஜூலை மாதம் 1954 ஆம் ஆண்டில் நேரு இந்திய வரைபடத்தில் திருத்தம் செய்வது குறித்து எல்லைப்பகுதிகளில் தீர்க்கமான எல்லைகளை கேட்டு ஒரு நினைவூட்டும் கடிதத்தை எழுதி இருந்தார். எனினும் கிட்டதட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இந்திய எல்லை வரைப்படத்தில் பிழை இருப்பதாக சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமரான சூ-யென்-லாய் பதிலளித்தார்)

79) கீழ்காணும் எந்த ஆண்டு தலாய்லாமா அடைக்கலம் கேட்டு இந்தியா வந்தார்?

A) 1959 ஆம் ஆண்டு

B) 1961 ஆம் ஆண்டு

C) 1963 ஆம் ஆண்டு

D) 1965 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1959 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தலாய்லாமா சீனாவில் இருந்து தப்பி ஓடியதால் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்ததை சீன மக்கள் குடியரசு தலைவர், மாசோதுங் அவமானபடுத்தப்பட்டதாக கருதினார்.திபெத்தில் உள்ள லாசா கிளர்ச்சிக்கு இந்தியாதான் காரணம் என்று மாவோ கூறினார். இது இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரிக்க வழிவகுத்தது)

80) இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான போர் நிறுத்தம் கீழ்காணும் எந்தநாளில் அறிவிக்கப்பட்டது?

A) 1962ஆம் ஆண்டு, நவம்பர் 13 அன்று

B) 1962ஆம் ஆண்டு, நவம்பர் 15 அன்று

C) 1962ஆம் ஆண்டு, நவம்பர் 17 அன்று

D) 1962ஆம் ஆண்டு, நவம்பர் 19 அன்று

(குறிப்பு – 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் நாள் பகுதியில் சீன மக்கள் விடுதலைப்படை படையெடுத்தது. இந்தப் போர் 2000 உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவின் சார்பாக அமெரிக்கா தலையிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக இரு தரப்பும் 1962 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் போர் நிறுத்தத்தை முறையாக அறிவித்தன. சீனா தற்ச்சமயம் வைத்துள்ள மெக்மோகன் எல்லையில் வடக்கு பகுதியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது.)

81) கீழ்க்காணும் எந்த ஆண்டு இந்திய சீன எல்லைப் பகுதிகளின்மீது பிரதமர் நரசிம்மராவ் சீன பயணத்தின்போது உடன்படிக்கை கையெழுத்தானது?

A) 1991 இல்

B) 1993 இல்

C) 1995 இல்

D) 1997 இல்

(குறிப்பு – 1962 ஆம் ஆண்டு இந்திய சீன போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க அணிசேரா நாடுகளின் கொழும்பு மாநாடு நடத்தப்பட்டது. இந்தப் போரின் விளைவாக இந்திய சீனாவிற்கு இடையே ஒரு புதிய எல்லைக்கோடு தோன்றியது அது உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு (Line of Control) என்று அழைக்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு உண்மையான எல்லைக்கோடு நெடுகிலும் அமைதியையும் சமாதானத்தையும் பராமரிக்க இந்திய சீன எல்லைப் பகுதிகளில் மீது பிரதமர் நரசிம்மராவ் சீன பயணத்தின்போது ஒரு உடன்படிக்கை கையெழுத்தானது.)

82) 1962ஆம் ஆண்டு, டிசம்பர் 10 அன்று நடந்த கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?

A) ஐந்து நாடுகள்

B) ஆறு நாடுகள்

C) ஏழு நாடுகள்

D) எட்டு நாடுகள்

(குறிப்பு – இந்திய சீனா இடையே தொடரும் போர் பற்றி பேசுவது தொடர்பாக சிறிமாவோ பண்டாரா நாயக்கா கூட்டிய கூட்டம் தான் கொழும்பு மாநாடு என்பது ஆகும். இது பர்மா, இலங்கை, கம்போடியா, எகிப்து, கானா மற்றும் இந்தோனேசியா நாட்டு தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக கொண்டுவந்து இரண்டு நாடும் ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களை தீர்க்க ஏற்பாடு செய்தது.)

83) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை காணும் எந்த ஆண்டு முதல் தொடங்கியது?

A) 1980 ஆம் ஆண்டு முதல்

B) 1982 ஆம் ஆண்டு முதல்

C) 1984 ஆம் ஆண்டுமுதல்

D) 1986 ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – 1980 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து நெருக்கமான இருதரப்பு பொருளாதார உறவுகள் இந்திய சீனாவிற்கு இடையே ஆரம்பம் ஆனது. இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் துவக்கி வைத்த பேச்சு வார்த்தை செயல்முறை பொதுவான வர்த்தக நலன்களை பற்றி கண்டறிய உதவியாக இருந்தது. இந்தியாவும் சீனாவும் 1984 ஆம் ஆண்டு ஒரு வர்த்தக உடன்படிக்கையை எட்டின. இது அவைகளுக்கு இடையே மிகவும் சாதகமான தேசம் என்ற தகுதியை அளித்தது.)

84) இந்தியா மற்றும் சீனா இடையே முழு அளவிலான வர்த்தக உறவு எந்த ஆண்டு முதல் ஏற்பட்டது?

A) 1992 முதல்

B) 1994 முதல்

C) 1996 முதல்

D) 1998 முதல்

(குறிப்பு – 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் சீனா முழு அளவிலான வர்த்தக உறவில் ஈடுபட்டு வருகிறது இந்திய சீன வர்த்தகம் 2016ஆம் ஆண்டு, 71.18பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 11.748 பில்லியன் டாலராக இருந்த போது சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதியானது, 59.428 பில்லியன் டாலராக இருந்தது.)

85) சீனப் பொருட்கள் ஏற்றுமதியாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

A) 7வது இடம்

B) 8வது இடம்

C) 9வது இடம்

D) 10வது இடம்

(குறிப்பு – சீனப் பொருள்கள் ஏற்றுமதி ஆவதற்கு இந்தியா 7 ஆவது மிகப் பெரிய நாடாகவும், சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா இருபத்தி ஏழாவது பெரிய நாடாகவும் இருக்கின்றது. சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் முதன்மையாக இருக்கும் பொருட்கள் இரும்புதாது, வைரம், பருத்தி இழை, தாமிரம் மற்றும் கரிம வேதி பொருட்கள் போன்றவை ஆகும். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் முக்கிய பொருட்கள் ஆவன மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், உரங்கள் போன்றவைகளாகும்.)

86) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சர்வதேச அரங்கில் இந்தியா சீனா ஆகிய இரண்டும் வளங்களுக்கான போட்டியாளர்கள் ஆகும்.

கூற்று 2 – இந்தியாவும் சீனாவும் பன்முனை உலக ஒழுங்கை ஆதரிக்கின்றன மற்றும் வெளியுறவு கொள்கையில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கின்றன.

கூற்று 3 – இந்தியாவும் சீனாவும் பருவநிலை மாற்றம், வர்த்தக பேச்சுவார்த்தை, ஆற்றல் பாதுகாப்பு, உலக நிதி நெருக்கடி போன்றவற்றின் மீதான உலகக் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சர்வதேச அரங்கத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டும் வளங்களுக்கான போட்டியாளர்கள் ஆவர். புதிய சக்தியாக தோன்றி வரும் இந்த இரண்டு ஆசிய நாடுகள் வளரும் நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் எல்லாம் இந்திய சீன பொருளாதார தேவைகளை எதிர்கொள்வதற்கு ஆகும். பரவலான போட்டி இருந்தபோதிலும் இந்தியாவும் சீனாவும் தங்களின் உண்மையான நலன்களை ஒன்றுக்கொன்று பேணிக்கொள்கிறது.இந்தியாவும் சீனாவும் பருவநிலை மாற்றம், வர்த்தக பேச்சுவார்த்தை, ஆற்றல் பாதுகாப்பு, உலக நிதி நெருக்கடி போன்றவற்றின் மீதான உலகக் கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றன)

87) கீழ்காணும் எந்த அமைப்புகளில் இந்தியா மற்றும் சீனா உறுப்பு நாடுகளாக உள்ளது?

A) BRICS (பிரிக்ஸ்)

B) E.A.S ( தென்கிழக்கு ஆசிய அமைப்பு)

C) S.C.O ( ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு)

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – இந்தியாவும் சீனாவும் மிக முதன்மையான சர்வதேச அமைப்புகளான பிரிக்ஸ் ( பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா), ஈ.ஏ.எஸ்( தென்கிழக்கு ஆசிய உச்சிமாநாடு), SCO ( ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு), ASEAN( தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) ஆகியவற்றில் ஒரு உறுப்பினராக இருக்கின்றது)

88) இலங்கை கீழ்க்காணும் எந்த ஆண்டில் விடுதலை பெற்று சுதந்திர நாடானது?

A) 1947 இல்

B) 1948 இல்

C) 1949 இல்

D) 1950 இல்

(குறிப்பு – இலங்கை 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இந்தியாவும் இலங்கையும் 1948ஆம் ஆண்டிலிருந்து வலிமையான நட்புறவை போற்றி வந்திருக்கின்றன.ஆனாலும் இலங்கையில் உள்நாட்டுப்பூசல் மற்றும் அரசியல் போன்றவை இந்த நட்புறவை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகளை கொடுத்துள்ளது. பிரதான காரணமாக இன வேற்றுமை விளங்குகிறது.)

