Book Back QuestionsTnpsc

இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Book Back Questions 10th Social Science Lesson 14

10th Social Science Lesson 14

14] இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள்: (1) இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் – கொல்கத்தா. (2) இந்திய சுரங்கப் பணியகம் – நாக்பூர். (3) இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத். (4) இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் நிர்வாகத்திற்கான பொறுப்பு சுரங்கப்பணி அமைச்சகத்திடம் உள்ளது. (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 1957)

இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL): இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.

பொதுவாக இரும்புத்தாது கீழ்க்கண்ட வடிவங்களின் காணப்படுகிறது:

இரும்புத் தாது படிவு இரும்பின் அளவு
மேக்னடைட் 72. 4%
ஹேமடைட் 69. 9%
கோதைட் 62. 9%
லைமனைட் 55%
சிடரைட் 48. 2%

நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் (Maganese ore India Ltd) 50 சதவிகித மாங்கனீசை உற்பத்திச் செய்து, உலகச் சந்தை மதிப்பீட்டில் முதன்மையானதாக திகழ்கிறது.

பாக்சைட் என்பது அலுமினியத்தின் ஒருவகையான ஆக்சைடு ஆகும். இது பிரெஞ்சு வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.

இந்துஸ்தான் தாமிர நிறுவனம் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமாகும்.

NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் 1981இல் தொடங்கப்பட்டது. இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் அஞ்சல், டாமன், சோடி போன்ற இடங்களில் உள்ளன. இது இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

இந்திய அரசால் நிர்வகிகப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது உலக அளவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MPOP & NG): இது இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகமாகும். இவ்வமைச்சகம் ஆய்வு செய்தல், உற்பத்தி, சுத்திகரித்தல், விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, எண்ணெய் பாதுகாப்பு, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்திப் பொருள் போன்றவற்றிற்கு பொறுப்பு ஏற்கிறது.

மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்
1. மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது) பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, (திப்ருகார், சில்சாகர், மாவட்டங்கள் அசாம்)
2. குஜராத் கடற்கரை (2வது பெரியது) திக்பாய் எண்ணெய் வயல் (நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்)
3. பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி. நாகர்காட்டியா எண்ணெய் வயல் (திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி)
4. அலியாபெத் – எண்ணெய் வயல் (பவ் நகரின் தென்பகுதி) மோரான் ஹக்ரிஜன் – எண்ணெய் வயல் (நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி)
5. அங்கலேஸ்வர் ருத்ரசாகர் – லாவா எண்ணெய் வயல்கள் (அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம்)
6. காம்பே – லூனி பகுதிகள் சர்மா பள்ளத்தாக்கு – (பதர்பூர், மாசிம்பூர், பதாரியா)
7. அகமதாபாத் – கலோல் பகுதி அந்தமான் நிகோபாரின் உட்பகுதிகள், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம்

கெயில் நிறுவனம் (GAIL): இந்திய இயற்கை எரிவாயு நிறுவனமானது மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறவனமாகும். இது இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது.

அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) (அதிக அழுத்தத்துடன் அடைக்கப்பட்ட மீத்தேன்) என்பது பெட்ரோல், டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு ஆகியவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒரு எரிபொருளாகும். இது காற்றை விட இலகுவானதாகவும், அதிக வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் விரைவில் மறைந்து விடுகிறது. இதனால் மற்ற எரிபொருள்களை விட ஆபத்து குறைவானதாகும். விவசாயக் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரிவாயு, புதுடெல்லி, அகமதாபாத், மும்பை, பூனா, கொல்கத்தா, லக்னோ, கான்பூர், வாராணாசி போன்ற நகரங்களில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்திய அணு மின்சக்தி நிறுவனம் (NPCIL) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு நிறுவனமாகும். இந்நிறுவனம் அணு மின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வகிக்கிறது.

இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது. இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் – பெருங்குடிப்பகுதி உலகிலேயே அதிக காற்றாலைகளைக் கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்.

இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு உள்ளது.

இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818ஆம் ஆண்டு, கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள போர்ட் க்ளாஸ்டர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.

தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW): சென்னையிலுள்ள இந்நிறுவனம் 1998இல் ஒரு தன்னாட்சி நிறுவனமாக புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இதன் பணிகளானது காற்று வள மதிப்பீடு ஆய்வு மற்றும் சான்றளித்தல் ஆகும்.

பருத்தி இழையிலிருந்து, விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.

தேசிய மணல் வாரியத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம் (CSTRI): பட்டு வளர்ப்பு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் பெங்களுருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் நவம்பர் 20, 1975இல் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை 1812ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.

தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் (NEPA) மத்தியப் பிரதேச மாநில பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபா நகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் 1830இல் தமிழ்நாட்டில் போர்டோ நாவோவில் அமைக்கப்பட்டது.

பிரதான வாகனத் தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதால் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம (Make in India programme) இதன் முக்கிய நோக்கம் உலக வரைப்படத்தில் இந்தியாவை ஒரு சிறந்த தொழிலக உற்பத்தி மையமாக காண்பிப்பதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

(அ) சேமிப்பு மின்கலன்கள்

(ஆ) எஃகு தயாரிப்பு

(இ) செம்பு உருக்குதல்

(ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

2. ஆந்த்ரசைட் நிலக்கரி _________ கார்பன் அளவை கொண்டுள்ளது.

(அ) 80% – 95%

(ஆ) 70% க்கு மேல்

(இ) 60% – 70%

(ஈ) 50% க்கும் குறைவு

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் _________

(அ) ஆக்ஸிஜன்

(ஆ) நீர்

(இ) கார்பன்

(ஈ) நைட்ரஜன்

4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்.

(அ) சேலம்

(ஆ) சென்னை

(இ) மதுரை

(ஈ) கோயம்புத்தூர்

5. இந்தியாவில் முதன் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்

(அ) குஜராத்

(ஆ) இராஜஸ்தான்

(இ) மகாராஷ்டிரம்

(ஈ) தமிழ்நாடு

6. மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்.

(அ) உயிரி சக்தி

(ஆ) சூரியன்

(இ) நிலக்கரி

(ஈ) எண்ணெய்

7. புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்

(அ) ஜார்க்கண்ட

(ஆ) பீகார்

(இ) இராஜஸ்தான்

(ஈ) அசாம்

8. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது.

(அ) போக்குவரத்து

(ஆ) கனிமப்படிவுகள்

(இ) பெரும் தேவை

(ஈ) மின்சக்தி சக்தி கிடைப்பது

பொருத்துக:

(அ) பாக்சைட் – சிமெண்ட்

(ஆ) ஜிப்சம் – வானூர்தி

(இ) கருப்பு தங்கம் – மின்சாதனப் பொருள்கள்

(ஈ) இரும்பு தாது – நிலக்கரி

(உ) மைக்கா – மேக்னடைட்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. எஃகு தயாரிப்பு 2. 80% – 95% 3. கார்பன் 4. கோயம்புத்தூர் 5. மகாராஷ்டிரம்

6. சூரியன் 7. ஜார்கண்ட் 8. கனிமப் படிவுகள்

பொருத்துக: (விடைகள்)

1. பாக்சைட் – வானூர்தி

2. ஜிப்சம் – சிமெண்ட்

3. கருப்பு தங்கம் – நிலக்கரி

4. இரும்பு தாது – மேக்னடைட்

5. மைக்கா – மின்சாதனப் பொருட்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!