Book Back QuestionsTnpsc

இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில் நுட்பவியல் Book Back Questions 10th Science Lesson 20

10th Science Lesson 20

20] இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில் நுட்பவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டாக்டர்.கோ.நம்மாழ்வார் (1938-2013): ஒரு தமிழ் விவசாய விஞ்ஞானி, சுற்றுச் சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் ஆவார். இவர் “வானகம்-நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்”(NEFFFRGFST-வானகம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினார்.

டாக்டர்.மா.சா.சுவாமிநாதன்: இந்திய பசுமைப்புரட்சியில் முன்னணிப் பங்கு வகித்தவர், இந்திய விஞ்ஞானியான டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் ஆவார். உருளைக் கிழங்கு, கோதுமை, நெல் மற்றும் சணல் ஆகிய பயிர்களில் அவர் மேற்கொண்ட பயிர்ப்பெருக்க ஆய்வுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். அவரது பெரும் முயற்சிகளால் 1960ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே இவர் “இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை” என பொருத்தமாக அழைக்கப்படுகிறார்.

காமாத் தோட்டம் அல்லது அணுப்பூங்கா என்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அணு சக்தி ஆற்றலை பயிர் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு பிரபலமான கருத்தாக்கம் ஆகும். இது ஒரு தூண்டப்பட்ட சடுதிமாற்ற பயிர்ப்பெருக்க முறையாகும். இதில் கோபால்ட் 60 அல்லது சீசியம் 137இல் இருந்து காமாக்கதிர்கள் பயிர் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

பறவைகளில் குறுக்குக் கலப்பு: வெள்ளை லெக்ஹான் x பிளைமௌத் ராக்

அதிகமுட்டைகளை உற்பத்தி செய்யும் கலப்பினக் கோழி இனம்

பசுக்களின் குறுக்குக் கலப்பு: அயல் இனக் காளைகள் மற்றும் உள்நாட்டு பசு ஆகியவற்றிற்கிடையே நடைபெறும் கலப்பு

பிரவுன் ஸ்விஸ் x சாகிவால்

கரன் ஸ்விஸ் – உள்நாட்டு பசுக்களை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக பால் உற்பத்தி செய்பவை.

பிளாஸ்மிடு என்பது பாக்டீரிய செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும், குரோமோசோம் சாராத, சிறிய, வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்.ஏ ஆகும். இது குரோமோசோம் டி.என்.ஏவிலிருந்து வேறுபட்டது. இது தன்னிச்சையாக இரட்டிப்படையும் திறனுடையது.

ரெஸ்ட்ரிக்ஸன் நொதி டி.என்.ஏவில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் குறிப்பிட்ட கார வரிசையை (பேலின்ட்ரோம் வரிசை) அடையாளம் கண்டு, அவ்விடத்தில் உள்ள பாஸ்போடை எஸ்டர் பிணைப்புகளைத் துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ வைத் துண்டிக்கிறது.

டாலி உருவாக்கம்: 1996ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஸ்காட்லாந்து நாட்டு ரோசலின் நிறுவனத்தினைச் சார்ந்த டாக்டர். அயான் வில்மட் மற்றும் அவரது குழுவினரும் இணைந்து டாலி என்ற குளோனிங் முறையிலான பெண் செம்மறி ஆட்டுக்குட்டியினை முதன்முதலில் உருவாக்கினர். இந்த ஆட்டுக்குட்டி உடல செல் உட்கரு மாற்றிப் பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டதாகும். ஆறரை ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த ஆட்டுக்குட்டி நுரையீரல் நோயினால் 2003ஆம் ஆண்டு இறந்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?

(அ) போத்துத் தேர்வு முறை

(ஆ) கூட்டுத் தேர்வு முறை

(இ) தூய வரிசைத் தேர்வு முறை

(ஈ) கலப்பினமாக்கம்

2. பூசா கோமல் என்பது _____________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

(அ) கரும்பு

(ஆ) நெல்

(இ) தட்டைப்பயிறு

(ஈ) மக்காச் சோளம்

3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ____________ இன் ரகமாகும்.

(அ) மிளகாய்

(ஆ) மக்காச்சோளம்

(இ) கரும்பு

(ஈ) கோதுமை

4. தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.

(அ) IR 8

(ஆ) IR 24

(இ) அட்டாமிட்டா 2

(ஈ) பொன்னி

5. உயிர்த் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?

(அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி

(ஆ) வாழும் உயிரினங்கள்

(இ) வைட்டமின்கள்

(ஈ) (அ) மற்றும் (ஆ)

6. DNA வை வெட்டப் பயன்படும் நொதி _____________

(அ) கத்திரிக்கோல்

(ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியேஸ்

(இ) கத்தி

(ஈ) RNA நொதிகள்

7. rDNA என்பது ____________

(அ) ஊர்தி DNA

(ஆ) வட்ட வடிவ DNA

(இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNAவின் சேர்க்கை

(ஈ) சாட்டிலைட் DNA

8. DNA விரல் ரேகை தொழில் நுட்பம் ____________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

(அ) ஓரிழை

(ஆ) திடீர்மாற்றமுற்ற

(இ) பல்லுருத்தோற்ற

(ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

9. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன.

(அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்

(ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை

(இ) திடீர் மாற்றம் அடைந்தவை

(ஈ) (அ) மற்றும் (ஆ)

10. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ___________ ஆகும்.

(அ) n = 7 மற்றும் x = 21

(ஆ) n = 21 மற்றும் x = 21

(இ) n = 7 மற்றும் x = 7

(ஈ) n = 21 மற்றும் x = 7

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.

2. புரதம் செறிந்த கோதுமை ரகம் ___________ ஆகும்.

3. ___________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.

4. விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை _________ எனப்படும்.

5. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதி மாற்றத்தினை மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ____________ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்

6. _____________ தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை செய்துள்ளது.

7. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ____________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.

8. ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____________ இடையே காணப்படும்.

9. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு ____________ ஆகும்.

10. ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA __________ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.

2. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.

3. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.

4. இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.

5. “கோல்ட்ன ரைஸ்” ஒரு கலப்புயிரி.

6. பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்ல கூடியது.

7. செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.

8. DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப்பட்டது.

9. மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.

பொருத்துக:

1. சோனாலிகா – பேசியோலஸ் முங்கோ

2. IR 8 – கரும்பு

3. சக்காரம் – அரைக்குள்ள கோதுமை

4. முங் நம்பர்1 – வேர்க்கடலை

5. TMV-2 – அரைக்குள்ள அரிசு

6. இன்சுலின் – பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

7. Bt நச்சு – பீட்டா கரோட்டின்

8. கோல்டன் ரைஸ் – rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

ஆ. கூற்று தவறு ஆனால் காரணம் சரி

இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

1. கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.

காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.

2. கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.

3. கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.

காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. கூட்டுத் தேர்வு முறை, 2. தட்டைப்பயிறு, 3. கோதுமை, 4. (IR 8), 5. அ மற்றும் ஆ 6. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்,
7. ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை 8. மீண்டும் மீண்டும் வரும் தொடர், 9. அ மற்றம் ஆ, 10. n = 21 மற்றும் x = 7

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. தாவர பயிர் பெருக்கம், 2. அட்லஸ்-66, 3. கால்ச்சிசின், 4. உயிரூட்டச் சத்தேற்றம், 5. அட்டமிட்டா – 2, 6. மரபுப்பொறியியல்,
7. மூலக்கூறு கத்தரிக்கோல், 8. ஒற்றைக்கரு இரட்டையர்கள், 9. குருத்தணுக்கள், 10. கடத்தி (பிளாஸ்ட்),

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (மேலும் தவறானதை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மயப்பயிர் பெருக்கம் எனப்படும்.

3. தவறு

சரியான விடை: உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன் எனப்படும்.

4. தவறு

சரியான விடை: இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் இரும்புச்சத்தின் தரத்தை தீர்மானிக்கிறது.

5. தவறு

சரியான விடை: “கோல்டன் ரைஸ்” ஒரு மரபு பண்பு மாற்றப்பட்ட தாவரம்.

6. சரி

7. தவறு

சரியான விடை: செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும்.

8. சரி

9. தவறு

சரியான விடை: மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியைக் குறிக்கும்.

பொருத்துக: (விடைகள்)

1. சோனாலிகா – அரைக்குள்ள கோதுமை

2. IR 8 – அரைக்குள்ள அரிசி

3. சக்காரம் – கரும்பு

4. முங் நம்பர் 1 – பேசியோலஸ் முங்கோ

5. TMV – 2 – வேர்கடலை

6. இன்சுலின் – rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்

7. Bt நச்சு – பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

8. கோல்டன் ரைஸ் – பீட்டா கரோட்டின்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

3. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!