89) இலங்கையில் குடியுரிமைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

A) 1948ஆம் ஆண்டு

B) 1949ஆம் ஆண்டு

C) 1950ஆம் ஆண்டு

D) 1951ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா இலங்கை உறவுகளில் ஆழமாக பதிந்த ஆரம்பநிலை பிரச்சனையாக இலங்கை குடியுரிமைச் சட்டம்- 1948 விளங்குகிறது. இதன்படி விவசாய தமிழர்கள் அல்லது மறைவால் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது இந்த பிரச்சனை இருநாடுகளின் உறவுகளிலும் பெரிய விரிசல் வர காரணியாக ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. மேலும் இந்த பிரச்சனையை இலங்கை சீனாவை கொண்டு சமாளிப்பததை வாடிக்கையாக வைத்துள்ளது.)

90) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 1921ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின்படி இலங்கையின் 10 பெரிய இனங்கள் காணப்பட்டன.

கூற்று 2 – பெருவாரியான மக்கள் தொகையில் சிங்களர்கள் மூன்றில் ஒரு பகுதியாகவும், புத்த இனத்தை சேர்ந்தவர்களாகவும், சிங்கள மொழியைப் பேசக்கூடியவராகவும் இருந்தனர்.

கூற்று 3 – இலங்கையின் தமிழர்கள் இந்துக்களாகவும், திராவிட மொழியான தமிழை பேசக் கூடியவர்களாகவும் வாழ்ந்தார்கள்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – 1921 ஆம் ஆண்டில் மக்கள் கணக்கெடுப்பின்படி இலங்கையில் 10 பெரிய இனங்கள் காணப்பட்டன.அவற்றுள் மூன்று இனம் துணைப் பிரிவுகளாக அமைந்தன.அவை கீழ்நாடு மற்றும் கண்டய சிங்களர்கள், இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள், இலங்கை மற்றும் இந்திய மூர்கள், என்பன ஆகும். ஏனைய நான்கு இனங்கள் பர்கர்கள், யூரேசியன்ஸ், மலேயர்கள் மற்றும் வேதாஸ் வாழ்ந்து வந்தார்கள்.)

91) கீழ்காணும் எந்த ஆண்டு இலங்கையின் பண்டாரநாயக்கவும், இந்தியாவின் லால்பகதூர் சாஸ்திரியும் சேர்ந்து குடியேற்றம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை உருவாக்கினர்?

A) 1962ஆம் ஆண்டு

B) 1964ஆம் ஆண்டு

C) 1966ஆம் ஆண்டு

D) 1968ஆம் ஆண்டு

(குறிப்பு – 1948 ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு, இலங்கை அங்கு வாழும் தமிழர்களை வேற்றுமைபடுத்த ஆரம்பித்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டம் தெற்கு இந்தியாவின் பூர்வ குடிமக்களாக பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு அவர்கள் உரிமையை மறுத்தது. கிட்டத்தட்ட 11 சதவீதம் அதாவது 7 லட்சம் தமிழர்கள் தேச அடையாளம் இன்றி நாடற்றவர்களாக கைவிடப்பட்டார்கள். 1964 ஆம் ஆண்டு இலங்கையின் பண்டாரநாயக்கவும் இந்தியாவின் லால்பகதூர் சாஸ்திரியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கையை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை இந்தியாவிற்கு குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர்.)

92) கச்சத்தீவு என்பது பூர்வீகமாக கீழ்காணும் எந்த மாவட்ட மன்னர்களுக்கு சொந்தமானதாகும்?

A) ராமநாதபுரம்

B) புதுக்கோட்டை

C) தஞ்சாவூர்

D) திருநெல்வேலி

(குறிப்பு – கச்சதீவு பூர்வீகமாக ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமானதாகும். எந்த ஒரு இலங்கையின் வரைபடமும் அதனுடைய நிலப்பரப்பாக கச்சத்தீவை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் கச்சத்தீவை அமைவிடத்தை அடிப்படையாக வைத்து இலங்கை அதனை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது. முன்னதாக இருநாடுகளின் தலைவர்களும் கச்சத்தீவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்)

93) எந்த இந்திய பிரதமரின் ஆட்சியின்போது கச்சத்தீவு ஒப்பந்த அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டது?

A) ஜவஹர்லால் நேரு

B) ராஜீவ் காந்தி

C) இந்திரா காந்தி

D) அடல் பிகாரி வாஜ்பாய்

(குறிப்பு – 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி கச்சத்தீவை ஒப்பந்தம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். கச்சத்தீவு என்பது 285 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் நடுவே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள தீவு ஆகும். அங்கே கத்தோலிக்க கோவில் இருப்பதால் இலங்கை அரசாங்கம் அவ்விடத்தை புனிதத் தன்மை உடையதாக அறிவித்தது)

94) கச்சத்தீவில் மீன் வலையை காய வைத்தல், தேவாலயத்தை அடிபடுதல் போன்ற உரிமையை இந்தியர்கள் எந்த ஆண்டு இழந்தனர்?

A) 1974 முதல்

B) 1975 முதல்

C) 1976 முதல்

D) 1977 முதல்

(குறிப்பு – 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் தங்களுடைய மீன் பிடிக்கும் வலையை காய வைப்பதற்கும், கச்சத்தீவில் இருக்கும் தேவாலயத்தை வழிபடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர். இதன் பிறகு 1976 ஆம் ஆண்டு கடல் போக்குவரத்து எல்லை கட்டுப்பாட்டின் காரணமாக ஐக்கிய நாட்டின் உத்தரவின் பேரில் வலைகளை காய வைப்பதற்கு மற்றும் தேவாலயத்தை வழிபடும் உரிமையை இழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எண்ணற்ற துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர்.)

95) நேரு மற்றும் ஜான் கொடேலாவாலா இடையே உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1952 ஆம் ஆண்டு

B) 1953 ஆம் ஆண்டு

C) 1954 ஆம் ஆண்டு

D) 1955 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்த உடன்படிக்கை இந்தியாவின் பிரதமர் நேரு மற்றும் இலங்கையின் பிரதமர் கொடேலாவாலோ ஆகிய இருவரும் இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும். இது 1954 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது இலங்கையில் வசிக்க கூடிய இந்திய பூர்வீக குடிமக்களின் நிலை மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது ஆகும். இம் மக்கள் யாவரும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தேயிலை, காப்பி தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர்.)

96) இலங்கையின் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவிற்கு எந்த ஆண்டு வருகை செய்தார்?

A) 1964ஆம் ஆண்டு.

B) 1965ஆம் ஆண்டு

C) 1966ஆம் ஆண்டு

D) 1967ஆம் ஆண்டு

(குறிப்பு – திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவிற்கு 1964 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பண்டாரநாயக்காவிற்கும், இந்தியாவின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இதன் மூலம் 9 லட்சத்து 25 ஆயிரம் குடியுரிமை இல்லாத நபர்களில் மூன்று லட்சம் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவதாகவும், 5 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் இந்திய குடியுரிமை பெறுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டது.)

97) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக வாக்களித்த இந்திய பிரதமர் யார்?

A) அடல் பிகாரி வாஜ்பாய்

B) மன்மோகன் சிங்

C) நரேந்திர மோடி

D) ராஜீவ் காந்தி

(குறிப்பு – இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சேவுக்கு 2010 ஆம் ஆண்டு உறுதி அளித்தார்.இதன்படி 47,000 வீடுகள் 2018 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதற்கான செலவு கிட்டத்தட்ட 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்தியாவின் மானியங்களிலேயே அதிக பட்சம் ஆகும்)

98) இலங்கையின் அலுவல் மொழியாக இருப்பவை எது?

A) சிங்களம்

B) ஆங்கிலம்

C) தமிழ்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனே இடையேயான தூதரக ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவசரநிலையானது நீக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை இலங்கையின் அலுவல் மொழியாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது)

99) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய பிரதமர் மேற்கு இலங்கையில் தலைமன்னார் நகரத்திற்கு புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கூற்று 2 – தலைமன்னாரில் தொடங்கிய இந்த புது ரயில் பணியானது, உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் வடமாகாணத்தின் வளர்ச்சிக்கான பணியாக தொடங்கியது.

கூற்று 3 – தலைமன்னார் என்பது இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஒரு இலங்கை நகரம் ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – இந்திய பிரதமர் மேற்கு இலங்கையில் தலைமன்னார் நகரத்திற்கு புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தலைமன்னாரில் தொடங்கிய இந்த புது ரயில் பணியானது, உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் வடமாகாணத்தின் வளர்ச்சிக்கான பணியாக தொடங்கியது. தலைமன்னார் என்பது இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஒரு இலங்கை நகரம் ஆகும். இந்திய பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் தலைமன்னாரில் ஒரு புதிய ரயில் நிலையத்தை அமைக்க அடிக்கல் நாட்டினர்.)

100) பொருத்துக

I. நேரு கொடேலாவாலா உடன்படிக்கை – a) 1974

II. சாஸ்த்திரி சிறிமாவோ ஒப்பந்தம் – b) 1954

III. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் – c) 1987

IV. கச்சத்தீவு ஒப்பந்தம் – d) 1964

A) I-b, II-d, III-c, IV-a

B) I-d, II-c, III-b, IV-a

C) I-a, II-c, III-d, IV-b

D) I-c, II-b, III-a, IV-d

(குறிப்பு – 1974 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவு ஒப்பந்தம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார் கச்சத்தீவு என்பது 285 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடுவே உள்ள ஆளில்லா தீவு ஆகும். இதன் பின்னர் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையான நல்லுறவிற்காக நேரு-ஜான் கொடேலாவாலோ உடன்படிக்கை (1954), சாஸ்திரி சிறிமாவோ ஒப்பந்தம்(1964), மற்றும் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்(1987) போன்றவைகள் கையெழுத்தாகி உள்ளன)

101) இந்தியா மற்றும் நேபாளம் எத்தனை கிலோமீட்டர் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது?

