Book Back QuestionsTnpsc

இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Book Back Questions 6th Social Science Lesson 17

6th Social Science Lesson 17

17] இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச் சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.

கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.

உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள மலைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இம்மலைகள் பண்டைய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. (தற்போது இப்பகுதி ஆப்கானிஸ்தானின் மையத்தில் உள்ளது. அண்மையில் இவற்றைத் தாலிபான்கள் உடைத்து நொறுக்கினர்). இச்சிற்பங்கள் மௌரியர் காலத்துக்கு பின்னரான காந்தாரக் கலைப்பள்ளியைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களால் திடமான பாறைகளில் செதுக்கப்பட்டவை ஆகும்.

இந்தோ-கிரேக்க அரசர்கள்: முதலாம் டெமிட்ரியஸ் – இவர் கிரேக்கோ-பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பாரின் மகனாவார். இவர் கி. மு (பொ. ஆ. மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார். டெமிட்ரியஸ் சதுர வடிவிலான இரு மொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டார் என்பதை நாணயச் சான்றுகள் உறுதி செய்கின்றன. நாணயத்தின் தலைப் பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் கரோஷ்தி மொழியும் இடம் பெற்றுள்ளன. டெமிட்ரியஸ் எனும் பெயரில் மூவர் இருந்துள்ளனர். எனவே, இம்மூவருள் யார் கி. மு. (பொ. ஆ. மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தைத் தொடங்கி வைத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.

மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்தரப் பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன. மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது. பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.

இந்தோ-பார்த்திய (பகலவர்) அரசர்கள்: இந்தோ-கிரேக்கர், இந்தோ-சித்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தே-பார்த்தியர் வந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் கி. பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ-பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமஸிடன் தொடர்புடையதாகும். கிறித்துவ மரபின்படி புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிறித்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.

அரசர்களின் பங்களிப்பு: முதலாம் கட்பிசஸ் – குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார். அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார். தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

இரண்டாம் கட்பிசஸ்: இவர் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். அவருடைய நாணங்கள் சிலவற்றில் சிவ பெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

அஸ்வகோஷர் “புத்தசரிதம்” என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.

உலகம் அந்நாளில்: குஷாணப் பேரரசு ஜீலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும். குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ___________

(அ) புஷ்யமித்ரர்

(ஆ) அக்னிமித்ரர்

(இ) வாசுதேவர்

(ஈ) நாராயணர்

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ___________

(அ) சிமுகா

(ஆ) சதகர்ணி

(இ) கன்கர்

(ஈ) சிவாஸ்வதி

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலை சிறந்தவர் __________

(அ) கனிஷ்கர்

(ஆ) முதலாம் கட்சிசஸ்

(இ) இரண்டாம் கட்பிசஸ்

(ஈ) பன்-சியாங்

4. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் ___________ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

(அ) தக்காணம்

(ஆ) வடமேற்கு இந்தியா

(இ) பஞ்சாப்

(ஈ) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

5. சாகர்கள் ___________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

(அ) சிர்கப்

(ஆ) தட்சசீலம்

(இ) மதுரா

(ஈ) புருஷபுரம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளுர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.

(அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

(ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று 1: இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2: இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.

(அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி

(ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி

(இ) இரண்டு கூற்றுகளுமே சரி

(ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு

3. தவறான இணையைக் கண்டறிக:

புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா, கனிஷ்கர்.

4. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்:

(i) கடைசி சுங்க அரசர் யார்?

(ii) சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

(iii) மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

(iv) கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ___________

2. தெற்கே ___________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.

3. ஹாலா எழுதிய, நூலின் பெயர் ___________

4. __________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ____________ ஆகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.

3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

4. “புத்த சரிதம்” அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.

பொருத்துக:

அ. பதஞ்சலி – 1. கலிங்கம்

ஆ. அக்னிமித்ரர் – 2. இந்தோ-கிரேக்கர்

இ. அரசர் காரவேலர் – 3. இந்தோ-பார்த்தியர்

ஈ. டெமிட்ரியஸ் – 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

உ. கோண்டோ பெர்னெஸ் – 5. மாளவிகாக்னிமித்ரம்

(அ) 4, 3, 2, 1, 5

(ஆ) 3, 4, 5, 1, 2

(இ) 1, 5, 3, 4, 2

(ஈ) 2, 5, 3, 1, 4

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. புஷ்யமித்ரர் 2. சிமுகா 3. கனிஷ்கர் 4. தக்காணம் 5. சிர்கப்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

2. கூற்று ‘2’ தவறு, ஆனால் கூற்று ‘1’ சரி

3. கனிஷ்கர்

4. (i) தேவபூதி (ii) ருத்ரதாமன் (iii) வாசுதேவர் (iv) புனித தாமஸ்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கோண்டோ பெர்னஸ் 2. அசோகர் 3. சட்டசாய்

4. சுசர்மன் 5. பெஷாவர் புருஷபுரம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தில் பத்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர் ஆவார்.

4. சரி

பொருத்துக: (விடைகள்)

1. பதஞ்சலி – இந்தோ-பார்த்தியர்

2. அக்னிமித்ரர் – இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

3. அரசர் காரவேலர் – மாளவிகாக்னிமித்ரம்

4. டெமிட்ரியஸ் – கலிங்கம்

5. கோண்டோ பெர்னெஸ் – இந்தோ-கிரேக்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!