A) 1800 கிலோமீட்டர்

B) 1825 கிலோமீட்டர்

C) 1850 கிலோமீட்டர்

D) 1875 கிலோமீட்டர்

(குறிப்பு – இந்தியா மற்றும் நேபாளம் ஒன்றுக்கொன்று புவியியல் ரீதியாக அருகே அமைந்துள்ளன. நேபாளம் தாழ்வான நிலப்பகுதியில் பெரும்பாலும் கங்கைச் சமவெளியின் பாதையில் அமைந்து, இமயத்தின் அடிவாரத்தில் சீனாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் உள்ளது. இவ்விரு நாடுகளும் கிழக்கே 1,850 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன)

102) நேபாள நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாத இந்திய மாநிலம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) சிக்கிம்

B) மேற்கு வங்காளம்

C) இமாச்சலப் பிரதேசம்

D) உத்தரப் பிரதேசம்

(குறிப்பு – நேபாளம் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட், ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களால் சூழப்பட்டுள்ளன. முன்னதாக நேபாளம் ஒரு இந்து பெரும்பான்மையான நாடாக விளங்கியது.ஆனாலும் எட்டில் ஒரு பங்கு மக்கள் பௌத்த கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.)

103) இந்தியா நேபாளத்துடன் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை கீழ்காணும் எந்த ஆண்டில் மேற்கொண்டது?

A) 1950 இல்

B) 1951 இல்

C) 1952 இல்

D) 1953 இல்

(குறிப்பு – நேபாளத்தினை இறையாண்மை பெற்ற நாடாக நேரு ஏற்றுக்கொண்டாலும் அதே சமயத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு தனிச் சிறப்புடைய பகுதியாகவே அது விளங்குகிறது. சீனா திபெத்தை தன் பிடிக்குள் 1951ம் ஆண்டு கொண்டு வந்தபோது நேபாளத்தின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியா நேபாளத்துடன் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை ஜூலை 31 1950 ஆம் ஆண்டு மேற்கொண்டது)

104) இந்தியா நேபாள நாட்டுடனான வர்த்தக வாணிப உடன்படிக்கையில் கீழ்க்காணும் எந்த நாளில் கையெழுத்திட்டது?

A) ஜூலை 31, 1950

B) ஜூலை 31, 1951

C) ஆகஸ்ட் 31, 1950

D) ஆகஸ்ட் 31, 1951

(குறிப்பு – நேபாளத்துடன் உறவுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பு காரணி என்பதுடன் ஏனைய மற்ற காரணிகளும் அடிப்படையாக உள்ளன. ஜூலை 31 1950 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, நேபாளத்துடனான வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே வலிமையான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தியது.)

105) கீழ்க்காணும் எந்த காலத்தில் இந்தியா “இரு தூண் கொள்கையை “பின்பற்றியது?

A) 1970 களில்

B) 1980 களில்

C) 1990 களில்

D) 2000 களில்

(குறிப்பு – 1990களில் இந்தியா, “இரு தூண் கொள்கையை” பின்பற்றியது. பல கட்சி முறைமை நேபாளத்தில் தோன்றியதால் இந்நிலையை இந்தியா தேர்ந்தெடுத்தது. இரு தூண் கொள்கையாக அரசியல் சாசன சட்டத்தில் மன்னராட்சியும், பல கட்சி மக்களாட்சி முறையும் அமைய இந்தியா விருப்பம் தெரிவித்தது. ஆனால் புதிய புத்தாயிர்த்தில் இந்தக் கொள்கை தொடர்பான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் மன்னராட்சியில் மாற்றமும், மாவோ கிளர்ச்சியாளர்களின் செயலும் வேகமும் நேபாளத்தை புரட்டிப் போட்டது.)

106) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 1950 ஆம் ஆண்டில் நேபாளத்தோடு ஒப்புதல் மேற்கொண்ட இந்தியா மக்களாட்சிக்கு மாறவும், உரிமைகளை மக்களுக்கு அளிக்குமாறும் வேண்டிக்கொண்டது.

கூற்று 2 – 2018 ஆம் ஆண்டு நடந்த பிம்ஸ்டெக் பயிற்சியில்(MILEX-2018) நேபாளம் பங்கேற்கவில்லை

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இந்தியாவுடனான நேபாள நாட்டின் உறவுகள் அரசருக்கும், வம்சாவளி பிரதமர் குடும்பத்திற்கும் இடையேயான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது.1950 ஆம் ஆண்டில் நேபாளத்தோடு ஒப்புதல் மேற்கொண்ட இந்தியா மக்களாட்சிக்கு மாறவும், உரிமைகளை மக்களுக்கு அளிக்குமாறும் வேண்டிக்கொண்டது. ஆனால் அதற்கு சிறிதளவும் ராணா குடும்பத்தினர் செவிசாய்க்காமல் இருந்ததால் இந்திய அரசு நேரடியாக பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது. நேரு இறந்த பிறகு இந்தியாவின் உறவுகள் ஒரே மாதிரியான நிலை போக்கை கடைப்பிடித்தது.).

107) கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு “இடைசுவராக” நேபாளம் செயல்படுகிறது?

A) இந்தியா-சீனா

B) இந்தியா-பூடான்

C) இந்தியா-மியான்மர்

D) இந்தியா-திபெத்

(குறிப்பு – இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே “இடைசுவராக” நேபாளம் செயல்படுகிறது. மேலும் நிலம் சூழ்ந்த நாடாக நேபாளம் அமைந்திருப்பதால் வெளிநாடுகளுடன் இணைப்பு பெற இந்தியாவை சார்ந்து இருப்பது அவசியமாகிறது. இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் இடையேயான மக்கள் உறவுகளும் மிக நெருக்கமாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது.)

108) இந்தியா மற்றும் நேபாளம் இடையே நல்லுறவு தொடர 5-T (ஐந்து T-க்கள்) சூத்திரத்தை அறிமுகம் செய்த இந்திய பிரதமர் யார்

A) பிரதமர் வாஜ்பாய்

B) பிரதமர் மன்மோகன் சிங்

C) பிரதமர் ராஜீவ் காந்தி

D) பிரதமர் நரேந்திர மோடி

(குறிப்பு – பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 5- என்னும் சூத்திரத்தை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் இந்திய நேபாளம் உறவுகள், பாரம்பரியம், வாணிபம், சுற்றுலா, தொழில் நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்றவைகளால் நிர்ணயிக்கப்படும் என்று தனது மே 2018 நேபாள பயணத்தின்போது கூறியுள்ளார். வரலாற்று ரீதியான உறவு முறையை நேபாளமும் இந்தியாவும் கொண்டுள்ளது. 1950 களிலிருந்து அமைதி மற்றும் நட்புறவு தொடர்பான உறவுமுறை இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ளது.)

109) இந்தியா நேபாளம் இடையே எந்த ஆண்டு கையெழுத்தான உடன்படிக்கையின் படி இருநாட்டு மக்களும் தங்கு தடை இன்றி சுதந்திரமாக இரு நாடுகளுக்கு செல்வதற்கும், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கும் ஏதுவான சூழல் மேற்கொள்ளப்பட்டது?

A) 1950 ஆம் ஆண்டு

B) 1951 ஆம் ஆண்டு

C) 1953 ஆம் ஆண்டு

D) 1954ஆம் ஆண்டு

(குறிப்பு – 1950 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையானது நேபாள அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் உலகத்தின் ஒற்றுமையை அடிப்படையாக வைத்து அண்டை நாடுகளுடன் உறவு முறையை வெளிப்படுத்தும் நோக்கம் உடையதாகும். இந்த உடன்படிக்கை 1950 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம்நாள் நேபாள பிரதமர் ஷம்ஷர் ஜாங் பகதூர் ராணா, இந்திய தூதுவர் சத்ரேஸ்வர் நாராயண சிங் முன்னிலையில் கையெழுத்தானது.)

110) கீழ்காணும் எந்த புனித இடம் நேபாளத்தில் அமைந்துள்ளது?

I. பசுபதி

II. ஜனக்பூர்

III. குஷி நகர்

IV. வாரணாசி

A) I, II, III மட்டும்

B) I, II மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்தியா நேபாளம் ஆகிய இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் மதரீதியான யாத்திரைக்கு அடுத்த நாட்டுக்கு செல்வது வழக்கமாகி உள்ளது. பசுபதி மற்றும் ஜனக்பூர் ஆகிய பிரசித்தி பெற்ற கலாச்சார இடங்கள் நேபாளத்திலும், வாரணாசி மற்றும் நான்கு புனித ஸ்தலங்கள் இந்தியாவிலும் மக்கள் சென்று வர ஏதுவாக உள்ளது)

111) நேபாளத்தில் இந்திய முதலீட்டின் சதவீதம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) 30 சதவீதம்

B) 35 சதவீதம்

C) 40 சதவீதம்

D) 45 சதவீதம்

(குறிப்பு – நேபாளத்தின் மிகப்பெரிய வாணிப பங்குதாரராக இந்தியா செயல்படுகிறது. அன்னிய முதலீட்டிலும், நேபாளத்துடனான வாணிபம், போக்குவரத்து வசதிகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 40% வெளிநாட்டு முதலீட்டானது இந்தியாவிலிருந்து முதன்மையான முதலீட்டாளர்கள் மூலம் நேபாளத்திற்கு செல்கிறது.)

112) இந்தியா நேபாளம் இடையே நீர் வளம் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2004 இல்

B) 2006 இல்

C) 2008 இல்

D) 2010 இல்

(குறிப்பு – 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இருதரப்பு ஒப்பந்தமானது நீர்வளம் மற்றும் நீர்மின் நிலையம் தொடர்பாக மூன்று அடுக்கு செயல்வழி முறை உருவாக்கப்பட்டது. அதிவேகமாக பாய்கின்ற பல ஆறுகள் நேபாளத்தில் இருப்பதால் நீர் மின்நிலையம் மூலமாக மின்சாரம் தயாரிக்க எளிதாக உள்ளது. 80000 மெகாவாட் உற்பத்தி திறனில் இருந்து நேபாளம் 700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.)

113) இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமிடையே மின்னாற்றல், வாணிபம் எல்லை கடந்த இடைவெளி இணைப்பு மற்றும் கட்டிடம் இணைப்பு தொடர்பாக எந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது?

A) 2011 இல்

B) 2012 இல்

C) 2013 இல்

D) 2014 இல்

(குறிப்பு – 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு மின்னாற்றல், வாணிபம் எல்லை கடந்த இடைவெளி இணைப்பு மற்றும் கட்டிடம் இணைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. நீண்டகால ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் திட்டம் 2035 ஆண்டு உருவாக்குவதற்கு உண்டான இணை தொழில்நுட்பக் குழு நிறுவப்பட்டது.)

114) இந்திய ராணுவமும் நேபாள ராணுவம் இணைந்து சூரிய கிரண் XIII என்னும் கூட்டுப் பயிற்சியை எப்போது நிகழ்த்தியது?

A) 2016 ஆம் ஆண்டு

B) 2017 ஆம் ஆண்டு

C) 2018 ஆம் ஆண்டு

D) 2019 ஆம் ஆண்டு

(குறிப்பு – 2019ஆம் ஆண்டு இந்தியாவும் நேபாளமும் சூரிய கிரண் என்று அழைக்கப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியை மே 30ம் தேதியில் இருந்து ஜூன் 12ஆம் தேதி வரை உத்தராகண்டில் நிகழ்த்தியது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், நேபாள ராணுவத்தை நவீனமயமாக்கவும், பயிற்சிகள் தரவும், புதிய கருவிகள் அளிப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன).

115) இந்தியாவும் நேபாளமும் இணைந்து எத்தனை சகோதர நகரங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – இந்தியா மற்றும் நேபாள அரசாங்கங்கள் 3 சகோதர நகரங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காத்மாண்டு-வாரணாசி-லும்பினி-புத்தகயா மற்றும் ஜனக்பூர், அயோத்யா ஆகிய நகரங்களை மையப்படுத்தி உருவாக்கியது இந்த ஒப்பந்தம் ஆகும். ஜனக்பூருக்கும் அயோத்தியாவிற்கும் நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை ராமாயணம் வழியாக இயக்கப்படும் சுதேஷ் தரிசன திட்டத்தை அறிவித்ததாகும்.)

116) புத்தர் பிறந்த நாடு எது?

A) நேபாளம்

B) திபெத்

C) இந்தியா

D) பூடான்

(குறிப்பு – நேபாளமும் இந்தியாவும் இந்து மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன.லும்பினி எனும் புத்தர் பிறந்த இடம் நேபாளத்திலும், அவர் ஞானம் பெற்ற புத்தகயா இந்தியாவிலும் உள்ளது இதேபோல் இரு நாடுகளிலும் இந்து புனித யாத்திரை இடங்கள் பல பரவி உள்ளன.)

117) சுஸ்தா மற்றும் கலாபானி என்னும் முத்தரப்பு சந்திப்புடன் தொடர்பு இல்லாத நாடு எது?

A) இந்தியா

B) சீனா

C) பூடான்

D) நேபாளம்

(குறிப்பு – இரு பிரதான பிரச்சனைகளான சுஸ்தா மற்றும் கலாபானி (இந்தியா – சீனா – நேபாளம் ) முத்தரப்பு சந்திப்பு ஆகும். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தைகள் செயலாளர்கள் இடையே முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒரே ஒரு பேச்சு வார்த்தை மட்டும் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் திறந்தவெளி எல்லை அமைந்துள்ளதால் சட்டபூர்வமற்ற இடம்பெயர்தல் கடத்தலும் எளிதான வகையில் அரங்கேறுகிறது)

118) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1- இந்தியா மற்றும் நேபாளம் இடையே ஆன 1950 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி நேபாளம் எந்த ஒரு ராணுவம் தொடர்பான பொருட்கள் வாங்கும்போது இந்தியாவில் ஒப்புதலை கேட்க வேண்டும் என்ற அமைப்பு உள்ளது.

கூற்று 2 – இந்தியா மற்றும் நேபாளம் வாணிபத்தில் அதிக அளவில் இந்தியாவிற்கு லாபம் அளிக்கின்ற நிலை தற்போது உள்ளது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இந்தியா மற்றும் நேபாளம் இடையே ஆன 1950 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி நேபாளம் எந்த ஒரு ராணுவம் தொடர்பான பொருட்கள் வாங்கும்போது இந்தியாவில் ஒப்புதலை கேட்க வேண்டும் என்ற அமைப்பு உள்ளது. இந்த விதியை மாற்ற நேபாளம் விருப்பம் தெரிவித்தது. நேபாளம் இந்திய பிரபலமானவர்கள் குழுமம் இரு நாடுகளுக்கு இடையே ஆன அனைத்து உதவிகளையும் மறு ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை அளிக்க உள்ளது.)

119) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – நேபாளம் இந்தியாவுடன் நட்புறவை ஈடுகட்டுவதற்கு சீனாவுடனான நேபாள உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கூற்று 2 – சீன தரப்பில், திபெத்தின் பக்கத்திலிருந்து நேபாளத்திற்கு அதிக எண்ணிக்கைகளில் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகிறது.

கூற்று 3 – வெகுவிரைவில் சீன அரசாங்கம் திபெத்திலிருந்து காத்மாண்டுவிற்கு ரயில் போக்குவரத்தை தொடர்வதற்கு தயார் செய்து கொண்டிருக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – மேற்கண்ட கூற்றுகள் நேபாளம் மற்றும் சீனா இடையே நெருக்கம் அதிகரிப்பதை காட்டுகிறது. மேலும் ‘ஒரு பாதை ஒரு சாலை முன்னெடுப்பில்’ நேபாளம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. நேபாள குழுமங்களோடு சீனா, இந்திய விற்பனையாளர்களை சீர்கெடுக்கும் போட்டி மனப்பான்மையோடு பணி செய்து வருவது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.).

120) நேபாளம் எத்தனை சோதனை சாவடிகளை பயன்படுத்திக்கொள்ள சீனாவிடம் அனுமதி பெற்றுள்ளது?

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

(குறிப்பு – சீனா நேபாளம் செய்துகொண்ட இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி நேபாள நாட்டு வர்த்தகர்கள் ரயில், சாலை மற்றும் கடல் துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். நேபாளத்தின் லாரிகள், நீண்ட சரக்கு லாரிகள் மற்றும் சிறிய போக்குவரத்து கப்பல்கள் ஆகியவற்றில் திபெத்தின் “சியாக்ட்சே” பகுதியிலிருந்து கொண்டுவர சீனா அனுமதி அளிக்கிறது. நேபாளம் சீனாவின் 6 சோதனைச் சாவடிகளை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.)

121) நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையேயா ன இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி சீனாவின் எத்தனை துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்திக் கொள்ள முடியும்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையேயான, இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி சீனாவின் நான்கு துறைமுகங்களையும் 3 உட்பகுதி துறைமுகங்களையும் வாணிபத்திற்காக பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. அந்த நான்கு துறைமுகங்கள் ஆவன, டியான்ஜின், லியானியுங்கங், ஷென்சென், ஜாங்ஜியாங் என்பன ஆகும். மேலும் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள நேபாளம் இந்திய அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது.)

122) எந்த ஆண்டு முதல் இந்தியா உடனான பூடானின் நட்பு வெகு நேர்த்தியாக வளர்ந்து வருகிறது?

A) 1962 முதல்

B) 1964 முதல்

C) 1966 முதல்

D) 1968 முதல்

(குறிப்பு – இந்தியாவுடன் பூடானின் நட்பு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முற்றிலுமாக நிலம் சூழ்ந்த நாடாக இருப்பதால் பெரும் அளவில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்தியாவையே சார்ந்து இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. 1968 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா உடனான பூடானின் நட்பு மிக நேர்த்தியாக வளர்ந்து வருகிறது.)

123) பூட்டான் எந்த ஆண்டு உலக தபால் பணிக் குழுவில் சேர்ந்தது?

A) 1967 இல்

B) 1968 இல்

C) 1969 இல்

D) 1970 இல்

(குறிப்பு – இந்தியாவின் அணுகுமுறையால் 1965ஆம் ஆண்டு பூடான் கொழும்பு திட்டத்திலும், 1969 ஆம் ஆண்டு உலக தபால் பணிக்குழுவிலும் சேர்ந்தது. இறுதியாக பூடான் உறுப்பினராவதற்கு 1971ஆம் ஆண்டில் இந்தியா சிபாரிசு செய்தது. அணிசேரா இயக்கத்துடனான உறவுகளுக்கும் இந்தியா முயற்சிகள் மேற்கொண்டது)

124) இந்தியா மற்றும் பூடான் நாடுகளிடையே நட்புறவு உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1948 ஆம் ஆண்டு

B) 1949 ஆம் ஆண்டு

C) 1950 ஆம் ஆண்டு

D) 1951 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளிடையே அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கை 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம்நாள் டார்ஜிலிங்கில் கையெழுத்தானது. 1968 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா உடனான பூடானின் நட்பு வெகு நேர்த்தியாக வளர்ந்து வருகிறது. திம்புவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பணியமர்த்தப்பட்ட பிறகு கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.)

125) இந்தியா மற்றும் பூடான் நாடுகளிடையேயான நட்புறவு உடன்படிக்கை எந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது?

A) 2005 ஆம் ஆண்டு

B) 2007 ஆம் ஆண்டு

C) 2009 ஆம் ஆண்டு

D) 2011 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளிடையே அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கை 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் டார்ஜிலிங்கில் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையானது 1910 ஆம் ஆண்டு ஆங்கிலேயே-பூடானிய உடன்படிக்கையின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. பூட்டான் நாடு வேண்டிக் கொண்டதன் மூலம் இந்தியா தமது நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையை 2007 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்தது.)

126) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளிடையேயான மறுசீரமைப்பிக்கப்பட்ட நட்புறவு உடன்படிக்கையின்படி ராணுவம் தொடர்பான பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு பூட்டான் நாடு இந்தியாவின் அனுமதி பெற தேவையில்லை.

கூற்று 2 – ஆங்கிலேய அரசு மற்றும் பூட்டான் அரசாங்கத்தினிடையே, புனக்ஷா ஒப்பந்தம் 1930 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – புனக்ஷா ஒப்பந்தத்தின்படி (1910ஆம் ஆண்டு) பிரிட்டிஷ் இந்தியாவின் மற்றொரு பாதுகாப்பான அரசாக பூடான் விளங்கியது. இதன்மூலம் முழு சுதந்திரத்தை பெற்று இருந்ததே தவிர வெளி சுதந்திரத்தை பெறவில்லை. “இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருப்பதாலும் பூட்டான் சிறிய நாடாக இருப்பதாலும் இந்தியா தன் சக்தியை திணிக்கும் என பலர் எண்ணிக் கொண்டிருக்க கூடும்.இதனால் பூடானியர்களான நீங்கள் சுதந்திரமாகவும் உங்களுக்கென்று தனி வாழ்க்கையும் வளர்ச்சிப் பாதையும் நீங்கள் நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் ஜவஹர்லால் நேரு 1958 ஆம் ஆண்டு கூறியுள்ளார்.)

127) இந்தியா மற்றும் பூடான் நாடுகளிடையே நீர்மின் திட்ட கூட்டு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2004ஆம் ஆண்டு

B) 2005ஆம் ஆண்டு

C) 2006ஆம் ஆண்டு

D) 2007ஆம் ஆண்டு

(குறிப்பு – பூடான் ஏற்றுமதிப் பொருள்கள் எவ்வித வரியும் என்றி வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் இந்திய-பூடான் வாலிபம் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தம் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தானது. மேலும் 2006-ஆம் ஆண்டு இந்தியா-பூடான் நீர்மின் திட்ட கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 2020 ஆம் ஆண்டு வரை பூடான் 10,000 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இந்தியா உதவி புரிவதாகவும், தேவைக்கு அதிகமான மின்சாரம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் கையெழுத்தானது)

128) இந்தியா பூடானில் எத்தனை நீர்மின் திட்டங்களை நிறுவியுள்ளது?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – இந்தியா பூட்டானில் 3 நீர்மின் திட்டங்களை நிறுவியுள்ளது. இவை அனைத்தும் மொத்தமாக 1416 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குகின்றன.அவை 336 மெகாவாட் சுக்கா நீர்மின் திட்டம், 60 மெகாவாட் குரிச்சு நீர்மின்திட்டம் மற்றும் 1020 மெகாவாட் தலா நீர்மின்திட்டம் என்பன ஆகும்)

129) உல்ஃபா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் எந்த ஆண்டு கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டது?

A) 2002 ஆம் ஆண்டு

B) 2004 ஆம் ஆண்டு

C) 2006 ஆம் ஆண்டு

D) 2008 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கூட்டு ராணுவ பயிற்சி, இராணுவ நடவடிக்கையை நடத்தியுள்ளது. அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ பயிற்சி குறிப்பிடத்தக்கதாகும். இதை பூட்டான் ராணுவம் உல்ஃபா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக இராணுவ பயிற்சியை நடத்தியது.)

130) நரேந்திர மோடி இந்திய பிரதமர் ஆனவுடன் முதன்முதலில் சென்ற வெளிநாடு எது?

A) இலங்கை

B) நேபாளம்

C) பூடான்

D) சீனா

(குறிப்பு – இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு ஆரம்ப காலத்திலிருந்தே வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் முதல் பயணமாக பூடான் பயணம் அமைந்தது. இந்தியா தன்னுடைய தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி தூதரக உறவை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.)

131) பூட்டான் கீழ்காணும் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

A) பிம்ஸ்டெக்

B) பிரிக்ஸ்

C) ஐ.எம்.எஃப்

D) ஜி-77

(குறிப்பு – தெற்கு ஆசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கத்தில் உறுப்பினராக பூடான் விளங்குகிறது. மேலும் பிம்ஸ்டெக், உலக வங்கி, ஐ.எம்.எஃப், ஜி-77 போன்ற பண்பாட்டு கழகங்களிலும் உறுப்பினராக பூடான் விளங்குகிறது.)

132) இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இடையே புதிய வணிக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2012 ஆம் ஆண்டு

B) 2014 ஆம் ஆண்டு

C) 2016 ஆம் ஆண்டு

D) 2018 ஆம் ஆண்டு

(குறிப்பு – பூடானின் நாணயம் குல்ட்ரம் ஆகும். இது இந்திய ரூபாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூடானின் மிகப்பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு புதிய வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளில் குறைந்த அளவு ஆவணங்களுக்கும், மிகுதியான நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.)

133) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்திய அரசாங்கம் தற்போது மூன்று நீர்மின் நிலையங்களை பூட்டான் நாட்டுக்கு அமைத்துத்தர ஒப்புதல் வழங்கியுள்ளது.

கூற்று 2 – இந்தியா, பூடானுக்கு சுங்கவரி நீக்கப்பட்ட வர்த்தக சலுகை அளித்துள்ளது.

கூற்று 3 – 2004 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இணைந்து இராணுவக்கூட்டுப் பயிற்சியை நடத்தியுள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பூடானின் நாணயம் குல்ட்ரம் ஆகும். இது இந்திய ரூபாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூடானின் மிகப்பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு புதிய வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளில் குறைந்த அளவு ஆவணங்களுக்கும், மிகுதியான நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்தியா பூடானுக்கு சுங்கவரி நீக்கப்பட்ட வர்த்தக சலுகை அளித்துள்ளது. இது இருநாடுகளும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதி அளித்துள்ளது.)

134) ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற கருத்தை பிரகடனம் செய்த பூட்டானின் மன்னர் யார்?

A) ஜிக்மே சாங்

B) ஜிக்மே சிங்கே வாங்சுக்

C) ஜிக்மே விங்ஜின்

D) ஜிக்மே சிங்கு

(குறிப்பு – 1972 ஆம் ஆண்டு பூட்டானின் நான்காம் மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக், ” ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி”என்ற கருத்தை பிரகடனம் செய்தார். எண்ணிலடங்கா பூட்டான் மாணாக்கர்கள் இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வியை சுயநிதியை அடிப்படையாகக் கொண்டு பயின்று வருகிறார்கள்.)

135) இந்திய-பூடான் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

A) 2001 இல்

B) 2003 இல்

C) 2005 இல்

D) 2007 இல்

(குறிப்பு – 2003ம் ஆண்டு இந்திய-பூடான் கழகம் உருவாக்கப்பட்டு, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, கலாச்சாரம் கல்வி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை போன்றவைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.)

136) மோட்டார் வாகன ஒப்பந்தத்தில் பூடான் மேலவை கீழ்காணும் எந்த ஆண்டு ரத்து செய்தது?

A) 2011 ஆம் ஆண்டு

B) 2013 ஆம் ஆண்டு

C) 2015 ஆம் ஆண்டு

D) 2017 ஆம் ஆண்டு

(குறிப்பு – 2015ம் ஆண்டு வங்கதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோட்டார் வாகன ஒப்பந்தத்தை பூடானின் மேலவை சுற்றுப்புற காரணியை மையமாக வைத்து தடை செய்தது. சமமற்ற வர்த்தக வளர்ச்சியானது இந்தியாவிற்கு ஆதாரமாக உள்ளது. இந்திய சேவை மற்றும் பொருட்கள் வரி ஏற்றுமதிக்கு குறைவாகவும், இறக்குமதிக்கு அதிகமாகவும் உள்ளதால் வர்த்தக குறைபாடு மேலும் சங்கடத்தை சந்திக்க நேருகிறது.)

137) பூடான் நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத குழு கீழ்கண்டவற்றுள் எது?

I. போடோலேண்ட் (NDFB)

II. உல்பா

III. சம்பத்பர் விடுதலை அமைப்பு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தேசிய குடியரசு கிளர்ச்சி கழகங்களான போடோலேண்ட் (NDFB), உல்பா (ULFA) மற்றும் சம்பத்பர் விடுதலை அமைப்பு(KLO) போன்றவை எளிதாக நுழையும்படி பூடான் அமைந்துள்ளது. இவை அனைத்தும் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் பூடானின் அமைதிக்கும் அச்சுறுத்தலுக்கும் இவை காரணமாக உள்ளது.)

138) டோக்லாம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இது இந்தியா, பூடான் மற்றும் சீன நாடுகளுக்கு இடையேயான ஒரு பீடபூமி ஆகும்.

கூற்று 2 – இந்த பகுதியானது திபெத்தின் அம்பி பள்ளத்தாக்கு மற்றும் பூடானின் உஹா பள்ளத்தாக்காலும், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இது இந்தியா, பூடான் மற்றும் சீன நாடுகளுக்கு இடையேயான ஒரு பீடபூமி ஆகும்.இந்த பகுதியானது திபெத்தின் அம்பி பள்ளத்தாக்கு மற்றும் பூடானின் உஹா பள்ளத்தாக்காலும், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் சீனா மற்றும் பூடான் இடையே நடை பெற்று இருந்தாலும் டோக்லாம் பிரச்சனை முடிவற்றதாக அமைந்துள்ளது)

139) இந்தியா மற்றும் பூடான் இடையே உள்ள நீர் மின்திட்ட பிரச்சனைகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. பூடான் இந்தியாவிற்கு குறைந்த விலையில் மின்சாரம் அனுப்புவது.

II. கூட்டு நீர்மின் நிலைய திட்டங்களின் மேலாண்மையில் இந்திய அதிக பங்கு பெற விரும்புவதாக பூடான் நம்புகிறது.

III. நீர் மின் நிலையங்கள் சுற்றுப்புற சூழலும் இணைந்து பார்க்கப்படுவது

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கு இடையேயான நீர்மின் திட்ட பிரச்சனைகள் ஆவன, கூட்டு நீர்மின் நிலைய திட்டங்களின் மேலாண்மையில் இந்தியா அதிக பங்கு பெற விரும்புவதாக பூடான் நம்புகிறது, எல்லை கடந்த வாணிபத்தில் மின் ஆற்றல் அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு இந்தியாவை ஒரே பங்குதாரராக இணைக்கப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலைய முதலீட்டில் பூடானின் சுதந்திரத்தை பாதிக்கின்றது. இவை அனைத்தும் இந்தியா மற்றும் பூடான் இடையே உள்ள நீர்மின் திட்ட பிரச்சனைகளாகும்.)

140) பூடானில் உள்ள எத்தனை மாவட்டங்களுக்கான மின்னணுத்திட்டம் இந்தியாவால் மேம்பாடு அடைகிறது?

A) 10 மாவட்டங்கள்

B) 15 மாவட்டங்கள்

C) 20 மாவட்டங்கள்

D) 25 மாவட்டங்கள்

(குறிப்பு – இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயும் நட்புரீதியான சந்திப்புகள் அடுக்கு நிகழ்வுகளாக நடைபெறுகிறது 20 மாவட்டங்களுக்கான மின்னணு திட்டம் இந்தியாவால் மேம்பாடு அடைகிறது தற்போதைய பிரதமரால் பாரத்-டூ-பூடான் கொள்கை உருவாக்கப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்படுத்தபட்டுள்ளது)

141) IMTRAT என்னும் ராணுவ பயிற்சிக் குழு இந்தியாவால் எந்த நாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது?

A) இலங்கை

B) வங்கதேசம்

C) பூடான்

D) மியான்மர்

(குறிப்பு – இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் அதிகம் உதவிகளைப் பெறும் நாடாக பூடான் விளங்குகிறது. நிரந்தரமாகவே ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவ பயிற்சிக் குழு(IMTRAT) மேற்கு பூடானில் செயல்படுகிறது. இக்குழு பூடான் படைக்கு பயிற்சி அளிக்கிறது. ஏனைய மற்ற இந்திய படைக்கும் ராயல் பூட்டான் படைக்கும் உதவி புரிகின்றன.)

142) கீழ்க்காணும் எந்த இனக் குழு பூடானை சேர்ந்தது அல்ல?

A) மீசோ

B) நாகா

C) குக்கி

D) வேதாஸ்

(குறிப்பு – பூடானில் மீசோ, நாகா, குக்கி, தங்குள், பைட்டே போன்ற இன குழுக்கள் குடும்ப ரீதியாகவும், மொழி, மத மற்றும் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவுடன் உறவு பாராட்டுகிறார்கள்.அனைத்து புத்த பர்மியர்களும் வாழ்வில் ஒரு முறை இந்தியாவில் அமைந்துள்ள புத்தகயாவில் பிரார்த்தனை செய்வதற்கு விரும்புகிறார்கள்.)

143) இந்தியாவிற்கும் மியான்மருக்குமான உறவுகளின் வரலாறு எத்தனை ஆண்டுகள் கொண்டதாகும்?

A) 1000 ஆண்டுகள்

B) 1500 ஆண்டுகள்

C) 2000 ஆண்டுகள்

D) 2500 ஆண்டுகள்

(குறிப்பு – இந்தியாவிற்கும், மியான்மருக்குமான (முன்பு பர்மா) உறவுகளின் வரலாறு 2500 ஆண்டுகள் கொண்டதாகவும். பர்மியர்கள் புத்த மதத்தின் தொடர்புகள் இந்தியாவையும், மியான்மரையும் இணைத்துள்ளது என்று நம்புகிறார்கள்.ஸ்வேதாகான் பகோடா என்கிற புகழ்பெற்றவரின் கூற்றின்படி கோவிலின் இதயப் பகுதி புத்தரின் முடி புதைந்த இடத்தில் உள்ளதாகவும் அவை இரண்டு பர்மா வியாபாரிகளுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.)

144) பர்மாவை பாதுகாப்பதை விட வேறு எந்த ஒரு செயலும் இந்தியாவிற்கு முக்கியமில்லை என்று கூறியவர் யார்?

A) K.M.முன்ஷி

B) K.M.பணிக்கர்

C) லால் பகதூர் சாஸ்திரி

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – பர்மாவின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இதனால் இந்தியாவின் முழு கவனமும் எல்லையின் மீது இருந்தாகவேண்டும். பர்மாவை பாதுகாப்பதை விட வேறு எந்த ஒரு செயலும் இந்தியாவிற்கு முக்கியமில்லை என்று கே எம் பணிக்கர் என்பவர் கூறியுள்ளார்.)

145) இந்தியா பர்மா உடன் எத்தனை கிலோமீட்டர் நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

A) 1200 கிலோமீட்டர்

B) 1400 கிலோமீட்டர்

C) 1600 கிலோமீட்டர்

D) 1800 கிலோமீட்டர்

(குறிப்பு – இந்தியா பர்மாவுடன் 1600 கிலோமீட்டர் நிலஎல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்காள விரிகுடாவின் கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. வரலாற்று ரீதியான வலிமையான உறவுகள் இந்தியாவிற்கும் பர்மாவுக்கும் இடையே இருந்தாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது இந்திய ராணுவத்தினர் பர்மா விடுதலை இயக்கத்திற்கு எதிராக போரிட்டதால் பர்மியர்கள் அதிருப்தி அடைந்தனர்)

146) மியான்மருடன் எல்லையை பகிர்ந்துகொள்ளாத இந்திய மாநிலம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) அசாம்

B) அருணாசலப் பிரதேசம்

C) நாகலாந்து

D) மணிப்பூர்

(குறிப்பு – இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோராம் ஆகியன மியான்மர் உடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புவிப்பரப்பு அமைப்பின் இணைப்பானது இந்திய பெருங்கடலில் பெருமளவு இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.)

147) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?.

கூற்று 1 – ஆசியான் அமைப்பில் மியான்மர் உறுப்பினராக உள்ளது.

கூற்று 2 – தென்கிழக்கு ஆசியாவில் பெருமளவில் பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு மியான்மர் உதவி செய்யும் என்று இந்தியா நம்புகிறது.

கூற்று 3 – கிழக்கு நோக்கு கொள்கை மற்றும் கிழக்கு நோக்கி செயல்பாடு போன்ற திட்டங்கள் மியான்மர் நாட்டை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 1, 3 மட்டும் சரி

C) கூற்று 2, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஆசியான் அமைப்பில் மியான்மர் உறுப்பினராக உள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் பெருமளவில் பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு மியான்மர் உதவி செய்யும் என்று இந்தியா நம்புகிறது.கிழக்கு நோக்கு கொள்கை மற்றும் கிழக்கு நோக்கி செயல்பாடு போன்ற திட்டங்கள் மியான்மர் நாட்டை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாகவும் அமைந்து காணப்படுகிறது)

148) இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் கீழ்க்காணும் எந்த நாட்டுடன் நான்கு வழிச்சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது?

A) சீனா

B) பூடான்

C) தாய்லாந்து

D) லாவோஸ்

(குறிப்பு – இந்தியாவும் மியான்மரின் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான்கு வழி சாலை அமைப்பதற்கும்,இந்தியா-மியான்மர் மற்றும் தாய்லாந்தை இணைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்பாதை திட்டம் மூலம் வடகிழக்குப் பகுதிகளின் வழியாக 1600 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். ஏப்ரல் 2021ஆம் ஆண்டில் இத்திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

149) காலதான் பல்-அடுக்கு இடமாற்று போக்குவரத்து திட்டத்தின் படி கீழ்க்காணும் எந்த இரண்டு துறைமுகங்கள் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

A) விசாகப்பட்டினம் – சிட்வி

B) கொல்கத்தா – சிட்வி

C) சென்னை – சிட்வி

D) தூத்துக்குடி – சிட்வி

(குறிப்பு – காலதான் பல்-அடுக்கு இடமாற்று போக்குவரத்து திட்டத்தின் படி கொல்கத்தாவின் கிழக்கு துறைமுகத்தையும், மியான்மரின் சிட்வி துறைமுகத்தையும் இணைக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மியான்மரின் சிட்வி துறைமுகத்தில் இருந்து லேஸியோவிற்கு ஆறு வழியாகவும் பின் லேஸ்யோவிலிருந்து மிசோரத்துக்கு தரைவழிப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது)

150) இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 1970 ஆம் ஆண்டு

B) 1971 ஆம் ஆண்டு

C) 1972 ஆம் ஆண்டு

D) 1973 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1970 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மியான்மர் நாட்டின் வர்த்தகம் மிக சிறப்பாக மேல்நோக்கி 2178.44 மில்லியன் அமெரிக்க டாலராக 2016 ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளது. இதில் இந்திய ஏற்றுமதி 1111.29 மில்லியன் அமெரிக்கன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

151) மியான்மரின் எத்தனையாவது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா விளங்குகிறது?

A) நான்காவது

B) ஐந்தாவது

C) ஆறாவது

D) ஏழாவது

(குறிப்பு – மியான்மர் நாட்டின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா விளங்குகிறது இந்தியாவின் ஏற்றுமதியானது சர்க்கரை (424மில்லியன் டாலர்), மருந்து பொருட்கள்(184மில்லியன் டாலர்) போன்றவை உள்ளடக்கியது ஆகும். மோரே மற்றும் சாவ்காதர் வழியாக எல்லை வர்த்தகம் 87.89 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.)

152) மியான்மர் நாட்டில் இந்தியா முதலீடுகள் அளவில் எந்த இடத்தில் உள்ளது?

A) எட்டாவது

B) ஒன்பதாவது

C) பத்தாவது

D) பதினொன்றாவது

(குறிப்பு – மியான்மரின் முதலீட்டாளர்களில் இந்தியா பத்தாவது இடத்தில் நின்று 740.64மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த தொகையானது 25 நிறுவனங்களின் மூலமாக மியான்மரில் செயல்படுகிறது. பெருமளவில் முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளிலேயே தங்கள் முதலீடுகளை அமைத்துள்ளனர்)

153) கீழ்காணும் எந்த வங்கிகள் இந்திய – மியான்மர் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது?

I. யுனைடட் இந்திய வங்கி

II. MFTR

III. MICB

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வெகு சாதாரண வர்க்கத்திலிருந்து இருநாடுகளும் நில எல்லையில் தங்கள் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்குமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. வங்கி துறையில் கூட்டுறவு முதலீட்ட்டிற்கும், வர்த்தகத்திற்கும் முக்கியமானதாக அமைகிறது.யுனைடட் இந்தியன் வங்கி, மியான்மர் நாட்டின் வங்கிகளான MFTR, MICB, மற்றும் 9 தனியார் வங்கிகள் உடன் இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.)

154) சம்வட் – 11 என்ற பேச்சு வார்த்தை இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே எந்த ஆண்டு நடத்தப்பட்டது?

A) 2011 இல்

B) 2013 இல்

C) 2015 இல்

D) 2017 இல்

(குறிப்பு – சம்வட்-11 என்ற பல்வேறு நம்பிக்கைகள் பண்பாடுகள் பற்றிய பேச்சுவார்த்தையை யாங்கூனில் 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மாறும் 7 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. இந்திய கலாச்சார ஆராய்ச்சிக்கான கவுன்சிலும், சிதகு பன்னாட்டு புத்த அமைப்பும் சேர்ந்து புத்த சமய கலாச்சார பரிணாமம் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கையும் நடத்தியுள்ளது)

155) பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மாவை எந்த ஆண்டு முதல் ஆளத்துவங்கியது?

A) 1850 முதல்

B) 1851 முதல்

C) 1852 முதல்

D) 1853 முதல்

(குறிப்பு – மியான்மரில் இந்தியர்களின் வருகையின் ஆரம்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மாவை 1852 ஆம் ஆண்டில் ஆண்டபோது தொடங்கியது. இரு நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டலேயில் இந்திய மக்கள் குடிமைப்பணிகள், வர்த்தகம், வாணிபம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்து இருந்தனர்.)

156) இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே ஆசியான் நாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மியான்மர்

B) லாவோஸ்

C) பூடான்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே ஆசியான் (ASEAN) நாடு மியான்மர் ஆகும். இந்தியாவிற்கும் ஆசியான் அமைப்பிற்கும் (ASEAN)ஒரு பாலமாக மியான்மர் செயல்படுகிறது.)

157) மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருள்கள் எது?

I. தேக்கு

II. பருப்பு வகைகள்

III. சோளம், பீன்ஸ்

IV. மருந்துகள்

A) I, II மட்டும்

B) I, II, IV மட்டும்

C) I, II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா பருப்பு வகைகள், சோளம் பீன்ஸ் மற்றும் வன உற்பத்திகளான தேக்கு மற்றும் கடின மர வகைகளை இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலிருந்து மியான்மர் நாட்டிற்கு ரசாயனப் பொருள்கள், மருந்துகள், மின்சார உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.)

158) மீகாங்-கங்கா ஒத்துழைப்பு திட்ட அமைப்பு எந்த ஆண்டு தோன்றியது?

A) 2000 ஆம் ஆண்டு

B) 2001 ஆம் ஆண்டு

C) 2002 ஆம் ஆண்டு

D) 2003 ஆம் ஆண்டு

(குறிப்பு – மீகாங்-கங்கா ஒத்துழைப்பு திட்டத்தில் உறுப்பினராக இந்த அமைப்பு ஆரம்பித்த 2000ஆம் ஆண்டு முதல் மியான்மர் செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் 5 ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.)

159) எந்த ஆண்டு சார்க் அமைப்பு மியன்மர் நாட்டுக்கு பார்வையாளர் அந்தஸ்து அளித்தது?

A) 2004 இல்

B) 2006 இல்

C) 2008 இல்

D) 2010 இல்

(குறிப்பு – சார்க் அமைப்பு (SAARC) ஆகஸ்ட் மாதம், 2008ஆம் ஆண்டு மியான்மருக்கு சார்க் அமைப்பு பார்வையாளர் அந்தஸ்து அளித்தது. பிம்ஸ்டெக் அமைப்பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது. ஆற்றல் துறையில் மியான்மர் முன்னோடியாக திகழ்கிறது.)

160) இந்தியாவில் ‘கிழக்கின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் நாடு எது?

A) இந்தோனேஷியா

B) தாய்லாந்து

C) மியான்மர்

D) வியட்நாம்

(குறிப்பு – இந்தியாவில் மியான்மரை கிழக்கு நுழைவாயில் என்று அழைக்கிறோம். ஆனாலும் இரு நாடுகளின் உறவுகளை பார்க்கிறபோது கடக்கக்கூடிய தூரங்கள் நிறையவே இருப்பதாக தெரிகிறது. நீண்ட நிலம் மற்றும் கடல் நீர் எல்லைகளை கொண்டிருப்பதால் புவியியல் அமைப்பை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.)

161) மாலத்தீவு எத்தனை தீவுகளை உள்ளடக்கியது ஆகும்?

A) 1180 தீவுகள்

B) 1186 தீவுகள்

C) 1192 தீவுகள்

D) 1198 தீவுகள்

(குறிப்பு – மாலத்தீவு கிட்டத்தட்ட 1192 தீவுகளை உள்ளடக்கியது. இவற்றுள் 200 தீவுகளில் 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். 80 தீவுகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு உண்டான ஓய்வு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தலைநகரமான மாலே அதிக மக்கள் வசிக்கின்ற நகரமாக உள்ளது.)

162 ) மாலத்தீவுகளின் பிரதமரின் முதல் அரசுமுறை பயணம் நிகழ்ந்த ஆண்டு எது?

A) 1972 ஆம் ஆண்டு

B) 1974 ஆம் ஆண்டு

C) 1976 ஆம் ஆண்டு

D) 1978 ஆம் ஆண்டு

(குறிப்பு – மாலத்தீவுகளின் பிரதமரான அகமது ஜகி என்பவர் 1974 ஆம் ஆண்டு இந்தியா வந்தது தான் அந்த நாட்டின் முதல் அரசுமுறைப் பயணம் ஆகும். மாலத்தீவுகளில் பெருவாரியாக சன்னி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஏனைய மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள் வீடுகளிலேயே நடைபெறுவது வழக்கமாக உள்ளது.)

163) மாலத்தீவு எந்த ஆண்டு விடுதலை பெற்றது?

A) 1962 ஆம் ஆண்டு

B) 1964 ஆம் ஆண்டு

C) 1966 ஆம் ஆண்டு

D) 1968 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு விடுதலை பெற்றதிலிருந்து இந்தியாவிற்கும் அந்த நாட்டிற்குமான முறையான உறவுகள் ஆரம்பித்தன.இந்தியா மாலத்தீவை அங்கீகரித்த மூன்றாவது நாடாகும். இதன்பிறகு இருநாட்டு பிரதிநிதிகளும் உறவுகள் மேம்பட சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.)

164) மாலத்தீவின் குடியரசுத் தலைவராக இருந்த நஷீத் எந்த ஆண்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்?

A) 2010 ஆம் ஆண்டு

B) 2011 ஆம் ஆண்டு

C) 2012 ஆம் ஆண்டு

D) 2013 ஆம் ஆண்டு

(குறிப்பு – நசீர் குடியரசுத்தலைவராக பதவி ஏற்றவுடன் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக 2008 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இந்தியா மாலத்தீவுகளுக்கு நூறு மில்லியன் டாலரை, சுற்றுலா துறை வளர்ச்சிக்கு கடன் அளிப்பதாக உத்தரவாதம் அளித்தது. 2012 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த நஷீத் அவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.)

165) மாலத்தீவு இலட்சத் தீவில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது?

A) 500 கிலோமீட்டர்

B) 600 கிலோமீட்டர்

C) 700 கிலோமீட்டர்

D) 800 கிலோமீட்டர்

(குறிப்பு – மாலத்தீவுகள் இலட்சத் தீவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய பிரதான இடத்தில் இருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் சீனாவின் இருப்பு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது. அண்டை நாட்டுடன் முதன்மையான உறவு என்ற கொள்கையின்படி மாலத்தீவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவிட இந்தியா முழு உதவியாக இருந்து வந்துள்ளது.)

166) மாலத்தீவுகள் சீன நாட்டுக்கு எத்தனை சதவீதம் அளவுக்கு கடன் பட்டுள்ளது?

A) 50 சதவீதம்

B) 60 சதவீதம்

C) 70 சதவீதம்

D) 80 சதவீதம்

(குறிப்பு – மாலத்தீவுகளில் தீவுகளில் சீனாவின் பெரும் அளவிலான பொருளாதார இருப்பானது இந்தியாவிற்கு பெரும் குறையாகும். அந்நாடு 70 சதவீத தனது கடனுக்குத் சீனாவிற்கு கடன்பட்டுள்ளது, இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டது. தற்போது உள்ள அரசியல் நெருக்கடியானது இந்தியாவிற்கு சரியான வாய்ப்பை அளித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு இன்றியமையாத தெற்கு ஆசியா சக்தியின் ஒரு வலைப் பின்னலாக இருக்கும் மாலத்தீவுடன் இந்தியா, ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதன் ஒத்துழைப்பு தேவையாகிறது.)

167) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சார்க் அமைப்பில் மாலத்தீவு ஒரு உறுப்பினர் நாடாக உள்ளது.

கூற்று 2 – ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள யூரியில் செப்டம்பர் 18, 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

கூற்று 3 – யூரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் சார்க் உச்சி மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற இந்தியாவின் அழைப்பை புறக்கணித்து வரும் ஒரே நாடு மாலத்தீவு மட்டுமே ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – மாலத்தீவு ஆனது இந்திய பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்து 1200 கோரல்தீவுகளைக் கொண்டது ஆகும். சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு தடையில்லாமல் ஆற்றல் தேவையை அளித்துவரும் கடல்வழிப் பாதைக்கு அடுத்தும் அமைந்துள்ளது.)

168) மாலத்தீவுகளில் இந்தியா தனது தூதரகத்தை எந்த ஆண்டு அமைத்தது?

A) 1971 ஆம் ஆண்டு

B) 1972 ஆம் ஆண்டு

C) 1973 ஆம் ஆண்டு

D) 1974 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவும் மாலத்தீவு இன, மொழி, கலாச்சாரம், மதம் மற்றும் வணிகத் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றன. 1965 ஆம் ஆண்டு மாலத்தீவு சுதந்திரம் அடைந்தவுடன் முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும். பிறகு 1972 ஆம் ஆண்டு மாலத்தீவுகளின் தலைநகரான மாலேயில் இந்தியா தனது தூதரகத்தை அமைத்துக் கொண்டது.)

169) மாலத்தீவுகளின் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலா பயணிகளின் சதவீதம் எத்தனை ஆகும்?

A) 5 சதவீதம்

B) 6 சதவீதம்

C) 8 சதவீதம்

D) 10 சதவீதம்

(குறிப்பு – மாலத்தீவுகளில் 25 ஆயிரம் இந்திய நாட்டை யார் வசிக்கிறார்கள். இது இரண்டாவது புலம் பெயர்ந்த சமூகம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் பங்கினைக்கொண்டதாகும்.)

170) கீழ்க்காணும் எந்த ஆண்டு இலங்கை தமிழ் போராளிகள் (PLOTE) மாலத்தீவுகளின் மீது தாக்குதல் நடத்தினர்?

A) 1982 ஆம் ஆண்டில்

B) 1984 ஆம் ஆண்டில்

C) 1986 ஆம் ஆண்டில்

D) 1988 ஆம் ஆண்டில்

(குறிப்பு – 1988 ஆம் ஆண்டு, 80 முதல் 200 பேர் வரையிலான இலங்கை தமிழ் போராளிகள் (PLOTE) அப்துல்லா லுதுபி என்கிற தொழிலதிபரின் சூழ்ச்சியில் மாலத்தீவை நோக்கி தாக்குதல் நடத்தினர். மாலத்தீவில் ஊடுருவிய பிறகு அவர்கள் தலைநகரமான மாலேயில் ஊடுருவி முக்கியமான பகுதிகளை ஆக்கிரமித்தனர். இந்தியாவின் உதவியோடு, போராளிகள் விரட்டப்பட்டு மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.)

171) இந்தியாவுடனான ஜி.எம்.ஆர் எனும் திட்டத்தினை எந்த ஆண்டு மாலத்தீவு ரத்து செய்தது?

A) 2010 ஆம் ஆண்டு

B) 2011 ஆம் ஆண்டு

C) 2012 ஆம் ஆண்டு

D) 2013 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவுடனான ஜி.எம்.ஆர் எனும் திட்டத்தினை 2012ஆம் ஆண்டு மாலத்தீவு ரத்து செய்தது.500 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த திட்டம் மாலத்தீவு தலைநகரமான மாலேவுக்கு அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான திட்டமாகும். இந்த திட்டம் தற்போது சீனாவிடம் தரப்பட்டுள்ளது.)

172) சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2015ஆம் ஆண்டு

B) 2016ஆம் ஆண்டு

C) 2017ஆம் ஆண்டு

D) 2018ஆம் ஆண்டு

(குறிப்பு – 2015ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தார்.மாலத்தீவில் நிலவிய எதிர்மறையான அரசியல் சூழ்ச்சிகளே இதற்கு காரணமாக காட்டப்பட்டது. 2017ஆம் ஆண்டில் சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சீனாவுடன் மாலத்தீவு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.)

173) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கை, பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவு இடையே எந்த ஆண்டு கையெழுத்தானது?

A) 2015ஆம் ஆண்டு

B) 2016ஆம் ஆண்டு

C) 2017ஆம் ஆண்டு

D) 2018ஆம் ஆண்டு

(குறிப்பு – கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கை 7 2018 ஆம் ஆண்டில் வாழ்த்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் பாகிஸ்தானின் ராணுவ தளபதியின் பயணத்தின்போது மாலத்தீவில் முடிவு செய்யப்பட்டது. வெளிப்படையாகவே இந்தியாவிற்கு எதிராக நகர்த்தப்படும் காயாக இந்த நடவடிக்கை விளங்குகிறது.)

174) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியாவின் ஆதரவோடு மாலத்தீவு புதிய உறுப்பினராக இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பில் சேர்க்கப்பட்டது.

கூற்று 2 – மாலத் தீவில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளது.

கூற்று 3 – மாலத்தீவுகளில் சீனாவின் உள்கட்டுமான திட்டங்கள் இந்திய நிறுவனங்களுக்கு மாபெரும் போட்டியாக அமைந்துள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சரியான தீர்வை இன்றளவில் மாலத்தீவு மூலம் வெளியிட தயாராகிறது. மேலும் எதிர்கால முதலீடு தொடர்பாகவும் சரியான நிலைமை மாலத்தீவு தெரிவிக்க மறுக்கிறது. இந்தியாவிற்கும்,மாலத்தீவிற்கும் இடையே வர்த்தகம் இன்றளவில் 200 அமெரிக்க டாலர் வரை குறைவாகவே காணப்படுகிறது.)

175) மாலத்தீவுகளின் குடியரசு தலைவரான இப்ராஹிம் சோலி எந்த ஆண்டு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார்?

A) 2016ஆம் ஆண்டு

B) 2017ஆம் ஆண்டு

C) 2018ஆம் ஆண்டு

D) 2019ஆம் ஆண்டு

(குறிப்பு – 2018 ஆம் ஆண்டு இப்ராஹிம் சோலி மாலத்தீவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய பிரதமரான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இப்ராஹிம் முகமது சோலியின் இந்திய பயணம் 2018 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 முதல் 18 ஆம் தேதிகளில் நிகழ்ந்தது. இந்த பயணத்தில் இந்தியாவே முதன்மைத்துவம் என்ற கொள்கையை இப்ராஹிம் சோலி வலியுறுத்தினார்)

176) கீழ்க்கண்டவற்றுள் எது I.K.குஜ்ரால் அவர்களின் ‘குஜ்ரால் கொள்கை’ களுள் அடங்கும்?

I. எந்த ஒரு தென் கிழக்கு ஆசியா நாட்டிற்கும், தன் அண்டை நாடுகளுக்கு எதிரான காரியங்களை நிகழ்த்துவதற்கு இந்தியா இடமளிக்கக் கூடாது

II. அண்டை நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் தன்னாலான அதிகமான உதவிகளை செய்தல்.

III. அடைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும், ஏனைய நாடுகளின் நிலப்பரப்பையும் இறையாண்மையையும் மதித்தல் வேண்டும்.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குஜரால் கொள்கை என்பது இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது ஆகும்.இந்த கொள்கை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த ஐ.கே.குஜரால் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த கொள்கையின் படி இந்தியாவின் நிலையும் வலிமையும் ஏனைய நாடுகளுடன் உறவுகளை நிர்ணயிக்கிறது. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.)

177) கிழக்கு நோக்கி கொள்கை எனும் திட்டம் எந்த இந்தியப் பிரதமரால் உருவாக்கப்பட்டது?

A) ராஜீவ் காந்தி

B) நரசிம்ம ராவ்

C) ஐ.கே.குஜ்ரால்

D) மன்மோகன் சிங்

(குறிப்பு – கிழக்கு நோக்கி கொள்கை எனும் திட்டம், இந்திய பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் இலக்கு மேற்கிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது.)

178) கிழக்கு நோக்கி கொள்கை என்னும் திட்டம் எந்த ஆண்டு உருவானது?

A) 1990 ஆம் ஆண்டு

B) 1991 ஆம் ஆண்டு

C) 1992 ஆம் ஆண்டு

D) 1993 ஆம் ஆண்டு

(குறிப்பு – கிழக்கு நோக்கி கொள்கை எனும் திட்டம் 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை உண்டாக்குவதற்காக கிழக்குநோக்கி கொள்கை உண்டாக்கப்பட்டது. அதேசமயம் கிழக்குநோக்கி செயல்பாடு என்பது பொருளாதார மற்றும் பாதுகாப்பு கிழக்கு ஆசியாவையும் உள்ளடக்கியதாகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!